இலைப்பந்தல்

அண்ணாகண்ணன்
குளிர்த்தென்றல் தவழும்
குயில்சந்தம் கமழும்
இலைப்பந்தல் விரிக்கும்
ஏகாந்தம் சிரிக்கும்
ஒளிவண்ணம் குழைக்கும்
ஒய்யாரம் தழைக்கும்
பூவுலகு புரக்கும்
புதுக்காதல் பிறக்கும்
பழம்கொண்டு பழகும்
பசிதீர்த்து வருடும்
கிளைமீது கூடும்
கிளியூஞ்சல் ஆடும்
களிமதுரம் சுழற்றும்
ககனம்கண் சிமிட்டும்
ஒருகோடி உயிர்க்கும்
உயிர்கோடி உவக்கும்
கணம்தோறும் நடனம்
கனிந்தாழும் மௌனம்
விதைதோறும் காடு
விடையுண்டு தேடு
மலர்தோறும் வண்டு
திசைதோறும் தொண்டு
இன்னும் என்ன அச்சம்
இதோ புது வெளிச்சம்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)