கிரேசி மோகன்
Category: கிரேசி மொழிகள்
கிரேசி மொழிகள்
-
Advent Day!
கிரேசி மோகன்
September 1… 1896… A boy came to Arunachala to abide there forever… He was the silent sage, Ramana Maharshi…. Arunachala!

“செப்டெம்பர் ஒன்றின்று, சின்னஞ் சிறுவராய்,
அப்பன்தன் வீடு அருணைக்கு, -சுப்பன்(சுப்ரமண்ய அவதாரம் பகவான்)
குடிபுகுந்த நன்நாள், குருவே வணக்கம்,
மடிபுகுந்தோம் அண்ணா மலை”….கிரேசி மோகன்…. -
பிள்ளையார் வெண்பாக்கள்
கிரேசி மோகன்
பிள்ளையார் வெண்பாக்கள்
———————————————
ஓவியம் : கேஷவ் சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச் -சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)
ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய்-தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)
அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்த தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கே -விக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையா -தனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன் -பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)
அருகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்து -ஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனை –வேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)
அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)
கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)….————————————————————–
-
பிள்ளையார் பதினாறு
கிரேசி மோகன்
—————————-காஞ்சி மஹாபெரியவா “அருள் வாக்கில்” எழுதியதைப் படித்து விட்டு எழுதிய வெண்பாக்கள்…. அடியேன் ஆதிநாளில் வரைந்த “சித்தி புத்தி வினாயகர்”, ரவிவர்மாவைப் பார்த்து வரைந்த, வாட்டர் கலர் ஓவியம்.
பிள்ளையார் பிறப்பு
———————–நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
கிள்ளியங்கு வைத்தான் கஜம்….ஸுமுகர்
———–
சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)தூமகேது
———–
சோமதேவன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமரூப துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)
ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….
பலஸ்ருதி
————-பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….
———————————————————————————————————————– -
கலிகால கரிகாலன்
கிரேசி மோகன்
”கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’’ நாடகத்தில் என் பெயர் ர.மோகன் என்றுதான் அறிவிக்கப்படும்….அந்த சமயத்தில்(1975 என்று நினைவு) ஆனந்த விகடன் ஆசிரியர் வீயெஸ்வி ஒரு குட்டி நாடகம் எழுதித் தருமாறு கேட்டார்….முதன்முதலில் பத்திரிகையில் வந்த அடியேனின் சிறு நாடகம் ‘’கலிகால கரிகாலன்’’….நம் எழுத்து பத்திரிகையில் பார்க்கும் ஆர்வத்தில் அந்த வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்று ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்தால் அதில் ர(ர பாஃர் ரஙாச்சாரி)மோகன் கிரேசி மோகன் என்று போடப்பட்டிருந்தது….ஆக எனக்கு வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ர.மோகன்….விகடன் தாத்தா வைத்த பெயர் கிரேசி மோகன்….அடைமொழியை வார்த்துப் போட்டது ஆனந்த விகடன் ஆசிரியர் ‘’வீயெஸ்வி’’….என்னை கிரேசியாக்கிய இந்த சிறு நாடகம் பிற்காலத்தில் (80துகளில்) ‘’ஜூனியர் விகடனில்’’ அடியேன் ஆடிய ‘’கே.பி.டி சிரிப்பு ராஜன்’’ என்ற 5 நாள் மேட்ச்சுக்கு நெட்-ப்ராக்டீஸாக அமைந்தது….
-
தாம்புக் கட்டு
கிரேசி மோகன்
தக்காளி ரசத்தில் கடுகைத் தாளித்துக் கொட்டினா மாதிரி, பகலை இரவு சந்தித்துக் கை குலுக்கும் சாயங்கால நேரத்து வானைப் பார்த்தபடி….ஸாரி பார்க்காதபடி கண்களை
துணியால் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ” சரியா!….தப்பா!….சரியா!….தப்பா!” சொல்லிக் கொண்டே அந்த சிறுமி நொண்டியபடி பாண்டி ஆட்டம் ஆடிக்
கொண்டிருந்தாள்….சக சிறுமிகளின் சத்தம் வராது போகவே, அவள் கண்கட்டை அவிழ்க்க….எதிரே தாடகை ராட்சஸி போல அவள் தாயார் சாமி ஆடிக் கொண்டிருந்தாள்….
” சரியில்லடி….தப்பு….நான் உன்னை பெத்தது தப்பு….உன்னை ஒங்கப்பன் வளத்த விதம் தப்பு” என்று தப்புக்களை அடுக்கியபடி, நிழலை உருவம் இழுத்துக் கொண்டு
போல….தாய் மகளை அடித்தபடி தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….” ஏண்டி பொண்ணை போட்டு இந்த அடி அடிக்குற….”காதை மயிலிறகால் குடைந்தபடி கட்டிலில் கரிசன நைனா….
” அடிக்காம….மடில போட்டு கொஞ்சவா சொல்றீங்க….அவ செஞ்ச….இல்ல செய்யாத காரியத்துக்கு கொன்னே போட்ருக்கணும்….பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு
கயிறு வாங்கிகினு வான்னு காலீலயே சொல்லியாச்சு….இந்த சிறுக்கி இன்னும் வாங்கிகிட்டு வரா…”
”ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதுதானே….ஏம்மா ழாழாத்தி…” குடைச்சல் சிலிர்ப்பில் ”ராசாத்தியை” ழாழாத்தி என்று நைனா….!
” அது என்ன எப்பப்பாரு ராசாத்தி ராசாத்தினு கொஞ்சல்….சிறுக்கிக்கு பேர் வச்சிருக்கீங்க இல்ல….அத சொல்லி கூப்பிடறது….”
”நாம என்ன பேர் வச்சாலும் அவ என்னிக்குமே ராசாத்திதாண்டி…. போன வருசம் ராமாயணக் கூத்துல எம் பொண்ணுதானே ராசாத்தி….
ராமன் வில் ஒடைக்க வர சொல்ல ஒரு பாட்டு பாடுவியே…”ஈன்றாத போதும் பெரிதுவந்தார் நைனா….
”நீல வண்ண ராமா நில் நில்….நீ ஒடைக்க தோ பார் வில் வில்” கீச்சு மழலையில் சிறுமி கூவினாள்….!
”நிறுத்துரி ஒன் ஒப்பாரியை….நீல வண்ணமாம் நீல வண்ணம்….ராமன் கருப்புடி…”
” நைனா நைனா ராமனை எனக்கு கட்டி வை நைனா….எனக்கு இந்த சேப்பு புடிக்கல….அவனை கட்டிக்கிட்டு நானும் நீலமாயிடுவேன்” குடையும் மயிலிறகு மறுகாது
வழியாக வரும் அளவுக்கு சிறுமி தன் தகப்பனை உலுக்கி ஆட்டுகிறாள்….
”நீயே நீலம் பாரிச்சுதாண்டி பொறந்த….நல்லவேளை ஒன் சினேகிதி நப்பின்னையோட ஆத்தா உன்னை தலகீளா தொங்கவிட்டு காப்பாத்தினா….எப்பபாரு நீல
ஆலாபனைதான்….ராமனை கட்டிக்கிட்டா காட்டுக்குத்தான் போவனும்….”
”ராமன் இருக்க சொல்ல நான் தெகிரியமா காட்டுக்கு போவேன்….”
”காட்டுக்கு அப்பால போவலாம்….இப்ப பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு கயிறு வாங்கியா…”
”தாம்பு கயிறு வாங்கிட்டு வந்தா ராமனை கட்டி வப்பியா….?”
” தாம்பு கயிறை வாங்கியா….ஆத்தாளும்,பொண்ணும் தூக்குல தொங்குவோம்….ஏங்க இவ சிறுக்கியா இல்ல கிறுக்கியா….”
”அவ ராசாத்திடி….ராமன் மாதிரி அவளுக்குனு ஒத்தன் பொறக்கத்தான் போறான் பாரு….!”என்றார் கிழிஞ்ச கட்டில் சனக மவராசா….!
”எப்ப பொறந்து….எப்ப வளந்து….எப்ப கல்யாணம்…. அய்யோ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் இப்படி கனாலயே காலத்தை தள்ளறீங்களே….
பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது….”
”ஏண்டி என்னையும் நீயா பெத்தே….?”
”கேலில ஒண்ணும் கொறைச்சலில்ல….தோ பாருங்க நீங்க ஒங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டீங்க….படிப்பு கிடிப்பு ஒண்ணும்
கிடையாது….எப்பப்பாரு ஆகாசத்தை பாக்கறா….அன்னிக்கு வான வில்ல பாத்துட்டு ”ஆத்தா ராமன் இத ஒடக்க வருவானா” கேக்கறா….பட்டாம் பூச்சிக்கு
பாட்டு சொல்லித் தரா….மல்லிப் பூவுக்கு, நீல கனகாம்பரத்தை கல்யாணம் பண்ணி வக்கறா….இது எங்க போய் முடியப் போவுதோ…!உங்களுக்கே கண்ணுல
ஜலம் வருது பாருங்க….”
”தோ பார் சொகமா காது குடஞ்சா அப்படித்தான் கண்ணுல ஜலம் வரும், வாய்ல ஜொள்ளு ஒழுகும்….அது ஒரு புல்லரிப்புடி….”சனக மவராசா காது குடைஞ்சு
குடைஞ்சு கைலாசத்துக்கெ போயிடுவார் போல கிறக்கத்துல இருந்தார்….பிறகு பெண்ணைப் பார்த்து” உங்காத்தா எதான உளறுவா….நீகாதுல போட்டுக்காதே….
போய் சாப்டு தூங்கு….”
”நீங்க காதுல மயிலிறகை போடறதை மொதல்ல நிப்பாட்டுங்க” என்ற தாயார்காரி, சிறுமி உள்ளே செல்வதைப் பார்த்து ” எங்கடி நழுவுற…உன்னை
வளக்கற விதத்துல வளத்தாத்தான் உருப்புடுவ….மயிலே மயிலேன்னா இறகு போடாது….அப்படியே போட்டாலும் உங்கப்பன் அதுல காது குடைய ஆரம்பிச்சுடுவார்….”
சிறுமி தாயைப் பார்க்க ”என்னடி பாக்கற….கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறே….அடிச்சா அழ மாட்டேங்கறே….மனசுல என்ன மாகாளின்னு நெனப்பா…
போயி பால்காரம்மா வுட்டுலேந்து தாம்பு கயிறு வாங்கிகினு வா….அத்தாலா தயிரு கடையறது முன்னாடி உன்னை விளாசறேன்….அப்பத்தான் உனக்குப் புரியும்….”
”இருட்டிடுச்சு ஆத்தா….நாளைக்கு காலீல….”என்று சிறுமி இழுத்தாள்….”இருட்டினா என்ன….அதான் ஒனக்கு துணைக்கு அந்த நீலப் பய இருக்கானே…போடி”
என்று மகளை தள்ளி கதவை சாத்துகிறாள்….” என்னம்மா இப்படி கல்நெஞ்சுக்காரியா கீறே….காத்து கருப்பு உலாவுற வேளைல….பச்சை புள்ளையைப் போய்”
காது சொகம் அலுத்து மயிலிறகால் முதுகை சொரிந்தபடி நைனா செய்த சிபாரிசு எடுபடவில்லை….”உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும்…. இவ வயசுல நான் உங்களை கட்டிகிட்டாச்சு….பச்சை புள்ளையாம் பச்ச புள்ள….மொதல்ல அந்த நீலப் புள்ளையை மறக்க சொல்லுங்க….”உள்ளே போகிறாள்….அன்று பார்த்து பிரளய கால இருட்டு….இரவு ஆரம்பமே அர்த்த ஜாமம் போல் இருண்டது….வரப்போகும் மழைக்கு பராக் பராக் சொல்வது போல சிலு சிலுவென
காத்து…..வானத்தில் யாரோ தக்கிளி நூற்பது போல மின்னல் தோன்றி பூமியைத் தொட்டது….இடிச் சத்தம் சிறுமியின் காதில் ராமர் வில்லை உடைத்த சத்தமாகக்
கேட்டது….சிறுமி பயத்தைப் போக்கிக் கொள்ள ”லட்சுமணா லட்சுமணா” என்று மனசுக்குள் சொல்லியபடி ஆத்தோரமாக பால்காரம்மா வீட்டுக்கு பயணித்தாள்….
”வானத்திலிருந்து மழை பெய்கிறதா இல்லை ஆத்துத் தண்ணீர் வானத்துக்குச் செல்கிறதா” என்று குழம்பும் அளவுக்கு வானத்துக்கும் ,பூமிக்கும் தண்ணீரால்
தறி போட்டது போல மழை பத்தினி சொல்லாமலேயே பெய்யெனப் பெய்தது….துணைக்கு ”ராமனோ,லட்சுமணனோ” வில்லை ஏந்தி வரவில்லை….சிறுமிக்கு
பயம் பிடித்துக் கொண்டது….ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்திற்குள் ஒதுங்கினாள்….அந்த மண்டபத்தில் ஒருவர் படுக்கலாம் ,இருவர் அமரலாம் ,மூவர் நிற்கலாம்….வெளியே
பேய் இருட்டு ,பொய்கை மழை ,பூதக் காத்து….அச்சத்திலும் , அசதியிலும் சிறுமி மண்டபத்தில் படுக்கிறாள்….அப்போது ஆத்துப் படிதுறையிலிருந்து ஒரு
மாமா தலையில் துணி மூட்டையோடு மண்டபத்தை நோக்கி வருகிறார்….அவர் உள்ளே நுழைந்தவுடன் ”உஸ்” என்ற சத்தம் ஓய்கிறது….பெருமூச்சு விடுகிறார்
பெரியவர் என்று சிறுமி நினைத்த வண்ணம், எழுந்து அமர்ந்து அந்த மாமாவுக்கு உட்கார இடம் அளிக்கிறாள்….பெரியவர் தலையிலிருந்த துணி மூட்டையை
இறக்கி வைக்க இடம் இல்லாததால் சிறுமி எழுந்து நிற்கிறாள்….இப்போது மாமா, சிறுமி இருவரும் நிற்க காலி இடத்தில் துணி மூட்டை….”அந்த மூட்டைல என்ன மாமா ?”….சிறுமிதான் மெளனத்தைக் கலைத்தாள்….!
” நான் செஞ்ச புண்ணியத்தை மூட்டையா கட்டிண்டு எடுத்துண்டு போறேன்” மாமா முகத்தில் கலவரம் நிரந்தர நிலவரமாகப் படர்ந்து இருந்தது….
” பாவ மூட்டை கேள்விபட்டுருக்கேன்….அது என்ன புண்ணிய மூட்டை ?” சிறுமி விடவில்லை….
கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்ப்பது போல பெரியவர் சிறுமியின் கேள்வியைத் தவிர்த்தார்….
சிறுமி விடுவதாக இல்லை ”உங்க பேர் என்ன மாமா ?”
”பேர்ல என்னம்மா இருக்கு….பேர் சொல்ல பிள்ளை இருந்தா போறாதா….?”பெரியவர் முகத்தில் பெருமிதம் கொப்பளித்தது…அது சரி உம் பேர் என்ன….?”
பெரியவர் பேச்சை மாற்றினார்….!
”எங்காத்தாக்கு ஒரு அண்ணாத்த இருக்கார்….எனக்கு அவர் மாமா முற….அவுரு பேரையே உங்களுக்கு வக்கறேன்….சர்தானா….”
”உன் சவுகரியம் எப்படியோ அப்படியே கூப்பிடுமா….”பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்….” வாசு மாமா” என்று சிறுமி கூப்பிட
”என்ன சொன்ன ?” என்று திகைத்தார்….”என் மாமன் பேரு வாசு மாமா….உங்களுக்கும் என்ன மாதிரி அவரு பேர கேட்டாலே பயமா….?”
இருவரும் சம்பாஷணையில் திருப்தி இல்லாததால் சிறிது நேரம் மெளனம் காத்தார்கள்….” எம் பேர் ராமி” என்றாள் சிறுமி….
” ராமியா….! கேள்விபடாத பேரா இருக்கே….!”
”ராமன் சம்சாரம் ராமிதானே….நான் ராமனைத்தான் கட்டிக்கப் போறேன்….ஏன்னு கேளுங்க….”
வெளி மழையை விட இவள் கேள்வி மழையைத் தாங்க முடியாத பெரியவர் ” ஏன்?” என்று ஏனோ கேட்டு வைத்தார்….!
” எனக்கு நீலம் புடிக்கும்….ராமன் நீலமா இருப்பான்” பெரியவர் மூட்டையைப் பார்த்து விட்டு சிறுமியை மோகினிப் பிசாசைப் பார்ப்பது போல பார்த்தார்….
”அப்ப நான் கிளம்பறேன் தாயி” என்று பயபக்தியோடு அவளிடம் சொல்லிவிட்டு மூட்டையை எடுக்கக் குனிந்தார்….
”துணைக்கு வருவீங்கன்னு பாத்தா இப்படி தனியா வுட்டுட்டு போறீங்களே….பால்காரம்மா வூடு வர கூட வாங்க வாசு மாமா” என்றதும், பெரியவர்
ஆச்சரியமா , அதிர்ச்சியா தெரியாத பாவத்தைக் காட்டியபடி ”என்ன….நீயும் பால்காரி வீட்டுக்குத்தான் போயிண்டுருக்கியா….?” என்று அவசரமாகக் கேட்டார்….
”ஆமாம்….நீங்க….?”
”நானும் அங்கதான்….!”
”உங்கம்மாவும் தாம்புக் கயிறு வாங்கிக்கிட்டு வர சொன்னாங்களா….?”
” நான் அங்க போறது தாம்புக்காக இல்ல தாயி….நோம்புக்காக….!”பெரியவர் பழையபடி தலையில் மூட்டையை சுமந்தபடி செல்ல ,அவர் தலைக்கு மேல்
”உஸ் உஸ்” என்ற சத்தம் வருவதைக் கேட்டபடி சிறுமி அவரைத் தொடர்ந்தாள்….” மாமா நீங்களும் எங்க நைனா மாதிரி மயிலிறகால காது குடைவீங்களா….?”
” ஏன் கேக்கற….?” என்று அவர் வெலவெலக்க, சிறுமி ”இந்தாங்க உங்க தலைல இருக்குற புண்ணிய மூட்டைலேந்து விழுந்துடிச்சு….” என்று ஒரு மயிலிறகை
அவரிடம் தந்தாள்….மூட்டை மட்டும் நனையாமல், இருவரும் சொட்ட சொட்ட நனைந்தபடி பால்காரம்மா வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்….!பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன்
வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…..நாதாங்கியில் தொங்கும் பூட்டைத் திறந்து
விட்டாலும் அதைக் கழட்டுவதற்குள் பொழுது விடிந்து விடும்….”எப்படி உள்ளே நுழைவது ” என்ற கவலையில் கதவையும், பூட்டையும் கவனித்த
வாசு மாமாவின் முகம் மலர்ந்தது….கதவில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டும் போய் வருவதற்கு தோதாக ஒரு பொந்து இருந்தது….ஆஜானுபாகுவான
வாசு மாமா அந்த பொந்தின் வழியாக மானசீகமாக நுழைய முயன்று பாதியில் மாட்டிக் கொண்டு பிதுங்கினார்….”மாமா என்ன இது….உங்க கைல தாம்புக் கவுறு கட்டியிருக்கு….?” சிறுமி சொன்னதும்தான் பெரியவரே தன் பிழையை உணர்ந்தார்….
அவசரமாகக் கிளம்பியதில் கை,கால்களில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுகளை அவிழ்க்க மறந்ததை எண்ணி அசடு வழிந்தார்….
”பால்காரம்மா தூங்கியிருப்பாங்க….அவங்கள எளுப்பி இந்நேரத்துல கவுறு கேட்டா என்ன கொன்னே போட்ருவாங்க….தாம்பு கவுறு
இல்லாம போனா எங்காத்தா என்ன அடிச்சே கொன்னுருவா….தயிரு கடைய இந்த அளவு கவுறு போதும்….” என்றவள், அவர் சம்மதத்துக்கு
காத்திராமல் அவர் கையில் அரைகுறையாக கட்டித் தொங்கிக் கொண்டிருந்த தாம்புக் கயிறை உருவிக் கொண்டாள்….”அப்பால நான்
வரேன்….பொழுது விடியறதுக்குள்ளே ஊரு போய் சேரணும்” என்று கிளம்பியவளை பெரியவர் பிடித்து நிறுத்தி….” தோ பார்….உனக்கு நான்
தாம்புக் கயிறு தந்தேன் இல்லையா….பதிலுக்கு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்” என்றார்….”என்ன?” என்பது போல பார்த்த சிறுமியடம்
”உள்ளே பால்காரம்மா தூங்கிகிடுருப்பாங்கா….அவங்க பக்கத்துல ஒரு பாப்பா தூங்கிகிட்டுருக்கும்” என்றவர் நாக்கைக் கடித்தபடி” அது தூங்கற
குழந்தையா….!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்….தொடர்ந்து ”நீ என்ன பண்ணனும்….நான் இந்த மூட்டைல ஒரு பொருள் வச்சிருக்கேன்” என்றவர்
மறுபடி நாக்கைக் கடித்தபடி….”வெறும் பொருளா அது” என்று முணுமுணுத்துவிட்டு….”நீ அந்த கதுவுல இருக்கற பொந்து வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சு
நான் கொடுக்கற இந்த பொருளை அங்க வச்சிட்டு, அங்க பால்காரம்மா பக்கத்துல தூங்கற பாப்பாவை நைஸா எடுத்திட்டு வந்து என் கைல
கொடுக்கணும்….புரிஞ்சுதா….”புரியாவிட்டாலும் தாம்பு கயிறு கிடைத்த சந்தோஷத்தில் சிறுமி பலமாக தலையாட்டினாள்….பெரியவர் மூட்டையைப் பிரிக்க, உள்ளே எட்டி அந்தப் பொருளைப் பார்த்த சிறுமியின் கண்கள் ஆச்சரியத்தில் ஆகாசமாக விரிந்தது….ஆனந்தத்தில்
ஆழ்கடலாக கொந்தளித்தது….” இப்ப புரிஞ்சு போச்சு….நீங்க தசரத மகாராசாதானே….?” என்றவள் பெரியவரைப் பேச விடாமல்,மூட்டைக்குள் மறுபடி
பார்த்து ”அப்பா என்ன ஒரு நீலம்….கைகேசிக்கு பயந்துகினு நீல ராமனை காட்டுல வுட வந்தீங்க….மனசு கேக்கல….பத்திரமா வூட்டுல வுட்டுட்டு அதுக்கு
பதிலா பால்காரம்மா பாப்பாவை….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி….”ஆமாம் பால்காரம்மா பாப்பா உங்களுக்கு எதுக்கு….?”…..இனியும் இவளை பேசவிட்டால்
ஊரையே எழுப்பிவிடுவாள் என்று பயந்த பெரியவர்….” மொதல்ல நான் சொன்னத செய்….அப்பத்தான் தாம்புக் கயிறு ”என்று அவளை அவசரப்படுத்தினார்….”கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய்(சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா
உருண்டையை கைகளில் பிரேமையாக ஏந்தியபடி பால்காரம்மா வூட்டுக் கதவை நோக்கி சென்றவள், திடீரென்று திரும்பி வந்து பெரியவரிடம்….”நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்….” என்ற அந்த சிறுமி….” இந்த நீல பாப்பா பெரியவன் ஆனப்பாடு இவன எனக்கு நீங்க கட்டி வக்கணும்….என்ன பதில்
சொல்லாம முளிக்கறீங்க….” சூழ்நிலையின் தீராத விளையாட்டை எண்ணி தனக்குள் வேதாந்தமாக சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர்….
” தாயி….உனக்கு என்ன வயசாகுது…?” ”மார்கழி பொறந்தா ஆறு….ஏன்….?” என்றவளை பரிவுடன் பார்த்து….”இது இப்பத்தான் பொறந்த பாப்பா….
இவன் என்னதான் பெரிவனா ஆனாலும் உன்ன விட ஆறு வயசு சின்னவனாச்சே….எப்படி இவன கல்யாணம் பண்ணிப்பே….”என்று கூறி முடிப்பதற்குள்
அந்த சிறுமி பாய்ந்து….” கவலையே படாதீங்க, இவன் பெரியவனா ஆறவரைக்கும் நான் ஆறுக்கு மேல என் வயசு ஆவாம பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த சிறுமி பால்காரம்மா வீட்டுக் கதவை நோக்கி நகர்ந்தாள்….தாயிடம் தாம்புக் கயிறை தந்து விட்டு, சிறுமி நடந்ததையெல்லாம் மூச்சு வாங்க சொல்லி முடித்து….” ஆத்தா….நீல பையன எனக்கு கட்டி வக்கறதா
அவனோட நைனா எனக்கு வாக்கு கொடுத்துட்டார் ”…..மகளை ஏற இறங்கப் பார்த்த தாயார்….” அய்யோ பெருமாளே….ஏன் எனக்கு இப்படி ஒரு
பைத்தியத்தை மவளா கொடுத்தே….” என்று ஒரு பாடு புலம்பிவிட்டு, அதே தாம்புக் கயிறால் நீலப் பிரேமையில் கட்டுண்ட மகளை தூணில் கட்டிப்
போட்டு….” இனிமே இப்படீலாம் பேசுவியா….பேசுவியா….” என்று அழுதபடி கேட்டுக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்….அப்போது கட்டிலிலிருந்து
தாவிக் குதித்து வந்து மனைவியைத் தடுத்த சிறுமியின் நைனா” உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா….எப்பப்பாரு ஏன் இப்படி போட்டு
அடிச்சே கொல்ற….ராதைய….”என்றார்…..
——————————————————————————————————————————————————- -
ஒத்தனும் மத்தொருத்தனும்’’
கிரேசி மோகன்
பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை
அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பாண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….
மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
மத்தொருத்தன்(செந்தில்)-அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….
ஒத்தன்(கவுண்டமணி)- இல்ல ….இப்ப வாணாம்….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…காட்சி-2
—————-
முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….காட்சி-3
—————-
நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’
கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….காட்சி-4
—————-
பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….
செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!
கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….
செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….காட்சி-5
—————
மருமகள் மைலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….
ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
சித்ரகுப்தன் -அப்ப எருமை….
எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….
—————————————————————————————————————————– -
’’பகல் பத்து’’
கிரேசி மோகன்

Keshav —————————–
”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு….(1)அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு….(2)நாக்கால் நவநீதன் மூக்கால் மணிவண்ணன்
கேட்கும் படிசெவியில் கோவிந்தன் -நோக்கும்
விழியால் வரதன் விரலால் அரியென்(று)
ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு….(3)அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
அழகவன் லீலா அபங்கம் -பழக
அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
பொழுதுமவன் பொற்பைப் புணர்….(4)ஆணானாய் பெண்ணானாய் மீனானாய் ஏனமானாய்
தூண்தோறும் சிங்கத் துருவானாய் -கூனானாய்
வானானாய் ராமனாய் மூணானாய் கண்ணனானாய்
நானாவாய் நாராய ணா….(5)நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
அப்பனே ஆரா அமுது….(6)ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
அபரி மிதமான அன்பு….(7)அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக வா….(8)மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
பக்திகர்ம ஞானவழிப் பேறு…..(9)நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
எனக்களிப்பாய் வேலை எழுத்து….(10)————————————————————————————————————————————————
-
சிறுவா புரி சதகம்
கிரேசி மோகன்
கவியோகியார் கந்தரலங்காரம் என்றவுடன் என் நினைவுக்கு கந்தரனுபூதி வந்தது….கபாலி கோயில் ‘’முத்துக்குமாரச்ச்சாமி’’ சன்னிதி சுவற்றில் பொறிக்கப் பட்டிருக்கும் ‘’கமலா குகசூ சுககுங் குமதே’’ சந்தத்தில் அருணகிரியார் எழுதிய ‘’கூகா யெனயென் கிளை கூடியழ….பெம்மான் முருகன் பிறவான் இறவான்….குருவாய் வருவாய் குகனே அருள்வாய்’’ வரிகள்….எனது டாக்டர் திருமணத்திற்காக காளஹஸ்தி போகையில், டிரைவர் பாதி வழியில் ‘’சார்….வலது கை பக்கம் போனா ‘’சிறுவாபுரி முருகர்’’ கோயில் வரும் என்றார்….நேரம் இல்லாததால் போக முடியவில்லை….ஆனால்….பூசலா நாயனார் போல காளஹஸ்தி போய் வருவதற்குள்,மனசுக்குள் ‘’கந்தரனுபூதி’’ மெட்டில் 25 பாடல்கள் எழுதி எனக்கு எழுத்தறிவித்த பூனா நண்பன் சு.இரவியிடம் படித்துக் காட்டினேன்….அவன் ‘’சிறுவாபுரி சதகம்’’ எழுதுமாறு பணித்தான்….எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்….அடியேன் குறையொன்றும் இல்லா கிரேசி….நிறை இருப்பதாக நம்பும் மோகன்…..இத்துடன் அடியேன் வரைந்த முருகர் ஓவியத்தையும் இணைத்துள்ளேன்
————————-
காப்புச் செய்யுள்
———————-
“உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
தரைசே ரவடித் தருள்வே ழவரே
சிறுவா புரியார் சதகம் எழுதத்
தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

ஓவியம் : கிரேசி மோகன் “தனியா னைசகோ தரனார் துணையால்
வனமா துடல்மே விடவே டுவனாய்
தனியாய் வருவேல் தணிகா சலனே
வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)“அடடா எனவூர் அனுதா பமுற
சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
உடனே வருவாய் உமைபா லகனே
இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)“புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
மதலாய் பெருமாள் மருகா வருவாய்
அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)“உனைநா னறிவேன் உமையாள் சுதனா
திணைமா துடன்சேர் தணிகா சலனே
எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)“பணநா கவணை பெருமாள் மருகா
வானமா துடன்வா னவரா னையுடன்
மனவே கமுடன் மயிலே றிடவே
ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)“ஆசா பாச மதனால் உலகில்
காசும் புகழும் குறியாய் உழலும்
நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)“நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
உமைச்சி வேலை உடையோய் படையாய்
சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)“தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
காயாய் மலராய் கனியாய் மரமாய்
வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)“அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
அய்யோ மணவா ளரவர் வரவால்
அய்யா அதனால் அனுபூ தியுறச்
செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)“அண்ணா மலையும் அவன்பா திபடர்
உண்ணா முலையும் சிறுவா புரியில்
முன்னால் இருக்க முகநா ணமுறும்
பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)“மரணா கதியில் மனிதா செலுமுன்
சரணா கதிசெய் சிவனார் செவியில்
மறையோ தியவன் திருவே ரகனை
சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)“அத்திக் கிறைவா அமரா வதியின்
வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
நெற்றிக் கனலே நெடுமால் மருகா
சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)“எதிரா ஜனரின் எஜமா னவனை
பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
துதிசெய் அருணை கிரிபோல் எழுத
உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)“அயனார் அரியார் அறியா நுதல்வாய்
நயனார் புதல்வா நரையும் திரையும்
மயமாய் இவனா குமுனே வருவாய்
பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)“ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
ஈரா றுபுயம் இறைவா மறவேன்
சேறாம் உலகில் செந்தா மரையாய்
போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)“பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
ஜோதிக் கருவே சிறுவா புரியில்
சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)“கிரௌஞ்ச மலையைக் கூழா கிடவேல்
எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)“கூறும் அருணை கிரியின் புகழில்
ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)“கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)“தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
பல்லா டிடமண் புதையப் படரும்
புல்லா டிடநான் போகா வகையென்
உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)“வடமா லையுடன் வனமா லையணி
திடமா ருதிதோ ழனவன் மருகா
கடலா டிடுவாய் குடிபோ கியவா
உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22“வேதா கமநூல் வழிபோ னதிலை
ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
சாதா ரணநென் சகமா யையற
நீதான் வரணும் நிகமான் தகனாய்”….(23)“இம்மா மடையன் இறைவாழ் வதனில்
எம்மா திரியும் இசையான் எனவே
சிம்மா சனமுன் சீர்பா தமுற
சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)“சொப்பன வாழ்வில் சுகமாய் உறங்கி
இப்புற உலகே இயல்பென் றிருந்தேன்
அப்பர ஞானம் அடியேன் பெறவே
செப்பிட வாராய் சிறுவை முருகா”….(25)“எஞ்சா மியெனக் கருளே ரகனே
பஞ்சா ம்ருதமே பழனிக் குமரா
அஞ்சாய் எனவுன் அடியார்க் கருளும்
செஞ்சாந் துநிறச் சிறுவை முருகா”….(26)“சிந்தை மகிழச் சிவனார் செவியில்
முந்தைப் பொருளின் முழுமை உரைத்த
கந்தச் சுவையே செந்தூர் வளரும்
சந்தக் கவியார் சிறுவை முருகா”….(27)“இருவாட் சிமலர் இருட்கூன் தலணி
குரவாட் சியர்கோன் குலவா ரிசினை
கரிசாட் சியமாய் கரம்கொள் சிறுவா
புரியாட் சியமர் பொலிவே முருகா”….(28)“அறுகார்த் திகையர் ஒருமூர்த் தியென
உருவாக் கியவா உமைபா லகனே
முறைமா மன்மகள் குறமா தணைய
சிறுவா புரிவாழ் சிவதே சிகனே”….(29)“மலைவாழ் முகிலே ,அலைவாய் அமுதே
சிலைஜா னகிரா கவனார் மருகா
குலவே டமகள் குறமா தணைய
சிலையா கியருள் சிறுவா புரியே”….(30)“கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
ஒண்ணா னவனே ஓமா றுமுகா
என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
அண்ணா சிறுவை அழகா வருக”….(31)“மயில்வா கனனே அயில்வே லவனே
கயிலா யசிவன் குருவா னவனே
பயிலா தழின்தேன் பரஞா னமதை
மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)“பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)“வனபாக் கியமாய் வள்ளி இருக்க
தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)“கிழவே டமுடன் குறமா தணையும்
மழுமான் சிவனார் விழிபா லகனே
அழவேண் டிவரும் அடியார் வினையை
விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)“வானாய் நிலநீர் வளியாய்க் கனலாய்
ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)“எப்படி வருவான் எமனென் றறியேன்
அப்படி வருமுன் அனுபூ தியினை
இப்படித் தானென் றிரவுக் கனவில்
செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)“முற்றம் வரையில் மனையாள் வருவாள்
சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)“மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
வாவா எனகா டழைக்கும் தருணம்
போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)“தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)“வாயிட் டயென்பின் வடித லென்றே
நாயிட் டமொடு நறுக்கும் நாவை
ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)“தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)“திருவோ டணையும் திருமால் மருகா
திருவோ டணையும் திருவா திரையான்
பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)“வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
பூசத் திறைவா ப்ரணவப் பொருளை
ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)“வருந்தாய் மனமே வருவான் முருகன்
பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)“எலிவா கனரின் இளையோய், சபரிப்
புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
ஒலிவா கனரே உடனே வருக”….(46)“கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
பேரன் புடனே ஏற்றக் குகையுள்
சேரும் புலவர் சிறைமீட் டிடவே
கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)“சிறுபா லனென மதியா துசெலும்
மறைநான் முகனார் மிகுகர் வமற
சிறைசே றயிடும் சிவதே சிகனே
கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)“கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
மன்றா டிடுவோன் மகனே புவியில்
குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)“ஆகா இவனே அதிமே தையென
பாகாய் உருகும் பொருளுள் ளவரை
மோகா சனத்தில் முனியாய் இருக்க
ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)“மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)“நூறோ டிடவே தேரோ டியமால்
சீரா டிடுமூர் சிறுவை மருகன்
ஈறா றுபுயன் பேரா றுமுகன்
நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)“கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
மெல்லப் புகுந்து மமதை மனமாய்
உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)“புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
சதிரா டியபின் சலியும் மனமே
எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)“மமகா ரமதை மனிதா விடுவாய்
எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)“பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)“முத்தாய் அருணை முனிநா எழுதிக்
கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)“கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
வெறியால் விளைந்த வடிகா லிதுவே
சரியா தவறா சதகம் அறியேன்
விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)“பாக்கள் வருதல் பனிமா மலையோன்
தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)“அம்பாள் மகனே அரிமால் மருகா
உன்பால் உருகி உனைநான் அடைய
வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)“எமாதி கணமே கிடுநாள் ரமண
சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)“உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன் மவொளி
புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)“அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
வலையும், வனவான் வளையார் தமையும்,
மலையும், மலையே றிவளர் உனையும்,
முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)“தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
பேரா சையுறப், பலிவாங் கிடவே
வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
ஆரா அமுதே அமரர் துணையே”….(65)“கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
சிட்டாய் வருவான் சும்மா இருக்கத்
தொட்டோ திடுவான் திருவா சகத்தை
முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)“பந்தத் தைவிடு பாசத் தைவிடு
சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)“சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
கம்பம் தனிலா டியெழும் இளையோய்
உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)“கனிகை கிடைக்க ககனம் சுற்ற
புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
தணியா சினத்தில் தண்டா யுதனாய்
முனியாய் பழனி மலையே றியவா”….(69)“அமரா வதியின் அணிகா வலனாய்
சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)“எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)“பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
பொழுதோட் டினைஐம் புலனார் வமதால்
தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(73)“அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
மயலா டிமகா மடுவீழ் கையிலே
செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(74)“பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(75)“சேதா ரமிலா செய்கூ லியிலா
ஆதா ரமருள் அயில்வே லவனின்
பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(76)“மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(77)“திகழா பரணம் திடமார் பசைய
நகைபூட் டிடநா டகமே டைதனில்
நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(78)“அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
மதியேற் றிடவை மருதா சலனே”….(79)“மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
அகநாட் டமுற அங்குஷ் டமென
குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(80)“குசனார் லவணார் அசுவ மதைத்தம்
வசமா கயிரா கவன்வா ளியெதிர்
அசலம் சிறுவா புரிவாழ் அழகா
வசன முரைக்க வருவாய் குருவாய்”….(81)“சோணை ரமணே சரைப்போல் சதமாய்
ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
மோனை எதுகை யெனவள் ளியும்தே
வானை தழுவும் வடிவே லவனை”….(82)“கங்கா தரனின் கபாலி புரியில்
சிங்கா ரமயில் சுமையாய் அமர்ந்து
மங்காப் புகழை மயிலைக் களித்தோய்
எங்கா துரைக்க சங்கோ சமதேன்”….(83)“முருகா சரணம் மல்லாண் டிடுவோன்
மருகா சரணம் மனைவீ டுதர
அருகா மையிலூர் சிறுவா புரிவாழ்
குருகா வலதோள் கொடுதோ ழமையே”….(84)“பிடிவா தகுணப் புலனால் அடைந்த
பிடிவா தகபம் பித்த மஜீர்ண
நொடிநோய் களெமை நெருங்கா தபடி
கொடிகோ ழியைஏந் துகலா பகுகா”….(85)“காவித் துணியில் கரைவேட் டியினில்
தாவித் திரிந்தேன் திசையே றுமயில்
ராவுத் தனனுன் ரசபா தமதை
சேவித் துணர்ந்தேன் சகமே பரமாய்”….(86)“பணக் காரனுமே பலசா லியுமே
கணக் காளியுமே கரிநாள் தனிலே
மனக்லே சமுடன் மடிசாய்ந் திடுவான்
மனக்காய் எதற்கு மலைவாழ் பழமே “….(87)“சூதா டிடுவாய் சுகமேந் திடவே
மாதா டிடுவாய் மனமே ,சுமப்பாய்,
வேதாந் தியென வெறும்கோ வணமாய்
தீதாண் டிடும்தென் பழனிச் சுவையை”….(88)“பாகத் துமையாள் நெஞ்சார் வமுறும்
போகர் சமைத்த பஞ்சா ம்ருதமே
ஏகப் பொருளே எஞ்சா மியெனக்
காகத் திறவாய் கோயிற் கதவை”….(89)“தெண்டா யுதமோர் திருக்கை பிடிக்க
கொண்டாய் இடுப்பில் கரமொன் றினைநீ
பண்டா யநிலை பரமார்த் திகத்தை
விண்டோ திடுஆ விநன்வாழ் முருகா”….(90)“மந்தா கினியேந் திடமா துமைபால்
வந்தாய் பெறவே வடிவேல் தனையே
பந்தா டிடுதே புலனைந் துமெனை
தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்”….(91)“இக்கா சினியில் இழவே புரிந்து
அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய்
முக்கால் சிவனம் முருகன் அருள்வான்
உக்கார் சிவனே உறும்கா சியதே”….(92“சுப்ர மணிய புஜங்க மதிலே
சர்ப்பம் எனஆ டினைசங் கரனால்
தர்பை வழித்த தமியேன் திருநா
அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்”….(93)“காட்சி கொடுத்து கற்கண் டளித்து
தீட்ச தரின்வாய் மொழிகீர்த் தனையாய்
ஆட்சி புரிந்தோய், அவர்தம் குருவாய்
தீட்ஷை கொடுத்த தணிகை குகனே”….(94)“ஒலிபா ஷைவரா துருகித் தவிக்க
கலிவெண் பாவை குமர குருவுக்
அளிசீ ரலைவாய் அகக்கா ரிகளோ(டு)
ஒளியாய் விளங்கும் உயர்வான் பதியே”….(95)“பழம்காய் இலைஆல் மரம்வேர் விதையாய்
விழபுள் விழுங்கி அதைவே றிடமாய்
புழங்கப் புதைக்கப் புதிதா வதுபோல்
விழுவாய் கனலாய் எழுவாய் புனலில்
தொழும்தாய் வளர்சேய் பழனிக் குமரா”….(96)“சதிசெய் திடுசங் கரன்கைக் கனியால்
பதியாய் திருவா வினன்வாழ் பரமே
இதிகா சபுரா ணமறை புகழும்
துதிகே சவனார் மருகா துணைவா”….(97)“சிறுவா புரியில் சதகம் தொடங்கி
திருவா வினன்சீர் தலத்தில் முடிய
நிறைவேற் றியவா நதிவே கமுடன்
மறவேன் உனைமால் மருகா சரணம்”….(98)“பாலும் பழமும் பஞ்சா ம்ருதமும்
கோலும் இடுப்பில் கரமும் கொடுப்பேன்
நாளும் இவன்நா டகமே டையில்செங்
கோலும் குடையாய் கொடியேந் திடச்செய்”….(99)“தணிகை ,பரங்குன், ரலைவாய் , திருவா
வினன்கை கனிகொள் பொழிலே ரகமாய்
கனிகை இருக்க இவர்க்காய் அவர்க்காய்
இனிகை ஏந்தாய் ,இறைசேய் பதம்சேர்”….(100)சுபம்
முடிவு
மங்களம் -
சுஜாதா சார்….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
என்னமோ தெரியவில்லை எனக்கு இன்று ஏக மசக்கை, இந்தச் ஷணமே அமரர் ‘’சுஜாதாவின்’’ ‘’கற்றதும் பெற்றதும்’’ படித்தே ஆகவேண்டுமென்று….சுஜாதாவின் தோழரும் எனது நண்பருமான திரு.ரகுநாதன் அவர்களை தொடர்பு கொண்டேன்….உடனடியாக க.பெ வின் பாகம்-3 அனுப்பியதோடல்லாமல், மற்ற பாகங்களையும் வாங்கி அனுப்புவதாக கூறியிருந்தார்….ஏற்கனவே பல சுஜாதா புத்தக தானம் எனக்காக நிறைய செய்திருக்கிறார்….அவரிடம் சொன்னேன் ‘’இம்முறை ‘’கற்றதும் பெற்றதும்’’ தாங்கள் விற்றதும் அடியேன் வாங்கியதுமாக இருக்கட்டுமே என்று….மனுஷன் மறுத்து விட்டார்….பழையபடி க.பெ தும்மும் இலவச இணைப்பாகி விட்டது….ஓஸியில் படித்தால்தான் கிரேசிக்கு ஒட்டும் போலிருக்கிறது….மேலும் விற்க சுஜாதா என்ன வெறும்பொருளா….எழுத்தச்சன் அவர் பரம்பொருள் அல்லவா….எதற்கு இத்தனை முகாந்திரம் என்றால்….பாகம்-3 ல் சுஜாதா சார் என்னுடைய கவிதையை போட்டுள்ளார்….
ரீ-டெலிகாஸ்ட் செய்ததில் , அவருக்கு நான் காண்பித்த ‘’பெருமாளே சரிதானா’’ என்ற கவிதைகள் நினைவுக்கு வந்தது….அதில் ஒன்றுதான் க.பெ தும்மில் வெளியாகியிருந்தது….நன்றி ரகு சார்….ரகுநாதன் சாரின் அன்புக் கட்டளைக்கேற்ப , சுஜாதாவின் ‘’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’’….இரா.முருகன் சாரின் ‘’ரெட்டைத் தெரு’’ பாதிப்பில் ‘’மை லவ்வாப்பூர் டைம்ஸ்’’ என்ற எனது மயிலை மந்தைவெளி அனுபவங்களுக்கு சுஜாதா சுழி போட்டு விட்டேன்….பார்ப்போம்….முருகனுக்கும், சுஜாதாவுக்கும் இருந்த மூளையும், திறனும் அடியேனுக்கு இருக்கிறதா என்று….
சுஜாதா சார் பரமபதம் எய்திய போது, அவரது ஸ்கெட்ச்சையும், ஒரு இரங்கல் வெண்பாவும் என்னால் இயன்ற அஞ்சலியாக செய்தேன்….அவைகளையும் இணைத்துள்ளேன்….
எழுத்தாளர் சுஜாதா மறைவால் வருந்தி

————————————————-
கதையா ? கவிதையா ? கட்டுரையா ? கேட்போர்க்(கு)
எதையும் வழங்கும் எழுத்துப் -புதையலே
ஸ்ரீரங்க தேவதையே ஏரங்க ராஜனே
பாரிங்கு நீரின்றி பாழ்….சுஜாதா சாரிடம் அடியேன் படித்துக் காட்டிய ‘’பெருமாளே சரிதானே’’….
” பெருமாளே சரிதானே ”
—————————–பால் குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வரும் தீவீர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே ,பெருமாளே சரிதானே….(1)நாய் வால் நிமிர்த்தலுக்கு இணையான நாற்பதிலே
நோய்வாய் கிடந்து வளைந்த நேரத்தில்
தாய்போல் தேற்றி தூக்கி நிறுத்த வல்ல
மாயா ஜால மருந்தாமே பெருமாளே சரிதானே….(2)கானல்நீர் இளமைக் காலம் கண்சிமிட்டும் நேரம்
கூனல் முதுகில் முதுமை மூப்பு மூட்டை பாரம்
நாணல் யமுனா நதி நாதன் திருநாமம்
பூணல் பொலிவாமே பெருமாளே சரிதானே….(3)முயலாமை கதையாக முடிகின்ற வாழ்க்கையின்
இயலாமை தன்னை இளமையிலே உணர்ந்து
செயலாவையும் ஸ்ரீரங்கனுக் களித்தால்
பயமில்லையாமே பெருமாளே சரிதானே….(4)கள் ஒழுகு மலர் தேடி கருவண்டு மொய்ப்பது போல்
உள் ஒழுகும் உணர்வுக்கு ஓடிவரும் ஒப்பில்லா
கள்ளழகன் கார்வண்ணன் காகுத்தன் கண்ணனென்று
தெள்ளமுதப் பிரபந்தம் சொல் பெருமாளே சரிதானே….(5)சிலந்திதன் வலையில் சிக்கிடும் பூச்சியாய்
புலன்கள் ஐம்பொறி புகுந்து புலம்பாமல்
நலம்தரும் நாராயணன் நாமம் சொன்னால்
பலன் பரம் பதமாமே பெருமாளே சரிதானே….(6)பத்தியம் இல்லாத பகாசுர வாழ்க்கையை
சத்தியம் என்றெண்ணி சஞ்சலம் அடைவோர்
நித்திய கல்யாண வைபவன் அருளால்
முத்தி அடைவாராமே பெருமாளே சரிதானே….(7)இல்லாததை இருப்பதென்று எண்ணிக் குவித்து
செல்லாத இவ்வாழ்வை செலவழிக்க முயலாமல்
மல்லாண்ட மணிவண்ணன் மலர்பதம் பற்றினால்
எல்லாமும் தெளிவாமே பெருமாளே சரிதானே….(8)….கிரேசி மோகன்…. -
வேண்டுதல் வெண்பாக்கள்
கிரேசி மோகன்
கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவினரின் ‘’சாக்லேட் கிருஷ்ணா’’, அரங்கேறி ஐந்தாறு ஆண்டுகளுக்குள் 700 ஷோக்கள் தொட்டு விட்டது….பல வெளியூர்கள் சென்றோம், இந்தியா முழுவதிலும்….அமெரிக்காவில் 500 வது நாடகத்தை ‘’ஹ்யூஸ்டனில்’’ கொண்டாடினோம்….இது தவிர சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் வெளிநாடெங்கும் கோபால் பல்பொடி விளம்பரம் போல சுற்றி வந்தோம்….இந்த பிரும்மாண்டமான வெற்றிக்கு காரணம் என்ன….!அடியேன் வசனமா இல்லை….குழுவினரின் நடிப்பா இல்லை….பின்ன….வெண்பா அதுவும் வேண்டுதல் வெண்பாக்கள்….உள்ளூர் நீங்கலாக வெளியூரில் நாடகம் போடும்போது, அந்தக் கண்ணனை வெண்பா வாயிலாக வேண்டிக் கொள்வேன்…ஸோ….இது கண்ணனின் சாதனை….தட்டச்சு செய்த வரையில் ‘’சாக்லேட் கிருஷ்ணாவுக்காக’’ எழுதிய வெண்பாக்களை பகிர்ந்து கொள்கிறேன்….
———————————
சாக்லேட் – கிருஷ்ணா
—————————–
வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம்
கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென்
வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய்
சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு
———————————————
கற்பகாம்பாள் சன்னிதியில்
———————————-
மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில்
சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர
பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு
ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————–
தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து)
அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன்
சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட
வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008
———————————————————————————-
சாக்லேட் – கிருஷ்ணா வெற்றி பெற வேண்டுதல்….
