Category: செய்திகள்
-

கலாப்ரியா, க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருது
அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.1. கவிஞர் கலாப்ரியா கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள், கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும் தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும் ஏராளமான ஆவணப் பதிவுகள்.2. பேரா. க.பஞ்சாங்கம் கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள்,ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.தமிழின் மிக முக்கியமான, ஒரு தவிர்க்கவே முடியாத அபூர்வமானதொரு நிகழ்வு கலாப்ரியா. தமிழ்க் கவிதைப் போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பலவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக்கால உரைநடைகள் மற்றும், புனைவு முயற்சிகளையும் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றைச் சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியிருக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.‘விளக்கு’ செயற்குழுஅக்டோபர் 14, 2020 -

விமானப் பயணச் சீட்டுகளுக்கான ரீபண்டு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு
‘கலைமாமணி’ வீ.கே.டி. பாலன்
(தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவர்)
2020 ஜனவரி மாதத்தில் கொரோனா பரவ ஆரம்பித்து விட்டது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரையிலான பயணத்தை ரத்து செய்து முன் பதிவு செய்யப்பட்ட பணத்தைப் பயணியர் திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். விமான நிறுவனங்களோ, நாங்கள் விமான சேவையை இன்னும் நிறுத்தவில்லை, ஆகவே, கட்டாயம் நீங்கள் பயணத்தைத் தொடர வேண்டும். நீங்கள் பயணத்தை ரத்து செய்தால், உங்கள் பயணச் சீட்டுக்கான பணத்தை நாங்கள் தர முடியாது என அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் 15,000 கோடி ரூபாய் வரையிலான, பயணிகளின் மற்றும் பயண முகவர்களின் பணம், விமான நிறுவனங்களில் முடங்கிப் போனது.இந்த ஆபத்தான சூழ்நிலையில் இந்தப் பணம் திருப்பிக் கிடைக்காவிட்டால் பல நிறுவனங்களை மூட வேண்டி வரும். வாடிக்கையாளர்கள் நெருக்கடி, போலீஸ், வக்கீல், பஞ்சாயத்து என்று முகம் கொடுக்க நேரிடும். முற்றிலும் தொழில் முடங்கிவிடும். இதனை எப்படிச் சீர்ப்படுத்துவது எனும் நோக்கத்தில் (tttha) தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத்தின் தலைவராகிய நான் முதல் அடியை எடுத்து வைத்தேன்.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு 08-02-2020 அன்று நிலைமையின் விபரீதத்தை உணர்த்தும் விதமாகக் கடிதம் எழுதினோம்.
விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவில் (Civil Aviation Advisory Committee) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடினோம்.
இந்தியாவின் பழமையானதும் பெரிய சங்கமுமான டிராவல் ஏஜன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Association of India) தலைவரான திருமதி ஜோதி மயால் அவர்களது ஆதரவையும் மற்றுமொரு தேசிய சங்கமான டிராவல் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Federation of India) தலைவர் லுல்லு அவர்களின் மேலான ஆதரவையும் பெற்றுச் செயலில் இறங்கினோம்.
இதன் அடிப்படையில் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் ( Director general of Civil Aviation ) விமான நிறுவனங்களை அழைத்துப் பேசியதன் விளைவாக, கடன் இருப்பில் (credit cell) பணத்தை வைத்திருப்பதாகவும் அதிலிருந்து பயண முகவர்கள் ஒரு வருட காலத்துக்குள் பயணச் சீட்டுகளாகப் பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தார்கள்.
இது சரியான தீர்வாகாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.
அதையடுத்து பிரவசி, அபாய், டாஃபி ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். நாங்களும் தாய் அமைப்பும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எங்களுக்குச் சாதகமான கருத்தை உச்சநீதிமன்றத்தில் சொல்ல வைத்தோம்.
அதனடிப்படையில், 2020 மார்ச் 25ஆம் தேதியில் இருந்து 2020 மே24 வரையிலும் உள்ள காலக்கட்டத்தில் விமானச் சீட்டு பெற்றிருந்தாலோ அல்லது முன்பதிவு செய்திருந்தாலோ உடனடியாக அதற்கான பணம் கொடுக்கப்பட வேண்டும்.
கடன் கூடு (Credit shell) ஒன்றை வைத்து அதில் வரவு வைத்துக்கொள்ள வேண்டும். விமான பயணச்சீட்டை உரிய பயணிக்கோ, வேறு எவருக்குமோ பயன்படுத்தலாம். 2020 ஜூன் வரையிலும் 0.5% மேலதிகமாக விமான நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். 31-03-2021 வரையிலும் 0.75% மாதாமாதம் கொடுக்க வேண்டும்.
மேற்கூறியவை அனைத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேசப் பயணச் சீட்டுகளுக்கும் பொருந்தும்
என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பயணச் சீட்டுக்கான பணம் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பயணிகளுக்கும், பயண முகவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வரக் காரணமான மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், என் ஜி ஓ பிரவசி, அபாய், டாஃபி, தாய், தமிழக அரசு, மற்றும் எமது செய்திகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுக்கும் பதிப்பித்த பத்திரிகைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
-

அழைப்பிதழ்: இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு
இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு
AN ONLINE INTERNATIONAL EDUCATIONAL CONFERENCEஅழைப்பிதழ்
Invitation
October 2nd, 3rd, 4th 2020
நிகழ்ச்சி நிரல்
நாள் – 02.10.2020 – 04.10.2020
வெள்ளி – மாலை 5.00-7.30
சனி – காலை 9.30-11.30, மாலை 5.00-7.30
ஞாயிறு – காலை 9.30 -11.00, மாலை 6.00-7.30OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்); தமிழ் அநிதம் (அமெரிக்கா); உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா)
வல்லமை, முத்துக்கமலம் (மின்னிதழ்கள்)
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த),சிவகாசி.
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்
ஸ்ரீஎஸ்.இராசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(த), சாத்தூர்.
நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்இணைந்து நட த்தும்
இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு
To join the video meeting, click this link: https://meet.google.com/ybp-kchz-kri
முழு அழைப்பிதழைக் காண, இந்தச் சுட்டியைச் சொடுக்குக –

அனைவரும் வருக! பயன்பெறுக!
-

Jaswant Singh Cherished Memories
Maranvanpulavu K Sachithananthan
Siva Senai, Jaffna, Sri LankaSri Lankan Tamils express their heartfelt condolences to the bereaved family and the Bharatiya Janata Party on the death of the former Minister of Foreign Affairs Jaswant Singh.
He was a friend of the Sri Lankan Tamils. He cared for their welfare. He along with Prime Minister Atal Bihari Vajpayee were keen to restore the dignity and respect of Tamils.
In spite of the ban on the LTTE, Prime Minister Vajpayee wanted his personal envoy to meet Prabhakaran at Vanni. During May 2000, I was asked to get the consent from Prabhakaran to meet his personal envoy. Brajesh Mishra, National Security Advisor, Jana Krishnamoorthy Minister of Justice asked me to reach Prabhakaran to get concurrence for a meeting with the envoy of the Indian PM.
I sought the help and support of Kavignar Kasi Anandan and Pazha Nedumaran. Prabhakaran gave his consent. I told this to Brajesh Mishra.
On June 6th, Foreign Minister Jaswant Singh went to Colombo to meet President Chandrika. It was an unscheduled visit. President Chandrika declined support.
I was asked to convey this to Prabhakaran.
These are cherishable memories for Sri Lankan Tamils of Mr. Jaswant Singh. Your memory shall always be with us.
புரட்டாதி 12, 2051 (திங்கள்) 28.09.2020
யசுவந்தர் சிங்கர் (ஜஸ்வந்த் சிங்) காலமானார்.
சம காலத்தவர், ஈழத் தமிழர் பால் அளப்பரிய ஈடுபாடு கொண்டவர். ஈழத் தமிழருக்காகப் பல நற்பணிகள் ஆற்றியவர். 2000 ஆனியில் (யூன்) அவரின் கொழும்புப் பயணம், ஈழத் தமிழருக்கான பயணம்.
அவர் கொழும்புக்குப் பயணமாகுமுன் என்னைப் பிரபாகரனிடம் பேசுமாறு பணித்தவர் பிரதமர் வாச்பாய். நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசேசு மிர்சா.
2000 மே மாதம் 28ஆம் நாள் நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி அழைத்துத் தில்லி சென்றேன். பிரதமரின் தூதர் இலங்கை வன்னி சென்று பிரபாகரைனச் சந்திக்கப் பிரபாகரனின் ஒப்புதல் பெறுமாறு என்னிடம் கேட்டார்.
கவிஞர் காசி ஆனந்தன், மாவீரர் பழ. நெடுமாறன் உதவினர். யூன் 4ஆம் நாள் அளவில் பிரபாகரனின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்தேன்.
அப்போதைய குடியரசுத் தலைவர் சந்திரிகாவின் ஒப்புதலைப் பெற யூன் 6 அளவில் இந்திய வெளிநாட்டமைச்சராக இருந்த யசுவந்தர் கொழும்பு சென்றார். திடீர்ப் பயணம் என ஊடகங்கள் தெரிவித்தன.
சந்திரிகா ஒப்பவில்லை. யசுவந்தர் வெறுங்கையுடன் திரும்பினார்.
செய்தியை என்னிடம் சொன்ன அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி, பிரபாகரனிடமும் தெரிவிக்கச் சொன்னார்.
ஒரே பணி. பிரபாகரனிடம் என் பணி. சந்திரிகாவிடம் யசுவந்தர் பணி.
ஈழத் தமிழர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட யசுவந்தர் மறைந்தார். அவரை இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.
-

“சங்க காலத்தில் போரும் வாழ்வும்” – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் – “சங்க காலத்தில் போரும் வாழ்வும்”
ஆசிரியர்- முனைவர் ஜவஹர் பிரேமலதா (வல்லமைக் குழும உறுப்பினர்)
நாள்- 29 & 30. 09. 2020பிற விவரங்களை அழைப்பிதழில் காண்க. -

Invitation: Online Open Defence of the Ph.D thesis of Rani. R
Dr. Hepsy Rose Mary. A
Asst. Professor & Head , Department of Tamil
University of Kerala, Kariavattom Campus
Thiruvananthapuram, Kerala State.
South India. PIN 695 581.
e-mail hepsy.rosemary@gmail.comDear Madam/Sir,
I am happy to invite you to the Open Defence of Smt. Rani. R. who submitted her thesis on the topic “Stylistic Study on Aingurunooru” under my guidance. The Open Defense is to be conducted in online mode, on Tuesday, 29th September, 2020 at 11 am in the Dept. of Tamil, University of Kerala, Kariavattom.
Dr. S. Velayuthan, Associate Professor, Department of Tamil, Periyar University, Salem, Tamil Nadu will be the Chairman of the Board of Adjudicators for holding the Open Defence and presided over by Prof. R. Jayachandran, Hon. Dean, Faculty of Oriental Studies, University of Kerala.
Your esteemed online or offline participation is earnestly solicited.
Kindly click on the following to join the meeting at 11 am on 29th September.
Link : https://live.hpc-ku.in/TamilDepartment.PhD.Opendefence.Rani.R
-

இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனைபிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்
சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.
இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.
இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.
இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.
ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.
மலையகச் சைவத் தமிழ் மக்கள்
மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள். -

ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை, இலங்கைமேதகு குடியரசுத் தலைவர் கோதபய இராசபட்சர், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆற்றிய உரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைத்துள்ளார்கள்.
சைவர்கள் ஆகிய நாங்கள், இந்தக் கொள்கையை முழுமனதோடு வரவேற்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையால் இலங்கையின் வேரோடும் வேரின் மண்ணோடும் கூர்ந்து கிளர்ந்த பண்பாடும் வாழ்வு முறையும் செழிக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக, தொடர்ச்சியாக இலங்கையில் சைவத் தமிழர் தமக்கெனப் படிப்படியாகக் காலங்கள் ஊடாகத் திருத்தியும் சேர்த்தும் நீக்கியும் உருவாக்கிச் சட்டமாக்கிய தேசவழமைச் சட்டத்தின் கூறுகள், புத்த சிங்கள மக்களிடையேயும் வேரூன்றிப் பரவியுள்ளன.
தேசவழமைச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துவேன் என விடாப்பிடியாகக் கூறிய சங்கிலி மன்னனை வீழ்த்தியவர்கள் வந்தேறிகளான கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.
தேசவழமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தங்களுக்கு தாமே சட்டங்களை எழுதி வாழ்வாகக் கொள்பவர்கள் வந்தேறிகளான முகமதியர்கள்.
தென்னிந்தியாவில் தமிழர், வடுகர், கன்னடர், கேரளர் என நான்கு இனத்தாரும் தேசவழமைச் சட்டத்தினைக் கைக் கொள்வதில்லை. ஆனால் தெற்கே வாழும் சிங்கள புத்த மக்கள் பலர் தேசவழமைச் சட்டத்தின் கூறுகளையே வாழ்வியல் ஆக்கியுள்ளார்கள்.
மேலைத்தேய மற்றும் முகமதியச் சட்டக் கூறுகள், இலங்கை மண்ணுக்கு முற்றிலும் பொருந்தாதவை. அவை இங்கு உருவாகியவை அல்ல. இலங்கையின் மண், காற்று, வானம், பகல், இரவு, காடுகள், மரங்கள் என மண்ணின் மக்களின் பூமி புத்திரரின் வாழ்வியலோடு கலந்தவை அல்ல.
உரோம ஒல்லாந்த ஆங்கிலேயர் முகமதிய வந்தேறிச் சட்டங்களின் நற்கூறுகளை உள்வாங்கித் தேசவழமைச் சட்டத்தின் அடித்தளத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாகுவதை மேதகு குடியரசுத் தலைவரின் கடந்த வார நாடாளுமன்ற உரையில் கூறியதை, சைவ மக்களின் சார்பில் சிவசேனை வரவேற்கிறது. இந்த முயற்சியை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது.
-

தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை
இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்:
https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09
Meeting ID: 892 6273 2459
Passcode: 433886 Date: August 19, 2020 @ 5 pm, IST.
உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்புக்கான தேவைகள் பற்றியும், தொற்றுநச்சுக் காலத்தில் பண முதலீடு (6% of GDP) என்னும் நோக்கம் என்பது வெறுமனே தாளில் மட்டுமன்றி, உண்மையாகவே அரசாங்கம் நிதி ஒதுக்குவது, ஆசிரியர்களை உருவாக்குவது பற்றியும் பேசுகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு என்பனவும், முக்கியமாக ஆங்கிலத்தில் உயர் விஞ்ஞானம், மருத்துவம், கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் ஆராய்ச்சிகள் தரம்மிக்க ஜர்னல்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியக் கல்விநிறுவனங்கள் வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆங்கிலத்தை விட்டுவிட்டால் உலக வளர்ச்சி அறியும் ஜன்னல் ஒன்று இந்திய மொழிகள் பேசுவோருக்கு அடைக்கப்படும். மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் அவசியமானவை. மூன்றாம் மொழி கற்க விரும்புவோர் – இந்திய, அல்லது உலக மொழிகள் ஒன்றை – கற்க வசதிகள் ஏற்படவேண்டும். தமிழ் மொழி, தொல்லியல், வரலாறு உலகளாவிய நிலையில் வளரவேண்டும். இப்போதைய துல்லியமான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்தல் எளிது. அதில் அரியனவற்றை தேர்ந்தெடுத்து இணையத்தில் வெளியிடும் நிபுணர் குழுக்களை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அண்மையில் கீழடி (மணலூர்) தமிழி எழுத்து, கிண்ணிமங்கலம் சிற்பத்தில் உள்ள தொல்காப்பியர் புள்ளி காட்டும் காலம், சிவகளை போன்ற இடங்களில் வாழ்விடங்கள் கிடைக்க உள்ள வாய்ப்பு, பழைய தமிழ்நூல்களை எண்மப்படுத்தி archive.org போன்ற தளங்களில் லட்சக்கணக்கில் வைத்தல் பற்றிக் குறிப்பிட ஆவல். தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் எழுதும்போது மொழியியலார் குறிப்பிடும் செம்மையான முறையில் எழுதுதலும், இந்திய மொழிகளுக்கும், மக்களுக்கும் பரஸ்பர ஒற்றுமை ஓங்க ரோமன் எழுத்துமுறை (ISO 15919) முறையையும் இந்தியா முழுமையும் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதும், தபால் நிலையம், ரயில்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதும் உதவுவதை மாநில முதலமைச்சர்கள் தில்லி சர்க்கார் மந்திரிகளிடம் வலியுறுத்தல் தேவை.
தமிழ்மொழி, தமிழ்நாடு தென்னகம், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளியில் தொன்மையான கலை, சமய, சமூக ஆய்வுகள், மரபணு பரிசோதனைச் செய்தி போன்றன நிகழ்த்த இப்பொழுது நாங்கள் அமைக்க முயலும், “ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை” போன்றவை எவ்வாறு உதவும் என்றும் பார்க்கலாம். மதுரைப் பேரா. சத்தியமூர்த்தி, போற்றுதலுக்குரிய பரஞ்சோதி மகான் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் நன்றி. அழைப்பிதழை இணைப்பில் காண்க.
புதன் மாலைப் பொழுதில் சந்திப்போம்!
டாக்டர் நா.கணேசன்
-

காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை, இலங்கைஇந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.
புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி
இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்
இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.
இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.
அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.
இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.
சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.
அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.
அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.
சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.
இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
-

தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை
தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெறுகிறது. Teamlink ID 5526828256. வாய்ப்புள்ள அன்பர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
-

Invitation: Madras Month Lecture Series 2020
Roja Muthiah Research Library & Foundation for South Indian Studies
invite you for
Madras Month Lectures – 2020
Programme
Lecture 1: 12 August 2020 | 6.30 p.m. | Online Lecture (In English)
Exploring Prehistoric Tamilnadu by Prof. Shanti Pappu & Dr. Kumar Akhilesh
Zoom ID : 885 8499 7905
Lecture 2: 19 August 2020 | 6.30 p.m. | Online Lecture (In Tamil)
Print Culture in Tamilnadu by Prof. V. Arasu
Zoom ID : 892 9827 3935
Facebook live – www.facebook.com/rmrl.in
Lecture 3: 26 August 2020 | 6.30 p.m. | Online Lecture (In Tamil)
சபாநாடகங்களும் தமிழ் சினிமாவும் by S. Theodore Baskaran
Zoom ID : 895 7535 4784
Facebook live – www.facebook.com/rmrl.in
Lecture 4: 02 September 2020 | 6.30 p.m. | Online Lecture (In English)
Making a Dravidian Voice by Dr. Amanda Weidman
Zoom ID : 857 7692 7793
Facebook live – www.facebook.com/rmrl.in
Lecture 5: 09 September 2020 | 6.30 p.m. | Online Lecture (In English)
The School of Arts, Madras: Imagining a museum of labour by C. P. Krishnapriya in conversation with Bhooma Padmanabhan
Zoom ID : 833 2017 1132
Facebook live – www.facebook.com/rmrl.in
———
About the speakers
Prof. Shanti Pappu, is the founder/secretary, Sharma Centre for Heritage Education (SCHE), India. She obtained her Ph.D. from the Deccan College, researching the prehistoric archaeology of northern Tamil Nadu, and is a former Homi Bhabha and Charles Wallace fellow, and served as Professor of Prehistory at the Deccan College, Pune. She has over 20 years of experience in prehistoric archaeology, directing (along with Dr. Kumar Akhilesh) multidisciplinary research projects at Attirampakkam, Sendrayanpalayam and other prehistoric sites in Tamil Nadu, under the project, Prehistory and Palaeoenvironments in SE India. She has recruited and coordinated international teams from Spain, France, the USA and Sri Lanka to work in India, and has established collaborations with key research institutions in India. She is researching the life and work of R.B.Foote and is interested in the issues related to the history of archaeology in India. She has published 2 books and over 30 research papers in peer-reviewed journals, including Nature (2018) and Science (2011). She is on the advisory board, INQUA-HaBCom and executive committee, IPPA, and is Joint-Secretary, ISPQS, Board of Studies Members of Institute of Epigraphy and Archaeology , Tamil Nadu State Department of Archaeology. She has organized and participated in conferences/workshops in India and abroad; and along with K.Akhilesh has organized workshops on prehistory under the R.B.Foote Memorial series in India, and currently the Down Ancient Trails, online lecture forum. She is responsible for developing the public archaeology and outreach programs at the SCHE and in developing the children’s museum. Her interests lie in prehistory and Quaternary studies, history of archaeology, ethno-and experimental archaeology.
Dr. Kumar Akhilesh, is the Director, Sharma Centre for Heritage Education. He received his Ph.D. from the Deccan College, Pune, under the guidance of the late Prof. V.N. Misra, researching the prehistory of the Damin industries, Jharkhand. He is also a Homi Bhabha Fellow (2016-2018), and worked on a project of experimental archaeology and implications for hominin cognition. He is joint-director of the research program at Attirampakkam and is directing the project Prehistory and Palaeoenvironments in SE India, including research at the site of Sendrayanpalayam and prehistoric sites of southern Tamil Nadu. He is an expert knapper and currently directing a program on experimental knapping to replicate lithic technologies documented at Attirampakkam and other prehistoric sites in south India and elsewhere, and is currently expanding into the field of lithic microwear studies. He has extensive field experience in southern and eastern India and has published in Nature (2018), Science (2011) and other peer-reviewed journals. He has also worked in the field of satellite remote sensing applications for prehistoric research in this region, utilizing GIS and other techniques for both research, culture resource management and predictive modeling to locate new sites. He has organized several workshops on South Asian prehistory and lithic technology, running the R.B.Foote Memorial series for several years now. In addition, he has presented his research at conferences and workshops in India and abroad. He is secretary, INQUA-HaBCom. He has been conducting programs in public archaeology and outreach for children, teachers, ECRs, local stakeholders and the like in the field of archaeology and is involved in developing the children’s museum at the Sharma Centre for Heritage Education.
Prof. V. Arasu was till recently the Professor and head of the department of the Tamil Department at the University of Madras. His researches have been multidisciplinary encompassing literature, history and culture. He engages Tamil pedagogy with epigraphy, archaeology and sociology. He has guided several researchers who are well placed. He has unearthed several hidden rare material that are relevant to Tamil society and its understanding. He has edited and published more than 45 monographs and collection of articles which are important for understanding of Tamil Studies.
Theodore Baskaran started his career as Researcher in Tamil Nadu State Archives before he joined the Indian Postal Service in 1964. He retired as the Chief Postmaster General, Tamilnadu Circle. Baskaran has been for writing for more than 45 years. His book, The Message Bearers is a pioneering work on Theatre and Cinema. His second book, The Eye of the Serpent (1996) won the Golden Lotus (Best Book on Cinema) Award in 1997. He has also written several books and articles on film history in Tamil. He has lectured on cinema in many universities including Princeton University, The Australian National University and the University of Chicago.[3] In 2000, he won the Ki Va Ja prize awarded by the Kamban Kazhagam. He was a Hughes Visiting Scholar in the University of Michigan in 2001 and taught a course on Film Studies. He was a jury member at the 2003 National Film Awards. During 1998–2001, he was the Director of the Roja Muthiah Research Library. He is a member of the library’s Board of Trustees. He has also acted in a supporting role in the 2010 Tamil film Aval Peyar Thamizharasi.
Baskaran is a keen bird watcher and a naturalist. He is a former honorary wild life warden and the South India Representative of the International Primate Protection League. He is a trustee of WWF-India. His collection of essays on nature and wild life conservation has been published as The Dance of the Sarus (Oxford University Press) in 1999. He edited a book of articles on nature titled “The Sprint of The Black Buck” ; Penguin (2009). He has authored a number of books in Tamil on Cinema and environment.
Dr. Amanda Weidman is Associate Professor of Anthropology at Bryn Mawr College, USA. She is the author of the book, Singing the Classical, Voicing the Modern: The Postcolonial Politics of Music in South India (2006). Her new book on playback singing in the Tamil film industry, entitled Brought to Life by the Voice, will be published in 2021 by University of California Press.
Bhooma Padmanabhan is a Chennai-based curator, researcher and art program manager. She completed her BA in Fine Arts from Stella Maris College, Chennai, and her MFA in Art History from the M.S. University of Baroda. She started her career in the arts as a curator at Dakshinachitra, following which she moved to Delhi to work at the newly established Foundation for Indian Contemporary Art (FICA). In a decade with this young and rapidly growing grant-making foundation she worked with some of India’s most exciting young artists, supporting critical public art projects and growing FICA’s public programming and educational outreach. She has since curated numerous contemporary art exhibitions, both solos and group shows, experimenting with the curatorial space as platforms for learning, resource sharing, and collaboration. In 2018 she was a researcher with the Kochi Biennale’s Students Biennale programme which focused on studying the material and pedagogic environments of India’s vast network of art colleges. Bhooma is now the co-curator of the 3rd edition of the Chennai Photo Biennale.
CP Krishnapriya is a practicing visual artist based in Chennai. She completed her Masters from the Govt. College of Fine Arts, Chennai. Her work is multidisciplinary in nature; she uses paintings, drawings, collage, found objects and sculptural installations to engage with her concerns. The works primarily deal with the self and its relationship with its environment. History and local political discourses are also woven into the imagery that she creates.
She is interested in understanding the process of art pedagogy. Her other interests are contemporary art practices, history, theatre and environmental studies. She has been part of numerous art exhibitions and art camps. She is also part of art collectives and groups based in Chennai. She was one of curators of the two editions of the Students’ Biennale, Kochi (2016-17 and 2018-19). She was a resident artist at University of Pennsylvania in the fall of 2017 and the summer 2019, supported by the South Asia Centre, Upenn.
-

சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்
முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்
ramachandran.ta@gmail.com.மதுரை தியாகராசர் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் படிக்கும்போது சா. கந்தசாமி எனக்கு அறிமுகம் ஆனார். தமிழ்த்துறை நூலகம் பல அரிய புத்தகப் பொக்கிஷங்களைக் கொண்டதாக இருந்தது. பேராசிரியர்கள் பேச்சிமுத்து, அருணகிரி, கு.ஞானசம்பந்தம் போன்றவர்களின் ஊக்கத்தால் வாசிப்புப் பழக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. சா.க வின் கதைகளைக் கைகளில் வைத்துக்கொண்டு கல்லூரியின் ஆற்றங்கரையோரத் தென்னந்தோப்புப் பகுதியில் படித்துத் திரிந்தது நினைவுக்கு வருகிறது. ஆலமர நிழலும் அரசமர இலையோசையும் இதம் தர இவரின் கதைகளோடு பயணித்தக் காலம் அது. தெப்பக்குளம் நடு மண்டபத்தில் சாயங்காலம் வரை இவரின் கதைகளோடு உறவாடிய தருணங்கள் அற்புதமானவை.
சாயாவனம், விசாரனைக் கமிஷன், அவன் ஆனது, தக்கையின் மீது நான்கு கண்கள், ஆறுமுகச்சாமியின் ஆடுகள் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாக விளங்கின. மேலும் கனடா குறித்த தனது பயண அனுபவங்களை இரண்டு நூல்களாக எழுதியுள்ளார். இவற்றைக் கவிதா பதிப்பகம் செம்மையாகப் பதிப்பித்துள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் சாயாவனத்தை வெளியிட்டுள்ளது.
இலக்கியத்தளத்தில் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களிலும் (சாகித்ய அகாதெமி) இவரின் சமரசமற்ற பங்களிப்புப் போற்றத்தக்கது. ‘அவன் ஆனது’ என்ற நாவலைப் படித்து பெரும் வியப்பிற்கு உள்ளானேன். எளிய மனிதர்கள் சமூக அவலங்களில் சிக்கியடையும் அனுபவங்களின் தொகுப்பாக இந்நாவல் விளங்கியது. சமூக இயக்கத்தில் தன்மை இணைத்துக் கொள்ள முடியாதவனின் அவல வாழ்க்கை இந்நாவல். இவரின் நாவல்களில் கதைக் கூறும் முறையும் கதை இயங்கிச்செல்லும் போக்கும் மிகவும் யதார்த்தத் தளத்தை அடைந்து விடுகிறது. அழகியல் கூறுகளோ கலைத்தன்மையை நோக்கிய எத்தனிப்புகளோ இல்லாமல் கதைகள் நகர்ந்து செல்கின்றன.
தமிழ்ப் படைப்பாளி என்ற தோரணையில் இருந்து விடுபட்டு ஒரு கம்பிரமான மிடுக்கான தோற்றத்தில் வலம் வரும் ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவர். சமரச மற்றவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் பொதுநிலையிலிருந்து மீறி தனது இருத்தலை மிகவும் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டவர் சா.க அவர்கள்.
இந்திய அளவில் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ப் படைப்பாளிக்கும் மிகப் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தவர் சா.க என்னும் கம்பீரமான ஆளுமை. தமிழ் இலக்கியச் சமூகம் இவரின் இழப்பை மனக் கனத்தோடு கடந்து செல்கிறது.
ஒரு படைப்பாளிக்கு ஒரு சமூகம் செய்யும் உண்மையான நினைவேந்தல் என்பது அவரின் படைப்புகளைப் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதும் பரவலாக்குவதும் தான். பல விருதுகளைப் பெற்றுள்ள, பலருக்கு விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ள இவரின் படைப்புகளைப் போற்றுவோம். அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். ஓர் இலக்கிய முன்னோடியை நினைவு கூர்வோம்.
-

கோவை ஞானி – அஞ்சலி
முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.உள்ளங்கைக்குள் இதயம் தேடும் உன்னத ஆன்மா, அன்பெனும் பெருவெளியில் நீண்ட உரையாடலின் குரல் கோவை ஞானி. அவரோடு சேர்ந்து சுற்றும் தருணங்களைப் பெற்றவன் நான். அவரின் உள்ளங்கை குளுமை இன்றும் மானுடத்தின் பேரன்பின் வெளிப்பாடாக உணர்கிறேன்.
எனது கைகளைப் பற்றிக்கொண்டு என்னுள் அவர் தேடும் நான் பெரும் வியப்பின் மளைப்பாக இருந்தது. அவர் இதயத்தின் அன்பை நோக்கிய பயணம் அது. கைகளோடு கைசேர்த்து நடந்த தூரங்கள் குறைவுதான் என்றாலும் அது எழுப்பிய உன்மத்த அதிர்வுகள் அதிகம்.
ஒற்றைக் குரலாக ஒலிக்கத் துணிந்து தனது அன்பின் தென்றலால் அனைவரது இதயங்களையும் இட்டு நிரப்பியவர். மார்க்சிய ஒளி தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் தனக்கான அவதானிப்புகளுடன் காத்திரமாகச் செயல்பட்டவர் இவர்.
புத்தகங்களின் அடுக்குகளில் ஒற்றைச் சரடாக விளங்கி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகளையும் தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.
தமிழ்ச் சமூகம் ஒரு உன்னதமான வழிகாட்டியை இழந்து நிற்பதாகத் தோன்றுகிறது. இலை உதிர்வது உரமாகத்தான் என்றாலும் இதயத்தின் கனம் கூடத்தான் செய்கிறது.
-

வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை
வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்
இரண்டு நாள்களாக நன்கு சிந்தனை செய்து இந்தப் பதிவினை இடுகிறேன். ஆனால் வருத்தத்தோடு இடுகிறேன்!
தமிழன் வரலாற்றைப் பதிவு செய்யத் தெரியாதவன் என்பது நீண்ட நெடுங்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. சரி!
வைரமுத்து பிறந்தநாள் என்று கட்டற்ற தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாள் 13/07/1953
இதனைவிட ஓர் அகச்சான்று, அவர் எழுதிப் பதிப்பித்த கவிதை நூல்களுள் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்ற நூலின் இறுதிக் கவிதைத் தலைப்பு ‘உயில்’
அந்த உயிலில்
“என் கல்லறையில்
தோற்றம் எழுதுங்கள்!
13/07/1953”இது அவர் கைப்பட எழுதிய வரிகள்!
காவ்யா சண்முகசுந்தரம் 2013-இல் வைரமுத்து அவர்களுடைய 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பணியைச் செய்தார்.
அந்தப் பணி என்னவென்றால், தமிழகப் பல்கலைக்கழகங்களில் வைரமுத்து அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய ‘ஆய்வியல்நிறைஞர்’, முனைவர் ஆகிய பட்டங்களுக்காகப் பணிந்தளிக்கப்பட்ட ஆய்வேடுகளில் இருந்து அறுபது சிறந்த கட்டுரைகளைத் (இயல் பகுதிகளை) தொகுத்து “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பில் என்னுடைய மேற்கண்ட இரண்டு பட்டங்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சான்றுகளால் வைரமுத்தின் பிறந்தநாள் 13/07/1953 என்பது உறுதிப்படுகிறது!.
அப்படியென்றால் 13/07/2020 அன்று அவருக்கு அகவை என்ன?
நிறைவான அகவையைச் சொல்ல வேண்டுமானால் 67 என்று சொல்லியிருக்க வேண்டும்.
தொடங்குகின்ற அகவையைச் சொல்ல வேண்டுமானால் (இதுதான் முறை) 68 என்று சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டுமில்லாமல் 66 என்றே அத்தனை ஊடகங்களிலும் “வைரமுத்து 66’ என்றே லோகோ போட்டுக் காட்டினார்கள்.
ஸ்டாலின், ‘அவருக்கு வயது 66, அவர் கவிதைக்கு வயது 16’ என்றும் கூறியிருந்தார்.
இன்றைக்குத் தமிழகச் சமுதாயச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் எந்த மனிதரின் தனிமனித வாழ்விலும் எந்த வளர்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.
இருந்தாலும் நாடறிந்த கவிஞர் ஒருவரின் பிறந்தநாள் பற்றிய தெளிவான பதிவைக்கூட நாம் செய்ய இயலாதபோது நம் முன்னோர்களைக் குறைசொல்வது என்ன நியாயம்?
செய்வன திருந்தச்செய்! இது எல்லாருக்கும் பொருந்தும், வைரமுத்து உட்பட!







