அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

1
download

மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

வணக்கம். அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறோம். இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மின்னஞ்சல் வழியாக சில முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

1. பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாக மற்றும் சீரிய முறையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் திரு. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், VIT, பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.ஜி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

2. பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு 2023, மே மாதம் 26 முதல் 28 வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘தி மில்லினியல் தமிழ்’ அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தாங்கள் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த மடலில் விரிவான செய்திக்குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

நிர்வாகக்குழு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்

ஆய்வுக்குழு
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
சிங்கப்பூர்

Announcement: 11th International Conference – Seminar on Tamil Studies

Dear Scholar,

Greetings.

Hope you all are doing well and have come out of the pandemic safe and healthy. At this time we want to provide you with few updates.

1. The 10th International Conference- Seminar on Tamil Studies proceedings was released in Chennai on July 26, 2022.

2. The next 11th International Conference- Seminar on Tamil Studies to be held on May 26-28, 2023 in Singapore has been announced.

We look forward to your participation.

We will soon share more details about the Conference theme and topics through this email and also on the 11th Conference website https://icsts11.org and http://iatrofficial.org.

Nanri,

Executive Committee
International Association of Tamil Research (IATR)

Academic Committee
11th International Conference- Seminar on Tamil Studies

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அறிவிப்பு: 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்

  1. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற IATR அமைப்பினைத் தோற்றுவிப்பதற்குத் தனிநாயக அடிகளார் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தன் உழைப்பினைச் செலவிட்டுள்ளார். அவரால் நடாத்தப்பட்ட தமிழ் கல்ச்சர் ஆங்கில ஆய்விதழின்வழி கிடைத்த மதிப்பும், உலகளாவிய ஆய்வாளர்களின் தொடர்புமே 1964ஆம் ஆண்டில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித்தந்தது. தமிழ் கல்ச்சர் ஆய்விதழின் பிறிதொரு வடிவமே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம். அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே உண்மையாகவே உலக அரங்கில் அறியப்பட்ட ஆய்வறிஞர்கள். உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றிலும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளனர். ஆய்வறிஞர்கள் தலமையில் மன்றம் இயங்கியபோது கண்ணியமாகவும், உலகளாவிய வியாபகத்துடனும் இருந்துள்ளது. மன்றத்தின் முதன்மைக் கொள்கைகளான
    truly international,
    truly scholarly,
    truly critical
    என்பது ஆய்வறிஞர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இயங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டில் மன்றத்தின் தலைவராக இருந்த நொபுரு கரோஷிமா அவர்கள் சிறப்புடன் செயலாற்றி, மன்றத்தின் நற்பெயருக்கும் தமிழாராய்ச்சி அடித்தளத்திற்கும் களங்கம் ஏற்படாது பன்முகத் தன்மையைக் காப்பாற்றினார்.

    தமிழாராய்ச்சிக்குத் தொடர்பில்லாத, உலக அரங்கில் தமிழாய்வறிஞராக அறியப்படாத, இதுவரை நடைபெற்ற எந்தவொரு உலகத் தமிழ் மாநாட்டிலும் கலந்துகொள்ளாதவர்கள் தலமையில் இரு அணிகளாகப் பிரிந்து நின்று மன்றத்தின் நற்பெயருக்கும் தனிநாயக அடிகளாரின் சீரிய சிந்தனைக்கும் களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழுக்கு ஏற்பட்ட கேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.