எனக்குரியவள் நீ!

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

jaya

+++++++++++ 

பெண்ணேநீ என்னை
நேசிக்கிறாயா
?
நானுனக்குத் தேவை யாயின் என்மேல்
நம்பிக்கை வைத்திடு!
என்னவளாய் நீ இருந்திட
எனக்குத் தேவை நீ!

நலம் தானா,” என்று நீ
என்னைக் கேட்டால்
நலமென்று பதில் சொல்வேன்!
நலமாக நானில்லை என்று
நன்கு அறிவேன்.

நான் உன்னை இழந்திருப்பேன்!
நேரம் எடுத்து நமது தனிமையில்
நீ உரைத்தால்,
நேசம் உண்டாகும் நமக்குள்!
என் பாடல் உலகை
உதறி விட்டு  உன்னிடம்
ஓடி வருவேன்,
என் காதலி
என்னவள் ஆகி விட்டால் 

நேரம் நிறைய உள்ள தெனக்கு;
அதைத் தள்ள
உதவ வேண்டும்  நீ!
மீண்டும் என்னவள் ஆவாய் நீ!
இயலும் நமக்கு அதனை
முயன்று முடிக்க!

உன்மீ துள்ள என் காதல் மிகுந்தது;
பெண்ணே!
என்னை விட்டுச் செல்லாதே!
என்னைப் பிடித்தால்
என் மீது நம்பிக்கை வைத்திடு!
என்னவள் நீயென
ஏற்றுக் கொள்வேன் இனிமேல்!

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *