Advertisements
இலக்கியம்கவிதைகள்

சிவபிரதோஷம்

மீ.விசுவநாதன்

 

Asiva

வெள்ளிப் பனிஉருவில் வெள்ளீசா !

விரைந்து உருகிவர கங்கேசா !

அள்ளி வரமளிக்கும் அருளீசா !

அமரர் தினம்போற்றும் யோகீசா !

புள்ளி மான்பிடித்த நடராஜா !

பொதுவாம் சுடலைக்கு நீராஜா !

வள்ளி மாமனெனும் கர்வேசா !

வளரும் அறநெறியே சர்வேசா !

 

(அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, காய்,காய் )
(14.06.2015)

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here