’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும்
கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை
போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்….
Month: June 2016
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
பிரெக்ஸிட்
பவள சங்கரி
பிரெக்ஸிட் – இது pre-exit என்ற முன் திட்டமிட்ட ஒன்றேயொழிய திடீரென ஏற்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த வாக்களிப்பையொட்டி இசுகாட்லாந்து மக்களும் தங்களுடைய விடுதலைக்ககாக வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென வற்புறுத்துகின்றனர். பிரிட்டனில் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிலும் இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் பலமாகவே இருந்துள்ளன. பிரிட்டன் பாராளுமன்ற பிரதமர் கேமரூன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தத் தோல்வியை தமது தோல்வியாக எடுத்துக்கொண்டு பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் எதிர்கட்சியான லேபர் பார்ட்டி தலைவர், ஜெர்மி கார்பைன் லேபர் பார்ட்டியின் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலையும் மீறி பதவி விலக மறுத்து வருகிறார். ஆனால் அவர் கட்சியைச் சார்ந்த முன்னணி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த தலைவர்கள் உடனடியாக விலகும்படி பிரிட்டனை வலியுறுத்தி வருகின்றனர். கேமரூன் அவர்கள் உடனடியாக இதை நடைமுறைப்படுத்த முடியாது. மாற்று வழிமுறைகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த மற்ற நாடுகளுக்கு இந்தப் பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. இந்தியாவின் மத்திய வங்கித் தலைவர் பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்படுவோர்களில் ஒருவரும் இந்திய நிதி அமைச்சக செயலாளரும்மாகிய அரவிந்த சுப்பிரமணியம் அவர்கள் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நேரடி பாதிப்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும் பிரிட்டனும் மட்டுமே இதனால் பாதிக்கப்படும். அரேபிய ஒன்றியமும், இங்கிலாந்தும் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தங்களுடைய நாட்டின் அகதிகளுக்கு மாற்று ஏற்பாடு உடனடியாகச் செய்யவேண்டியதே இன்றைய நிதர்சனம்.
பிரெக்ஸிட் பற்றி ஒரு இளம் பத்திரிக்கையாளரின் கருத்து:
http://www.businesstoday.in/current/world/so-uk-voters-have-no-idea-what-european-union-is-or-why-they-brexited/story/234292.html?&toperStarEhJUS=1
கட்டுரையாளர் திக்ஷா ரமேஷ் முதுபெரும் வரலாற்று ஆய்வாளர் உயர்திரு நரசய்யா அவர்களின் மகன் வழிப்பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.தமிழாக்கம் கீழே..
ஜூன் 24 பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான நாளாக இருந்திருக்கலாம். வாக்காளர்கள், தாங்கள் எதற்காக வாக்களிக்கிறோம் என்பது குறித்த தெளிவு இருந்திருப்பதாகத் தெரியவில்லை.
வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான ஒரு நாளுக்குப் பின்பு பிரிட்டானியர்கள் கூகிளில் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறதா?
வாக்கெடுப்பின் முடிவு வெளியான பின்பு கூகிளில் மிக அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளை கூகிள் முன்னெடுத்தபோது அனைவருக்கும் பேராச்சரியம் தரக்கூடிய விசயமாக பிரிட்டானியர்கள், ” What is the EU referendum’ and ‘what happens if we leave the EU’ – அதாவது ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு என்றால் என்ன’ மற்றும் ‘நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகி வந்தால் என்ன நடக்கும்’ என்பதுதான்.
அதுவும் அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் எனப்பலரும் பிரெக்ஸிட் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகள் குறித்த எண்ணற்ற பிரச்சாரங்கள் செய்த பிறகும் இந்த நிலை.
கூகிள் பகுப்பாய்வுப் பிரிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றியே மிகப்பெரும் அளவிலான பிரிட்டன் மக்கள் கேள்வி எழுப்பியிருப்பதையே காணமுடிந்தது. வாக்கெடுப்பு முடிந்தவுடன் சற்று நேரத்திலேயே இது போன்ற கேள்விகள் எழுப்பும் மக்களின் எண்ணிக்கையை குறித்து பதிவுசெய்ய ஏற்பாடு செய்தது. தற்செயலாக இந்தத் தேடற்சொற்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் இருந்ததைக்காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்துள்ளன.
இது நிபுணர்களால் ஏற்படுத்தப்பட்ட முடிவு அல்ல, மாறாக முற்றிலும் வர்க்கம் மற்றும் சமத்துவமின்மையின் அடிப்படையில் குடிமக்கள் எடுத்த முடிவு என்பது இதனால் தெளிவாகிறது.
பீட்டர்பரோ போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களிடம் சர்வதேச ஊடகங்கள் நேர்காணல் செய்தபோது, ஏராளமான ஐரோப்பிய குடியேறிகளின் வருகையால் குற்றம், போதைப்பொருட்கள், மாசு மற்றும் மது என சிறு நகரங்களும், நகரங்களும் சீரழிந்துவிட்டன என்று சில பிரிட்டானியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், இது போன்று சிறிய மற்றும் பெருநகரங்களில் வசிப்பவர்கள் வெளிப்படையாகத் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் விதமாக குடியேறிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகவே வாக்களித்திருக்கிறார்கள் என்றனர். உண்மையிலேயே வந்தேறிகளை வெளியேற்றுவது மட்டுமே இவர்களின் முழுமையான நோக்கமாக இருந்திருக்கிறது.
தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க பிரெக்ஸிட் வாக்களிக்க இது ஒரு முக்கிய காரணியாக இருந்துவிடக்கூடாது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். குடிமக்களின் குறுகியகால மனநிறைவு, தேசிய தொலைநோக்கு பொருளாதார நிலைப்பாடு மற்றும் உலகப் பொருளாதார நோக்கமும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் ஜூன் 24 இன் நிகழ்வான பிரெக்ஸிட், பேரழிவு நடவடிக்கையாக ஆகியிருந்த காரணத்தை ஊடகச்செய்திகள் வாயிலாக அறிந்த மக்கள் இணைய மனுவின் மூலமாக இரண்டாவது வாக்கெடுப்பை வலியுறுத்தி வருவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதுவரை 30 இலட்சம் கையெழுத்துகளைத் தாண்டிவிட்டது.
இன்னும் கையெழுத்துகள் அதிகரிக்கும்வகையில் லேபர் பார்ட்டி எம்.பி. டேவிட் லேம்மி தமது டிவீட்டர் செய்தியில் : “பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலமாக இந்த பைத்தியக்காரத்தனத்தை மட்டுமல்லாமல் இந்த கனவையும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். நம் இறையாண்மை பாராளுமன்றம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்பதற்காகவே வாக்களிக்கவேண்டும்..” என்றிருக்கிறார்.
“வாக்கெடுப்பு என்பது ஒரு ஆலோசனை என்ற வகையில் கட்டுப்பாடற்ற வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். விலகுதல் குறித்த பிரச்சாரங்கள் ஏற்கனவே முறிந்துவிட்டதோடு மக்கள் சிலர் விலகுவதற்கான வாக்களித்திருக்கக்கூடாதெனவும் கருதுகின்றனர்.
-
இருண்மை
பவள சங்கரி
மலையில் மணம்வீசும் மென்மலர்கள்
மாலையில் கலையிழந்து தலைசாயும்
மறுபடியும் மொட்டாகி மலரும்மணம்
இது மலரின் வாடிக்கைமழையும் புயலும் வெள்ளமும்
மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும்
கனியும் சுவையும் காணாமலடிக்கும்
இது இயற்கையின் வேடிக்கைமலையும் அறமும் அசராமல் நிற்கும்
கலையும் மணமும் கருத்தென கொள்ளும்
மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும்
இது மலையின் நிறம்பூவோ புயலோ மழையோ வெள்ளமோ
காயோ கனியோ கருப்போ வெளுப்போ
மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை
இது மலையின் வரம்பூவும் மணமும் கலையும் மலையும்
இயற்கையின் அம்சங்கள் மாறா நிலைகள்
மனமும் குணமும் மதமும் மாற்றமும்
இயல்பாய் நீளும் இருண்மைகள் -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3
அவ்வை மகள்
சமூகப் பிரக்ஞையும் சுயப் பிரக்ஞையும்
அவதாரப் புருஷர்களிடம் சமூகப் பிரக்ஞை நிறைந்த இறைவழி மார்க்க நோக்கு இருந்தது என்றோம்.
இதை நாம் அறியும் இத்தருணம், சமூகம் என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் முதலில் எழுகின்றது. சமூகம் என்பதை ஒழுங்கமைப்புடைய மக்கள் தொகுதி என்பர். கூட்டுப் பண்பும், ஒருமித்த குணாதிசயங்களும், பொதுப்படையான பழக்கவழக்கங்களும், ஒன்றேயான அடையாளங்களும், ஒத்ததான பரஸ்பர பரிபாஷைகளும் கொண்ட ஒரு குழுமித்த மனிதசார் அமைப்பை சமூகம் என்கிறோம்.
அவதாரப் புருஷர்கள் இப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருக்கிற சாதாரண – ஒரு பெண்ணின் வயிற்றிலே தான் உருவாகிறார்கள். அந்த சமுதாயத்தின் அடையாளங்களோடு அந்த சமூகத்தின் சாயலாகத்தான் பிறப்பெடுக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர், விலாசம் எல்லாம் உண்டு. எங்கு எந்தப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்கள என்பதும் கூட எவருக்கும் தெரியும்.
ஆனால் திடீரென ஒரு நாள் அவர்கள் வேறானவர்கள் வித்தியாசமானவர்கள் என்று புலப்படலாகிறது. இது எப்போது நடக்கிறது எவ்வாறு நடக்கிறது என்பதிலே சில வித்தியாசங்கள் இருந்தாலும், மிகப்பெரும்பாலும் இளம்பிராயத்திலேயே அவதாரப் புருஷர்களின் தீட்சண்யம் சிறு கீற்றாகவேனும் வெளிப்பட்டிருக்கும். அந்த வெளிப்பாடு பெரும்பாலும் அத்தருணத்தில் பிறருக்கு பெரிதாய்ப் படாது, அல்லது விகற்பமாய் படும். ஆனால், பின்னாளில், அவதாரப் புருஷர்கள் தம் பூரண ஆற்றலை வெளிப்படுத்துகிற போதோ அல்லது அதற்குப் பிறகோ அவர்களின் அந்த தீட்சணியமான இளம்பிராய நினைவலைகள் எவருக்கோ தோன்றி அவை நினைவுகூறப்படும் – அது வேறு எவராலோ பதிவு செய்யப்பட்டு வரலாறாகும்.
இதை நான் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இறைபால் நாட்டம் என்பது ஒரு துளியேனும் உடன்பிறப்பாய் உள்ளினுள்ளே இயைந்த ஒரு கூறாக இருக்குமாறு தான் அவதாரப் புருஷர்கள் படைத்தனுப்பப்படுகிறார்கள் என்பதால் தான். அதுமட்டுமல்ல, உண்மையில், அவதாரப் புருஷர்களின் இறைநிலைக் கூறு எனும் கரு எங்கு பிறக்கிறது எவ்வாறு பிறக்கிறது என்று பார்த்தால் அது மிகச் சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான்.
இங்கு ஜான் ஹென்றி நியுமனின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காண்பது நன்று. நியூமன்(1801-1890) இங்கிலாந்தின் மத வரலாற்றில், கத்தோலிக்க மத வளர்ச்சியில் மிகக் குறிப்படத் தக்க அவதாரப் புருஷர். சிறுவயதில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது அண்ணாந்து பார்த்தவாக்கில் ஒரு ஒற்றை மேகத்திட்டும் அதிலிருந்து புறப்பட்டிருந்த கிளைகளும், அவருக்குக் கடவுளின் ஆசிர்வாதமாய்ப் பட்டிருக்கிறது. இன்னொரு சமயம், சிறுவனாய் இருந்தபோது, காலையில், உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் நேரம் எங்கோ வயலில் கதிரறுக்கும் அரிவாளின் நாதம் இறைமொழியாய் அவருக்கு ஒலித்திருக்கிறது. நியூமன் காட்டுவது இறை என்பது மிக எளிமையான விஷயம் என்பதே. இதுபோன்று, இறை என்கிற ஒன்று இருக்கிறது எனும் உணர்வை அவதாரப்புருஷர்கள் உணர்ந்த விதத்தை – எல்லா மதங்களிலும் மகாமனுஷ்யர்களின் வாழ்வில் நாம் கண்ணுற முடிகிறது. இயேசுநாதர், நபிகள் நாயகம், சங்கரர், ரமணர், பட்டினத்தார், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என நாம் பலபேரை இவ்வாறு உதாரணம் காட்டமுடியும். இறைவனை மனிதனாகவும், இயற்கையாகவும், ஒளியாகவும் பார்க்கின்ற எளிய சாமான்யத்தை இவர்கள் உணர்த்திப் போயிருக்கிறார்கள்.
இறை எனும் உணர்வு முதன்முதலில், இவ்வாறு எளிமையாய் அவர்களுக்குப் புலப்பட்டதெனில், பின்னாளில் அவர்கள் தங்களுக்கு உள்ளே செரிந்திருக்கிற இறை அருள் நிலையை வெகு வெளிப்படையாய் பிறருக்கு உணர்த்துவதும் கூட சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான். நீரைப் பெருக்கியும் உணவைப் பெருக்கியும், தீயை அடக்கியும், வெள்ளத்தை அடக்கியும், நோயைத் தணித்தும், சராசரி மனித நிகழ்வுகளில் தன் சமூகத்தில் உள்ள மக்களுக்கு நேரடி நிவாரணம் அளித்திருக்கிற மிக எளிமையான நிகழ்வுகளை எல்லா மதங்களிலும் எல்லா சமயங்களிலும் உள்ள மகாமனுஷ்யர்களிடமும் காண்கிறோம்.
இறை தேடல். இறை பணி, இறை ஒழுக்கம் என எவ்வாறு கூறினாலும், இறைமை, மதம், சமயம் எனப் பிறவாறு கூறினாலும், மக்கட் சேவையே மகேசன் சேவை என்பதை எல்லா அவதாரப் புருஷர்களும் உறுதியாய்க் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சங்கரர் காலம் தொடங்கி, இந்த நேரடி மானுட சேவை எனும் இறையியல் சிந்தனை, காலப்போக்கில் சற்றே முன்னேற்ற மாற்றம் கண்டது எனலாம். மடாலயங்கள் மனித சேவைக்கே என்கிற வகையில் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டன. மதம் என்பதை “உறுத்தும்படியாய்” முன்னிறுத்தாமல் மனிதவளத்தைத் தரத்தில் உயர்த்தும்படியான நோக்கு வளர்ந்தது. இவ்வகையில், “அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்” என்கிற திரு வாசகத்தின் சாட்சியாய் சமரச சன்மார்க்கம் எனும் உருவற்ற ஒளியாம் இறைவனை முந்துறுத்தி பொதுமைப் போக்கில் மதமெனும் மார்க்கத்தை உண்டாக்கிய பெருமை வள்ளலாரைச் சேரும். அவருக்கடுத்து ரமணரும், கூட இந்தப் பொதுமை மதநோக்கை ஆதரித்தார் எனலாம். நம்முடன் வாழ்ந்து போந்திருக்கிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதமும் அறிவியலும் ஒன்றே எனக்கொண்டு மக்கட் சேவையையும் மகேசன் சேவையையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதே போல் இறையியலையும் அறிவியலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்த்தவர். இறை-அறிவியல் எனும் நவீன மார்க்கம் அவருடையது எனலாம்- இதன் ஆரம்பப் புள்ளி வள்ளலாரிடமே என்பதை நம்மால் காணமுடிகிறது. குன்றக்குடி அடிகளார் விவேகானந்தரின் பாணியில் வள்ளலாரைத் தழுவியதாகவும் கூட சிலர் கூறுவார்.
Phenomenology எனப்படும் நிகழ்வியல், மருத்துவம், ஆன்மீகம், உளவியல், ஆகிய மூன்று துறைகளுக்குமே உரித்தான ஒரு முக்கியமான தத்துவப் பிரிவாகும். இப்பிரிவை வரையறை செய்கிறபோது இவ்வாறு சொல்லுவார்கள்: நிகழ்வியல் என்பது பிரக்ஞையின் வடிவத்தை ஒரு அனுபவமாக, பிரக்ஞை கொண்டவரே தன் வாய்வழி முதற் கூற்றாகக் கூறுவது (Phenomenology is the study of structures of consciousness as experienced from the first-person point of view) என்று. நிகழ்வியலில் எட்மண்ட் ஹசர்ல் மிக முக்கியமானவர். இவரை நிகழ்வியலின் தந்தை என்பார்கள். இவர் வாழ்ந்த காலம் 1859-1938. வாழ்வுலகம் (life-world) எனும் சித்தாந்தத்தை உருவாக்கியவர் இவர். “விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” என்கிற நம் செந்தமிழ் வாசகத்தை ஒரு தத்துவமாக்கிப் போயிருக்கிற பெருமை இவரைச் சாரும். ஹசர்ல் என்ன கூறுகிறார் என்றால் – பலபகுதிகளை இணைத்து ஒன்றை உருவாக்கினீர்கள் என்றால் அந்த முழுது (whole) பகுதிகளின் கூட்டல் அல்ல அதைவிட மிகுதியானது என்பதே. வாழ்வுலகம் என்பது நிகழ்வுகளின் அடுக்கு. வாழ்வுலகம் என்பது வாழ்வல்ல உலகமும் அல்ல. இரண்டின் கூட்டலும் அல்ல – என்கிறார் ஹசர்ல். இதை ஏதோ நகைச்சுவைத் துணுக்காகப் பார்க்காமல் – எள்ளி நகையாடாமல் கொஞ்சம் நிதானித்துப் பார்ப்பது நல்லது. ஹசர்ல் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்: “நிகழ்வு என்பது பொருட்களும் அனுபவங்களும் சேர்ந்தது – நிகழ்வைப் பொருளாகப் பார்த்தால் அனுபவம் மறையும் – அனுபவமாகப் பார்த்தால் பொருள் மறையும். “
பொருள்-அனுபவம் என்கிற இரண்டையும் வெறுமனே கூட்டாமல் ஒருமித்துக் காண்போமேயானால் நாம் காணக்கூடியது பொருள் அல்ல – அனுபவும் அல்ல – பரம்பொருள் எனும் இறைமை விழுது. நிகழ்வுகளை, தனிமனிதர்கள் தமது பார்வையிலே எவ்வாறு காண்கிறார்கள் என்பது தான் அவர்களது வாழ்வுலகு. எவர் பொருளைப் பார்க்கிறார், எவர் அனுபவத்தைப் பார்க்கிறார், எவர் இறை விழுதைப் பார்க்கிறார் என்பதிலே தான் தனிமனிதர்களின் தராதரம் அடங்கியிருக்கிறது.
இந்தத் தனி மனிதர்களில், இறைதேடல் கூறுடன் பிறப்பிக்கப்பட்டிருப்பவர்கள், தன்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளை, பொருள்-அனுபவம் என்ற இருகூறுகளாய்ப் பிரித்து பின்னப்படுத்தாமல் இரண்டையும் ஒருமித்து ஒர கோணத்தில், ஒரே அலைவரிசையில், ஒரே க்ஷணத்தில் காண்கிறார்கள். எனவே காணும் யாவிலும் பரம்பொருள் எனும் இறைவிழுதை அவர்கள் காண்கிறார்கள். எனவே அவர்களது வாழ்வுலகு, விஸ்தாரமாய் முளை விடுகிறது. தான் வெறும் ஆசாமியாக இல்லாமல் வேறு ஏதோ கடமை ஆற்றுமாறு ஜனித்திருப்பது புலப்படுகிறது. அந்த விவேகம் புலப்பட்ட அந்நொடி, “நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரத்தில் அவர்கள் இறங்குகிறார்கள். இந்த சுயப் பிரக்ஞை தான் அவர்களைச் சமுதாயம் எனும் தோப்பைச் செழுமைப் படுத்தும் சமூகப் பிரக்ஞைக்கு இட்டுச் செல்கிறது.
இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரம் நம்மை நெகிழவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு.
-
இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]
இன்னம்பூரான்
ஜூன் 28. 2016‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.
நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.
பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.
எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.
அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.
நன்றி.சித்திரத்துக்கு நன்றி:
https://qph.ec.quoracdn.net/main-qimg-ed724c186c0779c37d09bc9b1735f0c0படித்த கட்டுரை:http://www.businesstoday.in/current/world/so-uk-voters-have-no-idea-what-european-union-is-or-why-they-brexited/story/234292.html?&toperStarEhJUS=1
இன்னம்பூரான்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தின்னுமிலை(தின்னும் வெற்றிலை) மாறி, திருப்பாவை கிள்ளையாய் (கிளியாய்)
கண்ணன் குழல்வழி கோதையிடம், -எண்ணமாய்
தூதாகப் போவதை தூரிகையில் தந்தனன்,
சாதுவான ஓவியன்கே சவ்’’….கிரேசி மோகன்….இவ்விடம் ‘’சாது’’ என்பது ‘’சுகர் ஜடபரதர்’’ போன்ற பாகவத ‘’சாதுக்கள்’’…..
ஸாரி கிளியை கோகிலம் என்று தவறாக பயன்படுத்தி விட்டேன்….’’கிள்ளை’’ கிளி…. -
பொது சார்புக் கோட்பாடு
பவள சங்கரி
புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativity என்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள்.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரிடம், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் இப்போது உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் இருப்பது உண்மைதானே?” என்று கேட்டானாம். அதற்கு ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பார். அங்கு நட்சத்திரம் தெரிகிறதா?” என்று கேட்க அவன், “ஆம்” என்று பதிலளித்தான். உடனே ஐன்ஸ்டீன், “அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டதொன்று. நீ இப்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளியிட்ட ஒளி மட்டுமே என்பதை விளக்கமாகக் கூறி அந்த இளைஞனுக்கு புரிய வைத்தபோது அவன் வாயடைத்து நின்றானாம்!.
அப்படியானால், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? மெய் என்று ஏதும் இல்லையா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் நீரும், ஊரும், வனமும், சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் அனைத்தும் மெய்யில்லையா? அனைத்தும் பொய்யா?
நம்ம பாரதி பாடலை இப்ப கேளுங்க!
நிற்பதுவே நடப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.https://youtu.be/LhirpTCGTHY
-
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்மீன்கள் தோற்றமும் இறுதி முடிவும்

(கட்டுரை: 9)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://slideplayer.com/slide/
1374764/ முன்னுரை: பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது சூரிய மண்டலமே பால்மய வீதி காலக்ஸியின் சுருள் ஆரத்தில் மரித்த ஒரு சூப்பர்நோவா வீசி எறிந்த மிச்சத்திலிருந்து தோன்றி யிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கோட்பாடை ஊகிக்கிறார்கள். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது வெளியேற்றிய கூண்டு விண்வெளியில் உலவி வீதி வழியே தூசி துணுக்குகளை வாரிக் கொண்டு, வழி நெடுவே திண்ணிய தீக்கனலுடன், எரியும் வாயுக்களில் நீல நிறத்தில் எக்ஸ்ரே கதிர்களை எழுப்பிக் கொண்டு சென்றது !
வெடிப்பு நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெடியலைகள், குளிர்ந்து போன கருமை முகிலோடு முட்டி முனையில் செந்நிற ஹைடிரஜன் மின்னிட மோதியது ! இந்தப் பின்புலத்திலே மோதலுக்குப் பிறகு வாயுக்கள் குளிர்ந்து திணிவும் (Density) உஷ்ணமும் மாறி பல்வேறு வண்ணப் பட்டைகள் (Muli-colour Bands) தெரிந்தன. குளிர்ந்து திரண்ட ஆரஞ்சு நிறத் திரட்டுடிகள் விண்மீனின் வடிவாயின ! சிதைவுக் குப்பைகள் ஈர்ப்பு ஆற்றலில் மேலும் அழுத்தமாக்கப் பட்டன. காலம் செல்லச் செல்ல ஈர்ப்பு விசையே வலுத்து வாயுக்களையும், தூசி துணுக்குகளையும் சுருக்கித் திரட்டி சுழற்றுத் தட்டுகளாய் ஆக்கின ! பிற்காலத்தில் அத்தட்டுகளே “முன்னோடி விண்மீன்களாகவும்”, முன்னோடிக் கோள்களாகவும் (Protostars & Protoplanets) விண்மீன் ஏற்பாடுகளுக்கு அடிப்படையாயின (Steller System Forerunners).

இந்திய அமெரிக்க வானியல் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995) விண்மீன்களின் தோற்ற பௌதிகத்தையும், கருந்துளைகள் (Black Holes) பற்றிய ஆராய்ச்சிகளையும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் செய்தவர். அவர் விண்மீன்களின் பளுவுக்கும் அவற்றின் சிதைவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு விண்மீனின் பளு சூரியனைப் போல் 1.4 மடங்கானால் அது சிதைவடைந்து மடியும் போது நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ (Neutron Star or Black Hole) மாறிவிடும் என்று கூறினார். அந்த 1.4 விகித எண்ணிக்கையே “சந்திரசேகர் வரம்பு” (Chandrasekher Limit) என்று வானியல் விஞ்ஞானிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் “வெண்குள்ளி” விண்மீன்களின் (White Dwarf Stars) பளு வரம்பையும், உள்ளமைப்பையும் சந்திரசேகர் விளக்கினார்.
விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்!
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்! விண்மீன்களின் இடம்மாறிய பிம்பங்களை [Stellar Parallaxes] முதலாகக் கண்டு, 1838 இல் அந்த ஐயம் மெய்யான தென்று உறுதியானது. மேலும் அந்நிகழ்ச்சி விண்மீன்களின் இயற்கைத் தன்மைகளை ஆழ்ந்து அறிய அடிகோலியது. சுயவொளி வீசும் சூரிய வம்சத்தைப் போல் தோன்றினாலும், பல விண்மீன்கள் முற்றிலும் வேறுபட்டவை!

கோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை! கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே!
ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது!

Supernova & White Dwarf
பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து
நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

சந்திரசேகரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு
இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த சுப்ரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் லாகூரில் அவதரித்தார். 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர், என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது! தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்து வந்தார். தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர். பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதற் பையன்! 1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.
பிறகு பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார். கல்லூரியில் சிறப்புயர்ச்சி பெற்று முதலாகத் தேறியதால், அரசாங்கம் அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல உதவிநிதிப் பரிசளித்தது. அங்கே கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடிக் கல்லூரியில் படித்துப் 1933 இல் பெளதிகத்தில் Ph.D. பட்டத்தைப் பெற்றார். 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார். கேம்பிரிட்ஜில் ஸர் ஆர்தர் எடிங்டன் [Sir Arthur Eddington], மில்னே [E.A. Milne] போன்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர்களின் நட்பைத் தேடிக் கொண்டார்.

Sun’s Evolutionary Tracks
அதற்குப் பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1937 இல் ஆய்வுத் துணையாளர் [Research Assistant] பதவியை ஒப்புக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். 1938 இல் சந்திரசேகர் வானியல் பெளதிக [Astrophysics] உதவிப் பேராசிரியராகி, ஒப்பற்ற வானியல் பெளதிகப் பேராசிரியர் மார்டன் ஹல் [Morton Hull] அவர்களின் கீழ் பணியாற்றினார். அவர் பணி யாற்றிய இடம் விஸ்கான்சின், எர்க்ஸ் வானியல் நோக்ககம் [Yerks Observatory, Williams Bay, Wisconsin]. சந்திரசேகர் 1953 இல் அமெரிக்கப் பிரஜையாக மாறினார். 1952 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆக்கப் பட்டுப் பல ஆண்டுகள் வேலை செய்து, ஓய்வுக்குப் பின்பு கெளரவப் பேராசிரிய ராகவும் 1986 வரை அங்கே இருந்தார். சந்திரசேகர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு [Theory on the Later Stages of Stellar Evolution] என்னும் பெளதிகப் படைப்பிற்கு 1983 இல் நோபெல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் ·பவ்லருடன் [William Fowler] பகிர்ந்து கொண்டார். அந்தக் கோட்பாடு அண்டவெளியில் நியூட்ரான் விண்மீன்கள் [Neutron Stars]. கருந்துளைகள் [Black Holes] ஆகியவற்றைக் கண்டு பிடிக்க உதவியது.

H-R Diagram
அண்டவெளியில் சூப்பர்நோவா, வெண்குள்ளி விண்மீன்கள்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஸ் விஞ்ஞானி ஐஞ்சர் ஹெர்ட்ஸ்புருங் [Einjar Hertzsprung] அமெரிக்க விஞ்ஞானி ஹென்ரி ரஸ்ஸெல் [Henri Russell] இருவரும் முதன் முதல் விண்மீன்களின் ஒளிவீச்சையும், உஷ்ணத்தையும் சேகரித்து, ஒரு வரைப்படத்தில்
புள்ளியிட்டு அவற்றின் இணைச் சார்புகளைக் காட்டினார்கள். அந்த ஹெர்ட்ஸ்ப்ருங்-ரஸ்ஸெல் [Hertzsprung-Russell, H-R Diagram] வரைப்படமே வானியல் பெளதிகத்தில் விண்மீன்களின் தன்மைகளை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய ஒப்புநோக்கு வரைப்பட மாகப் பயன்படுகிறது. ஒளித் திரட்சியை நேரச்சிலும் [Luminosity in Y-Axis], உஷ்ணத்தைக் மட்ட அச்சிலும் [Temperature in X-Axis] குறித்து, ஆயிரக் கணக்கான விண்மீன் களின் இடங்களைப் புள்ளி யிட்டுக் காட்டப் பட்டுள்ளது. ஹைடிரஜன் 10% கொள்ளளவுக்கும் குறைந்து எரிந்த பெரும்பான்மையான விண்மீன்கள் முதலக வீதியில் [Main Sequence] இடம் பெற்றன. ஒளிமிக்க விண்மீன்கள் இக்கோட்டுக்கு மேலும், ஒளி குன்றியவை கோட்டுக்குக் கீழும் குறிக்கப் பட்டன. பேரொளி வீசுவதற்கு விண்மீன் பெருத்த பரப்பளவு கொண்டிருக்க வேண்டும்! அவைதான் பெரும் பூத விண்மீன்கள் [Super Giants] ! அவற்றுக்கும் சிறியவைப் பூத விண்மீன்கள் [Giant Stars]! பிறகு வாயுக்கள் எரிந்து எரிந்து அவைச் செந்நிறப் பூதங்களாய் [Red Giants] மாறுகின்றன! போகப் போக வாயு விரைவில் காலி செய்யப் பட்டு, ஈர்ப்பு விசையால் குறுகி விண்மீன்கள் வெண்குள்ளியாய் [White Dwarfs] சிதைவாகின்றன.

Supergiants & White Dwarfs
பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிதியும், ஒரு வெண்குள்ளியாகச் சிதைவடைந்து மடியப் போவதாய்க் கருதப் படுகிறது! அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு செந்நிறப் பூதமாகி [Red Giant] புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களை வெப்பக்கடலில் மூழ்க்கி, அடுத்து பூமியின் வாயு மண்டலத்தை ஊதி வெளியேற்றிக், கடல்நீரைக் கொதித்துப் பொங்க வைத்து, உயிரினம் யாவும் மடிந்து மீண்டும் எதுவும் வாழ முடியாத வண்ணம், பூமி ஓர் நிரந்தர மயான கோளமாய் மாறிவிடும்! ஏறக்குறைய முழுப்பகுதி ஹைடிரஜன் வாயுள்ள விண்மீன், ஈர்ப்பு விசையால் பேரளவில் அமுக்கப் பட்டுச் சுருங்கி உண்டானது. வாயுக்கள் கணிக்க முடியாத பேரழுத்தத்தில் பிணைந்து, பல மில்லியன் டிகிரி உஷ்ணம் உண்டாகி, வெப்ப அணுக்கரு இயக்கம் [Thermonuclear Reaction] தூண்டப்பட்டு அவை ஹீலியமாக மாறுகின்றன. அந்த நிகழ்ச்சியின் போது அளவற்ற வெப்பமும், வெளிச்சமும் எழுந்து பிணைவு இயக்கம் [Sustained Fusion Reaction] தொடர்கிறது!
1930 ஆரம்ப ஆண்டுகளில் விஞ்ஞானிகள், ஹைடிரஜன் சேமிப்பு யாவும் எரிந்து ஹீலியமாகி வற்றியதும் விண்மீன்கள் சக்தி வெளியீட்டை இழந்து, தமது ஈர்ப்பு ஆற்றலால் அமுக்கப் பட்டுக் குறுகி விடுகின்றன என்று கண்டார்கள். பூமியின் வடிவுக்குக் குன்றிப் போகும் இவையே வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுபவை. வெண்குள்ளி கொண்டுள்ள அணுக்களின் எலக்டிரான்களும் அணுக்கருத் துகள்களும் [Nuclei] மிக மிகப் பேரளவுத் திணிவில் [Extremely High Density] அழுத்தமாய் இறுக்கப் பட்டு, எண்ணிக்கை மதிப்பில் நீரைப் போல் 100,000-1000,000 மடங்கு அதன் திணிவு ஏறுகிறது என்று பின்னால் கணிக்கப் பட்டுள்ளது!

Structure of a Star
சந்திரசேகர் எழுதிய விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு
சந்திரசேகரின் சிறப்பு மிக்க ஆக்கங்கள் விண்மீன்களின் தோற்ற மூலம் [Evolution of Stars], அவற்றின் அமைப்பு [Structure] மற்றும் அவற்றுள் சக்தி இயக்கங்களின் போக்கு [Process of Energy Transfer], முடிவில் விண்மீன்களின் அழிவு ஆகியவற்றைப் பற்றியது. வெண்குள்ளிகளைப் [White Dwarfs] பற்றிய அவரது கோட்பாடு, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ரால்·ப் பவ்லர் [Ralph Fowler], ஆர்தர் எடிங்டன் [Arthur Eddington] ஆகிய இருவரும் தொடங்கிய வினையைப் பின்பற்றி மேற்கொண்டு விருத்தி செய்தது.
சிதைவுப் பண்டங்கள் [Degenerate Matter] சேர்ந்து பேரளவுத் திணிவு [Extremely High Density] பெருத்த வெண்குள்ளியில், எலக்டிரான்களும் அணுக்கருத் துகள் மின்னிகளும் [Ionized Nuclei], விண்மீனின் ஈர்ப்பு விசையால் இறுக்கிப் பிழியப் படுகின்றன என்று 1926 இல் ரால்ஃப் பவ்லர் விளக்கிக் கூறினார். அதே ஆண்டு ஆர்தர் எடிங்டன் ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறி, சக்தியைச் சுரக்கும் மூலமாக விண்மீன்களில் இருக்கலாம் என்று எடுத்துக் கூறினார். சந்திரசேகர் தனது ‘விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு ‘ [An Introduction to the Study of Stellar Structure] என்னும் நூலில், விண்மீன் தனது எரிவாயுவான ஹைடிரஜன் தீரத் தீர முன்னைப்போல் ஒளிக்கதிர் வீசத் தகுதியற்று, அதன் ஈர்ப்பு விசை சிறுகச் சிறுக அதே விகிதத்தில் குன்றிச் சுருங்குகிறது என்று எழுதியுள்ளார். ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசை அதன் பளுவைச் [Mass] சார்ந்து நேர் விகிதத்தில் மாறுகிறது! பளு குன்றினால், அண்டத்தின் ஈர்ப்பு விசையும் குறைகிறது! ஈர்ப்பு விசைச் சுருக்கத்தின் [Gravitational Collapse] போது, விண்மீனின் பளு ஒப்புமை நிலைப்பாடு [Relatively Constant] உள்ளது என்று சந்திரசேகர் அனுமானித்துக் கொண்டார். அந்தச் சுருக்கத்தை நிறைவு செய்ய, பேரமுக்க முள்ள எலக்டிரான்கள் [Highly Compressed Electrons] பொங்கி எழுந்து, விண்மீன் நொறுங்கிச் சிதைவடைந்து, சிறுத்துப்போய் முடிவில் வெண்குள்ளியாக [White Dwarf] மாறுகிறது என்பது அவர் கருத்து!

What is a White Dwarf ?
சந்திரசேகர் ஆக்கிய வெண்குள்ளிக் கோட்பாடு கூறுவது என்ன ?
1936 முதல் 1939 வரை சந்திரசேகர் வெண்குள்ளிகளின் கோட்பாட்டை [Theory of White Dwarfs] உருவாக்கினார். அந்தக் கோட்பாடு வெண்குள்ளியின் ஆரம், பளுவுக்கு எதிர்விகிதத்தில் மாறுவதாக [Radius is inversely proportional to Mass] முன்னறிவிக்கிறது! பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு பெருத்த எந்த விண்மீனும் வெண்குள்ளியாக மாற முடியாது! வெண்குள்ளியா சிதைவடைவதற்கு முன்பு பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு மிகுந்த விண்மீன்கள் தமது மிஞ்சிய பளுவை, முதலில் நோவா வெடிப்பில் [Nova Explosion] இழக்க வேண்டும்! சந்திரசேகரின் மேற்கூறிய மூன்று முன்னறிவிப்புகளும் மெய்யான விதிகள் என்று விஞ்ஞானிகள் உறுதிப்பாடு செய்துள்ளனர்! ஏற்கனவே தெரிந்த ஒரு வெண்குள்ளிகளின் சரிதையைத் தவிர, இவற்றைத் தொலை நோக்குக் கருவிகள் மூலம் கண்டு ஒருவர் நிரூபிப்பது மிகவும் கடினம்! வானியல் வல்லுநர்கள் இதுவரை அறிந்த எந்த வெண்குள்ளியும் நிறையில் 1.4 மடங்கு பரிதியின் பளுவை மிஞ்சி யுள்ளதாகக் காணப்பட வில்லை! விண்மீன்களின் நிறையை இனம் பிரித்திடும் அந்த வரையரைப் பளு எண்ணைச் [1.4] ‘சந்திரசேகர் வரம்பு ‘ [Chandrasekar Limit] என்று வானியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

Red Giant turning to White Dwarf
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய சிறப்பு ஒப்பியல் நியதி [Special Theory of Relativity] மற்றும் குவாண்டம் பெளதிகக் கோட்பாடு [Principles of Quantum Physics] ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சந்திரசேகர், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு நிறை யுடைய ஒரு வெண்குள்ளி விண்மீன், சிதைவுற்ற வாயுவில் உள்ள எலக்டிரான்களின் உதவியை மட்டும் கொண்டு நிலைப்பாடு கொள்ள முடியாது. அப்படிப் பட்ட ஒரு விண்மீன் தனது வெப்ப அணுக்கரு எரு [Thermonuclear fuel] முழுதையும் எரித்துத் தீர்க்கா விட்டால், அதன் பளு சந்திரசேகர் வரம்பை விடவும் மிகையானது என்று அறிந்து கொள்ள வேண்டும்’.
தொலைநோக்கியில் காணப் பட்ட மெய்யான வெண்குள்ளி விண்மீன்களின் பளுவைக் கணித்ததில், அவை யாவும் சந்திரசேகர் வரம்புக்குக் [1.4] குறைந்த தாகவே அறியப் பட்டன! அந்த வரம்புக்கு மேற்பட்ட பளுவை உடைய விண்மீன், தனது அணுக்கரு எரிப்புக் காலம் [Nuclear-Burning Lifetime] ஓய்ந்தபின், ஒரு வேளை நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] ஆகலாம்! அல்லது ஒரு கருந்துளையாக [Black Hole] மாறலாம்! சந்திரசேகர் ஆராய்ந்து வெளியிட்ட வானியல் சாதனைகள் விண்மீன்களின் இறுதி ஆயுள் நிலையை எடுத்துக் காட்ட உதவி செய்கின்றன. மேலும் ஏறக் குறைய எல்லா விண்மீன்களின் பளுக்களும் சந்திரசேகர் வரம்பு நிறைக்குள் அடங்கி விட்டதால், அகில வெளியில் பூதநோவாக்கள் [Supernovas] எதுவும் இல்லாமைக் காட்டுகின்றன. [நோவா என்பது உள்ளணுக்கரு வெடிப்பு (Internal Nuclear Explosion) ஏற்பட்டுப் பேரளவில் சக்தியை மிகைப்படுத்தி வெளியாக்கும், ஒரு விண்மீன்].

Star turning to Black Dwarf
ஈர்ப்பியல் நொறுங்கலில் தோன்றும் கருந்துளைகள்!
1968 இல் கருந்துளை என்று முதன் முதலில் பெயரிட்டவர், அமெரிக்க விஞ்ஞானி ஆர்ச்சிபால்டு வீலர் [Archibald Wheeler]. ஆயினும் அவருக்கும் முன்பே கருந்துளையைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேதாந்தி [John Mitchell (1783)], மற்றும் பிரென்ச் கணித வல்லுநர் பியரி ஸைமன் லாபிளாஸ் [Piere Simon de Laplace (1796)] ஆகியோர் இருவரும் கருந்துளையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.
கருந்துளை [Black Hole] என்பது விண்வெளியில் பேரடர்த்தி [Highly Dense] கொண்டு, நியதிப்படி இருப்பதாகக் கற்பனிக்கப் பட்ட ஓர் அண்டம்! அகில வெளியில் ஈர்ப்பு விசைப் பேராற்றலுடன் உட்புறம் இழுத்துக் கொண்டிருக்கும் ஓர் குழிப் பகுதி. அப்பகுதியில் எதுவும், ஏன் ஒளிக்கதிர் வீச்சு, மின் காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic Radiation] கூட அதன் அருகே நெருங்க முடியாது!
விண்மீன்கள் தோற்றம்
அதன் அருகே புகும் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்ல முடியாமல் வளைக்கப் படும்; அல்லது ஈர்ப்பு மையத்துக் குள்ளே கவர்ந்து இழுக்கப் படும்! ஆகவே கருந்துளையின் பக்கம் ஒளி செல்ல முடியாத தால், அதன் இருப்பிடத்தைத் தொலை நோக்கி மூலம் காண்பது அரிது! கருங்குழியிலிருந்து எழும் எக்ஸ்ரே கதிர்களை [X-Rays], பூமியில் உள்ள வானலை நோக்கிகள் [Radio Telescopes] நுகர்ந்து கண்டு பிடிக்க முடியும். பபெருத்த ஒரு விண்மீன் தனது எரிபொருள் யாவும் தீர்ந்த பின், அதன் நிறையால் சிதைந்து, ஈர்ப்பாற்றல் [Gravitation] மிகுந்து அதன் உருவம் குறுகிக் கருந்துளைஉண்டாகிறது! அதன் வடிவம் ஒரு வளைவான கோள விளிம்பில் [Spherical Boundary] சூழப் பட்டுள்ளது. அந்தக் கோள விளிம்பின் ஊடே ஒளி நுழையலாம். ஆனால் தப்ப முடியாது! ஆதலால் அது முழுக்க முழுக்கக் கருமை அண்டமாக இருக்கிறது. ஈர்ப்பியல் நொறுங்கல் [Gravitation Collapse] நிகழ்ச்சி ஆக்கவும் செய்யும்! அன்றி அழிக்கவும் செய்யும்! ஒரு விண்வெளி அண்டத்தில் அல்லது விண்மீன் கோளத்தில் ஈர்ப்பாற்றல் விளைவிக்கும் உள்நோக்கிய சிதைவை ஈர்ப்பியல் நொறுங்கல் என்று வானியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. அண்டவெளிக் கோள்களும், விண்மீன்களும் ஈர்ப்பியல் நொறுங்கல் நிகழ்ச்சியால் உருவாக்கப் படலாம்; அல்லது அவை முழுவதும் அழிக்கப் படலாம்.

Star Structure
சிறு விண்மீன்களில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவுகள்
சில சிறு விண்மீன்களில் இந்த ஈர்ப்பியல் நொறுங்கல் மெதுவாக நிகழ்கிறது! சில காலத்திற்குப் பிறகு நின்று விடுகிறது! வெப்பம் படிப்படியாகக் குறைந்து, விண்மீன் வெளிச்சம் மங்கிக் கொண்டே போகிறது! வானியல் நோக்காளர்கள் அந்த மங்கிய விண்மீனையும் தொலைநோக்கி மூலம் காணலாம்! அவைதான் வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுகின்றன. நமது சூரியனும் உதாரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெண்குள்ளியாகத்தான் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறது!
சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

Steller Formation seen By Hubble Telescope
நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் விண்மீன் துடிப்பி [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பியின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!
பூத விண்மீனில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவு ! கருந்துளைகள் !
பேரளவு பளு மிகுந்த ஒரு விண்மீன் சிதையும் போது அழுத்தமோ, அணுக்கரு வெடிப்போ இறுதி நொறுங்கலை நிறுத்துவ தில்லை! அந்த விண்மீனின் ஆரம் [Radius] சிறுக்கும் போது, அதன் விளிம்பின் வளைவில் ஈர்ப்பு விசைப் பெருக்கம் அடைகிறது!
முடிவில் ஆரம் மிகச் சிறியதாகி, ஈர்ப்பு விசை பிரம்மாண்ட மாகி, விளிம்பின் வளைவு உள்நோக்கி இழுக்கப்பட்டு கருந்துளை உண்டாகிறது! அப்போது கருந்துளையின் அருகே ஒளிக்கதிர் சென்றால் அது வளைக்கப் பட்டு, உள்நோக்கி இழுக்கப் பட்டு விழுங்கப் படுகிறது!
ஒளிக்கதிர் யாவும் விழுங்கப் படுவதால் கருந்துளையைத் தொலை நோக்கியில் காண முடியாது! கருந்துளை பிரபஞ்சத்தில் இன்னும் ஓர் மர்ம அண்டமாய், மாய வடிவத்தில் இருக்கிறது. நமது ஒளிமய வானிலும் [Galaxy] பால்மய வீதியிலும் [Milky Way], எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்! ஆனால் இதுவரை யாரும் அவற்றின் இருக்கையைக் கண்டு பிடித்து உறுதிப் படுத்தியதில்லை! கருந்துளையின் அளவு அதன் உட்பளுவைப் பொறுத்து நேர் விகிதத்தில் மாறுகிறது. நமது பரிதியின் பளுவைக் கொண்டுள்ள ஒரு கருந்துளையின் ஆரம் சுமார் 1 மைல் [1.5 km] இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது! ஆனால் மற்ற ஒளிமய மந்தைகளில் [Other Galaxies] கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது!

The Spinning Black Hole
பிரபஞ்சத்தில் வெண்குள்ளி இறுதியில் கருங்குள்ளி ஆகிறது
செந்நிறப் பூத [Red Giant] நிலையிலிருந்து விண்மீன் முடிவான வடிவுக்குத் தளர்வது ஒரு நேரடிப் பாதை! குன்றிய பளுவுடைய விண்மீன்கள் பலவற்றில், பரந்த வெளிப்புற அரண் அண்டவெளியில் விரிந்து கொண்டே போக, அவற்றின் நடுக்கரு மட்டும் ஒளித்திறம் [Luminosity] வற்றிவெண்குள்ளியாய் தங்கி விடுகிறது. பல மடங்கு பரிதி நிறை கொண்டுள்ள விண்மீன்கள் பெருநோவா வாக [Supernova] வெடித்து விடும். அவற்றிலும் சந்திரசேகர் வரம்புக்கு [1.4 மடங்கு பரிதியின் பளு] உட்பட்ட நடுக்கரு மிச்ச அண்டமும் வெண்குள்ளி யாக மாறும். அவ்வாறு உண்டான வெண்குள்ளியில் தாய்மூலக அணுக்களிலிருந்து [Parent Atoms] எலக்டிரான் யாவும் பிடுங்கப் பட்டு, அதன் பிண்டம் [Matter]அனைத்தும் சிதைவான வாயுவாகத் [Degenerate Gas] திரிவடைகின்றது! அந்த விபரீத வாய்க்கள் வெப்பக் கடத்தி யாகி, பொதுவான வாயு நியதிகளைப் [Gas Laws] பின்பற்றுவதில்லை! அவ்வாயுக்கள் பேரளவு நிலையில் அழுத்தம் அடையலாம்! அவற்றைப் போன்ற வெண்குள்ளிகள் சக்தி அளிக்கும் சுரப்பிகள் எவையும் இல்லாமல், நிரந்தரமாய்க் குளிர்ந்து, அடுத்து மஞ்சல்குள்ளியாகி [Yellow Dwarf], பிறகு செங்குள்ளியாகி [Red Dwarf], அப்புறம் பழுப்புக்குள்ளியாகி [Brown Dwarf] இறுதியில் முடிவான கருங்குள்ளியாக [Black Dwarf] கண்ணுக்குத் தெரியாமல் இருந்தும் இல்லாத உருவெடுக்கிறது!

Supernova turning to a Black Hole
சந்திரசேகர் எழுதிய வானியல் விஞ்ஞான நூல்கள்
1952 முதல் 1971 வரை வானியல் பெளதிக வெளியீடு [Astrophysics Journal] விஞ்ஞானப் பதிவின் ஆசிரிய அதிபராகப் [Managing Editor] பணி யாற்றினார். பிறகு அந்த வெளியீடே அமெரிக்க வானியல் பேரவையின் [American Astronomical Society] தேசீய இதழாய் ஆனது. 1953 இல் ஆண்டு ராயல் வானியல் பேரவை [Royal Astronomical Society] சந்திரசேகருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது. 1955 ஆம் ஆண்டு தேசீய விஞ்ஞானப் பேரவைக்குத் [National Academy of Science] தேர்ந்தெடுக்கப் பட்டார். சந்திரசேகர் பத்து நூல்களை எழுதியுள்ளார். விண்மீன் சூழகத்தில் கதிர்வீச்சால் நிகழும் சக்தி கடத்தல் [Energy Transfer By Radiation in Stellar Atmospheres], பரிதியின் மேல்தளத்தில் வெப்பச் சுற்றோட்டம் [Convection in Solar Surface], விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு [An Introduction to the Study of Stellar Structure (1939)], விண்மீன் கொந்தளிப்பின் கோட்பாடுகள் [Priciples of Stellar Dynamics
(1942)], கதிர்வீச்சுக் கடத்தல் [Radiative Transfer (1950)], திரவ இயக்க & திரவ காந்தவியல் நிலைப்பாடு [Hydrodynamic & Hydromagnetic Stability (1961)], கருங்குழிகளி கணித நியதி [Mathematical Theory of Black Holes (1983)]. மெய்ப்பாடும் எழிலும் [Truth & Beauty], விஞ்ஞானத்தில் கலைத்துமும் வேட்கையும் [Aesthetics & Motivation in Science (1987)]. விண்மீன் ஒளியின் இருமட்ட இயக்கம் [The Polarization of Starlight], காந்த தளங்களில் வெப்பச் சுற்றோட்ட வாயுக்கள் [Convection of Fluids in Magnetic Fields].
1999 ஆம் ஆண்டு ஏவப்பட்ட மனிதரற்ற விஞ்ஞானத் துணைக்கோள் [Premier Unmanned Scientific Satellite] ஓர் எக்ஸ்ரே நோக்ககத்தைக் [X-Ray Observatory] கொண்டது. அது ஒரு முற்போக்கான எக்ஸ்ரே வானியல் பெளதிக ஆய்வுச் சாதனம் [Advanced X-Ray Astrophysics Facility]. “சந்திரா எக்ஸ்ரே நோக்ககம்” என அழைக்கப்படும் அந்த துணைக்கோள், இந்திய அமெரிக்க வானியல் மேதை, சுப்ரமணியன் சந்திரசேகரைக் கெளரவிக்க வைத்த பெயராகும். அத்துணைக்கோள் எக்ஸ்ரேக் கதிர்கள் எழுப்பும் விண்மீன்களின் கூர்மையான ஒளிநிறப் பட்டைகளை எடுத்துக் காட்டும். அது பூமியின் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்ததும், ஒரு நண்டு நிபுளாவின் பொறிவீசி விண்மீனையும் [Pulsar in Crab Nebula], காஸ்ஸியோப்பியா பூதநோவாவையும் [Cassiopeia A Supernova] படமெடுத்து அனுப்பியுள்ளது.

சந்திரசேகர் தனது 84 ஆம் வயதில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி காலமானார். இறப்பதற்கு முன் 1995 இல் அவர் எழுதிய இறுதிப் புத்தகம்: ‘பொது நபருக்கு நியூட்டனின் கோட்பாடு’ [Newton ‘Principia’ for the Common Reader]. அவரிடம் படித்த இரண்டு சைனா பெளதிக விஞ்ஞானிகள் [Tsung-Dao Lee, Chen Ning Yang] 1957 இல் துகள் பெளதிகத்திற்கு [Particle Physics] நோபெல் பரிசு பெற்றார்கள்! இரண்டாம் உலகப் போர் நடந்த போது, சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் புரிந்த இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியோடு [Enrico Fermi] பணியாற்றினார்! குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்னும் முதுமொழிக் கேற்ப நோபெல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்த ஸர். சி.வி. ராமனின் வழித்தோன்றலான, டாக்டர் சந்திரசேகர் வானியல் விஞ்ஞானப் படைப்பிற்கு பெளதிகத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டதும் போற்ற தகுந்த ஆற்றலாகும்!
++++++++++++++++++
1. https://youtu.be/9j1AKzICLts
2. https://youtu.be/0wP5GPFALCgதகவல்:
1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001
2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.
3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.
4. Internet Article “Stellar Evolution”
5. http://www.nasa.gov/
audience/forstudents/9-12/ features/stellar_evol_feat_ 912.html 6. http://ezinearticles.com/?
A-Star-From-Birth-to-Death&id= 8981207 [April 1, 2015] 7. http://sc663drk.weebly.com/
birth-and-death-of-the-stars. html 9. http://www.esa.int/esaKIDSen/
SEM976WJD1E_OurUniverse_0.html 10. http://science.nasa.gov/
astrophysics/focus-areas/how- do-stars-form-and-evolve/ ******************************
* S. Jayabarathan (jayabarathans@gmail.com) June 27, 2016
-
’’அன்னம் அருஞ்சொற்பொருளில் பார்த்தவரை’’….
கிரேசி மோகன்
புகழேந்திப் புலவரின் ‘’நள வெண்பா’’ நண்பர் ராமஷேஷன் கொடுத்தார்….புகழேந்தியிடம் கையேந்தி நள வெண்பா போல என் ‘’உள வெண்பா’’
எழுதிக்கொண்டிருக்கிறேன்….ராமஷேஷன் தந்த புத்தக அட்டையில் யாரோ ஒரு ஓவியர் ரவிவர்மாவின் ‘’தமயந்தி அன்னத்தை தூது விடும்’’ பெயிண்டிங்கை வரைந்துள்ளார்….அவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அடியேன் வரைகிறேன்….அவர் வரைந்த ஓவியப் பிரிண்டில் தமயந்தியும், அன்னமும் தெளிவாய் உள்ளது…. மற்றபடி பேக்ரவுண்ட் மரங்கள் மங்கலாக உள்ளது…. ரவிவர்மா பழக்கத்தில் பேக்ரவுண்டை அடியேன் என் கற்பனைக்கு ரீல் விட்டுக் கொண்டிருந்த சமயம் நண்பர் இரா.முருகன் ஒரிஜினலை அனுப்புவதாகச் சொன்னார்…. நன்றி இராமு…. காத்துக் கொண்டிருக்கிறேன்…. நிற்க….அன்னம் அர்த்தத்தை அருஞ்சொற்பொருள் அகராதியில் பார்க்கையில்
தோன்றிய வெண்பா….‘’அன்னம் பசியேந்தி, அன்னம் புகழேந்தி,(புலவர்)
அன்னம் அயனேந்தி, ஆழிசூழ் -அன்னம்பூ
பாரமேந்தி, அன்னம்பொன் பெண்களேந்தி, அன்னத்தின்,
சாரமேந்தா கோசம் சவம்’’….கிரேசி மோகன்….”அன்னம் பசியேந்தி, அன்னம் புகழேந்தி,
அன்னம் அயனேந்தி, ஆழிசூழ் -அன்னம்பூ
பாரமேந்தி, அன்னம்பொன் பெண்களேந்தி, அன்னத்தின்,
சாரமேந்தா கோசம் சவம்’’….கிரேசி மோகன்.... -
படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள்
காயத்ரி பூபதி:
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.
படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி,
சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக் கூடாது. நல்ல எண்ணத்தை விளையாட்டோடு விளையாட்டாக எடுத்துக் கூறினால், அது அவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அறுவுறுத்துகின்றார் கவிஞர் செண்பக ஜெகதீசன்.
விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.
நகரமயமான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் ஓடி விளையாடுதற்கு இடமேது? ரியல் எஸ்டேட்காரர்களைத் தாண்டி தனியாக வீடு கட்டும் விருப்பமுடையவரின் எண்ணம், சிறுவர்கள் கட்டும் மணல் வீடு போல், அலை வந்து அலைக்கழிக்க கலைந்து போகும் நிலையாகும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் முனைவர். பத்ம பிரியா.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கை வளங்களைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது இக்கவிதை.
குருவிகளின் கூடு மரத்தினிலே-இந்த
குழந்தைகளின் வீடு ஈர மணலிலேமணல் மாயமாய் மறையும் முன்னே
மணல் வீடு கட்டி மகிழட்டுமேகாற்று வீசி கலைக்கும் முன்னே
கோட்டைகள் மணலில் பல கட்டட்டுமேமாடி வீடு கட்டி அங்கே-நம்
கொடியினை நட்டு வணங்கட்டுமேஈரமண்ணில் ஆடிய ஆட்டம் என்றும்
இதயத்தில் உலரா வண்ணம் இருக்கட்டுமேகாடுகள் யாவும் ஆயின வீடுகளே
காணாமல் போனது ஆற்று மணலுமேமார்பிள் வீடு கட்டி வாழ்ந்தாலுமே
மணல் வீடு போல்தான் வந்திடுமாமண் வாசனை போனது எங்கே
மரஙகளும் போனது எங்கேகுருவிகளுக்கும் கூடு கட்ட மரமில்லை
குழ்ந்தைகள் வீடு கட்ட மண்ணில்லைகாற்றும் கடலும் வந்து அழிதாலும்-இவரின்
கனவினை மட்டும் அழிக்காது காத்திடுவீர் (ராதா விஸ்வநாதன்)வீட்டிற்காகவும், மாளிகைக்காகவும் காடுகள் அழிக்கப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.மழை இன்மையையும், மணற் கொள்ளையையும் சுட்ட, மண்வாசனை போனது எங்கே மரங்களும் போனது எங்கே என்று கவிஞர் எடுத்தாண்டிருப்பது அருமை. எளிமையான வரிகளில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கும் ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.
-
படக்கவிதைப் போட்டி … (70)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
எனக்களிப்பாய் வேலை எழுத்து….
”எனக்கவலைத் தந்தாய் மனக்கவலை தீரும்”
எனக்குசேலன் நட்புக்(கு) இளகும் -குணக்கடலே
மாபாவச் செல்வம் மனதில் சுமக்கின்றேன்
கோபாலா கொள்ளைக்குக் காத்து….
இன்றுபோய் நாளைவா என்றிலங்கை வேந்தனிடம்
அன்றுரைத்த அன்பே அரிமயமே -இன்றாகி
நேற்றான நாளையே, நேரான வட்டமே
கூற்றான காவலா காப்பு….கிரேசி மோகன்…. -
அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016
கே.எஸ்.சுதாகர்
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
- உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
- ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
- குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
- போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
- போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
- குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.
- அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:
முதலாம் பரிசு – 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு – 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
சிறப்புப் பரிசு – தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.
முடிவுத்திகதி: 30.09.2016
இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:- real24news@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com இணையத்தினைப் பார்க்கவும்.















