வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில்
இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற
பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண்
தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!
வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில்
இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற
பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண்
தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!
கனடாவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் சார்பில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன்கோவில் கலாச்சார மண்டபத்தில் வெளியிடவும் திரையிடப்படவும் உள்ளது. சிறப்பு விருந்தினர்களாகப் பேராசிரியர் நரேஷ் தேவதாசனும், மருத்துவர் கயல்விழி தேவதாசனும் கலந்துகொள்கின்றனர்.
விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தம் ஆவணப்படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்க உள்ளார். கவிஞர் புகாரி ஆவணப்படம் குறித்த தம் எண்ணங்களைக் கவிதை வடிவில் வழங்கிப், பாராட்ட உள்ளார்.
தேநீர் விருந்துடனும், குழலிசையுடனும் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல். க. புருஷோத்தமன் தலைமை தாங்கவும், மன்றத்தின் துணைத்தலைவர் க. குமரகுரு வரவேற்புரை வழங்கவும் உள்ளனர். மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினர் செய்துள்ளனர்.
தொடர்புக்கு:
நித்தி சிவானந்த ராஜா – + 416 844 3304

பெற்றெடுத்தாள் அன்னை
பேணிநின்றார் தந்தை
கற்பதற்கு கைபிடித்து
கல்வியிலே ஏணியானார்
முற்றுமே துறந்தவராய்
முனிவராய் அவரிருப்பார்
சற்றுநான் சறுக்கிவிட்டால்
தான்தாங்க வந்துநிற்பார் !
எப்பவுமே எனைப்பற்றி
எண்ணியே இருந்திடுவார்
தப்பிதங்கள் செய்யாமல்
தடுப்பதிலே முன்னிற்பார்
அற்பத் தனங்களை
அறவே வெறுத்திடுவார்
அறவழியில் நான்வளர
அவரேயென் குருவானார் !
அப்பாவின் வார்த்தைகள்
அத்தனையும் மந்திரமே
அவர்செய்யும் அத்தனையும்
அரணாக அமைகிறதே
எப்பவுமே இப்பிறப்பில்
என்தந்தை இறையெனவே
எண்ணியே தொழுகின்றேன்
எனக்குஅவர் வரமாகும் !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++
தேன்குழலி ! நீ
வேலை செய்த இனம் !
வேலை இல்லா திருந்தாய் !
வட இங்கி லாந்தில் பிறந்தவள் !
இப்போது நீ ஒளிவீசும்
தாரகை
வட அமெரிக்கத் திரைவானில் !
இப்போது
உன் செவி கேட்கும்
என் வார்த்தை இதுதான்:
தேன்குழலி !
பித்தனாக் கினாய் நீ என்னை !
நேசிப்பது நான் உன்னை
ஆனால் நானோர்
சோம்பேறி !
நீ சொந்த நாட்டுக்கு மீண்டும்
வர வேண்டும் !
நிலைமை மோசமாய் உள்ளது
எனக்கு !
வா கண்மணி வா ! வந்திங்கு
ஹாலிவுட்
மோகனக் கீதங்கள் பாடு !
திரைவானில் ஒளிவீசும்
தாரகை நீ !
நேரில் உன்னைக் காண
அஞ்சி
முறியுதென் முழங்கால் !
தேன்குழலி !
என்னைப் பாடு படுத்துகிறாய் !
அட்லாண்டிக்
கடல் கடந் தென்னை
அணைத்திட வா !
உன் சொந்த நாட்டுக்கு வா !
காற்றே !
படகில் தள்ளிச் சென்றாய் அவளை !
மீண்டும் அப்படகில்
அவளை
என்னிடம் கொண்டு வந்து சேர் !
தேன்குழலி !
பித்தனாய் ஆக்கி விட்டாய் என்னை !
நேசிக்கிறேன் உன்னை !
ஆனால் நானோர்
சோம்பேறி !
சொந்த நாட்டுக்கு
நீதான்
மீண்டும் வர வேண்டும்
என் காதலியாய் !
மண்ணுக்கு மரம் பாரமாகுமா,
மரத்திற்கு கிளை பாரமாகுமா,
கொடிக்கு காய் பாரமாகுமா
குழந்தை தாய்க்கு பாரமாகுமா
பிழைப்பிற்காக குழந்தையை
தோளை தூளியாக்கிச் சுமந்து
வயிற்று பிழைப்பிற்காக தினம்
சுமந்து செல்லும் மலைஜாதிப்
பெண்ணே !
உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
உழைத்து பிள்ளையை காப்பாற்று
கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
நல்லறிஞ்சனாய் வளர்ப்பாயாக
இன்று உன் நிழலில் உன் பிள்ளை
நாளை அவன் மடியில் உன் தலை
அவனே உன்னை தாங்கும் தூண் !
என எண்ணி செயலாற்று !
ரா.பார்த்தசாரதி
சற்குணா பாக்கியராஜ்
இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய கடுஞ் சூல் பேடைக்காக அயிரை மீனைக் கழியில் தேடுவதைக் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறார்.
“கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் “
நற்றிணை 272: 1-6
.
பறவையியலை ஆராயும் போது கடல் பறவைகள் இனத்தைச் சார்ந்த ஆலாப் பறவை (டெர்ன் -Tern) இனப் பெருக்கக் காலத்தில் அயிரை போன்ற சிறு மீன் இனங்களைக் கவர்ந்து அடைகாக்கும் தனது பெடைக்கு உணவாகக் கொடுக்கிறது என்பதைப் பல நாடுகளிலுள்ள பறவையியலாளர்கள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகிறது .
இனப் பெருக்கக் காலம் நெருங்கும் போது ஆலாப் பறவைகள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று காலனிகள் உருவாக்கிய பின் பெண் தேடும் படலத்தைத் தொடங்குகின்றன. ஆண் பறவைகள் மீனைப் பிடித்து அலகில் கெளவிக் கொண்டு பெண் பறவைகள் இருக்கும் இடத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து சென்று தாங்கள் பிரமச்சாரிகள் என்பதை விளம்பரம் செய்கின்றன. தனக்குப் பிடித்த பெண் பறவையை ஆண் பறவையால் தெரிந்தெடுக்க முடியாது. ஆண் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பெண் பறவை மீன் கொண்டு பறக்கும் ஆண் பறவையை விரும்பினால் அதைப் பின் தொடர்ந்து பறக்கும். இந்த நிகழ்ச்சியைப் பறவையியலாளர்கள் “Fish Flight” அல்லது “Fish Offering Ceremony” என்று அழைக்கின்றனர். இந்தச் சடங்கு சில வேறுபாடுகளோடு உலகெங்கிலும் உள்ள எல்லா வகை ஆலாப் பறவைகளிலும் காணப்படுகிறது.
சில நேரங்களில் ஆண் பறவை, பெண் பறவையின் முன்னால் நின்று தலையையும் நெஞ்சையும் நிமிர்த்திப் பெருமையோடு ராஜ நடை நடந்து தன் பலத்தை வெளிப்படுத்தும். இதனை “Strutting Display” என்பர். ஒரு ஆண் பறவையின் பலம், கொண்டு வரும் மீனின் பருமன், எண்ணிக்கை இவைகளைக் கொண்டு பெண் பறவை, ஆண் பறவையைத் தேர்ந்தெடுக்கும். அதன் பின் பரிசுப் பொருளான மீனைப் பெற்றுக்கொண்டு இணைந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும்..
LittleTerns: Courtship behavior: மீன் கொண்டு பறத்தல், நன்றி படம்: கூகிள்
இந்த மீன் கொடுக்கும் சடங்கு, பெண் பறவை திடமான ஆண் பறவையைத் தெரிந்தெடுக்கவும் அடுத்த சந்ததி பலமுள்ளதாக வருவதற்கும் அடிகோலாக அமைகிறது.
ஆலாப் பறவைகள் இணை சேர்ந்த பின் பல நாட்கள் ஆண் பறவை துணைப் பறவைக்கு உணவு கொடுப்பதில்லை. இரண்டு பறவைகளும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பித்து பெண் பறவைக்குக் கரு உருவாகும் சமயம் ஆண் பறவை திரும்பவும் உணவு கொடுக்க ஆரம்பிக்கிறது. பெண் பறவை இரை தேடச் செல்லாமல் உணவுக்காக ஆண் துணையைக் கெஞ்சும். பெண் பறவை நிறைச் சூல் நிலையில் இருக்கும் போது ஆண் பறவை சில சமயம் மணிக்கொரு தடவை உணவைக் கொண்டு கொடுக்கிறது.
“கருவுற்றிருக்கும் சமயம் பெண்பறவையின் எடை அதிகரிப்பதால் பெண் பறவை பறந்து நீரினுள் பாய்ந்து இரை தேட முடியாத நிலையிலுள்ளது, ஆண் பறவை உணவு ஊட்டும் போது இரண்டு பறவைகளிடையே உறவு பலமாகிறது, கரு ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சத்தான உணவும் கிடைக்கிறது,” என்று பறவையிலாளர்கள் விவரிக்கின்றனர்
( “Courtship and Feeding “ Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye 1988).
ஆண் ஆலாப் பறவை பாசத்தோடு தன் துணைக்காக இரை தேடுவதைப் புலவர்,
“பொம்மல் அடும்பின் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் ” என்கிறார்.
மேற் கண்ட சங்கப் பாடலில் புலவர் வர்ணிக்கும் “கடல்அம் காக்கை” கடல் பறவையினத்தைச் சார்ந்த கடல் காகமா (Gull) அல்லது ஆலாப் பறவையா(Tern) என்ற கேள்வி எழலாம்.
தமிழகத்தில் Gull பறவையை “கடல் காகம்” அல்லது “கடல் புறா” என்றும் ஆலாப் பறவையை “கடல் குருவி” என்றும் சில இடங்களில் அழைக்கின்றனர். இரண்டு பறவைகளும் Laridae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீர்க் கரையோரங்கள் முக்கியமாகக் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளான கழிகள், சதுப்பு நிலங்கள், வயல் பகுதிகள் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் கூட்டமாகவோ தனித்தோ காணப்படுகின்றன.
கடல் புறா (Gull)
கடல் புறாக்கள், புறாக்களைப் போலில்லாமல் காகங்களின் பண்புகளையுடையவை. காகங்களைப்போல் உணவைப் பகிர்ந்து கொண்டும் சமயத்திற்கேற்றவாறு கிடைக்கும் உணவையும் கழிவுப் பொருள்களையும் உண்ணத் தயங்காதவை. கடல் புறாக்களை நீர்க்கரைகள் மட்டுமல்லாமல் பூங்கா, புல் வெளிகளிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் காணலாம்.
மேலும் கடல் புறாக்களால் நீரில் வெகு நேரம் மிதக்க முடியும். நீர்க் கரைகளில் அலகாலும் கால்களாலும் துழாவி இரை தேடுபவை. நீரில் மிதக்கும் உணவைப் பறந்து வந்து அலகால் எடுக்க முடியும். ஆனால் நீரில் மூழ்கி இரை தேடுவதில்லை. இவைகளின் அலகுகள் முனையில் வளைந்திருக்கும்.
கடல் புறா (Gull)..படம்: சற்குணா பாக்கியராஜ்
குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் ஐந்து வகைக் கடல் புறாக்களும் குளிர் காலம் முடிந்ததும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை..

மேலும் ஆண் கடல் புறா இனப் பெருக்கக் காலத்தில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் போது சற்றுச் செரித்த உணவை வெளிக் கொண்டு வந்து (regurgitate) கொடுக்கிறது. மீனைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுப்பதில்லை.
ஆலாப் பறவை (Tern)
இரை தேடும் ஆலாப் பறவை, படம்: சற்குணா பாக்கியராஜ்
ஆலாப் பறவைகள் நீரில் நெடு நேரம் மிதப்பதில்லை. பாதங்களில் சவ்வுகள் இருப்பினும் நீந்துவதில்லை. இவைகளின் முக்கிய உணவு மீன், இறா, புழு, பூச்சிகளாகும். ஆலாப் பறவைகளின் அலகுகள் நீண்டு கூர்மையாக இருக்கும்.

இவை இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாக அல்லது தனித்து வட்டமடித்துப் (hover) பறந்து சென்று கொண்டிருக்கும். இரையைக் கண்டவுடன் செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் அலகில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். ஆலாப் பறவைகள் அலகினாலோ அல்லது கால்களாலோ துழாவி இரை தேடுவதாக அறிவியலில் சான்றுகள் காணப்படவில்லை..
புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் வர்ணித்துள்ள ஆண் கடல் காகம், ஆலாப் பறவையாகத்தான் இருக்க முடியும். கடல் புறாவிற்கும் ஆலாப் பறவைக்கும் பால் வேறுபாடு வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் கருவுற்றிருக்கும் துணைப் பறவைக்காக மீனைத் தேடிக் கவர்ந்து சென்று உணவூட்டுவது ஆண் ஆலாப் பறவை என்பது உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை!!

“செவ் வாய்” என்று பாடலில் காணப்படுவது பறவையின் அலகா அல்லது வாயின் உள் பகுதியா?
தமிழ் நாட்டிற்கு வலசை வரும் கிருதா ஆலாப் பறவைக்கும் (Whiskered Tern) சாதா ஆலாப் பறவைக்கும் (Common Tern) காஸ்பியன் ஆலாப் பறவைக்கும் (Caspian Tern) அலகுகள் சிவப்பு நிறம். இந்த ஆலாப் பறவைகள் கூட்டமாகவும் காணப்படும். இவை தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை.
“செவ் வாய்” காஸ்பியன் ஆலாப் பறவை,
காஸ்பியன் ஆலாப் பறவையின் சிவந்த அலகும் வாயின் உள் பகுதியும்.. படம்: “Bird Research Northwest” நன்றி
காஸ்பியன் “குளிர் காலத்தில் தமிழகத்தில் அதிகமாக் காணப்பட்டாலும் மற்ற காலங்களிலும் இதை ஒரு சில இடங்களில் (உ..ம்: கோடிக்கரை) காணலாம். அருகில் உள்ள இலங்கையில் இப்பறவை இனப் பெருக்கம் செய்வதே இதன் காரணமாக இருக்கலாம்”( Grubh, R.B, 2012).
பிற ஆலாப் பறவைகளின் அலகுகள் மஞ்சள் அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் புலவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுற்றுச் சூழ் நிலையை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய பாடல்களில் கருப் பொருள்களாகப் புகுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.
References
Ali, Salim (2002): The Book of Indian Birds Thirteenth Edition, Bombay Natural History Society, Oxford University Press
Fazili, F. M (2014) Breeding biology of Indian whiskered tern Chlidonias hybrida indica (Stephens) at lake Wular Kashmir, Nature and Science 2014; 12(3)
Grubh. R (2012): Wetland Birds of Tamil Nadu, Institute for Reservation of Natural Environment
Lewis T. NOTES ON THE BREEDING-HABITS OF THE LITTLE TERN, British Birds,Vol.XIV: 74-82
Meng and Melinda Chan in 2005; Little Terns: Courtship behavior – Bird Ecology Study Group www.besgroup.org/2006/07/27/little-terns-courtship-behaviour/Observations were made by. All images by them.
Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye,1988,”Courtship and Feeding “
ப.சூர்யலெக்ஷ்மி,
பதிவு எண்: 12178
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி.
ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.
நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008
முன்னுரை:-
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொது மெய்ப்பாடு என்பது எண்வகை மெய்ப்பாடு அவை நாடக வழக்கினைச் சார்ந்து வரும்.
அதில் நானான்கு வகையினைக் கூறி 32 என்பார். அவை அல்லாத அதில் அடங்காத 32 மெய்ப்பாடும் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு ஆகும். உரையாசிரியரான இளம்பூரணரும் பேராசிரியரும் இந்த 32 மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் என்கிறார். “ச.சோமசுந்தர பாரதியார் இவை மூப்பத்திரண்டும் எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற்புணர்வு என்ற நான்கு பகுதிகட்கும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் இவை அகத்துறைக்கே சிறப்பாக வரும் என்றும் ஏதுக்காட்டி நிறுவுவதுடன் பழைய உரையாசிரியர் இருவர் கொள்கைகளையும் மறுத்துவிடுவர்”. உரையாசிரியர்களின் மாறுபட்ட கருத்தினை நினைவில் கொண்டு சங்கப்பெண் கவிஞர்களின் புறநானூற்றுப் பாடல்களில் உலக வழக்கினைத் தழுவிய மெய்ப்பாட்டினைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
உலகவழக்கினைத் தழுவிய மெய்ப்பாடு:-
உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடு 32 ஆகும். அவை உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பவையாகும்.
உடைமை:-
உடைமை என்பது “செல்வம் உரியப்பொருள், அணிகலன், உரியவை” என்று தமிழ் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
உடைமை என்பதனை “யாதானுமொரு பொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். “உடைமை என்பது செல்வம், செல்வநுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந்தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம் என்று பேராசிரியர் கூறுகிறார். உடைமை மெய்ப்பாடு பின்வருமாறு,
நிலப்பரப்பு நம்முடையது என்று உரிமை உடைய மன்னன் ஆனவன் இறந்து விட்டால் வலிமை உடையவர்களுக்கு நிலமானது உடைமை உடையதாகும் என்ற செய்தி ஔவையின் பாடலில் பின்வருமாறு, “தமவே ஆயினும் தம்மொடு செல்லா, வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்” (புறம் 367,2-3), பாரிமகளிர் தம்முடைய பறம்பு மலையும் தந்தையும் முன்பு தமக்கு உடமையாக இருந்தமையைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் “எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்” (புறம் 112, 2).
