காதல் கிடைக்குமா காசுக்கு!
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
காதல் கிடைக்க வில்லை
காசுக்கு!
வைர மோதிரம்
வாங்கி மாட்டுவேன் உனக்கு
மகிழ்ச்சி தருமாயின்,
எதுவும் வாங்கி உனக்கு
அளிக்க முடியும் என்னால்!
பணத்தைப் பற்றிக்
கவலை இல்லை எனக்கு!
ஆயினும்
காசு கொடுத்துக்
காதல் கிடைக்க வில்லை
எனக்கு!
இருப்பதை எல்லாம் உனக்கு
விருப்பப் படிக் கொடுப்பேன்,
என்னை நேசிப்ப தாய்ச்
சொன்னால்!
பணத்தைப் பற்றிக்
கவலை இல்லை எனக்கு!
ஆயினும்
காதல் கிடைக்க வில்லை
காசுக்கு!
பையில் நிறையப் பணம்,
கையில் வைர மோதிரம்
காட்டி
காதல் வாங்கப் போனேன்!
எல்லாரும் சொல்வார்
என்னிடம்:
காதல் கிடைக்காது காசுக்கு!
காசு வாங்காது
காதல்!


Leave a Reply