சிங்கப்பூரில் குவிந்துள்ள வாய்ப்புகள்| ஷாநவாஸ் நேர்காணல்
முன்னேறிய நாடாக விளங்கும் சிங்கப்பூர், பலரின் கனவு தேசம். உலக நாடுகள் மதிப்புடன் வியந்து நோக்கும் இந்திரபுரி. வளம், வளர்ச்சி, வாய்ப்புகள் குவிந்துள்ள சொர்க்க பூமி. சிங்கப்பூர்வாசிகளுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நாடாக விளங்குகிறது. எளிதில் குடியுரிமையும் பெற முடிகிறது.
கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் எனப் பலவற்றிலும் சிங்கப்பூரில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன? தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் முதன்மை ஆசிரியரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று, அங்கே 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவருமான ஷாநவாஸ், நம்முடன் வெளிப்படையாக உரையாடுகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)