Category: நறுக்..துணுக்…

  • தர வரிசைப் பட்டியல்!

    பவள சங்கரி

    கல்வித்தர வரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே முதல் இடத்தை, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஐடி தக்க வைத்துக்கொண்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கான தர வரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. பங்களூருவைச் சார்ந்த அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த 10 கல்வி நிறுவனங்கள் சிறப்பான நிலையை பெற்றுள்ளன.

    Share
  • 17.5 கி.மீ பேருந்து பயணத்திற்கு ₹1 கட்டணம்!

    பவள சங்கரி

    கல்கத்தாவில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சாண எரிவாயு மூலமாக இயங்கும் பேருந்தை 17.5 கி.மீ தொலைவிற்கு ₹1  மட்டும் பொது மக்களிடமிருந்து கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இயக்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 15 பேருந்துகளை மற்ற வழித்தடங்களிலும் இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது இயற்கை மாசுபடுவதிலிருந்து கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கு மாற்று வருமானத்தையும், பொது மக்களுக்கு இந்தியாவிலேயே மிகமிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மிக அதிக அளவில் மாடுகள் இருக்கின்ற பீகார், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதனை ஏன் பின்பற்றக்கூடாது? அந்நியச் செலாவணியையும் மீதமாக்கலாமே?

    Share
  • மது விற்பனை சாகசம்!

    பவள சங்கரி

    நீதித் துறையின் மது விற்பனை தொடர்பான தீர்ப்பிற்கு மாற்றுவழி காணும் மாநில அரசுகள்! ஒவ்வொரு மாநிலமும் மது விற்பனையில் வரக்கூடிய வருமானத்தில் சுமாராக பாதி தொகை இழப்பதால் மாநில நெடுஞ்சாலை என்பதை மாவட்ட நெடுஞ்சாலையாக பெயர் மாற்றம் செய்யும் முயற்சி… ! மக்கள் நல்வாழ்வில் நீதித் துறையும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மாநில அரசுகள் இனி என்ன செய்யப்போகின்றன? இதில் மாநில நெடுஞ்சாலையின் சுங்கச் சாவடிகளின் கட்டணம் வேறு அதிகரித்துள்ளது..:-( தமிழக அரசு மது விற்பனை நிலையங்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்கள்?

    Share
  • வங்கி .. வங்கி..

    பவள சங்கரி

    வைப்புத் தொகைக்கு இன்று முதல் 0.1% வட்டி குறைப்பு. ஸ்டேட் வங்கியில் இன்று முதல் சிறுசேமிப்பு கணக்கிற்கு வைப்புத் தொகை கட்டாயமக்கப்பட்டுள்ளது. போதிய வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்று முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மற்ற வங்கிகளும் விரைவில் இதனைத் தொடரும். அனைத்து ஸ்டேட் வங்கிகளும் இனி ஒரே பெயரில் செயல்படத்தொடங்கும்..

    Share
  • பயணச்சீட்டு வாங்குபவரா நீங்கள்?

    பவள சங்கரி

    இரயில் பயணிகளால் ஆண்டுதோறும் இரயில்வேத் துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு 35,000 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 39,000 கோடியாக உயர்ந்துள்ளது. பயணச் சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களால் ஏற்படும் இழப்பு ஒழுங்காக, நேர்மையான முறையில் பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்பவர்கள் தலையில் தான் விடிகிறது. உரிமையைக் கேட்டு போராடும் பலர் கடமையைப் பற்றி நினைப்பதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.. 🙁 சில பிரிவுகளில் பாதிக்கும் மேலான பயணிகள் பயணச் சீட்டு வாங்குவதே இல்லை என்பதே உண்மை! இவையெல்லாம் பரிசோதகர்கள் கண்ணில் எப்படி தப்புகிறது என்றும் ஆச்சரியமாக உள்ளது!

    Share
  • மோப்ப சக்தி

    பவள சங்கரி

     

    கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை.
    மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

     

    மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

    Share
  • மத்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

    பவள சங்கரி

    வரும் நாட்களில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கப்போகிறது. இருக்கும் வெப்பத்தைவிட உணரக்கூடிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை களைவதற்கு அனைத்து மாநிலங்களும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து அரசு மருத்துவமனைகளில் இதற்கென தனியாக சில படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவை நல்ல காற்றோட்டத்துடனும், குளிர் சாதன வசதி கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் இதுவரை இதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.. சென்ற 5 ஆண்டில் மட்டும் 25,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளார்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விசயம். இதுபோல நடவடிக்கைகள் எடுத்ததால் ஆந்திர மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டில் 2112 பேர் இறப்பு குறைந்து 2016 இல் 1000 ஆகியுள்ளதையும் கருத்தில் கொள்ளத்தக்கது

    Share
  • உச்சநீதி மன்றத்தை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசு

    பவள சங்கரி

    நேற்று உச்சநீதிமன்றம் காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்திரவிட்டும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. உச்சநீதி மன்றம் கர்நாடகத் தலைமை செயற்பொறியாளருக்கும், மத்திய அரசின் விவசாய செயல் அலுவலருக்கும் இது தொடர்பான ஆணையை ஏன் பிறபிக்கக்கூடாது? தமிழர்களின் உயிர் நாடியான குடிநீர் பிரச்சனையை எந்த வகையிலேனும் தீர்த்தாக வேண்டிய கடப்பாடு உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.

    Share
  • பல இலட்சம் தொழிலாளர்களின் பணியிழப்பை தடுக்கவேண்டும்

    பவள சங்கரி

    விவசாய விளைப்பொருளான பஞ்சை ஊக்கச் சந்தையிலிருந்து (comodity sales) நீக்கி, ஜவுளித்துறையையும், பின்னலாடை உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அந்நிய செலாவணி நிலையை உயர்த்தினால் அனைத்துத் துறையினரும் பயன் பெறலாம். பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் நீங்கும்.

    Share
  • செயற்கை மழை!

    பவள சங்கரி

    மனிதருக்கு அறிவியல் ஞானம் வளரும்போது மூட நம்பிக்கைகள் ஒழிந்துவிடுகின்றன. முன்னொரு காலத்தில் சீன நாட்டில் மழை இல்லாமல் வறண்டு கிடந்த சமயத்தில் மழை வேண்டி வருணபகவானுக்கு யாகமும், விரிவான சடங்குகளும் செய்யும்போது ஒரு அழகான கன்னிப்பெண்ணை தண்ணீர் டிராகனுக்காக பலி கொடுத்தார்களாம். ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட 1960 – 61 காலகட்டங்களில் செயற்கை மழை மூலமாக வானிலையையே மாற்றத் துவங்கிவிட்டனர்.

    சீனாவின் செயற்கை மழைத்திட்ட நிபுணர் சான் சியாங்கின் கருத்து இதோ: “செயற்கை மழை பெய்யும் போது, திடீரென்று பிரளயம் எல்லாம் ஏற்பட்டு விடாது. ராக்கெட்டுகள் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் மூலமாக இரண்டு நாட்களுக்கு மேல் அரும்பாடுபட்டு மழையைக் கருத்தரிக்கும்படி மேகங்களைத் தூண்டுகின்றனர். அதாவது உப்பு, சில்வர் அயோடைடு போன்ற பனிக்கூழ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்களால் மழை பொழிகின்றன. இயற்கை மழைக்கும், செயற்கை மழைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. செயற்கை மழையில் விழும் மழைத் துளி, அளவில் பெரியதாக இருக்கும்” என்கிறார்.

    Share
  • குளு குளு பதநீர்!

    பவள சங்கரி

    pathaneer_2886098f

    பதநீர்

    கோடைகாலம் வந்துவிட்டது. பெப்சி, கோக் போன்ற புட்டி பானங்கள் குடிக்க வெறுப்பாக இருக்கிறது? சரி நம்ம இயற்கை பானமான பதநீர், இளநீர் குடிக்கலாம் என்றால் சராசரியாக ஒரு இளநீர் 25 முதல் 40 உரூபாய் வரை விற்கிறது. பதநீர் ஒரு டம்ளர் 15 உரூபாய். விரும்பினால் நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் விலை கூடுதல்.. ஆனால் இந்தப் பதநீர் கிடைப்பதேயில்லை. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலை நேரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மதியத்திற்கு மேல் புளித்துப்போய் விடுவதால் பருக முடிவதில்லை. தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியம் இந்த பதநீர் தொழில் அமோகமாக நடந்து மக்களும் இந்த கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் கடக்க வழிவகை செய்தால் நலம். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட பதநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதனால் பனைத் தொழிலும் சிறப்பாக நடந்து தொழிலாளர்களின் வாழ்வும் வளம் பெறலாம்.

    Share
  • ஆழ்மனம்!

    பவள சங்கரி

    17155515_1569882419708333_2781455138669949434_n

    ஒளிமிகு ஆழ்மனப்பேரலைகளின் திவலைகள்
    அமிழ்தென்றெழ சாலத்தருமம் பெறும்!

    Share
  • நெகிழிச் சாலைகள்!

    பவள சங்கரி

    அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுப் பொருட்கள் மூலம் சாலை போடும் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதன் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காட்டியிருந்தும் இன்னும் அந்த முறை ஏன் இன்னும் பயன்பாட்டிற்கு வரவேயில்லை? இதையெல்லாம் யாரிடம் சென்று கேட்பது. தார் சாலைகள் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடும். ஆனால் இந்த நெகிழிச் சாலைகள் அதுபோன்று ஆவதில்லை என்கிறார்கள். அதைவிட முக்கியமாக நெகிழிக் கழிவுகளை அழிப்பதற்கு படும் சிரமங்களும் குறைவதோடு பாதுகக்கப்பட்ட சாலைகளும் கிடைக்குமே.. இதில் என்ன பிரச்சனை? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த முறையில் சாலை போட்டு நிரூபித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

    Share
  • மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!

    பவள சங்கரி

    மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!நமது இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியா சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் மூலமாக  இந்தியாவிற்கான ஜி.பி.எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிசெலுத்தல் முறை மூலமாக கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை எளிதாகக் கண்டுணரும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதைத் தங்கள் கைபேசியில் பதிவேற்றிக்கொண்டால் மீனவர்கள் அந்நிய எல்லைக்குள் சென்று ஆபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கலாம். இந்த சாட்டிலைட் மூலமாக எந்தெந்தப் பகுதிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கண்டறியலாம். தங்கச்சி மடம் மீனவ இளைஞரின் ஆன்மா சாந்தியடையும் வகையில் இந்த செயலியை பிரபலமாக்க வேண்டியது இஸ்ரோ மற்றும் அரசின் கடமை.

    Share
  • கையூட்டு!

    பவள சங்கரி

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பதில் இந்தியாவிற்குத்தான் முதல் இடமாம்! 10/7 பேர் இலஞ்சம் கொடுத்துதான் காரியம் முடிப்பதாகக் கூறுகிறார்கள். மிகக்குறைவாக இலஞ்சம் கொடுப்பவர்கள் (0.2%) ஜப்பானியர்கள். என்ன கொடுமைடா சாமி இது? இதில் கொஞ்சம் ஆறுதல் என்னவென்றால் இந்திய அரசாங்கம் இலஞ்சத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுதான். 40% சற்று அதிகமான மக்கள் இந்த 12 மாதங்களில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 63% மக்கள் தனி மனிதப் போராட்டம் கூட நல்ல பலன் அளிக்கும் என்கிறார்கள்.

    Share