சிவபிரதோஷம்
“சிவ ஜோதி”
மீ.விசுவநாதன்

கோடிகோடி ஆண்டுகள் ஓடி -காலம்
கொண்டாட்ட மாகவே செல்கிறது
ஆடிஆடி ஆனந்த மாக – சிவம்
அற்புதமாய் மோனமும் காக்கிறது
தானதவ வேள்விகள் யாவும் – ஒரு
தர்மத்தின் பேரிலே வாழ்கிறது
வானமழைப் பூவினை பூமி – தன்
வம்சங்கள் வேர்விடக் கொள்கிறது
உண்டவிடம் உத்தம மாகி – இங்கு
உயிர்த்தேனாய் ஜீவனை ஆக்கியது
அண்டமெலாம் ஆக்கிய ஈசன் – நம்
ஆத்மனாக உள்ளிருள் நீக்கியது
தீயுடனே நீரையும் கொண்டு – சம
நீதியினைக் காட்டுவான் ருத்ரன்
ஓயுதலே கொண்டிடா சக்தி – சிவ
ஜோதியிலே நிற்றலே முக்தி !
(இன்று 08.04.2017 சனிப்பிரதோஷம்)

Leave a Reply