Blog

  • White Roses at Central London

    White Roses at Central London

    White Roses in The Ever After Garden at Central London. Anyone can dedicate a rose in memory of a loved one, whilst making a donation (minimum donation of £10 per rose) in support of The Royal Marsden Cancer Charity. Video by Navya.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தியாகராஜர் இயற்றிய ‘ஷம்போ மஹாதேவ’

    தியாகராஜர் இயற்றிய ‘ஷம்போ மஹாதேவ’

    தியாக பிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜர் இயற்றிய ‘ஷம்போ மஹாதேவ’ என்ற புகழ்பெற்ற பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும்

    அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும்

    1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொருள் விளங்கா உருண்டை

    பொருள் விளங்கா உருண்டை

    சுவையும் சத்தும் நிறைந்த பொருள் விளங்கா உருண்டை, பல்லுக்கும் வலிமை சேர்ப்பது. இக்காலத்தில் இதைக் காண்பது அரிதாக இருக்கிறது. மரபுவழித் தின்பண்டங்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதை எப்படிச் செய்வது? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்!

    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாலயன் மருளது போக்கிய காலம்
    மலரடி திருமுடி உணர்த்திய காலம்
    தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
    திருவிளக்கு ஏற்றிடும் கார்த்திகைக் காலம்

    கந்தனை வந்தனை செய்திடு காலம்
    கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
    நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

    ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
    தெளிவதைக் கருத்தில் அமர்த்திடும் காலம்
    பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
    போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

    ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
    தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
    நீண்டிடும் மாயையை நிர்மல மாக்கிய
    நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்

    நெறிபிறழ் நினைப்பினை நீக்கிய காலம்
    அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
    பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
    போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
    அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
    வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
    விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

    ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
    உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
    மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
    மண்ணிலே மலர்ந்த மாண்புடைக் காலம்

    அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
    உண்ணா முலையாள் ஒளிர்ந்திட்ட காலம்
    அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை
    அளவிலா ஆற்றலை அருளிய காலம்

    மரத்தில் மறைந்த மாமத யானையை
    பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
    இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
    கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்

    மாதொரு பாகனை மனமதில் இருத்தி
    மங்கலம் பொங்கிட தீபத்தை ஏற்றி
    தீமைகள் அகல கார்த்திகை விளக்கை
    சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்

    விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
    மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
    ஒளியினை அறிவாய்க் கொண்டிடும் வேளை
    ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்

    இருளது சூழின் எதுவுமே தெரியா
    இருளது இருப்பு மருளவே வைக்கும்
    ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
    தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்

    அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
    அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
    அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
    இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை

    Share
  • அறிஞர் அண்ணா உரை | தலை நிமிர்ந்து கேளுங்கள்

    அறிஞர் அண்ணா உரை | தலை நிமிர்ந்து கேளுங்கள்

    செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிப் பள்ளிகள் என்கிற அண்ணா, இதில் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி மாற வேண்டும் என அழகாக விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(428)

    குறளின் கதிர்களாய்…(428)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(428)

    உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
    ருடைய துடையரோ மற்று.
    -திருக்குறள் -591(ஊக்கமுடைமை)

    புதுக் கவிதையில்

    பெற்றிருக்கிறார் ஒருவர்
    என்று
    போற்றத் தக்கது
    ஊக்கமே,
    ஊக்கம் இல்லாதார்
    வேறு எதைப்
    பெற்றிருப்பினும் அதை
    உடையவர் ஆகமாட்டார்…!

    குறும்பாவில்

    ஊக்கம் உடையாரே ஒன்றைப்
    பெற்றிருப்பதாய்க் கருதப்படுவார், ஊக்கமிலார் எதையுமே
    உடையவர் என்று ஆகார்…!

    மரபுக் கவிதையில்

    ஒன்றை யொருவர் தம்மிடமே
    உடையா ரென்னும் சிறப்பினையே
    என்றும் தருமே யவரிடம்தான்
    இருக்கும் சொத்தாம் ஊக்கமதே,
    குன்றா ஊக்க மிலாரிடமே
    கோடிக் கணக்காய்ப் பிறவிருந்தும்
    என்று மவர்தான் எதுமுடையார்
    என்றே யாக மாட்டாரே…!

    லிமரைக்கூ

    உள்ளவரே உயர்வாம் ஊக்கம்
    உடையவராய்க் கருதப்படுவார், பெற்றவராகார் அவரிடம்
    இருப்பினும் பிறபல ஆக்கம்…!

    கிராமிய பாணியில்

    வேணும் வேணும்
    மனுசனுக்கு வேணும்
    மனசில ஊக்கமே..

    ஊக்கம் மனசில
    உள்ளவந்தான்
    ஒலகத்தில பெருமயா
    உள்ளவனா கருதப்படுவான்..
    ஊக்கமில்லாதவன்
    வேற பலதும்
    வச்சிருந்தாலும் ஒருநாளும்
    உள்ளவனா ஆவமாட்டான்..

    அதால
    வேணும் வேணும்
    மனுசனுக்கு வேணும்
    மனசில ஊக்கமே…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 2

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 2

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

    Share
  • பாரதி யார்? – வரலாற்று நாடகம்

    பாரதி யார்? – வரலாற்று நாடகம்

    அன்பு உள்ளங்களே!

    அரசு தந்த அரங்கிலே
    அமர கவியின் வாழ்வினை
    முரச றைந்து சொல்கிறோம்
    முத்தமிழும் ஓங்கவே!
    தேசம் தனது தெய்வமாய்
    சேரி தனது கோயிலாய்
    நேசமுடன் வாழ்ந்ததோர்
    நெருப்பின் கதையைச் சொல்கிறோம்!

    செந்தமிழின் விதியினைச்
    சிந்துபாடி மாற்றினான்
    அந்தணரில் மறவனாம்
    அவன்கதையைச் சொல்கிறோம்!
    பெண்களுக்குக் கண்களாய்
    பேரழகிப் பிள்ளையாய்
    மண்ணில் விண்ணைக் கறந்தவன்
    மாண்பை மன்றில் சொல்கிறோம்!

    செல்லம்மாவின் காதலன்
    செந்தமிழின் நாயகன்
    சொல்முழுதும் சத்தியம்
    சொன்னகதை சொல்கிறோம்!
    அரசெடுக்கும் திருவிழா
    அமரகவியின் பெருவிழா
    அரங்கு முழுதும் நிறையவே
    அனைவருமே வருகவே!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி

    அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி

    கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிரபஞ்சப் படைப்பாளி

    பிரபஞ்சப் படைப்பாளி

    சி. ஜெயபாரதன், கனடா 

    அண்ட கோள்களை
    முட்டை யிட்டு
    அடைகாக்கும் கோழி !
    ஆழியில் பானைகள் வடித்து
    விண்வெளியில்
    அம்மானை ஆடுவாள்
    அன்னை !
    பூமி சுற்றியது
    பூதக் கதிரோனால் !
    கடல் அலை உண்டாக்கும் நிலா.
    மானிடப்
    பிறப்பும் இறப்பும்
    ஒரு சுழற்சி.
    பேச்சும் மூச்சும்
    மானிட வளர்ச்சிக்கு !
    இளமை
    பொழுது புலர்ச்சி
    முதுமை
    அந்திம தளர்ச்சி.
    இரவு, பகல், மாதம், வருடம்
    பருவ கால நிகழ்ச்சி.
    பிறந்தவை யாவும் ஒருநாள்
    இறப்பவை .
    உலகில் பிறப்பும் இறப்பும்
    உருவாக்கும்
    ஒற்றை
    பிரம்மாண்ட சக்தி எது ?
    பிறப்பும்
    இறப்பு மில்லாத
    ஏகாந்த பூரணி
    தனித்துவ படைப்பாளி
    நிரந்தர
    பிரபஞ்ச மூலம் எது ?

    Share
  • Rajiv Gandhi Speech on LTTE | 1987

    Rajiv Gandhi Speech on LTTE | 1987

    The speech of the Indian Prime Minister Rajiv Gandhi on the occasion of the unveiling of the statue of Sri Satyamurthi in Pudukkottai (Tamil Nadu) on December 21, 1987. Rajiv Gandhi mentioned LTTE as one small group; conveyed a very bold and strong message.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | அமெரிக்கா தந்த பாடங்கள்

    அறிஞர் அண்ணா உரை | அமெரிக்கா தந்த பாடங்கள்

    1968ஆம் ஆண்டு, அமெரிக்க, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று வந்த அண்ணாவுக்கு முத்தமிழ் மன்றம் அளித்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வட்டமிடும் பறவைகள்

    வட்டமிடும் பறவைகள்

    சென்னைப் புறவழிச் சாலையில் இந்த அழகிய காட்சியைக் கண்டேன். கனரக வாகனங்கள் விரையும் சாலை. விர் விர்ரென இரைச்சல். மேலே, இந்தப் பறவைகள் வட்டமிட்டன. சலிக்காமல், உற்சாகமாக, உல்லாசமாக. செய்யும் செயலில் இப்படி லயித்துவிட வேண்டும். ஊக்கம் ஊட்டும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா

    தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா

    தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க. தெருநாய்களால் யாருக்கும் ஆபத்து வந்தால், அவற்றுக்கு உணவு வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கிறார், தாம்பரம் மாநகராட்சியின் 54ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா. அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share