பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை

 -இன்னம்பூரான்
ஜூலை 28 2017

innam

பிரசுரம்:

மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது:

‘… தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த  வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது… உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது “புளியமர விளாரால்’ அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோமீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப்போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்…தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில்

கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலை போராட்டத்தில் வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த “தியாகதீபம்’ வைத்தியநாதய்யர். அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்…’. அந்த பதிவை படித்த திரு நரசய்யா அவர்களின் ஆதங்கம்:

‘இது தான் இன்றைய அரசியல்! தலை குனிய வேண்டியவர்களாயுள்ளோம். நான் சென்ற வாரம் மதுரை சென்றிருந்த போது, ஊரெல்லாம் ஒரு தலைவரின் கட் அவுட்டுகளாகவே இருந்தன. சுதந்திரம் இந்தியாவில் எவருக்குக் கிடைத்துள்ளது? தீர அலோசிப்போம்!’.

[அவருடைய குடும்பத்திற்கும் வைத்யநாதய்யர் குடும்பத்திற்கும் தொடர்புண்டு. அவர் குமாரர் வை சங்கரன் இவரது சகோதரரின் உற்ற நண்பர். ஆலயப்ரவேசத்தில பங்கு கொண்ட புலி அய்யர் – இயற் பெயர் சுப்ரமணிய அய்யர்- இவரின் உறவினர்.

ஆம் மதுரை ஏ. வைத்தியநாதய்யர் அவர்களை பற்றிய இந்த நூலின் பெயர் ”ஹரிஜனத் தந்தை.” தன் இடம், பொருள், உடல், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் முழுமையாக நசுக்கப்பட்டவர்களை உய்விப்பதற்கு அர்ப்பணம் செய்த இவர் திட்டமிட்டு மீனாக்ஷி ஆலயப்பிரவேசம் செய்து, ராஜாஜி இதற்கேற்ற சட்டம் இயற்றியதை போற்றவேண்டும். அதற்கு முன் ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி நசுக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது வரலாறு. அது மேன்மக்களாட்சி.

  1. திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்;
  2. திருவெண்ணை நல்லூர் கிருபா ஆசிரமம்;
  3. சென்னை நந்தனார் கல்விக்கழகம்ல்
  4. கோவை ராமகிருஷ்ணா வித்யாலயம்;
  5. திருச்சி பொதுநல ஊழியர் சங்கம்ல்
  6. வேலூர் ஒலவையார் கல்விக்கழகம்;
  7. சென்னை ஆதி திராவிடர் மகாஜனசங்கம்;
  8. சென்னை அருந்ததியர் மகாஜனசங்கம்;
  9. தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள்.

எல்லாவற்றிற்கும் அரிஜன சேவாசங்கத்தின் தலைவர் என்ற முறையில் பொருளுதவி முதல் பல தொண்டுகள் செய்த சான்றோன், இவர். மதுரையில் இவருடைய விசாலமான வீடு ஓர் அன்னதான சத்திரம்.

-#-

சித்திரத்துக்கு நன்றி:

https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d7/Vaithiyanatha_aiyar.jpg

 

 

Share

Comments

2 responses to “பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை”

  1. ஆரியத்தமிழன்

    அறிய தகவல் , ஹரிஜன தந்தை நூல் இப்போது பதிப்பகத்தில் கிடைக்கிறதா விபரம் தெரிவித்தால் வாங்கி வாசிக்கவேண்டும்

  2. இன்னம்பூரான்

    நான் எடுத்துவைத்த குறிப்பு உடனே கிடைக்கவில்லை. விரைவில் தேடி எடுத்து, இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வம் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. நாம் திரு.வி.க. அவர்களின் அறிவுரையை பின்பற்றவேண்டும்.
    அன்புடன், இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *