Category: செய்திகள்
-

கண்ணைக் கட்டிக்கொண்டு சதுரங்கம் விளையாடி அசத்தல்
இளம் வயதில் சதுரங்கம் விளையாடினால் பல வெற்றிகளை எளிதில் பெறலாம் – குவைத் மாணவர் பேச்சு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நிகழ்ச்சி. குவைத் நாட்டில் பயிலும் மாணவர், தம் கண்களைக் கட்டிக்கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
குவைத் நாட்டில் ஆசிரியையாகப் பணிபுரியும் சாந்தி முன்னிலை வகித்தார்.
குவைத் நாட்டில் ஐந்தாம் வகுப்புப் பயிலும் மித்திலேஷ் ரஞ்சித்குமார் கண்ணைக் கட்டிக்கொண்டு பிற மாணவர்களுடன் செஸ் விளையாண்டு அசத்தினார். மாணவர்கள் அனைவரும் ஆச்சிரியமாகப் பார்த்தத்துடன் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். விளையாண்டு முடிந்த பிறகு மித்திலேஷ் மீண்டும் தான் நகர்த்திய காய்களையும், தன்னுடன் விளையாண்டவர் நகர்த்திய காய்களையும் மிக அழகாக நினைவில் வைத்து முழு விளையாட்டையும் நகர்த்திக் காண்பித்தார்.
“கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடுவதற்குத் தொடர் பயிற்சியே காரணம்” என்று கூறினார்.
நிறைவாக, ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குவைத் நாட்டில் பயிலும் மாணவர் கண்ணைக் கட்டிக்கொண்டு செஸ் விளையாண்டு மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.
-

ஆகஸ்டு 19இல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாகப் பணிபுரிந்துள்ளார்கள்.
சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படித் துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
குறிப்பாக, தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஒருவரைக் களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருடக் காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து, தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.
1983ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அதே போன்று 1981ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.
கதாநாயகனாக, தமிழீழத் தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.
இரா.கோ யோகேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்களக் குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.
இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டைப் பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பாடகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப் படத்திற்காக வழங்கியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படம், வெளிநாட்டுத் திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அனைத்து மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் தொடங்கியுள்ளனர்.
தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தைத் திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப் படத்தை பார்க்க முடியும்.
முன்னதாக இதற்குப் பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு, நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை, பெருவெள்ளம், பேரிடர்
Kentucky flood death toll now over 2 dozen people; rescues surpass 1,200 amid break in rain
சி. ஜெயபாரதன்
வட அமெரிக்க நகரங்கள் பேய்மழையால் படும் பேரிடர், பேரிழப்பு, மரணங்கள்.
2022 ஜூலை 30இல் பெய்த பேய்மழையால் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலப் பகுதிகளில் 25 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், 1200 பேர் காப்பாற்றப் பட்டதாகவும் தெரிய வருகிறது. இறந்தவரில் ஆறு பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய செய்தி. வானூர்திகள் [ஹெலிகாப்டர்கள்] மூலமும், படகுகள் மூலமும் பலர் தூக்கிச் செல்ல நேர்ந்தனர். இறந்தவர் எண்ணிக்கை ஏறும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. கென்டக்கி ஆற்றில் நீர் வெள்ளம் மிஞ்சியது. மேலும் மழை அடிப்பு தொடரும் என்பது காலநிலை அறிவிப்பு. பருவ காலப் பெருமழை வெள்ளத்தை எதிர்நோக்கி நகரங்களில் என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்வது என்பது இப்போது பெருஞ்சவால் ஆகி விட்டது. நகரில் பல இடங்கள் மின்சக்தி இல்லாமை, குடிநீர் இல்லாமை, உணவு வசதிகள் இல்லாமை, போக்குவரத்து வாகனங்கள் இல்லாமை, அத்துடன் பொது மக்கள் புலப் பெயர்ச்சி- சீர்கேடுகளுக்கு வரம்பில்லை. சுமார் 12 நகர வட்டாரங்களில் 18,000 பேருக்கு மின்சாரத் தட்டுப்பாடு. 26,000 வீடுகளுக்கு நீர்வசதி தடைப்பாடு..
வெக்கை அலை அடிப்புகளால் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ன்ஸ், பிரிட்டன், கிரீஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காடுகளும், வீடுகளும் தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் எழுவது வரலாற்று முதன்மைபான கோரக் காட்சியாகும்.
-

அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்
மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,
வணக்கம். அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறோம். இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மின்னஞ்சல் வழியாக சில முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
1. பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாக மற்றும் சீரிய முறையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், VIT, பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.ஜி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
2. பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு 2023, மே மாதம் 26 முதல் 28 வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தாங்கள் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த மடலில் விரிவான செய்திக்குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி.
நிர்வாகக்குழு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்ஆய்வுக்குழு
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
சிங்கப்பூர்Announcement: 11th International Conference – Seminar on Tamil Studies
Dear Scholar,
Greetings.
Hope you all are doing well and have come out of the pandemic safe and healthy. At this time we want to provide you with few updates.
1. The 10th International Conference- Seminar on Tamil Studies proceedings was released in Chennai on July 26, 2022.
2. The next 11th International Conference- Seminar on Tamil Studies to be held on May 26-28, 2023 in Singapore has been announced.
We look forward to your participation.
We will soon share more details about the Conference theme and topics through this email and also on the 11th Conference website https://icsts11.org and http://iatrofficial.org.
Nanri,
Executive Committee
International Association of Tamil Research (IATR)Academic Committee
11th International Conference- Seminar on Tamil Studies -

A battery car service
Baskar Seshadri
Young Munuswamy is basically a photographer covering various functions in Chennai and with no business activity since the days of Covid. He was looking for an employment and had found one in Kapaleeswarar Temple, Mylapore.
Yes, he is the battery car operator that brings and drops the aged and physically challenged devotees to the temple. He makes it a point to be at the entrance of the temple at sharp nine in the morning and goes around to fetch the pilgrims.
He goes via north mada street and move upto Ramakrishna mutt road and turn back at sangeetha to reach the temple again.
Literally he makes around fifteen trips every day in the morning and evening. The number of trips may go up on festival and auspicious days.
He works upto one in the noon and drops the vehicle in Karpagambal kapaleeswarar kalyana mandapam near Sai Baba temple where the vehicle is left for charging.
Few Years ago well before Covid, two such vehicles were donated by Sundaram Finance and one is now being used now here in the temple and the other had been sent to servicing.
Former MLA Dr. Nataraj Inaugurated the event at that time but as temples were closed the vehicles were not used for long time. In the evening, Munuswamy Resumes work at four pm and closes the schedule at nine pm.
The devotees are happy about this service and thank the sponsor Sundaram Finance.
Please tell your aged friends and contacts of this service who are regulars to the temple.
This vehicle can carry seven persons including the operator – In the meanwhile am planning to write to HRCE and the temple authorities to get the second vehicle readied so that it can be used on South Mada and East mada streets in the days to come.
-

ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம். நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார்.
2022 ஜூலை 2 ஆம் தேதி ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் நேர்ந்தது. குறைந்தது 400 பேர் மாண்டார். 6500 பேர் காயமுற்றார். பாதிக்கப் பட்டோரில் பெரும்பாலோர் : ஈரானியர். பாதிக்கப்பட்ட பகுதி மேற்கு ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாநிலம். அது ஸாகிராஸ் மலைப் பகுதி. உயிர் பிழைத்தோரை கண்டு காப்பாற்றுவது கடினம்.
At least 400 people have died and more than 6,500 been injured in Iran after an earthquake shook the border region with Iraq, authorities said. In neighboring Iraq, officials confirmed eight people had died and more than 500 were injured.
The hardest-hit region was western Iran’s Kermanshah province, which lies in the Zagros mountains dividing Iraq and Iran.
In the town of Sarpol-e Zahab in Kermanshah province, 15 kilometers (10 miles) from the Iraqi border, at least 236 were killed.
Iran’s emergency services chief Pir Hossein Koolivand said it was “difficult to send rescue teams to the villages because the roads have been cut off… there have been landslides.”
Most of the region is rugged mountain terrain populated by farmers, with many pictureque villages made out of earthen bricks clinging to hillsides.
-

ஆஃப்கானிஸ்தானில் கோரப் பூகம்பம்! பேரழிவுகள்! பெரும் சிதைவுகள்!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
இமயத் தொடரில் ஆட்டம்
இயற்கை அன்னையின் சீற்றம் !
ஆஃப்கானியர் இன்னுயிர் இழந்தார்!
எழுந்துநின்ற வீடுகள் மட்ட மாயின !
எங்கெங்கு வாழினும் இன்னல்தான்!
ஏழு பிறப்பிலும் தொல்லைதான் !
அடித்தட்டு உதைத்தால் பூமி நடுக்கம்!
மலைத்தட்டு அசைந்தால் பேரதிர்ச்சி !
குடல்தட்டில் கோர ஆட்டம்!
சூழ்வெளி மட்டும் பாழ்வெளியில்லை !
ஆழ்பூமிக்குள்ளும் புற்று நோய் !
தோலுக்குள் எலும்பு முறிவு.
கால் பந்து தையல் போல்
கடல்தட்டு முறிவுகளில்
பாலமிட்டு
காலக் குயவன் எல்லை போட்ட
கோலப் பீடங்கள்
ஞாலத்தில்
கண்டப் பெயர்ச்சியைக்
காட்டும் !++++++++++++++
ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் ஒரு பெரும் பூகம்பம்
2022 ஜூன் 22 இல் ஆஃப்கானிஸ்தான் வட கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஓர் அசுரப் பூகம்பம் நேர்ந்து, 1150 பேருக்கு மேல் மாண்டதாகவும், சுமார் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் இரண்டாம் நாள் செய்தியில் அறிய முடிந்தது. ஏராளமான வீடுகள் தரை மட்டமாயின. இடிந்த வீடுகளுக்குள் புதைபட்டோர் எண்ணிக்கை தெரியாது. சென்ற ஆண்டு கைப்பற்றிய தாலிபான் வன்முறை அரசினர், அமெரிக்க நாட்டின் உதவி நாடியுள்ளார். பொதுமக்கள் இராணுவ உதவியின்றி, யந்திர சாதனங்கள் இல்லாமல் உயிருடன் இருப்போரைக் காப்பாற்ற இயலாது அவதிப்படுகிறார். நில நடுக்கத்துடன் பெருமழையும் பெய்து, நிலச்சரிவுகளும் உண்டாகி, இடர்ப்படுவோரைக் காப்பாற்ற முடியாது திண்டாடினர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 2002இல் இதுபோன்ற ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அடித்தட்டுப் பிளவுகள் [Tectonic Faults] இந்தோனேசியாவில் தொடங்கி, மலேசியா, தாய்லாந்து, பர்மா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான் வரை செல்கின்றன.
Rescuers in Afghanistan search for survivors of deadly quake | Watch (msn.com)
An aftershock shook a hard-hit area of eastern Afghanistan on Friday, two days after an earthquake rattled the region, razing hundreds of mud-brick homes and killing 1,150 people, according to state media. The temblor was the poverty-stricken country’s deadliest in two decades.
Pakistan’s Meteorological Department reported a 4.2 magnitude quake in southeastern Afghanistan. The Reuters news agency pointed out that its epicenter was in almost the exact same place as Wednesday’s quake. Afghanistan’s state-run Bakhtar News Agency said the aftershock took five more lives and injured 11 people.
The nation of 38 million people was already in the midst of a spiraling economic crisis that had plunged millions deep into poverty with over a million children at risk of severe malnutrition.
****************
https://www.cbsnews.com/video/afghanistan-earthquake-taliban-international-aid/
Death toll rises in Afghanistan earthquake | Watch (msn.com),
Deadly aftershock hits Afghanistan 2 days after devastating earthquake – CBS News
-

தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா
அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா 23.06.2022 அன்று லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது,
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அனைவரையும் வரவேற்று பேசும் போது,
எழுதுவது சிறிய விஷயம் கிடையாது. எங்கள் ஊரில் எழுத்தாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வந்த சித்ரா அவர்களை பொக்கிஷமாக கருதுகிறோம். சங்க இலக்கியத்திலிருந்து தான் சகோதரி அவர்கள் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார்.
எனக்கு அவ்வப்போது தோன்றும் விஷயம், பள்ளியில் திருக்குறளை மனப்பாடம் செய்யுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக காதலை வெளிப்படுத்த திருக்குறளைப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தால், அனைவரும் திருக்குறளைப் படித்திருப்பார்கள். சுலபமாகவும் மனப்பாடம் ஆகியிருக்கும். அதிகளவில் புத்தகங்கள் வெளியானது தமிழ் மொழியில் தான். இருப்பினும், இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியாக வேண்டும் என்றார்.
ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசும் போது,
தமிழ்க்காரி அவர்களை 5 வருடங்களுக்கு முன்பு டெக்ஸாஸில் ஒரு விழாவில் தான் சந்தித்தேன். அந்த விழாவை சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் நடத்தினார். அதன்பிறகு, அவரிடம் எழுதுவதற்கு ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன். ஒரு கலைஞராக சித்ராவின் எழுத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் எழுத்து மூலம் காட்டிய இந்தியாவைத் தான் ஐரோப்பா காட்சியாகப் பார்த்தது.
ஓவிய கல்லூரியில் மூத்த ஆசிரியர்களின் மூலம் தமிழ் மீது பார்வையும் ஆர்வமும் உண்டாகியது. சித்ராவின் இந்த நூலுக்குப் பிறகு தமிழைப் பற்றிக் காட்சியாக பல படைப்புகள் வரும் என்றார்.
முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,
வைரத்தை நீங்கள் மிகச்சரியாக எப்படி கணிக்க முடியுமென்றால் அதைப் பட்டுத்துணியில் வைத்துத் தான். அதை போல என் தங்கை தமிழ்க்காரி கவிதைகள் மூலம் தமிழ் நிலம், தமிழ் மண்ணிற்கு உரிய கலைகளை உலகமெங்கும் கொண்டு சென்றிருக்கிறார். மகா கலைஞன் என்று சொல்லக் கூடியவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. பொதுவாக புத்தக விழாவிற்கு செல்வது மனதிற்கு மகிழ்ச்சி தருபவை. கடந்த 3 ஆண்டுகளில் புத்தக விழாவிற்கு செல்வதில் பல அலுவல்கள் காரணமாக ஒருமுறைக்கு நூறு முறை யோசித்து தான் வருவதாகச் சொல்வேன். ஏனென்றால், வருகிறேன் என்று கூறி விட்டு அலுவல் காரணமாக கடைசி நிமிடங்களில் செல்ல இயலாவிட்டால் அது தவறாகி விடும் என்பதற்காக.
ஆனால், மிகக் குறைந்த அளவே புத்தக விழாவிற்கு சென்று வந்த அவலமான சூழலை மாற்றி, மிகுந்த மகிழ்ச்சிக்குரிய மாலையாக இந்த மாலையை என் தங்கை பரிசாக தந்திருக்கிறார். மொழி உரைநடையில் இருக்கும் போது தான் வீரியமான சுவாசமாக புலப்படும் என்று கவிஞர் அபி சொன்னதாக கேட்ட ஞாபகம். ஆனால், என்னைப் பொருத்தவரை கவிதையில் தான் மொழி தன்னுடைய சுவாசத்தை வெளிப்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன்.
காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்… இந்த இரண்டு புத்தகங்கள் கிரேக்க புராணம், ஓவியத்தினுடைய ஆழம் பற்றி ஒரு இடத்தில் சொல்லுகிறது. அதாவது தன்னுடைய காதலனுடைய நிழலை சுவரில் பார்த்த காதலி, என்று வரைய துவங்குவதில் இருந்து கிரேக்கர்களின் வரலாற்றை கூறுகிறது. அதற்கு ஓவியர் மருதுவை சரியாக தேர்வு செய்திருக்கிறார். ஓவியமாக புத்தகத்தைப் பார்த்து ஓவியத்தைத் தொட்டு உணரும் பொழுது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. அதற்கு மருது அண்ணனுக்குப் பாராட்டுகள்.
என்னுடைய புத்தகத்தின் அட்டையில் மருது அண்ணனின் ஓவியம் இல்லாமல் ஒன்று கூட வெளியானதில்லை. கவிதைகளுக்காக காத்திருப்பதைவிட அண்ணன் தான் முகப்போவியம் வரைய வேண்டும் என்று காத்திருந்து உரிமையோடு வாங்கி செல்பவள் நான். ஏனென்றால், கவிதை, கட்டுரை, புதினம் எதுவாக இருக்கட்டும் இன்னொரு கலை வடிவத்தின் கையைப் பிடித்துக் கொண்டு நடைபோடும் போது அதனுடைய தாக்கமும், அதனுடைய வீரியமும், அதனுடைய வெளிப்பாடும், வேறொரு இடத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லுகின்றன.
வாழ்க்கையின் அருகில் இருப்பவன் தான் மிகச் சிறந்த வாசகனாக இருக்க முடியும். மிகச் சிறந்த கவிஞனாகவும் இருக்க முடியும். அந்த வகையில் சிறந்த வாசகனாகவும், வாழ்வைக் கொண்டாடுபவளாகவும், ரசனைக்காரியாகவும் தான் தமிழ்க்காரி எனக்கு அறிமுகம். இன்னும் சொல்லப்போனால் இன்று தான் பார்த்திருக்கிறோம் என்றாலும் கூட எத்தனையோ முறை பார்த்ததைப் போல, எத்தனையோ முறை பேசியதைப் போல பல இரவுகளில் உரையாடி இருக்கின்றோம். தீராத தாகம் போல தமிழை உண்டு, பருகி, கேட்டு அதனைப் பல வகையிலும் வாசித்து, உள்வாங்கிக் கொண்டு அதை கவிதைகளிலே கொண்டு வருகின்ற வித்தையை தங்கை தன் வசப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்க்காரி அருமையான பெயர். பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. தமிழ்க்காரி ஆகட்டும், தமிழச்சி ஆகட்டும், ஏன் இந்த புனைப் பெயரை எடுக்கின்றோம்? இதில் ஓர் அரசியல் இருக்கின்றது. தமிழ் மண்ணோடு, நிலத்தோடு தொடர்புடைய இன்னும் சொல்லப்போனால் கிராமத்தில் புழுதிப் படர்ந்த கிளைச் சாலையில் வியர்வையும், கவிச்சியும் அடிக்கின்ற மண்ணிலிருந்து வருகின்ற பெண் நான் என்பதால், நான் தமிழச்சி ஆவேன். அதைப் போலத் தான் தமிழைப் அனைத்து புலன்களாலும் துய்த்து அதனைத் தனது வெளிப்பாட்டினால் மட்டுமல்லாமல், இந்த இரண்டு புத்தகங்களிலும் குறிப்பாக, தமிழ்த் திணைகளை சங்கத் தமிழின் நீட்சியாக ஐயா அவர்கள் சொன்னதுபோல தமிழ்த் திணை பண்பாடுகளும், அயல் பண்பாடுகளும் இணைந்து பின்னிப் பிணைந்து வாழ்கின்ற சூழல் தான். பல்வேறு தேசங்களில் நீங்கள் பரவிக்கிடந்து பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற சூழலில், தமிழ் பண்பாடுடன், வேர்களை செழுமையான மரபிலிருந்து, அந்த வேர்களைத் தக்க வைத்துக் கொண்டு அதே சமயம் அயல் பண்பாட்டினுடைய இறக்கைகளையும் எப்படி சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்ற சூழலில் தன்னுடைய மொழி, தன்னுடைய நிலம், தன்னுடைய இலக்கியம் தந்திருக்கின்ற செம்மையான வளத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு புத்தகத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் செல்லுகின்ற தங்கையின் படைப்புகளைப் பற்றி நான் விரிவாக அணிந்துரை எழுதியிருக்கின்றேன்.
மொழி என்று சொன்னால் கிரேக்கத்தை தத்துவத்தின் மொழி என்று சொல்லுவார்கள். லத்தீனை சட்டத்தின் மொழி என்பார்கள். இத்தாலியை காதலின் மொழி என்பார்கள். தமிழை இரக்கத்தின் மொழி என்கிறார்கள். ஆனால், இரண்டு புத்தகத்தில் சங்கத்தின் நீட்சியாகப் படிக்கும் பொழுது, தமிழைத் தான் காதலின் மொழி என்று சொல்ல வேண்டும். குறுந்தொகையில் நல்லை என்று வர்ணிக்கப்பட்ட பாடலில் சிலவற்றை எடுத்து உரை எழுதியிருக்கிறார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான உரைகள் ஆண்களால் எழுதப்பட்டவை. எனக்குத் தெரிந்து முதல்முறையாக ஒரு பெண் அதுவும் தமிழ்க்காரியாக முற்றிலும் அவருடைய கண்ணோட்டத்தோடு நல்லை அல்லை நீ, மயிலிறகாம் கூந்தல் போன்ற அருமையான தலைப்புகளை சூட்டியிருக்கிறார்.
குறிஞ்சிப் பாட்டு நாடகத்தில் நான் நடித்துள்ளேன். அந்த நினைவோடு இந்த புத்தகங்களுக்குள் சென்றேன். பொதுவாக 99 பூக்களைத் தான் நாம் நினைவில் கொள்வோம். அதையும் எனது உரையில் சுட்டிக் காட்டியிருப்பேன்.
நான் பாலை நிலத்துக்காரி. முழுக்க முழுக்க கரிசல்காடும், வானம் பார்த்த பூமியும், செழுமை என்பதை அறியாத திறந்த வெளியில் கிடை ஆடுகளுடனும், ஆட்டுப் புழுக்கையுடனும் மஞ்சணத்தி மற்றும் வேப்பமரம் கூட அரிதாக இருக்கின்ற கால சூழலில் வளர்ந்த பெண் நான். தமிழச்சி என்ற பெயர் சூட்டும் முன்பு விரலி என்கிற பெயர் மீது மிகப்பெரிய நேசமும், வியப்பும் இருந்தது. ஏனென்றால், பாடி ஆடி, நடிப்பதால் விரலி என்கிற பெருமை கொள்கின்றேன். திணை மரபினுடைய நீட்சியாக வாழ்க்கை மரபை இன்று வரை கொண்டுவர விரும்பினாலும், எச்சங்களைத் தான் இன்னமும் வைத்திருக்க முடிகின்றது. ஏனென்றால், திணை மரபை நவீன உலகம் எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்தாகி விட்டது. மீட்டெடுகின்ற முயற்சியாக அண்ணனைப் போல ஓவியத்தின் வழியாக வரலாற்றுத் தொடர்ச்சியை மிகச் சரியாக கொடுக்க வேண்டும்.
இப்போது இருக்கும் தலைமுறைக்கு சங்க இலக்கியங்களை சுலபமாக புரிய வைக்கக்கூடிய சரியான வழியைக் சித்ரா காட்டியிருக்கிறார். பேச்சு மொழிக்கும், கவிதை மொழிக்கும் பாதை தூரமானது. அதை புத்தக வடிவில் கொடுக்கும் போது எழுதுவோர்களுக்கும், வாசிப்பவர்களுக்கு தனிப்பட்ட உலகத்தை கொடுக்கிறது.
நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது, அவற்றின் இடையே இருக்கும் இருள் என்று தமிழ் சொல்லுவது போல, இரண்டு வார்த்தைகள், இரண்டு வாக்கியங்கள், இரண்டு கவிதைகளுக்கு இடையிலான மௌனம் என்று சொல்லப்படுகிற இடைவெளி மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகின்றது. அதுபோல காதல் உணர்வை தமிழ்க்காரி எப்படி குறிஞ்சித் திணை கபிலரின் வரிகளிலிருந்து எடுத்து தன் வரிகளிலே எழுதுகின்றார் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். இரவு முழுதும் காதல் முடித்து எழுந்த பெண்ணைப் போல இன்று காலை கண் விழிக்கின்றது. காற்று எனும் பைனாகுலரின் வழியாக காட்டுகின்றது ஒரு குழந்தையின் கண்களுடன். இன்னமும் பழுக்காத பச்சை ஆப்பிளை போல இன்றைய தினம் இருக்கின்றது. இதுதான் நவீன மொழி கொடுத்திருக்கின்ற வசீகர வெளிப்பாடு.
திணை மரபை எழுத்து வடிவில் கொடுக்கின்ற தங்கையின் பிரயத்தனம் பாராட்டிற்குரியது. எனது கவிதைகளை விற்றப் பிறகு தான் தெரிந்தது. இலையுதிர் காலத்திற்கு பிறகும் நறுமணம் இருக்கும் என்று. அது போல தங்கையின் நறுமணம் ஊட்டுகின்ற எழுத்துகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதற்கு இன்னும் மணம் சேர்த்தது அண்ணன் மருதுவின் ஓவியங்கள். ஒரு கவிதையைப் படித்து முடித்ததும் மனக் கண் முன் ஒரு சித்திரம் எழும். அதை அப்படியே ஓவியமாக கொடுத்திருக்கிறார். ஓலைச்சுவடி தமிழை கணினி உலகத்திற்கு ஏற்ப செழுமையைக் கூட்டி தந்திருக்கின்றார். காலந்தோறும் அவ்வை வரிசையில் தமிழ்க்காரியையும் வைத்துப் போற்றுவோம். அவர் தொடர்ந்து தமிழ் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அவ்வை இருந்திருக்கிறார். இனிமேலும் இருக்க வேண்டும். 89-ஐத் தாண்டிய பேரரசர்களால் பாதுகாக்கப்பட்டு, 449 நற்புலவர்களால் ஆராயப்பட்டு, 4440 ஆண்டுகள் நிலைத்திருக்கும் முதல் சங்கத் தமிழ், பிற்காலத்தில் வந்த 49 பாண்டிய அரசர்களால் பேணப்பட்டு. அகத்தியர், தொல்காப்பியர் முதலான கவிவாணர்களால் பேணப்பட்டு, பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட பொழுதும் தப்பி பிழைத்தது இடைச்சங்க தமிழ். இப்படிப்பட்ட சங்கப் பாடல்களை நமக்காக மிக அழகாக நம் கைகளில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்ற என் அன்பு தங்கை தமிழ்க்காரிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்என்றார்.
முனைவர் ரா.குறிஞ்சிவேந்தன் பேசும்போது,
அமெரிக்காவில் சித்ராவை அக்கா என்று அழைப்பது மரபு. தமிழில் வடஅமெரிக்க கூட்டமைப்பில் பல சங்கங்கள் இருக்கின்றது. அனைத்து சங்கங்களையும் வழிநடத்துவது யார் என்றால் சித்ரா என்று கூறுவார்கள்.
உயர்தொழில்நுட்ப வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில் இப்படி ஒரு நூலை நான் பார்த்ததில்லை. நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து கொண்டு குறிஞ்சிப் பாட்டையும், குறுந்தொகையையும் தன்னுடைய புத்தகங்களில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இங்கு யாரும் இல்லையே என்பதில் ஆதங்கம் வருகிறது. அனைத்து கவிஞர்களையும் நினைவுபடுத்தியிருக்கிறார்.
இந்த புத்தகங்களை படிக்கும் போது சித்ராவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அந்த கவிதையோடு சேர்த்து மருதுவின் ஓவியங்களையும் பார்க்கும் போது, தமிழ் பண்பாட்டை அழகாக கொடுத்திருக்கிறார். பாடங்களுக்காக அயல்நாட்டிற்கு செல்பவன். அப்படி போகும்போது பார்த்த அரிய குறிஞ்சி மலர் தான் சித்ரா. இன்னும் மேலும், மேலும் அவர் எழுத வேண்டும் என்றார்.
முனைவர் கு.ஞானசம்பந்தம் பேசும்போது,
கார்த்திகேய சிவசேனாதிபதி திருவள்ளுவரைப் பற்றி அவர் யார் தெரியுமா? என்று கூறியதும், திடுக்கிட்டேன். ஏனென்றால், அவரை மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் கூறியது போல் திருக்குறளின் காமத்துப்பாலை பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும்.
மேலும், தொடர்ந்து 30 ஆண்டு காலமாக அழகர் விழாவை நேரடியாக வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து வருவதில் மகிழ்ச்சி.கடந்த 10 ஆண்டுகாலமாக சித்ராவை எனக்கு தெரியும். ஆனால், அதிகமாக பேச மாட்டார்கள். செயல்பாடு அதிகம் உள்ளவர்கள். இப்புத்தகங்கள் படிக்கும்வரை இவருக்கு தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பது தெரியாது. இப்புத்தகத்தை பல்கலைக் கழகங்களில் கொடுத்திருந்தால் நிச்சயமாக தனியாக டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்கள்.
இதுவரை ஒரே ஒரு பெண் தான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். அதற்கு திருக்குறள் தீபலங்காரம் என்று பெயர். ஆனால், அவர் முழுமையாக முடிக்கவில்லை.
அதுபோல் பெண் உரை எழுதுவது மிகவும் அரிது. சித்ரா வந்திருப்பது பாராட்டுக்குரியது. இவரைப் போல் பெண்கள் பலரும் உரை எழுத முன்வர வேண்டும்.
பரிமேலழகர் இன்னொரு திருவள்ளுவர். குறுந்தொகையில் மோசிகனார் பாடலை எடுத்து எழுதியிருக்கிறார். குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களை சேர்ப்பதற்கு உ.வே.சாமிநாதர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், ஒவ்வொரு பூவையும் தொகுத்து எழுதியிருக்கிறார்.
20 வரிகளில் வர்ணிக்கும் அழகை ஒரே படத்தில் வரைந்திருக்கிறார் ஓவியர் மருது.
2000 வருடங்களுக்கு முன்பு குறுந்தொகையில் கபிலர் எழுதியதையும், பெண்ணின் மனநிலையையும், தன்னுடைய மனநிலையையும் எடுத்து சித்ரா அழகாக எழுதியிருக்கிறார்.
முனைவர் சித்ரா பேசும்போது,
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரும் எனக்காக இங்கு வந்து பேசுவார்கள் என்று சிறிதும் நினைத்து பார்த்ததில்லை. தமிழச்சி அக்காவையும், குறிஞ்சி அவர்களையும் பார்க்காமலேயே அவர்கள் மீது அன்பு கொண்டதற்கு காரணம் தமிழ் தான். குறிஞ்சி அவர்களிடம் தமிழ் கற்கும் ஆர்வம் வரும்.
ஓவியர் மருது மிகப் பெரிய ஆளுமை. அவர் என்னுடைய படைப்புக்கு ஓவியம் தீட்ட ஒப்புக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.எழுதுவதை நிறுத்தக் கூடாது என்று அப்பாவாக துணையாக இருப்பது தினகரன் அண்ணா அவர்கள் தான். என்னுடைய தினகரன் அண்ணாவுக்கு தனி நன்றி என்றார்.
நிறைவாக அந்தரி பதிப்பகம் சார்பில் ஷோபா இரமேஷ்குமார் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில், தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) எழுதிய பூக்கள் பூக்கும் தருணம் என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் கு.ஞானசம்பந்தம் பெற்றுக் கொண்டார். அடுத்து, காதல் கதை சொல்லட்டுமா? என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் ரா.குறிஞ்சி வேந்தன் பெற்றுக் கொண்டார்.
-

T R Mahalingam Remembered on His 98th Birthday
Baskar Seshadri
I had a lovely evening programme today at Arkay Convention Centre, Mylapore on the ace Singer T R Mahalingam.
The programme was hosted by Madhuradhvani and Grand Daughter convened the complete programme where many dignitaries were present.
I will share the link on the programme if I could get it.
Special Appreciation to Ramakrishnan Sir for doing a yeomen service with these events. My Respects Sir. Mahalingam Centenary Celebrations are due in 2024 June.
P Suseela Amma Madurai GS Mani Sir, Somu Anna, Annadurai (Son of Kannadasan) Family of Rajasulochana and members of Mahalingam family made it.
Mahalingam’s Grand daughter Dr. Prabha rendered the numbers of her grandpa. It’s no doubt a fitting tribute to T R Mahalingam an unsung Hero. He is the ocean to those who wish to pursue the Singing as a Profession or as an Amateur.












