Q&A: அனேகனும் அநேகனும் ஒன்றா?
அண்ணாகண்ணன்
என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். கனடாவிலிருந்து நண்பர் குமணன் எழுப்பிய கேள்விக்கு எனது பதில் இங்கே.
உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்பலாம்.
இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
வணக்கம்! ஏகன் அனேகன் என்னும் சொல்பயன்பாடு பற்றிய அடக்கமான விளக்கம்!
ஐயம் கேட்ட கனடா அன்பர் தமிழில் ஒரு ஐயம் எனப் பதிவிட்டிருக்கிறார். அச்சொற்கள இரண்டும் வடசொற்களே. என்னும் தெளிவு வந்து விடுமானால் விளக்கம் புரியக் கூடும். ‘ஏகம்’ என்னும் சொல் தமிழில் பெருவழக்கு.
ஒரு மாவின் கீழ் அரையர் என்பது காஞ்சிபுரத்துக் கடவுளுக்குப் பெயர் ஏகம் + ஆம்பரம் என்பது ஏகாம்பரம் ஆனது. ஆம்பரம் என்றால் மா. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தலவிருட்சம் மா.
‘ஏகன் அநேகன்’ என்பது சிவபுராணம்
“உமையும் உமையொரு பாகனும ஏக உருவில் வந்து எமையும் தமக்கு அன்பு செயவைத்தார்” என்பது அபிராமி அந்தாததி
‘கச்சி ஏகம்பனே! என்பது பட்டினத்தார் வாக்கு
‘ஏகதேச உருவகம்’ என்பது பொருளணிகளில் ஒன்று
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவும் பகையும் வரலாறு அறிந்ததே. தமிழ்ச்சொற்களின் தூய்மை காக்க வந்த தொல்காப்பியம் வடசொற்களின் பயன்பாடடுக்கு வரையறை செய்திருக்கிறது என்பதும் அதனையொட்டி வழிநூல் செய்த பவணந்தியாரும அதனை வழிமொழிந்திருப்பதும் சுடடத்தகுந்தது.
‘ஏகன்’ வடசொல் என்பதனால் தமிழின் பெருமை குறையாது.
ஏகன் என்பதற்கு எதிர்ச்சொல் அநேகன் என்பது. ஆனால் அதனை ‘அ’ என்பது கொண்டே எதிர்மறையாக்கவேண்டுமேயன்றி ‘அன்’ என்பது கொண்டன்று. காரணம் தமிழில் ‘அல்’ என்பது எதிர்மறை. வடமொழியில் அ என்பது எதிர்மறை. அசுத்தம். ‘அகாலம், அகதி,அகிம்சை அகோரம், அஞ்ஞானம், அஜாக்கிரதை, அஜீரணம் அசாத்தியம் போல்ன விரிப்பின் பெருகும்.
அனேகன் என்பதில் ‘அனே’ என்பதற்கும் விகுதியாகிய ‘அன்’ என்பதற்கும் சற்றும் தொடர்பில்லை. பின்னது அச்சொல்லை தற்பவமாகக் கொண்டாலும் விகுதி தமிழ் நெறிப்படி ஆண்பால் விகுதியாக நிற்கும். ‘னகரம்’ பால்காட்டும் இறுதி என்பதால் ‘அனே’ என்பதோடு ஒப்பு நோக்குதல் நெறியன்று.பெரும்பிழை!
தற்சமம் தற்பவத்தில் புணர்ச்சி
‘கமலம்’ என்னும் சொல் வேற்றுமை உருபு ஏற்கும போது ‘அத்து’ச் சாரியை பெறும் “கமலத்தை, கமலத்தால் கமலத்தில், கமலத்துக்கு கமலத்தினுடைய கமலத்தின்கண் ‘வெள்ளைக் கமலத்தில்’ என்பது பாரதி வாக்கு
“காரணம்’ என்னும் சொல் வேற்றுமை உருபு ஏற்கும் போது அதே நிலையில்தான் புணரும்
வடமொழி எழுததுக்கள் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி அமைத்க் கொள்வது தற்பவம்
பங்கஜம் என்பதை பங்கயம என்பது போல. வருஷம் என்பதை வருடம் என்பதுபோல.
இதிலும் தமிழிலக்கணப் புணர்ச்சியே பின்பற்றப்படும். பங்கஜத்தைப பாரத்தேன். மூன்று வருடத்தில் கட்டினேன் என வரும்
அனேகன் புணர்ச்சிபற்றிய விளக்கம்
அன் + ஏகன் எனப் பிரித்தால் தற்கால ஜிகினா அறிஞர்கள் UN + ஏகன் என்றும் பிரிப்பார்கள். ‘UN’ என்பது எதிர்மறைதானே என்றும் விளக்கம் சொல்லுவார்கள். அதனையும் சில பேரறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் ஒருவர் காப்பி என்பதை ‘‘காப்FEE” என்று எழுதியது நினைவூட்டப்படுகிறது.
தமிழில் உள்ள எதிர்மறை முன்னொட்டைப்பயன்படுத்தி இணைத்தால் அல்+ஏகன் என்றுதான் புணரவேண்டும். வேண்டவே ‘அல்’ என்பதில் உள்ள லகரம் னகரமாகத் திரியும் என்பது இலக்கணம். பல்முகம் பன்முகம் ஆனதுபோல், பல்நோக்கு பன்னோக்கு ஆனது போல, ஆகவே ‘அனேகன்’ என்று எழுதிவதில் பெரும்பிழை வந்துவிடாது. அது வடசொல் என்பதால்.
ஏகன், அநேகன் என்பன இரண்டும் வடசொற்களாதலின் அவற்றைத் தற்சமமாகக் கொள்வதினும் வடமொழிச் சிறப்பொலி இல்லாத காரணத்தால் தற்பவமாகக் கொள்வது ஏற்புடைத்து.
இந்த நிலையில் ‘அநேகன்’ என்பதே வடமொழி நெறி!.
கூடுதல் தகவல்கள்
1. சிநேகா’ ‘சிநேகன்’ என்பன இன்றைய சமுதாயம் அறிந்த பெயர்கள். சிநேகனுக்குப் பெண்பாலாகச் சிநேகிதியையும் கொள்வதுண்டு. சிநேகிதி என்னும் திரைப்படத்தின் பெயரும் அகிலன் எழுதிய சிநேகிதி நாவலும் குறிப்படத்தக்கவை. சிநேகிதி என்னும் இதழும் இதில் அடக்கம்
2. தமிழ்ப்பேரறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் ‘அனுப்புதல்’ என்று எழுதமாட்டார் ‘அனுப்புதல்’ என்பது வடசொல். வடமொழியில் னகரம் இல்லை.. வடசொல்லை வடமொழி கொணடே எழுதுவார். எப்படி? இப்படி!. ‘அநுப்புநர்’ என்று. இதுதான் நெறி!. விடுதல் என்பது தமிழ். விடேல் என்பது எதிர்மறை. விடேல் விடுகு என்பது துறைப்பெயர். தமிழ்விடுதூது, நெஞ்சுவிடுதூது காண்க
3. ‘ஏகன்’ என்பது தற்காலத்தில் அருகிய வழக்கு. எல்லாக் கவலைகளையும் சுமந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல்” “ஒன்றானவன் உருவில் இரணடானாவன்” (ஒன்றல்லன பல) என்று போகிற போக்கில் சொல்லிவிடடுப் போய்விடுவார். அந்த உள்ளம் எலலார்க்கும் வாய்க்குமா என்ன?
ஐயம் வளர்ப்பது அறிவே!
ஐயம் எழுப்பிய கனடா அன்பருக்கு நன்றி பல!
“விழிகாக்கும் காப்பு எவன்செய்யும் மக்கள்
மொழிகாக்கும் காப்பே தலை”
எந்த விளக்கத்திற்கும் தொடர்பு கொள்ளலாம்.
ச.சுப்பிரமணியன்