”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்,
பொய்யென்(று) உணர்ந்து புகலடை ”யாதவன்கால்”,
மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
சந்தக் கவி
எழுவதுகளில் சொல்லையும் கொடுத்து சொல்லியும் கொடுத்த
சந்தக் கவி சு.ரவி உந்தப் புனைந்தது….
—————————————————————————-
தானதான தந்ததந்த தானதான தந்ததந்த
தானதான தந்ததந்த -தனதான”சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்தஅந்த
வேலனார் அருந்துகின்ற -அமுதூறும்
பாரமான கொங்கைதங்கு மேனியோட சைந்துயிங்கு
வேகமாய்ந டந்துவந்து -அருள்வாயே
கோரமாக வந்துநின்ற மாலிநீலன் சண்டமுண்டன்
மேனியாவை யும்பிளந்த -திரிசூலி
ஆலகாலம் உண்டசம்பு மேனிபாதி தங்குகின்ற
ஆதிகாளி உன்னையென்றும் -மறவேனேமாறனோடு தொந்திகொண்ட வேழநாய கன்வளர்ந்த
மாலனோட யன்வணங்கு -மகமாயி
வாசமாலை தங்குகின்ற வேதனார்உ டம்பணைந்த
வாலைநீலி தஞ்சைதங்கு -சிவகாமிநேரகால மின்றியுன்னை நாளும்நாடும் அன்பர்நெஞ்சை
நாடியோடு கின்றமங்கை -மகராணி
ஆசைநாய கன்பரந்த மேனியோடி டும்குளிர்ந்த
ஆலவாய மர்ந்தஅன்னை -அபிராமி
————————————————————————————————————————தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன -தனதானமுத்துநகை மொட்டுயிதழ் பொற்சிலையை ஒத்தவுடல்
முக்கனியும் வெட்கும்மொழி -அமுதூறும்
கச்சைமுலை சிற்றிடையி ணைத்தவுடை பட்டுவுடல்
உற்றஅணி பத்துவிரல் -கணையாழிகொத்துமலர் உற்றகுழல் அத்தனையும் புத்தியினில்
வைத்துருகும் பித்தனவன் -உமையோளே
நித்தம்குற தத்தையவள் முத்தணித னத்தையிறு
கத்தழுவு வெற்றிகுகன் -குணமாதாசித்தமொரு மித்துவுனை பத்தியொடு முத்திபெற
வைத்திடும்ம னத்தைவுடை -அடியார்கள்
வெற்றிபல பெற்றுபிற விப்பிணிஅ கற்றிவுயர்
நற்கதியி லுற்றுபுக -ழடைவாரேசத்திதரு மத்திமவு னத்தியிள கச்சணிமு
லைச்சிகரு ணைச்சிசிவ -சுகுமாரி
பச்சைநிற முற்றபவ ளக்கொடியி டைச்சிபதி
சொக்கருடன் கச்சியுறை -அபிராமி….கிரேசி மோகன்….! -
எண்சீர் விருத்தங்கள்….
கிரேசி மோகன்
—————————————————-ஆதித்தன் அம்புலிவிண் மீன்கள் மாயை
ஆடவரும் பெண்டிரும்அவ் அலிகள் மாயை
போதிமரத் தடிவாழும் புத்தரும் மாயை
புகன்றவந்த நிர்வாணப் பூச்சும் மாயை
வாதிட்டு வென்றசங் கரனும் மாயை
விளைந்தஷண் மதங்களும் மாயை மாயை
ஆதியந்த மிலாபிரமன் அடையா தோற்கு
அகமாயை சகமாயை அனைத்தும் மாயை….(1)அதனாலோ இதனாலோ அதுயிங் கில்லை
அதுவாக அதற்குள் அதுவாய் ஆகி
அதன்பின்னே அதுஅலுத்து அதுவே றாகி
அதுவென்றும் இதுவென்றும் அதனால் மாறி
அதற்கப்பால் இதற்குள்ளே அதுபோய் நின்று
அதுஆதி இதுஅந்தம் எனப்பேர் கொண்டு
எதுஇதுவென்(று) எனஅதுவே எங்கும் தேடி
இதுஅதுவென்(று) அதுஅகமென்(று) அடங்கும் ஆன்மா….(2)
வைகுண்டம் கைலாஸம் வானம் பூமி
வார்த்தைகள் தானன்றி வேறே இல்லை
பொய்கொண்ட வாழ்க்கையைப் புறத்தே தள்ளி
புலன்களுக்கு அப்பாலே பார்த்துப் பார்த்து
மெய்கண்டு கொள்ளஅம் மாயை போகும்
முயல்கொம்பால் மலடிமகன் பேரை நீரில்
கைகொண்டு எழுதிடலாம் குருடன் என்று
கையெழுத்து காய்வதற்குள் காலம் மாறும்….(3)காட்சிகளும் காண்போனும் காணும் கண்ணும்
கற்பிதமா சொப்பனமா கானல் நீரா
ஆட்சியிது ஐம்புலன்கள் ஆட்டம் அன்றோ
ஆதலினால் ஆன்மாவை ஆத ரித்து
சாட்சிபரி பாலனமாய் சான்றோர் போக்கில்
சுகதுக்க பேதமற சார்ந்தோர் உள்ளம்
சூழ்ச்சிபுரி காலன்தன் சூதை வென்று
சும்மாயி ருக்கலாமே சுகமாய் என்றும்….(4)….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அலங்காரம் உண்டு, அலட்டலிலை, போரில்
‘’கலங்காதே கண்டீபா கீதைக் -களங்காதை’’
சொன்னவரை, பார்த்தனுக்கு சேணம் பிடித்தவரை(வடமதுரா மன்னவர், ஸ்ரீதேவி மணவாளர் அலங்கரித்தாலும் போரில் அசுவரதம் ஓட்டியது அவர் எளிமை….simply superb….!)
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மந்திக்கு முன்னாடி,மாட்டுக்குப் பின்னாடி,
கண்திக்கில் மாபலி காட்சியை -சந்திக்க
விண்ணுகுத் தாவிய விக்கிரம வாமனனை
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வேறெதற்கு வீடு, விருந்தா வனமிருக்க,
பேரதற்கு ஏகப் பரம்பொருளாம், -வேரதற்கு
விண்ணனைந்து ஓங்கிடும், மண்ணில் மலரும்அக்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ் (Thanks Kesav)”….!கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தூதுக்(கு)(பாலுக்கு -ஹிந்தி) அழும்பாலன், தூதானார் பாண்டவர்க்காய்,
ராது(செல்லமாக ராதை)வை வாஅர்த்த ராத்திரியில், -தூதாக
அன்னத்தை சொல்லி அனுப்பிடும், ஆயர்சேய்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’ஆலால கண்டர்(ஈசர்) அருமை மைத்துனர்,
ஆலா பனைசெய்யும் ஆண்டவர், -கோலோகர்,
மேலோட் டவாசிப்பு(வைகுண்ட வாசிப்பு) வாலாட்டும் மாட்டுக்கு:
மேலோட் டமாய்பார்க்க மேய்ப்பு’’….கிரேசி மோகன்…! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும்: -மணத்துழாய்
உச்சியில் ஏந்தி, உவக்கும் பசுக்(கு)உம்மா:
கச்சிதம் கேசவ் கிரேட்’’….கிரேசி மோகன்….! -
’’ஸ்ரீநிவாசர்’’….!(கண்ணன் வந்தார் எங்கள் கண்ணன் வந்தார்)….!
’’அன்புள்ள அனைவர்க்கும்’’…..அடியேன் நாத்திகன் கிரேஸி மோகன் நிச்சயமாய் அல்ல….விடிகாலை பத்து மணிக்கு துயிலெழும் சோம்பேறி ஆத்திகன் ‘’லேஸி மோகன்’’….கோயிலுக்குச் சென்று ஸ்ரீனிவாசரை ‘’காதலிக்க நேரமில்லை’’….இருந்தாலும் செடியாய் வல்வினை தீர்க்க சீனிவாசர், வருடா வருடம் அடியேன் தரிசிக்க வீதியுலா வந்திடும் வாத்ஸல்யர்….(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்)….!இது முன்னூட்டம்….இனி பின் ஊட்டச் சத்து-சித்து-ஆனந்தம்….!
சென்ற வருடம் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
விடி காலை எழுந்தருளினார்….அப்போது எழுதிய வெண்பா….
———————————————————————————————————–சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்
பற்றி, எதிற்புரம் பத்தினிகள் -நிற்றிருக்க
புள்ளனெழாப் போதினிலே பல்லக்கில் ஊர்வலமாய்
கள்ளனென வந்தவரே காப்பு….!சேதியொன்று கேளீரோ வீதியுலா செங்கமல
மாதுவுடன் சீனு மயிலையில் -காதினில்
கொட்டொலி கேட்கிறது விட்டொழி தூக்கத்தை
சட்டென வாராய்வா சல்….!பேயோடு பொய்கையும் பூதமும் பாடிய
மாயோன் மணிவண்ணன் மாம்பழ -வாயோன்
வருகின்றான் வாசலுக்கு வந்தவனை வந்தி
தருகின்றான் நாளும் தவம்….!வாநீவா சல்பக்கம் வீதியுலா வந்துள்ளார்
தூணிவாச சிங்கன் திருமார்பன் -சீனிவாசர்
பிம்மாலைப் போதில் பெருமாளை சேவிக்க
நம்மாள் அருள்வார் நலம்….!இந்த வருடம் வந்த போது ஸேவித்து எழுதியது….!
————————————————————————————————‘’சனிக்கிழமை காலை சரியாக மூன்று
மணிக்கு மயிலையின் மாலர் -மணிக்கண்ணன்
செங்கமலத் தாயார் சமேதராய் வந்திருந்து
சங்கொலி செய்தார் சீனு’’….கிரேசி மோகன் -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பினாமிகா மாலர்க்கு, பூபாரம் போக்க
அனாமிகா அச்சுதன், ஆயர்க்(கு) -இனாமிகாவாய்(FREEயாய்)
வந்த இளவல், விரஜகுல சொத்தவர்,
நந்தன் யசோதைக்கண் ணன்’’….கிரேசி மோகன்….!












