
‘சங்கூ துதுமந்தி,சாட்டையில் கண்ணபிரான்
அங்கிருந்த வாறே அருச்சுனர்க்கு -சங்கீதை(சங்கு கீதை)
சொல்கின்றார் ’’சவ்யஸாஸி சோம்பல் அழகல்ல
வில்கன்றை ஏந்து விஜய்’’….கிரேசி மோகன்….!
முனைவா் ஆறுச்சாமி.செ, உதவிப்பேராசிரியா், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம் ஈச்சநாரி, கோவை-21
ஒப்பாரிப் பாடல்கள்
இறந்தவா் அருகிலிருந்து இறந்தவரின் பெருமைகளைக் குறித்துப் பெருந்துன்பப்பட்டு அவரது உறவினா்கள் புலம்பும் கையறுநிலைப் பாடல்களே ஒப்பாரிப் பாடல்களாகும்.
“கழிந்தோர் தேவத்து அழிபடா் உறீஇ
ஒழிந்தோர் புலம்பியக் கையறு நிலை” ( தொல். பொரு புறம்.. 1025)
என்று தொல்காப்பியம்; ஒப்பாரி குறித்துக் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எண்வகை மெய்ப்பாடுகள் குறித்து கூறவரும் தொல்காப்பியா் அதில் ஒருவகையான ‘அழுகை’ தோன்றுவதற்கான நிலைக்களன்களைச் சுட்டுகையில்,
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” ( தொல். பொரு. 1199)
என்கிறார் இறப்பில் ஏற்படுவது அழுகை என்கிறார். இதுவே ஒப்பாரியின் தொடக்கநிலை எனக் கொள்ளலாம். அழுகையில் உருவாவதே ஒப்பாரிப் பாடலாகும்.
ஒப்பாரி – சொல் விளக்கம்
தமிழில் ஒப்பாரிக்கு ஒப்பாரி, பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலைப் புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு போன்ற பல பெயா்கள் வழங்கப்படுகின்றன.
ஒப்பாரி என்பது ‘ஒப்ப + ஆரி = ஒப்பாரி’ எனும் வகையில் உருவானதாகும். இதற்கு தமிழ்ப் பேரகராதி ‘அழுகைப் பாட்டு’ என்று பொருள் கூறுகிறது. ஆங்கிலத்தில் ஒப்பாரி என்பதற்கு Elegy, Dirge, Death, Lament, Mourning songs போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒப்பாரி- பாடுபொருள்
இறந்தவரின் அருமை, பெருமைகள், குணநலன்கள், இறந்தவரின் இழப்பால் அவா் குடும்பத்தார் அடையும் துன்பம் போன்றவை ஒப்பாரியில் பாடுபொருள்களாக அமைகின்றன. பெண்கள் மட்டுமே ஒப்பாரி பாடுகின்றனா். ஆண்கள் பாடுவதில்லை. ஒப்பாரி பாடத் தயங்கினால் உடனே வயதானவா்கள்,
“ஒப்பாரி பாடுங்கடிங் கொப்பனோளிகளா
தப்பாம பாடுங்கடி தாசனோளிகளா”
என்று பாடி ஒப்பாரியைத் துவங்கி வைப்பா். இவ்வின மக்களிடையே சேகரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடல்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்திக் காணலாம்.
அ. பெற்றோர்இறப்பில் மகள் பாடும் பாடல்
ஆ. கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்
இ. சகோரதனை இழந்த சகோதரி பாடும் பாடல்
ஈ. மாமியாரை இழந்த மருமகள் பாடும் பாடல்
உ. அண்ணன் மனைவி (அண்ணியின் )இறப்பில் பாடும் பாடல்
அ . பெற்றோர் இறப்பில் மகள் பாடும் பாடல்
‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’
என்பது ஆன்றோர் வாக்கு. தாயும், தந்தையும் தம் நலனைக் கருத்தில் கொள்ளாது பிள்ளைகளின் மேன்மைக்காகப் பாடுபடுபவா்கள். பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவா்கள் எல்லாவிதத் துன்பங்களையும் தாங்கிப் பிள்ளைகளை வளா்க்கின்றனா்.
பத்துமாதங்கள் வயிற்றில் சுமந்து, வலிகளையெல்லாம் தாங்கிக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் தாய். பின்னா் தன் விருப்பு வெறுப்புக்களைக் குறைத்துக்கொண்டு, தான் பெற்ற பிள்ளைக்காக அவள் வாழ முற்படுகிறாள். தன்னைப் பெற்று வளா்த்துச் சீராட்டி, பாராட்டி வளா்த்த தாய் இறந்தவுடன் அத்துன்பத்தைத் தாளாமல் மகள் அழுகிறாள். தன்னை வளா்த்த தாயினைப் பிரிந்த துயரத்தில் அவள் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் கவனித்திருப்பாள் என்று கூறி அழுகிறாள்.
“வடக்கே வளஞ்சிருக்கும்
வளையாச் சிறு மூங்கோ
வாட்டிக் கணுவொடச்சு
வரிசை வச்சும் போளதட்டி
வரிசை வரும் நாளையிலே – சிறு
வயசிலையோ தாயௌந்தே
தெக்கே வளஞ்சிருக்கும்
சின்னக் கணு மூங்கோ
சீவிக் கணுவொடச்சு
சீருவச்சும் போளதட்டி
சீருவரும் நாளையிலே
சிறுசிலையோ தாயௌந்தே
கோடெ மளபேயும்
கொம்பளவு தண்ணிவரும்
கொம்பளவு தண்ணியிலெ – என்
குயிலி நனஞ்சு வந்தா – என்
தாயோ இங்கிருந்தா
எலுமிச்சங்காப் பட்டெடுத்து
கூந்தேலுணா்த்துமிம்பா
கொளந்த பசியாத்துமிம்பா
தாயோ காணமிங்கோ
எலுமிச்சங்காப் பட்டெடுத்து
கூந்தலுணா்த்தலியே
கொளந்த பசியாத்தலியே..”
என்று அப்பாடல் அமைகிறது.
பிள்ளைகளைப் பெற்று வளா்ப்பது தாயாக இருந்தாலும் அப்பிள்ளைகளின், உயா்வுக்கும், வாழ்வுக்கும் ஆதாரமாக இருப்பவா் தந்தைதான். அனைத்துச் செல்வங்களையும் குறையாமல் அளித்துச் சீரும் சிறப்புமாய் வாழ்க்கையை அமைத்துத் தர தந்தையே முக்கியக் காரணமாயிருக்கிறார். அத்தகைய தந்தை இறந்து போனால் அதன்மூலம் ஏற்படும் துன்பங்களை ஒப்பாரி மூலம் வெளிப்படுத்துகிறாள் மகள்.
“ஆத்துக்கு அந்தப் பக்கம் – இவ
அருங்கிளியே மாலையிட்ட
அப்பனுக்கு சீக்குமுன்னு
ஆனைமேலே காயுதங்கோ – நான்
காயுதத்தைக் கண்டுடனே
ஆனைக்குந் தீனுவச்சு கூடவந்த
ஆளுக்குஞ் சாதமிட்டு
ஆனைமேலே கால்போட்டு
அஞ்சாம வந்துவிட்டேன்
ஆறும் பெருகி வரும்
அக்கரையும் பொங்கிவரும்
ஆனையுட்டும் கீளெறங்கி
ஆத்தேயடிச் செறக்கி
அடிவரிசே பாலங்கட்டி – நான்
ஆத்தயுட்டும் மேலேறி
அலச்சுத்தா போகமுடியும்.
குத்தியுட்டும் பொம்மாரே – நான்
பொறந்ததா அரண்மனைக்கு
போறான்னா சேதியுன்னு – நீ
தட்டும் பறையடங்கு
சருகாட்டம் சித்த நிக்கும்”
என்று அப்பாடல் அமைகிறது.
ஆ . கணவனை இழந்த மனைவி பாடும் பாடல்
தன்னுடன் இல்லறம் நடத்திய கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து போனால் அத்துயரம் மனைவிக்கு தாங்கொணாத் துயரமாகும்.
“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்”
என்று அத்துயரம் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஊனும், உயிருமாய் ஒன்றிணைந்து வாழ்நதிருந்த தன் கணவன் தன்னைவிட்டு இறந்தவுடன் மனைவியால் அதை தாங்க முடிவதில்லை. கணவன் தன்னிடம் காட்டிய அன்பையும், ஆதரவையும், கணவனின்றி தானும், தன் பிள்ளைகளும் படும் துயரங்களையும் தன் பாடலில் ஒப்பாரியாய் வைத்துப் பாடுகிறாள்.
“கோட்டைசுத்தி கல்பொறுக்கி
கோபுரங்கோள் உண்டுபண்ணி
கோபுரத்துக் குள்ளாலே
கோடி போட்டாந் தன்னாசி
கொள்ள பணந் தாரனும்பான்
கொடியே யெடும்னும்பா
கொள்ள பணம் தாரண்ணாலும்
கொடியே யெடுக்க மாட்டேன்
கொள்ளப் பணம் வாங்கமாட்டேன்
கோபுரத்துக்குள் ளிருக்கும்
கொம்பானை வேணுமிம்பேன்
மாடிசுத்தி கல்பொறுக்கி
மண்டபங்கோள் உண்டுபண்ணி
மண்டபத்துக் குள்ளிருக்கும்
என் மதயானை வேணுமிம்பேன்
வள்ள பணந் தாரனும்பான்
வளையே யெடும்னும்பான்
வள்ளப்பணம் வாங்கமாட்டேன்
வளையே யெடுக்க மாட்டேன்
மண்டபத்துக் குள்ளிருக்கும்
என் மதயானை வேணுமிம்பேன்
பொன்னும் புளியமரம்
பொதச்சுந்தான் போகணும்பான்
பொன்னும் விசிறி கொண்டு
பொதுக்கிணற்றுத் தீர்த்தங்கொண்டு
புகையமைக்க வந்தவங்கோ
புகையை யமைக்காம
பொன்னுயிர சூரையிட்டோம்
தங்கோ புளியமரம்
தாளன் புடிச்சு போகணும்பான்
தங்கோ விசிறி கொண்டு
தனிக்கெணற்றுக் தீர்த்தங்கொண்டு
தாறனை அணைக்காம
நல்லுயிரைச் சூரையிட்டோம்”
இ. சகோதரனை இழந்த சகோதரி பாடுவது
சகோதரன் – சகோதரி உறவுமுறை பாசப்பிணைப்பு நிறைந்ததாகும். சகோதரிக்குத் திருமணமானவுடன் அவளுக்கும், அவள் பிள்ளைகளுக்கும் சகோதரன் சீா்வரிசைகள் செய்து அழகு பார்க்கிறான். தாய்மாமன் சீர் நாட்டுப்புறச் சடங்குகளில் முக்கியமான சீராகும்.
அத்தகைய சிறப்புக்குரிய சகோதரன் இறந்துபோனால் சகோதரி ஆதரவற்றவளாகிறாள். தன் சகோதரனின் பாசப்பிணைப்பும், இனி தன்னை ஆதரிக்க யாருமில்லையே எனும் ஏக்கமும் அவளது ஒப்பாரியில் எதிரொலிக்கிறது.
“பத்துக் குஞ்சோம் பொட்டுவண்டி
பாதையிலே சாரோடும்….. ஏ
பாதையிலே போறவரு …. ஏ
பச்சவண்டி யாருதுன்னா
பாதை சாருக்காருது
பச்சவண்டி நம்முளுது
பச்சவண்டிக் குள்ளிருக்கும்
பாதால எமபொறப்பு……..நான்
பாலக் கொண்டி பக்கம் வச்சு
பன்னீரே கிட்ட வச்சு………நான்
பாலே குடியுமிண்ணா
பன்னீரே சாப்பிடுங்கோ
பாலும் பாசியுமில்லே
பன்னீரோ தாகமில்லே…..உன்
பாடு கொற சொல்லுமின்னா
அண்ணா இன்னக்கி
பாடு கொற செல்லியிட்டா
அண்ணா சாமிறெயங்கீரும்
உங்கொ தங்கமுகம் வாடீரும்”
ஈ . அண்ணியின் இழப்பில் பாடப்படும் பாடல்
சகோதரனின் மனைவி (அண்ணி) இறந்து போனால் சகோதரிபாடும் பாடலில் அண்ணியின்றி வாடும் அண்ணன், பிள்ளைகள் ஆகியோரின் துன்பம், தன்னை ஆதரித்த அண்ணியின் பாசம் போன்றவை பாடுபொருள்களாக அமைகின்றன.
“இக்கி பச்சக்கல்லு சூட்டடுப்பு
பால்காச்சப் போட்டடுப்பு
இக்கிப் பாலோ கலந்தாலும்
இக்கிப் பாசம் பிரியாது
இன்னக்கிப் பாலும் கலராச்சோ
பாசம் பிரியாச்சோ…..
இக்கி நீலக்கல்லு சூட்டடுப்பு
நெய்காச்சப் போட்டடுப்பு
இக்கிப் நெய்யோ கலந்தாலும்
இக்கிப் நேசோம் பிரியாது
இன்னக்கிப் நெய்யும் கலராச்சோ
நேசம் பிரியாச்சோ…..”
உ . மாமியார் இழப்பில் மருமகள் பாடுவது
தாயைப் போல தன்னைப் பேணிக் காத்த தன் மாமியார் இறந்து போனவுடன் அவரின்றித் தானும், தன் கணவனும், குழந்தைகளும் பெரியவர்கள் துணையின்றி ஆதரவற்றுப் போனதை எண்ணி மருமகள் ஒப்பாரி பாடுகிறாள்.
“மாமியோ நல்ல மாமி – எனக்கு வந்த
மன்னவரோ ராசபுத்தி – இக்கி
மன்னவரேப் பெத்தெடுத்தோம்
மதிப்புள்ளோர் காலமிங்கோ – இக்கி
மயிலி நான் தொணையௌந்தேன்
மன்னவரோ தாயௌந்தார்.
இக்கி கோட்டயோ நல்ல கோட்ட – எனக்கு வந்த
கொண்டவரோ நல்லபுத்தி
கொண்டவா; மேல் குத்தமில்லே
கோட்டைமேல் தோசமில்லே – என்னக்
கொண்டவரேப் பெத்தெடுத்தோம்
கொணமுள்ளோர் காணமிங்கே – இக்கி
குயிலி நான் தொணையௌந்தேன் – என்னக்
கொண்டவரோ தாயௌந்தார்”
பயன்பட்ட நூற்கள்,
தகவலாளிகள்
2.மாரியம்மாள் , தகவலாளி, புதுச்சேரி பஞ்சாயத்து, பாலக்காடு.
இன்று கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் முதன்மையானதாகவும் வளமான உரைமரபுடனும் விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இதற்குப் பல்வேறு காலகட்டங்களில் ஏழு உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகள் உள்ளன. காலவரிசைப்படி தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்று போற்றத்தகும் இளம்பூரணர் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு), அவருக்குப்பின் சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகியோர் தொல்காப்பிய உரையாசிரியர்களாவர். இவர்களுள் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகிய உரையாசிரியர்கள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளனர்.
வியாகரணம் (சொல்) என்பது வடமொழியாளர்களிடையே ஒரு தனிக் கல்வியாகப் பயிலப்பட்டும் போற்றப்பட்டும் வந்ததும் வேதப்பயன்பாட்டுக்காக உருப்பெற்றதும் ஆகும். எனவேதான் வடமொழி முனைப்பு மிக்க அக்காலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் அதிகமான உரைகள் எழுந்தன.
தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணர் காலத்திலும் அதற்கு முன்னருமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அதனடியாகத் தோன்றிய வடமொழி மரபின் மேலாதிக்கம், இலக்கிய வளர்ச்சி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தொல்காப்பியம் தவிர்த்த வடமொழிச்சார்பு இலக்கண மரபுகளை வளர்த்தெடுத்தன. உரையாசிரியர் காலங்களில் சங்க இலக்கியப்பயிற்சி பொதுவாக எந்நிலையில் இருந்தது என்பதும் ஆய்வுக்குரியதாகும்.
“கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவிய சமூக அரசியல் சூழல்களும் வடமொழி மரபின் தாக்கங்களும் அவற்றுடன் தமிழ் நடத்திய கொள்வினை கொடுப்புவினை உறவுச்சூழல்களும் அகமும் புறமுமான சங்கச்செய்யுள் மரபினை பின்னுக்குத் தள்ளுவனவாய் அமைந்தன. சங்ககாலத் தமிழ் வழக்கு நின்று போய் வெகுகாலமாகி விட்டது. அதன் சிறப்பியல்புகளான இனிமை தெளிவு சுருக்கம் நேர்மை முதலிய பண்புகள் யாவும் பெரும்பான்மை இலக்கியங்களின்றும் நீங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன” என்று கூறும் வையாபுரிப்பிள்ளை பின்னர் நடந்த மீட்சியியக்கத்தில் உரையாசிரியர்களின் பங்கு முக்கியமானது என்று கருதுகிறார், (தமிழ்ச்சுடர் மணிகள்).
இக்காலத்தில்தான் இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதுகிறார். பேராசிரியர் உரை பொருளதிகாரத்தின் பின்னான்கியல்களான செய்யுளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே கிடைத்துள்ளது. எனினும் தொல்காப்பியம் முழுமைக்கும் அவர் உரை எழுதியமைக்குச் சான்றுகள் அவரது உரையினுள் காணக்கிடைக்கின்றன. நச்சினார்க்கினியரும் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவராவார்.
சங்க இலக்கியம் என்பது பாட்டும் தொகையும். தொல்காப்பியத்தின் காலம் வேறு; சங்க இலக்கியக் காலம் வேறு. உரையாசிரியர்கள் காலம் வேறு. இவற்றைப் பற்றி முடிந்தமுடிவு எதுவும் இல்லையெனினும் தொல்காப்பியத்தின் மூலத்தோற்றம் கி.மு. முதல் நூற்றாண்டினது என்றும் அதன் இறுதி வடிவம் கி.பி.500 க்கு முன் இருக்க முடியாது என்றும் கமில் சுவலபில் கருதுகிறார். (kamil zvelebil). சங்ககாலத்தின் காலம் தொல்காப்பியத்தின் காலத்திற்கு முன்னும் பின்னுமான விரிந்த காலப்பரப்பை அடக்கியது.
இளம்பூரணர்
இளம்பூரணர் தமது உரையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய எட்டுத்தொகை நூல்களையும் சிறுபாணாற்றுப்படை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களையும் பயன்படுத்துகிறார். இளம்பூரணர் தமது பொருளதிகார உரையில் 1308 இடங்களில் மேற்கோள் பாடல்களைத்தருகிறார்.
சங்க நூல்களைக் குறிப்பிடும் முறைகள்:
அரிமான் இடித்தன்ன என்னும் பாலைக்கலியுள் (செய்.67 உரை)
நகையா கின்றே தோழி என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள் (மெய்ப்.4.உரை)
அறனின்றி அயல் தூற்றும்’ என்னும் கலியுள் (செய்.72.உரை) எனப் பாடலின் முதல் தொடரையும் நூற்பெயரையும் (கலித்தொகை) நூலின் உட்பிரிவையும் (பாலைக்கலி) இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.
தொடியுடை தோள் மணந்தனன் என்னும் பாட்டுள் (செய்.68 உரை)
பூந்தாமரைப் போதலமர என்னும் பாட்டுள் (செய்.68. உரை)
நெடுங்கயிறு வலந்த என்னும் பாட்டினுள் (செய்.59.உரை) என்று நூற்பெயர் சுட்டாமல் பாடலின் முதல் தொடரை மட்டுமே குறிப்பிட்டு நூல்பெயரைக் குறிப்பிடாத போக்கும் அவரிடம் காணப்படுகிறது.
கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க (அகத்.15.உரை)
கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் (புறத். முகப்புரை) எனச் சான்றோர் செய்யுளில் முதலாவதாகக் கலித்தொகையை வைத்துப் பேசுகிறார். கலித்தொகையை அவர் கலி (அகத்.15.உரை) என்றும் கலிப்பா (செய்.132.உரை) என்றும் கலித்தொகை (செய்.132.உரை) என்றும் கலிப்பாட்டு (புறத்.27) என்றும் தமது உரையில் குறிப்பிடுகிறார். கலித்தொகையை முதலாவதாக வைத்து எண்ணும் மரபு அவருடையது என்பது விளங்குகிறது. எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்தும் ஒரு வெண்பா கலித்தொகையை இறுதியாக வைக்கிறது.
மையற விளங்கிய என்னும் மருதக்கலியுள் (கற்பு.6.உரை)
இகல்வேந்தன் சேனை என்னும் முல்லைக்கலியுள் (களவு.21 உரை)
என்று கலித்தொகையின் உட்பிரிவுகளான மருதக்கலி, முல்லைக்கலி, பாலைக்கலி, நெய்தற்கலி, குறிஞ்சிக்கலி ஆகியவற்றையும் இளம்பூரணர் குறிப்பிடுவர்.
பேராசிரியர்:
பேராசிரியர் பொருளதிகார உரையில் எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் குறிஞ்சிப்பாட்டு தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.
மணி நிற மலர்ப்பொய்கை என்னும் கலிப்பாவினுள் (செய்.76.உரை)
அறவோ ருள்ளா ரருமறை காப்ப (செய்.121.உரை) என்னும் பரிபாடலுள்”‘ என நூலின் பெயரைக்குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தைப் பாட்டும் தொகையும் என்று குறிப்பிட்டவர் பேராசிரியரே ஆவர்.
நச்சினார்க்கினியர்:
நச்சினார்க்கினியர் அதிகமான நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாள்பவர் ஆவார். இவரது பன்னூல் பயிற்சியால் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று போற்றப்படுகிறார். இவர் சங்க இலக்கியங்களான கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றிற்கு உரை எழுதியவர். மேலும் குறுந்தொகையின் கடைசி 20 பாடல்களுக்கு உரை எழுதினார் எனவும் கருதப்படுகிறது. (இளங்குமரன், இரா,) நச்சர் தமது உரையில் 2536 மேற்கோள் பாக்களைக் காட்டுகிறார்.
சங்க இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்தாளும் நச்சர் நூலின் பெயர் , அதன் உட்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து என நூல்களின் பெயரையும் மணிமிடைபவளம், களிற்றியானை நிரை, நித்திலக்கோவை, பாலைக்கலி, முல்லைக்கலி போன்ற நூலின் உட்பிரிவுகளையும் நச்சர் குறிப்பிடுகிறார்.
விசும்புற நிவந்த என்னும் அகப்பாட்டும் அது (புறத்.5.உரை)
இக்களிற்றியானைனிரையுள் (அகத்.3.உரை)
சுணங்கணி வனமுலை என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. ‘வீங்குநீர்’ என்னும் மருதக்கலியுள்…………….(அகத்.3.உரை) எனப் பாடல் மற்றும் பாடல்களின் முதற்தொடரையும் நூற்பெயரையும் நச்சர் எழுதுகிறார்.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க அக இலக்கியங்களை தத்தமது உரைகளில் மேற்கோளாகப் பயன்படுத்தும் விதத்தைக் காணலாம்.
நற்றிணை
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 60
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள் 11
நச்சர் காட்டும் மேற்கோள்கள் 129
குறுந்தொகை
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 129
பேராசிரியர் 101
நச்சர் 227
ஐங்குறுநூறு
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 70
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள் 22
நச்சர் காட்டும் மேற்கோள்கள் 169
அகநானூறு
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 93
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள் 177
நச்சர் காட்டும் மேற்கோள்கள் 263
கலித்தொகை
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 159
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள் 186
நச்சர் காட்டும் மேற்கோள்கள் 313
பரிபாடல்
இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள் 4
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள் 6
நச்சர் காட்டும் மேற்கோள்கள் 5
உரையாசிரியர்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் அக நூல் கலித்தொகை ஆகும். கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க என்று இளம்பூரணர் அந்நூலைச் சங்க செய்யுளில் முதன்மையானதாகக் காட்டுவதைக் காணும்போது உரையாசிரியர்கள் காலத்தில் அந்நூல் பெற்றிருந்த சிறப்பிடம் புலனாகிறது. மேலும் நச்சர் சங்க நூல்களுள் இதற்கு மட்டுமே உரை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உரையாசிரியர்களால் மிகக் குறைவாகக் காட்டப்படும் நூல் பரிபாடல் ஆகும். பரிபாடல் 70 பாடல்களை உடையது எனினும் தற்போது 22 பாடல்களே கிடைக்கின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் பரிபாட்டு காமப்பொருண்மையதாகவே வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிபாடல் எழுபதும் கடவுளர் வாழ்த்துதல் பொருண்மையதாக உள்ளன. இதை சங்கப்பனுவல்களுள் மிகப் பிற்பட்டதும் பக்தி இலக்கியக் காலத்தை ஒட்டியதும் எனக்கொள்ளமுடிகிறது. எனவேதான் உரையாசிரியர்களால் இது பெருமளவில் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை என்று கருதப்படுகிறது.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் தங்களது சங்க இலக்கியப் புலமையை கீழ்கண்ட வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.
4.சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழி திணை, துறை வழங்குதல்
பாடல்களைப் பாடவேறுபாடுகளுடன் தருதல்:
நற்றிணையில் 380ஆவது பாடல் இளம்பூரணராலும் நச்சராலும் மேற்கோள்காட்டப்படும் போது நற்றிணையின் அடியெல்லையை மீறியதாக, இளம்பூரணர் 14 அடிகளுடனும் நச்சர் 15 அடிகளுடனும் காட்டுகின்றார். இப்பாடல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பில் 12 அடிப்பாடலாகவே உள்ளது. இளம்பூரணர் (கற்பியல்,145 உரை)
”புரையோ ரன்ன புரையு நட்பின்
இளையோர் கூம்புகை மருவோர் ஆங்குக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்” என்று 3 அடிகளை (9 முதல் 11 அடிகளாக) இணைத்து 14 அடிப்பாடலாகத் தருகிறார்.
நச்சர் தமது உரையில் (கற்பியல் 147 உரை)
புரையோ ரன்ன புரையு நட்பி
னிளையோர் கூம்புகை மருள வோராங்
கட்டங் காது விட்டாங் கமைத்துக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்
என்று 4 அடிகளை (9 முதல் 12ஆம்அடிகளாக) இணைத்து 15 அடிப்பாடலாகத்தருகிறார். மேலும் இப்பாடல் நற்றிணைப்பதிப்பிலும் இளம்பூரணர், நச்சர் உரைகளிலும் பாடவேறுபாடுகளுடன் காணப்படுகின்றது.
| வ.எ | அடி | நற்றிணை | இளம்பூரணர் | நச்சர்
|
| 1 | 4 | அதனால் | இதனால் | அதனால் |
| 2 | 10 | —— | மருள்வோர் | மருளவோர் |
| 3 | 11 | பூணிலை | பூணிலை | பண்ணிலை |
| 4 | 12 | வேட்டதில் | வேட்டத்தில் | வேட்டதில் |
உரையாசிரியர்கள் இருவரும் நற்றிணை மூலபாடத்துடன் வெவ்வேறு இடத்தில் பாடவேறுபாடு கொள்கின்றனர். நச்சர் ஓர் இடத்திலும் இளம்பூரணர் 2 இடங்களிலும் இருவரும் தத்தமக்குள் ஓர் இடத்திலும் என 4 இடங்களில் வேறுபட்ட பாடம் கொள்கின்றனர்.
குறையுடன் உள்ள மூலப்பனுவலை செம்மையாக்கல்:
உ.வே.சா-வுக்குக் கிடைத்த பரிபாடல் ஏட்டுச்சுவடிகளில் முதலிலும் இறுதியிலும் உள்ள ஏடுகள் அழிந்திருந்தன. எனவே பரிபாடலின் முதல் பாடல் எதுவென்று அவரால் அறியமுடியவில்லை. அந்நிலையில் உ.வே.சா. தொல்காப்பியச்செய்யுளியல் உரையில் உள்ள இளம்பூரணர் மேற்கோள் வழியே பாடலை மீட்டெடுத்தார் என்பதை அவரது கூற்று வழியே காணலாம்.
இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்தவை முதலிலும் இறுதியிலும் இர்க்க வேண்டிய ஏடுகளில்லாமலும் இடையிலுள்ளவை ஒடிந்தும் இராமபாண வாய்ப்பட்டும் பழுதுற்றிருந்த பழம்பிரதிகளாதலின் அவற்றிற் காணப்படாமல், ”கட்டுரை வகையின்” என்னும் தொல்காப்பியச்செய்யுளியற் சூத்திர வுரையில் (119) இளம்பூரணவடிகள் காட்டிய மேற்கோள்களிற் காணப்பெற்ற இப்பாடல் மிகச்சிதைந்திருந்த உரைப்பகுதியால் இந்நூலின் முதற் செய்யுளென்று அறியப்பெற்றுத் தமிழ்த்தெய்வத்தின் திருவருட்செயலை நினைந்து இன்புற்று இங்கே பதிப்பிக்கலாயிற்று. (பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும்)
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து” என்ற நூற்பா உரையில் பரிபாடல் பாட்டு முழுவதையும் பகுதிகளாகப் பிரித்து அதன் செய்யுள் உறுப்புகளையும் மேற்கோளாகத் தருகிறார். பாடலின் இடையிடையே,
இது தரவு
இஃது எருத்து
இவை நான்கும் அராகம்
இஃது ஆசிரியம்
இது பேரெண்
இதுவும் ஆசிரியம்
இவையாறும் பேரெண்
தனிச்சொல்
இது சுரிதகம்
இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்
இது சுரிதகம்
என்று செய்யுள் உறுப்புகளை இளம்பூரணர் சுட்டிக்காட்டும் மரபு பரிபாடல் பதிப்பினுள் பிறபாடல்களில் பயிலப்பெறவில்லை. இத்தகைய மரபு இளம்பூரணர் அளித்த கொடையாகும்.
உ.வே.சா கண்டெடுக்காத பரிபாடலடிகள்:
செய்யுளியல் 123 ஆவது நூற்பா உரையில். ‘முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாயும்’ வருவனவற்றிற்கு மேற்கோள்களாக,
‘நின்னொக்கும் புகழ் நிழலவை” (பரி.1:55) எனவும்
”கறையணி மிடற்றினவை
கண்ணணி நுதலினவை
பிறையணி சடையினவை” என வரும் என்பார் பேராசிரியர். கறையணி மிடற்றினவை எனத் தொடங்கும் மூன்றடிகள் நச்சராலும் இந்நூற்பா உரைப்பகுதியில் மீளவும் எடுத்துக்காட்டப்படுகின்றது. எனினும் தொல்காப்பிய உரைப்பதிப்பாசிரியர்களோ பரிபாடலைப் பதிப்பித்த உ.வே.சா வோ பிற பரிபாடல் பதிப்பாளர்களோ இவ்வடிகளை பரிபாடல் எனக் குறிக்கவில்லை.
பேராசிரியர் தமது உரையில், இப்பாடலில் கீழே, ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்” ஒருசார் என்பது ஒழியசை; என்னை? அது சீராகலின் அதனொடு சில அசை கூடியன்றி அசையெனப்படாமையின் ”ஆங்கு” என வருந் தனிச்சொல் வழியசையெனப்பட்டது” என்று எழுதுவர். பேராசிரியர் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்’ என்று குறிப்பிடுவதால் அவ்வடிகள் பரிபாடல் என்று கருதுதல் தகும். எனினும் முதலாவது பரிபாடலிலிருந்து ஓர் அடியும் மேற்கோளாகத் தருவதால் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுள்’ எது என்பதில் மயக்கம் ஏற்படுகிறது. பேராசிரியர் தமது உரையில் மேற்காட்டிய பரிபாடலுள் ‘ஒருசார்’ ஆங்கு என்ற சொற்கள் பயின்று வருவதாகக் கூறி அதற்கு விளக்கமும் தருவது காணத்தக்கது.
ஒருசார் என்ற அசையும் ஆங்கு என்ற தனிச்சொல்லும் முதலாம் பரிபாடலுள் உள்ளனவா என்று ஆய்ந்தபோது ஆங்கு என்ற தனிச்சொல் இருப்பதும் ஒருசார் என்ற அசை இல்லாமையும் கண்டறியப்பட்டது. எனவே பேராசிரியர் முதலாவது பரிபாடலைக் குறிக்கவில்லை என்று புலப்படுகிறது. கறையணி மிடற்றினவை என்ற பாடலடிகள் உள்ள பரிபாடலில்தான் ஒருசார், ஆங்கு ஆகிய சொற்கள் இருக்கவேண்டும் என்றும் அதையே பேராசிரியர் குறித்தார் என்றும் உய்த்துணரமுடிகிறது. இப்பாடலடிகள் சிவனைப்பற்றிய வருணணையாக உள்ளன. எனவே இதைச் சிவனைப்பற்றிய பரிபாடல் என்று கருத இயலுகிறது.
சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழித் திணை, துறை வழங்குதல்:
அக இலக்கியங்கள் பாடப்பட்ட காலத்தில் தொகுக்கப்படவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்டடு திணை, கூற்று ஆகியன வழங்கப்பட்டன. உரையாசிரியர்கள் அவற்றிலிருந்து மாறுபட்டுத் தொல்காப்பிய விதிப்படி கூற்றுவகைகள் வழங்குகின்றனர். விரிக்கிற் பெருகும்.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்களுக்குத் திணை துறை வகுத்த முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவை தொல்காப்பிய மரபல்லாது பிற்கால மரபுவயப்பட்டதாகும். நச்சர் .”தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானுற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத்துறை கூற வேண்டுமென்றுணர்க” என்று புறநானூற்றுக்குத் திணை, துறை வகுத்த மரபைக் கண்டிக்கிறார். ஏலவே தொல்காப்பிய மரபுப்படியே தொகை நூல்களுக்கு திணை, கூற்று வகைகள் கூறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
அதோடு நில்லாது நச்சர் புறப்பாடல்கள் 111க்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுத்துத் தருகிறார். இளம்பூரணர் 76 புறநானூற்றுப்பாடல்களுக்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுக்கிறார். (இலக்குவன், இரா, 2013).
புறம் 308 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பு இல்லை. நச்சர் உரை மூலம் ”இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங் கண்டது” என்ற அடிக்குறிப்பைப் பெறமுடிகிறது.
புறம் 349 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பில்லா நிலையில் ”பெருஞ்சிக்கல் கிழான் மகட்கொடை மறுத்தது” என்ற குறிப்பு இளம்பூரணர் உரையில் காணக்கிடைக்கிறது.
முடிவுரை
தொல்காப்பிய உரையாசிரியர்களின் சங்கநூல் புலமைக்குச்சில சான்றுகளைக்கண்டோம். உரையாசிரியர்கள் தொகை நூல்களைத் தொல்காப்பிய மரபிற்கு ஏற்பவும் மாறுபட்டும் மேற்கோள்களாகத் தந்தும் அவை இரண்டிற்கும் தமிழ்கூறும் நல்லுலகில் நிலையானதொரு உறவை உருவாக்கி வலுப்படுத்தினர். தொகை நூல்களின் பாடல்கள் பலவற்றிற்கு உரைகள், பாடவேறுபாடுகள் தந்து அவற்றை மெருகேற்றினர். தொல்காப்பிய மரபிற்குள் பொருந்தியும் பொருந்தாமலும் வரும் சங்க இலக்கிய இயல்புகளையும் வளர்ச்சிகளையும் இதற்குள் உள்ளடக்கிப் பேசுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் தொகை நூல்களுக்கும் இன்று நிலவும் அதிகாரபூர்வமான உறவு நிலைபெற்றதில் இவ்வுரையாசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும்.
துணைநூல் பட்டியல்
1.இளம்பூரணர் (உ.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1982.
2.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (முதல் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.
3.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (இரண்டாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.
4.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (மூன்றாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.
5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ்ச்சுடர்மணிகள், குமரிமலர் காரியாலயம், சென்னை, 1949
6.Zvelebil, Kamil., The Smile of Murugan on Tamil Literature of south India, Tuta sub aegide pallas, Leiden,1971
*****
கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வெ.ப.சு. தமிழியல் ஆய்வுமையம்,
ம.தி.தா. இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி.
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். அதற்குள் ஒருவாரம் பறந்தோடி விட்டதா? காலம் எனும் இந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போலிருக்கிறதே ! எது எப்படியாயினும் இதோ இந்த வாரத்தில் இங்கிலாந்தின் செய்திகளோடு உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாரம் வந்து போன வேகம் போல எம்மிடையே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி திரு டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் எம்மிடையே வந்து விட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றது இங்கிலாந்துப் பிரதமர் திருமதி தெரேசா மே அவர்கள். அப்போதே இங்கிலாந்துக்கு வருமாறு அவருக்கு தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பலமுனைகளில் இருந்து அவருக்கு எதிரான குரல்கள் கிளம்பின. அதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் தான் தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்யப்போவதில்லை என்று தனது வழமையான ட்வீட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து “அவர் வருவாரா இல்லை மாட்டாரா?” எனும் வாதம் தொடர்ந்தது. கடந்த ஆண்டு அவர் இவ்வருடம் ஜூலை மாதம் 12ம் திகதி இங்கிலாந்து வருவதாகவும் அது தேசத் தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பாக இல்லாமல் அவர் மேற்கொள்ளும் ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணுகிறீர்களா? தேசத்தலைவருக்கு அளிக்கப்படும் விஜயமென்றால் விமானநிலையத்தில் பிரதமரினால் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியாரோடு ஒன்றாக பிரமாண்டமான நகர ஊர்வலமும் அவ்விஜயத்தில் அடங்கும். ஆனால் இவருக்கோ விமான நிலைய வரவேற்பு இங்கிலாந்தின் வர்த்தக அமைச்சரினால் ஆடம்பரம் அதிகமின்றி அளிக்கப்பட்டது.
திரு ட்ரம்ப் அவர்களின் விஜயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான காரணங்கள் பல. அவரின் வருகையை எதிர்த்து பல முன்னணிகள், அமைப்புகள் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன. அத்தோடு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த வருடம் விலகிய பின்னால் வர்த்தக உடன்படிக்கையில் முதலாவதாக எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுடன் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இதைப்பற்றி நேரத்துக்கு ஒரு கொள்கை பேசும் அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிய பல அரசியல் அவதானிகளும், அரசியல்வாதிகளும், மக்களும் ஆவலாக இருந்தார்கள். இங்கிலாந்து விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை பின்லாந்தில் சந்திக்க இருந்தார். இங்கிலாந்தில் நடந்த நிகழ்வான ரஷ்ய முன்னாள் உளவாளியின் மீதான இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்பது இங்கிலாந்தின் நிலைப்பாடு. அத்தோடு அத்தாக்குதலின் எதிரொலியாக இங்கிலாந்துப் பிரஜைகள் இருவர் அதே இரசாயன பொருளினை அறியாமல் கையாண்டதால் ஒருவர் இறந்து மற்றொருவர் தீவிர சிகிச்சைக்குள்ளாகப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் ரஷ்யாவே காரணம் என்று இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது. இவற்றைப்பற்றி அமெரிக்க ஜனாதிபதி தனது ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் போது குறிப்பிடுவாரா? எனும் கேள்வி இங்கிலாந்தின் கேள்விக்குறியாக இருந்தது.
வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி வந்ததும் அடித்தாரே ! ஒரு செம அடி எமது பிரதமருக்கு. ஆமாம் ரெக்ஸிட் எனும் பூதத்தை ஒருவாறு ஒரு வலைக்குள் அடக்கி வைத்து வொட்டேன் என்றிருந்த எமது பிரதமருக்கு ஒரு அதிர்ச்சியாக அப்பிரெக்ஸிட்டுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரதமரின் ப்ரெக்ஸிட் நோக்கிய கொள்கையில் நம்பிக்கையின்றி ராஜினாமா செய்ய, அவரைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற உதவியாளரும், அதைத் தொடர்ந்து புரளிகளுக்குப் பெயர்போன வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சனும் இராஜினாமா செய்தார். அமைச்சரவையில் இத்தகைய ஒரு பிரிவு தோன்ற அமெரிக்க அதிபர் அக்குட்டையை மேலும் குழப்பும் முகமாக பிரதமருக்கு எதிராகவும், பொரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் ஒரு பேட்டியளித்தார். என்னே ஆச்சரியம் அடுத்தநாள் பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் அதே அமெரிக்க அதிபர் தான் அளித்த பேட்டியை அப்படியே மறுதளித்தார். அமெரிக்க அதிபரைப் பற்றிய பலரின் அபிப்ராயத்தை அவர் நிரூபித்து விட்டார்.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளை மற்றுமோர் மடலில் ஆராய்வோம். இங்கிலாந்துப் பிரதமர் ஒரு அரசியல் சூறாவளியினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் நலனை முன்னிட்டு ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வின் தாக்கத்தை மட்டுப்படுத்த முயல்கிறார் பிரதமர். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையோ மிகவும் பலவீனமானது. ஒருபுறம் பிரெக்ஸிட் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒருபுறமும், ப்ரெக்ஸிட் கொள்கையை மெதுமையானதாக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மறுபுறமும் அவரது நிலையை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி விட்டார்கள். 17,18ஆம் திகதிகளில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இரு முக்கிய பிரெக்ஸிட் சம்பந்தமான சட்டமூலங்கள் பத்து வாக்குகளுக்கும் குறைவான பெரும்பான்மையினால் நிறைவேறியது. பெருமூச்சு விட்டார் பிரதமர்.
வந்ததே சந்தது பாருங்கள் பாராளுமன்றத்துக்கான சம்மர் விடுமுறை தப்பி விட்டார் பிரதமர் செப்டெம்பர் மாதம் வரைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் அரசியலில் இரண்டு வாரங்களே மிகப்பெரிய சவால் அல்லவா ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
பவள சங்கரி
சீனப் பயணி யுவான் சுவாங் நம் இந்தியாவிற்கு வந்த போது, நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு, இயற்கை சீற்றம், வழியில் சாப்பாடு கூட கிடைக்காமல் துவண்ட நிலை இப்படி எத்தனையோ கடும் இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு முறை சில கொள்ளையர் அவரை சிறை பிடித்தனர். அவர்களுக்கு கொள்ளையில் அதிகமான வருமானம் கிடைத்துவிட்டால், துர்கா தேவிக்கு ஒரு ஆண் மகனை பலி கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது. அன்று அப்படி அவர்கள் பலி கொடுக்க வேண்டிய தருணத்தில் இளந்துறவியான யுவான் சுவாங்கைக் கண்டிருக்கிறார்கள். அவருடைய அழகையும், அறிவையும், இளமையையும் வைத்து அவர்தான் தங்கள் துர்காதேவிக்கான சிறந்த படையலாக இருக்க முடியும் என்று முடிவு செய்து அவரை இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவ்வூர் மக்கள் அவரை விட்டுவிடும்படியும் தங்களில் யாராவது ஒருவரை பலி கொடுத்துக் கொள்ளட்டும் என்று மன்றாடியும் அந்தக் கொள்ளையர் செவி சாய்க்கவில்லை. அவர்கள் யுவான் சுவாங்கை பலி பீடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரோ, எந்த விதமான அதிர்ச்சியோ, அச்சமோ, சலனமோ இல்லாமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாராம். அதைக் கண்ட கொள்ளையர்களுக்கு அவரக் கொலை செய்ய மனம் வராமல் விட்டுவிட்டார்களாம்.. துறவு கொடுத்த அந்த அமைதியும், கருணையும், ஆழ்ந்த ஞானமும் அவரை அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததாம். இப்படித்தான் நம் ஊரிலும், பல துறவிகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள பல பெண்களும் கர்ம யோகிகளாக மிகுந்த பக்குவமான மனம் பெற்றவர்களாகவே உள்ளனர். இந்த விதத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்களைக் காட்டிலும் மற்றுமொரு படி உயர்ந்தவராகவே இருப்பது கண்கூடு. அதனாலேயே நம் நாட்டில் இன்றளவிலும் கூட்டுக் குடும்ப முறைகள் கூட சிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.
‘’சிரித்திடும் நானார்! , சிரிக்கவைக்கும் நானார்! ,
விறைத்திட சுடுகாட்டில் வேக -எறிந்திடும்
நானார்! ,எரிந்திடும் நானார்! , எரிந்தபின்
நானார்! , புனரபிதான் நான்’’….கிரேசி மோகன்….
KRISHNA FOR TODAY….!
————————————————-

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!
அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!
”பாதுகை ஆயிரம்’’….!
————————————————–
பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
ஏந்திச்செல் என்னை எடுத்து….!
அப்பண ஆதி அனந்தன் அமர்ந்தவரே,
சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
கண்ணனை நெஞ்சே கருது….!
வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….!
கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
கோலத் திருவுருவே காப்பு….கிரேசி மோகன்….!
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua. Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.
Lorem ipsum dolor sit amet,sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Lorem ipsum dolor sit amet, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. sed diam voluptua.

(எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)
பாரினிலே பெரும் படைப்பாய்
பரிணமித்த படைப்பு என்றால்
பாங்கான பெண் படைப்பே
ஆகும் எனக் கண்டிடலாம்
அப்படைப்பை பிரம்ம தேவன்
ஆக்கிவிட எடுத்த நாள்
அப்பிரமன் படைப்பு அதற்கே
அதிக சவால் ஆகிருக்கும் !
அழகாக முகம் அமைக்க
அதிக நாள் ஆகிருக்கும்
அன்பு பாசம் நேசம்வைக்க
அதற்கும் நாள் எடுத்திருக்கும்
பொறுமை எனும் நகையணிய
வெகு நாளே வந்திருக்கும்
பெண்மை அங்கே உருவாக
பிரம்ம தேவன் களைத்திருப்பான் !
கருவறையை உள்ளே வைத்தான்
கருணைதனை நிறைய வைத்தான்
அருமை நிறை அன்னையென
அவள் படைப்பை அளித்தானே
வருகின்ற துயரம் எலாம்
மனம் ஏற்க அவள்படைப்பை
மாண்பு நிறை படைப்பாக
படைத்து விட்டான் பிரமனவன் !
தங்கையென பெயர் பெறுவாள்
தமக்கை என மாறிடுவாள்
தன்னிகரே இல்லை எனும்
தாயாக அவள் இருப்பாள்
மங்கலமே அவள் ஆவாள்
வருவோர்க்கு உணவு அளிப்பாள்
எங்குமே அவள் தேவை
எவர்க்கும் நிகர் இல்லையன்றோ !
பிள்ளைபெறும் பெரும் பொறுப்பை
பிரம்ம தேவன் கொடுத்துள்ளான்
பேணி அவள் வளர்த்துவிட
பெரும் பாடு பட்டிடுவாள்
வளரும் பிள்ளை வாழ்வளிக்கும்
என்று அவள் வளர்ப்பதில்லை
பிள்ளை வாழ்வு மனமெண்ணி
பெருங் கனவே கண்டுநிற்பாள் !
கவலை எல்லாம் உள்வாங்கி
கண் நீரால் கரைத்திடுவாள்
கடும் பசியே வந்திடினும்
காட்டாமல் அவள் இருப்பாள்
சுடு சொற்கள் கேட்டாலும்
சுகம் என்றே எடுத்துநிற்பாள்
சொர்க்கம் என நினைத்தவளும்
நரகமதை சுமந்து நிற்பாள் !
ப.சூர்யலெக்ஷ்மி,
பதிவு எண்: 12178
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி.
ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.
நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008
முன்னுரை:-
சங்கக் கவிஞர்களில் உடன்போக்கினைப் பற்றி மட்டுமே தனது பாடல்களில் மிகுதியாகப் பேசியவர் கயமனார். உடன்போக்கில்
தனது மகளைப் பிரிந்த தாயின் பன்முகத் தன்மை வெளிபடுகிறது. மகளைப் பிரிந்த தாயின் துயரம், மகள் சுரத்திடையே சென்றாலும் அவளது கடுமையான பயணம் இனிதாக விளங்கட்டும் என்கிறாள். தன்னைப் போலவே தலைவனின் தாயும் துயரடையட்டும் என்கிறாள். மகளின் வரவுக்காகக் காத்திருக்கும் நிலை, தலைவியை மீட்கச் செல்லும் தாய் இவ்வாறு கயமனாரின் பாடல்களில் தாயின் நிலைப்பாடு குறித்துப் பேசப்படுகின்றது. களவில் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையை முழுமையாகச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்துவதையே சமூகம் ஏற்றுக் கொள்கிறது. கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம் எவ்வாறு என்பதனை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.
உடன்போக்கு:-
உடன்போக்கினைப் பற்றித் தொல்காப்பியர் கூறுவது, ஒரு பெண்ணிற்கு நாணம்தான் சிறந்தது அந்த நாணத்தைவிடக் கற்பு சிறந்தது அதன் விளைவாக உடன்போக்கு நிகழும் என்கிறார்.
” உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்” (தொல்.பொ.களவியல்.இளம் நூ.111)
களவினை அறிந்த தமர் காவலில் இருத்த, இற்செறிக்கப்பட்ட தலைவியை உடன்போக்குச் செல்லத் தோழி தூண்டுபவளாகத் திகழ்கிறாள்.
தாய்மைத்துவம்:-
தாய்மைக்குரிய உணர்வுக்குவியல்களையும், விளைவுகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்க்கக்கூடிய ஒரு தளமே தாய்மை என்ற நிறுவன அமைப்பாகும். தாய்மைத்துவப் பண்பமைப்பிலுள்ள அனுபவங்களையும் திறமைகளையும் சமுதாய நோக்கில் நன்முறையில் வலுப்படுத்தவும், வெளிக்கொணரவும் விரும்புகிறது.
”ரிச் என்பவர் குடும்பத்தில் பெண்களுக்கு என வரையறுக்கப்பட்ட தீவிர உணர்ச்சிச்சுமைகள் போன்றவை ‘தாய்மை’ என்ற அமைப்பிற்குரிய கூறுகளாகும்” என்கிறார். சமுதாயம் பெண்களுக்கு என்ற கட்டுப்பாட்டை வகுத்துள்ளது. அதில் தாய்மைப்பேறு, குழந்தையைப் பேணிக்காப்பது, வளர்ப்பது, குடும்பம் என்ற அமைப்பில் பெண்களின் தனிப்பட்ட உணர்வுகள் தந்தைவழிச் சமூகத்தால் நசுக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் தாய்க்கே முதலிடம் கொடுக்கிறது. இப்படிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகள் காளையுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதால் தாய்க்கே மிகப் பெரிய இழப்பு நேரிடுகிறது. தாயின் மனநிலையைக் கயமனாரின் 23 பாடல்களில் அகப்பாடல்களில் 21 பாடல்களில் காணமுடிகிறது. புறப்பாடலில் இறந்த மகனைத் தாய் காண நேர்ந்தால் அவள் படப்போகும் துயரத்தினையும் கண்முன்னே காட்டுகிறது.
காற்சிலம்பு:-
சங்க காலத் தமிழ்மகளிர், திருமணத்திற்கு முன்பாகச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்ற சடங்கினைச் செய்வர்; தன் காலில் உள்ள சிலம்பினைக் கழற்றியப் பிறகே திருமணம் செய்விக்கும் வழக்கம் காணப்பட்டது. சங்க இலக்கிய பாடல்களின் வழியே இச்செய்தியானது பதிவாகிறது.
உடன்போக்குச் செல்ல நினைத்த தலைவி காற்சிலம்பினைக் கழற்ற நினைத்தாள் இதனைக் கண்டால் தோழிமார் நோவார்கள் என்று செல்லாது விடுத்தால் பாடலில் “அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண், வரிபுனை பந்தோடு வைஇய செல்வோள், இவை காண் தோறு நோவர் மாதோ” (நற் 12, 5-7). சிலம்பு கழி நோன்பினைத் தான் காணாது பிறர் காணுமாறு மகள் சென்றாள் என்று தாய் புலம்புவது பாடலில்
” சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக்
கழிந்தஎன் ஆயிழை அடியே” (நற் 279, 10-11)
சிலம்பினைக் கழற்றி மகள் உடன்போக்குச் சென்றுவிட்டாள். அவள் சென்ற பாலை வழியில் ஆறலை கள்வர் உள்ளார்களே; தலைவன்முன் இவள் செல்வாளோ என்று கவலைகொள்வது பாடலில் ” எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே? அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ” (அகம் 321, 13-15) தலைவி காற்சிலம்புடன் வயலைக் கொடிக்குத் தண்ணீர் ஊற்றுவாள். அவள் இல்லாது உன்னைப் பேணுபவர் யார் என்று நற்றாய் புலம்புகிறாள். பாடலில்
“பொய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்,
யார்மற்றுப் பெறுகுவை அணியை நீயே” (அகம் 383,12-14)
உடன்போக்கு சென்ற மகளை மீட்க முயலுதல்:-
செவிலித்தாய் உடன்போகிய மகளைத் தேடிக் கண்டோரை நோக்கி மகளைப் பற்றி வினவுகிறாள். அவளைப் பற்றி கூறினால் விருந்தோம்புவேன் என்கிறாள். பாடலில் “முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள் தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல்” (நற் 198, 315) இல் செறிப்பில் வைத்த தன் மகள் காவலையும் கடந்து உடன்போகினாள். ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் பின்தொடர்வதைப் போல் என் மகளையும் மீட்க வந்தேன் என்பது பாடலில்,
” இச்சுரம் படர்தந் தோளே, ஆயிடை, அத்தக்
கள்வர் ஆதொழு அறுத்தென” (அகம்7,13-14)
மகளை அடித்த தாய்:-
உடன்போகிய மகளை நினைத்த தாய் இல்செறிப்பில் மகளை அடித்த தன் கையை வெட்டினால்தான் என்ன என்று தன்னையே நொந்து கொள்கிறாள். முதுகு தனக்கு உரியது அல்ல என்று அடிவாங்கிய மகளைப் பாடலில், “எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற என்” (அகம் 145,20-22)
தாயின் ஆவேசக் குரல்:-
தன் மகளை உடன்போக்கு அழைத்துச் சென்ற அக்காளையின் தாயும் பெரிய நடுக்கமுற்று துன்பத்தை அடைவாளாக என்று ஆவேசக் குரலை எழுப்புவது பாடலில்,
“பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக்
கொண்டுடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே” (நற் 293, 7-9).
தலைவன் தலைவியை உடன்போக்கு அழைத்துச் சென்றமை பொறுக்க முடியாது பொருத்தமற்றத்து என்று தாய் சாடுகிறாள். பின்வருமாறு, “தணிந்த பருவம் செல்லான் படர்தரத்” (அகம் 397,8). உடன்போக்கினைப் பெற்றோரும், சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கயமனாரின் பாடல் மூலம் தெளிவாகிறது.
உடன்போகிய மகள் இனிதாக வாழவேண்டும் என்ற தாயின் மனநிலை வெளிப்படும் பாடல்கள்:-
உடன்போகிய தன் மகள் இல்லறத்தை இனிதே நடத்தினால் தன் துயரம் நீங்கும் என்பது பாடலில் ” எரிசினந் தணிந்த இலையில் அம்சினை, வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விரி” (நற் 305,6 ). மகள் உடன் போகிய பாலை நிலமானது சூரிய ஒளி வீசாமல் மரத்தின் நிழல் அடங்கி மழை பெய்து குளிர்ச்சியாக அமையுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி எண்ணுவது பாடலில் “ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்க்” (குறுந் 378,1-2).
பாராட்டிச் சீராட்டி வளர்த்த தாய்:-
உடன்போகிய தன் மகளின் மென்மைத் தன்மையை கண்டு செவிலி இரங்கியது. பாலும் உண்ணாதவள். நீரற்ற நிழல் அடங்கிப்போன சுரத்தில் எவ்வாறு வலியாளானாள் என்கிறாள்? “யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய” (குறுந் 356,5). பாலை நிலத்தின் கொடுமையை நினைத்த தாய், தன் மகள் பாலும் உண்ணாள், பந்தையும் உருட்டாள் எவ்வாறு சென்று இருப்பாள் என்று செவிலி துயரம் கொள்வது “கழைதிரங் காரிடை யவனொடு செலவே” (குறுந் 396,7). பந்தாடினாலும் கழங்காடினாலும் சோர்வுற்று என்னைக் கட்டிக் கொள்பவள் கடத்தற்கரிய தந்தையின் காவலையும் மீறிக் கொடுமையான பாலையில் அவள் அடிகள் நடந்து சென்றனளே என்கிறாள் பின்வருமாறு, “அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்” (அகம் 17,17)
உடன்போகிய தன் மகள் மீண்டும் இல்லத்திற்கு வருவாளோ என்று ஏங்கி நிற்கும் தாயைக் காண முடிகிறது. மகளுக்கு தலைவாரி முடித்து, இடுப்பிலே தூக்கிச் சுமந்து, புனைவுகள் பல செய்து, பெற்றவள் என்ற உரிமைக்காக மகள் அருள் செய்யாமல் போனாலும் மகளின் வரவை எதிர்நோக்கித் தாய் கண்ணீர் வடிக்கிறாள். தன் இல்லத்திற்கு அழைத்து வருவானோ? அவன் இல்லதிற்கு அழைத்து செல்வானோ? தாய் ஏங்கி நிற்கும் நிலை பாடலில், ” என்மனை முந்துறத் தருமோ? தன்னை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?” (அகம் 195,17,18).
தாய் மகளிடம் என் பகுதிக்கு உண், உன் தந்தைப் பகுதிக்கு உண், என்று பாராட்டிச் சீராட்டி வளர்த்த தன் மகள் உடன்போக்கு சென்றமைக்காக தான் வருந்தவில்லை. அவள் பாலை சுரத்தின் கடுமையில் எவ்வாறு நடப்பாள் என்று நினைத்து தாய் வருந்துகிறாள் “மடத்தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என நோவல்யானே” (அகம் 219, 17-18).
மகளின் அன்பிற்காக ஏங்கும் தாய்:-
உடன்போகிய தன் மகள் தன்னை நினைப்பாளோ என்று மகளின் அன்பிற்காக ஏங்கும் தாயைக் காணமுடிகிறது. தன் மகளை ஊரே இழந்துவிட்டது என்கிறாள். “ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே” (அகம் 189,15). தலைவி உடன்போகியபின் அவள் விளையாடிய இடத்தையும் பிறவற்றையும் கண்டு தாய் புலம்புகிறாள். அயலவனின் காதலை நம்பி உடன்போகினாள் என்கிறாள் செவிலித் தாய் பின்வருமாறு, “பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், ஏதிலாளன் காதல் நம்பித்” (அகம்275,9-10).
வேற்று மணம் பேசிய பெற்றோரும் உடன்போக்கிற்குத் தூண்டிய தோழியும்:-
தலைவியின் களவினை அறிந்த பெற்றோர் அவளுக்கு வேற்று வரைவுக்கு ஏற்பாடு செய்தனர். அதனை அறிந்த தோழி அவனோடு உடன்போக்கு செய்ய ஏற்பாடு செய்விக்கிறாள். “வதுவை அமர்ந்தனர் நமரே அதனால்…….” (அகம் 221,3). தலைவியின் களவினை அறிந்த தமர் இற்செறிப்பினை அவளுக்கு மேற்கொண்டனர். தலைவின் துயரத்தினைக் காண முடியாத தோழி உன்னுடைய முலைகள் தலைவனுடன் பொருந்துவதாக அமைக நீ உடன்போக்குச் செல்க என்று துணிகிறாள் பாடலில், “வலியாய் இன்னும் தோய்க நின் முலையே!’ (அகம் 259,18)
ஆணாதிக்கச் சமுகம்:-
தலைவனின் பரத்தைமை உறவினைக் கண்டு தலைவி நாணமுற்று பிறரிடம் கூறாமல் கற்பொழுக்கத்திலிருந்து ஒழுகுவாள். அவனை ஏற்பாள் சினம் கொள்ளாமாட்டாள் என்ற கருத்தாக்கத்தினை ஆணாதிக்க சமூகம் உருவாக்குகிறது. பாடலில், ” தண்ணந் துறைவன் கொடுமை, நம்மு னாணிக் கரப்பாடும்மே”(குறுந் 9,7-8).
மகனைப் பறிகொடுத்தை தாய்:-
தலைவன் போரில் இறந்து காணப்பட்டான். அவனுடைய மனைவி நேரில் சென்று காண்கிறாள். உன்னுடைய தாய் நிலையினை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று பலவும் சொல்லி அரற்றுகிறாள். பாடலில் “யாங்கா குவள்கொ லளிய டானே” (புறம் 254,11).
முடிவுரை:-
கயமனாரின் பாடல்களில் உடன்போக்கு பற்றியே பெரும்பான்மை காணலாகிறது. தலைவன் தலைவி இணைந்த களவு வாழ்க்கையைச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத அளவில் உடன்போக்கு நிகழுகின்றது. சங்க காலச் சமூகம் நெறிப்பட்ட சமூகமாக திகழ்கின்றது. பெண் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைச் சமூகம் அவளுக்கு மறுத்து விடுகிறது. அதனால் உடன்போக்கு நிகழ்வதைக் காவல் நீட்டித்தாலும் அதனால் தடுக்க முடியவில்லை. சமூகத்தின் கட்டை உடைத்துக்கொண்டு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையுடன் செல்ல முற்படுகிறாள்.
அடிக்குறிப்புகள்:-
துணைநூற்பட்டியல்:-
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
அபிஷேகப்பட்டி,
திருநெல்வேலி.-627012. தமிழ்நாடு, இந்தியா.
நெறியாளர் : ந. வேலம்மாள்,
உதவிப் பேராசிரியர் தமிழியியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி-627008
-செ. முத்துமாரி
முன்னுரை
மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுரப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்தாற்போல் கண்ணெதிரில் நிறுத்திக்காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான கவனத்திற்கு உட்பட்டுப் பதிவுசெய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனிதக் குரல்வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
எதிரொலி
“echo என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில்
எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்
ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்
கேட்பதே எதிரொலி ஆகும்” 1
“எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு’
என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்
பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்
மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2
குரல்ஒலி
குரல்ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே; அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி, கீச்சுக்குரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.
குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொறுத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும். மிகுந்து ஒலிக்கும்போது அவ்வொலி எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு. இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
சங்க இலக்கியங்களில் எதிரொலி குறித்த செய்திகள் பரவலாக காணப்படுகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு:
பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டித் தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொலியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.
பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும் எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடர்ப்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியானது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,
“கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”(அகம்: 17:13-14) எனும் பாடல்வரிகளால் அறியலாம்.
ஒருவர் இன்னொருவரை அழைக்கும்போது அருகில் இருந்தால் மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு சத்தமாக அழைக்கும்போது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.
பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில் இட வேறுபாடு காரணமாக எங்குச் செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார். அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல் விளியின் இசையை மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன. அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,
‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க
ஏஎ’ ஓஒ’ என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்
செல்குவர் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூவுக் கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)
எனும் பரிபாடல் வரிகளால் அறியலாம். இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத் துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாகப் புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.
ஒருவரைப் பலர்கூடி வாழ்த்தும் பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொலி குறித்த செய்தியைப் பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.
சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர் பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத் தூக்கிய கோழிக் கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும் ஒன்றாகக் கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,
‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி
வாழிய பெரிது! என்று ஏத்தி பலர் உடன்
சீர்திகழ் சிலம்புஅகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41) எனும் திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.
பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில் அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின் ஓசையும், இடி ஓசையும், மலைகளில் பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும். மலைபடுகடாம் மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும்போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும் போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றது.
“விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்” (மலைப்படு 298-299) எனும் பூசல் ஒலியும்,
“கலை கையற்ற காண்பின் நெடுவரை,
நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””
என்னும் தேன் எடுக்கும்போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.
மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
‘கொடுவரி பாய்ந்தெனக் தொழுநர் மார்பின்
நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’ (மலைபடு: 302-304)
‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342) எனும் பாட்டொலிகளும்,
‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனந்தொறும்,
கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329) எனும் கிளியோட்டும் ஒலியும்,
‘அருவிநுகரும் வான் அரமகளிர்
வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்
தெரிஇமிழ் கொண்டதும் இயம்போல் இன்னிசை’ (மலைபடு:294-296)
எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும் மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.
இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339) எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.
முடிவுரை
எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனத்திற்கு இன்பம் விளைவிப்பது. மலைப் பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைப்பகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொலிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
துணைநூற்பட்டியல்
1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.
2.இரா. குணசீலன், பழந்தமிழர் ஒலிச்சூழல், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற பன்னாட்டுக் கருத்தரங்கு கட்டுரை, 2007.
3.இரா. குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.
4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி – 8.