—————————————————————-
அரங்கேறி ஆதி அனந்தனின் மீது
உறங்கா(து) உறங்கிடும் மாலே-அரங்கேறும்
சாக்லேட் கிருஷ்ணாவை சக்சஸ்ஃபுல் ஆக்கயென்
வாக்கெட்ட வாராய் விரைந்து….(4)….23-5-2008பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————
நாடகம் நன்றாய் அரங்கேற, ஊரெல்லாம்
கூடி மகிழ்ந்து குதுகலிக்க -ஊடகங்கள்
பாராட்ட சாக்லேட் கிருஷ்ணா பவனிவர
தார்சூடி வெல்க தழைத்து….(5)….23-5-2008சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-ஞாலத்தை உண்டுமிழ்ந்த காலத்தில் ஆலிலையில்
பாலொத்தப் பாதம் பருகியவா -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணாவை மாம்பழத்துக்(கு) ஈடாக
டாக்-ஃஆப் தி-டவுன் ஆக்கு….(6)….20-7-2008
கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
——————————————————-
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவை வருடிட
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(7)….12-9-2008
——————————————————கேசவ் ஓவியத்துக்கு சு.ரவி எழுதிய கவிதை படித்து எழுதியது
————————————————————————வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
சாக்கலேட் ஆக்கினான் கேசவன் -பாக்குளிட்டு
பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
நாலா யிரத்திலொன் று….(8)….9-9-2008பாரதி விழாவுக்காக சாக்லேட் கிருஷ்ணா
போடுவதாக இருந்தது….வானவில் பண்பாட்டு மையத்திற்காக…
பாரதி வீடு சற்றே சரிந்ததால் போடமுடியவில்லை….வக்கீல் க.ரவிக்கு எழுதியது
————————————————————————————————
கண்ணனென் சேவகன் கண்ணனென் காவலன்
கண்ணனென் மந்திரி நண்பனென -சொன்னவன்
கண்ணனென் சாக்லேட் கிருஷ்ணாவாய் ஆக்கினான்
புண்ணிய மாச்சென் பிறப்பு….(9)….29-9-2008க.ரவி பதிலுக்கு எழுதிய வெண்பா
———————————————
அற்புதம் வெண்பா அடடா உனக்கிந்த
சொற்பதம் வாய்த்ததென்ன சூட்சமமோ -வெற்புக்(கு)
குடைபிடித்த வன்பேரில் கூத்து நிகழ்த்தத்
தடையின்றி பொங்கும் தமிழ்….(10)….30-9-2008சாக்லேட் கிருஷ்ணா 100வது நாடகப் பூர்த்தி
————————————————————-
நூறு முடித்திட தேரை விடுத்தவா
நூறுநா னுறில் நிலைத்தவா -நூறு
முறையெங்கள் சாக்லேட் கிருஷ்ணா படைத்த
இறையின்று போலென்றும் இரு….(11)….30-11-2008
வேலூரில் சாக்லேட் கிருஷ்ணா….
——————————————
கோலோடு, ஊது குழலோடு, கோகுலத்தார்
தோளோடு தோள்சேர்த்த தோழனே -வேலூரில்
நாடகம் சாக்லே கிருஷ்ணா நலம்காண
ஊடகமாய்க் கண்ணா உத்வு….(12)….04-01-2009ஈரோடில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
நூறோட பாரதத் தேரோட வைத்தவனே
நூறோடு நாற்பதாம் நாடகமாம் -ஈரோடில்
சீராட வைத்திடு சாக்லேட் கிருஷ்ணாவை
நாரோடு பூவாய் நுழைந்து….(13)….24-1-2009கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————கோவையில் சாக்லேட் கிருஷ்ணா நாடகச்
சேவையை செவ்வனே செய்திட -ஆவையும்
ஆய்க்குலப் பாவையும் மேய்த்தவா மாயனே
வாய்க்குளே வாக்காக வா….(14)….1-2-2009திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————–
ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
தாதவிழ் பூவாய் மலர்….(15)….06-02-2009
மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்தோய் -உச்சி
மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)….07-02-2009சாக்லேட் கிருஷ்ணா 150தாவது நாடகம்
—————————————————–சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவின் போது ஓவியர் கேசவ்வை அழைத்தேன்….இன்ப அதிர்ச்சியாக இணைத்த கண்ணன் ஓவியத்தை மேடையில் ‘’கமல், நித்யாஸ்ரீ’’ முன்னிலையில் எனக்கு பரிசளித்தார்….மனுஷன் இதற்காக ராவோடு ராவாக பெயிண்ட் பண்ணி இருக்கிறார்….வாத்சல்யத்தில் கேசவ் கண்ணனை விஞ்சி விட்டார்….கேசவ் ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ வந்த வேளை 150 இப்போது 700 ஆகப் போகிறது
நூறோடு அம்பதாம் நாடகம் நாளைக்கு

தேரிடர்ந்த கண்ணன் திருவருளால் -சீரோடு
சேர்த்து சிறப்பாக்க சாக்லேட் கிருஷ்ணாவை
பார்த்தனின் சாரதி பார்….(17)….21-2-2009
கேசவ் ஓவியத்திற்கு நன்றி
———————————-
விழிகள் சொருகிட வேய்ங்குழல் ஊதி
பொழிகின்ற ஆகாசப் பாலை -எழிலுடன்
கேசவன் உண்கின்ற கோலம் வரைந்தநீர்
ஆசுகவி ஓவியன் கேசவ்….(18)….23-2-2009கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————பாவைநப் பின்னைக்காய் தாவும் எருதாண்டோய்
பாவைநப் பின்னைக்காய் ஆவை அடக்கியவா
தேவை எமக்குன் துணைகண்ணா -கோவை
நகரிலின்றும் நாளையும் சாக்லேட் கிருஷ்ணாவை
நிகரிலாத வண்ணம் நடத்து….(19)….11-04-2009பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————–அங்குள்ள தூணில் அடங்கிக் குதித்திரண்யன்
அங்கமதைக் கீண்ட அரியுருவே -பெங்களூரில்
நாடகம் சாக்லேட் கிருஷ்ணா நடக்கையில்
மேடையில் காப்பாய் மலர்….(20)….19-04-2009சாக்லேட் கிருஷ்ணா அப்த பூர்த்தி
——————————————ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்சொல்லி
நாங்கள் நடத்திய நாடகத்தை -பாங்குற
ஓராண்டு தாண்டியும் ஓயாது ஓட்டுவது
சீராயர் கண்ணன் சவுக்கு….(21)….23-05-2009சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————-ஞாலத்தைப் பேரூழி காலத்தில் உண்டுமிழ்ந்து
ஆலத்தில் தூங்கிய ஆழிவண்ணா -சேலத்தில்
சங்கடம் இல்லாது சாக்லேட் கிருஷ்ணாவை
மங்களம் ஆக மலர்த்து….(22)….13-06-2009
மதுரையில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
ராணி லலிதாங்கி ஸ்ரீராஜ மாதங்கி
மீன்விழியால் சொக்கனை மீறிநிற்கும்-ஆண்மகளே
கூடலில் எங்கள் குழுவின் பெயர்விளங்க
நாடகத்தை நன்கு நடத்து….(23)….05-07-2009
கோயம்புத்தூரில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-கோவை சாரதா அப்பா ”கோபாலன் சார்” எழுதியது….
————————————————————————
காணவே காத்துள்ளேன் கற்பூரச் சொல்லழகா
நாணேறும் அம்பாஇ நகைச்சுவையை -மாண்புறவே
செல்ல செலுத்தியெமை சிந்திக்கச் செய்திடும்
வெல்லப்பா மோஹனமே வெல்….(24)….10-09-2009
——————————————————————————
தாயன்பில் கட்டுண்ட தாமோ தராநாங்கள்
கோயம்புத் தூரில் கொடிகட்டி -ஆயனே
சீரும் சிறப்புகளும் சாக்லேட் கிருஷ்ணாவால்
நேர நிகழ்வை நடத்து….(25)….12-09-2009பாண்டிசேரியில் இரு நாடகங்கள்….
———————————————-
கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்த பரந்தாமா நீவந்து
நேரில் இருந்து நடத்து….(26)….03-10-2009கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்தமன பாரம் குறைந்திட
சேரில்(CHAIR) அமர்ந்து சிரி….(27)….03-10-2009பெங்களூரில் இரு நாடகங்கள்….
———————————————-
மங்களமாய் மார்கழித் திங்களென்ற ஆண்டாளின்
கண்களுறை காதல் கருமுகிலே -பெங்களூரில்
எங்களிரு நாடகங்கள் ஏற்றமுற, வந்தமர்ந்து
பங்குபெற வேண்டுமதைப் பார்த்து….(28)….22-10-2009பெங்களூரில் குஷா மகள் ஜானும், சு.ரவி மகள் பாரதியும்
விருந்தோம்பல் செய்ததற்கு நன்றி வெண்பா….
———————————————————————–
சோறும் ரசமும் சுவையான காய்களும்
மோரும் மணக்கும்மா காளியும் -ஜோராக
வாரிதி மேகமாய் வற்றாது தந்தது
பாரதி ஜானின் பரிவு….(29)….25-10-2009கோவையில் நாடகங்கள்….
—————————————
ஏழை குசேலன் இதயம் சிரித்திட
தோழமைக்குத் தோள்கொடுத்த தெய்வமே -ஆழிவண்ணா
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
நாவில் நகைச்சுவையாய் நில்….(30)….06-11-2009காரைக்குடியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————-தேரை நடத்தி தனஞ்சயனைத் தேற்றியன்று
நூறை முடித்த நவநீதா -காரைக்
குடியிலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு
வெடிவிருந்தை வந்து வழங்கு….(31)….13-11-2009
ஹைதராபாத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————————-
வைதசிசு பாலனுயிர் கொய்திட சக்கரத்தை
எய்தனை நூறிகழ்ச்சி ஏற்றன்று -ஹைதரா
பாத்திலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா நகைச்சுவையில்
நூத்திலொன்(று) ஆக நடத்து….(32)….04-12-2009திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————தோப்புக் கரணமிட்டு , தந்தி சிரித்திட
சாப்பிட்ட சக்கரத்தை துப்பவைத்தோய்-காப்பாய்
திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணாவால் மக்கள்
சிரிச்சு மகிந்திடச் செய்….(33)….20-11-2009மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(34)….09-02-2010வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(35)….09-02-2010செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(36)….09-02-2010வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(37)….09-02-2010தஞ்சையில் சாஸ்த்ரா கல்லூரியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————————————–
வெஞ்சிறை தோன்றி விடிவதற்குள் ஆய்ப்பாடி
தஞ்சம் புகுந்த திருமாலே -தஞ்சையில்
சாஸ்திரா காலேஜை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஹாஸ்யத்ரா காலேஜாய் ஹாக்கு….(38)….05-03-2010விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(39)….13-04-2010சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
வேலொத்த கண்மாதர் சேலை பறித்தாண்கள்
பாலுற்ற பாஞ்சாலி மேலளித்தோய் -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணா சிறப்பாய் நடத்தஅங்கு
கோகுலக் குட்டனே GO….(40)….08-05-2010பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(41)….15-05-2010செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(42)….15-05-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்ணுவோர்க்(கு) என்நன்றி இன்று….(43)….6-9-2010எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(44)….7-9-2010
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(45)….09-02-2010வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(46)….09-02-2010செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(47)….09-02-2010வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(48)….09-02-2010விக்குருதி ஆண்டு வேண்டுதல்....
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(49)….13-04-2010பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா....
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(50)….15-05-2010செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(51)….15-05-2010ஹைதராபாத்தில் நாடகம்….
————————————
பெய்தவாளி ஏற்றன்று பார்த்தனின் சாரதியாய்
ஐதரப்பு வெல்லமகா பாரதத்தை -நெய்தவா
ஹைதரா பாத்தையே ஆனந்த பாத்திலாழ்த்த
செய்திட வேண்டுமெங்கள் ஜோக்கு….(52)….30-09-2010வைதசிசு பாலன் வசைநூறு தாண்டிட
கைதவழ் சக்கரத்தால் கொன்றவா -ஹைதரா
பாத்திலெங்கள் நாடத்தைப் பார்த்தவர்கள் நெஞ்சிலே
பூத்திடச் செய்நகைப் பூ….(53)….30-09-2010அயோத்தியார் பக்கமென்ற ஹைகோர்டின் தீர்ப்பால்
வயோதிகம் காணும் வழக்கு….(54)….30-09-2010நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(55)….30-09-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்னூவோர்க்(கு) என்நன்றி இன்று….(56)….6-9-2010எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(57)….7-9-2010ஹைதராபாத்தில் நாடகங்கள்….
—————————————-நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(58)….30-09-2010
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
அய்யனே, ஆயர்தம் பையனே, ஆழிசங்குக்
கையனே, அந்தரான்மா காண்போர்க்கு -மெய்யனே
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா ஜெயித்திட
தேவையுன் பக்கத் துணை….(59)….25-12-2010கோயம்புத்தூரில் நாடகம்
———————————-
தாயன்புக்(கு) உட்பட்ட தாமோ தரனேநீ
காயம்பத்(து) ஏற்றோய் கலிதீர்க்க -கோயம்பத்
தூரிலெங்கள் நாடகத் தூறல் மழையாக
நேரில்வா நீர்வண்ண னே….(60)….07-01-2011கும்பகோணத்தில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-
குடம்குடமாய்ப் பால்வெண்ணெய் கோகுலத்தில் உண்டு
அடர்ந்தானாய் ஆரா அமுதாய் -கிடந்தாய்
குடந்தையில் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பாய்
நடந்திட வேண்டும் நகைத்து….(61)….16-01-2011
டெல்லியில் சேஷாத்திரி சபா ”நாடக ரத்னா”
விருது தந்த போது….
———————————————————-தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -அலைநகரும்
பாற்கடல் தன்னில் படுத்த பெருமாளே
நேர்கடன் பட்டேன் நினக்கு….(62)….04-03-2011(ALTERNATIVE வெண்பா)
————————————
தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -மலைநகர்த்தி
சுண்டு விரலில் சுமந்த கடவுளுனை
விண்டு வழுத்தல் விருது….(63)….04-03-2011டெல்லி குளிரில் நடுங்கிய போது
———————————————
நாடக ரத்தினாவை நான்பெற டெல்லியில்
வேடமிட்டேன் கம்பளி ஆடையில் -பாடாய்
குளிரெனைக் கொல்லுது குன்றேந்தி கண்ணா
தளிர்விரலால் முன்போல் தாங்கு…(64)….05-03-2011இரா.முருகன் பதில் வெண்பா
————————————-
தெம்பாய் கரம் கஜர்கா ஹல்வாவும்
சொம்பில் ருசியான காப்பியும் -நம்பியே
துளிராக வெற்றிலையும் நாமணக்க மென்றால்
குளிர்போகக் கொள்வீர் விருது….(65)….05-03-2011கோவையில் மீசை ஆனாலும் மனைவி….
—————————————————
சங்கு சுடராழி சாரங்கம் நந்தகி
அங்கை தனிலேந்தும் அச்சுதா -கொங்கிலே
மீசையா னாலும் மனைவிக்குக் கைத்தட்டல்
ஓசை இடவை உரத்து….(66)….26-03-2011ஆவினைக் காக்கவன்று கோவர்த் தனக்குன்றை
பூவினைப் போல்சுமந்த பாலகா -கோவையில்
மீசையா னாலும் மனைவியை மக்களின்
ஓசை சிரிப்பால் உயர்த்து….(67)….27-03-2011கடலூரில் டாக்டர் விஜயராகவனுக்காக ”சாக்லேட் கிருஷ்ணா”….
————————————————————————————
படம்பத்து நூறுகொண்ட பஞ்சணையில் சாய்ந்துபாற்
கடலூரில் கண்வளரும் கண்ணனே -கடலூரில்
கூடியோர் சாக்லேட் கிருஷ்ணாவை உச்சியில்
சூடிடச் செய்வாய் சிரித்து….(68)….30-03-2011பெங்களூரில் மதில்மேல் மாது & அல்லவுதீன்….
————————————————————
தோலை வெளுக்கத் திருட்டுத் தயிர்வெண்ணை
பாலுக்(கு) அலைந்த பரம்பொருளே -நாளைகர்
நாடகாவில் எங்களிரு நாடகங்கள் வெற்றியை
நாட அருள்செய்வாய் நன்கு….(69)….15-04-2011பெங்களூரில் ”மாது பிளஸ் டூ & மீசை ஆனாலும் மனைவி”….
——————————————————————————–
பங்குபெற பாண்டவர்க்காய் பாரதம் செய்தவனே
சங்குகர சுற்றும்கை சக்கரனே -எங்களிரு
பெங்களூர் நாடகங்கள் பேஷாகப், பண்டரியில்
செங்கலேறி நின்றோய் சரண்….(70)….20-05-2011உன்நடத்தைக் கண்டன்னை உன்னை உரலிலிட
முன்னிடந்து சென்று மருதொடித்தோய் -கன்னடத்து
பெங்களூரில் எங்கள் ”பிளஸ்டூக்கும் மீசைக்கும்”
பொங்கிடச் செய்வாய்கும் பல்….(71)….20-05-2011சங்கர நாரண சங்கம சாஸ்தாக்கு
கொங்கை அமுதளித்த கோபாலா -எங்களின்
ஹாஸ்யம் சவுடையா ஹால்வரு வோரினட்ட
காஸ்ய சிரிப்பாயாக் கு….(72)….20-05-2011முன்னூர்ந்து தேரில் மகாபா ரதம்செய்து
முன்நூறை ஐந்துக்காய் மாளவைத்தோய் -முன்னூறு
ஐம்பதுக்கும் மேல்தாண்டி ஆடியன்ஸை சாக்லேட்டால்
மெய்மறக்கச் செய்வாய் மகிழ்ந்து….(73)….23-05-2011திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————
உச்சிமலைக் கோட்டை ஒருகொம்பன் உத்தியினால்
மச்சுமதில் காவிரிசூழ் மாநகர்வாழ் -கொச்சுரங்கா
சாக்லேட் கிருஷ்ணா சிரிப்புமழை பெய்திடனும்
ROCKFORTடில் நாளைக்கு ராவு….(74)….22-09-2011ஈரோடு, கோவையில் நாடகங்கள்….
———————————————–
போராடும் பாண்டவர்க்காய் பாரதம் செய்தன்று
நூறோட வைத்த நவநீதா -ஈரோடு
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
தேவையுன் பேரா தரவு….(76)….07-10-2011வேண்டுதல் தொடரும்….
——————————————————————————————————————–








