அன்னை மரி மைந்தன் வரவை நோக்கி
ஆகாய நட்சத்திரங்களும் தவம் தான் கிடக்க
இயேசு எனும் நாமகரணத்துடனே தான் தோன்றி
ஈடற்ற மகிழ்ச்சியினை உலக மக்களுக்கே வழங்கி
உள்ளமெல்லாம் அன்பும் அமைதியும் நிலவ
ஊக்கத்துடன் அல்லேலூயா என்னும் ஒலி முழங்க
எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டுமென்று
ஏக மனதாய் அனைவர் மனதிலும் எண்ணத்தை விதைத்த
ஐயனே! பரிசுத்த தூயனே! எங்கள் ஆண்டவரே!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட உரைத்த குணவானே
ஓதி மகிழ்வோம் எந்நாளுமே உந்தன் அழகிய திருநாமமே!
அனைவரையும் காத்து இரட்சிப்பீராக ஆண்டவரே!
பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்!
Tag: சித்ரப்ரியங்கா ராஜா
-
“மகிழ்வான இயேசு பிறப்பு”
– சித்ரப்ரியங்கா ராஜா, -
தீபத் திருநாள்!
திருவண்ணாமலை மகிமை
அண்ணா மலையாய் திகழ்ந்திடும் தலம்
ஆதியும் அந்தமும் இல்லாதான் தலம்
இருள் நீக்கும் ஜோதி வடிவான தலம்
ஈடற்ற பெருமைகள் பல பெற்ற தலம்
உண்ணாமுலை உடனுறைந்திடும் தலம்
ஊழ்வினை அகற்றும் புண்ணிய தலம்
எங்கள் திருவண்ணாமலை தெய்வீக தலம்
ஏகமனதுடன் நினைத்தால் முக்தி தரும் தலம்
ஐயம் நீக்கி சிந்தை தெளிவிக்கும் தலம்
ஒப்பற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்த தலம்
ஓயாது மூலிகைக் காற்று தாலாட்டும் தலம்
ஔவைக்கு பிரியமான சண்முகநாதனும்
அருணகிரிநாதருக்கு அருளிய தலம்
அஷ்ட லிங்கங்களையும் கிரிவலம் வந்தால்
அல்லல்கள் யாவும் அகன்று ஓடிடும்
கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள்
காணும் இடமெங்கும் தீபங்கள் ஜொலிக்கும்
ரமணர் சேஷாத்திரி போன்றோரால் தான்
சிறப்புகள் பெற்றது நம்முடைய தலம்
அண்ணா மலையை அனுதினம் நினைப்போம்
அல்லல்கள் மறைந்து அவனியில் நிலைப்போம்சித்ரப்ரியங்கா ராஜா
திருவண்ணாமலை. -
அரும்புகள்
சித்ரப்ரியங்கா ராஜா
இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்து
குலம் தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகி
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ் சிறு அரும்புகளாய்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்து வந்து
ஆற்றலால் சிறந்து நின்று
மெச்சி ஊரார் தானும் புகழ
பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலைகள் அவர் முன்னே!– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.
14.11.16 -
அ கலாம் ஆகலாம்!
– சித்ரப்ரியங்கா ராஜா, திருவண்ணாமலை

அழகிய மழலையாய் அவதரித்தாய்
அக்னிச் சிறகு நாயகனே இன்று
ஆனந்தத்திற்கோ அளவில்லை
அ கலாம் நீ எங்களுடனே என்று
அன்னை உனையும் ஈன்றிருக்கலாம்
அள்ளி உச்சி தான் முகர்ந்திருக்கலாம்
அல்லல் மறந்துனை வளர்த்திருக்கலாம்
ஆ! என் மகனென வியந்திருக்கலாம்
அயராது நீயும் உழைத்திருக்கலாம்
அணுஆற்றலை நீ அசைத்திருக்கலாம்
அகிலமும் அதனால் அதிர்ந்திருக்கலாம்
அய்யனே நீ தானே எங்கள் அ கலாம்!
ஆகாயத்திற்கு நீயும் விண்கலன் அனுப்பி
அணு விஞ்ஞானியாய் உயர்ந்த கலாம்
அவனியில் பலரும் வியந்திடத் தானே
அறிவழகனாய் பவனி வந்த கலாம்
அ கலாமாய் நாங்களும் ஆகிடத் தானே
ஆர்வம் பலருக்கும் நீ அறிவாய் ஐயா
அன்று நீ எங்களுக்கு இயம்பிய சொல்லே
ஆழமாய்ப் பசுமரத்தாணி போல் மனதுள்
அண்ணலே உன் பிறந்த நாளில் தானே
ஆவலுடன் உறுதி பூணுவோமே நாங்கள்
அன்னை பாரதமுமே வல்லரசாய் மாற
ஆற்றுவோம் பணி உன் வழியில் எனவே
அய்யனே உன் பிறப்பு அழகிய சரித்திரமே! -
உலக இதய நாள்
சித்ரப்ரியங்கா ராஜாஅடே மனிதா நினைவில் நிறுத்து
ஆபத்தான புகையை குறைத்து
இதயத்தை நீ தான் காத்திடுவாயே
ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே
உள்ளம் என்பது கோயில் ஆகும்
ஊறு தான் வரின் இதயமே வாடும்
எல்லா நாளும் கவலையை குறைத்து
ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து
ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய்
ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய்
ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து
கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்



