
Andal extols Krishna. watercolour. Stratmore paper. 35.5×27 cms
‘’அன்றிவ் உலகம் அளந்தோன் அடிபோற்றி,
சென்றவ்வை குண்டத்தைச் சேர்ந்தவளின் -தென்றல்
திருப்பாவைக் காற்றினை தூற்றிக்கொள் வோரை
விருப்போடு போற்றி வணங்கு’’….கிரேசி மோகன்…
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-மேகலா இராமமூர்த்தி
புதிதாய் மன்றல்கண்ட மணமக்களை மாலையும் கழுத்துமாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. அனிதா சத்யம். பூமாலை சூடிநிற்கும் இவர்களுக்குப் பாமாலை சூட்டுவதும் பொருத்தமே என்று இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாசத்தோடு தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன்.
நாணத்தோடு திரும்பிநிற்கும் மனையாட்டியைக் கண்டு மணவாளனின் முகத்தில் வெற்றிப்புன்னகை அரும்பிநிற்கக் காண்கிறோம்.
கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தோதான புகைப்படமிது என்றே எண்ணுகின்றேன். அவர்களைக் கவிபாட அன்போடு அழைக்கின்றேன்!
*****
”ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உறவென்றும் பட்டுப்போகாது! பெண்ணே…! கணவனைக் கண்ணாய்க் கொண்டு உலகைக் கண்டால் உன் வாழ்வு சிறக்கும்!” என்று இணையருக்கு இல்லற சூக்குமத்தைப் பாட்டினிலே குழைத்துத் தந்திருக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.
திருமணம்
வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்
திருமணம் என்பது, இருமனங்கள் கொண்ட ஒருமனம் என உணர்வாய்
திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்
இனி எச்செயலையும் இருவரின் தீர்மானத்தில் நடத்திக் காட்டிடுவாய்!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே!
நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே!
திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
அவள் பெயரை செல்லமாக அழைப்பதே பழக்கம்!
புகைப்படத்திற்காக இன்முகம் காட்டி சிரிக்கின்றீர்கள்
இல்லற வாழ்க்கையில் சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்!
ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்
இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.
காலங்களும், கோலங்களும், உலகில் என்றும் மாறும்
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!
மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும்
கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!
அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது என்பது வள்ளுவர் வாக்கு.
*****
”மண்ணின் மணத்தோடு நிகழும் மணமிதில் ஒப்பனையும் இல்லை; தப்பெதுவும் இல்லை” என்று நிறைந்த மனத்தோடு மணமக்களை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மண்ணின் மணம்…
ஒப்பனை காட்டும் முகங்களில்லை
ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
தப்பிலாக் கிராமக் காதலிலே
தழைத்த திந்தத் திருமணமே,
செப்பிட வார்த்தை ஏதுமில்லை
சொந்த மண்ணின் நாணமிது,
இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
இனிதே வாழ்க மணமக்களே…!
*****
”கணவனைக் காணவும் நாணிநிற்கும் இந்நங்கையும் நம்பியும் ஈழமும் தமிழும்போல் நெடிதுநாள் இனிதுவாழ்க!” என்று வாழ்த்துகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.
மணமக்களுக்கு வாழ்த்து
நாணமும் பயிர்ப்பும் கொண்டு
நங்கைதன் முகந் திருப்பிக்
காணவும் கூசுகின்றாள்
கமராவைப் பக்கல் நிற்கும்
ஆணவன் சிரிப்பினூடு
அணைத்திட அவளைத் தன்னோ(டு)
ஏனடி வெட்கமென்று இழுப்பது
இனிய காட்சி.
வாழ்வினிலிணைந்த இந்த
மணமக்கள் நீடு வாழி
தோழமை குலையா தென்றும்
துயர்படா தினிது வாழி
ஊழ்வினையுருத்து வந்து
உயர்வினைத் தடுத்திட்டாலும்
ஈழமும் தமிழும் போலும்
இணைபிரியாது வாழி
தம்பதிகாள்!
அன்புக்கினிய தம்பதியாய்
அறிவும் திருவும் ஒரு சேர
இன்பத்தமிழே மூச்சாக
என்றும் வாழ்க இனிதாக!
*****
”மணமகனே! உனைக்கரம் பிடித்த இப்பெண்மணியே இனி உன் கண்மணி; மலரும் மணமுமாய், உடலும் உயிருமாய், குயிலும் குரலுமாய், அகந்தையை நீக்கி அன்பைத் தேக்கி நீவிர் நீடுவாழ்க!” என மணவாழ்த்துக் கூறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
உறவின் உன்னதம்:
இரு மனம் இணையும் திருமணம் !
ஊர் கூடி வாழ்த்தும் திருமணம்!
உறவின் பாலம் திருமணம்!
அழகுக் கோலம் திருமணம்!
வெட்கம் கலந்த சிரிப்புடனே மங்கை நல்லாள்!
ஆனந்தம் பொங்கும் முகத்துடனே மாப்பிள்ளை!
அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்!
இல்லறம் சிறக்க வாழ்த்துகிறோம்!
உன்னைக் கரம் பிடித்தாள் இந்தப் பெண்மணி!
இனி இவள்தான் உந்தன் கண்ணின் மணி!
மலராய் அவள் இருக்க! நறுமணமாய் நீ இரு!
உடலாய் அவள் இருக்க! உயிராய் நீ இரு!
பயிராய் அவள் இருக்க!மழையாய் நீ இரு!
நிலவாய் அவள் இருக்க!வானாய் நீ இரு!
பாட்டாய் அவள் இருக்க! பொருளாய் நீ இரு!
குயிலாய் அவள் இருக்க! குரலாய் நீ இரு!
தெய்வமாய் அவள் இருக்க! கோவிலாய் நீ இரு!
உனக்காக அவள் விட்டது ஏராளம்!
தாய்,தந்தை விட்டு வந்தாள்!
வீட்டை விட்டு வந்தாள்!
தன்னை தொலைத்து விட்டு உன்னோடு
சேர வந்தாள்!
அவளுக்காய் நீயும் விடு:
உன் ஆணவத்தை!
உன் அகந்தையை!
விட்டு விடாதே:
உன் அன்பை!
உன் பண்பை!
உன் பரிவை!
உன் உயிரெனும் மேலான மனைவி எனும்
மங்கை நல்லாளை!!!!
*****
அல்லி விழிதனில் அஞ்சனமிட்டு, கல் வளையல்களும் காற்சிலம்புகளும் கவிபாட, எதிர்காலம் குறித்த எண்ணவோட்டத்தில் இடையிடும் நாணம் தடைபோட, தலைகுனிந்து நிற்கும் தாமரையை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. ஹேமா வினோத்குமார்.
நாணத்தில் நான்!!
அந்நாளிற்காக!!
செம்மண்ணில் கால்பழுக்க
கருவேல முள்குத்தி
அரப்பிலைகளைத் தேடி
அங்கிருந்த கருஞ்சீகயைச் சேர்த்து
ஆசையாய் அரைத்து வைத்தேன்!!
கொட்டைப்பாக்குடன்
சிறுதுளி மோர் சேர்த்து
மருதாணி இலைகளை
மையாய் அரைத்தெடுத்தேன்!!
கல்வளையல்களும்
கண்டாங்கிச் சேலையும்
கள்வா நீ வாங்கி வரக்
காத்திருந்தேன்!!!
உன் முற்றம் எம்மொழி சிறக்க
ஆயிரம் முத்துடைய
காற்சிலம்பைக் கண்டெடுத்தேன்!!
மும்மாதமும் மூன்று நாட்களைப்போல்
உருண்டோடின!!
தைத்திருநாளில்
மேகக்கண்ணி இருள்தனைஅப்பி
சூரியனார் மலைமுகடுகளில்
கம்பீரமாய் எட்டிப்பார்க்க
குளிர்க்குப் பச்சைக்கம்பளம் போர்த்திய
கைத்தமலை நடுவனிலே
பாங்காய்ப் பனையோலைப்பின்னிப்
பக்குவத்தோடு பச்சைமேடையமைத்துப்
பம்பையும் மேளமும்சூழ
பட்டாடை கட்டி
செஞ்சந்தனத் திலகமிட்டு
மகிழம்பூ குங்குமத்தோடு
மிடுக்காய் நீயும்!!
அல்லிவிழிதனில் அஞ்சனமிட்டு
உள்ளங்கை சிவக்கச்
செங்காந்தள் மலர்சூடி
கல்வளையல்களோடும்
காற்சிலம்புகலோடும்
உன் விழிப்பார்வைக்காக
நாணத்தில் நான்!!
நீ கட்டிய மஞ்சக்கொம்போடு
முவ்வேழு வருடங்கழித்து
பல்போன கிழடுகளாய்ப்
பிள்ளைகளோடும்
பேரப்பிள்ளைகளோடும்
கொஞ்சிவிளையாடும் தருணத்தில்
நீ அளிக்கும் கள்ளமுத்தத்தில்
செம்மேனி சிவந்து
நினைக்குமட்டும்
இக்கணமே!!!
நாணத்தில் நான்!!!
*****
மணக்கோலத்தில் மாப்பிள்ளை, பெண்ணைக் கண்ட மகிழ்ச்சியில் தங்கள் மனம்போட்ட கோலத்தைக் காலத்தால் அழியாக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் கவிவலவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
எளிய திருமணம்
எளிய முறையில் இங்கொரு திருமணம்! – உளக்
களிப்பில் குறைவிலா அழகிய திருமணம்!
பகட்டு என்பது சிறிதும் இல்லை!
திகட்டும் மகிழ்வில் குறைவேதும் இல்லை!
சாரட்டு வண்டியில் பூட்டிய குதிரை
சரிகைப் பட்டு ஏதும் இல்லை! – மலர்த்
தோரணம் ஏதும் தொங்க வில்லை!
காரணம் இல்லாத் துள்ளிசை இல்லை!
அதிர்வேட்டு ஏதும் முழங்க வில்லை!
சதிராட்டம் ஏதும் நடக்க வில்லை!
உணவுப் பொருட்கள் வீணடிப்பு இல்லை!
கனவுலகம் போன்ற அலங்காரம் இல்லை!
பொன் வைரம் சீர்வரிசை யெல்லாம்
கண்ணுக்கு குளிர்ச்சியாய்க் காட்சிப் படுத்தி
வண்டி வண்டியாய்க் கொட்டிக் கொடுத்தும்
வாங்கிட முடியுமா வாழ்வின் நிறைவை?
திருமணம் என்ற பெயராலே அனைவரும்
தேவையற்ற செலவைத் தவிர்த்திடுவோம்!
வாழ்க்கைக்காகப் பணம்தேடி நம்
வாழ்வு தொலைவதை உணர்ந்திடுவோம்!
சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்போம்!
சிக்கலற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம்!
பொருள்சார் வாழ்வில் நிறைவைத் தருவது
பொதுவாய்ச் சிக்கனம் என்ற மந்திரமே!
மணவாழ்க்கையின் வெற்றி, பணம் சார்ந்ததில்லை; அது மணமக்கள் மனம் சார்ந்தது! ஆம், செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!
திருமணம் என்ற பெயரால் மக்கள் செய்யும் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாய் மணமுடித்து இனிமையாய் வாழ்வதே உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை. அவ்வாறு எளிமையாய் மணம்புரிந்து களிப்போடு இல்லறத்தில் இணைந்திருக்கும் மணமக்களின் உயர்வையும், அவ் எளிய திருமணத்தின் ஏற்றத்தையும் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
நிர்மலா ராகவன்
`உடனே வேண்டும்!’
என்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்!’
அந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு — எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார்.
மனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்!” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் — அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்!
படிப்பது என்ன வழக்கமோ!
கோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார்.
“வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ!” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா?”
மீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஏன் படிக்கணும்?
படிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை.
ஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது.
உள்நோக்கும் அயல்நோக்கும்
உள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.
கல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், `போகலாமா?’ என்று நச்சரிப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் `என்றைக்காவது உதவும்!’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள்.
பல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். `இவர் ஏன் என்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது.
குட்டிக்கதை
அவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை `கரையான்!’ என்று பழிப்பாள்! தன்மேல் முழுக்கவனமும் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது.
அவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்! பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம்.
கதை
மைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் `குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது.
மீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு! இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம்.
எப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், `நன்றாகப் பழகுகிறாள்!’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா! அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்!
தனிமை எதற்கு?
நாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது.
புகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், `எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை!’ என்று அலுத்துக்கொள்வார்கள்.
இப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா!
கற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள்
இரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும்.
அதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை — நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும்.
தியானமும் யோகா மாதிரிதான். `இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பவர்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன்.
அயல் + உள் நோக்குபவர்கள்
மிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம்.
இவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள்.
இவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள்.
`மாறிப்போயிட்டா!’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை.
மனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா? இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான்.
யாரை மணக்கலாம்?
எதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், `இவள் ஏன் தன்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் உண்டாகிறது.
இம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான்.
சிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள்.
`சண்டை வருமே?’ என்கிறீர்களா?
எந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது!
அத்துடன், `மாற்ற முடியாது!’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள்.
யாரை மணக்கலாம்?
இம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
குணத்திற்கேற்ற தொழில்
குடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.
கதை
இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை! தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்பின், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள்.
பல வருடங்கள் கழித்து, `என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்!’ என்று புலம்புகிறார்.
அவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும்.
நாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது.
தொடருவோம்
-முனைவர் பா. உமாராணி
மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. அது காலத்திற்குக் காலம் தன்னைச் செம்மைப்படுத்தியும், மெருகுபடுத்தியும் வாழும் இயல்பினையுடையது. அதனடிப்படையில் நோக்கும்போது மனித வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் தன்னை மெருகுபடுத்திக் கொண்டு வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. எனினும் இன்றளவும் பழமையின் வேர்கள் ஆழ ஊன்றியதாய் அமைந்த தமிழர்தம் வாழ்வியலை எத்தகையதொரு பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை இன்னும் நாம் உணராமலிருக்கிறோம்.
ஒரு சமூகம் தான் கட்டமைக்கப்பட்ட ஆதிசூழலில் தன் வேர்களை அனைத்து நிலைகளிலும் பதியவைத்துக் கொண்டே வந்துள்ளது என்பதை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் தம் வாழ்வியலை, அதனோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் ஏடேற்றிவந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய தமிழ் சமூகப்பரப்பை, விரிந்த அதன் பண்பாட்டுச் சூழலை உய்த்துணர முடிகிறது. இத்தகையதொரு சிறப்பினையுடைய சங்கப் பாடல்களில் மனித உணர்வுகளைத் தௌ்ளிதின் விளக்கும் தன்மையுடையதும், நுணுகிக் காணும் தன்மையுடையதுமான குறுந்தொகைப் பாடல்கள் பாலைநில மக்களின் வாழ்வியலை, வாழ்வியலோடு தொடர்புடைய உணவுச் சூழலை எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.
பாலைத் திணை சுட்டும் உணவுகள்
குறுந்தொகையில் பாலைநில உணவுகள் என்பவை பெரும்பான்மையும் இறைச்சியும், வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையதுமான சிறுதானிய உணவுகளுமேயாகும். இயற்கையின் ஆளுமையையும் அதன் கூறினையும் ஒருங்கே உணர்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் உணவுகள் இயற்கையோடு தொடர்புடையனவாகவும், இயற்கைசார்ந்த சமூகச் சூழலை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. பாலைநில உணவுச் சூழலை நாம் இரு நிலைகளில் காணலாம்.
1.விலங்குகளின் உணவு
2.மனிதா்களின் உணவு
என்ற இரண்டு உணவுச் சூழலை முன்வைத்தோம் என்றால் அதில் உணவினைப் பதியவைத்தல் என்ற தன்மையிலிருந்து விலகி சமூகச் சூழலை முன்வைப்பதற்காகவே உணவுச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
விலங்குகளின் உணவு – சூழலமைவு
தலைவன், தலைவியின் துயரினை மிகுத்து ஓதும் விதமாகப் பாலைத் திணையில் விலங்குகள் குறித்த உணவுப் பதிவுகள் அமைந்துள்ளன. தலைவனுக்கோ, தலைவிக்கோ ஏற்படும் பிரிவாற்றமையையும், அவர்களின் உள்ளத்தின் வேதனையையும் மிகுவித்துக் கூறும் விதமாக விலங்குகளின் உணவுச் சூழல் பதியப்பட்டுள்ளது. பிரிவாற்றாமையின் காரணமாக தலைவனோ, தலைவியோ அடையும் துயரினை விலங்குகளின் உணவுக்கான செய்திகளோடு தொடா்புபடுத்திக் கூறும்போது பெரும்பாலும் ஆண் விலங்குகள் தங்கள் பிணையோடு இருக்கும் அன்பினிற்கினிய செய்திகளை முன்வைத்தே கூறப்பட்டுள்ளது. இயற்கையில் நிகழும் இக்காட்சிகளைக் கண்ணுறும் தலைவன், தலைவியின் துயரினை உணா்ந்து கொள்வான் என்று ஆற்றுப்படுத்தும் பாடல்களாகப் பெரும்பாலான பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.
தலைவன் தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்கின்றான். குறிப்பிட்ட பருவத்தே வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் பருவம் வந்தும் வாராமையை உணா்த்தும் விதமாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகு பாடல்கள் தலைவியின் உள்ளத்தே தோன்றும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. வழியின் ஏதம் போன்றவற்றைக் குறிக்காமல் பருவம் வந்தும் பொருள்மேல் தலைவன் கொண்ட ஈர்ப்பினை முன்வைத்துக் கூறும் இப்பாடல்கள் தலைவியின் தன்னிரக்க நிலையினை முன்வைக்கின்றன. மேலும் தலைவன் சென்ற வழியினையும், வினைமுடித்து தலைவன் திரும்பி வருவான் என்பதையும் கூறி தலைவியை ஆற்றுப்படுத்தும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனை,
“உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
வாய்ப் புணா்வு இன்மையின் வாரார் கொல்லோ
மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை
அரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலை இறந்தோரே” (232)
என்ற பாடல் உணா்த்துகிறது. பாலை நிலத்தில் வேறு உணவு ஏதுமில்லாததால் வருந்திய மான், தான் உண்ணலாகாத மரலை உணவாக உண்டது. யானை பசியினால் உண்பதற்கு ஒடித்துச் சென்ற யாமரத்தின் நிழலில் அது உறங்கும். இங்ஙனம் உண்பதற்கும், உறங்குவதற்கும் இடா்ப்படுவதை ‘மாஇருஞ் சோலை’ என்ற தொடா் குறிக்கும். இத்தகு பாலைப் பகுதியில் மழைபெற்றுத் பயிர்கள் தளிர்த்தால் அங்குவாழும் உயிர்கள் உயிர்பெறும். அதுபோல தலைவனின் தலையளி பெற்றுத் தலைவியும் மகிழ்வாள் என்று பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.
தலைவன் வினைமேற்சென்ற வழியானது விலங்கினங்கள் அன்போடு தன் பிணையுடன் வதியும் காட்சியினை உடையபகுதி. அதனைக் கண்ணுற்ற தலைவன் தன் நிலையறிந்து திரும்பி வரமாட்டானா? என்ற பெண்ணின் ஏக்கம் தொனிக்கும் குரலாக சில பாலைத் திணைப் பாடல்களில் விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் அமைந்துள்ளன. சான்றாக,
“நசை பெரிது உடையா் நல்கலும் நல்குவா்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின – தோழி! – அவா் சென்ற ஆறே” (37)
என்ற பாடல் தலைவன் பிரிந்துசென்ற வழியானது ‘பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரைப் பிடியினைப் பருகச் செய்யும் அன்புடை இடமாக உள்ளது. எனவே தலைவனும் இடைச்சுரத்தின் கண் கண்ட காட்சிகளினால் நின் நிலையறிந்து விரைந்து வருவான் என தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கின்றாள்.
தலைவன் குறித்துச் சென்ற பருவத்தினை நினைவூட்டும் விதமாகவும் (பா.169), தலைவன் முன்னா் தலைவியுடன் இருக்கும் காலத்தில் இனிமையுடையவனாக இருந்ததையும், பிரிவுக் காலத்தில் அதனை நினைத்து தலைவி ஆற்றியிருக்கும் தன்மையினையும் முன்வைக்கும் விதமாக (பா. 252, 209, 213) பல பாடல்கள் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து தலைவி ஆற்றியிருக்கும் காலத்தில் தன் அழகும் இளமையும் பயனற்றுப் போவதையும் இத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன. தலைவன் தன் அழகினையும், இளமையினையும் நினையாது சென்ற செய்கையானது,
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயா் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே” (27)
என்று வௌ்ளிவீதியார் குறிப்பிடுகின்றார். தன் அழகும், இளமையும் யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயனில்லாமல் கழியும் வலியினை இப்பாடல் முன்வைக்கிறது.
தலைவன் மணந்து கொள்ளாமல் காலநீட்டிப்புச் செய்கிறான். இதனால் தலைவி அவன் பிரிவினைத் தாங்க இயலாமல் வருந்துகின்றாள். அங்ஙனம் அவன் காலம் நீட்டித்தவழி தலைவிக்கு உடல்சார்ந்த இடா்ப்பாடுகளும், உள்ளம் சார்ந்த இடா்ப்பாடுகளும் தீமை விளைவிப்பதோடு, அலா் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. பெற்றோர் மணத்திற்கு உடன்படாத நிலையில் தலைவி தனக்கு அலா் போன்ற துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உடன்போக்கு நிகழ்த்துவதையும் (பா.149, 255…) இப்பாடல்கள் முன்வைக்கின்றன. மேலும் செலவழுங்கல் என்னும் தன்மையில் அமையும் பாடல்களும் (பா. 249,211…) காணப்படுகின்றன. விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் தலைவியின் தன்னிரக்கத்தை மிகுவிக்கும் பகுதிகளாக அமைவதை இப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.
மனிதா்களின் உணவு
வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வருவதற்கான நிமித்தங்கள் கிடைத்தவழி தலைவி தலைவனுக்காக தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாக காக்கைக்குச் சிறப்புச் செய்வதையும் இத்திணைப் பாடல்கள் முன்வைத்துள்ளன. மனிதா்கள் உண்ணும் உணவு பலிச்சோறாக விலங்குகளுக்குப் படைக்கப்படுவதை,
“திண்தோ் நள்ளி கானத்து அண்டா்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (210)
என்ற பாடல் உணா்த்துகின்றது. இதில் ‘திண்ணிய தேரினையுடைய நள்ளி என்பவனுடைய காட்டிலுள்ள இடையா்கள் வளா்த்த பலபசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய விரும்பத்தக்க சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் தன் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விரிந்தினா் வருவதைக் கரைந்துகூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்’ என்று கூறுவதிலிருந்து தலைவியின் வருத்தமும், வேதனையும் புலப்படுத்தப்படுகின்றது.
விருந்தினரைப் போற்றும் முகமாக உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்பு இத்திணைப் பாடல்களில் காணப்படுகிறது. வினைமேல் சென்ற தலைவன் திரும்பிவந்து தலைவியுடன் வதியவேண்டி அறிவுரை வினவுதலும், அதன் பொருட்டுத் துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதற்கு வழிகோலுதலையும் முன்வைக்கும் விதமாக,
“ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வௌ்இழுது
ஓர்இல் பிச்சை ஆர மாந்தி
அறிசர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
‘மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கல் வருவது?’ என்றி
அக்கால் வருவா் எம் காதலோரே” (277)
என்ற பாடல் குறிப்பிடுகிறது. ‘பொய், கொலை, களவு, கள், காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில் நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திரளை, நரை எருமையின் வெண்ணெயோடு, எட்டு இல்லங்களில் சென்று எண்கவளம் பிச்சையாகப் பெறாமல் எம்முடைய ஒரு மனையின் கண்ணே அப்பிச்சை முழுவதும் பெறுவதுடன், இனிய நீரினையும் பெற முடியும். ஆதலால் தலைவன் வரும் காலத்தைக் குறித்து கூற வேண்டுகிறாள் தோழி.’ மனிதா்கள் உண்ணும் உணவு வகைகளான வரகு, நெல், கரும்பு, பால், மீன், மான் இறைச்சி, இறைச்சி உணவுகள் போன்றவற்றைச் சுட்டும் பாடல்களாக (282, 331, 352, 356, 396,398) பல பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் தலைவன், தலைவியரின் பிரிவுத்துயரினை எடுத்தோதும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தனித்த உணவுப் பதிவுகளாக அமையாமல் பலியிடுதல், அறிவா்க்கு உணவு வழங்கல், விருந்து படைத்தல் என்ற நிலைக்களன்களில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவையன்றி பல பாடல்களில் விலங்குகள் தம் உணவுகளைத் துணையோடு உண்ணும் காட்சிப்படுத்தல் காணப்படுகிறது. இக்காட்சிகள் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவும், தலைவி தோழியிடம் கூறும் முகமாகவும், தோழி தலைவியை ஆறுதல்படுத்தும் நோக்கிலும் புனையப்பட்டுள்ளன.
இயற்கையில் காணப்படும் உணவுகளை அவற்றின் நிலச்சூழலோடு தொடா்புடையதாகவும், மனித மனத்தின் உணா்வுகளோடு பிணைத்துக் காணுவதாகவும் ஒருசேரப் படைத்துக்காட்டுகின்ற தன்மையினைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. அத்தகு ஒரு சூழலையே பாலைத்திணைப் பாடல்களும் முன்வைத்துள்ளன.
*****
பார்வை நூல்கள்:
*****
கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோவை – 21.
க. பாலசுப்பிரமணியன்
திருக்கோலூர்
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்
சங்கநிதி பதுமநிதியோடு செழிப்பளிக்கும் நவநிதியும்
அங்கத்திலே அழகுடனே அணிந்தாலும் குபேரன்
கண்விழியைக் காமத்திலே கலங்கிடச் செய்தானே
கையிருந்த நிதியெல்லாம் கைகழுவி நின்றானே !
செய்ததவறால் சிந்தைவருந்திச் சிவனருளைத் தேடியவன்
மெய்வருத்தித் தவமிருந்தே மாதவனின் அருள்நாட
எய்தகணை இடம்சேரக் கண்திறந்து கண்ணனுமே
மெய்சிலிர்க்க மரக்காலால் மனம்நிறையக் கொடுத்தானே !
திருமகளின் விழியருளால் தழைத்தோங்கும் நவநிதியைத்
திருமாலும் மனமிறங்கித் தந்திடுவான் தடையின்றி
திங்களெல்லாம் மும்மாரி பெய்திடுதல் போலெங்கும்
திகட்டும்வரை மரக்காலால் அளந்திடுவான் மாநிதியே !
நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்
நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்
நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்
நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்
பூங்காற்று அணைத்திருக்கப் பூமணத்தின் போதையிலே
பூங்குழலின் நாதத்திலே பூவுலகைக் காப்பவனே
பூங்கோதை துணையிருக்க புவியெல்லாம் வியந்திருக்கப்
பூந்தமிழில் உனைப்பாட புலனெல்லாம் சிலிர்க்குதய்யா
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
இன்னொருவன் மார்பில் புரளும்
சின்னப் பெண்ணே ! நீ
செத்துப் போவது நல்லதென நான்
சிந்திக்கிறேன்!
சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும்
சின்னப் பெண்ணே!
இன்றேல் எனக்குத் தெரியாது நான்
எப்படிப் பட்டவன் என்று!
உயிரைப் பற்றிக் கொண்டு
இயன்றால் நீ
ஓடிப் போவது நல்லது
சின்னப் பெண்ணே!
மண்ணுக்குள் புதைத்துக் கொள்
மண்டையை
சின்னப் பெண்ணே!
அடுத்தவன் அணைப்பில் நீ இருப்பின்
முடியும் உன் அற்ப ஆயுள்
சின்னப் பெண்ணே!
முன்பே தெரியும் உனக்கு நான்
மூர்க்கன் என்பது!
பொறாமை பிடித்தே பிறந்தவன் நான்
சின்னப் பெண்ணே!
உன்னை மாற்ற வாழ்நாள் முழுதும்
என்னால் முடியாது!
ஓடிப் போவது நல்லது
உயிருடன்
சின்னப் பெண்ணே!
அடுத்தவ னோடு படுப்பதைப்
பார்த்தால்,
முடியும் உன் அற்ப ஆயுள்
சின்னப் பெண்ணே!
செண்பக ஜெகதீசன்
தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
-திருக்குறள் -619(ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
இறையருளால்
இயலாது போனாலும்,
மனிதனின்
இடையறாத முயற்சி
அதனளவில்
நல்ல பலனைத் தரும்…!
குறும்பாவில்…
இடைவிடா முயற்சி,
இறையருளைவிட உழைப்புக்கேற்ற
நற்பலன் தரும்…!
மரபுக் கவிதையில்…
இறைவன் அருளால் முடியாதது
எதுவு மில்லை எனுமுண்மை
குறைந்தே முடியா நிலையினிலும்,
குறையா முயற்சி கொண்டேதான்
நிறைந்த மனத்தொடு மனிதனவன்
நன்றாய் வருந்திப் பணிசெய்தால்,
மறைந்து விடாதே அவனுழைப்பு
மிகுந்த பலனைத் தந்திடுமே…!
லிமரைக்கூ..
மனிதனின் அயராத உழைப்பு,
இறையருளால் இயலாத நிலையினிலும்
நற்பலன் பெற்றிட அழைப்பு…!
கிராமிய பாணியில்…
ஒழைக்கணும் ஒழைக்கணும்
ஒடம்புநோக ஒழைக்கணும்
மொயற்சிசெய்து
நல்லபடியா ஒழைக்கணும்..
கடவுளால முடியாததயும்
கடின ஒழைப்பால வாங்கலாமே,
மொயற்சிசெய்து ஒழைச்சாலே
ஒழைப்புக்கேத்த
நல்லபலனப் பெறலாமே..
அதால
ஒழைக்கணும் ஒழைக்கணும்
ஒடம்புநோக ஒழைக்கணும்,
நல்லபடியா ஒழைக்கணும்…!
க. பாலசுப்பிரமணியன்
வாழ்க்கை ஒரு போராட்டமோ போட்டியோ அல்ல
விமானத்திற்கு உள்ளே செல்வதற்கான பயணிகள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு அருகில் வந்ததும் எனது இருக்கை அந்த வரிசையின் நடு இருக்கையாக இருந்ததால் அதற்கு முன் இருக்கையில் இருந்தவர் சற்றே எழுந்து எனக்கும் என் இருக்கைக்கு முன் இருந்தவருக்கும் உள்ளே செல்ல வழி விட வேண்டிய நிலை இருந்தது. எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் “நீங்கள் இருவரும் நான் அமருவதற்கு முன்னாலேயே வந்திருக்கவேண்டும்” என்று சற்றே முனகினார். எனக்கு சற்று வியப்பாக இருந்தது. கூட இருந்த நபரோ பதிலுக்கு “நாங்களும் வரிசையில் தான் வந்து கொண்டிருக்கின்றோம். சற்று பின்னே… ” என்று சொல்லி முடிப்பதற்குள் “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் உட்காருவதற்கு முன்னே நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்று மீண்டும் சொன்னார்
அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் கீழே எதையோ தேடிய அந்த நபர் கீழே விழுந்திருந்த தன்னுடைய சிறிய தொப்பியைக் கைகளால் எடுத்துக் கொண்டே “உங்களுக்காக எழுந்ததால் தான் தொப்பி கீழே விழுந்து விட்டது” மீண்டும் ஒரு கசப்பான வார்த்தையை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் பணிப்பெண்கள் சிற்றுணவுகளை விற்பதற்காக வந்தபொழுது ஏதோ ஒன்றை வாங்கிய அவர், அந்த பணிப்பெண்ணிடம் “இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி எங்கே?” என்று வினவினார். பணிப்பெண்ணோ இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்று கிடையாது” என்று சொல்ல, அவர் துர்வாச முனிவராகவே மாறிவிட்டார். “நீங்களெல்லாம் ஏதோ சொர்க்கத்திலிருந்து எங்களுக்குப் பணி செய்ய வந்தது போல் உங்களுக்கு நினைப்பு” என்று விரும்பத்தகாத வரையில் பேசினார். அனைவரும் அவருடைய பேச்சையும் நடவடிக்கைகளையும் பார்த்துச் சிரித்தனர். மொத்தத்தில் அவரைச் சுற்றி உள்ள எல்லா நடவடிக்கைகளிலும் அவர் போராட்டம் வெளிப்பட்டது.!
பலபேர் இவ்வாறு வாழ்க்கையில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்திலும், தோல்விகளைச் சந்திக்கவும் ஏற்றுக்கொள்ளவும் இல்லாத ஒரு மனநிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
“கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக” – என்பது வள்ளுவம்.
கற்றல் என்பது ஒரு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வு அல்ல. அது ஒரு மனிதனை வாழ்கைக்குத் தயாரிக்கும் நிகழ்வு. நல்லவற்றையும் பயனுள்ளவைகளையும் கற்றுக்கொண்டு அவைகள் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் அவற்றை அமைத்துக்கொள்ளுவதுதான் கல்வியின் நோக்கமே.
சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப் பள்ளியில் காலெடுத்து வைத்த பொழுது சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் தாரக மந்திரம் “அறம் செய்ய விரும்பு ” . மனித நேயத்தை வளர்ப்பதற்கான முதல் படி கல்வியின் நோக்கமே ஒரு தனி மனிதனை சமூகத்திற்கு உபயோகமுள்ளவனாகவும் மனிதநேயம் உள்ளவனாகவும் வளர்ப்பதே.
மாறாகத் தற்காலத்தில் இளம் வயதிலிருந்தே போட்டி மனப்பான்மையையும் ஆதிக்க எண்ணங்களையும் வளர்ப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துவிட்டது. இதனால் இளம் வயதிலிருந்தே போட்டிகளால் ஏற்படக்கூடிய உணர்வுகளான பொறாமை, இயலாமையினால் வரக்கூடிய தோல்வி மனப்பான்மை, தன்னம்பிக்கை இழத்தல், தன்மானப் பிரச்சனைகள், தாழ்வு நோக்கங்கள், பொறுமையின்மை, எரிச்சல்கள் உணர்வுப் போராட்டங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அழித்துக்கொண்டிருக்கின்றது. இந்தக் கட்டத்தில் சிறுவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியின் தேவை அத்தியாவசியமாகின்றது.
குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு சிறிய வயதில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளை முன்னுதாரணமாக வைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வளர்த்தால் அவர்கள் மனநலம் நல்ல முறையில் வளர்ந்து வளமான வாழ்விற்கு வித்தாக அமைவதாகக் கூறுகின்றார்கள் ஒரு குழந்தைக்கு முக்கியமானது தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் மிக்க அவசியம். வீடுகளில் தங்கள் நிர்பந்தங்களுக்கு நடுவிலும் சிறிது நேரம் குழந்தைகளுக்காகவே ஒதுக்குதல் அவசியம்.
அலைபேசியில் வர்ணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்தது. அந்த குடும்பத் தலைவர் மாதத்தில் பல நாட்கள் தொழில் நிமித்தம் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒருநாள் மாலை தன்வீட்டில் இரவு உணவுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கின்ற அவருடைய சிறிய மகன் தந்தையை அணுகி ” நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான். உடனே அவனும் தந்தையைப் பார்த்து “உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் எவ்வளவு?” எனக் கேட்டான். வியப்படைந்து தயங்கிய தந்தை, சற்று யோசித்த பின் “எனக்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து டாலர் கிடைக்கிறது.” என்கிறார். உடனே மகனோ “அப்பா, எனக்கு ஒரு ஐந்து டாலர் கடனாகக் கொடுக்க முடியுமா. நான் அப்புறமாகத் திருப்பித் தருகின்றேன்.” எனச் சொல்ல மீண்டும் வியந்த தந்தை தயங்கிக்கொண்டே தன்னுடை பர்சிலிருந்து ஒரு ஐந்து டாலரைக் கொடுக்கின்றார். அதை வணங்கி கொண்டு சென்ற அவர் மகன் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று தலையணைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த சில காசுக்களை எடுத்து எண்ணுகின்றான். அதுவும் ஒரு ஐந்து டாலர் இருக்கின்றது., இரண்டையும் சேர்த்து பத்து டாலராக எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்று “அப்பா, இதோ பத்து டாலர் இருக்கின்றது, எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் வேலை பார்க்கமுடியுமா?” எனக் கேட்க, அதிர்ச்சியடைந்த தந்தை அவனிடம் “உனக்காகவா? என்ன செய்ய வேண்டும்?” என்றவுடன் “நீங்கள் ஒரு மணி நேரம் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்” என்று கேட்கின்றான். தந்தையின் கண்கள் கலங்குகின்றன.
இது பல வீடுகளில் நடக்கும் வாழ்க்கை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். “ஒரு மனிதனின் எண்ணங்களே அவன் வாழ்கையையே வடிவமைக்கின்றது” என்பது பல அறிஞர்களின் கருத்து, வாழ்க்கையைப் பற்றி நம்முடைய சிந்தனை தான் என்ன?
(தொடருவோம் )

The Tesla Roadster mounted on its payload adapter before fairing encapsulation
|
|
| OPERATOR | SpaceX |
|---|---|
| MANUFACTURER | Tesla |
| INSTRUMENT TYPE | Inert mass |
| FUNCTION | Dummy payload |
| WEBSITE | spacex.com |
| PROPERTIES | |
| MASS | Approximately 1,300 kg (2,900 lb) |
| HOST SPACECRAFT | |
| LAUNCH DATE | January 2018 |
| ROCKET | Falcon Heavy |
| LAUNCH SITE | Kennedy LC-39A |
| ORBIT | Heliocentric |
| BORN | Elon Reeve Musk June 28, 1971 Pretoria, Transvaal (now Gaute |
|---|---|
| RESIDENCE | Bel Air, Los Angeles, California, U.S.[1][2] |
| CITIZENSHIP |
|
| ALMA MATER | |
| OCCUPATION | Entrepreneur, engineer, invent |
| KNOWN FOR | SpaceX, PayPal, Tesla Inc., Hyperloop, SolarCity, Op |
| NET WORTH | US$20.8 billion (October 9, 2017)[6] |
| TITLE |
|
| SPOUSE(S) |
|
| CHILDREN | 6 |
| PARENT(S) |
|
| RELATIVES |
|
| SIGNATURE | |


Falcon Heavy getting ready for its first launch
|
|
| FUNCTION | Orbital super heavy-lift launch vehicle |
|---|---|
| MANUFACTURER | SpaceX |
| COUNTRY OF ORIGIN | United States |
| COST PER LAUNCH | $90M for up to 8,000 kg to GTO[1] |
| SIZE | |
| HEIGHT | 70 m (230 ft)[2] |
| DIAMETER | 3.66 m (12.0 ft)[2] |
| WIDTH | 12.2 m (40 ft)[2] |
| MASS | 1,420,788 kg (3,132,301 lb)[2] |
| STAGES | 2+ |
| CAPACITY | |
| PAYLOAD TO LEO (28.5°) | 63,800 kg (140,700 lb)[2] |
| PAYLOAD TO GTO (27°) | 26,700 kg (58,900 lb)[2] |
| PAYLOAD TO MARS | 16,800 kg (37,000 lb)[2] |
| PAYLOAD TO PLUTO | 3,500 kg (7,700 lb)[2] |
| ASSOCIATED ROCKETS | |
| FAMILY | Falcon 9 |
| COMPARABLE | |
| LAUNCH HISTORY | |
| STATUS | on launchpad |
| LAUNCH SITES | |
| TOTAL LAUNCHES | 0 |
| SUCCESSES | 0 |
| FAILURES | 0 |
| FIRST FLIGHT | January 2018 (planned)[3] |
| BOOSTERS | |
| NO. BOOSTERS | 2 |
| ENGINES | 9 Merlin 1D |
| THRUST | Sea level: 7,607 kN (1,710,000 lbf) Vacuum: 8,227 kN (1,850,000 lbf) |
| SPECIFIC IMPULSE | Sea level: 282 seconds[4] Vacuum: 311 seconds[5] |
| BURN TIME | 162 seconds[6] |
| FUEL | Subcooled LOX / Chilled RP-1[7] |
| FIRST STAGE | |
| ENGINES | 9 Merlin 1D |
| THRUST | Sea level: 22,819 kN (5,130,000 lbf) Vacuum: 24,681 kN (5,549,000 lbf)[2] |
| SPECIFIC IMPULSE | Sea level: 282 seconds Vacuum: 311 seconds |
| BURN TIME | 162 seconds |
| FUEL | Subcooled LOX / Chilled RP-1 |
| SECOND STAGE | |
| ENGINES | 1 Merlin 1D Vacuum |
| THRUST | 934 kN (210,000 lbf)[2] |
| SPECIFIC IMPULSE | 348 seconds[6] |
| BURN TIME | 397 seconds[2] |
| FUEL | LOX / RP- |
60. https://www.space.com/
61. https://www.space.com/
62. https://en.wikipedia.org/
63. https://en.wikipedia.org/
64. https://futurism.com/
65. https://www.space.com/
66 https://en.wikipedia.org/
67. https://en.wikipedia.org/
++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 6, 2018 [R-4]
க. பாலசுப்பிரமணியன்
திருக்கடல்மங்கை (மகாபலிபுரம்)
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்
கடலோரம் கால்நீட்டிக் கண்ணயர்ந்த கோவிந்தா
கல்லெல்லாம் கலையான மாமல்லை மாதவனே
கற்பனையைக் கையிறக்கிக் கல்லுளியில் வடித்தவனே
கரையில்லா அன்பிற்கு கண்ணனென்ற பெயர்சொன்னாய் !
பாற்கடலில் இருந்தவண்ணம் உனைக்காணும் பரவசத்தை
பார்போற்றும் புண்டரீகன் தவமிருந்து வேண்டிநிற்கப்
பசிதீர்க்க வேண்டுமென்று வந்தாயே பரந்தாமா
பாற்கடலை படைத்தங்கே பேரருளாய் அமர்ந்தாயே!
பஞ்சரதம் இருந்தாலும் பார்த்தனுக்கே சாரதியாய்
பாஞ்சாலி துயர்நீக்கப் பாண்டவரின் துணையிருந்தாய்
பாஞ்சஜன்யம் எடுத்தவனே பாரதத்தை வென்றவனே
பாற்கடலில் அயர்ந்தபடி பாரெல்லாம் காப்பவனே !
கோதையர்கள் புடைசூழக் கோலாட்டம் ஆடியவனே
கோபியர்கள் நெஞ்சமெல்லாம் குழலூதி நின்றவனே
கோவர்தனம் கையேந்திக் குலமெல்லாம் காத்தவனே
கோலமகள் இராதையுடன் குழலேந்தி வருவாயே !
நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்
நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்
நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்
நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்
சொல்லினிலே நீயிருந்தால் சுவையெல்லாம் புதிதாகும்
சொல்லாமல் உள்வந்தால் சுடர்மேனி ஒளியாகும்
சோதனைகள் விலக்கிடுவாய் சுகமெல்லாம் தந்திடுவாய்
சோலையென வாழ்விருக்கச் சொந்தமாக நீவேண்டும் !
தன்வந்திரி பீடத்தில்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு
சங்கடஹர கணபதி ஹோமம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 05.01.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி அளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடங்கள் தீர சங்கடஹர கணபதி ஹோமமும் அஷ்ட திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த யாகத்தில் கரும்பு, அருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட்டது.
பங்கேற்றவர்கள் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரவும், வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய வேண்டியும், மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய வேண்டியும், சனியின் தாக்கம் குறையவும் பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
க. பாலசுப்பிரமணியன்
திருத்தொலைவிலிமங்கலம்
இரட்டைத் திருப்பதி
அரவெனும் வடிவுடனே அமரனாய்த் தானிருந்தும்
அமர்ந்திடவே இடமின்றி அருள்தரும் நிழலோனை
அகமுடைய விடம்நீக்கி அருட்கடலாய் பெருகவிட்டு
அடியார்கள் நலம்காக்கும் அரவிந்தக் கண்ணனே !
அமுதத்தைத் தானருந்தி அமரனான அரக்கனும்
அருள்தரும் நவக்கோள்கள் நடுவினிலே ஒன்றாக
அறிவோடு ஆன்மிகத்தை அவன்பார்வை தந்திடவே
அடியார்கள் உனைநாட அருள்கின்ற அரங்கனே !
ஏறிமலை வாராமல் ஏழுமலை அருளனைத்தும்
ஏற்றமுடன் தருகின்ற இரட்டைத் திருப்பதியில்
ஏலமிட்டு வாழவைத் தோற்கடிக்கும் துயரெல்லாம்
எவ்விடமே சென்றிடுமோ ஏழுமலையான் அருளாலே !
தவமிருந்து ஞானத்தால் தலைசிறந்த தவத்தோரும்
தன்கடமை செய்திருந்து தானிழந்த பெரியோரும்
தானழித்து ஊனுருக்கி பக்தியிலே சிறந்தோரும்
தன்வழியில் தாளடைந்த தத்துவத்தைச் சொன்னவனே !
தானமெனத் தருமங்கள் கர்ணனிடம் பெற்றவுடன்
தன்னருளைத் தந்திடவே தன்வடிவைக் காட்டியவனே
தலைவணங்கா நரகனுக்குத் தீபஒளி தந்தவனே
தாள்வைத்துப் பலியினிக்குத் திருவோணம் கொடுத்தவனே!
மோகினியாய் வடிவெடுத்து மனங்கவர்ந்த மாயவனே
மேதினியில் நிகருண்டோ கருணைக்கு மாதவனே
மேகமெனச் சூழ்ந்திருக்கும் ஊழ்வினையைக் கார்மேகா
மெல்லனவெ நீக்கிடுவாய் மீதமின்றி இப்பிறப்பில் !
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள். புத்தம்புது ஆண்டில் கிடைத்த வெற்றுத்தாளில் உங்களுடன் எனது மனக்கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மடலை வரையும் சந்தர்ப்பம் கிட்டியது ஓர் ஆனந்த அனுபவமே! எதைப் பேசுவது? எதை கிரகித்துக் கொள்வது? எதைப் பகிர்ந்துகொள்வது என்பது இன்றைய சமூக ஊடகவியலின் முன்னேற்றமா? இன்றி ஒரு தடைக்கல்லா? என்பது நிச்சயம் தர்க்கிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே!
அரசியல், வியாபாரம் இவையிரண்டுமே சமூகத்தின் இருவேறு தூண்கள் எனும் நிலை பல சகாப்தங்களாக இருந்து வந்துள்ளது. அரசியலும், அரசியல்வாதிகளும் வகுக்கும் கொள்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் வியாபாரக் கூற்றைப் பாதிக்காமல் அதை வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் வாழ்வாதாரத்தைக் கூட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயக மரபுகளின் கோட்பாடாக இருந்து வந்தது என்பது உண்மையே! ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் வியாபாரம் அரசியலிலும், அரசியல் வியாபாரத்திலும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றோ?
அரசியலே ஒரு வியாபாரமாக மாறிவிட்டதோ எனும் ஒரு நிலை எமது மனங்களில் ஓர் அச்ச உணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. இதை ஏதோ எமது பின்புல நாட்டு அரசியல் களங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் கூறுகிறேனோ என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு தவறான கண்ணோட்டமாகும். ஏனென்கிறீர்களா? நியாயமான கேள்விதான்… இன்றைய மேலைநாட்டு அரசியல் போக்குகளை நோக்கும் போது அதைப்பற்றிய விளக்கம் ஒரு புதுப்பாதையில் அரசியல் ஓடுகிறது என்பது புரிகிறது. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அரசியல் கோட்பாடுகளைப் புறந்தள்ளி இன்றைய சமூகப் பின்னணியோடு கலந்த ஒரு புதுவகையிலான அரசியல் பிறப்பெடுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அரசியல் பின்னணியில் பலகாலமாக அரசியல் களத்தினில் பயின்று ஒரு நிலையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்களை நோக்கிய வாக்களர்களின் பார்வைகள் ஒரு புதிய திசையில் பரிணமிக்க ஆரம்பித்துள்ளது என்று கூறவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோன்றியதன் காரணம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம். அரசியல்வாதிகள் எனப் பெயர்பெற்றவர்கள் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியே! தேர்தல் பிரசாரமேடைகளிலே தாரளாமாக மக்கள் மனங்களைக் கவரும் வகையில், அப்போதைய மக்களின் மனநிலைக்கு உகந்தவாறு ஏதோ பலவிதமான நிறைவேற்றமுடியாத, அன்றி நிறைவேறும் சாத்தியமே அல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுப் பின்பு பதவிக்கு வந்ததும் ஏதோ பல காரணங்களுக்கு அரசியல் சாயம்பூசி மக்களின் அபிலாஷைகளை முற்றிலும் நிராகரிப்பது அரசியல் நடைமுறை வழக்கமாகியதே மக்கள் அரசியல்வாதிகள் என்று வகுக்கப்பட்டவர்களின் மீது தமது நம்பிக்கையை இழந்ததற்கு முக்கிய காரணம்.
அடுத்து அதிகாரம்பெற்று ஆட்சி அமைத்தவர்கள் நாட்டின் நன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைகளின் உண்மையான தரத்தை ஆராயாமல் அனைத்தையும் எதிர்க்கும் மனப்பான்மையில் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் நடந்துகொள்வதும், மக்களுக்கு நன்மை பயக்கும் சில வியுக்திகளை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பிரஸ்தாபிக்கும்போது கொள்கைகளின் அடிப்படியில் நாட்டின் நன்மையைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியில் உள்ளோர் அநாயசமாக நடந்து கொள்வதும் மக்களின் மனங்களில் விரக்தி ஏற்பட வழிவகுக்கிறது.
இத்தகைய நிலைமைகளின் விளைவை இன்று நாம் அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில் பார்க்கிறோம். அரசியல்வாதிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் அரசியல் அனுபவம் ஏதுமற்ற ஒரு வியாபார முதலாளியின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பது அரசியல் இன்று வியாபாரத்தளமாக மாறியிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாகிறது. அதற்காக நான் வியாபரத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறவில்லை. எதுவித அரசியல் அனுபவமுமின்றியவர்கள் ஒருநாட்டின் தலைவராகும்போது அரசியல் நாகரிகத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்படுகிறது. அது குறுகியகால வெற்றியை அவர்களுக்கு நல்கலாம், அதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதைப் போன்ற குறுகியகால அரசியல் லாபத்தை அவர்கள் ஈட்டலாம். ஆனால் தொலைநோக்கான தீர்க்கதரிசனம் கொண்டவர்களின் பார்வையில் இது விளைவிக்கக்கூடிய எதிர்மறையான தாக்கங்களின் வலிமை புரியும். எத்தனையோ வருடங்களாக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகள் ஒரு சிறிய கால அவகாசத்தினுள் சிதறிப்போகும் நிலை ஏற்படலாம். தீவிரவாதப்போக்குக் கொண்டவர்களின் ஆதிக்கம் வலுப்பெறுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படலாம்.
பரந்துபட்ட உலகளாவிய ஒற்றுமையும், கூட்டுறவும் சட்டென சிதைந்து போகும்நிலை உருவாகலாம். இனத்துவேஷம், மதத்துவேஷம், நிறத்துவேஷம் என்பனவற்றிக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு சாதாரண அரசியல் பிரசாரங்களாக மாறலாம். அத்தகைய ஒரு நிலை சிறிதுசிறிதாகப் புரிந்துணர்வு மிக்க மேலைநாடுகளின் அரசியல் அரங்கினுள் உட்புகுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தேசியவாத அரசியல் எனும் போர்வையில் தீவிரவாத அரசியல் நடத்தப்படுக்கிறது.
நல்லதோர் அரசியல் செயற்பாட்டால் வியாபாரம் செழிக்கலாம் ஆனால் அரசியலே வியாபாரமாக்கப்பட்டால் ?
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி
முனைவர் சுபாஷிணி
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(திருக்குறள்)
உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).
யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.
தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.
ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.
வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.
கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.
கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.
1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.
இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!