நடுவுநிலை:-
நடுவுநிலை என்பது “நீதி ஒரு பக்கம் சாயாமை” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.
நடுவுநிலை என்பது “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுவுநிலை என்பது “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை” என்று பேராசிரியர் விளக்கமளிக்கிறார்.
சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்தான். சிலர் கிள்ளி வெற்றிபெறுவான் என்றனர்; பனை மரத்தின் அடியில் தான்நின்று நடுநிலையோடு அக்காட்சியைக் கண்டதனை நக்கண்ணையார் கூறுவது பின்வருமாறு, “ஆடாடென்ப வொருசா ரோரே, ஆடன்றென்ப வொருசா ரோரே, நல்ல பல்லோ ரிருநன் மொழியே” (புறம் 85, 3-5).
அருளல்:-
அருளல் என்பது “ஈதல், அருள்செய்தல், உண்டாக்கல், காத்தல், கற்பித்தல், கொடுத்தல், அசைதல், சொல்லல், விழித்தல், கட்டளையிடல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. “அருளாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். பேராசிரியர் அருளென்பது “மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல்” என்கிறார்.
குழந்தையின் மழலைச் சொற்கள் தந்தைக்கு அருளுவது போல ஔவைக்கு அதியமான் அருளுகிறான் என்று ஔவை கூறுவது பின்வருமாறு, “அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை, என்வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்” (புறம் 92, 3-4). அதியமான் பரிசில் தருவது தாழ்ப்பினும் அவன் தருவது தவறாது அருளுடையவன் என்பதனை “கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே” (புறம் 101, 7-8). பொகுட்டெழினி துன்ப இருளினைப் போக்கி நிலவு போன்று அருளும் தன்மையுடையவன் என்பதனை “இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள், நாள்நிறை மதியத்து அனையை; இருள்” (புறம் 102, 6-7). விறலியிடம், ஔவை பரிசிலரைப் பாதுகாக்க அதியமான் உண்கலத்தில் அருளுவான் என்கிறாள். பின்வருமாறு, “மெழுகுமெல் அடையின் கொழுநிணம் பெருப்ப” என்கிறாள். (புறம் 103, 10).
நாஞ்சில் வள்ளுவன் ஆய் அண்டிரனிடம் விறலியர் சமைக்க அரிசியை ஔவை வேண்ட, அவனோ ஆராயாமல் பெருங்களிறு சுமக்கும் அளவில் உணவினை ஈந்து அருளிய செய்தி பாடலில், “பெருங்களிறு நல்கியோனே யன்ன தோர்” (புறம் 140, 8) காணலாகிறது. அதியமான் இறந்த பின்பு அவன் செய்த அருள் தன்மையினை ஔவை பாடலில் பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு, “சிறிய கட்பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனிபல் கலத்தன்; மன்னே!” (புறம்235,1-5).
இழந்த தன் கணவனின் அருள் தன்மையினை அவன் மனைவி எண்ணிப் பார்க்கிறாள். இரவலர்க்கு உணவு வழங்கி அவர்கள் கண்ணீரினைப் போக்கி அருளியமையைப் பாடலில் “இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்” (புறம் 250, 2-3).
தன்மை:-
தனிமை என்பது “இயல்பு, குணம், நிலைமை, பெருமை, மெய்மை, அழகு,” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.
தன்மை என்பது “சாதியியல்பு” என்று இளம்பூரணர் கூறுகிறார். தன்மையென்பது, சாதித்தன்மை; அவையாவன: “பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்குநோக்கிக் கொள்க” என்று பேராசிரியர் கூறுகிறார்.
மற குலப்பெண் ஒருத்தி மண்ணாசையால் போர் செய்யும் பகைவேந்தர் உருவாக வேண்டும் என்று நடுகல்லைத் தொழுத செய்தி பின்வருமாறு, “ஓ…..வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே” (புறம் 306, 6-7). மறகுலபெண்ணைப் பற்றி வினவியவனிடம் இவள் தந்தை வயலில் தனியே வென்ற மன்னருக்கு மனம் பேசியுள்ளார் என்கிறார், அள்ளூர் நன்முல்லையார். மறக்குலத்தின்வீரம் பொருந்திய தன்மையைக் காட்டுகிறது பாடலில், “கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும், பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே” (புறம் 340, 8-9). என்கிறார். மறக்குலப்பெண் முன்னொரு நாள் தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்தாள் இருப்பினும் தன் ஒரே மகனான இளைய மகனையும் வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்பும் செய்தி பாடலில், “வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ” (புறம் 279, 8).
அதியமானைப் பகைத்த மன்னனிடம் அவன் நுண்ணிய பூண் அணிந்த மார்பினை உடையவன் நற்போரினைச் செய்யும் தன்மையன் அதனால் அவனை பகைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறாள் பாடலில், “கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்” (புறம்88, 4).
ஏறைக்கோன் குறிஞ்சி நிலத்துக் குறுநிலத் தலைவன் இவன் பிறர் வருகை கண்டு நாணமடைபவன். தனக்குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பவன். பலியிடத்து வலிமையுடையவன் அரசனிடத்தில் வலிமையுடையவன் இத்தகைய தன்மை வாய்ந்தவை என்று குறமகள் இளவெயினி கூறுவது பின்வருமாறு, “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும்” (புறம் 157, 1-2).
அன்பு:-
அன்பு என்பது “பற்று, ஆசை, தயை, நேசம், கருணை, பிரியம், அருள், பக்தி, சிவம், என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அன்பு என்பது “பயின்றார்மாட்டுக் காதல்” என்று இளம்பூரணர் கருதுகிறார்.
“பேராசிரியர் அன்பென்பது, “அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம், அஃதுடையார்க்குப் பிறர்கண் துன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே “அன்புடைமை விளங்கும்” என்று விளக்கம் தருகிறார்.
அதியமான் ஔவையின் மீது பேரன்பு வைத்ததன் காரணமாக அரிய வகை நெல்லிக்கனியைத் தான் உண்ணாது புலவருக்கு ஈந்தமை பாடலில், “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,.. சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே” (புறம் 91, 9,11).
வாழ்த்தல்:-
வாழ்த்தல் என்பது “ஆசி கூறு, கடவுள் துதி, மங்களம் பாடுதல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.
வாழ்த்தல் என்பது “பிறனை வாழ்த்துதல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். வாழ்த்தல் என்பது “பிறரால் வாழ்த்தப்படுதல், இது பிறவினையன்றோவெனின் ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்று” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்தமைக்காக நீலமணி போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவன் போல் வாழ்க என்று வாழ்த்துவது பின்வருமாறு, “நீல மணிமிடற்கு ஒருவன் போல மன்னுக-பெருமே! நீயே” (புறம் 91, 6-7). ஔவையாரின் மற்றொரு பாடலில் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது நல் அறத்தினைச் செய்தால் வானத்து விண்மீனைக் காட்டிலும், மழைத்துளிகளைக் காட்டிலும் நெடுநாள் வாழ்க என்று வாழ்த்துவது, “வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கு மாமழை உறையினும், உயர்ந்துமேந் தோன்றிய பொலிகநும் நாளே” (புறம் 367, 15-18).
பொகுட்டெழினியிடம் திறை செலுத்தாத பகைமன்னன் நாட்டைக் கழுதையேர் பூட்டி அழித்தாய் நீ வாழ்வாயாக என்று வறியவன் ஒருவன் பாடினான் என்ற செய்தியை ஔவை பாடலில் பின்வருமாறு, “வைகல் உழவ வாழிய பெரிது” கூறுகிறார், (புறாம் 392,11).
அரற்று:-
அரற்று என்பது “அழுது புலம்பு, பலவும் சொல்லி அழுது தன் குறை கூறுதல், ஒலி செய்” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.
அரற்று என்பது “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு” என்று இளம்பூரணர் கூறுகிறார். அரற்று என்பது “அழுகையின்றிப் பலவுஞ்சொல்லி தன்குறை கூறுதல்” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.
போரில் கணவன் மார்பில் விழுப்புண்பட்டுக் கிடந்தான் அவனை எடுத்து உன் தாய் இந்நிலை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று அரற்றுகிறாள். பின்வருமாறு, “யங்கா குவள்கொ வழியில் டானே”(புறம் 254, 11).
ஆராய்ச்சி:-
“ஆராய்ச்சி என்பது துருவிப் பார்த்தால், நுணுகிப் பார்த்தால், புதியன காணல், சோதனை, என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.
ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல் என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.
தொண்டைமான் அதியமானிடம் பகை கொண்டான்; போரில் ஈடுபடக் கருதினான். போரின் கொடுமையை அதியமான் எண்ணி ஆராய்ந்து ஔவையைத் தூது அனுப்பியமை பின்வருமாறு, “பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து” (புறம் 95, 4). ஔவையின் மற்றுமொரு பாடலில் அதியமானுக்குத் திறை செலுத்தாத மன்னனிடம் திறை செலுத்த மறுப்பின் உங்கள் மனைவி உங்கள் தோளினைப் பிரிவது உறுதி என்று ஆராய்ந்து கூறுவது “குறுந்தொடி மகளிர் தோள்விடல், இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே” (புறம் 97, 24,25).
அதியமானுக்கும் கோவலூர் மலாடர் கோவிந்தனுக்கும் பகை உண்டாயிற்று. இடையிலுள்ள அதனைக் கண்டு அஞ்சியதனை ஔவை பார்க்கிறார். அதியமானைப் போரில் எதிர்த்து நிற்பவர் யார் போரின் தன்மையை நினைந்து ஆராய்வது பின்வருமாறு, “இறங்குகதிர் அலம்வரு கழனி, பெரும்புனற் படப்பை, அவா அகன் தலைநாடே” (புறம் 98, 19-20).
நடுக்கம்:-
நடுக்கம் என்பது “அச்சம் துன்பம் கிறுகிறுப்பு” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.
நடுக்கம் என்பது “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுக்கம் என்பது “அன்பும் அச்சமும் முதலியன உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல், புதல்வாக்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம்.” என்று பேராசிரியர் கூறுகிறார்.
நக்கண்ணையார் பெருநற்கிள்ளியை கூடப் பொறாமையால் தாய்க்கும் ஊருக்கும் அஞ்சி நடுங்குவது பாடலில், “தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்கல் லவைநா ணுவலே” (புறம் 83, 3-4).
முடிவுரை:-
புறப்பாடல்களில் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு உடைமை, நடுவுநிலை, அருளல், தன்மை, வாழ்த்தல், அரற்று, ஆராய்ச்சி, நடுக்கம் என்பதாகும். இவை மனித மனத்தின் உள்ளுணர்வின் புறதோற்றங்களாக வெளிப்படுகின்றன.
துணைநூற்பட்டியல்:-
அகராதி:-
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர்க் கல்லூரி, (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
திருநெல்வேலி.
மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ(கொரில்லா ஸிம்பாலிக் -கேசவ் கரெக்டா….!)
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!
செவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்
++++++++++++++++++++++++++
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.
ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]
2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்து அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!
ஜெஃப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]
செவ்வாய்க் கோளில் நாசா விண்ணுளவிகள் அசுரத் தூசிப்புயல் அடிப்பைப் பதிவு செய்தன.
செந்நிறக்கோள் செவ்வாயைச் சுற்றிவரும் மூன்று நாசாவின் விண்ணுளவிக் காமிராக்களும், மற்றும் நாசாவின் தளவுளவி கியூரியாசிட்டியும் [NASA Curiosity Rover] கேல் ஆழ்குழியில் [Gale Crater] பேரளவு தூசி மேவியுள்ளதாய்க் காட்டி இருக்கின்றன. அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் செவ்வாய்க் கோளில் அடிக்கடி நிகழும் அதிர்ச்சிகள். இவை விண்ணுளவிகளின் தளவுளவிக் கருவிகள் முடங்கிப் பழுதடையச் செய்கின்றன. எதிர்கால விமானிகள் செவ்வாய்க் கோளில் நடமிடும் போது, இந்த அசுரப் புயல்களிலிருந்து தம்மையும், விண்கப்பல்களையும் எப்படிப் பாதுகாத்துக் கொள்வார் என்பது ஒருபெரும் சவாலாக இருக்கப் போகிறது !
செவ்வாய்க் கோளில் இம்மாதிரி அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் ஆண்டுக்கு [பூமி ஆண்டு] ஆறு -எட்டு முறை நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு நேர்ந்த ஓர் அசுரப்புயல் பல வாரங்கள் நீடித்தன. ஏன் பல மாதங்கள் கூட நீடிக்கலாம். 2018 ஜூனில் நிகழ்ந்த பெரும்புயல் 14 மில்லியன் சதுர மைல் பரப்புக்கு [ 35 மில்லியன் சதுர கி.மீ. ] பாதகம் விளைவித்துள்ளது. அது ஏறக்குறைய செவ்வாய்த் தளத்தில் கால் பகுதியாகும். எல்லா தூசிப்ப்யல் அடிப்புகளும் செவ்வாய்க் கோள் சூழ்வெளியைப் பாதிப்ப தாகும்.
++++++++++++++++++
(மார்ச் 15, 2007)
மார்ஸிஸ் ரேடார் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்; செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் அது பேரளவு வெற்றி அடைந்துள்ளது.
கியோவன்னி பிக்கார்டி, ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் [Gionanni Picardi]
“ரோவர் தளவூர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”
ஸ்டீவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

செவ்வாய்க்கோள் தென்துருவத்தில் ஆழமான அகண்ட பனித்தளக் கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக் கப்பல் செவ்வாய் எக்ஸ்பிரஸ் [Mars Express] 2007 மார்ச் 15 ஆம் நாள் தென் துருவத்தில் ஓர் அகண்ட ஆழமான பனித்தளத்தின் பரிமாணத்தை அளந்து பூமிக்குத் தகவல் அனுப்பி யுள்ளது! செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது. அந்தப் பனித்தளம் உறைந்து போன நீர்த்தளம் என்பதும் தெளிவாக இத்தாலிய ரேடார் கருவி மூலம் காணப்பட்டு முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன் நீர்க் கொள்ளளவை செவ்வாய்க் கோள் முழுவதும் பரப்பினால் 36 அடி [11 மீடர்] ஆழமுள்ள ஏரியை உண்டாக்கலாம். செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் கருவி செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து, தென் துருவத்தில் 300 துண்டங்களை நோக்கிப் பனிக்கட்டித் தளங்களை ஆய்ந்து படமெடுத்துப் பரிமாணத்துடன் அனுப்பியுள்ளது. ரேடாரின் கூரிய கதிர்வீச்சுகள் செவ்வாய்த் தளத்தின் கீழ் கூடுமான அளவில் 2.3 மைல் [3.7 கி.மீ] வரை சென்று உறைந்த நீர்க்கட்டியின் ஆழத்தை ஒப்பிய பரிமாண அளவில் கணித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் நுட்பக் கருவியின் பெயர்: “மார்ஸிஸ்” [MARS Advanced Radar for Subsurface & Ionospheric Sounding (MARSIS)]. தென்துருவத்தை உளவியது போல் அக்கருவி வடதுருவத்தையும் தளப்பனிக் கட்டியை உளவி வருகிறது. ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கியோவன்னி பிக்கார்டி [Gionanni Picardi] “எங்கள் மார்ஸிஸ் ரேடார் கருவி மிகச் சிறந்த முறையில் தன்பணியைச் செய்து வருகிறது”, என்று பெருமைப்பட்டுக் கொண்டார். அவரே ரேடார் ஆழ்த்தள ஆய்வாளர். “மார்ஸிஸ் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்; செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் வெற்றி அடைந்துள்ளது. விண்கப்பல் கட்டுப்பாடு அரங்குகளில் உள்ள எங்கள் பதிவுச் சாதனங்களைச் சீராக்கி நுட்பமாக மேலும் சிறந்த தள அடுக்குகளின் தன்மைகளை விளக்க முடியும்,” என்றும் கூறினார்.
செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும். நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது. ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப் படுகிறது. துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம். செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது. அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே!
ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய தகவல்
ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-·பிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. 2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது! செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்
2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது. சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டலத்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர். திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல்! ஆனால் கிடைத்த குறு ஆரம்: 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும் வீதி!

ஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும். காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும். அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும். செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும். பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும். மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும். 2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் என்று எதிர்பாக்கப் பட்டது.
துருவப் பனிப் பாறைகள்
செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

நீர்மைச் சேமிப்புள்ள துருவ பனிப்பொழிவுகள்
செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது! இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது! எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!
செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது! குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது! வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!

++++++++++++++++++
தகவல்:
1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
6 http://www.thinnai.com/?
[Author’s Article on Mars Missions]
7 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
11 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
12. https://photojournal.jpl.
13. https://solarsystem.nasa.
14. https://www.jpl.nasa.gov/
15. http://www.astronomy.com/
16. https://mars.nasa.gov/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 17, 2018 [R-1]
Preview YouTube video Dust Storms May Have Played Role On Atmosphere Loss On Planet Mars
Preview YouTube video NASA Images Show How Mars Transforms After Dust Storm
Preview YouTube video Mars dust storm: Two great storms in the last week.
Preview YouTube video Huge Mars discovery shocks scientists
Preview YouTube video Mars Ship Confirmed by NASA Rover – & Propeller Found – ArtAlienTV
Preview YouTube video Escape from Mars! Red-Planet Dust Storms Linked to Atmosphere Loss
-மேகலா இராமமூர்த்தி
சுட்டிக் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டிருக்கும் அன்னையைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். இப்புகைப்படத்தை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி!
முந்தித் தவமிருந்து, தொந்திசரிய முந்நூறு நாள்சுமந்து பெற்ற குழந்தையை, பெற்ற பின்பும் கீழே இறக்காது தூளிகட்டிச் சுமக்கும் தாயன்பின் முன்னே தெய்வமும் மண்டியிடும்!
தாயும் சேயும் இணைந்து நிற்கும் கண்கொள்ளாக் காட்சியிதனைக் கவிக்கண் கொண்டு நோக்கிக் கருத்தமைந்த பாடல்களைப் பொருத்தமாய்த் தர கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்.
*****
கங்காருக் குட்டிபோல் தன் குழந்தையை முதுகில்கட்டிச் சுமக்கும் இந்தத் தன்னலமற்ற தாயன்புதான் போரில்லாப் புதிய உலகைப் படைக்கும் என்று பகர்கின்றார் திரு. ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.
வீட்டுமுற்றத்திலே தூளி கட்டி
ஆட்டிஅழகு பார்க்கும்
அம்மாமார் பார்த்ததுண்டு..
மரக்கிளையில் சேலை கட்டி
மழலை தனைத்தூங்கவைக்கும்
மாதாக்கள் இங்கு உண்டு…
எட்டி ஓடுகிற கங்காரு – தன்
குட்டி சுமக்கின்றலாவகம் போல்
மட்டிலா மகிழ்ச்சி ததும்ப
சுட்டிக்குழந்தையை முதுகிலே
கட்டித்தூக்கிச்செல்லும் தாய்!!
எந்த ஊரோ? ..எந்த நாடோ?
எங்கேயிருந்தாலும்-அன்பை
மங்காமல் காப்பாற்றுவதில்
இங்கு பங்கு இருப்பதாய்
உலகத்தோர் எல்லோர்க்கும்
உரக்க உரைப்பதுவாய்
உயிர்களுக்கு உணர்த்துகிற
பாங்கினைப்போற்றினால்
பாருயரும்! பண்புயரும்!!!
அன்புப் பரிமாற்றம் ஒன்றுதான்
சண்டையில்லா உலகத்தை
சாத்தியமாக்கிடும் என்பதுவே
சத்தியத்திலும் சத்தியம்!!….
*****
கட்டிக்கொண்டவன் கள்ளுக்கடையிலேயே காலந்தள்ளுவதால் தான் வேலைசெய்யும் இடத்துக்கும் குழந்தையைத் தோளில் சுமந்துசெல்லும் இந்த அன்னையின் ஒரே ஆசை, ’இந்தக் குழந்தையேனும் உருப்படியாய் வளரவேணும்’ என்பதுதான் என்கிறார் திரு. அ. இராஜகோபாலன்.
அவசரம்
கட்டிக்கொண்டவன்
கவலையற்று,
வெட்டியாய்க்
கள்ளுக்கடையில் காலந்தள்ள
விட்டுச் செல்ல வழியின்றி
வேலைக்குப் போகும்போதும்
கூடவே
கட்டுத் துணியில்
முதுகில் குழந்தை.
கைப் பிடித்து நடக்கவே
இன்னும் காலம் உண்டு.
அதற்குள்
காலுக்குச் செருப்பெதற்கு?
அப்பனைப் போல் ஆகிவிடாமல்
ஆகாத காலத்துக்கு,
எனக்கு
அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற
உழைத்துச் சம்பாதிக்க
உருப்படியாய் வளரவேணும்.
அவசரமாய்.
*****
”வயிற்றில் சுமந்தது போதாதென்று முதுகிலும் சுமக்கும் அன்னையே! உன்னை இறைவன் படைத்தது பிள்ளைகள் செய்த பேறே!” என்று நெகிழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
சுமை தாங்கி
பத்து மாதம் பிள்ளையைச் சுமந்தாய்
உன் உதிரத்தை உணவாய்த் தந்தாய்!
கண்ணை இமை காப்பது போல!
பிள்ளையைக் காத்தாய்!
பிள்ளையைக் கருவில் சுமந்தாய்!
கணவனை உள்ளத்தில் சுமந்தாய்!
குடும்பத்தைத் தோளில் சுமந்தாய்!
உன் சுகத்தை நினைக்க மறந்தாய்!
வலியை நெஞ்சில் புதைத்தாய்!
வயிற்றில் சுமந்தது போதாதென்றா!
முதுகிலும் நீ சுமந்தாய்!
சுமப்பதைக்கூட சுகமாய் நினைத்தாயோ!
சுமப்பதினால் பூமியும் தாயானாள்!
தாயன்பிற்கு உலகில் ஈடென்பதேது!
தாயைக் கடவுள் படைத்தது பிள்ளைகள் செய்த பேறு!
*****
”ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருவுயிர்த்து, நீராட்டிச் சீராட்டி, கனமென்று கருதாது கணப்பொழுதும் பிரியாது தாய் சுமக்கும் சுகமான சுமைதான் இந்தச் சேய்” என்று அன்னைக்குப் பாராட்டு மடல் வாசிக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.
தாயன்பு
ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
நீராட்டிச் சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
இமைப்பொழுதும் நீங்காத சிந்தனைச் சுவடுகளில்
உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
புன்னகை விரித்துப் பொழுதெல்லாம் ரசித்து
கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்
*****
”தொட்டில் கட்டி வீட்டில் விட்டால் கவனிக்க ஆளில்லையென்றுத் தோளில் தூளிகட்டிப் பசியாற்றும் அன்புநிறை அன்னையிவள்” என்று வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
முதுகிலே…
தொட்டில் கட்டி விட்டுவந்தால்
தூங்க வில்லை வீட்டினிலே,
விட்டுப் போன கணவனாலே
வேலை பார்த்துப் பிழைக்கவேண்டும்,
எட்டிப் பார்த்துப் பசியாற்ற
எளிய வழியைத் தாய்கண்டாள்,
கட்டிச் சுமக்கும் தூளியிலே
கொண்டாள் பிள்ளையை முதுகினிலே…!
*****
”குழந்தை பெற்றும் குடும்பமில்லாத அன்னையிவள்; அதனால் வயிற்றில் சுமந்த மகவை விடாது தோளிலும் சுமந்து உழைக்கிறாள்” என்று வேதனைப்படுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
உழைக்கும் அன்னை..!
வயிற்றில் சுமந்தது
……….வளையும் முதுகில்
பயிற்சி வேண்டும்
……….பணிவாய்ச் சுமக்க
குழந்தை பெற்றும்
……….குடும்பம் இல்லை
அழுதால் மட்டுமே
……….அன்னை வருவாள்
வியர்வை சிந்தி
……….வேலை செய்தும்
துயரை நீக்கத்
……….தூளியே ஆறுதல்
தாய்ப் பாசம்
……….தானாக வருவது
தாய்மை என்பது
……….தரத்தினில் ஒன்றே
தொட்டிலில் இட்டுக்
……….தாலாட்டி அன்னை
பாட்டு ஒன்றைப்
……….பாடவும் முடியா
கயிற்றுத் தூளியில்
……….குழந்தை போட்டால்
வயிற்றை நிரப்ப
……….வழியிலா தாகிடும்
பெற்ற குழவியால்
……….பெருமை உற்றும்
பற்றுக் கொண்டு
……….பகல் முழுதும்
அன்னை முதுகில்
……….அதுவே சுமை
தன்னைக் காக்க
……….தனிமை உழைப்பே
*****
”கொடிக்குக் காய் பாரமில்லை; குழந்தை தாய்க்கு பாரமில்லை! பெற்றெடுத்த மகவைக் கல்விபுகட்டி நல்லறிஞனாய் வளர்ப்பாய்! நாளை உனக்கிவன் துணையாவான்!” எனத் தன் கவிதையில் நம்பிக்கை விதைக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.
தாயும் குழந்தையும்
மண்ணுக்கு மரம் பாரமாகுமா?
மரத்திற்கு கிளை பாரமாகுமா?
கொடிக்குக் காய் பாரமாகுமா?
குழந்தை தாய்க்கு பாரமாகுமா?
பிழைப்பிற்காகக் குழந்தையைத்
தோளை தூளியாக்கிச் சுமந்து
வயிற்று பிழைப்பிற்காகத் தினம்
சுமந்து செல்லும் மலைஜாதிப்
பெண்ணே!
உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
உழைத்துப் பிள்ளையை காப்பாற்று
கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
நல்லறிஞனாய் வளர்ப்பாயாக!
இன்று உன் நிழலில் உன் பிள்ளை
நாளை அவன் மடியில் உன் தலை
அவனே உன்னை தாங்கும் தூண்!
என எண்ணிச் செயலாற்று!
*****
மகவைத் தோளில் சுமந்துநிற்கும் மகத்தான தாய்க்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தம் நன்மொழிகளில் ஊட்டியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…
மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்!
உலர்ந்த நிலப் பரப்பில்… பொழிந்திட்ட மழையைப் போல…
அலர்ந்த மலர் ஒன்று… பரப்பிட்ட மணத்தைப் போல…
வளர்ந்த தரு வொன்று… தந்திட்ட நிழலைப் போல…
புலர்ந்த பொழு தெனவே… பிறந்த தன் மகவினாலே…
குளிர்ந்த நில வெனவெ… இருக்கிறது அத்தாயின் முகமும்…!
மலர் போன்ற பிள்ளைதன்னை… தன் முதுகில் சுமந்துகொண்டு…
தளர்வறியாச் சூரியன் போன்று… தன் பணியைச் செய்வதுகண்டு…
சிலரேனும் நினைத் திருப்பர்… சிக்கலான வாழ்க்கை யென்று…
அளறுவென நினைக்கும் படி… அவனி வாழ்க்கை இருந்தாலும்…
பலர் போற்ற வாழ்வோரும்… பாரினிலே மெத்த உண்டு…!
எத்தனை எத்தனை இன்பங்கள்… இறைவன் படைப்பில் இருந்தாலும்…
அத்தனையும் நமக் கில்லை… என்பது போல் இருந்துவிட்டால்…
மொத்தமாய்த் துன்பமே மேலோங்கும்… என்பதை நன்கு ணர்ந்து…
இத்தாயின் உறுதி கண்டு… சளைக்காத வலிமை கண்டு…
எதற்குமயராத நிலை கொண்டால்… மகிழ்ச்சி நமக்கு உண்டு…!
”உலர்ந்த நிலத்தில் பொழிந்த மழையாய், அலர்ந்த மலராய், புலர்ந்த பொழுதாய்த் தன் வாழ்வுக்கு ஒளியூட்ட வந்த மகவால் களிகொண்ட அன்னையிவள் உழைக்கும் உறுதிகொண்டாள்; தன் துன்பத்துக்கு இறுதி கண்டாள். இவள்போல் மனவலிமை கொண்டால் மகிழ்ச்சி நமக்குண்டு!” என்று துன்பவாழ்வை வெல்லும் நல்வழியைச் சொல்லும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும்
அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும்
மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும்
பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும்
கத்திச் சொன்னால் தனிமை தணியும்
கதறிச் சொன்னால் விலகல் சரியும்
நீட்டிச் சொன்னால் காரியம் முடியும்
காட்டிச் சொன்னால் கல்லும் கரையும்
பாடிச் சொன்னால் அன்பின் குளிர்ச்சி
வாடிச் சொன்னால் அருளின் வளர்ச்சி
அணைத்துச் சொன்னால் அதுவே உணர்ச்சி
அடுக்கிச் சொன்னால் எதுவோ கிளர்ச்சி
அப்பா என்றால் அப்பாலில்லை
அப்பாடி எனில் அடிப்பாரில்லை
அப்பா தெய்வம் இப்பாரிட்டால்
எப்போதும் பயம் இல்லை இல்லை
சொல்லிப் பாருங்கள் இதுபோல் இன்று
பொருளைக் காண்பீர் அனுபவம் கொண்டு.
“இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.
ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”
ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார். தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.
முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.
இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்) செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.
ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.
கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.