பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[34] உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன்,
‘ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு ?
இருட்டில் தடுமாறு கிறார் அதன் மதலையர்‘
‘குருட்டுப் புரிதலது !’ எனப்பதில் தரும் மேலகம்.
[34]
Then to the rolling Heav’n itself I cried,
Asking, ‘What Lamp had Destiny to guide
Her little Children stumbling in the Dark? ‘
And – ‘A blind Understanding! ‘ Heav’n replied.
[35] எளிய மண் கலைய உதட்டில் உணர்ந்தேன்
வாழ்வின் இரகசிய ஊற்றுக் கிணறு ஒன்றை,
வாயிக்கு வாய் முணுக்கும், “வாழும் போதே
மதுவைக் குடி ! ஏனெனில் செத்தபின் மீளாய் நீ‘
[35]
Then to the Lip of this poor earthen Urn
I lean’d, the secret Well of Life to learn:
And Lip to Lip it murmur’d – ‘While you live,
Drink! – for, once dead, you never shall return.’
[36] ஓடுகாலி உடன்செலும் படகு சொல்லும்
ஒரு சமயம் தெளிவாய் வாழ்ந்தேன் மகிழ்ந்து,
குளிர்ந்த உதட்டில் ஒருதரம் முத்த மிட்டால்,
எத்தனை முத்தம் ஏற்கும் பின்பு கொடுக்கும் ?
[36]
I think the Vessel, that with fugitive
Articulation answer’d, once did live,
And merry-make, and the cold Lip I kiss’d,
How many Kisses might it take – and give!


Leave a Reply