குளு குளு பதநீர்!
பவள சங்கரி
கோடைகாலம் வந்துவிட்டது. பெப்சி, கோக் போன்ற புட்டி பானங்கள் குடிக்க வெறுப்பாக இருக்கிறது? சரி நம்ம இயற்கை பானமான பதநீர், இளநீர் குடிக்கலாம் என்றால் சராசரியாக ஒரு இளநீர் 25 முதல் 40 உரூபாய் வரை விற்கிறது. பதநீர் ஒரு டம்ளர் 15 உரூபாய். விரும்பினால் நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் விலை கூடுதல்.. ஆனால் இந்தப் பதநீர் கிடைப்பதேயில்லை. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலை நேரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மதியத்திற்கு மேல் புளித்துப்போய் விடுவதால் பருக முடிவதில்லை. தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியம் இந்த பதநீர் தொழில் அமோகமாக நடந்து மக்களும் இந்த கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் கடக்க வழிவகை செய்தால் நலம். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட பதநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதனால் பனைத் தொழிலும் சிறப்பாக நடந்து தொழிலாளர்களின் வாழ்வும் வளம் பெறலாம்.