திருமால் திருப்புகழ் (21)

 

கிரேசி மோகன்

 

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்

 

தனத்தந்த தான தனத்தந்த தான
தனத்தந்த தான -தனதான….

—————————————————————————————————————————-

“நரைத்தெங்கும் சோகை எழக்கம்பு தேவை images (2)
விறைத்தங்கம் பாயில் -விழுநேரம்
அரைக்கண்ணும் மூட அவச்சங்கு ஊத
நடுச்சந்தி ஓலை -தனிலேகி

அரிச்சந்த்ர கானில் அடைத்துன்னை போவார்
அதற்கென்று வாடாய் -பரிகாரம்
இதற்குண்டு, வானை அடைக்கின்ற சோணை
சிவக்கன்று ராமன் -ரமணேசர்

உரைக்கின்ற நானார் வழிச்சென்று மீள
இடைக்கன்று மேய -குழலூதும்,
மயிற்கொண்டை சூடி மழைக்கென்று கோவர்
தனக்குன்று தாரி -அருள்வாயே

அரிச்சிந்தை சேயின் அழைக்கின்ற போது
வரக்கம்பம் வாழும் -நரசீயா
மணப்பெண்மை ஜாம்ப வதிக்கென்று கோயில்
திருத்தங்கல் மேவும் -பெருமாளே”

——————————————————————————————————————————

படங்களுக்கு நன்றி:

http://wikimapia.org

Share

Comments

One response to “திருமால் திருப்புகழ் (21)”

  1. மீ.விசுவநாதன்

    தலவரலாற்றைச் சொல்லும் சந்தக் கவிதை. இந்த அற்புதத்தை, ஆன்மிக ஆழத்தை மிக எளிதாக எழுதிய நண்பர் கிரேசி மோகன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *