Blog

  • வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்

    வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்

    புரந்தர தாசர் இயற்றிய ‘வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்’ என்ற புகழ்பெற்ற பாடலை, மோகன்தாஸ் உடன் இணைந்து, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது

    நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது

    கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்

    நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே

    எதுவும் இல்லை என்றே சொல்வார்

    பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்

    அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்

    பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே

    கதவை மூடிட கண்ணை மூடிட

    செய்திடும் தப்புகள் காண்பான்

    காலசக்கர மேந்திட புவிபோல்

    பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே

    கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்

    வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்

    நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்

    யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே

    வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல

    பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல

    உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல

    மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே

    பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ

    பாரில் முழுதும்  உனைக்கண்டால்

    கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்

    பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே

    பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை

    விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே

    Share
  • நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

    நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

    NASA’s Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon

    https://twitter.com/i/status/1592918520337088512

    சி. ஜெயபாரதன், கனடா

    2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல் படம்

    காமிரா அனுப்பிய நிலவின் முதல் படத்தில் நெடுங் குழிகள் தெரிந்தன.  பாதாளக் குழிகளில்  பனிப்பாறைகள் காணப் பட்டன.  நிலவில் நீர் உறைந்த நெடும் பாறைகள் இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

    ஓரியன் விண்சிமிழ் காமிரா நிலவை நெருங்கி 80 மைல் உயரத்தில் பாதாளக் குழிகளை உற்று நோக்கிப் படம் எடுத்தது.  ஆழத்தில் தெரிந்த நீர்ப்பனி உறைவுப் படங்கள் பதிவு செய்யப்பட்டன.

    ஓரியன் விண்சிமிழ் நிலவை நோக்கி

    அடுத்துத் திட்டமிட்ட ஓரியன் விண்சிமிழ் ஆறு பேர் அமரும் வசதி உடையது.  சில நாட்களில் ஓரியன் விண்சிமிழ் நிலவை விட்டு தள்ளி  தூரப் பின்சுற்றுப் பாதையில் [Distant Retrograde Orbit] 50,000 மைல் தொலைவில் செல்லும். அப்பாதையில் ஓரியன் ஆறு நாட்கள் சுற்றும். எதிர்காலத்தில் இப்பாதையில் ஒரு நிலா சுற்று நிலையம் அமைக்கத் திட்டம் உள்ளது. நிலவுக்கு வரும் விண்வெளிப் பயண விமானி களுக்குத் தங்க இந்த நிலையம் ஓர் ஓய்வு சிமிழாகப் பயன்படும். ஆறு நாட்கள் சுற்றிய பின், விண்சிமிழ் 2022 டிசம்பர் 11 இறுதியில் புவியீர்ப்பு கடந்து பூமிக்கு மீளும். பசிபிக் கடலில் மூன்று பாராசூட் குடைகள் தாங்க மனிதரற்ற விண்சிமிழ் வந்து இறங்கும்.  2025 ஆண்டுக்குள் மீண்டும் ஓரியன் விண்சிமிழ் மூலம் புவி மனிதர் பயணம் செய்து தமது தடம் வைப்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Unmanned Spaceship Orion

    NASA’s Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon: See Photo of ‘Our Blue Marble’ (msn.com)

    As far as the next priority for Artemis missions, NASA says “they will land the first woman and the first person of color on the Moon, paving the way for a long-term lunar presence, and serving as a steppingstone to send astronauts to Mars.”

    Share
  • குறளின் கதிர்களாய்…(427)

    குறளின் கதிர்களாய்…(427)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(427)

    கொடுத்தலு மின்சொல்லு மாற்றி னடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்.

    – திருக்குறள் -525 (சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்…

    உற்றர் உறவினர்க்கு
    உறுபொருள் கொடுத்துதவி.
    உபசரித்தே இன்சொல்
    உரைக்க வல்லவனானால்,
    ஒருவன்
    ஒன்றையொன்று தொடர்ந்த பல
    சுற்றங்களால்
    சூழப்படுவான்…!

    குறும்பாவில்…

    சுற்றத்தார்ப்குப் பொருள் கொடுத்துதவி
    இன்சொல் இயம்பவல்ல ஒருவன் தொடர்ந்து
    மேலும்மேலும் சுற்றங்களால் சூழப்படுவான்…!

    மரபுக் கவிதையில்…

    நாடும் சுற்ற மெல்லாமே
    நலமே பெறவே கொடுத்துதவி
    கூடும் வரையில் இன்சொல்லால்
    குறையா வகையில் உபசரித்தே
    பாடு படவே வல்லமையாம்
    பண்பு கொண்ட ஒருவன்தான்
    தேடும் சுற்றம் பலவற்றால்
    தெரிந்தே சூழப் படுவானே…!

    லிமரைக்கூ…

    வந்திடும் உறவினர்க்குக் கொடுத்தே
    உதவி இன்சொலால் உபசரிக்க வல்லானைச்
    சூழும் சுற்றமெலாம் அடுத்தே…!

    கிராமிய பாணியில்…

    பெருக்கணும் பெருக்கணும்
    ஒறவப் பெருக்கணும்,
    வேண்டிய ஒதவிசெஞ்சி
    ஒறவப் பெருக்கணும்..

    தேடிவாற ஒறவுகளுக்கு
    வேணுங்கிற ஒதவிசெஞ்சி,
    நல்லவார்த்த பேசி
    நல்லா ஒபசரிக்கத்
    தெரிஞ்சவன் கிட்ட
    அடுத்தடுத்து ஒறவுக்காரங்க
    வந்து சேருவாங்களே..

    அதால,
    பெருக்கணும் பெருக்கணும்
    ஒறவப் பெருக்கணும்,
    வேண்டிய ஒதவிசெஞ்சி
    ஒறவப் பெருக்கணும்…!

    Share
  • தி.மு.க.வின் எதிர்காலம் | அறிஞர் அண்ணா உரை

    தி.மு.க.வின் எதிர்காலம் | அறிஞர் அண்ணா உரை

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் குறித்து, 1962ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பயத்தை உண்டாக்கு

    பயத்தை உண்டாக்கு

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆயுள் உறுதி இல்லை.

    செய்யும் தொழில்
    வேலை கூலி
    நிரந்தரம் இல்லை.

    கட்டிய மனை, மாளிகை
    இல்லாது போகலாம்
    புயல் அடித்து.

    பறக்கும்
    விமான எஞ்சின்
    பழுதாகிக் கடலில் வீழலாம்.

    கார் டயர் வெடித்து
    விபத்து
    நேர்ந்துவிடலாம்.

    சுற்றுலாவில்
    தொற்றுநோய் பற்றி
    மருத்துவமனையில்
    பலநாள்
    படுத்துக் கிடக்கலாம்.

    அணு உலைகள் வெடித்து,
    கதிரியக்கம்
    காசினியில் பரவலாம்.

    பூகம்பம், காட்டுத் தீ
    சூறாவளி,
    சுனாமி,
    ஹரிக்கேன் அடித்து மக்கள்
    எல்லாம் இழக்கலாம்.

    இப்படி
    பயம் காட்டியே பிழைத்து வரும்
    பண முதலைகள் !

    மிஞ்சும் சம்பாதிப்பில் நீ
    எத்தனை சதவீதம்
    கப்பம்
    கட்டுவாய்
    ஆண்டாண்டுதோறும்?

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 1

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 1

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

    Share
  • சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்

    சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்

    சுவாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்’ என்ற இனிய பக்திப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலி வழங்கிய “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதினைப் பெற்றுக்கொண்டு, இசைக்கவி ரமணன் பொழிந்த கவிமழை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் ஆவேசப் பேச்சு | 1957

    அண்ணாவின் ஆவேசப் பேச்சு | 1957

    1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    பரதாஞ்சலி விழாவில் சத்ய பாரதி சுந்தரம் விருது வழங்கப்பட்டது

    வணக்கம்.

    நேற்று – நவம்பர் 23 – மாலை சென்னை பாரதிய வித்யா பவனில் நான் பெரிதும் வியந்து மதிக்கும் நடனகுரு திருமதி அனிதா குஹா அவர்களின் ‘பரதாஞ்சலி’. அவர் வணங்கும் பாபாவுக்கு அஞ்சலியாக நடத்திய விழாவில், பல ஆளுமைகளின் நடுவே என்னையும் அமர்த்தி எனக்கும் ஒரு விருது வழங்கினார்கள்.

    தொடர்ந்து நான் பாரதியைப் பற்றிப் பேசியும், எழுதியும் வருவதையும், ‘பாரதி யார்?’ நாடகத்தில் வசனம் தவிர, பாரதியாக வேடமேற்று நடிப்பதையும் மனத்தில் கொண்டு, எனக்கு, “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதை வழங்கினார்கள்.

    என்பால் பேரன்பு கொண்டவர் பாரதிய வித்யா பவனின் இயக்குனர் திரு. ராமசாமி அவர்கள். என்னுடைய நிகழ்ச்சிகள் எத்தனையோ – நாடகம் உட்பட – அங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பாரதியின் பாடல்களை, பொருளறிந்து, கேட்போர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகின்ற இசைக் கலைஞர் திரு. ஓ.எஸ். அருண் அவர்கள்.

    பாரதக் கலைகள் அமெரிக்காவில் சிறப்பாகப் பரவுவதற்குப் பெரும் காரணமாக இயங்கிவரும், எங்கள் தாமிரபரணி தீரர், திரு. ‘க்ளீவ்லேண்ட்’ சுந்தரம் அவர்கள்.

    உலகப் புகழ்பெற்ற நடனமணி திருமதி லீலா சாம்சன் அவர்கள்.

    இவர்கள் மூலம் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டது.

    ஏற்புரையாக நான் ஒரு கவிதையை வாசித்தேன். அதை அனிதா வணங்கும் பாபாவைத் தொட்டு இயற்றியிருந்தேன்.

    இதோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – என் குரலில் பதிவாகவும்:

