“கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ் (Thanks Kesav)”….!கிரேசி மோகன்….!
“கண்ணனின் வாய்க்குள்ளே கண்டனள்: ஏரார்ந்த
கண்ணிக்கே கண்ணளித்து கைவல்யம் : -மண்ணோடும்,
விண்ணோடும் சேர்ந்து விளையாடும் வாமனனை
தன்னோடு சேர்த்துரைத்தாள் தாங்க்ஸ் (Thanks Kesav)”….!கிரேசி மோகன்….!
பவள சங்கரி
2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை
முன்னுரை
கடல்சார் செயல்பாடுகளும், வர்த்தகமும் மிக நீண்ட காலங்களாக நாடுகளுக்கிடையேயான உறவுகளை உறுதிப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மக்களிடம் பரவலாக சென்றடைவதற்கான காரணங்கள் அகழ்வாய்வுகளின் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரங்களே. அன்று தொட்டு இன்றுவரை, ‘திரைகட லோடியுந் திரவியம் தேடு’ என்ற மூதுரை நம் பண்டைய தமிழர்கள் வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்துள்ளதை மறுக்கவியலாது. ஓயாத உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் கடலோடியும் பிழைத்ததோடு நம் பண்பாடு, கலாச்சாரம், கலைகள், பாரம்பரியங்கள், மொழி என அனைத்தையும் பல்வேறு நாடுகளில் பரவச்செய்து வந்துள்ளனர். மேற்கே கிரீசு, இரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரை மட்டுமின்றி பாலசுதீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்குமிடையே மிக விரிவான வாணிகம் நடைபெற்று வந்ததற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ் சமூகம் ஆமை வலசைப்பாதை பயன்படுத்தி விரைவான கடல் பயணம் மேற்கொண்டுள்ளனர். கிழக்கையும் மேற்கையும் இணைத்ததில் கடல்வழி வாணிபத்திற்கு பெரும்பங்கு உண்டு.
பருத்தி, பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது. தொண்டி, முசிறி, கொற்கை, காவரிப்பூம்பட்டினம் ஆகியன பண்டைய வணிகத் துறைமுகங்கள். கொங்கு நாட்டு தங்கம், பாண்டி நாட்டு முத்து, தந்தம், சந்தனம், மிளகு, வாசனைப்பொருட்கள், இஞ்சி ஏலம், கிராம்பு போன்றவைகள் பண்டமாற்று முறையில் வாணிகம் செய்யப்பட்டன. தமிழகத்திலிருந்து இரோமப் பெருநாட்டிற்குச் சென்ற ஒவ்வொரு கப்பலிலும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணெய், அதிகமான மிளகு போன்றவைகள் இருந்தன. தேங்காய், நெய், வாழை, அரிசி, சோளம், கம்பு முதலியவற்றுடன் புளி, வெற்றிலை, பாக்கு, போன்ற மூலிகைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
என்பது அகநானூறு காட்டும் சான்று..
ஷேபா எனும் தென்அராபியத்தின் அரசி, கி.மு.1000ஆம் ஆண்டில் வாழ்ந்த இசுரேலின் மன்னன் சாலமனைக் காணச்சென்றபோது ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டுசென்றதாக பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பு உள்ளது. இதே காலகட்டத்தில் டயர் எனும் நாட்டு மன்னர் ஹீராம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மரக்கலங்களில் கீழை நாடுகளுக்கு, பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள், துகிம் (மயில் தோகை), ஆல்மக் (அகில் மரங்கள்), விலையுயர்ந்த இரத்தினங்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்து பண்டமாற்று முறையில் வாணிபம் செய்துள்ளார்.
உலகின் முதற்கப்பல்
உலகின் முதற்கப்பலையும் மீப்பெரும் கப்பற்படையையும் வைத்திருந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல. தென்பசிபிக் மாகடலில், ஆசுதிரேலியா கடற்பகுதியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கைகள் அக்கப்பல் 2500 ஆண்டுகளுக்குமேல் பழைமையானது என்றும் அது தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கின்றன. நாவாய் என்ற தமிழ் பெயரே மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் அயல்நாட்டு வாணிகம் தமிழர்களிடையே தொடர்ந்து நடைபெற்றுவந்தது. ஏற்றுமதிச் சரக்குகளை, அராபியரும், பினீசியரும் எகிப்தியரும் மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கிரேக்கர்கள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்துடன் இருந்த வாணிகத்தொடர்பினாலேயே பல தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் கலந்துள்ளன. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இத்தகவல் உள்ளதை, ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ என்ற நூலில், டாக்டர் கே.கே.பிள்ளை விளக்கியுள்ளார்.
மிகவும் பிற்பட்ட கி.மு.60களிலேயே நம் இந்தியத் துறைமுகங்கள், முக்கியமான மேற்குத் துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டிருந்தமைக்கு வணிகம் மட்டுமே முக்கிய காரணமாக இருந்தது. “த பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரேயன் சீ ” (The Periplus of the Erythraean Sea) என்ற நூல் பண்டைய இந்திய கடல்சார் வணிகத்தின் சிறந்ததொரு ஆவணமாக உள்ளது.
“பெரிப்ளஸ் நூலை முதல் நூற்றாண்டின் கிரேக்க-ரோமன் வணிகர்கள் எழுதியிருக்கலாம். குஜராத் கடற்கரையிலிருந்து தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பாலும் தொடரும் அனைத்து முக்கிய துறைமுகங்களையும் இது விவரிக்கிறது ” என கடலாய்வறிஞர் நரசய்யா தெரிவிக்கிறார்.
2003ஆம் ஆண்டில் சிவப்புக்கடல் துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சியில் பானை ஓரியுடன் (தொங்கும் வலைக்குள் பானை), தமிழ் பிராமி எழுத்துகளுடன் ஒரு உடைந்த மண் சாடியும் கிடைத்துள்ளது. 1990களின் பிற்பகுதியில், பெரெனிஸின் பண்டைய எகிப்திய துறைமுகங்களிலும் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ள கல்வெட்டுகளும் காணப்பட்டதாகக் கூறுகிறார். இதன் மூலம் ஐரோப்பாவிற்கும் தமிழ்நாட்டிற்குமிடையே வர்த்தகம் செழித்தோங்கியிருந்தது உறுதியாகிறது. கிரேக்க மொழியில் தமிழ் சங்கப்பேரரசுகள் “தாமிரிக்கா” என்று வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டினர் கங்கை கரைத்துறைமுகங்களில் வர்த்தகம் செய்து, பட்டு, தந்தம், விறகு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். மகாபலிபுரம் ஒரு கடல் துறைமுகமாக இருந்துள்ளது. மகாபலிபுரம் கடற்கரையில் பாறைகள் அதிகமாக உள்ளதால், அதற்கு மாற்றுத்தடமாக மரக்காணம் இருந்ததை பெரிப்ளஸ் தெளிவாக்குகிறது. பாண்டிச்சேரியில் உள்ள அரிக்கமேடு, மத்தியதரைக்கடல் பெரும் வர்த்தக மையமாக விளங்கியது.
‘கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்..’
பட்டினப்பாலை
பூம்புகார் நகரின் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் வந்து சேர்கின்ற பொருட்கள் குறித்த பாடலில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவில் உள்ள கடாரத்தைக் குறிப்பதாகும். முற்காலச் சோழ அரசர்களில் ஒருவனான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியாவரை சோழர்களின் வணிகப்பரப்பு விரிந்துள்ளதையும் அறியமுடிகிறது .
சோழரின் வணிகம்
சோழர்கள் வெளிநாட்டு வணிகத்திலும் சிறந்து விளங்கியதை சீனாவின் சோங் (Soang) வம்சத்தின் குறிப்பொன்றில், சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றதைக் கூறுவதன் மூலம் அறியமுடிகின்றது. சுமத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய, 1088ஆம் ஆண்டைச் சேர்ந்ததான நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றி குறிப்பிடுகின்றது. இவைகளே சோழர்கால கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாகவும் அமைகின்றது.
பண்டைய தமிழ்ச்சமூகத்தினரின் சூழலை தெளிவுபட உரைக்கின்றவைகளின் முன்னணியில் உள்ளவை சங்க கால இலக்கியங்களே. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட இரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் பெருமளவில் காணலாம்.
பண்பாடு
நாம் வாழும் முறையைச்சார்ந்த பண்பாட்டை செதுக்கும் உளியே நம்மொழி. உண்பது, உடுத்துவது, பேசுவது, நம்பெறுமதிகள், பொருண்மியம், வரலாறு, போன்றவைகளனைத்தும் இதனுள் அடங்கும். காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் சூழலின் வழமையின் பொருட்டும் இவை மாறுந்தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்தலின் பொருட்டும் நம் பண்டைய தமிழர்களின் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்குமொரு இயங்கியல் பண்பாடு. அந்த வகையில் உலகக் கலாச்சாரங்களில் மிகவும் தொன்மையானதும், முன்னோடியானதுமான நம் தமிழ்க்கலாச்சாரம் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதை ஆதிச்சநல்லூர், மொகஞ்சதாரோ, ஹாரப்பா போன்ற இடங்களில் கிடைத்துள்ள ஆதாரங்களால் உறுதியாகின்றன. நம் தமிழகம் பலமொழிகள் பல இனங்கள் பல சமயங்கள் பல மரபுகள் என்றிருந்தபோதும் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டு வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தமிழர்களின் பழங்குடிமரபு கி.மு 3ஆம் நூற்றாண்டில் சமணத்தின் வருகை, அதைத் தொடர்ந்து கி.மு முதலாம் நூற்றாண்டில் புத்தமத வருகை அதைத் தொடர்ந்து விவிலியம், சைவம், இசுலாம், வைணவம் என்று சங்கிலித்தொடர்போல் வெளித்தாக்கங்களால் புதுவிதச் சிந்தனைகளை உள்வாங்கியிருந்திருக்கிறது. நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரும் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. இத்துணை பழைமையான தமிழ்மரபுகள், நவநாகரிகம், உலகமயமாதல், நவீன தொழில்நுட்பம் போன்ற பல்வேறு காரணங்களால் வெகு விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
புலம் பெயர்தல்
புலம்பெயர்தலை பழந்தமிழ் இலக்கியங்கள் ‘மொழிபெயர் தேயம்’ எனச்சுட்டுவதைக் காணமுடிகிறது. போர் நடத்தவும், பொருள் தேடவும், வணிகம் தொடர்பாகவும் தமிழர்கள் கடல்கடந்து சென்ற செய்திகளை சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது.
தமிழ்நாட்டிற்கப்பால் உள்ளதொரு நாட்டிற்குச் சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்திருப்பதால் நோகும் தலைவி தனக்குத்தானே கூறிக்கொள்வதாக அமைந்துள்ள பாடலிது:
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
‘மொழிபெயர் தேயம்’ என்பது வேறுமொழி வழங்கும் நாடு என்று குறிப்பதை மாமூலனார் (11. பாலை – தலைவி கூற்று) பாடலில் காண்க.
கப்பல் போக்குவரத்தில் சிறந்த தென்தமிழ்நாட்டில் சாதிக்கொடுமையாலும், கடும் பஞ்சங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, 1820இல் மலேயாவின் பினாங்கிலும், 1824இல் இலங்கையிலும், 1840களில் டிரினிடாட், கயானா, மொரிஷியஸ்சிலும், 1860களில் தென்னாப்பிரிக்காவின் நேடாலிலும் 1870களில் டச்சுக்காலனியான சுரிநாமிலும் 1879இல் பிஜியிலும் இறக்கிவிடப்பட்டனர். 1874இல் தனது காலனியாக மாறிய பிஜித்தீவுக்கு 1879 முதல் 1916 வரை 87 கப்பல்களில் 65 ஆயிரம் மக்கள் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டனர். ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தேறியது. பிஜித்தீவின் தமிழ்ச்சமுதாயம் உருவான வரலாறும் இதுதான். 840 தீவுகளின் தொகுப்பான பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 44% பேர் இந்திய வம்சாவளியினர்.
சங்க காலத்தில் தமிழ்ப்பெண்கள் கடல்கடந்து சென்றனரா?
சங்ககால மகளிர் நிலை குறித்து சங்க இலக்கியங்களால் அறியமுடிகின்றது. மகளிரின் வீரம், கற்பு நிலை, குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. காதல் திருமணமும், பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர்.
“முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” என்ற தொல்காப்பிய நூற்பாவை வைத்து தமிழ்ப்பெண்கள் கடல் கடந்து போவதில்லை என்று ஒருபக்கச் சார்பான முடிவுக்கு வரவேண்டியுள்ளது . ஆயினும் மணிமேகலைக்கு மட்டுமின்றி மணிமேகலா தெய்வத்துக்கும் மணிபல்லவத்தீவு தெரிந்திருக்கிறது. அங்கிருந்த புத்த பீடிகைதான் மணிமேகலைக்கு அவளுடைய பழம்பிறப்பை உணர்த்தும் என்றும் அங்கேதான் அமுதசுரபி மணிமேகலையின் கைக்கு வந்து சேரும் என்றும், மணிமேகலை அங்கே செல்வதற்கு முன்னரே தீவதிலகை அங்கே இருக்கிறாள். இந்திரன் ஏவலால் புத்த பீடிகையைக் காப்பதற்காகவே தான் அங்கே இருப்பதாகவும் சொல்கிறாள். அதே தீவதிலகைதான் பிறகு புண்ணியராசனுக்கு அவன் அந்தத் தீவில் ஆபுத்திரனாக வந்தது, அவன் அங்கே இறந்தது, அவனைத் தேடிக் கம்பளச் செட்டிகள் வந்தது போன்ற இன்ன பிற செய்திகளையும் தெரிவிக்கிறாள்.
இதே போன்று நாகநாட்டுப் பீலிவளை என்பவள் தனக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த குழந்தையை, கடல்கடந்து வந்த சில வணிகர்கள் மூலம் சோழனிடம் சேர்ப்பிக்க அனுப்பிவைக்கிறாள். அந்தப் பீலிவளை புத்த பீடிகையைக்கண்டு வணங்கப் போனதாகவும் தெரிகிறது. “தொன்மங்கள்” என்றோ கட்டுக்கதை என்றோ இவையனைத்தையும் புறக்கணிக்க முடியாதவையாகவே உள்ளன. பண்டைத் தமிழ்மரபில் தமிழ்ச்சமுதாயம் பெண்ணாதிக்கச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. பாண்டியர்வம்ச பெண்களுக்கு அரசாளும் அதிகாரமும் இருந்துள்ளது. தமிழ்க்குடி உலகில் புலம்பெயர்ந்த மனிதகுழுக்கள் மூன்றில் ஒன்று என்ற வரலாற்றுப் பெருமையை அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் மூலம் இன்று பேசப்படும் உலகக் கிராமம் (Global Village) எனும் தத்துவத்தை நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகட்கு முன்னரே வழக்கத்தில் கொண்டிருந்தனர் என்பதை எண்ணி பூரிப்படையமுடிகிறது. சங்ககால ஆட்சியியலில் முடியிடை மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டியரின் நாடுகளின் எல்லைப்புறங்களில், துளுநாடு, எருமைநாடு, பூழிநாடு, குன்றநாடு, எழில்நாடு, நாஞ்சில்நாடு, போன்ற குறுநிலப் பிரிவுகளுக்கு ஆய்வேளிர், கோசர் என்ற அரச பரம்பரையினர் குறுநில மன்னர்களாயினர்.
மொழிவழி ஆதாரங்கள்
நம் தமிழ்மொழி பல்வேறு நாட்டுமக்களின் மொழிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளதே நம் மொழியின் பழைமைக்கு சான்றாகியுள்ளது. உலகளவில் 136 மொழிகளின் வேர்ச்சொற்களுடன் தமிழ் மொழி கலந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடல் ஆய்வறிஞர் திரு.ஒரிசா பாலு கூறுகிறார். உதாரணமாக, கொரியா – 6,500 சப்பான் -1400 சீனா – 700 மலேசியா – 1600 தாய்லாந்து – 850 சொற்கள் கலந்துள்ளனவாம்.
‘அரிசி’ என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் அரிஸா’ என திரிந்துள்ளது. தென்கொரிய மக்கள் இன்றளவிலும் பெற்றோரை தமிழர்களைப் போன்றே அப்பா, அம்மா என்றே அழைக்கின்றனர். இரு வேறு மொழிகளுக்கிடையே தோன்றும் சொற்கலப்புகளைக் கொண்டே அம்மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. கருவா (இலவங்கம்) என்னும் தமிழ்ச் சொல் ‘கார்ப்பியன்’ என்றும், இஞ்சிவேர் ‘சின்ஞிபேராஸ்’ என்றும், பிப்பாலி ‘பெர்ப்பெரி’ யாகவும் உருமாற்றம் அடைந்தன.
சயாமில் கிடைத்த கி.பி.8 – 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டின் வாயிலாக அங்கிருந்த தமிழ் வணிகக்குழுவைப் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. சயாம் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப்பாட்டு பாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றளவிலும் பாங்காக்கிலுள்ள கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடப்படுகிறது. அமெரிக்க அதிபர் பாராக் ஓபாமா, பதவியேற்றபோது, இந்தோனேசியாவில் வசிக்கும் அவர்தம் முன்னோர்கள் அனுமனை வழிபட்டுவந்ததாகக் கூறியுள்ளார். பர்மாவின் அன்றைய தலைநகரான இரங்கூன் பெரிய நகரமாக வளர்ச்சியடைந்ததில் தமிழ் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு என முனைவர் எஸ்.நாகராஜன் குறிப்பிடுகிறார். பாகன் என்ற ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டின் மூலம் அங்கு நானாதேசி வணிகர் கட்டிவைத்த திருமால் கோயில் இருந்ததையும் அவ்வூரில் தமிழர்கள் குடியேறியிருந்ததும் தெரியவருகிறது.
பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டுமக்களின் மொழிவடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமான ‘ஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகைசெய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்குமொழியில் பயன்படுத்தும் சிலபல சொலவடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே. தென்கொரிய மக்களின் ‘ஹங்குல்’ என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்துவடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். தமிழிலிருந்து பிறந்ததுதான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். தமிழ் மற்றும் கொரிய மொழிகளின் சொற்றொடர் அமைப்பில், முதலில் எழுவாய், அதை அடுத்து செயப்படுபொருள், இறுதியில் வினைச்சொல் என்று முடிவதும் அறியமுடிகிறது.
இல்யோன் என்ற புத்தத்துறவி 13ஆம் நூற்றாண்டில்(1206 – 1289) இயற்றிய சாம்குக்யுசா எனும் கொரிய வரலாற்றுத் தொன்மம் மூலமாக இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அக்கதையின் கருவான சம்பந்தப்பட்ட நாடும், ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்களும், பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் எச்சங்களும், மரபணுச் சொந்தங்களை மீட்டெடுக்கும் ஆதாரங்களுக்கான வாய்ப்புகளும் அதைத் தொன்மைக்கதை என்று ஒதுக்கித்தள்ள இயலாதவகையில் பேரார்வத்தை ஏற்படுத்துகிறது.
கி.மு. 48ஆம் ஆண்டிற்கு முன்பாக கொரியாவின் தென்பகுதியிலிருந்த கிம்கே எனும் பகுதி ஒரு நாடாகவோ அல்லது பேரரசாகவோ உருவாகவில்லை. ஒன்பது தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. கிரேக்க நாட்டு நிலவரைப் படங்கள் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம். தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி தமிழகத்தின் ஆய்பாண்டிய நாட்டு இளவரசி என்று ஏனைய சங்க இலக்கியங்களின் உதவியோடு நிறுவமுடிந்துள்ளது.
இந்திய நாட்டு புராணக்கதையில் உள்ளவாறு முட்டையிலிருந்து தோன்றிய பிரம்மன் போல, தெய்வ சக்தியால் ஒரு குன்றின்மீது தங்க முட்டையிலிருந்து தோன்றியவன் சுரோ என்ற மன்னன். இவன் சீன நாட்டின் இறுதி தீபகற்ப பகுதியான கொரிய நாட்டின் அரசன். திருமண வயதில் இருக்கும் மன்னன் தம் திருமணம் குறித்து தாம் கண்டகனவை திடமாக நம்பியவனாகக் காத்திருக்கிறான். இந்த சம்பவங்கள் நடந்த அதே சமயம் இந்திய நாட்டில் ஆய்பாண்டியர் ஆட்சியில் இருந்த நாட்டின் இளவரசியின் பெற்றோரின் கனவிலும் இறைவன் தோன்றி சுரோ என்ற அந்த மன்னன் பற்றி கூறுகிறார். ஏற்கனவே தாங்கள் வணிகத் தொடர்பிலிருக்கும் பகுதிகள் என்பதால் எவ்விதத் தயக்கமுமின்றி தங்கள் மகளை மணமுடித்துக் கொடுக்க தெய்வ சங்கல்பமாகக் கருதியவர்கள் அன்பு மகளை கடல்கடந்து அனுப்ப சம்மதிக்கின்றனர்.
அதன்படியே ஒரு நாள் மன்னன் சுரோ, செந்நிற பாய்மரம் ஏந்திய ஒரு மரக்கலம் தென்மேற்கிலிருந்து வருவதைக் காண்கிறான். அருகில் சென்றவன் தனக்கான இளவரசி வந்துவிட்டதை உணர்கிறான். வந்தவள் ஆய்இளவரசி கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்குகிறார். கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அரியணை ஏறுகிறார். தனக்கு பதினாறு வயது ஆகிறது என்றும், தன் பெற்றோரின் கனவில் தோன்றிய கடவுள், வானிலிருந்து தோன்றிய புனித மகனான காரக்நாட்டு மன்னன் சுரோ, திருமண வயதில் காத்திருக்கிறான் என்றும், தங்கள் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கும்படியும் வாக்கு அளித்ததாகவும் கூறுகிறாள். அயுத்தா எனும் நாட்டிலிருந்து மூன்றுமாத கடல்பயணமாக வந்தவளின் பெயர் தமிழில் ‘பவளம்’ என்ற பொருளில் ‘யெல்லோ ஜேட்’ என்கிறாள். ஹியோ ஹவாங் ஓக் என்ற நாமமும் சூட்டப்படுகிறாள். புயலில் சிக்கித் தத்தளித்து இறுதியில் இறையருளால் கயா நாட்டின் கடற்கரையில் நலமாகவந்து இறங்கிவிட்டதாகக் கூறுகிறாள். இன்றும் கொரிய மக்கள் தெய்வமாக வணங்கும், 157 ஆண்டுகள் வாழ்ந்து நல்லாட்சி புரிந்தவள், சூலமேந்தி அம்பிகையின் வடிவாகவே நின்ற ’பவளாம்பிகை’ சுரோ மன்னனை மகிழ்ச்சியுடன் மணக்கிறாள்.
வெகு விரைவிலேயே வளர்ச்சியின் உச்சம் தொட்டுவிடும் கொரியாவில் இடையில் ஏற்படும் மாற்றங்கள் யாவும் வளர்ச்சிக் கோட்டைகளின் திறவுகோல்களாகவே அமைந்துவிடுகின்றன. கொரிய அரசிக்குப் பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர் மூன்று நாடுகளில் ஆட்சிபுரிய, அரசியுடன் தங்கிவிட்ட மூத்த சகோதரன் புத்தபிக்குவாகவும் மீதமுள்ள 7 குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார். தமிழ்நாட்டிலிருந்து ஆசீவகம் புத்தம் கொரிய அரசியால் அறிமுகப்படுத்தப்பட்டு, குடிமக்கள் சிறப்புடன்வாழ வழிவகுத்தார்.. கி.பி 200இல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர். கயா அரசும் சிறப்பாக நடந்தது. கி.பி 300இல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்டரசாக மாறுகிறது. கி.பி 400இல் ஆய்அரசு மட்டுமன்றி தமிழகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய அரசுகளும் களப்பிரர் ஆட்சிக்கு மாறுகிறது.
நம் பண்பாடு, கலாச்சாரம், உணவுமுறை போன்றனைத்தும் தென்கொரியாவிலும் ஒத்திருப்பதும் அதிசயம்தான். அரிசி உடைக்கும் இயந்திரம், முறம், பிரம்புக்கூடைகள், உரல்-உலக்கை, நெசவுத்தறி, கால்நடைகளுக்கு காலில் இலாடம்கட்டுவது, கட்டிடக்கலை போன்றனைத்தும் பன்னெடுங்காலமாக ஒத்திருப்பதோடு இருநாட்டிற்குமிடையே மரபணுத்தொடர்பு இருப்பதும் அதிசயம்தான். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வழிவழியாகவந்த, தங்கள் தாயகத்தின் வேராக இருக்கும் ஒரு கதை நிலைத்திருப்பதும் இதற்கு உறுதியான சாட்சியாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் பவளத்தைக் குறிக்க துகிர், பவளம் என்ற இரண்டு சொற்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்.” (புறம் 218)
“வரியிட்ட பவளமொடு மணி மிடைந்தன்ன” (அகம்-14)
என்பன சங்க இலக்கியத் தொடர்கள்.
பழந்தமிழர் ‘அலைகடல் நடுவில் பல கலம் செலுத்தி”, “நனியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” சிறந்த கடலோடிகளாக விளங்கினாலும், பெண்கள் கடல் பயணம் மேற்கொள்ளுவது வழக்கம் இல்லை. ஆடவர் பயணம் மட்டும் ‘கலத்தில் சேரல்’ என்று கூறப்படுகிறது” என கல்வெட்டறிஞர் புலவர் இராசு கூறினாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மகளிர் பல்வேறு காரணங்களுக்காக கடல் பயணம் மேற்கொண்டதையும் அறியமுடிகிறது.
‘பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்/ அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்…’
என்னும் மீனாட்சியம்மையின் பாடல்வரிகள் போன்று கடல்வழி பயணங்கள் ஒரு சவாலாகவே இருந்த காலத்திலும், இந்தோனேசியாவில் மையம்கொண்டிருந்த டச்சுக்காரர்கள் ஆண்களையும் பெண்களையும் கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டுசென்றனர். நெடுங்கடலில் கப்பல்செலுத்துவதில் வல்லமை பெற்றிருந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் நாகரிகத்தையும், கலையையும், அரசியல், சமுதாயம், மதம் பற்றிய சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும், மொழியையும் பரப்பி வந்தனர். சேர, சோழ பாண்டியர்கள், பல்லவர்கள் அனைவரும் திறமையான கப்பற்படையை வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களின் கப்பற்படை வங்காளக் கடலையே ஆட்சி புரிந்ததாலும், பண்டைய தமிழர்களின் செயற்பாடுகளாலும் இன்றளவும் நம் கண்முன்னே சாட்சிகளாய் உலகம் முழுவதும் பரந்துகிடப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளமுடிகிறது.
உசாத்துணை
Sathyanatha Ayyar, History of India. voi I, pp. 222–223.
T. S. Ayyangar, History of the Tamils, pp. 304–305.
Indonesia, New Guinea (Irian Jaya), and the southern Philippines. 21 [End Page 139]
கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம் – பவள சங்கரி
கொங்கு ஆய்வு மையம் – கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு
தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – முனைவர் கா.இராசன்
இன்னம்பூரான்
தமிழ்மொழியை செவ்வனே கற்க விழைந்த கேரளத்து ராமசுப்ரமண்ய நாவலர் அவர்கள் சம்ஸ்கிருதத்தை ஆதாரஸ்ருதியாக எடுத்துக்கொண்டது அவரது நுண்ணிய அணுகுமுறையின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது; அவர் தமிழன் என்பதில் ஐயமில்லை. இலங்கை தமிழ்நாட்டு பிராந்தியத்தில் இல்லை. ஆனால் இலங்கைவாழ் தமிழர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், நம்மை விட தமிழார்வம் கொண்டவர்கள், தமிழ்த்தொண்டு செய்தவர்கள் தமிழர்கள் தான். வித்துவான் கணேச ஐயர் அவர்களின் தொல்காப்பிய உரை போற்றத்தக்கது. ஆறுமுக நாவலர், கலாநிதி கைலாசபதி என்று பெரிய பட்டியலே நிறுவலாம். எந்த கணக்கில் அவர்களையும், ஏ.கே.ராமானுஜத்தையும், ஜியார்ஜ் ஹார்ட்டையும் தமிழர் அல்ல என்று ஒதுக்க முடியும்? கடந்த சில நாட்களாக, உலகத் தமிழ் மாநாட்டில். பல தமிழறிஞர்கள் தமிழின் தற்கால நிலை பற்றி கவலை தெரிவித்தார்கள். மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் ஆய்வுகளின், பாடங்களின், ஒலி/ஒளி பரப்புகளின், மொழி வல்லுனர்கள் இயங்கும் அருமையான வழிமுறைகளும், நமது தமிழார்வத்தை விட பன்மடங்கு கூடியவை என்பதை நேரில் கண்டேன்.இனியாவது ராமசுப்ரமண்ய நாவலர்களும், அவரை போன்ற பற்பல பன்மொழி புலவர்களும், தமிழ்மொழியில் முன்னிலை அடைந்து தமிழர்களில் மேன்மக்கள் ஆனார்கள் என்பதை பெரும்போலோர் ஏற்றுக்கொண்டால், அந்த தாராள மனப்பாங்கு 2067 வரை. கவனத்துடன், பேணப்பட்டால், தமிழ் சமுதாயம் பட்டொளி வீசி பறக்கும். இதன் பொருட்டு, எனக்கு அண்மையில் கிடைத்த சில மேற்கோள்களை பகிர்ந்து கொள்கிறேன்.
“சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால் தான், இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை ச்ய்யும் ஆக்க்ங்கள் நம்மிடம் இல்லையென்றால், நேற்று ஒருந்தவரை பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்/
சுந்தர ராமசாமி 15 06 98 வானொலி உரையிலிருந்து
28 05 2017“
ஜனத்தொகை கணக்கெடுப்போ, நகரங்களின் மாபெரும் பரப்பளவோ அல்லது தானிய அறுவடையோ ஒரு நாகரீகத்தின் மேன்மைக்கு உண்மையான சின்னங்கள் அல்ல. எத்தகைய மனிதனை அது உருவாக்குகிறது என்பது தான் அதற்கு மேன்மை கிடைப்பதை தீர்வு செய்யும்.”
– ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்: உலகம் போற்றும் தத்துவ ஞானி)
[The true test of a civilization is, not the census, nor the size of the cities, nor the crops — no, but the kind of man the country turns out. -Ralph Waldo Emerson, essayist (25 May 1803-1882) ]
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://chiasuanchong.files.wordpress.com/2012/03/lingua-franca.jpg?w=840
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண். … அவுஸ்திரேலியா
முட்டிபோதி நிற்கின்றார் தட்டிப்பறிக்க முனைகின்றார்
அத்தனைபேர் செயலினிக்கும் முட்டுக்கட்டை போடவேண்டும்
வட்டியினைப் பெரிதாக்கி வரம்பின்றி லாபமீட்டும்
கெட்டகுணம் அத்தனைக்கும் முட்டுக்கட்டை இடல்வேண்டும் !
மதுவொழிக்க முன்னிற்பார் வம்புதும்பு தனையொழிப்பார்
சூதுதனைத் துடைத்திடுவார் சொன்னவற்றைக் காத்திடுவார்
யாவரது வழிகளையும் நாசமாக்க முனைவோரை
முட்டுக்கட்டை போட்டுநிதம் முடக்கிவிடல் முறையாகும் !
அரசியலில் நேர்மையின்மை அறம்பற்றி கவலையின்மை
பெரும்பணத்தைக் குவிப்பதிலே பேராசை கொண்டிருத்தல்
வருகின்ற அத்தனையும் தனக்குவர வேண்டுமென்னும்
அருவருக்கும் நிலையினுக்கு அவசியமே முட்டுக்கட்டை !
அல்லாத வழிகளுக்கு அவசியமே முட்டுக்கட்டை
நல்லவற்றை நடக்கவிட முட்டுக்கட்டை முறையன்று
நல்லவரும் வல்லவரும் வாழ்வினுக்கு அவசியமே
அவர்களுக்கு முட்டுக்கட்டை அமைவதினைத் தவிர்த்திடுவோம் !
காந்திக்கு முட்டுக்கட்டை கனதியாய் போட்டார்கள்
சாந்தியை மட்டுமவர் தன்மனதில் கொண்டிருந்தார்
எத்தனையோ முட்டுக்கட்டை அவர்வாழ்வில் வந்தாலும்
அத்தனையும் அகிம்சையினால் அசைவற்றுப் போனதுவே !
நபிபெருமான் யேசுபிரான் புவிமீது வந்தார்கள்
நாட்டாட்சி துறந்துவிட்டுப் புத்தருமே வந்துநின்றார்
இவர்கள்வரும் பாதையெலாம் எத்தனையோ முட்டுக்கட்டை
இட்டார்கள் யாவருமே கொட்டமெலாம் அடங்கினரே !
ஞானிகளும் யோகிகளும் வந்துவந்து போகின்றார்
நம்வாழ்வு மலர்ச்சிபெற நாளுமவர் அருளுகின்றார்
அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற அனைவருமே
அவர்வாழ்வில் முட்டுக்கட்டை ஆகிடுவார் அறிந்திடுவீர் !
க. பாலசுப்பிரமணியன்
ஆசைகளுக்கு அடிமையான மனம்
ஆசைகளை அடக்குதல் என்பது ஒரு கடினமான செயல். பல துறவிகள் கூட ஆசைக்கு அடிபணிந்து இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ஆசைகளை அடக்குதல் என்பது ஒருவிதமான யோகநிலை. யோகத்திற்கே இலக்கணம் வகுத்த குரு பதஞ்சலி முனிவர் “யோகம் என்பது சித்தத்தின் அசைவுகளை நிலைப்படுத்துவதாகும்” என்று கூறுகின்றார்..முற்காலத்தில் கல்வியின் நோக்கமே ஒரு மனிதனை நிலையான சமநிலை உணர்வுகளுக்குத் தகுதியுள்ளவனாக (ஸ்தித ப்ரஞனாக) உருவாக்குவதாகவே இருந்தது.
தற்போதைய நிலையில் மனம் ஒரு குரங்கினைப்போல் ஒரு ஆசையிலிருந்து இன்னொரு ஆசைக்குத் தாவி எங்கும் நிலையாக இல்லாமல் அலைச்சலுக்கு உட்படுகின்றது. மனத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல ஞானிகள் அழகாக எடுத்துரைத்திருக்கின்றனர்:
“மனத்தகத் தழுக்கறாத மவுன ஞான யோகியர்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார் “
என்கிறார் சிவவாக்கியர்.
ஆசைகளை அடக்குவதற்கு ஒரு மனிதன் தன்னை வெல்ல வேண்டும். மற்றவர்களை வெல்வது என்பது எளிது, ஆனால் தன்னைத் தானே வெல்வது என்பது ஒரு கடினமான செயல். உலகின் மிகச் சிறந்த தத்துவ மேதையாக இருந்த அரிஸ்டோடில் கூறுகின்றார் ” தன்னுடைய வலிமை வாய்ந்த எதிரிகளை வெல்பவனை விட தன்னைத்தானே வெல்பவன் மிகச் சிறந்தவன்.” (I count him braver who overcomes his desires than him who conquers his enemies; for the hardest victory is over self)
இதே கருத்தை வலியுறுத்தும் சீன அறிஞர் லா டீஸு (Lao Tzu) “மற்றவர்களை வெல்ல வலிமை தேவை ஆனால் தன்னைத்தானே வெல்ல வல்லமை தேவை” (Conquering other requires Force; Conquering oneself requires strength)
எபிகுர்ஸ் (Epicurus) என்ற ஒரு மேதை மிக அழகாகக் கூறுகின்றார் “ஒரு மனிதனின் சந்தோஷத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அவனையும் அதிக செல்வத்தைக் கொடுக்க வேண்டியதில்லை , அவனுடைய ஆசைகளைக் குறைத்தால் போதும்.” (If thou wilt make a man happy, add not unto his riches but take away from his desires)
ஆனால் மனிதனுடைய மனமோ ஆசைகளுக்கோ விலைபோய் தன்னை அடகு வைத்து விடுகின்றது, ஏதாவது ஒரு ஆசைக்கு அடிமையாகி தன் உண்மை நிலையை மறந்து துன்பக்கடலில் தன்னை மூழ்க வைத்துக் கொள்கின்றது .
குறிப்பாக காமத்தில் விழுந்த மனம் பெண்ணாசையில் மதி குலைந்து கள்ளுண்ட போதையில் நிலை மறத்தல் போல் தன்னை மறக்கின்றது.
இந்த அவல நிலையை விளக்கும் திருமூலர், “எவ்வாறு ஒரு மனிதன் நல்ல பழுத்த மாங்கனி வீட்டில் இருக்கையில் அதை பதுக்கிவிட்டு புளிய மரம் ஏறி புளியம் பழத்தை நாடுவானோ அதுபோல் மனம் ஒரு மனை விட்டு இன்னொரு பெண்ணை நோக்கி ஓடுகின்றது.” என்று விளக்குகின்றார்.
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிர்ப் புதைத்து
பொருத்தமில்லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
இப்படி வாழுகின்ற மனிதனின் மனம் எப்படியிருக்கும்? எப்போதும் எதிலும் அவனுக்கு ஓர் பயம் இருக்கும். எங்கே தன்னை யாரவது பார்த்து விடுவார்களோ, மற்றவர்கட்கு தன் இழிவான செயல் தெரிந்தால் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயத்திலே ஒரு நடைப்பிணமாக வாழ்வான். இந்த நிலையை நாலடியார் பாடல் வெகு அழகாக விளக்குகின்றது.
புக்க இடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல்.
“விரும்பும் போதும் பயம், திரும்பி வரும்போதும் பயம், போகத்திலும் பயம், வெளியே தெரியாமல் காக்கும் பயம் என்று எப்போதுமே பயத்தில் வாழ்ந்தாவது பிறன் மனை ஏன் செல்லவேண்டும்? “
மனிதனின் மனநிலையை படம் பிடித்துக் காட்டி புத்தி புகட்டும் இந்த அருமையான கருத்து நமக்கு மந்திரமா இல்லை அரு மருந்தா?
(தொடரும் )
நௌஷாத் கான் .லி
ஏம்புள்ள முத்தழகி
ஏங்க வச்சு சிரிச்சு போறவளே
ஆத்துக்குள்ள குளிக்க போறியோ?
அயிர மீனெல்லாம் சந்தோசத்தில் குதிக்குதடி !!
வண்ண வண்ண தாவணி பார்த்து
வானவில் வெட்கத்தில் சிரிக்குதடி
உன் இடுப்பு மடிப்பு பார்த்து
மயங்கி போனேண்டி
சொக்க வைக்கும் என் கரிசல் காட்டு மைனாவே -என்னை
சொந்தமாக்க நம் காதல் கதையை உன் நைனாவிடம் சொல்வாயோ ?
நீ கோலம் போடும் அழகில் தானடி
உன் வாசல் பூக்கள் மலருதடி!!
வானம் பார்த்த பூமியடி
நீ தான் என் காதலின் சாமியடி!!!
சும்மாவே இருந்திருந்து, சோம்பித் திரிந்திடுவார்
வாழ்க்கை வெறுத்துவிட்டது என புலம்புவார்
தன் கையில் எல்லாம் வரவேண்டுமென எதிர்ப்பார்ப்பார்
இருப்பிடம் விட்டு நகர்வதற்கும் காலதாமதம் செய்வார் !
உடம்பை சுமையாய், மனசை பாலைவனமாய்
வாழ்க்கை வறண்டதாய் என்றும் நினைத்துடுவார்
இதுவா வாழ்க்கை என உள்ளுக்குளே புலம்பிடுவார்
வீணாய் போன, நாட்கள் ஆயுள் பகுதியால் மறைத்துடுவார் !
வெந்த சோற்றை தின்று விதிவசத்தால் இறப்பாயா
வாழ்வின் ஓவ்வொரு கணமும் சுவைக்க பழக மாட்டாயா
ஓவ்வொரு விடியலும்,தனக்காகவே என எண்ணமாட்டாயா
வாழ்க்கை வாழ்வதற்க்கே எனவும் நினைக்கமாட்டாயா !
உன்முன் பறந்து விரிந்த வர்ணம் சொல்லவில்லை
பரந்த மனப்பான்மை கொண்டு பார்க்க மனமில்லை
காலையில் சூரிய கிரணங்கள் கண்களை கூசாமலில்லை
இன்னும் உன் சோம்பேறிதனத்திற்கு முடிவு இல்லை!
உன் மனம் அழுக்கு மூட்டை அல்ல
வேண்டாத அழுக்கை மனதிலிருந்து நீக்கு
நல்லெண்ணத்தை மனமெனும் பூந்தொட்டியில் செருகு
புது,புது எண்ணங்களை எண்ணி வாழ்வை புதிதாக்கு !
உனக்கேயின்றி ஊருக்காக உழைத்துப் பார்
உனக்குள் ஏற்படும் உற்சாகத்தை நினைத்துப் பார்
மரணம் என்பது மனிதனுக்கு நிரந்தரம் என நினைத்திடு
உன்னத வாழ்க்கை வாழ்ந்து, புகழினை அடைந்திடு !
ரா.பார்த்தசாரதி
இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள் – 09 – 06 – 2017
கவியரங்கம்
தலைமை – கவியரசு ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழ்த்தாய் வாழ்த்து
புத்தமுதாய் இலங்குதொன்மைத் தமிழைப் போல
பூமிதனில் வேறெந்த மொழிதாம் உண்டோ
முத்தமிழின் பிரிவைப்போல் உலகந் தன்னில்
முகிழ்ந்துள்ள மொழிகளிலே பிரிவு உண்டோ
நித்திலமாய் ஐந்துவகை இலக்க ணத்தை
நீள்புவியில் பெற்றவேறு மொழிதான் உண்டோ
எத்தனையோ மொழிகளினைத் திணித்த போதும்
எழில்மாறாத் தனித்தமிழ்போல் வேறிங் குண்டோ !
அகத்திற்கும் புறத்திற்கும் நெறிகள் சொல்லும்
அருந்தமிழைப் போலெந்த மொழியிங் குண்டு
தகவுடைய திருக்குறள்போல் வாழ்வைக் காட்டும்
தனிநூல்கள் வெறெந்த மொழியி லுண்டு
நகமகுட விரல்கள்போல் காப்பி யங்கள்
நல்லெட்டு பத்துதொகை எங்கே உண்டு
முகத்திற்கு முன்நிற்கும் மூக்கைப் போலே
முன்பிறந்த தமிழ்க்கிணையாய் பிறிதெங் குண்டு !
( 1 )
ஆழ்வார்கள் நாயன்மார் சமணர் யாத்த
அரும்பாக்கள் கொண்டமொழி; இறைவன் போற்றி
வாழ்வித்த சங்கமொழி; கணினிக் கேற்ற
வளமுடைய மொழியென்றே உலகம் ஏற்று
வாழ்த்தியவிஞ் ஞானமொழி; சித்தர் தந்த
வளமருந்து ஞானமொழி; தமிழுக் கீடாய்
வாழ்மொழியில் எம்மொழிக்கு மண்ணி லின்று
வளம்கொண்ட மொழியென்னும் தகுதி உண்டு ! தாயே வணங்குகிறேன் !
தலைவர் வணக்கம்
நூலகராய்த் தம்வாழ்வைத் துவக்கி நல்ல
நூலாக வாழ்பவர்தாம் மோகன ரங்கம்
காலத்தை வெல்கின்ற கவிதை நெய்து
கவின்வனப்பைத் தமிழுக்குச் சேர்க்கும் பாவோன்
கோலத்தில் எளிமையொடு அரவ ணைப்பில்
கோப்பெருமான் பிசிராந்தை நட்பின் பண்போன்
மூலத்தொல் காப்பியத்து நூற்பா போன்று
முத்தமிழைக் காப்பவர்தாம் ஆலந் தூரார் !
கவிதையொடு நாடகங்கள் புதினம் என்று
கருத்தான படைப்புகளை நாளும் படைப்போன்
நவிலுமாறு சிறுகதைகள் குறும்பா என்று
நாட்டோர்கள் புகழுமாறு படைத்த ளிபோன்
கவிதையிலே நாடகத்தைச் சிறுவர்க் காக
கனித்தமிழில் முதன்முதலில் வடித்த ளித்தோன்
புவிபோற்றும் காவியமாய்க் கனவுப் பூக்கள்
புனைந்துதமிழ் அன்னைக்கு அணியைச் சேர்த்தோன் !
குறுந்தொகையின் குழந்தையென்றே குறும்பா பாடிக்
குவித்திட்ட பல்துறையின் நூல்க ளாலே
நறுந்தமிழோ நன்றாக நிமிர்ந்து நின்று
நவில்கின்றாள் தனிப்பெருமை சேர்ந்த தென்றே
பெரும்பேறு நாம்பெற்றோம் ஆலந் தூரின்
பெருங்கவிஞர் மோகனரங்கை பெற்ற தாலே
வருங்காலம் இவரடியைத் தொடர்ந்து சென்றால்
வளமாகும் தமிழ்மொழியே வாழ்த்து வேமே !
( 2 )
அவையோர் வணக்கம்
மாநாட்டை அமைத்தளித்த முத்துசிதம்பர சான்றோரை
மாநாட்டில் பங்கேற்ற மாத்தமிழ் பேராளர்
மன்றில் கவிபாடும் கவிஞர்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்
கவியரங்கக் கவிதை
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !
சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்த்தணைத்துக் கபடுகளைக் களைந்தெ றிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றிப்
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !
காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்துக்
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த போல
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !
( 3 )
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூடப்
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தோழிலாய்க் கற்றோம் !
பிறர்வாழப் பொறுக்காத மனத்தைப் பெற்றோம்
பிறர்நெஞ்சைப் புண்ணாக்கும் கலையில் தேர்ந்தோம்
பிறர்போற்றப் பொதுநலத்தை மேடை மீது
பிசிரின்றிப் பேசிநிதம் கள்ள ராகப்
பிறர்பொருளை அபகரிக்கும் தன்ன லத்தால்
பிறர்காலை வெட்டுவதில் வல்லவ ரானோம்
சிரம்தாழ்த்தும் பழிதனுக்கே நாணி டாமல்
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !
சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம்
சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெ டுத்தோம்
சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில்
சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம்
வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி
வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம்
போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும்
போதையாலே மதம்பிடித்தே அலைகின் றோம்நாம் !
( 4 )
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள்
அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி
அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம்
அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற
வெறியாலே உடன்பிறந்தார் உடல்பி ளந்து
வீதியெலாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம்
நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும்
நேர்த்திகடன் கோயில்முன் செய்கின் றோம்நாம் !
வானத்தை நாம்வில்லாக வளைக்க வேண்டா
வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும்
தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா
தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும்
தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம்
தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும்
மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில்
மண்பதையே அமைதிவீசும் நேயத் தாலே !
பலமொழிகள் பேசினாலும் அன்பு என்னும்
பாலத்தால் ஒருங்கிணைந்தே வாழ்வார் அங்கே
கலக்கின்ற கருத்தாலே மொழிக ளுக்குள்
காழ்ப்புகளும் உயர்வுதாழ்வு இருக்கா தங்கே
இலக்கியங்கள் மொழிமாற்றம் செய்தே தங்கள்
இலக்கியமாய்ப் போற்றிடுவர் ! கணினி மூலம்
பலரிடத்தும் பலமொழியில் பேசு கின்ற
பயனாலே மொழிச்சண்டை இல்லை அங்கே !
( 5 )
நாடுகளுக் கிடையெந்த தடையு மில்லை
நாடுசெல்ல அனுமதியும் தேவை யில்லை
நாடுகளுக் கிடையெந்த பகையு மில்லை
நட்பாலே உதவுதற்கும் எல்லை யில்லை
வாடுகின்றார் ஒருநாட்டு மக்க ளென்றால்
வளநாடு கரங்கொடுத்தே காத்து நிற்கும்
பாடுபட்ட பலனெல்லாம் அனைவ ருக்கும்
பகிர்ந்தளித்தே வாழ்ந்திடுவர் பொதுமை என்றே !
உயிர்பறிக்கும் குண்டுகளைச் செய்வோ ரில்லை
உயிர்மாய்த்து நிலம்பறிக்கும் போர்க ளில்லை
உயர்சக்தி அணுக்குண்டு அழிவிற் கின்றி
உயர்த்துகின்ற ஆக்கத்தின் வழிச மைப்பர்
உயரறிவால் கண்டிடித விஞ்ஞா னத்தை
உயர்வாழ்வின் மேன்மைக்குப் பயனாய்ச் செய்வர்
அயல்நாட்டை அச்சுறுத்தும் இராணு வத்தின்
அணிவகுப்பும் போர்க்கருவி இல்லை அங்கே !
வான்மீது எல்லைகளை வகுக்க வில்லை
வாரிதியில் கோடுகளைப் போட வில்லை
ஏன்நுழைந்தாய் எம்நாட்டு எல்லைக் குள்ளே
என்றெந்த நாட்டினிலும் கேட்போ ரில்லை
தேன்சிந்தும் மலர்மணத்தைச் சொந்த மென்று
சொல்கின்ற முட்டாள்கள் இல்லை அங்கே
கூன்முதுகில் இருப்பதன்றி அறிவு தன்னில்
கூன்விழுந்த குறுமனத்தார் இல்லை அங்கே !
( 6 )
செல்வன்
இவ்வார வல்லமையாளர் – பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)
சென்றவாரம் வெளியான Wonder Woman
(வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ்.
இப்படம் பல மைல்கற்களை கடந்துள்ளது.
பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்.
பெண்கள் சூப்பர்ஹீரோ வாக நடித்தால் படம் ஓடாது எனும் மூடநம்பிக்கையை தகர்த்த படம்.
மிக ஆழமான ஒரு நீதியையும், கதையுடன் சேர்த்து சொன்ன படம்.
பேட்டி ஜென்கின்ஸ் பெண்களின் கோணத்தில் உலகை காணும் படைப்புகளை படைப்பதில் வல்லவர். 2003இல் இவரது முதல் படமான Monster, ஐலீன் உர்னோஸ் எனும் வீடற்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
இரண்டவது படம் எடுக்க இவருக்கு சுமார் 14 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் படம் வெளிவந்தபோது மகத்தான வெற்றி பெற்று, இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக ஆனது.
ஒன்டர் வுமன் அமெசான் எனும் தீவை சேர்ந்தவர். அது பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட தீவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த மாய, தந்திர சக்திகள் படைத்த இளவரசியான ஒன்டர் வுமன் மனிதர்கள் போரால் படும் அவதிகளை களைய முதலாம் உலகப்போர் சமயம் இங்கிலாந்து செல்கிறார்.
அப்படி செல்கையில் தன் இளவரசி பட்டத்தை துறக்கவேண்டி உள்ளது. இங்கிலாந்து செல்லும் ஒண்டர் வுமன் அன்றைய சமூக ஆண்கள் பெண்களை சமமானவர்களாக கருதாததை கண்டு வியப்படைகிறார். ஏனெனில் அவரது தீவில் முழுக்க இருந்தவர்கள் பெண்கள் மட்டுமே. முதலாம் உலகப்போரை தடுத்து நிறுத்தி, தன் காதலனை அந்த முயற்சியில் இழந்து, மனிதர்கள் குற்றம் குறை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடையே இருக்கும் நல்ல பண்புகளையும் கருத்தில் கொண்டு உலகைக் காக்க விரும்புகிறவர்கள் சோர்வடையாமல் அம்முயற்சிகளைச் செய்யவேண்டும் எனும் நீதியை உணர்த்துகிறார் ஒண்டர் வுமன்.
இது ஒரு பெண் ஹீரோவைப் பற்றிய படம் என்றாலும் பெண்ணீய நோக்கில் வந்த படம் என கூறமுடியாது. ஏனெனில் படம் மானுட சமுதாயம் முழுமைக்கும் உள்ள பிரச்சனைகளை மையபடுத்தி வந்த படம். பெண்ணிய நோக்கிலான படம் எனில் அரசியல் சிக்கல்களில் சிக்கி தன் மதிப்பை இழந்திருக்கும். அப்படி ஆகாமல் சாமர்த்தியமாக அனைத்து கட்சியினரும், அனைத்து கொள்கை சார்ந்தவர்களும் பாராட்டும் வண்ணம் ஒரு சிறந்த படைப்பை படைத்த பேட்டி ஜென்கின்ஸ் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.
ஒண்டர் வுமன் மானுட சமுதாயம் முழுமைக்குமான நல்ல வழிகாட்டி என ஐ.நா சபை கருதி ஒண்டர் வுமன் கதாப்பாத்திரத்தை தனது சிறப்பு தூதராகவும் அறிவித்து சிறப்பு சேர்த்தது.
இத்தகைய சிறந்த படைப்பாளியான பேட்டி ஜென்கின்ஸை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் வெற்றி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
”தூதுக்(கு)(பாலுக்கு -ஹிந்தி) அழும்பாலன், தூதானார் பாண்டவர்க்காய்,
ராது(செல்லமாக ராதை)வை வாஅர்த்த ராத்திரியில், -தூதாக
அன்னத்தை சொல்லி அனுப்பிடும், ஆயர்சேய்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!
எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
கொஞ்சி மகிழ்வதற்கு
குழந்தைகள் இல்லாமல்
கெஞ்சிநின்று நோன்பிருந்து
கேட்டுநிற்போம் கடவுளிடம்
நெஞ்சறிந்த கருணைக்கடல்
நிறையவே கொடுத்துவிட்டால்
வெஞ்சொல்லால் கடவுளையே
வெடுக்கென்று திட்டிநிற்போம் !
பஞ்சமுடன் இருக்கையிலே
பலகுழந்தை அளித்துநின்றால்
அஞ்சாமல் ஆண்டவனை
அர்ச்சித்தே நின்றிடுவோம்
கொஞ்சமேனும் இரக்கமின்றி
கொடுத்துவிட்டார் கடவுளென
கெஞ்சிநின்ற பலபேரும்
கேள்விகேட்பார் கடவுளையே !
பணம்படைத்த பலபேரைப்
பார்ப்பதற்குப் பிள்ளையில்லை
பிள்ளைதனைப் பார்ப்பதற்குப்
பணமில்லார் பலபேர்கள்
உலகத்தின் விந்தைதனை
உற்றுநோக்கிப் பார்க்கையிலே
படைத்தவனின் நோக்கமதை
விளக்குவார் யாருளரோ !
என்னதான் நிறைந்திருந்தும்
பேர்சொல்ல ஒருபிள்ளை
இல்லையெனும் நிலைவந்தால்
இன்பமங்கே மறைந்துவிடும்
வறுமையொடு இருந்தாலும்
வாசலிலே பிள்ளைவந்து
மழலைமொழி பேசிவிடின்
வாழ்வங்கே விடிந்துவிடும் !
குழலோசை யாழோசை
கொடுத்துவிடும் இன்பத்திலும்
குழந்தையது ஓசையது
கொடுத்துவிடும் பேரின்பம்
அதனாலே குழந்தையினை
ஆண்டவனோ டொப்பித்து
அனைவரும் அனைத்துநின்று
ஆனந்தம் பெறுகின்றோம் !
இல்லறத்தின் பேறாக
எமக்கின்பம் எதுவென்றால்
நம்குழந்தை எமைப்பார்த்து
நாலுவார்த்தை பேசுவதே
பேசுகின்ற மழலையது
பெரும்பேறு எனநினைத்து
பேருவகை கொண்டுவிட்டால்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !
குழந்தையில்லா வீட்டினிலே
குதூகலம் மறைந்துவிடும்
குழந்தையது சிரித்துவிட்டால்
குதூகலமே நிறைந்துவிடும்
குழந்தைகளைத் தெய்வமாய்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
குவலயத்தின் இன்பமெலாம்
குவிந்துநிற்கும் வாழ்வினிலே !
ஒரு கணப்பொழுதெனினும்
பயம் பற்றிய சிந்தனை
வந்து போகவே செய்யும்.
அர்ச்சகரை முறைத்துப் பார்க்கையில்,
முகச் சவரம் செய்கையில் அந்தக் கத்திக்கு…
தொடர்ந்துப் பயணத்தில்
யாரோ ஒருத்தி
சிலிர்த்துவிட்டுப் போகையில்…
நடு வீதியில் மகிழூர்தி
முரண்டுபிடிக்கையில்…
கதவு திறந்து
காலணியைக் கழற்றுகையில்
அடுக்களையில்
கோபத்தில்
பாத்திரத்தை உருட்டும் மனைவியிடம்…
இன்னும் ..இன்னும்
பயம் சொல்லி வருவதில்லை..
பிதாவே!
உனது பயமும் நாம் அறிவோம்..
மன்னித்தருள்கிறோம்..
மறுபிறப்பில்
என்னைப்போலவே பிறப்பீராக…
முல்லைஅமுதன்
சி. ஜெயபாரதன், கனடா
ஒன்று எங்கள் தேசமே
ஒருமைப் பாடெமது மோகமே
உதவி செய்தல் வேதமே
உண்மை தேடலெம் தாகமே
இமயம் முதல் குமரிவரை
எமது பாதம் பதியுமே.
தென்னகத்தின் முப்புறமும் நீல
வண்ணக் கடலே.
வடக்கில் நீண்ட மதிலாய்
வான்தொடும் இமயம்
ஓங்கி உயர்ந்து காக்குதே.
எந்தையும் தாயும் பல்லாண்டு
இனிதாய் வாழ்ந்த தேசமே !
எங்கள் ஊனும் உயிரும்
இராப் பகலாய்
உழைத்து உன்னைக் காக்குமே !
எங்கள் மூச்சும் பேச்சும்
என்றுமுன் பெயர் ஒலிக்குமே !
பாரத தேச மென்றால்
பூரண உணர்ச்சி பொங்குதே !
சுதந்திரத் திருநாடே !
பங்கம் உனக்கு நேரின்
எங்கள் உதிரம் கொதிக்குமே !
++++++++++++++