வாரத்தில் ஒருநாள்
விடுமுறை நாள்..
மாதத்தில் ஒருநாள்
சம்பள நாள்..
வருடத்தில் ஒருநாள்
பிறந்தநாள்..
வாழ்க்கையில் ஒருநாள்
இறந்திடும் நாள்..
ஆனாலும்,
அனுதினமும் மனிதர்பலர்
அஞ்சியஞ்சி சாகிறாரே
அது ஏன்…!
படத்துக்கு நன்றி
வாரத்தில் ஒருநாள்
விடுமுறை நாள்..
மாதத்தில் ஒருநாள்
சம்பள நாள்..
வருடத்தில் ஒருநாள்
பிறந்தநாள்..
வாழ்க்கையில் ஒருநாள்
இறந்திடும் நாள்..
ஆனாலும்,
அனுதினமும் மனிதர்பலர்
அஞ்சியஞ்சி சாகிறாரே
அது ஏன்…!
படத்துக்கு நன்றி
தேமொழி
முன்னுரை:
வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (http://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் … இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை. ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர் நடந்ததாக ஒரு கட்டுக் கதை. 1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது. இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது. உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது. இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை. தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).
விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது. ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம் மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது. மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள் என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது. இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.
பிக்கோலிம் புளுகு:
பிக்கோலிம் போர் என்பது 1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2]. போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ் (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].
(தொடரும்)
______________________________________
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
சத்திய மணி
நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
நமசிவாயமென இசையொழுக பாடினேன்
நமசிவாயமென மனமுருக ஓதினேன்
நமசிவாயமென குருமுகமே நாடினேன்
நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!
பவள சங்கரி
தலையங்கம்
2014ல் தேர்தல் வரப்போகிறது.. யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் மக்கள் வெதும்பியிருக்கிறார்கள். கிராமத்தில் சொல்லும் ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டிற்கு வரும் விருந்தாளி ஒருவர், உங்கள் குடும்பத்தில் மிக நல்லவர் என்று யாரைச் சொல்லுவீர்கள் என்று குடும்பத் தலைவனிடம் கேட்டபோது அவர், அதோ அங்கு கூரையில் ஏறி கொள்ளி வைப்பவன்தான் மிகச் சிறந்தவன் என்றாராம்.. வந்திருந்தவருக்கு தெளிவாகப் புரிந்ததாம், மற்றவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று. . இப்பொழுது சமுதாயச் சிந்தனையிலும், சமுதாய வளர்ச்சியிலும் துளியும் நாட்டம் இல்லாதவர்களின் கையிலேயே அரசியல் இருக்கிறது. இதற்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல என்பது அன்றாடம் வரும் செய்திகள் மூலமாக அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அன்றைய சுதந்திரக் காலப் போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, கோயிலுக்கு நேர்ந்துவிட்டதுபோல் வரிசை வரிசையாகச் சென்று அன்றைய காவல் துறையினரிடம் அடியும் உதையும் பெற்று இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம அல்லவா இது. தாயகக்கொடி மண்ணில் வீழ்வதைத் தடுத்து நிறுத்தி காப்பதற்காக தம் உயிரை விட்டவர் வாழ்ந்த பூமியல்லவா இது. அப்படி காப்பாற்றிய கொடியை மென்மேலும் வானில் பட்டொளி வீசிப்பறக்கச் செய்ய வேண்டாமா? இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். இன்று தனி மனிதர்களும், பொது மக்களும் நாடு வளம் காண வேண்டுமென்று தனியாத ஆவல் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே வழிநடத்த சிறந்த தலைவர்கள் இல்லையே? இன்று இவர்கள் தவறு செய்துவிட்டார்கள் அவருக்கு வாக்களிக்கலாம் என்றால் அதுவும் முடியாத சூழ்நிலையாக உள்ளது. நம்மை ஆளச் சிறந்த தலைவர்களாக யார் இருக்கிறார்கள்.. முப்பது கோடி முகமுடையாள் என்று சொன்ன அந்தக் காலத்தில் நம்மை வழிநடத்த ஒரு மாபெரும் தலைவர் இருந்தார். இன்று 130 கோடியைத் தாண்டிவிட்ட நிலையிலும் நமககு வழிகாட்ட நல்லதொரு தலைவரில்லை என்பதுதான் வேதனை. நல்லதொரு பாதை காட்டினால் அனைவரும் செல்வதற்குத் தயாராக இருப்பினும் அந்தப் பாதையைக் காட்ட நல்ல தலைவரில்லையே.. இன்னும் ஓராண்டே தேர்தலுக்கு இருக்கக் கூடிய சூழலில், தேர்தல் வான வேடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டது. .இதைக் கண்டு மயங்கி நாம் வாக்களிக்கப் போகிறோமா.. அல்லது வளமான வாழ்க்கை அமையும் என்று நம்பி வாக்களிக்கப் போகிறோமா என்று கனவில் பிதற்றும் நிலையில் இன்று மக்களின் மனம் இருக்கிறது. .
படித்தவர்களும் அறிஞர்களும் மக்களின் நலனில் அக்கறையுள்ள சிந்தனாவாதிகளும் அரசியலுக்கு வருவதற்கு தயங்கக்கூடிய இன்றைய நிலை மாற வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அறைகூவல் விட்டதுபோல மாணவர்கள் அரசியலை சுத்தப்படுத்துவதற்கு வர வேண்டும். நாட்டு நலனைப் பேணும் மகக்ள் உங்களுக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கிறார்கள். அசாமில் இது போன்றதொரு சூழலில்தான் மாணவர்கள் மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டினர். ’துள்ளி வருகுது வேல்’ என்பதுபோல இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் அரசியலுக்கு வர வேண்டும்.. இளைஞர்களை நாடு எதிர்பார்க்கிறது இன்று. பொறுப்பை உணர்ந்து தயங்காமல் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.. ஜனநாயக முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவோம்.. நம் இந்தியா வல்லரசு ஆவதும், வளமான வாழ்க்கையை இழப்பதும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்பதுதான் சத்தியம். ஜெய்ஹிந்த்..
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அணுத்தொடர் இயக்கம் புரிந்து
அணுசக்தி தூண்டியது போல்,
உயிரியல் விஞ்ஞானத்தில்
முதன்முதல் டியென்ஏ
உருவாக்கியது போல்
அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும்
செர்ன் விரைவாக்கி யந்திரம்
பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய்
அரங்கேற்றி உருவாக்கும் !
கடவுள் துகள்
தடத்தைக் கண்டதாய்
உறுதிப் படுத்தும் இப்போது.
ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில்
எதிர் எதிரே
புரோட்டான்கள் மோதி
சக்தி துகளாய் மாறும் விந்தை !
பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் போஸான்
பரமாணுக்கு நிறை அளிக்கும்
கடவுள் துகள் !
மூவான் நுண்துகள் மோதலில்
தோன்றும் ஐந்தில் ஒன்று !
அணுவுக்குள் நிலையற்ற
கனத்துகள் பிரபஞ்ச மூலத்தின்
கண்காட்சி நடத்தும் !
பராமணு வயிற்றில்
வெடித்துப் பொரிக்கும்
குஞ்சுகள் !
குளுவான் ! குவார்க்குகள் !
லிப்டான் !
ஃபெர்மி யான் ! ஹிக்ஸ் போஸான் !
பிரபஞ்சத்தின் செங்கற்கள் !
+++++++

“செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் கிடைத்த பில்லியன் கணக்கான புரோட்டான்-புரோட்டான் மோதல் கணித விளைவுகளை [LHC Proton-Proton Collision Data] ஆராய்ந்த செர்ன் விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” புதுத் துகள் இருப்பதை [99.99%] உறுதிப் படுத்தியுள்ளார். அதன் கண்டுபிடிப்பு நேர் போக்குத் துகள் பௌதிக விதிக்கு [Mainstream Particle Physics Priciples] ஏறக்குறைய ஏற்புடையதாய் உள்ளது.”
டேவிட் சார்ல்டன், [CERN LHC ATLAS Team] [மார்ச் 14, 2013]
“2012 ஜூலை மாதத்தில் கிடைத்த முன்னோடி மோதல் விளைவுகள் முக்கியமானவை. காரணம் அவை “ஹிக்ஸ் போஸான்” கடவுள் துகளைத்தான் ஆய்ந்து வருகிறோம் என்றெனக்குத் தெளிவாய்க் காட்டின. ஆயினும் அது எந்த வகையான ஹிக்ஸ் போஸான் என்று தீர்மானமாக அறிய இன்னும் நெடுங்காலம் ஆகும்.”
ஜோ இன்காண்டிலா [Physicist Spokeperson, CERN Compact Muon Solenoid Team (CMS)]
“கண்டுபிடித்த “ஹிக்ஸ் போஸான்” எந்த வகையைச் சேர்ந்த துகளென்று அறிய, துகள் பௌதிகத்தில் ஐயத்துக்கு அப்பால் முழுமையான ஆய்வு செய்யப் பட வேண்டும். ஆயினும், பூஜியச் சுழற்சி [Zero Spin] உறுதியாக்கப் பட்டதால், இந்தக் கண்டுபிடிப்பு புத்துணர்ச்சி உண்டாக்குகிறது ! பூஜியச் சுழற்சி கொண்ட முதல் அடிப்படைத் துகளே ஹிக்ஸ் போஸானாகத்தான் இருக்க வேண்டும்.”
டாக்டர் வைட்பெர்க் [CERN Particle Physics Scientist]

கடவுள் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதி செய்யப் பட்டது
2012 ஜூலையில் பூதச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் விஞ்ஞானிகள் தடம் மட்டும் கண்ட கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இப்போது [2013 மார்ச் 14] விஞ்ஞானிகளால் ஏறக்குறைய [99.99%] உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதுத் துகள்தான் நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தின் மூலச் செங்கல் என்று கருதப்பட்டு அது இருப்பதாய் 1964 இல் பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் அனுமானிக்கப்பட்டது. காணப்படாத இந்த கடவுள் துகளைக் கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் 10 பில்லியன் டாலர் செலவில் 27 கி.மீ. நீளமான [16 மைல்] செர்ன் விரவாக்கியைக் கட்டியமைக்க வேண்டியதாயிற்று ! இந்த விஞ்ஞானத் தேடல் கடந்த 25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்விதம் அசுர சாதனை செய்து விஞ்ஞானிகள் தாம் தேடிய கடவுள் துகளை உருவாக்கிப் படமெடுத்து உறுதிப்படுத்தியது பெரிய நிதிச் செலவையும் நேரச் செலவையும் நேர்மைச் செல்வாக்குகிறது ! இப்போது செர்ன் நிறுத்தம் செய்யப் பட்டு இரண்டு வருடம் பராமறிப்புப் பணிகள் நடக்கும். அதற்குப் பிறகு செர்ன் விரைவாக்கி இருமடங்கு மிகையான ஆற்றலில் [14 TeV] 2015 இல் மீண்டும் இயங்கி ஐந்து வகை ஹிக்ஸ் போஸான்களை ஆக்கி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யும்.
ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் ! மிகக் கனமானது ! சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது ! காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள், போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது. அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெருவெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது. “பூஜிய சுழற்சி” [Zero Spinன்] நிரூபணமான இந்த ஹிக்ஸ் போஸான் இல்லாமல் போனால் “துகள் பௌதிகத்தின் மாதிரி நிலைப்பாடு” [Standard Model of Particle Physics] பிரபஞ்சத்தில் நிகழும் இயக்கங்களுக்கு விளக்கம் தர முடியாமல் போகும். அது இல்லாமல் ஈர்ப்பியல் விசையை விளக்கும் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதிக்கு உடன்பாடு ஏற்படாது.
1969 இல் சந்திரனுக்குக் குறிப் பயணம் செய்த மகத்தான மனித முயற்சி போல் ஹிக்ஸ் போஸான் துகளைத் தேடிச் சென்றதும் உலக மாந்தர் கவனத்தைக் கவர்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்பொல்லோ விண்வெளிக் குறிப் பணிகள் பொதுமக்களை விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்புகளில் ஈர்த்தன. அடுத்த பிறவி விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி ஆர்வத்தைத் தூண்ட இந்தக் கடவுள் துகள் கண்டுபிடிப்பு நீடித்துச் செல்லும்.
பேராசிரியர் பீட்டர் நைட் (Professor Peter Knight, President of Institute of Physics, UK. )
ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு உயிரியல் விஞ்ஞானத்தில் “டி யென் ஏ” (DNA) மூலவி கண்டுபிடிப்புக்கு ஒப்பாகும். இது டியென்ஏ கண்டுபிடிப்பின் ஒரு பௌதிக வடிவம். நமது பிரபஞ்ச அமைப்புப் பின்னல் நாரைப் (Fabric of the Universe) புரிந்து கொள்ளும் முயற்சியின் போக்கில் புது தீரச் செயலுக்கு ஒரு பாதை உண்டாக்கும்.
பேராசிரியர் பீட்டர் நைட்.
கடவுள் துகள் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை. 15 ஆண்டுகள் அகில நாடுகளின் கூட்டுறவில் மாபெரும் பரமாணு உடைப்பியைக் (Large Hadron Collider) கட்டி அமைத்ததின் பயனைப் பெற முடிந்தது. இந்த அறிவிப்பானது “துகள் பௌதிகத்தின்” நிலைத்துவ மாடல் (Standard Model of Particle Physics.) ஏற்பு உடையது என்பதை உறுதிப் படுத்தி உள்ளது.
பேராசிரியர் பீட்டர் நைட்.
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)
“பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)
“இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !”
மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)
“மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளி லிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,”
ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)
“இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collision Data) அநேகப் பட்டப் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”
ராபர்ட் ரோஸர் (Fermilab Co-Spokeperson, CDF & DZero Analysis Groups)
“ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன. டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்து கிறோம். உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை. அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”
டெனிஸ் கோவர், (Dept of Energy Associate Director of Science for High Energy Physics)
“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”
ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist) (March 30, 2010)
“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !”
ஃபிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)
“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி விசையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.
டெஸ்பியோனா ஹாட்ஷிஃபோடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)
செர்ன் விரைவாக்கி யந்திரம் உண்டாக்கிய புரட்சிகரமான மூலத்துகள் ஹிக்ஸ் போஸான்
சுமார் பதினாங்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கணிக்கும் பிரபஞ்சப் பெருவெடித் தோற்றத்தில் முதன்முதல் உதித்ததாக யூகிக்கபட்ட “ஹிக்ஸ் போஸானைப்” போன்ற ஒரு துகளைச் செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் புரோட்டான்களை மோத விட்டுக் கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டிஷ் துகள் பௌதிக விஞ்ஞானிகள் 2012 ஜூலை 5 ஆம் தேதி அறிவிப்பு செய்து ஒரு பரபரப்பை உண்டுபண்ணினார். அந்தத் துகளின் பெயர் : ஹிக்ஸ் போஸான் (Higgs Boson). அந்த அற்புதத் துகளை வடிவாக்கிய விரைவாக்கி யந்திரம் செர்ன் அல்லது “பரமாணு பெரு உடைப்பு யந்திரம்” (CERN or Large Hadron Collider) என்பது. கண்டுபிடித்த புதிய துகள், ஹிக்ஸ் போஸானின் பண்பாடுகள் கொண்டதற்கு மெய்யான சான்றுகள் கிடைத்துள்ளதாயினும் இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப நிலை செர்ன் ஆய்வு விளைவுகளை வைத்தே இப்போது அறிவிப்பு செய்யப் பட்டிருக்கிறது. கடவுள் துகளின் உறுதிப்பாடு பூரணமாக இன்னும் ஏராளமான விளைவுப் பதிவுகள் ஆராயப்பட நீண்ட காலம் ஆகலாம். புதுத் துகள் எந்த விதமான வடிவம் எடுத்தாலும் சரி, இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு அணுப் பிண்டத்தின் அடிப்படை அமைப்பு (Fundamental Structure of Matter) பற்றிய நமது பழைய அறிவு பேரளவில் உயர்ந்து முன்னேறப் போகிறது.
2012 ஜூலை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த செர்ன் விரைவாக்கி ஆய்வு நிபுணர் நடத்திய “துகள் பௌதிகப் பேரவையில்” (Major Particle Physics Conference) பிரிட்டிஷ் துகள் விஞ்ஞானிகள் இந்த அரிய கண்டுபிடிப்பை முதன்முதல் வெளியிட்டனர். நீண்ட காலம் எதிர்பார்த்த ஹிக்ஸ் போஸான் துகள் உண்டாக்கிய செர்ன் அட்லாஸ், சி யெம் எஸ் சோதனைக் கருவி விளைவுகளை (ATLAS, CMS Experiments) அறிவித்தார். இரண்டு சோதனைக் கருவிகளின் விளவு களும் 125 –126 GeV (Gega Electron Volt Energy) கெகா எலக்டிரான் ஓல்ட் சக்தியுள்ள துகளை உருவாக்கின. இந்த அறிவிப்பு முன்னோடி விளைவுகளை (Preliminary Results) வைத்துச் செய்யப் பட்டது. ஆனால் பூரண உறுதி அளிப்பதற்கு இன்னும் ஆராயப் பட வேண்டிய சோதனை விளைவுகள் ஏராளமாய் உள்ளன. விஞ்ஞானிகள் ஆயினும் ஹிக்ஸ் போஸான் பண்பாடு உள்ள ஓர் புதுத் துகளை நிச்சயம் செர்ன் விரைவாக்கி உண்டாக்கிய விட்டதாக உறுதியாக அறிவித்தார்கள். 2012 ஜூலை மாதக் கடைசியில் அனைத்து விளைவுகளும் ஆய்வு செய்யப் பட்டு முடிவான அறிவிப்பு செய்யப்படும் என்பது தெரிகிறது.
ஹிக்ஸ் போஸான் மூலத்துகள் கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் என்ன ?
இரண்டாம் உலகப் போரின் போது 1945 இல் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் சோதனைத் தளத்தில் அணுவைப் பிளந்து தொடரியக்கத்தைக் கட்டுப் படுத்தி அணுசக்தியின் பேராற்றலை முதன்முதல் வெளிப்படுத்திய நிகழ்ச்சி, நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செர்ன் விரைவாக்கியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பிரபஞ்ச தோற்றத்தின் கடவுள் துகளை உருவாக்கிக் கண்டுபிடித்ததற்கு நிகராகும். இப்போது செர்ன் விஞ்ஞானிகளின் குறிக்கோள் என்ன ? கண்டுபிடித்த ஹிக்ஸ் போஸான் துகளின் துல்லிய இயற்கைப் பண்புகளை ஆழ்ந்து அறிவது, அதனால் இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி விளக்கமாக அறிவது போன்ற புதிய விபரங்களே. அவ்விதம் பெற்ற துகளின் பண்பாடுகள் துகள் பௌதிகத்தில் இறுதியாக நிலைத்துவ மாடலில் நிரப்பப் பட வேண்டிய உட்கூறா (Missing Ingredient in the Standard Model of Particle Physics) என்பது தெளிவாக்கப் படும். அல்லது ஹிக்ஸ் போஸான் துகள் புரட்சி உண்டாக்கப் போகும் ஒரு புது அதிசயமா என்பது அறியப் படும்.
துகள் பௌதிகத்தின் நிலைத்துவ மாடல் என்ன சொல்கிறது ? நாம் தோன்றக் காரணமான மூலாதார துகள்கள், பிரபஞ்சத்தில் காணப்படும் அண்ட பிண்டங்கள் உண்டாக உதவிய அடைப்படைத் துகள்கள், அவற்றுடன் பின்னிப் பிணைந்து இயக்கி வரும் அகில விசைகள் (Forces of the Universe) ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் அண்ட பிண்டங்களின் இருப்பு மொத்தத்தில் 4% மட்டுமே. தற்போது கண்டுபிடிக்கப் பட்ட கடவுள் துகள் 96% மர்மாக இருக்கும் பிரபஞ்ச மீதிப் புதிரை விடுவிக்க ஒரு பாலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆணித்தரமான விளக்கம் வெளிவர இன்னும் செர்ன் சோதனை விளைவுகளை ஆராய நீண்ட காலம் ஆகும் என்று அறியப் படுகிறது.
ஹிக்ஸ் போஸானை முன்மொழிந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ்
கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் அதை ஊகித்து விளக்கிய பிரிட்டீஷ் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயரைக் கொண்டது. 1964 இல் அவர் ராபர்ட் பிரௌட், பிரான்காய் எங்லெர்ட், டாம் கிப்பிள், ஹேகன், ஜெரால்டு குரல்னிக் ஆகியோரின் கருத்துக்களுடன் மூன்று வெளியீடுகள் வெளியிட்டார். அந்தக் கோட்பாடு ஹிக்ஸ் தளம், போஸான் சார்ந்த ஹிக்ஸ் யந்தரவியல் (Higgs Mechanism Related to Higgs Field & Boson) என்று அழைக்கப் பட்டது. ஹிக்ஸ் போஸான் ஒரு கனமான துகள் ஆனதால், அது செர்ன் விரைவாக்கியில் உருவானதும் உடனே சிதைந்து வேறு சிறு பரமாணுக்களாய் மாறுகிறது (It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.) ஹிக்ஸ் போஸான் தேடல் செர்ன் விரைவாக்கியில் 2010 ஆண்டின் ஆரம்ப காலத்தில் துவங்கி, அமெரிக்காவின் ஃபெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் விரைவாக்கியில் 2011 ஆம் ஆண்டில் அது மூடுவது வரை ஆய்வு செய்யப் பட்டது.
பரமாணுகளுக்கு நிறை தருவது (Mass) இந்த ஹிக்ஸ் போஸான். ஹிக்ஸ் தளத்தின் ஈடுபாடே (Higgs Field Interaction) அடிப்படைத் துகள்களுக்கு நிறை கொடுக்க ஏதுவாகிறது. ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசையே அதன் மீதுள்ள பொருளுக்கு எடை கொடுப்பது போல் அதைக் கருதலாம். ஈர்ப்பு விசை பூஜியமானால் பொருளுக்கும் எடை இல்லாது போகும். ஹிக்ஸ் துகள் ஒரு போஸான் துகள். அடிப்படைத் துகள் சில இந்திய விஞ்ஞானி சத்தியேந்தர நாத் போஸ் பெயரைத் தாங்கி உள்ளன. அவர் ஐன்ஸ்டைன் காலத்தில் அவருடன் விஞ்ஞானப் பணி செய்தவர். போஸன் துகள் ஒரு தனிப் பண்பு கொண்டது. அது அதைப் போன்று ஒத்திருக்கும் பற்பல துகள்களை ஒரே இடத்தில், ஒரே குவாண்டம் நிலையில் (Quantum State) வைத்திருக்க அனுமதிக்கும். மேலும் நிலைத்துவ மாடல் விதிப்படி ஹிக்ஸ் போஸானுக்கு சுழற்சி இல்லை, நேர், எதிர் மின்னேற்றங்கள் கிடையா. நிற ஏற்றமும் இல்லை. (No Intrinic Spin, No Electrical Charge, No Color Charge).
பூர்வீக மூலத் துகள் தேடலில் நெருங்கிச் சென்ற முதல் விரைவாக்கி யந்திரம்
வெகு விரைவில் உலகப் பெரும் விரைவாக்கி புதிய அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்கத் துவங்கும் நிலைக்கு வந்து விட்டதென்று ஒரு பெரும் செர்ன் விஞ்ஞானி அறிவித்தார். செர்ன் யந்திரத்தின் சமீபத்திய இயக்க முன்னேற்றம் தொடர்ந்தால், விஞ்ஞானிகள் இவ்வாண்டு வேனிற் கால முடிவுக்குள் துகள் பௌதிகத்தில் (Particle Physics) புதியதோர் திருப்பத்தை உண்டாக்குவார் என்று தெரிந்தது. அவற்றுள் முதலில் கண்டுபிடிக்கப்பட இருப்பவை ஏற்கனவே உள்ளதாக ஊகிக்கபட்ட இரண்டு போஸான் துகள்கள் (Boson Particles). பத்து பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்டு ஆரம்பத்தில் ஹீலியம் கசிந்து பழுதுகள் நீக்கப் பட்டு முதன்முதல் 2009 நவம்பரில் செர்ன் விரைவாக்கி யந்திரம் செம்மையாக இயங்க ஆரம்பித்து பல பில்லியன் மோதல்களை உண்டாக்கி விட்டது. பிரென்ச்-சுவிஸ் எல்லையில் ஜெனிவாவுக்கு அருகில் 27 கி.மீ. விட்டமுள்ள வட்ட அடித்தளத்தில் இயங்கி வருகிறது செர்ன் விரைவாக்கி யந்திரம். அந்த உலகப் பெரும் விரைவாக்கி அணுவின் அடிப்படைத் துகள் “ஹிக்ஸ் போஸான்” என்பதை 1000 GeV (Gega-electron Volt) மின்னாற்றலில் காணலாம் என்று விஞ்ஞானிகளால் ஊகிக்கப் பட்டது.
புரோட்டான் நிறையைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதானது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் ஊகிப்பு அடிப்படைத் துகள். இந்த நிறை அளவீட்டில் முதலில் உதிக்கும் புதிய துகள்கள் ‘பிரதம W போஸான்கள்’ & ‘பிரதம Z போஸான்கள்’ (W Prime Bosons & Z Prime Bosons). இவை இரண்டும் கனமான போஸான்கள்.. மெலிந்த போஸான்கள் எனப்படும் ‘W போஸான்கள்’ & ‘Z போஸான்கள்’ (W Bosons & Z Bosons) நலிந்த இயக்கப்பாடுகளுக்குப் (Weak Interactions OR Weaker Nuclear Force) பொறுப் பானவை. நான்கு அடிப்படை இயக்கப்பாடுகள் : ஈர்ப்பியல் சக்தி, மின்காந்த சக்தி, வலுத்த அணுக்கருச் சக்தி, நலிந்த அணுக்கருச் சக்தி. (Four Fundamental Interactions of Nature: Gravitation, Electromagnetism, Strong Nuclear Force & Weaker Nuclear Force).
1980 இல் W போஸான் & Z போஸான் ஆகிய இரண்டும் 100 GeV (Gega-Electron Volt) சக்தியில் பழைய செர்ன் விரைவாக்கியில் கண்டுபிடிக்கப்பட்டன. நிறை மிகையான துகள்களைப் பதிவு செய்ய அதிக சக்தி வாய்ந்த தற்போதுள்ள விரைவாக்கி யந்திரம் செர்ன் போல அமைக்க வேண்டியதாயிற்று. ஒரு சில மாதங்களில் செர்னில் 1000 GeV மின்னாற்றல் உண்டாக்க முடியும் என்று ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகத்தின் துகள் பௌதிகவாதி டாக்டர் டோனி வைட்பர்க் கூறுகிறார். செர்ன் விரைவாக்கியில் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3.5 TeV (Tetra- Electron Volt) மின்னாற்றலில் கணை மோதல்கள் நடத்தப் படும். செர்ன் பொறியியல் நிபுணர் படிப்படியாக மின்னாற்றலை மிகையாக்கி வருவார். 18 முதல் 24 மாதங்கள் நீடிக்கப் போகும் பில்லியன் கணக்கான செர்ன் விரைவாக்க மோதல் களின் விளைவுகளை ஆராய்வதற்குச் சில ஆண்டுகள் கூட ஆகலாம் ! கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோதல்களின் எண்ணிக்கை (10^27) (10 to the power 27). இப்போது எண்ணிக்கை (10^29). இந்த வாரத் திட்டம் (ஜூன்–ஜூலை) மோதல்கள் எண்ணிக்கை : (10^30). செர்ன் விஞ்ஞானி களின் குறிக்கோள் திட்ட எண்ணிக்கை : (10^34) மோதல்கள். இதுவரைப் புரோட்டான் வேகத்தை ஒளி வேகத்துக்கு ஒட்டி (99.99% ஒளிவேகம்) சக்தி ஆற்றலை 7 TeV அளவு உயர்த்தி உள்ளார். முடிவான குறிக்கோள் திட்ட ஆற்றல் : 14 TeV. செர்ன் விரைவாக்கியின் முழுத் தகுதிச் சக்தியில் விநாடிக்கு 600 மில்லியன் மோதல்கள் நிகழும். அப்போது டிரில்லியன் கணக்கில் புரோட்டான்கள் விரைவாக்கி வட்டக் குழலில் விநாடிக்கு 11245 தடவை சுற்றிவரும் !
விரைவாக்கியில் பெரு வெடிப்பு இயக்கம் நுண்துகள் உளவும் கருவிகள்
ஆறு முக்கிய கருவிகளின் பெயர்கள் இவை: (CMS, Atlas, Alice, LHCb, Totem & LHCf) அவை புரியும் பணிகள் என்ன ?
1. அட்லாஸ் உளவி (ATLAS Detector – A Toroidal LHC Apparatus) : 150 அடி (46 மீடர்) நீளமுள்ள இந்தக் கருவி எல்லாவற்றிலும் பெரியது. இரண்டு கருவிகள் உள்ளன. அவை பிண்ட ஆரம்பத்தைக் காணும். புதிய பௌதிகம், பிறப் பரிமாணம் (Extra Dimension) காணும்.
2. CMS Detectors (Compact Muon Solenoid) : இதுதான் ஹிக்கிஸ் போஸான்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கருவி. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடையும் உளவும். இது பன்முக உளவுக்குக் கருவி (Multi-Purpose Detector)
3. ALICE (A Large Ion Collider Experiment) : இது திரவப் பிண்டத்தைக் கண்டுபிடிக்கும்.
(Liquid form of Matter called Quark-Gluon Plasma that existed shortly after the Big Bang)
4. LHCb (Large Hadron Collider Beauty) : பெரு வெடிப்பில் தோன்றிச் சரிபாதி இருக்கும் பிண்டம், எதிர்ப்பிண்டம் (Matter & Anti-Matter) ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது. இழந்து போன எதிர்ப்பிண்டத்துக்கு என்னவாயிற்று என்று உளவு செய்யும்.
5. LHCf (Large Hadron Collider Forward) விண்வெளியில் இயற்கையாக உண்டாகும் மின்னேற்றத் துகள்கள், அகிலக் கதிர்கள் (Charged Particles & Cosmic Rays) போலி இருப்பை ஏற்படுத்தும்.
6. Totem இது புரோட்டான்கள் எவ்விதம் சிதறும் என்று கண்டு அவற்றின் நிறையை அளக்கும்.
செர்ன் விரைவாக்கி என்ன முடிவுகளைக் கண்டுள்ளது ?
செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சத்தின் புதிர்களை விடுவிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டது என்று ஆங்கு பணி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார். நுண்துகளுக்கு நிறை எதனால் ஏற்படுகிறது ? கடவுளின் துகள் எனப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ நுண்துகளுக்கு நிறை அளிப்பது என்று முன்பே யூகிக்க பட்டதுதான். இப்போது செர்ன் விநாடிக்கு 10,000 மோதல்களை உண்டாக்குகிறது என்று பௌதிக விஞ்ஞானி ஆன்ரி கொலூட்வின் (Anderi Golutvin) குறிப்பிடுகிறார். விநாடிக்கு எத்தனை அளவு மோதல்கள் மிகையாகுமோ அத்தனை அளவு நெருக்கத்தில் “உச்ச சீரமைப்பு”, “பிண்டம்”, “ஹிக்ஸ் போஸான்” (Supersymmetry, Dark Matter, Higgs Boson) ஆகியவற்றை அடைகிறோம் என்று பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார். “செர்ன் விரைவாக்கியின் கருவி (LHCb) எதிர்ப் பிண்டத்தின் (Anti-Matter) இயற்கைப் பண்பாட்டை நுட்பமாய் நோக்கும். அதே கருவி சமீபத்தில் முதன்முதலாக “நளினி” “விபரீத அழகி” என்னும் இரண்டு பரமாணுக் களைக் (Sub-atomic Particles, Called : Charm & Strange Beauty) கண்டு பிடித்துள்ளது. “விபரீத அழகி” நுண்துகளை முதன்முதல் கண்டுபிடித்த எனது குழுவினர் பேருவகை அடைந்தனர்.
இயல் பிண்டத்தைப் (Normal Matter) போலின்றி மாறாக இயங்கும் எதிர்ப் பிண்டத்தை (Anti-Matter) அறிய நாங்கள் இந்த நுண்துகளை பயன்படுத்துவோம். ‘விபரீத அழகி’ நுண்துகளைப் பற்றி வேறு யாரும் அறியார். அதுவே செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது.” என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆய்வாளர், டாக்டர் தாரா ஸியர்ஸ் கூறினார். செர்ன் விரைவாக்கியின் சக்தியும், இயக்கமும் தயாராகி “ஹிக்ஸ் போஸான்” நுண்துகளைக் கண்டுபிடிக்க 2011 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர் வைட்பர்க் கூறுகிறார்.
அணுகருவுக்குள் இருக்கும் புரோட்டான் மிகவும் சிக்கலான துகள். அதனுள் குவார்க்குகள், குளுவான் உள்ளன. இந்த வார முடிவில் விஞ்ஞானிகள் முதன்முதல் எதிர் எதிர் வரும் முத்திரட்சி உள்ள இரு புரோட்டான் கற்றைகளை (Two Beams Consisting Three Bunches of Protons) செர்ன் விரைவாக்கியில் மோத விட்டார். முதல் முறையாக செர்ன் படைப்புத் திறனில் இயங்கி இயல் அடர்த்தியில் (Normal Intensity) இம்மூன்று திரட்சிகளும் இருந்தன. ஆதாவது ஒவ்வொரு திரட்சியிலும் 100 பில்லியன் புரோட்டான்கள் உச்ச அளவில் ஏவப்பட்டன.
இப்போது பாதி அளவுத் தீவிரத் திறனில்தான் (7 TeV) செர்ன் இயங்கியுள்ளது. ஒவ்வொரு கற்றையும் முழுத் திறமையில் (14 TeV) இயங்க 2014 ஆண்டில்தான் முடிவான சோதனையாக இருக்கும். முடிவான குறிக்கோள் திட்டம் 2808 திரட்சிகளை ஒரு கற்றைக்குள் உண்டாக்குவது. அது 2016 ஆண்டில்தான் நிகழும் என்று நம்பப் படுகிறது. புரோட்டான்கள் ஓடிச் சென்று மோதிக் கொள்ளும் வட்ட வளைக் குழலில் நான்கு பெரிய சோதனை நிகழ்த்திப் பிரபஞ்ச மர்மத்தின் புதிய பௌதிகப் படிக்க நான்கு கருவிகள் [Compact Muon Solenoid (CMS), (Atlas, Alice, LHCb] அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் விளைவுகளை ஆராயும் தலைமைத் திட்ட விஞ்ஞானி : டாக்டர் கொலூட்வின். கற்றையில் திரட்சிகள் கூடும் போது விஞ்ஞானிகள் ஒரு சிறு கருந்துளை (Mini Black Hole) தோன்று வதை எதிர்பார்க்க லாம் ! “செர்ன் விரைவாக்கியில் கருந்துளைகளை நாங்கள் படைக்க முடிந்தால் அது பேருவகை அளிக்கும் எங்களுக்கு”, என்று பௌதிகப் பேராசிரியர் ஜான் எல்லிஸ் கூறுகிறார்.
இத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி
2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார். அதாவது சிகாகோவில் இருக்கும் ·பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன்முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம். இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர். அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி ஃபெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.
பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது. அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.
ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார். ஃபெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்முதலில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் !
ஆனால் ஃபெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை. எளிய நிறை ஹிக்ஸ் போஸானை ஃபெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை. ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார். அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.
ஃபெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்
1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது. 1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் ! அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார். 2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார். 2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார். 2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.
அமெரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த ஃபெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன. இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன. துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும். (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்). இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன. அப்போது இத்தாலிய விஞ்ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது !
வியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி ! அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை. ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் ! 2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது. மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.
ஃபெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு
இத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய தகவலை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம். அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே. உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது. கடந்த 27 ஆண்டு களாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது. ஃபெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது. எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, ஃபெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கியது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் தகவலுக்கு உறுதி அளிக்கிறது. ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாடலாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டதால், நிலவர மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிகள் மீளாய்வு செய்யப் படவேண்டும். 2012 ஜுலை 6 ஆம் தேதி செர்ன் விரைவாக்கி துகள் விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு கனத்துகளைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். இது ஆரம்ப நிலை விளைவின் முடிவு மட்டுமே. இன்னும் ஏராளமான செர்ன் விரைவாக்கியின் சோதனை விளைவுகள் ஆராயப் பட வேண்டும். கண்டுபிடித்த துவக்க நிலை கடவுள் துகளின் தடத்தை வைத்து, அது ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்று துகள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்.
(தொடரும்)
++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: Fermilab, Chicago, USA, CERN, Geneva Websites.,
1 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
3 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
4. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
5 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
6 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
7 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
8 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
9 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
10 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)
11. http://jayabarathan.wordpress.com/2008/09/18/cern-atom-smasher/ (CERN Article-1)
12 http://jayabarathan.wordpress.com/2008/09/26/cern-atom-smasher-2/ (CERN Article-2)
13 http://jayabarathan.wordpress.com/2009/11/05/cern-worlds-greatest-atom-smasher/ (CERN Article-3)
14 http://jayabarathan.wordpress.com/2010/03/25/cern-atom-smasher-4/ (CERN Article-4)
14(a) http://jayabarathan.wordpress.com/2010/04/02/cern-atom-smasher-5/ (CERN Article-5)
14(b) http://jayabarathan.wordpress.com/2010/04/09/cern-atom-smasher-6/ (CERN Article-6)
14(c) http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (What is Happening in CERN ?)
15 BBC News LHC High Energy Results Published By Jason Palmer (Feb 9, 2010)
16 BBC News : LHC Smashes Energy Record Again (March 19, 2010)
17 BBC News : God Particle Hunt Set to Start By Paul Rincon (March 23, 2010)
18 http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider (CERN Atom Smasher) (25 March 2010)
19 BBC News : The Science of LHC By Paul Ricncon (Nov 20, 2009)
20 BBC News : Collider Sees High-Energy Success (March 30, 2010)
21 Large Hydron Atom Smasher Reaches Near Speed of Light (Daily Galaxy) March 31, 2010
22 Deep Thought – The Large Hadron Collider Could Prove the Existence of a Parallel Universe (Daily Galaxy 2009 Top Story) Jan 6, 2010
23 Atom Smasher Will Keep Revealing “The Beginning” (CTV News, Canada) March 30, 2010
24. Why the Large Hadron Collider (LHC) ? A Few Unanswered Questions
25. What Will the Large Hadron Collider (LHC) Reveal ? By : Steve Giddings Los Angeles Times(January 7, 2010)
26. Will the LHC Solve the Mystery of the Great Attractor ? By Casey Kazan, Daily Galaxy (Jan 11, 2010)
27 ABC News – Atom Smasher Closer to Big Bang By : Rachael Brown (March 31, 2010)
28 BBC News : LHC Particle Search Nearing By : Paul Rincon (May 17, 2010)
29 Space Daily – World’s Biggest Atom Smasher Gains Pace : CERN By : Staff Writers (June 28, 2010)
30 BBC News : LHC Smashes Beam Collision Record By Katia Moskvitch (June 28, 2010)
31 Telegraph, New Scientist – The Tevatron Accelerator – Competition with Large Hadron Collider Heats Up By Clay Dillow (July 12, 2010)
32 Fermilab Web / Space Daily Fermilab Experiments Narrow Allowed Mass Range for Higgs Boson (July 26, 2010)
32 (a) http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=41003121&format=html (Satyendranath Bose)
33. Wikipedia The Tevatron Collider, Fermilab (August 3, 2010)
34 New Scientist Magazine ” Who Will Find the God Particle First ?” (Will an old Faithful Find the Higgs ?) By : Rachel Coutland (July 24, 2010)
35. http://jayabarathan.wordpress.com/2010/07/03/cern-atom-smasher-7/ (July 3, 2010)
36. http://jayabarathan.wordpress.com/2010/08/07/god-particle-rumour/ (August 7, 2010)
37 Daily Galaxy : News of the Century ? CERN to Announce its Findings on Higgs Boson Tomorrow (July 3, 2012)
38. Time & Space : CERN Experiments Observe Particle Consistent with Long-Sought Higgs Boson (July 5, 2012)
39. Time & Space : A New particle has been Discovered- Chances are, it is the Higgs Boson(July 5, 2012)
40. Time & Space : Higgs Boson Hunters Declare Victory – as Significant as DNA Discovery (July 5, 2012)
41. http://www.bbc.co.uk/news/science-environment-21421460 LHC switches off for two-year Maitenance [February 14, 2013]
42. http://www.bbc.co.uk/news/science-environment-21785205 LHC cements Higgs boson identification [Masrch 14, 2013]
43. CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]
44 Daily Galaxy : LHC Data confirms Higgs Boson [March 14, 2013]
45. http://en.wikipedia.org/wiki/Higgs_boson [March 2013]
46. Daily Tech CERN: LHC Data Confirms Particle is “God Particle”, But the Devil is in the Details [March 14, 2013]
47. http://rt.com/news/higgs-boson-found-confirmed-274/ [March 15, 2013]
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (March 17, 2013)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.
தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.
கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..
இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.
இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.
மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.
அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.
250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.
தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல். வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.
நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.
இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.
30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.
வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள், 18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.
மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.
அலாரிப்பில் கணேச கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.
அடியார் மேல் பரிவு கொண்டார். காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!
அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.
இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.
கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.
செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.
அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.
நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.
சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.
திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.
பிருந்தாவன சாசங்க இராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.
கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?
அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.
மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?
என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர். தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.
கார்கில் ஜெய்
“பான் ஸ்டார் வால் நட்சத்திரம் (பவர் ஸ்டார் அல்ல : http://www.space.com/20147-comet-pan-starrs-sunset-viewing.html), அந்தி நேரத்தில் அடிவானத்தில் தென்மேற்கு திசையில் தோன்றும்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. அதைப் போட்டோ எடுத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கேமரா, ட்ரைபாட், டார்ச் லைட்(இது வால் நட்சத்திரத்தை தேட அல்ல இருட்டில் நெப்பு தெரிய), எடுத்து வைத்துகொண்டு ஆயத்தமானேன். ஐந்தரை சுமாருக்கு அந்தி சாயும் என்பதால், நாலரைக்கே கிளம்பினேன். காரை கிளப்பும்போது வீட்டு சொந்தக்காரரின் நாய் ஒடி வந்து காரில் ஏறியது. சரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறதே என்று அதையும் வால் நட்சத்திரம் பார்க்க ஏற்றிக் கொள்ளுகையில் எனக்குத் தெரியாது நானே திரும்பி வரும்போது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வரவேண்டி இருக்கும் என்பது.
பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற்குப்பக்கம் தாழ்வான கடற்கரைக்குப் போனால் நன்றாகத் தெரியும் என்று சொன்னதால் டேரியன் டவுன்ஷிப் – இல் உள்ள ‘நியர் வாட்டர்’ அவின்யூவிற்கு காரை ஓட்டினேன். அது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடம், தூய்மையான கடற்கரையும், படகுத்துறையும், ஒவ்வொரு பணக்காரருக்கும் சொந்தமான மொத்தம் 80 படகுகளும் மிக அழகாக இருக்கும். படகுத் துரையின் முனையில் சென்றால், வால் நட்சத்திரம் பார்க்க நல்ல வாகான இடம் கிடைக்கக் கூடும்.
கடற்கரை ஓரத்திலேயே காரைப் பார்க் செய்வதில் எந்தவித அசௌகரியமும் இருக்கவில்லை. தோளில் கேமிரா, ட்ரைபாட் சகிதம் நாயைக் கூட்டிக்கொண்டு காலாற நடந்தேன். நாய் சந்தோஷமாக துள்ளிக்கொண்டு ஓடியது. நீந்திகொண்டிருந்த சில வாத்துக்களை துரத்தியும், கிளிஞ்சல் பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை, குறைத்து பயமுறுத்தியும் குதித்துக்கொண்டு திரிந்தது. மரியாதை நிமித்தமாக நான் குழந்தைகளுக்கு வருத்தம் தெரிவித்து சில அழகான கிளிஞ்சல்களைப் பரிசளித்தேன். திடீரென பைரவருக்கு கும்ப மேளா நியாபகம் வந்தோ என்னவோ தெரியவில்லை, ஆவேசம் வந்தவராய் தண்ணீரில் இறங்கி ஸ்நானம் பண்ணினார்,
இந்த பைரவருக்குப் பிடித்த விளையாட்டு ஏதாவது உடைந்த, ஓரடி நீளமுள்ள மரக்கிளையை கொண்டுவந்து கொடுப்பது. அதை வீசி எறிந்தால் மீண்டும் ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுப்பது. இவ்வாறாக விளையாட்டிலும் வேடிக்கையிலும் ஒரு மணி நேரம் போன பின்பும் சூரியன் அஸ்தமிப்பதாகத் தெரியவில்லை. அப்போதுதான் புரிந்தது, மார்ச் இரண்டாம் ஞாயிறு ஆதலால் நேரத்தை ஒரு மணி நேரம் முன்பாகவே மாற்றி வைத்துவிட்டார்கள் என்று. சரி என்று பொழுதைக் கழிக்க படகுத் துறைக்கு எதிர்ப்பக்கம் இருந்த பாலத்தை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன்.
பாலத்தை போட்டோ எடுத்தபின் பாலத்தின் அடியிலும் சென்று போட்டோ எடுத்தேன். பாலத்தை தங்கியிருந்த பலகைகள் குறுக்கு நெடுக்காக அழகாக இருந்தன. பாசிகளும் குட்டி சங்கு போன்ற சிப்பிகளும் அடியில் ஒட்டிகொண்டிருந்தன :
இருந்தாலும் சூரியன் அஸ்தமிப்பதாய் தெரியவில்லை, ஆதலால் ரெண்டு தெருக்களில் சுற்றி நடந்து திரும்பி அதே பாலத்துக்கு வந்து சேர்ந்தேன். இப்போது சூரியன் பொற்கிரணங்களை அணிந்துகொண்டு அஸ்தமிக்க ஆரம்பித்திருந்தான். அப்போது சில சீகல் பறவைகள் இறை தேடித் பறப்பதும் மேலே போய் கீழிறங்குவதுமாக இருந்தன:
கேமிராவை பேன்னிங் மோடில் வைத்து தொலை தூரத்தில் இருந்த சீகலைப் படம் பிடித்தேன் . படத்தை உற்றுக் கவனித்ததில் அவை மூடியிருக்கும் சிப்பிக்களை பொறுக்கிக் கொண்டு பறப்பது அரைகுறையாகத் தெரிந்தது. அந்த சிப்பிகளை உயரத்தில் பறந்து பின்பு பாறைகளின் மேல் எறிகின்றன இந்த சீகல் பறவைகள். இதனால் சிப்பி உடைந்த பின் உள்ளிருக்கும் பூச்சியை எளிதாக உண்கின்றன, என்பது தொலைதூர போட்டோக்களை ஸூம் செய்து பார்த்தபோது தெரிந்தது.
இதை அதிசயமாக வேடிக்கை பார்த்துகொண்டிருக்கையில் கடகடவென சூரியன் மறைந்து கீழ்வானம் சிவந்தது. தூரத்தில் எதிர்க்கரையில் சில வாத்துக்கள் கத்தியபடியே வந்திறங்கின
சற்றும் தாமதிக்காமல் பாலத்தை நோக்கி நடந்தேன். தாமிர நிறமாக நீரெல்லாம் தகதககக்க அற்புதமாக இருந்தது அந்தப் பாலம் :
பாலத்தின் முனையில் சென்றால் எல்லையில்லா கடல் பரப்பின் எதோ ஒரு மூலையில் வால் நட்சத்திரம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை, பனி மூட்டமும், மேகமும் இருந்ததால், குறைய ஆரம்பித்திருந்தது. பாலத்தின் மேல் ஏறி முனையில் சென்று நின்று கொண்டேன்:
பாலத்தின் மேல் பகுதிக்கு வராமல் நாய் ஏனோ அடம்பிடித்தது. பிரயோஜனமில்லை என்று அதற்குத் தெரிந்தது போலும். சூரியன் மறைய கடும் குளிர்காற்றும் வீசத் தொடங்கியது, வாழ் நட்சத்திரம்தான் தெரியவில்லை . பற்கள் கிட்டித்துக்கொள்ள கைகளும் உறைந்து போக, தென்மேற்குத் திசையை வெறித்துப் பார்த்துக் காத்திருந்தேன். மேகமூட்டம் இருந்ததனாலோ என்னவோ, பேன் ஸ்டார் வால் நட்சத்ரம் கண்ணுக்குத் தென்படவேயில்லை. தயக்கத்துடன் திரும்பி நடக்கையில், பசி வயிற்றைக் கவ்வ, வானத்தை இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. வெயிலிலும் அந்தியிலும் போட்டோ எடுத்த அதே பாலத்தை இரவிலும் போட்டோ எடுத்துவிடலாம் என்றெண்ணி மறுபடியும் டிரைபாடை பொருத்தினேன். 15 நொடி ஸ்லோ ஷட்டர் ஸ்பீட் வைத்து இரவு போட்டோக்களை எடுத்தேன். முழு இருட்டில் எடுத்த கடைசி போட்டோ, நீல நிறத்தில் வானவில்லைப் பார்க்காத மனதுக்குத் திருப்தி அளித்தது.
திரும்பி வருகையில், எதோ ஒன்றுக்காக காத்திருப்பதுதான் வாழ்க்கையோ என்று தோன்றியது.
திவாகர்
சில ஆண்டுகளுக்கு முன்பு அலிகாரில் இருந்த பத்திரிகை நண்பர் மூலம் ஒரு தொலைபேசி. ஒரு தெலுங்கு சிறுவன் ஒருவன் உத்திரப்பிரதேசத்தில் அடிமை முறையில் வேலை செய்வதாகவும் அங்கிருந்து தப்பித்து போலீஸில் சிக்கியதாகவும், அவனிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை, சரியாக பேசமுடியவில்லை, திகிலும், பயமும் அதிகமாக உளறிக்கொண்டே இருக்கிறான்.. தெலுங்கு பாஷையாகத்தான் இருக்கவேண்டும், பக்கத்தில் அனகாபள்ளி என்று ஏதாவது ஊர் இருக்கிறதா என்று விசாரியுங்கள், அங்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கவும் என்று கோரிக்கை வந்தது. இந்தப் பையனுக்கு ஆறு வயது இருக்கும். அனகாபள்ளியில் ஒரு டீக்கடை வைத்திருப்பவரின் மகன். வீட்டில் யாரோ அடிக்க, ஸ்டேஷன் வந்து ரயில் ஏறி சென்னை வந்து பிறகு அங்கிருந்து இன்னொரு டிரெயின், வடக்கே. அங்கே யார் மூலமோ அடிமை வேலை. இத்தனைக்கும் பையன் போனது குறித்து அவன் குடும்பத்தார் கூட கவலைப்படவில்லையாம்.
என் அலிகார் நண்பர் விகடன் செய்தியாளர் என்பதால் சென்னையில் சேவாலயா முரளி மூலம் சென்னை போலீஸைத் தொடர்பு கொண்டு அந்த உத்தரப்பிரதேச அடிமைத்தனத்திலிருந்து அந்த சிறுவனை மீட்டு வந்தார். சேவாலயா முரளி இதற்காக பிரத்யேகமாக அந்த ஊருக்கே சென்று ஆவன செய்து அந்தச் சிறுவனை மீட்டு வந்தது ஒரு சிறப்பான பணி. பிறகு அவனுக்குப் படிக்கவும் வகை செய்தார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஈரோட்டுக் கதிர் அவர்களின் பதிவு ஒன்றினைக் கண்டந்தும் இத்தகைய மனிதர்கள் யாரோ ஓரிருவர் இருப்பதால் மட்டுமே மழையை பொய்க்க வேண்டிய நிலையில் இந்த உலகத்தார் வைத்திருந்தாலும், அந்த மழையானது இவர்களுக்காக பெய்கிறதோ என்று தோன்றியதுதான். இனி கதிர் அவர்களின் பதிவு
எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்குசலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்குசாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவுவழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையைஎன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்.

அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டிஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனது ”பதிவு” நிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு.வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

நல்ல விஷயங்கள் சரியான சமயத்தில் கொண்டு வரப்படுவதால் இவைகளைப் பார்த்து மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க வேண்டிய சந்தர்ப்பத்தைத் தருகின்றோம். சேவாலயா முரளி போல, மதுரை அட்சயா கிருஷ்ணன் போல, இதோ ஈரோடு வெங்கட்ராமனைப் போல சமூகப் பணியாற்றும் மனிதர்கள் மேலும் மேலும் அதிகமாகவேண்டும் என்ற ஆவல் கதிருக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதோடு தக்கதொரு சமயத்தில் வெளிக்கொணர்ந்த திரு கதிரை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியும் கூடுகிறது. வல்லமையாளர் திரு கதிருக்கு நம் வாழ்த்துகள்
கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் பாடல் தேன்.
நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
நங்கைஎன்பேர் மறந்தே னடி!
கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
கன்னியென்னைக் காண்பா னோடி!
உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
உறக்கத்தைத் தொலைத்திட் டேனே
கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
கண்கட்டு வித்தை என்பதோ?
-செல்வன்
பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்டி சமூகங்களில் ரூட்கனால் சர்ஜரி தேவைப்படுவது இல்லை. தினமும் மூன்று வேளை பல் துலக்கி, ஃப்ளாஸ் செய்து சுத்தமாக பல்லை வைத்து இருக்கும் நகர்ப்புற சமூகங்களில் தான் டென்டிஸ்டுகள் தேவைப்படுகின்றனர்.
1913ல் ஆப்பிரிக்காவில் மருத்துவ சேவைப்பணி ஆற்ற சென்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் அங்கே மேற்கு ஆபிரிக்காவில் வசித்த பழங்குடி மக்களை சந்தித்தார். 41 வருடங்கள் அங்கே மருத்துவராக பணி ஆற்றினார். 41 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு மலேரியா, வயிற்றுகடுப்பு மாதிரி வியாதிகளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார். ஆனால் 41ஆண்டுகளில் அவர் சந்தித்த அப்பென்டிக்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்று. கான்சர் வந்த பழங்குடி மக்களையும் அவர் சந்திக்கவில்லை. தொப்பை, தொந்தி, சர்க்கரை, கொலஸ்டிரால் இவை எதுவும் அந்த மக்களுக்கு இருக்கவில்லை.
ஆனால் 41 ஆண்டுகளில் மேலைய நாகரிகமும், மேற்கத்திய உணவுமுறையும் ஆப்பிரிக்கர்களிடையே பரவின. ரொட்டிகள், மாவுகள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவை நாகரிகமாயின. ஸ்வைட்சரின் இறுதி ஆண்டுகளிலில் ஆப்பிரிக்கர்களிடையே கான்சரும், சர்க்கரை, கொலஸ்டிரால் வியாதிகளும் பரவலாயின.
இதுபோல தென்னாப்பிரிக்காவில் 19ம் நூற்ராண்டில் இன ஒதுக்கல் கடுமையாக நிலவியது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. அங்கே டயபடிக் க்ளினிக் நடத்தி வந்த ஜார்ஜ் கேம்பெல் எனும் மருத்துவர் இரு விதமான நோயாளிகளை மட்டும் கண்டார். வெள்ளையர்களுக்கு டயபடீஸ், அப்பென்டிக்ஸ், ரத்த அழுத்தம் முதலிய நாகரிக வியாதிகள் அனைத்தும் இருந்தன. ஸூலுக்களுக்கு அம்மாதிரி வியாதிகள் இல்லை. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவரிடம் வந்த சர்க்கரை நோயாளிகளில் 80% பேர் இந்தியர்கள் (தமிழர்கள்). இதே மருத்துவர் பின்னாளில் பிலடெல்பியா சென்றபோது அங்கே இருந்த கருப்பினத்தவருக்கு வெள்ளையருக்கு சமமாக நாகரிக மனிதனின் வியாதிகள் இருந்ததை கண்டார். ஸூலுக்களுக்கும் அவர்களுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருந்ததை அறிந்தார்.
ஆனால் இன்று உடல் இளைக்கவும், டயபடீஸ், கொலஸ்டிரால் கட்டுபாட்டுக்கும் மக்களுக்கு கொடுக்கபடும் அறிவுரைகள் எது? நாகரிக மனிதனின் உணவுகளை உண்பதுதான். உதா; ரொட்டி, சப்பாத்தி, இட்டிலி முதலியவை. இவற்றில் கொலஸ்டிரால் அல்லது கொழுப்பு சுத்தமாக இல்லை. கொலஸ்டிராலோ, கொழுப்போ இல்லாத உணவை உண்ண சொல்லி மக்களுக்கு பரிந்துரைக்கபடுகிறது. மக்களும் 2% கொழுப்புள்ள பால், ஸ்கிம் மில்க், சோயா பால் முதலியவற்றை உண்கின்றனர். சிகப்பு மாமிசத்தை தவிர்த்து பழங்கள், வெள்ளை மாமிசம் எனப்படும் சிக்கன், சாலட் என உண்கின்றனர். இதனால் வியாதிகள் குறைகிறதா? உணவில் உள்ள கொழுப்புக்கும் உடலில் உள்ள கொலஸ்டிராலுக்கும் எதாவது தொடர்பு உண்டா?
கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.
60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.
இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.
இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி “உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி” என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில் ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.
இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. “இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்” என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.
ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.
கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.
ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)
துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை “இதயத்துக்கு நலமளிப்பவை” என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.
ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.
உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்
229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.
அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் குறைந்த கொழுப்புக்களை உண்ட கரோனரி க்ரூப்பின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.
ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.
இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் “இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை” என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்
அடுத்த வாரம் இதே தலைப்பில் நடந்த வேறு சில ஆராய்ச்சி முடிவுகளை காண்போம்
References:
1) Good calories, bad calories- Gary Taubes
2) http://en.wikipedia.org/wiki/Ancel_Keys#Seven_Countries_Study
3) D M. GERTLER, STANLEY MARION GARN and PAUL DUDLEY WHITE
Diet, Serum Cholesterol and Coronary Artery Disease
Print ISSN: 0009-7322. Online ISSN: 1524-4539
பா.க. சுப்பிரமணியம்
உனக்கும்
எனக்குமான
புரிதலற்ற
புரிதலின் மோதலில்
ஏற்பட்ட
இடைவெளியென்பது
சாதிகளுக்கும்
வர்க்கங்களுக்குமிடையே
எழுப்பப்பட்ட
மதில் சுவர்கள் போல்
என்றும்
இடிக்க முடியாததல்ல
உன்
அன்பை
உதட்டில்
ஊற்றி
உயிரில்
நிரப்பினாய்
என்
இதய வெளியில் (more…)
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
[ 29 ]
“தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்”
வலிமைமிக்க பரதவர் வாழும் பாக்கத்தில்,
களவில் கூடிய மகளிர்
தலைவனைப் பிரிந்ததால் நேர்ந்த துயரால்,
அம்மகளிர்தம்
செம்மையான முன் கையில் இருந்து
வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்து
தூற்றுவதை, தலைவனே!
ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?
பூக்களின் அரும்புகளின் சுமையால்
பாரம் அதிகரித்த
நீண்ட புன்னைமரத்தின் கொம்பதனில்
அன்னமொன்று ஏறியிருக்க,
அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்
சுற்றி இருந்த பூக்களை
நட்சத்திரங்கள் என்றும் எண்ணிய
அந்தியில் மலரும் ஆம்பல் மலர்
பகலிலேயே மலர்ந்தது.
தேன் உண்பதற்காகவென
அவ்வாம்பல் மலரை
வண்டுகள் ஊதி நிற்கும்
புகார் அன்றோ எமது ஊர்?!
(30)
தன்னை உண்டவரைத் தம் போதையாலே
அறிவிழக்கச் செய்து அடிமை செய்யும்
கள் எனும் ஊண் எம் பாக்கத்துள்
அழியாது நிற்கும்.
இங்கு வாழும் மகளிர்க்கு
எம்மருந்தாலும் தீர்த்திட முடியாத
காம நோய் அதனை நீ தருகின்றாய் என்று
தலைவனே!
நாங்கள் எங்ஙனம் அறிவோம்?
சிறுமியர் வண்டல் கொண்டு இழைத்திருந்ததை
கடல் அலைகள் அழித்துச் சென்றிட,
சிறுமியரின் மதிமுகத்தில் இருந்த,
பகைவர்கள் புண்ணில் தோய்த்தெடுத்த
வேல்போன்ற கண்கள் நீரைத்தான் வார்க்கின்றன.
கோபம் கொண்ட சிறுமிகள்
கடலைத் தூர்க்க முயன்று
மணலை வாரி இறைக்கின்ற
புகார் அன்றோ எமது ஊர்?!
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html
படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm