’’அன்னம் அருஞ்சொற்பொருளில் பார்த்தவரை’’….
கிரேசி மோகன்
புகழேந்திப் புலவரின் ‘’நள வெண்பா’’ நண்பர் ராமஷேஷன் கொடுத்தார்….புகழேந்தியிடம் கையேந்தி நள வெண்பா போல என் ‘’உள வெண்பா’’
எழுதிக்கொண்டிருக்கிறேன்….ராமஷேஷன் தந்த புத்தக அட்டையில் யாரோ ஒரு ஓவியர் ரவிவர்மாவின் ‘’தமயந்தி அன்னத்தை தூது விடும்’’ பெயிண்டிங்கை வரைந்துள்ளார்….அவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அடியேன் வரைகிறேன்….அவர் வரைந்த ஓவியப் பிரிண்டில் தமயந்தியும், அன்னமும் தெளிவாய் உள்ளது…. மற்றபடி பேக்ரவுண்ட் மரங்கள் மங்கலாக உள்ளது…. ரவிவர்மா பழக்கத்தில் பேக்ரவுண்டை அடியேன் என் கற்பனைக்கு ரீல் விட்டுக் கொண்டிருந்த சமயம் நண்பர் இரா.முருகன் ஒரிஜினலை அனுப்புவதாகச் சொன்னார்…. நன்றி இராமு…. காத்துக் கொண்டிருக்கிறேன்…. நிற்க….
அன்னம் அர்த்தத்தை அருஞ்சொற்பொருள் அகராதியில் பார்க்கையில்
தோன்றிய வெண்பா….
‘’அன்னம் பசியேந்தி, அன்னம் புகழேந்தி,(புலவர்)
அன்னம் அயனேந்தி, ஆழிசூழ் -அன்னம்பூ
பாரமேந்தி, அன்னம்பொன் பெண்களேந்தி, அன்னத்தின்,
சாரமேந்தா கோசம் சவம்’’….கிரேசி மோகன்….
”அன்னம் பசியேந்தி, அன்னம் புகழேந்தி,
அன்னம் அயனேந்தி, ஆழிசூழ் -அன்னம்பூ
பாரமேந்தி, அன்னம்பொன் பெண்களேந்தி, அன்னத்தின்,
சாரமேந்தா கோசம் சவம்’’….கிரேசி மோகன்....