ஓர் எளிய யோசனை, முற்றிலும் புதிய பயனைத் தந்துவிடும். நாம் பயனற்றது எனப் போட்டு வைத்திருக்கும் பலவற்றுக்கும் இப்படி இன்னொரு முகம் உண்டு. அப்படி நான் பார்த்த சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
A simple idea – 4
A simple idea – 5
நீங்களும் இத்தகைய எளிய தீர்வுகளைக் கண்டதுண்டா? உங்களிடமும் இத்தகைய யோசனைகள் உண்டா? அவற்றைக் காணொலியாகப் பதிந்து நமக்கு அனுப்புங்கள். வல்லமையில் வெளியிடுவோம்.
இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு.
வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!
வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!
சிந்தனையே மனிதனை உருவாக்கியது. சிக்கல்களை அவன் அணுகும் விதமே அவனை மேம்பட்டவனாக ஆக்கியது. தனது சிக்கல்களைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை அவனுக்கு உண்டு. இதோ இங்கே சிலர், தங்கள் புதிய யோசனைகளைச் செயல்படுத்தியுள்ளார்கள். நான் நேரில் கண்ட அந்த எளிய தீர்வுகளை இங்கே பாருங்கள்.
தீர்வு – 1 | A simple idea – 1
தீர்வு – 2 | A simple idea – 2
தீர்வு – 3 | A simple idea – 3
நீங்களும் இத்தகைய எளிய தீர்வுகளைக் கண்டதுண்டா? உங்களிடமும் இத்தகைய யோசனைகள் உண்டா? அவற்றைக் காணொலியாகப் பதிந்து நமக்கு அனுப்புங்கள். வல்லமையில் வெளியிடுவோம்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2500 ஓய்வூதியமும் ரூ.500 மருத்துவப் படியும் வழங்குகிறது. மேலும் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான சலுகையையும் வழங்குகிறது. இவை அவரது ஆயுள் நிறையும் வரை வழங்கப்பெறும். அவருக்குப் பிறகு அவரது மரபுரிமையருக்கும் இதே உதவிகள் தொடரும். இந்த நிதியுதவியைப் பெறுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.
இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
வேலிக்குள் அடைபட்டாலும்
விடாமல் முயற்சி செய்!
மூலைக்குள் முடங்கிடாமல்
முழுவீச்சில் பயிற்சி செய்!
மலைபெயர்க்க வேண்டாம்! நீ
மனம்விழித்தால் போதும்! நீ
தலையெடுத்து வந்தால்ஓர்
தலைமுறையே தலையெடுக்கும்!