    பரதாஞ்சலிக்கொரு கவிதாஞ்சலி
    அகமென்றும் புறமென்றும் சுகமென்றும் துயரென்றும்
    அலைபாயும் இவ்வாழ்விலேஅரைநொடியும் நில்லாமல் அல்லாடும் ஓடங்கள்
    ஆசைக ளின்பிள்ளைகள்
    இகமென்றும் பரமென்றும் இனம்காண முடியாமல்
    இடறுவதும் நடனமாமோ?
    இற்றுவிழும் இதயத்தில் பற்றின்னும் வீழா
    திறுக்குவதும் இசையாகுமோ?
    அகமுன்னை நாடாத அதிகாலை வேளையில்
    அருகிலே வந்த தேவா!
    அனிதாவின் நெஞ்சத்தில் அகலாமல் குடிகொண்ட
    அன்பனே சாயிநாதா!
    பற்றுவில காமல்படி தவறவுயிர் சிதறமனம்
    பதறஅடி இடற அங்கே
    பார்த்தவிழி யும்பார்வை யும்பாத மும்கரமும்
    பரிவும்புதுக் கமலங்களாய்
    சுற்றுமுற் றும்மக்கள் துவளமனம் நெகிழ்ந்துருக
    சுந்தரா! எதிரில் நின்றாய்
    சொல்லிரண் டைச்சொல்லிப் புல்லென எனைக்கிள்ளிச்
    சொக்கவைத் தாய்சிரித்தாய்
    அற்றன வினைகளென கொற்றவ உன் கண்முன்னில்
    ஆகாயம் நானாகினேன்!
    அனிதையெனும் வனிதையவள் புனிதமனம் தினம்நெகிழ
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தன்பெயரைச் சொல்லாமல் உன்பெயரில் விருதுதரத்
    தாழ்மையுடன் அவளழைத்தாள்
    தரமேது மில்லானைத் தக்கோர்கள் வரிசையில்
    மனம்கூச அமர்த்திவிட்டாள்
    புன்னகையும் குறும்புமாய்ப் பொல்லாத திருமுகம்
    போட்டெனைப் புரட்டுகிறதே!
    பொலபொலென மனமுதிர சலசலென ஜதியதிரப்
    புதியகவி பூக்கின்றதே!
    அன்புமய மாகவுயிர் யாவும்வச மாகப் பெரும்
    அற்புதம்நி கழ்த்தும் தேவா!
    அனிதாவின் சித்தத்தின் முற்றத்தில் மொத்தமாய்
    அமர்ந்தருளும் சாயிநாதா!
    தேவதைகள் போல்நூறு பாவையரை நூல்கொண்ட
    பாவையென ஆட்டுகின்றாய்
    தேரசையும் தெருபோலப் பாவையரின் காலசையத்
    தேவருல கம்பதறுதே
    காவல்விலக மனது களவுபோக நினைவும்
    கனவும் கலந்தாடுதே
    கடவுளோர் கதியதோ கதியாக்கும் ஜதியரசி
    கால்கள் கவிதை பேசுதே
    தனதாந்த தனன தன
    அனிதாவின் நடனமொழி
    தகிடதிமி தனுஜனுகு
    அரம்பையரின் மனமுருகும்
    தனுஜனுகு தாம்தகிமி
    தனுமனுவும் ஓர்கதியில்
    தகதகிட கிடதகிட
    தலையடியும் ஒருசுதியில்
    தகதகிமி தகதகிமி தாம்தகிட தாம்தோம்
    வனிதையரின் வரிசையினில் வான்புவியில் கண்டோம்
    தாம்தீம்தோம் தாம்தகிட தாம்தகிட தோம்தோம்
    வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துமிசை கேட்டோம்
    ஆடுவ தெல்லாம் அருவா? உருவா?
    அறவே தொலைந்த திருளா? மருளா?
    சூடுவ தேயவன் திருவடி தானா?
    சொல்லொவ் வொன்றும் சுடர்ந்திடும் தேனா?
    தேடுவ தெல்லாம் தேரினில் வந்தென்
    தெய்வம் புன்னகை செய்து கொடுத்ததில்
    தேவைக ளெல்லாம் தீர்ந்தது தானா?
    தெரியவில் லையிது நானா? வானா?
    பாரதம் என்பது மேடை, அதில்
    பரதம் பரமனின் ஜாடை
    ஓரடி விதியை மிதிக்கும், மற்
    றோரடி வானை யளக்கும், இதில்
    யாரடி யோகொடுங் கோடை வாடை
    அடைமழை வசந்தம் ஆயிரம் சுகந்தம்
    தேரடி தெருவெனத் தெய்வம் பலவெனத்
    தெரிந்து படைத்துச் சிரித்தாள்? அவள்
    நேரே இறங்கிச் சேலை அணிந்து
    பாரை அளந்த பதத்தாள்! அவள்
    பரதத் தில்புது விதத்தாள்!
    பாவனைகள் இதுபோலப் பார்கண்ட தில்லையே
    பார்ப்பதெல் லாம்தில்லையே!
    பாலைமனம் சோலைவன மாகவுரு மாறியதில்
    பகலிரவெ லாம்முல்லையே!
    தேவையெல் லாம்தீர்க்கும் தெய்வக் கலைத்தேரில்
    தெய்வமென வந்த பெண்ணே! உன்
    பரதாஞ்ச லிக்கிந்தப் பாமரன்ச மர்ப்பித்த
    கவிதாஞ்ச லியையேற்பாய்!
    ஆவதெல் லாமவன் அருளென்னும் அன்பென்று
    யாவரும் இசைபாடவே!
    அருளேதன் னுருவாக பரதமே உயிரான
    அனிதாகுஹா வாழ்கவே!

    கவிதையை என் குரலில் கேட்க: https://drive.google.com/…/1-yBJpkYWTCa9jc…/view…

    நிகழ்ச்சியை, 80 வயதிலும் கூர்மையும், உன்னதமான தமிழ் உச்சரிப்புக்கும், மெலிதான நகைச்சுவைக்கும் புகழ் கண்டவருமான திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அவரையும் அவர் கணவரையும் அமர்த்திவைத்து அனிதாஜி அவர்கள் சிறப்புச் செய்தது அந்த விழாவின் சிறப்பம்சம்.

    பரதாஞ்சலி நடன மணிகள் தேவலோகத்துப் பெண்களாக மாறி அருமையான நடன நிகழ்ச்சியொன்றை, இரு பகுதிகளாக வழங்கினார்கள். அதில், நடனக் கலைஞர்களுக்கு எவ்வாறு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது என்பதையும் காட்டினார்கள்.

    நேரம் போனதே தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது என் நடையில் ஒரு விசைப்பு முளைத்திருப்பதை உணர்ந்தேன்.

    அன்புடன்,
    ரமணன்
    23.11.2022/புதன்/8,50

    புகைப்படங்களை அனுப்பி உதவிய திரு. ஐயப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    Share
  • நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா

    நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா

    ‘நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம் ஐயப்பா’ என்ற இனிய பக்திப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தனித்தனி உலகம்

    தனித்தனி உலகம்

    பாஸ்கர்

    உனக்கும் வந்தது எனக்கும் வந்தது ஒரு கனவு
    உனக்கு எப்போதும் பிடித்த ஒரு பெரிய தோசை
    எனக்கு, கூர் தந்தங்களுடன் ஒரு காட்டு யானை
    நான் என் எதிரியை விரட்டுவதாக நினைவு
    உனக்கு வந்தது முகமூடி போட்ட மனிதன்
    நானும் எதிரியைப் பிடிக்க முடியவில்லை
    முகமூடி போட்டவன் யாரென உனக்கும் தெரியவில்லை
    நாம் உறங்குகிறோமா என இருவருக்கும் தெரியவில்லை
    இருவரும் உறக்கம் கலைந்து எழுந்துகொள்ளவில்லை
    கனவே சுகம் என இருவரும் இருந்துவிட்டோம்
    காலம் வரும் என்றாலும் பிரியவே எத்தனித்தோம்
    பிரிந்ததே சுகமெனப் பின்னாளில் புரிந்துகொண்டோம்
    இல்லையெனில் நமக்குள் கனவுகளே வந்திருக்காது
    நாமும் வாழ்ந்தோம் , காதலும் வாழ்ந்தது – வேறெங்கோ.

    Share
  • Mak N Bajji to Hak and Chill – Mylapore Gets a New Point of Munch

    Mak N Bajji to Hak and Chill – Mylapore Gets a New Point of Munch

    Baskar Seshadri

    I had posted on the wall few Months ago about the plans of a new Outlet by Mak N Bajji a triplicane based snack Joint. Now all are set and done and the same is open for the Mylaporeans and the name of the New Joint Hak and Chill.

    This Make in Bakshanam is famous in and around triplicane for its Murukku, Thattai, Ribbon pakoda and many more.

    They are also into the catering to Prepare Bakshanam for all occasions like Marriages, Seemantham and other special functions.

    The proprietor when i met him months ago told his long wish to open a outlet in Mylapore. The food and Bakshanams Including the Juice is prepared in Natural format and they don’t add any Preservatives or any colour fragrance for any added attraction.

    Few Of my friends who are regulars to him says the Podis Here are a special hit in His Place. And the choice of the Proprietor is to introduce the Elaneer Payasam a rare drink not available everywhere.

    And Mylapore is to have a Elaneer payasam Outlet and Be ready to make it one of these days. And so what’s Special In Elaneer payasam here? Its Served Chill and the taste as said by my friend is Heavenly. So whats Next? Ready, Steady and Go.

    Hak and Chill is at 11/4 South Mada street, Mylapore and its close to Old Netaji and National Seeval Shop and Kalyan Ghee stores. And i hope you remember the small passage which used to House the Old Ravi Book House. There are two shops in a row. One deals with Payasam and other sells Savouries.

    Kaliesraj is the Person behind this venture. He is a smart, Hard working and a very unassuming Person.

    This shop was opened two weeks ago. I literally saw him this morning standing on the road distributing the pamphlets of his shop.

    A young boy today may have some hesitation to do such work But Kaliesraj is bent on making this a success Venture. Good Luck Kaliesraj, You are sure to go Places. Just eat, drink or Munch whatever you like but share a word here on this wall on how you Liked it.

    If you wish to reach Kaliesraj Please call him at 97910 54039 .

    Share