பாகம்பிரியாள்

 நாம் காதல் கொண்ட தருணத்தில்,
நம் புரிதலுக்கு முன் நீயோ

கடும் சொல் ஒன்றை உதிர்த்தாய்,
காதலுக்கு கண்ணில்லையென்று.

அன்றிலிருந்தே நான் போட்டேன்
அவசரமாய் என் கண்ணுக்குத் திரை.  

உன் காலடி ஓசையில், சருகுகள்  மிதிபடுவதில்
எனக்குப் புரியும் உன் எண்ணங்களின் வேகம்!  

சுழன்று வரும் இலைகளோடு கலந்து வரும்
செடிகளின் வாசம் சொல்லும் உன் சோகத்தை.

 பூக்களின் மகரந்தத் தூவலின் சொரிதல்
புரிய வைக்கும் உன் நேச வருடலை.

ஓசை என்னும் என் கரம்  காத்திருக்கிறது 
ஆசை எனும் உன் கரம் எப்போது இணையுமென்று!

ஆம் கண்ணே! ஓசையும், ஆசையும் சேர்ந்ததுதானே காதல்?
 

படத்துக்கு நன்றி

http://io9.com/5872520/a-form-of-blindness-where-you-can-see-everything-but-recognize-nothing

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “ஓசையும், ஆசையும்!

 1. “உன் காலடி ஓசையில், சருகுகள் மிதிபடுவதில்
  எனக்குப் புரியும் உன் எண்ணங்களின் வேகம்! ”
  புரிந்துணர்வை விளக்கும் அழகான வரிகள்

 2. ஓசையும் ஆசையும் இணையுமுன்னே
  ஓடிவந்தது நல்ல கவிதை..
  வாழ்த்துக்கள்…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. தேனான பின்னூட்டத்தை அளித்த தேமொழிக்கு நன்றி.

 4. சிறப்பான பாராட்டைத் தரும் திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி

 5. காதலில் பலமானது மௌனம் . ஆனால் அது பேசிக்கொண்டே இருக்கும் .அது சம்பந்தப்பட்ட இதயங்களுக்கு மட்டுமே கேட்கும் .அந்த மௌனத்தை ஓசையாக்கி வந்த கவிதை அருமை

 6. ஓசையும் ஆசையும் கலந்த காதல்
  ஆதிமனிதன் கண்ட காதல்
  காவியங்கள் பல சொன்ன காதல்
  இன்னும் சொல்லிக்கொண்டே போகும் இந்த காதல்!….டாக்டர் ஜி.ஜான்சன்.

 7. மௌன ஓசைக் கவிதைக்கு மென்மையான பாராட்டைத் தந்த தனுசு அவர்களுக்கு நன்றி.

 8. சிறப்பான பாராட்டைத் தந்த டாக்டர் ஜானசன் அவர்களுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published.