திருமால் திருப்புகழ் (80)

 

கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
————————————————

Narasimha slays Hiranyakashipu. Watercolour. (In five colours, panchavarnam.) Keshav
Narasimha slays Hiranyakashipu. Watercolour. (In five colours, panchavarnam.) Keshav

’’கண்ணன் அந்தாதி’’
———————————————

Lakshminarasimha with Prahlada, Garuda and Hanuman. Gouache.  Keshav
Lakshminarasimha with Prahlada, Garuda and Hanuman. Gouache. Keshav

உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….(6)

விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற்
பதவி பெறுவதென்ன பேறா! -புதுப்புது
மேனியும், நோயும் ,மரணமும் நாடகம்
தூணிலொளிந் தோன்கண் துடைப்பு….(7)

 
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழனெனை
பாரா திருப்பதேன் பகர்….(8)

 
பகர்தல், பரிகசித்தல்,பீற்றல்,புலம்பல்
இகழ்தல் எனவாச்(சு) வாழ்க்கை -உகிரால்
இரணியனைக் கொன்றன்(று) இருதோ(ள்) அணிந்த
நரஹரியே மோனத்தூ ணாக்கு….(9)

 
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….(10)

——————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2013_05_01_archive.html

Share

Comments

One response to “திருமால் திருப்புகழ் (80)”

  1. கிரேசி ஐயாவிற்கு,

    வணக்கம்.

    //பாரா திருப்பதேன் பகர்….(8)// என்னும் வரிகளில் “இருப்பதேன் பகர்” என்னுமிடத்தில் தளை தட்டுகிறது.

    உங்கள் எழுத்தின் இரசிகனாய்,
    பிரசாத் வேணுகோபால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *