க. பாலசுப்பிரமணியன்

 

திருத்தொலைவிலிமங்கலம்

இரட்டைத் திருப்பதி

sri-nindra-narayana-perumal-temple_1408521493

 

அரவெனும் வடிவுடனே அமரனாய்த் தானிருந்தும்

அமர்ந்திடவே இடமின்றி அருள்தரும் நிழலோனை

அகமுடைய விடம்நீக்கி அருட்கடலாய் பெருகவிட்டு

அடியார்கள் நலம்காக்கும் அரவிந்தக் கண்ணனே !

 

அமுதத்தைத் தானருந்தி அமரனான அரக்கனும்

அருள்தரும் நவக்கோள்கள் நடுவினிலே ஒன்றாக

அறிவோடு ஆன்மிகத்தை அவன்பார்வை தந்திடவே

அடியார்கள் உனைநாட அருள்கின்ற அரங்கனே !

 

ஏறிமலை வாராமல் ஏழுமலை அருளனைத்தும்

ஏற்றமுடன் தருகின்ற இரட்டைத் திருப்பதியில்

ஏலமிட்டு வாழவைத் தோற்கடிக்கும் துயரெல்லாம்

எவ்விடமே சென்றிடுமோ ஏழுமலையான் அருளாலே !

 

தவமிருந்து ஞானத்தால் தலைசிறந்த தவத்தோரும்

தன்கடமை செய்திருந்து தானிழந்த பெரியோரும்

தானழித்து ஊனுருக்கி பக்தியிலே சிறந்தோரும்

தன்வழியில் தாளடைந்த தத்துவத்தைச் சொன்னவனே !

 

தானமெனத் தருமங்கள் கர்ணனிடம் பெற்றவுடன்

தன்னருளைத் தந்திடவே தன்வடிவைக் காட்டியவனே

தலைவணங்கா நரகனுக்குத் தீபஒளி தந்தவனே

தாள்வைத்துப் பலியினிக்குத் திருவோணம் கொடுத்தவனே!

 

மோகினியாய் வடிவெடுத்து மனங்கவர்ந்த மாயவனே

மேதினியில் நிகருண்டோ கருணைக்கு  மாதவனே

மேகமெனச் சூழ்ந்திருக்கும் ஊழ்வினையைக் கார்மேகா

மெல்லனவெ நீக்கிடுவாய் மீதமின்றி இப்பிறப்பில் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *