இலக்கியம்கவிதைகள்

“மகிழ்வான இயேசு பிறப்பு”

– சித்ரப்ரியங்கா ராஜா,

அன்னை மரி மைந்தன் வரவை நோக்கி
ஆகாய நட்சத்திரங்களும் தவம் தான் கிடக்க
இயேசு எனும் நாமகரணத்துடனே தான் தோன்றி
ஈடற்ற மகிழ்ச்சியினை உலக மக்களுக்கே வழங்கி
உள்ளமெல்லாம் அன்பும் அமைதியும் நிலவ
ஊக்கத்துடன் அல்லேலூயா என்னும் ஒலி முழங்க
எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டுமென்று
ஏக மனதாய் அனைவர் மனதிலும் எண்ணத்தை விதைத்த
ஐயனே! பரிசுத்த தூயனே! எங்கள் ஆண்டவரே!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட உரைத்த குணவானே
ஓதி மகிழ்வோம் எந்நாளுமே உந்தன் அழகிய திருநாமமே!
அனைவரையும் காத்து இரட்சிப்பீராக ஆண்டவரே!
பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க