அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை, பெருவெள்ளம், பேரிடர்
Kentucky flood death toll now over 2 dozen people; rescues surpass 1,200 amid break in rain
சி. ஜெயபாரதன்
வட அமெரிக்க நகரங்கள் பேய்மழையால் படும் பேரிடர், பேரிழப்பு, மரணங்கள்.
2022 ஜூலை 30இல் பெய்த பேய்மழையால் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலப் பகுதிகளில் 25 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், 1200 பேர் காப்பாற்றப் பட்டதாகவும் தெரிய வருகிறது. இறந்தவரில் ஆறு பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குரிய செய்தி. வானூர்திகள் [ஹெலிகாப்டர்கள்] மூலமும், படகுகள் மூலமும் பலர் தூக்கிச் செல்ல நேர்ந்தனர். இறந்தவர் எண்ணிக்கை ஏறும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. கென்டக்கி ஆற்றில் நீர் வெள்ளம் மிஞ்சியது. மேலும் மழை அடிப்பு தொடரும் என்பது காலநிலை அறிவிப்பு. பருவ காலப் பெருமழை வெள்ளத்தை எதிர்நோக்கி நகரங்களில் என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்வது என்பது இப்போது பெருஞ்சவால் ஆகி விட்டது. நகரில் பல இடங்கள் மின்சக்தி இல்லாமை, குடிநீர் இல்லாமை, உணவு வசதிகள் இல்லாமை, போக்குவரத்து வாகனங்கள் இல்லாமை, அத்துடன் பொது மக்கள் புலப் பெயர்ச்சி- சீர்கேடுகளுக்கு வரம்பில்லை. சுமார் 12 நகர வட்டாரங்களில் 18,000 பேருக்கு மின்சாரத் தட்டுப்பாடு. 26,000 வீடுகளுக்கு நீர்வசதி தடைப்பாடு..
வெக்கை அலை அடிப்புகளால் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ன்ஸ், பிரிட்டன், கிரீஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காடுகளும், வீடுகளும் தீப்பற்றி எரிந்து புகை மண்டலம் எழுவது வரலாற்று முதன்மைபான கோரக் காட்சியாகும்.