காலத்தின் கோலம்

சி. ஜெயபாரதன்unnamed

காலக் குயவன் ஆழியைச் சுற்றி,
ஞாலம் உருவாக்கி
கோலம் போட்டுக்
பாலம் அமைத்தான் வரலாற் றுக்கு
ஜாலம் பண்ணி !
காலவெளி,
பிரபஞ்சத்தின் பருவம் காட்டும்
கைக் கடிகாரம் !
கடவுளின் பயணக் குதிரை
காலப் பறவை !
பின்னே செல்லாது
முன்னோடும் அகிலத்தின்
முழு மூச்சு !
அரங்கத்துக்கு ஏற்றபடி
கரகம் ஆடும் காலம்
தாளம் மாறும் !

கடந்த காலம்
விடிந்தது !
நிகழ்காலம் நடை கற்குது !
எதிர்காலம் தூங்குது !
குதிரை மாயை என்றால்
தேரோட்டியும்
ஓர் மாயை தான்.
இந்த வையகம்  பொய்யா?
இந்தக் காயம் பொய்யா ?
தாய், தந்தையர்
பொய்யா ?
சிவமும் சக்தியும் மாயையா ?
காலம் மாயை என்றால்
ஒளியும் மாயையா ?
காலக் குதிரை
முதுகில் சுமக்கும்
இம்மூன்றும்
நிஜமா ?  நிழலா ? கானல் நீரா ?

Share

Comments

2 responses to “காலத்தின் கோலம்”

  1. தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் கவிதையும் அந்த வரிசையில் ஒன்றாக சிந்திக்க வைக்கிறது. எனக்குப் பிடித்த தத்துவப்பாடல்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா.

  2. தேமொழி,

    அதுபோல் இன்னொன்று. 

    http://www.vallamai.com/?p=40094   [அணு, அகிலம், சக்தி]. 

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *