Category: நேர்காணல்கள்

நேர்காணல்கள்

  • ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங், தமிழில் கலக்குகிறார். திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் எழுத்தாணியைக் கொண்டு, ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். திருக்குறளை அதன் பொருளுடன் சொல்கிறார். உலகின் முதல் மொழி தமிழே என்கிறார். தமிழ் இலக்கியங்களைப் போற்றுகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இவரைச் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்தேன். பைந்தமிழராக மாறிவிட்ட இந்தப் பஞ்சாபியின் சிங்கத் தமிழைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன்

    60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன்

    நல்லாசிரியர் விருது பெற்ற நஞ்சப்பன், அவிநாசியில் நஞ்சப்பா நிகேதன் என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஓய்வுபெற்று 28 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளாகக் கற்பித்து வரும் இவர், தமது விரிவான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலருக்கும் பயன் நல்கும் இந்த உரையாடலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து

    கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து

    அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். தமிழில் 160 நூல்களுக்கு மேல் எழுதியவர். அப்துல் கலாம் உடன் நெருங்கிப் பழகியவர். கலாமின் ‘இந்தியா 2020’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்த்தவர். சென்னைப் புத்தகக் காட்சியில், தற்செயலாகச் சந்தித்த போது, அருவி போல் அனுபவங்களைப் பொழிந்தார். அதில் ஒரு கையளவு நீரை இங்கே பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூரில் குவிந்துள்ள வாய்ப்புகள்| ஷாநவாஸ் நேர்காணல்

    சிங்கப்பூரில் குவிந்துள்ள வாய்ப்புகள்| ஷாநவாஸ் நேர்காணல்

    முன்னேறிய நாடாக விளங்கும் சிங்கப்பூர், பலரின் கனவு தேசம். உலக நாடுகள் மதிப்புடன் வியந்து நோக்கும் இந்திரபுரி. வளம், வளர்ச்சி, வாய்ப்புகள் குவிந்துள்ள சொர்க்க பூமி. சிங்கப்பூர்வாசிகளுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நாடாக விளங்குகிறது. எளிதில் குடியுரிமையும் பெற முடிகிறது.

    கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் எனப் பலவற்றிலும் சிங்கப்பூரில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன? தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் முதன்மை ஆசிரியரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று, அங்கே 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவருமான ஷாநவாஸ், நம்முடன் வெளிப்படையாக உரையாடுகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    குமுதம் இதழில் பணியாற்றிய மூத்த எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன், அண்மையில் அமெரிக்கா சென்றபோது காலமானார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா

    தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா

    தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க. தெருநாய்களால் யாருக்கும் ஆபத்து வந்தால், அவற்றுக்கு உணவு வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கிறார், தாம்பரம் மாநகராட்சியின் 54ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா. அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் சாதுர்யம் | மறவன்புலவு சச்சிதானந்தன்

    அண்ணாவின் சாதுர்யம் | மறவன்புலவு சச்சிதானந்தன்

    அறிஞர் அண்ணா உடனான தம் சந்திப்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது, எப்படித் தீர்ப்பது என்பதில் அண்ணாவின் சாதுர்யத்தை இதில் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    நமக்குப் பொருத்தமான பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்டு) திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? அந்த மொழியின் இயல்புக்கு ஏற்ப அதைப் பேசுவது எப்படி? இதோ கற்றுக் கொடுக்கிறார், நிர்மலா ராகவன்.

    ஆங்கிலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் சாதாரணமாக வரக்கூடிய பிழைகள் எவை எவை? இவற்றை எப்படி எழுத வேண்டும்? பேச வேண்டும்? நிர்மலா ராகவன் விளக்குகிறார்.

    பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சப்பாத்திக் கடை நடத்திச் சாதிக்கலாம்

    சப்பாத்திக் கடை நடத்திச் சாதிக்கலாம்

    பீகாரைச் சேர்ந்த ராம்குமார், வீட்டில் சப்பாத்தி செய்து பழகியவர். அதையே இன்று தொழிலாக வளர்த்துள்ளார். தம் குடும்பத்துடன் சேர்ந்து, சென்னை ஊரப்பாக்கத்தில் தேசி சப்பாத்தி என்ற பெயரில் சப்பாத்திக் கடை நடத்துகிறார். 50,000 ரூபாய் இருந்தால் போதும், நீங்களும் கடை போட்டு, சப்பாத்தி செய்து விற்கலாம் என்றார். அவரது அனுபவங்களையும் வெற்றிக் கதையையும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மோடியின் கண்ணோட்டம், அணுகுமுறை, தாக்கம்

    மோடியின் கண்ணோட்டம், அணுகுமுறை, தாக்கம்

    மோடியின் தலைமை, கண்ணோட்டம், அணுகுமுறை ஆகியவை எப்படி இருக்கின்றன? உலகம் முழுதும் இவர் செலுத்தும் தாக்கம் எத்தகையது? மறவன்புலவு சச்சிதானந்தன் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா?

    பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா?

    பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக உள்ளன. அந்நிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறியுள்ளன. பணவீக்கமோ உச்சத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share