ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. ஆஸ்திரேலியா
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திருவாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின்றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய், சமய விழாவாய் “மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும்” அமைகிறது அல்லவா! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய் ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும் – மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல – ஆடியிலும் சங்கமிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும். வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய், சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது. ஆடிப்பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும், உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப்பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம் சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது. இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான்; சித்தர்களும், யோகிகளும், தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.
உலகத்தின் நன்மைக்காகவே அவதாரங்கள் நிகழ்கின்றன. இராமராய், கிருஷ்ணராய், பகவான் விஷ்ணு அவதாரம் செய்தார் என்பதைப் புராணங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன. அந்த அவதாரங்களுக்குத் துணையாக லக்ஷ்சுமி தேவி – சீதையாய், ருக்மணியாய் பூமியில் அவதாரம் செய்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நாச்சியார் அவதாரம் இம்மண்ணில் நிகழ்ந்த வேளை அவளுக்குதுணையாக, இணையாக பகவான் விஷ்ணு எந்தவித அவதாரமும் மேற் கொள்ளவே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமாகும். ஆனால் சிலையாய் இருந்த கண்ணனையே மனத்தில் உறுதியாய் இருத்தி அவனையே மணப்பேன் என்னும் வைராக்கியத்தை உலகுக்கே காட்டிய பெண்ணாய் வைணவத்தின் மாமலர் ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். அப்படியான அந்த ஆண்டாள் நாச்சியாரைக் கொண்டாடும் அற்புத நாளாகவும் ஆடிப்பூரம் அமைகிறது என்பதும் சிறப்பல்லவா! பெரியாழ்வார் என்பவர் வைணவத்தில் மதிப்பக்கப்படுகின்ற மிகச்சிறந்த அடியார் ஆவார். அவரின் வளர்ப்பு மகளாய் ஆண்டாள் நாச்சியார் ஆவது ஆண்டவனின் திருவருளே.
சைவமும், வைணமும், பெயரளவில் இரண்டாக இருந்தாலும் – இறைவனை உறவாய் ஆக்கிக் கொள்ளுவதில் ஒன்றுபட்டே நிற்கின்றன. தாயாய், தந்தையாய், சகதோழனாய், காதலனாய், காதலியாய், என்றெல்லாம் எண்ணி கசிந்து உருகிப் பின்னிப் பிணைந்து நிற்பதை யாவரும் மனங்கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் உலகினைக் காத்து நிற்கும் பெருஞ்சக்கியான அம்பாளை பல நிலைகளில் கண்டும், அந்தச் சக்திக்கு தங்களின் விருப்பங்கள் எது எது இருக்கிறதோ அத்தனையையும் நிறைவேற்றிப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறார்கள். அப்படிப் பேரானந்தம் அடையும் பாங்கினை ஆடிப் பூரம்காட்டி நிற்கிறது என்பதே முக்கிய நிலையாகும். இங்கே செய்யப்படும் செயல்களுக்கு முக்கிய காரணம் – பக்தியின் பரவசம் என்றுதான் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே கணவனாக்குவேன் என்று ஒரே பிடிவாதமாய் இருக்கிறார். கடவுளை மானிட உருவில் இருக்கும் ஒரு பெண் கணவனாய் கொள்ளுதல் பொருந்துமா என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றதாகும். இங்கு பக்தியின் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. மணிவாசகப் பெருமான் எந்தளவுக்கு சைவத்தில் முக்கியத்துவத்துவப்படுத்தப் படுகிறாரோ அவ்வாறே ஆண்டாளும் அமைகிறார். ஆண்டாள் தன்னுடைய பதினைந்தாம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததாய் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும், தந்திருக்கிறார். ஆண்டாளின் இவ்விரு படைப்புக்களுமே, தத்துவத்தையும், பக்தியையும், தேனாய் இனிக்கச் செழுந்தமிழில் பொக்கிஷமாய் அமைந்திருகிறது. இப்படிப் பெருமைக்குரிய ஆண்டாள் நாச்சியாரை அகத்தினில் அமர்த்திட ஆடிப்பூரம் அமைகிறது என்பது மனங்கொள்ளத்தக்கது. வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் மிகவும் பக்திபூர்வமாய் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சைவ ஆலயங்களில் அம்பாளை முன்னிறுத்தி ஆடிப்பூரம் பெருவிழாவாய் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு பத்து நாட்கள் திருவிழாவாய் ஆடிப்பூரம் அமைவதையும் காணலாம். உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான சக்தியே அம்பாளாய் இருப்பதாய் எண்ணும் அடியார்கள் தங்கள் விருப்பத்துக்கு அமைய – அம்பாளுக்குப் பலவித அலங்காரங்களைச் செய்து தங்கள் ஆராத பக்தியைக் காட்டி நிற்பதைக் காணக்கூடியதாக ஆடிப்பூரம் காணப்படும். அம்பாளுக்கு வளையல்களால் அலங்காரம் செய்வது, அம்பாள் பூப்படைந்து விட்டாள் என்று பலவித சடங்குகளை ஆற்றுவது, என்று ஆடிப்பூரத்தை ஆனந்த விழாவாக ஆக்கியேவிடுவார்கள்.
அம்பாளையும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறவாகவே எண்ணி – தங்கள் குடும்பப் பெண்கள் எப்படி யெல்லாம் அலங்கரிப்பார்களோ அப்படியே அலங்கரித்து பேருவகையும், பேரானந்தமும் பெறுவதை ஆடிப்பூரத்தில் கண்டிடலாம். மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு என்றெல்லாம் நடத்தி, வளைகாப்பும் நடத்துவார்கள்.
அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும் வளையல்கள் பலவகையாய் அமையும். அந்த வளையல்கள் நிறைவில் அனைவருக்கும் அருட் பிரசாதமாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருமணம் ஆகாதவர்க்குத் திருமணம் விரைவாய் திருமணம் ஆவதற்கும், மனக்கசப்பினால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், ஆடிப்பூரத்தின் வழிபாட்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்னும் நம்பிக்கை யாவரிடமும் நிறைந்தே இருக்கிறது. தோஷங்கள் கொண்ட தம்பதியர்களுக்குத் தோஷங்கள் நீங்கிவிடும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.
சைவமும். வைணவமும் சங்கமிக்கும் சயயப் பெருவிழா ஆலயங்கள் தோறும் நடக்கும் ஆடிப்பூரம் அமைந்த ஆடி மாதத்தை எப்படி ஒதுக்கிட முடியும்? ஆடிப்பூரம் அம்மனுக்கு உரிய பக்குவமான நாளாகும். பக்தர்கள் மனக்குறைகளைக் களையும் பாங்கான நாளாகும். அமங்கலமே ஆடியென எண்ணும் எண்ணத்தை அகத்தைவிட்டே அகற்றிடுவோம். ஆடியும் ஆடியில் வருகின்ற அத்தனை நாட்களுமே அம்மனுக்குரிய மங்கல நாட்களேயாகும். ஆடிப்பூரம் வாழ்வில் மனமகிழ்ச்சியையும், மனவமைதியையும், மன எண்ணங்களையும் நிறைவேற்றித் தரும் உன்னத நாளாகும். அது மட்டுமல்ல சைவமும் வைணவமும் சக்தியை முன்னிறுத்திச் சங்கமித்து ஒரே நிலையில் பயணப்படும் பக்தி நிறை நாளுமாகும் என்பதை மனமிருத்துதல் வேண்டும்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெலாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்புமங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைய தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே
இன்றே திருவாடிப்பூரம் எமக்காக
அன்றே ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியயே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியவே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியவே
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமம்பதும் வம்பு .

சி. ஜெயபாரதன், கனடா
கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
மேரியின் மேப்பிள் சிரப்பு
காப்பு மகளிர் அணைப்பு
***************************
முதியோர்க்குக் காப்பகத்தில் தாம்பத்திய நெருக்கத்தை அனுமதி.
மோசஸின் 11ஆம் நெறிக் கட்டளை முதியோர்க்கு
********************
ஆஷாவின் போட்டோ படங்களை உடனே அழித்துவிட்டேன். முகமூடி இல்லாது முதியோர் வசிப்பு இல்லத்தில் காப்பு மகளிர் உலவுவது தெரிந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுவார். எனக்குக் குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு, முடக்கு வாதப் பாத வலி சிகிச்சை செய்யும் எல்லா வித மகளிர்க்கும் காஜூ, லட்டு இனிப்புத் தின்பண்டம் அளித்தேன். இராப் பொழுது, ஒரு கதவைத் தட்டி ஆண்குரல் கேட்ட பொற்கைப் பாண்டியன் பக்கத்து வீட்டுக் கதவுகளை எல்லாம் தட்டிய கதை போன்றதுதான். ஆஷாவுக்கு மட்டும் இனிப்பு தினம் கொடுப்பது, அவளை நேசித்துக்கொண்டது, எப்படியோ முதியோர் காப்பக மேலாளர் மேடம் ஹாமில்டனுக்குத் தெரிந்துவிட்டது.
அடுத்து நாள் ஓடி வந்த மேடம், ஒழுக்க நெறிச் சட்ட விதிகளை யாவரது முன்னிலையில் ஒப்பித்தாள். அனைவரும் விழித்தார். குசுகுசுப்பு, முணுமுணுப்புகள் செவிக்கு அருகில் எழுந்தன.
“இனிப்பு தருவது தவறு, பரிசு தருவது கூடாது, மகளிரை அணைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஆண்-பெண் கைகுலுக்கல் மட்டுமே அனுமதிக்கப்படும்.
முதியோர் காப்பகத்தில் அணைப்பு கூடாது, இனிப்பு கூடாது, காதலிப்பு கூடாது.
கண்காணிப்பு மகளிர் யாருக்கும் முதியோர் காஜூ, லட்டு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பக மகளிர் வாங்கக் கூடாது. மறுக்க வேண்டும். புதிய ஆணைகள் இவை.
வந்த சில நாட்களில், முதியோர் காப்பக மகளிர் சுறுசுறுப்பாக, யந்திரம் போல் பணிபுரிவது கண்டு அவரைப் “பாதுகாக்கும் அணங்குகள்” என்று பாராட்டினேன்.
நோக்குமிடம் எல்லாம் நொந்த மகளிர் மௌன முகத்தில் ஒளிவீசியது. பலரது முகத்தில் புன்னகை மின்னியது. இப்போது இனிப்புத் தின்பண்டம் கொடுத்தால், யாரும், வாங்குவது கிடையாது.
ஆனால் ஒரே ஒரு நர்ஸ் மட்டும் விதியை மீறினாள். என் அறைக்கு வரும் போது, பணி முடிந்த பின், இனிப்புத் தின்பண்டம் எடுத்துக் கொள் என்று வேண்டினால், சிரித்துக்கொண்டு, ஒரு காஜூவோ, லட்டோ எடுத்துக்கொள்வாள்.
அவள் யார் ? ஆஷாதான் !

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.
பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்
மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.
மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழன், மூன்றாம் இடம் பெற்றார். அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தூய தமிழ்ப் பேச்சுப் போட்டியில் இவர் முதலிடம் பெற்று, தங்கக் காசு வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழுணர்வு மிக்க தமிழனின் மிடுக்கான உரை இதோ.
சேலம் கல்லூரி மாணவர் கதிரவன் ஆற்றிய உரை இங்கே.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியின் மாணவி காயத்ரி ஆற்றிய உரை இங்கே.
திருவாரூர்க் கல்லூரி மாணவி நறுமுகை ஆற்றிய உரை இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

சின்ன சின்னக் கால்களால், சிங்காரக் கால்களால், வான்வண்ணக் கண்ணன் இங்கு வருகின்றான். சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் குழுவினர் பாடிய அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

https://www.bbc.com/news/world-asia-india-66185565
சி. ஜெயபாரதன், கனடா
Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully
விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை
2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3 விண்சுற்றி அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.
2023 ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆணையகம் சந்திரயான் -3 விண்ணுளவியை நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவியுள்ளது. அத்திட்டத்தின் குறிப்பணி, விண்ணுளவி நிலவை நெருங்கிச் சுற்றி, தென்துருவத்தில் ஒரு தளவுளவியை மெதுவாக இறக்கிய பின்பு, அதிலிருந்து ஒரு தளவூர்தி வெளிவரும். அந்த விண்வெளி நிகழ்ச்சி 2023 ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி நிகழும். வெற்றிகரமாக அது நிகழ்ந்தால் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளோடு நான்காவது இடத்தைப் பெறும்.
இதே குறிப்பணியில் ஏவப்பட்ட சந்திரயான் -2 முழு வெற்றி அடையாது, தளவுளவி நிலவின் தரையில் மோதி முறிந்து தோல்வியுற்றது. சந்திரயான் -3 விண்ணுளவியின் எடை 3900 கி கிராம். விக்ரம் என்னும் பெயருடைய தளவுளவியின் எடை 1500 கி.கிராம். பிரஞ்யான் என்னும் பெயருடைய தளவூர்தி சந்திரயான் -3 திட்டச் செலவு 75 மில்லியன் டாலர் [சுமார் ரூபாய். 6 பில்லியன்] [2023 நாணய மதிப்பு].
இதுவரை இறங்கித் தேடாத நிலவின் தென்துருவத்தில், விக்ரம் இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் புரிந்து பூமிக்குத் தவவல் அனுப்பும். பூமியின் 15 நாட்கள், நிலவின் ஒருநாள் ஆகும். அதாவது சூரிய வெளிச்சம் 15 நாள் நிலவில் தெரியும். 15 நாட்கள் இருள் மயம். சூரிய சக்தியில் இயங்கும் தளவுளவியும், தளவூர்தியும் 15 நாட்கள் இயங்கும். 15 நாட்கள் முடங்கும்.. சந்திரயான் -3 குறிப்பணி வெற்றி அடைந்தால், அடுத்து விமானிகள் ஓட்டும் விண்வெளிச் சுற்றுப் பயணத்தை முயலும்.
1. Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully – BBC News
2. India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(460)
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.
-திருக்குறள் -800 (நட்பாராய்தல்)
புதுக் கவிதையில்…
உலகத்தோடு ஒத்தொழுகும்
குற்றமற்றவரின் நட்பைக்
கொள்க உறவாய்,
உலகோடு ஒத்துவராத பண்பிலாரை
உணராமல்
நட்பு கொண்டிருப்பினும்
நட்பதை
அவர் விரும்பும் ஒன்றைக்
கொடுத்தாவது
கைவிட வேண்டும்…!
குறும்பாவில்…
குற்றமற்றவரோடு கொள்க நட்பு,
ஒத்த பண்பிலாரது நட்பை அவர்விரும்பும்
ஒன்றைக் கொடுத்தாவது விட்டிடுக…!
மரபுக் கவிதையில்…
உலகுடன் ஒத்திடும் குற்றமற்றோர்
உறவினைக் கொண்டிடு நட்பெனவே,
நலமுடன் ஒத்திடாப் பண்பிலாரை
நட்பெனத் தவறியே ஏற்றிடினும்
விலகியே சென்றிடும் வழியதுவாய்
விரும்பியே அன்னவர் கேட்பதையே
இலகுவாய்க் கொடுத்தவர் நட்பினையே
இலையென உதறியே செல்வீரே…!
லிமரைக்கூ…
நட்போடிரு குற்றமற்றவர் கிட்டே,
கைவிடு பண்பிலார் நட்பை பொருள்கொடுத்தேனும்
விலகிடு அவரை விட்டே…!
கிராமிய பாணியில்…
நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லவரோட நட்புகொள்ளு,
நல்லாப் பாத்தறிஞ்சி
எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு..
ஒலத்தோட ஒத்துப்போற
குத்தங்கொற இல்லாதவர்கிட்ட
நட்புகொள்ளு,
ஒலகத்தோட ஒத்துவராத
நல்ல கொணமில்லாவரோட
கொண்ட நட்ப
அவரு கேக்கிற பொருளக்
குடுத்தாவுது உட்டு வெலகிடு..
அதால
நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லவரோட நட்புகொள்ளு,
நல்லாப் பாத்தறிஞ்சி
எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு…!

அண்ணாகண்ணன் டைம்ஸ் என்ற புதிய யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். இனி, என் புதிய பதிவுகள், இதில் இடம்பெறும். அன்பர்கள் இதில் இணைந்து ஆதரிக்க வேண்டுகிறேன்.
https://youtube.com/@Annakannantimes
மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி செல்வி இரெ.சக்தி, முதலிடம் பெற்றார். இவர், தனித்தமிழ்ச் செல்வர் விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். வெற்றியாளர் சக்தியின் உரையைக் கேளுங்கள்.
பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்
மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த, செல்வி ரேஷ்மா கிருஷ்ணன் இரண்டாம் இடம் பெற்றார். இவரது உரையைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
ஆடி என்பது அமங்கலம் இல்லை
ஆன்மீகக் கருக்கள் நிறைந்த நல்மாதம்
பீடை என்பது பொருந்தாக் கருத்தே
பீடுடை என்பதே சிறப்புடைச் சிந்தனை
அமங்கலம் என்பது ஆடியாய் ஆகுமா
அம்மனின் மாதம் ஆடியே ஆகும்
படையலும் பாட்டும் பரவசம் அனைத்தும்
பக்தியாய் மலரும் பாங்குடை மாதம்
ஆடியில் செவ்வாய் ஆடியின் வெள்ளி
ஆடியின் பூரம் ஆடியின் கார்த்திகை
ஆடித்தபசு ஆடியமாவாசை ஆடிப் பெளர்ணமி
ஆடியில் ஆண்டவன் நினைப்பதை உணர்த்தும்
ஆடியில் ஆறுகள் நீரைப் பெருக்கும்
ஆடிப் பெருக்கென அனைவரும் குவிவார்
அம்மனை எண்ணி உருகியே நின்று
ஆடிப் பாடிப் படைத்துமே மகிழ்வார்
அமாவாசை மாதங்கள் அனைத்திலும் உண்டு
ஆடியில் மட்டும் அதன்நிலை சிறப்பே
பிதிர்க்கடன் தீர்த்திடப் பொருத்தமாய் அமையும்
ஆடியின் அமாவாசை என்பதே சிறப்பு
இறையினை உறவாய் ஆக்கிடும் பாங்கை
உலகிடை சைவமே அணைத்துமே நின்றது
அம்மனை உறவாய் கண்டநம் அடியவர்
அம்மனும் ருதுவாய் ஆகினார் என்றனர்
ஆடியின் பூரம் ஆனந்தத் திருவிழா
ஆடியே உமையின் அவதாரம் ஆகும்
அம்மனே ஆண்டாளாய் வந்ததும் ஆடியே
அரங்கனை ஆண்டாள் அணைந்ததும் ஆடியே
அம்மனை எண்ணிடும் அகநிறை மாதம்
ஆடிக் கூழினைக் காய்ச்சிடும் மாதம்
அம்மனின் கோவிலில் கூழைப் படைத்து
அம்மனை ஏற்றியே போற்றிடும் மாதம்
கூழொடு கொழுக்கட்டை சேர்த்துமே செய்து
யாவரும் படைத்துமே பாடியே மகிழ்வார்
வீடுகள் தோறும் கூழது வாசம்
ஆடியை ஆனந்தம் ஆக்கியே நிற்கும்
ஆடிப் பிறப்பு அனைவர்க்கும் மகிழ்வே
கூடிப் பனங்கட்டி கூழுமே குடிக்கலாம்
ஆடியை ஒதுக்குதல் அறிவுடை ஆகா
ஆடியும் அருமையாய் அமைந்த நல்மாதமே

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் கெங்கவல்லி ஆ.மணவழகன் ஆற்றிய உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலைஞரின் செம்மொழிச் செயற்பாடுகள் என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா ஆற்றிய உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(459)
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.
– திருக்குறள் -757 (பொருள் செயல்வகை)
புதுக் கவிதையில்…
அகிலத்தில்
அன்பு ஈன்றெடுத்த
அருள் என்னும் குழந்தை,
பொருளென்று பலராலும்
போற்றப்படுகின்ற
செல்வத்தை உடைய
செவிலித் தாயால்
வளர்க்கப்படுகிறது…!
குறும்பாவில்…
அருள் என்று அழைக்கப்படும்
அன்பு பெற்றெடுத்த பிள்ளை, பொருளென்னும்
செல்வச் செவிலியால் வளர்க்கப்படும்…!
மரபுக் கவிதையில்…
அன்பெனும் தாயவள் பெற்றெடுத்த
அருளெனப் பேர்பெறும் பிள்ளையது,
மன்பதை தன்னிலே என்றென்றும்
மாபெரும் மகிமையைக் கொண்டதுவாம்
குன்றிடா வளமுடைப் பொருளென்றே
குவலய மனைத்துமே போற்றியேதான்
என்றுமே மதித்திடும் செல்வமுடை
எழில்மிகு செவிலியால் வளர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
அருள் என்னும் சேய்
அன்பாம் அன்னை பெற்றது, வளர்ப்பததனை
பொருளெனும் செவிலித் தாய்…!
கிராமிய பாணியில்…
பெருசு பெருசு
பொருளே பெருசு,
ஒலக வாழக்கயில
ஒசத்தியானது பொருளே..
அருளுங்கிற புள்ளய
அன்புங்கிற தாயவ பெத்தாலும்
அத
ஆரட்டி சீராட்டி வளக்கிறது
ஓலகத்தில ஒசத்தியான
பொருளுங்கிற
செவுலித் தாயார்தான்..
அதால
பெருசு பெருசு
பொருளே பெருசு,
ஒலக வாழக்கயில
ஒசத்தியானது பொருளே…!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில், கணினித் தமிழ் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.