எதிர்பார்க்கும் நட்பு!
ரா. பார்த்தசாரதி
குறையில்லாத மனிதன் இவ்வுலகில் உண்டா?
குறையினைச் சுட்டிக் காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
குறையினைக் களைய நல்வார்த்தைகளை எடுத்துரைப்பதுண்டா?
இனிய சொல்கொண்டுதான் அதனைத் தீர்ப்பதுண்டா?
உலகமே என்னை ஒதுக்கி வைத்தாலும்
என்னைப் பாதுகாத்து நிழல் கொடுப்பாயா?
நாளுக்கு நாள் கணக்குப் பார்க்கும் மனிதர்கள் இடையே
தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா?
நான் வெல்லும்போது வாழ்த்துவதைவிட,
நான் வீழும்போது என்னைத் தாங்குவாயா?
எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா?