Tag: சுலோசனா

  • பிள்ளையார் பெருமை

    சுலோசனா

    images (5)
    பிள்ளையார் வழிபாடு என்பது பாரதம் முழுவதுமே பரவியுள்ள மிகப் பழமையான வழிபாடும் மிகப்பிரசித்தமானதும் ஆகும்.. படித்த பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் பிள்ளையார் வழிபாடு என்பது பொதுவானதாகவே இருக்கின்றது.

    செல்வச் சீமான்களுடைய அபிஷேக ஆராதனைகள் அஷ்டோத்திரம் சகஸ்ரநாம அர்ச்சனைகள் அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் விநாயகப் பெருமான் அதே மகிழ்வுடன் ஏழை விவசாயிகள் களத்து மேட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லை வைத்துவிட்டு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு பிள்ளையாரப்பனே சரியான சமயத்தில் மழை பெய்ய வேண்டும், பயிர் பச்சைகள் செழிப்பாக வளரவேண்டும் பிளளைக் குட்டிகள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எளிமையான போற்றுதலையும் வேண்டுகோளையும் ஏற்று வரமளிக்கின்றார்.எந்த விஷயத்திலும் தொழிலோ எதுவாக இருப்பினும் முதல் பூஜை விநாயகருக்கே. அதுமட்டுமின்றி ஆற்றங்கரையிலும் அரச மரத்தடியிலும் வீற்றிருக்கும் பிள்ளையார் எந்த வேளையிலும் வழிபாடு செய்வோர்க்கு வசதியாக தரிசனம் தந்து அவர்களின் வினைகள் யாவும் தீர்க்கின்றார். வழிப்போக்கர்களுக்கு வசதியாக திறந்தவெளிக் கோவில்கள், இப்படி அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும் விநாயகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி பார்ப்போம்.

    கஜமுகாசுரன் எனும் யானை முகம் கொண்ட அசுரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது. அதன் பலனாகத் தோன்றியவர் கஜமுகக் கடவுளான பிள்ளையார் ஆவார் என்பர். இரண்டொரு புராணக் கதைகளும் உருவாகி உள்ளன. அறிவிற்கு ஏற்றதாக சிந்தனைக்கு உகந்ததாக ஒரு சிந்தனை நம்முன் வைக்கப்படுகிறது. சிவத்தின் தவ நோக்கும் அம்பாளின் சக்தி நோக்கும் ஒரே நேர் கோட்டில் இணைய, இருவரின் அருட்கொடையாக ஓம்காரமாகிய பிரணவப் பொருள் உதயமாகி ஒளிவீசியது. அதுவே விநாயகரின் ஒலி வடிவம். ஓங்காரத்தின் உட்பொருளே விநாயக ஸ்வய சொரூபம். விநாயகப் பெருமானின் செவி நுனியில் துவங்கி சுழித்து வந்து துதிக்கை வரையில் வந்தால் ஓம் என்ற பிரணவ வடிவினைக் காணலாம்.பொதுவாக இந்து சமய புராணங்களின் உள்ளே உயரிய தத்துவங்கள் பொதிந்துள்ளன. அதனைக் காண இயலாமல் தடுக்கும் சிந்தனைச் சோம்பேறிகளின் முன்னால் எந்தத் தத்துவம்தான் முன் வந்து நிற்கும்.?

    அரியதானதும் மங்கா ஒளிபொருந்தியதான தங்கம்,வைரம் பவளம் மாணிக்கம் போன்றவைகள் சாலையில் கிடப்பதில்லை.சிரமப்பட்டு தேடித்தான் அடைய வேண்டி இருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழும். தீவிர ஞானம் அடைய வேண்டி விருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் அடைய வேண்டியிருக்கிறது. இந்து சமயத்தின் உயரிய தத்துவங்களும் அவ்வாறே. தத்துவ ஞானிகளும் அவ்வாறே எங்கோ மலைக்குகைக்குள் மறைந்து வாழ்வர். தீவிர ஞானம் வேண்டிவிருப்பம் உள்ளவர்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த முயற்சி இல்லாதவர்கள் தங்க சிம்மானத்தில் அமர்ந்து தங்கத்திலான முடிசூடிக்கொள்ளும் மடாதிபதிகள் முன் மண்டியிடவேண்டியதுதான். அதுபோல் இந்து சமயத்தில் மூர்த்தங்களின் வடிவில் பொருள் உள்ளது.

    எந்த மந்திரத்தின் முன்பும் ஓம் எனும் பிரணவம் உச்சரிக்கப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே எந்த செயலுக்கும் முன்னால் விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் என்றெல்லாம் வழக்கத்தில் உள்ளது. பிரணவ மந்திர ஸ்வரூபமே பிள்ளையார் வடிவம். திருமூலத்தேவரும் தன் திருமந்திரப்பாடலில்,

    ஐந்து கரத்தினை, ஆனை முகத்தினை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தினை
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்
    என்று விநாயகப் பெருமானை வணங்கிப் போற்றுகின்றார்.

    அதே போன்று ஞானப்பெண்மணியான ஔவைப் பிராட்டியாரும் சிறுபிராயம் முதலே விநாயகப் பெருமானைத் தன்னுடைய வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டிருந்தார். கன்னிப் பருவத்திலேயே பிள்ளையாரை வேண்டி அன்னை உருவம் பெற்றவர்.தேசமெங்கும் திரிந்து மக்களுக்காக அறம் புகட்டும் நீதிநூல்களைப் பாடியவர். அதே ஔவைத்தாய் உருவ வழிப்பாடுகளைக் கடந்து மேல் நிலைகளை எல்லாம் தம்முடைய விநாயகர் அகவல் என்ற பாடலில் வித்தக விநாயக விரைகழல் சரணே எனப் பாடியுள்ளார்.

    அதுமட்டுமின்றி நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் வெள்ளையானையின் மீது திருக்கயிலாயம் எழுந்தருள அதை அறிந்த அவர் தோழரான சேரமான் பெருமாளும் தம்முடைய குதிரையின் செவியில் சிவ மந்திரத்தை ஓதி குதிரையானது வெள்ளையானைக்குச் சமமாக வானில் பறந்தது. இந்த தெய்வீக சம்பவங்களை அறிந்த ஒளவைத் தாயார் தாமும் தாமும் திருக்கயிலாயம் செல்ல விரும்பினார். தம் பக்தையின் ஆவலை அறிந்த விநாயகப் பெருமான் அவர்கள் இருவருக்கும் முன்பே திருக்கயிலாயத்தில் சேர்த்து அருளினார். அருணை முனிவரான அருணகிரிநாதர் தம்முடைய பக்திப் பாமாலையில், திருப்புகழ் பாடல்களில் விநாயகப் பெருமானின் பெருமையைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.பிள்ளையார் வணக்கமான,

    ‘கைதலநிறைக்கனி’ எனும் பாடல், ‘கற்றிடுன் அடியவர் புத்தியில் உறைபவர்’ என்று இருநோய் மலத்தை சிவ ஒளியில் மிரட்டி என்னும் திருப்புகழில் தம் அடியார்களின் பிறவிப் பிணியை எவ்வாறு அறுக்கின்றார் என்றும் விநாயகப் பெருமானின் பருத்த வயிற்றை ஞானத்தொப்பை என்று கூறுகின்றார். ஓங்காரவடிவமானது பிள்ளையார் வடிவம் என்றால் அவரது பருத்த வயிறு ஞானத்தால் நிரம்பியதாகத்தானே இருக்க முடியும். இதோ அந்த அடிகள்:

    கருநோய் அருத்தெனது மிடிதூள் படுத்திவிடு
    கரிமாமுகக் கடவுள் அடியார்கள்
    கருதா வகைக்கு வரம் அருள் ஞானத் தொப்பை மகிழ்
    கருணா கடப்ப மலர் அணிவோனே

    சிவபெருமானின் ஞானக்கண்ணான நெற்றிக்கண்ணில் உதித்த குமரன் ஞானமயம் என்பார்கள். அதே போன்ற சக்தியின் நோக்கில் இருந்து உதித்த விநாயகப் பெருமானும் ஞானமூர்த்தியே. இந்த ஞானச் சகோதரர்கள் இருவரும், சிவசக்தி வேறல்ல, அவர்கள் படைப்பான உலகம் வேறல்ல எனும் அறிவை நமக்குப் புகட்டவே ஒருவர் சிவசக்தியை வலம் வந்தும் ஒருவர் இவ்வுலகை வலம் வந்தும் நிரூபணம் செய்கின்றனர்.

    விநாயகப் பெருமான் குறித்து இருக்கும் விரதங்கள் ஆவணி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் நான்காம் நாளான சதுர்த்தி அன்று விநாயகச் சதுர்த்தி எனும் விரதம். இன்னொன்று பௌர்ணமிக்குப் பிறகு வரும் நாளான சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து சந்திரோதயத்திற்குப் பிறகு சந்திரனை சரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் விநாயகர் தனியாகவும் வடநாட்டில் சித்தி புத்தி என இரு தேவிகளும் வணங்கப்படுகின்றனர்.விநாயகச் சதுர்த்தி அன்று ஓங்கார ரூபமான விநாயகரைப் பூஜித்து ஞானம் அடைவோம். நம்முடைய அறிவாக உறைபவர் விநாயகப் பெருமான் எனும் பொருளில்,

    ’முத்தமிழை வினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய முதல்வோனே’

    என்று வியாச முனிவர் மஹாபாரதம் சொல்லச் சொல்ல எழுதுகோலாகத் தம்முடைய ஒரு பக்கத்து தந்தத்தையே உபயோகித்து அவர் சொன்ன வேகத்துக்கே எழுதினார் என்றும், வள்ளி நாச்சியாரை குமரனின் வேண்டுக்கோளுக்கிணங்க அக்கணமே மணம் முடிக்க உதவி செய்கின்றார், என்பதை

    அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
    அப்புனம் அதனிடை இபமாகி
    அக்குறமகளுடன் அச் சிறு முருகனை
    அக்கனம் மனம் அருள் பெருமானே

    என்று முருகனுடன் வள்ளிக்கு மணமுடித்து வைத்த வைபவத்தையும் பாடுகின்றார்.

    Share
  • சுவாமி விவேகானந்தர்

    சுலோசனா

    5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை பண்பாட்டு பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.

    மகான்கள் பூமிக்கு வருவதன் நோக்கம்

    1300 (42)

    தாய்மையின் பங்கு

    விவேகானந்தரின் இளமைப் பருவம் இந்திய பண்பாட்டின் உயர்வு . விவேகமும் வைராக்கியமும், ஒழுக்கம், தன்னை வளர்த்தல், சகோதரத்துவம்,சேவை மனப்பான்மை, சராசரி மனிதர்களாகப் பிறக்கும் எத்தனையோ உயிர்களை கடைத்தேற்றுவதின் பொருட்டு சாதாரண மனிதன் சான்றோன் எனும் நிலையை அடையும் பொருட்டே மகான்கள் இறை அருளால் மண்ணில் வந்து பிறக்கின்றனர். பிறவாநிலையை எய்திவிட்ட அவர்கள் நம் பொருட்டே இங்கு வருகின்றனர்.

    சத்குரு தியாகராஜசுவாமிகள்,இவர்களை வணங்கி,எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு” என்று பாடுகின்றார். எத்தனயோ மகான்கள் –அத்தனை பேருக்கும் வந்தனம் என்று நாமும் வணங்க கடமைபட்டிருக்கின்றோம். சுவாமி விவேகானந்தர் பல விதங்களில் பூர்ணத்துவம் அடைந்த ஒரு மாபெரும் மகான். அறிவார்ந்த பக்தியில் குருவின் சேவையில்,நாட்டுப்பற்றில் மனித குலத்திற்கு செய்யும் சேவையில் என பலவித கோணங்களிலும் பரிமளிக்கின்றார். அவருடைய குருவான பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சிந்தனைகளையும் இந்து மதத்தின் உள்ளார்ந்த தத்துவங்களையும் ஸ்ரீராமகிருஷ்னரின் சர்வ சமயசமரச கருத்தை உலகெங்கும் முழங்கியவர். அவரின் தாய் திருமதி புவனேஸ்வரி ஓர் உயர்ந்த பெண்மணி. இந்திய
    பண்பாட்டின் எடுத்துக்காட்டான குணம் வேண்டி மகனுக்கு தெய்வ சிந்தனையை அன்னத்தோடு அன்பாக ஊட்டி வளர்த்தார்.

    “எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்

    மெய்பொருள் காண்பறிது”

    எனும் வள்ளுவரின் வாக்கின்படி ஆராயும் மனப்பான்மை அவரோடு சேர்ந்து வளர்ந்தது. வக்கீலுக்கு படித்துக் கொண்டிருந்தவர் பகவான் இராமகிருஷ்ணரின் சிஷ்யர் ஆனதும் பின்னாட்களில் அமெரிக்காவில் இந்து சமயத்தின் சார்பாகப் பேசி உலகப் புகழ் அடைந்ததும் உலகமறிந்த வரலாறு அவர் குழந்தைகளையும் இளைஞர்களையுமே நாட்டின் செல்வங்களாக கருதினார். இன்று ஒழுக்கமுடனும் வீரத்துடனும் திடமான உடம்புடனும் வளர்க்கப்படும் சிறுவர் சிறுமியரே நாளை இந்தியாவின் நல்ல குடிமக்கள் ஆவர் எனக் கருதினார்.

    துறவியாயினும் சுவாமியால் தாய் நாட்டுப் பற்றை துறக்க முடியவில்லை.

    இளைஞர்கள் பொது அறிவால் தங்களைத் தாங்களே நல்ல முறையில் பண்படுத்திக் கொள்ள முடியுமெனக் கருதினார்.விவேகமும் வைராக்கியமும் மனிதனை அவன் லட்சியத்திற்கு அழைத்துச் செல்லும் என்றார்.நல்ல முடிவுகளை எடுப்பது விவேகம்.எடுத்த முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள தேவைப்படுவது வைராக்கியம்.எடுத்த முடிவை படிப்பில் தொழிலில் முன்னேற வைராக்கியம் தேவை. படிக்க உழைக்க எவ்வளவு நேரம் தேவை,அந்த நேரத்தை எப்படி தேடுவது? பிடித்த சில விஷயங்களை அனுபவிப்பதில் அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.விளையாடுவது அளவோடு.மாலை முழுதும் விளையாட்டு என்கின்றார் மகாகவி பாரதியார்.காலை எழுந்தவுடன் படிப்பு என்கின்றார்.நாளின் தொடக்கத்திலேயே கல்வியை பயிலவேண்டும் என்கின்றார்.டி வி பார்ப்பதில் விடியோ கேம் விளையாடுவதில்லை என்பதெல்லாம் வைராக்கியத்தின் அடையாளம்.தொழில் கல்வியோ வேறுவிதமான கல்வியோபயின்று ஒரு நல்ல திறமைசாலியாக எடுத்துக் கொண்ட துறையில் வளருவதே வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒருவர் செய்ய வேண்டிய அவசிய கடமை.ஒழுக்கமான சிறுவனே சிறந்த இளைஞனாக வளர முடியும்.அவனே நல்ல மகனாக நல்ல சகோதரனாக, நல்ல கணவனாக,சிறந்த தந்தையாக உருவாக முடியும்.சகோதரமனப்பான்மை மனித நேயம் இவைகள் சுவாமிஜியின் மனதில் நிறைந்த பன்பான உணர்வுகள்.

    ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கருத்தே பகவான் இராம கிருஷ்ணரின் தலையாய கருத்தாகும்.அல்லா எனவும் ஏசு எனவும் ஈசனே எனவும் அழைப்பதெல்லாம் ஒரு இறைவனையே என்கின்றார் பகவான். பாணி என்றும் வாட்டர் என்றும் தண்ணீர் என்றும் ஜலம் என்றும் அழைக்கபடுவதெல்லாம் , நீரான ஒரு பொருளையே குறிக்கும் என்கின்றார்.

    அடுத்து சேவை மனப்பான்மை;-

    இயன்றவருக்குத் தன்னால் இயன்ற உதவியை செய்வதே சேவை எனப்படும்.சுய நல மிக்க இந்த உலகியல் வாழ்வில் பிறருக்காக செய்வதுபதிலுக்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வது இதே மனிதாபிமானத்தின்,மனித நேயத்தின் அடிப்படையில் செய்யப்படுவது ,இதுவே சேவை என்பதன் பொருள்;

    திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில்

    யாவர்க்குமாம்,இறைவர்க்கோர் பச்சிலை

    யாவர்க்குமாம் பசுவிற்கு ஓர் வாயுறை

    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி

    யாவர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே

    என்கிறார்.குறைந்தபட்ச உதவிகள் இவை.எதுவும் இயலாவிட்டாலும்,ஆதரவான ஆறுதல் வார்த்தைகள். உண்ணும் போது ஒரு கைப்பிடி சோறு,இவை யாவராலும் முடிந்ததுதானே.உலகில் மனிதரிடையே சகோதரத்துவம் வந்துவிட்டால்,தீவிர வாதம் எங்கிருந்து வரும்.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனர் சத்திய வாக்கே. அப்துல் கலாம் ஐயா அவர்கள் உலக அரங்கில் உரைத்தார்.மற்ற நாட்டினரும் போற்றும் பண்பாடு, பாரத பண்பாடு,அதை காப்பாற்றவேண்டியது இளைய தலைமுறையினரிடமே இருக்கின்றது.

    ஜனனீம் சாரதாதேவிம்,

    இராம கிருஷ்ணம் ஜகத்குரும்

    பாத பத்மே த்யோச்ருத்வா

    பிரணமாமிமுஹீர்முணிலஜிஹீ

    நம ஸ்ரீ யதிராஜாய விவேகானந்த சூரயே

    ஸத் சித்சுகஸ்வரூ பாயே

    ஸ்வாமினே ,தாப ஹாரினோ.

    Share
  • புரட்டாசியில் பூத்த புதுமை மலர்

    சுலோச்சனா

    அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்

    கருணை அருட்பெருஞ்ஜோதி.

    The_vallalar-06-214x300பூமியில் எத்தனையோ விதமான மலர்கள் பூத்துப் பொலிகின்றன. பூமியை அலங்கரிக்கின்றன. சில மலர்களே பூமியை புனிதமாக்க ,பூமியில் பிறந்த மக்களை புனிதமாக்க பூக்கின்றன. அப்படிப் பூத்த மலர்கள் புதுமை மலர்கள் . இவற்றில் ஒன்றுதான் புரட்டாசியில் பூத்த புதுமை மலரான அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி என அடிகளார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் இராமையா சின்னம்மை இவர்களுக்கு 5-10-1823 புரட்டாசித் திங்கள் 21ம் நாள் மகனாகப் பிறந்து பெற்றோர்களை பாக்கியசாலி ஆக்கினார். சுவாமிகளின் உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் ஆவர். சிறு வயதினிலேயே சிதம்பரம் நடராஜப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர்.

    பள்ளி சென்று பயிலாத சுவாமிகள் அண்ணன் சபாபதிக்குப் பதிலாக, அவர் பேச வேண்டிய மேடையில் சொற்பொழிவாற்றி அண்ணனை விட மிக நன்றாக சொற்பொழிவு செய்கிறார் என்று புகழப் பெற்றார். அப்பொழுதுதான் அவர் மகிமை வெளிப்பட ஆரம்பித்தது எனலாம். இவருக்கு மிக இள வயதிலேயே வற்புறுத்தி மணம் முடித்தனர். அவர் அன்று இரவு முழுவதும் படிப்பிலேயே ஈடுபட்டிருந்தார். மின்விளக்கில்லாத அந்த காலகட்டம். எந்த விளக்கின் ஒளியில் சுவாமிகள் படித்தாரோ அதில் எண்ணெய் வற்றியது. சுவாமிகளோ அவ்விளக்கில் தண்ணீர் ஊற்றினார். இருந்தும் அவ்விளக்கு சுடர் விட்டு எரிந்தது. சுவாமிகளை மணந்த அந்த அம்மையார் இவரின் அற்புத செயலைக் கண்டு மிக்க மதிப்பு மரியாதை உணர்வுடன் அவரிடம் இருந்து விலகியே நின்றார். கருவிலே திருவுடையார் என்பதற்கேற்ப அவர்பிறவி ஞானியாக இருந்தார். ஆன்ம ஞான அனுபவத்துடனேயே அவர் பிறப்பு நிகழ்ந்திருக்கின்றது. அது மட்டும் அல்லாமல் அவர் வாழ்வில் திடீர் திருப்பங்கள் எதுவும் நிகழவில்லை. இறையருளிலேயே அவர் மனம் இயல்பாகவே பொருந்தி இருந்தது என அவர் வாழ்வின் முறையிலேயே அறிகின்றோம்.

    உயிர் கொல்லாமை, ஊண் உண்ணாமை போன்றவை அவரின் முதன்மை கொள்கையாக இருந்தது. விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊண் உண்டு மகிழ்ந்திருப்பதை எண்ணியும் கண்டும் அவர் நெஞ்சம் நடுங்கிற்று. ஏழைகளின் வயிறு வாடுவதை நினைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் அவர் முகமும் மனமும் பெரிதும் வாடியே நின்றது. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற பலர் பின்னாட்களில், “ஐயா அவர்களின் முகத்தில் எப்பொழுதுமே சற்று வருத்தக்குறியே இருக்கும். வெண்மையான துணியால் உடல் முழுதும் போர்த்தி இருப்பார் தலையில் முக்காடிட்டும் இருப்பார். ஏதோ சிறிது மற்றவர் கண்களுக்கு தெரியும் பாகங்கள் பொன் போன்று மின்னும்,கைகளை வீசிக்கொண்டு கூட நடக்கமாட்டார். கைகளை இணைத்து வைத்துக்கொண்டு மிகுந்த அடக்கத்துடனேயே நடப்பார். மிகவும் மென்மையான எளிமையானசாத்வீக குணத்தையும் கடந்தவர்” என்று கூறுகின்றனர் .

    இரஜஸ் தமஸ்,சாத்வீகம் இம்மூன்று குணங்களையும் கடந்து நிற்பதே ஞானிகளின் அடையாளம் அல்லவா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் வீடிதோறிரந்தும் பசியறாவெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.எனும் வள்ளலார் ஏழைகளின் பசியாற்ற தரும சாலை ஒன்றை நிறுவினார். அதற்கு சத்திய தருமச்சாலை என்று பெயரிட்டார்.அதில் தன்னம்பிக்கையினாலேயே அடுப்பை ஏற்றினார். கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கு அரும் ஏழை பாழைகள் அனைவருக்கும் வயிறாற பசியாற்றப்பட்டது. அன்று அருளாளரான வள்ளலாரால் ஏற்றப்பட்ட அடுப்பு அணையா அடுப்பாக இன்று வரை உணவு தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகின்றது. வள்ளலார் வளம் மிக்க வயலூரில் துவங்கிய சத்திய ஞான தரும சாலையும் மக்களின் வழிப்பாட்டிற்காக சத்திய ஞானசபையும் இன்றும் வடலூரில் சத்ய சன்மார்க்க வழியில் நல்ல முறையில் நடந்து வருகின்றது. வள்ளலார் ஞானவழியில் ஏற்படுத்திய ஒளிமயமான ஜோதி வழிபாடு நடந்து வருகின்றது. மென்மையான மனம் கொண்ட வள்ளலார் கடவுளர் வழிபாட்டில் ஆடம்பரமான வழிபாடுகள் தேவையில்லை. உண்மையான பக்தியுடன் எளிய வழிமுறையில் இறையருளுடன் இசைந்த மனதுடன் அருட்ஜோதி ஆண்டவரை ஜோதிவடிவில் தரிசித்து அந்த ஜோதியை தன் மனதுக்குள் தரிசிக்க வேண்டும் என்பதே அவர் வகுத்த வழிபாட்டு முறை .வள்ளலார் வழிபாட்டில் மட்டும் புதுமையை கூறவில்லை . சமூக அமைப்பில் வாழும் வழிமுறைகளில் புதுமைக் கருத்துக்கள் புகவேண்டும் என விரும்பி “மனிதர் அனைவரும் சமமே சாதி சமய வழக்குகளை விட்டு பேரின்ப வீட்டிற்குள் நுழையும் வழி காண வாரீர்” என்று வடலூர் வட திசைக்கே என்று பாடி அழைக்கிறார் . ஜாதி மத இன சமய வேறு பாடுகளை விட்டு மனிதன் மனிதனாகப் பிறந்து வாழும் முறையால் தேவனாக உயர வேண்டும் என விரும்பி கூறுகின்றார்.

    அவற்றிற்கெல்லாம் என்னென்ன வேண்டுமென்று சென்ன கந்த கோட்டத்துள் உள்ள சண்முகனை நினைந்து கேட்கிறார்.

    ஒருமையுடன் நினது திருமலரடி

    நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று

    பேசுவார் உறவு களவாமை வேண்டும்

    பெருமை பெறு நினது புகழ் வேண்டும்

    பொய்மை பேசாதிருக்க வேண்டும்.

    பெரு நெறிபிடித்தொழுக வேண்டும்

    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.

    மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும்

    நினை மறவாதிருக்க வேண்டும்.

    மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்.

    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்.

    வேண்டுவன வற்றையும் வேண்டாதவற்றயும் இறைவனிடம் வேண்டிக் கேட்க வழி சொல்கின்றார். வள்ளலார் வள்ளுவரின்

    “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய் பொருள் காண்பதறிவு”

    என்ற குறளுக்கு ஒரு எடுதுக் காட்டாகவும் இருக்கின்றார். தேர்ந்து தெளிந்த பின்னொரு சில இடங்களில் வேதத்தின் சில பகுதிகளை மறுத்துரைக்கின்றார். மென்மையான மனம் கொண்டவர். திண்மையான மனதுடன் தனக்கு ஒவ்வாத கருத்துக்களை வன்மையுடன் கண்டிக்கின்றார்.

    எவ்வுயிரும் தம் உயிர் ஒத்து இருப்போர் உள்ளமே.சுத்த சன்மார்க்க சங்கம் .என்பது இவரது திடமான கருத்து,பள்ளி சென்று பயிலாத ஞானிகள் அனேகர்.அவர்களில் ஒருவரே அருட்பிரகாச வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். இறை பக்தியில் தோய்ந்தவரேனும் “அறவால் அறிந்தே உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே”

    எனும் அருணகிரி நாதரின் வாக்கிற்கேற்ப ஞான மயமான பக்தியை உடையவர் நமக்கும் அதை அளிப்பவர். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த மக்கள் அனேகர் அவர் கருத்துக்களுக்கு ஒத்து வராதது கண்டு வள்ளலார் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என அறிவித்தார்.

    வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில்சித்தவளாகத்தில் தம்மை மக்கள் கண்களுக்கு மறைத்துக்கொண்டார். ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது. சுவாமிகள் வகுத்த விதிப்படி பல வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி 7 வது திரையாக சுத்த சத்துவகுணத்தைக் குறிக்கும் வெண்மை நிறமுடைய திரையை விலக்கி “அருட்பெருஞ்ஜோதி” தரிசனம் அனைவருக்கும் கிடைக்கின்றது. பல வருடங்களுக்குமுன் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சத்ய ஞானசபை சத்ய தருமசாலை சன்மார்க்க சங்கம் இவைகள் எல்லாம் வாரியார் அவர்களால் திகழ்கின்றது.

    ஒவ்வொரு காலத்திலும் கடவுளின் தூதுவராக மகான்கள் வருகின்றனர்.மூட நம்பிக்கை நம்பிக்கை மிகுந்த காலத்தில் சீர் திருத்த வாதிகளும் புரட்சி சிந்தனை உடையவர்களும் தோன்றுகிறார்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவரே வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஆவார்.

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (5)

    சுலோசனா

    பெண்களின் தந்தை பெரியார் – பகுத்தறிவு பகலவன் ——- தந்தை பெரியார்

    பாரினில்-பாரதம்2

     

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    யாதொரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    எலும்பில்லாத புழு பூச்சிகளினால் வெப்பத்தை தாங்க முடியாது.சுருண்டு விடும். அது போன்றுதான் மனித நேயம் எனும் அன்பிலாத முதுகெலும்பில்லாத மனிதர்களை அறக்கடவுள் தண்டிக்கிறார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். சகமனிதர்களை சாதி போன்ற பேதங்களை உண்டாக்கி, தாழ்த்தி அவமானப்படுத்தியதோடு அல்லாமல் தன்னில் பாதியான பெண்ணை சாதி மத பேதமின்றி அடிமைப்படுத்தி வைத்தது பழகிய யானையைக் கொண்டே புதிய யானைகளைப் பழக்கப்படுத்துவது போல மாமியார் நாத்தனார் போன்ற உறவு முறைகளைக் கொண்ட பெண்ணே பெண்ணிற்கு எதிரியானாள்.

    மகன் சகோதரன் என்ற உறவில் உள்ள ஆணுக்கு கொடுமையை கடுமையாகப் போதித்தாள். சில நோய்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டு பலனின்றி பிறகு கடுமையான மருந்தை பிரயோகிப்பார்.அது போல் சமூகத்திற்கு கிடைத்த அரு மருந்து பெரியார்.தன் மனதில் உருவாகும் உஷ்ணமான உண்மைகளை அதன் வெப்பத்தோடு அப்படியே வெளியிட்டார். நாகரீகம் கருதி அதற்கு மேல் பூச்செல்லாம் பூசவில்லை. உச்சி வேளை சூரியனாக உதித்து வந்த கருத்துக்கள் பல சமூக விரோதிகளை உருவாக்கியது.

    பெண்ணடிமை செய்யும் ஆதிக்க மனப்பான்மையாளர்களை அதட்டியது. மூட பழக்கவழக்கங்களினால் பாதிப்பால் நடுங்கிக் கொண்டிருந்த பெண் இனத்திற்கு அந்த சிந்தனை கதிர்கள் இதமான வெப்பமளித்து நடுக்கத்தை விரட்டியது. இவர் சிந்தனையின் சிகரமாகத் திகழ்ந்தவர். அவர் கொண்ட கொள்கைகளின் பூரண செயல் வடிவமாகத் திகழ்ந்தார். சில சிறந்த சிந்தனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு சீர்திருத்தங்களை செம்மையாக செயல் படுத்தினர். தன் குடும்பத்தோடு தேச சேவையில் ஈடுபட்டவர். கள்ளுக்கடை போராட்டத்தின் போது தன் சகோதரியோடும் துணைவி நாகம்மையோடும் அந்த போர்க்களத்தில் ஈடுபட்ட தியாக மகாத்மா காந்திக்கும் கூட அந்த பெண்கள் சேவை தெரிந்திருந்தது. அவர்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    பெண்களின் சரீர உடல் அழகைப் புகழ்ந்து பேசி அவர்களை மூளை சலவை செய்யும் ஆண்களை கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். அழகு பதுமைகள் தங்களின் சொத்துக்களுக்கு தங்களுடைய வாரிசுகளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக உபயோகிக்கும் ஆண் திகழ்வதாகக் கூறுகின்றார். தங்களின் சுக அனுபவத்திற்காகவே பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஆண் என்பவன் கருதுகின்றான்.அலங்காரப் பதுமைகளாக பாதுகாக்கின்றான். சொந்த உபயோகத்திற்கு மட்டுமே என்று வைத்து கல்யாணம் என்ற பெயரில் அழகிய மாளிகைகளில் அடக்கி வைத்திருக்கின்றனர் என்று செல்வந்தர்களைப் பற்றி கிளியை தங்கக் கூண்டில் வைத்து பால் பழம் தருவது போல.பணம் படைத்தவர்களின் வாழ்வினில் தான் ஆணாகப் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்.,என்று இருமாப்புடன் வாயினால் கூறாமல் செயல் மூலம் செய்து காட்டுவது போல் வாழ்கின்றான், என்கிறார்.

    கலைத்திறமை வாய்ந்த பெண்கள் தங்கள் கலைத்திறனால் மட்டும் இன்றி பெண் என்ற முறையிலும் ஆணை மகிழ்விக்க வேண்டிய ஒரு சூழ்நிலை பெண் சமூகத்தில் ஒரு நோய் போல் தோன்றியது. ஜமீன்தாரர்கள் மிட்டா, மிராசுதார்கள் , பணம் படைத்த தனவான்கள் கொண்ட ஒரு கூட்டம் இப்படிப்பட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை உருவாக்கியது. இந்த மகிழ்விக்கும் கூட்டத்தில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்களும் இருந்தனர். சிறிதும் விருப்பம் இன்றி தாய் தந்தை தமக்கை இவர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு இந்த வாழ்வில் தள்ளப்பட்டவர்களும் இருந்தனர். இதிலும் கூட சில பெண்கள் ஒரே நபருடன் வாழ்ந்தனர். இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

    பெண்கள் எளிமையுடன் வாழப் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானால் பணமுள்ள ஆணுக்கு பலியாக வேண்டிவரும் எனும் உண்மையை ஒளிக்காமல் ஒசையுடன் கூறுகிறார். உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் அலங்கோல அலங்காரம் மற்ற ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அலங்காரத்தில் பெண்களின் கவனம் செல்லக்கூடாது. உன் முகம் நிலவு போல் உன் ஸ்பரிசம் மலர் போல் மிருதுவானது. மருண்டு விழிக்கும் உன் விழிகள் மான் போல அஞ்சி அஞ்சி அல்லது சஞ்சி சஞ்சி நடக்கும் உன் நடை அன்னம் போல என்றெல்லாம் ஒரு ஆணால் புகழப் பட வேண்டும் என்பதற்காகத்தானே. மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ எனும் நாவலில் வரும் கதா நாயகி மங்கை,வீட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படிப்பவள் அவளை அந்த வீட்டுத் தலைவரின் மகன் காதலிக்கின்றான்.தன்னிடம் காதலை வெளிப்படுத்தி மனம் புரிய வேண்டுபவரிடம் மங்கை சொல்கின்றாள்

    ஐயா நீங்கள் எதோ உணர்வில் உந்தப்பட்டு என்னிடம் கேட்கின்றீர்கள். நான் கல்லூரியில் படித்தாலும் என் தாய்க்கு உதவியாக என் படிப்பிற்காகவும் உழைத்து உழைத்து உரமேறிவிட்ட தன் மென்மையை இழந்துவிட்ட என் கைகளைத் தொட்டுப் பாருங்கள். என்னிடம் நீங்கள் கொண்ட காதல் சில வருடங்கள் கூட நீடிக்காது. என்னிடம் நீங்கள் மென்மையும் நளினத்தையும் நாசூக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்களுக்கேற்ற மனைவியை தேர்த்தெடுங்கள் என்று கூறி முதலில் மறுக்கிறாள்.

    பெரியார் ,சுயமரியாதையைஇழ்ந்து பின் சுகப்படும் சோம்பேறியாக இராதீர்கள், நீண்ட கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். பட்டு போன்ற விலையுயர்ந்த புடவைகளை அணிந்து கொண்டு அலையாதீர்கள். உடுத்த சுலபமான உழைக்க வசதியான ஆடைகளையே அணியப்பழகுங்கள்.

    பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்ற மனப்போக்கை விடுங்கள்.ஆணுக்கு நிகராக உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்துங்கள்.

    இவ்வாறெல்லாம் உரமூட்டி பேசுபவர் பால்ய விவாகம் இளம் விதவைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும்பொழுது தந்தை பெரியார் பிறக்கின்றார்.

    ஆனின் சுய நலத்தின் உச்ச கட்டமே கற்பு என்ற நிலை.கற்பு என்ற ஒரு ஒழுக்க நிலை ஆண் பெண் என்ற உறவில் மட்டும் அன்றி சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இருக்க வேண்டும். என ஒழுக்கத்தில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருகின்றார்.

    தந்தை பெரியார் காட்டும் பாதையில் தயக்கமின்றி நடைபோடும் பெண் மக்கள் (மகள்கள்) எவ்வளவு பெயர்கள் என்று தெரியவரும்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள்.தந்தை பெரியார் சொற்களும் மந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சொற்களாகும்.அந்த சக்தியின் ஒளியை தாங்க முடியாமல் கண்கள் கூசி கண்களை தாழ்த்திக் கொண்டவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை.

    ஒரு நாடு முழுவதற்குமான சமுதாய ன்நெறிகள் சமய நெறிமுறைகள் – நெறிமுறைகள் அற்றவைகள் பண்பட்ட பழக்கவழக்கங்கள் பண்பாடற்ற புண்பட்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே கலந்தே இருந்து வருகின்றன. இந்த நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் அனைத்திற்குமே தங்களால் இயன்றவரை அவைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை பின் பற்றும் மக்களே எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

    அடுத்து சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்

    “எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பரிது.

    என்ற தமிழ் திருமறையின் குறளின் பொருள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் அறிவின் பாற்பட்ட மனதிற்கு ஏற்ற வகையில் இருப்பவைகளை மட்டுமே பின்பற்றுவர்.தங்களின் அறிவிற்கும் மனச்சான்றிற்கும் ஏற்பில்லாவற்றை விட்டுவிடுவார்கள் .முதலில் குறிக்கபட்டவர்களை விடவும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. மூடப்பழக்கங்களைபின்பற்றுபவர்கள் அறிந்தோ அறியாமலோதெரிந்தோதெரியாமலோ பலர் மனதை புண்படுத்தி விடுகின்றனர்.இந்த வேதனைக்கு ஆளானோர்கள,பெரும்பாலும் பெண்களே. இதற்கு பலி ஆனவர்கள் ஆகிக் கொண்டிருப்போர்கள்,ஆகப்போகின்றவர்கள் யார் என்றால் 10 சதவீதம் ஆண்கள் மீதி 90 சதவீதம் பெண்களே.ஐந்து மாபெரும் வீரர்களானா ஐவரை கணவர்களாகத் கொண்ட பாஞ்சாலி .ஞானியரும் சான்றோர்களும் வீரர்களும் கூடியுள்ள சபையில் ஒரு ஆணால் துகில் உரியப்பட்டாள்.இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.மன்னன் ஜனகனின் மகள் ஸ்ரீராமனின் ப்ரிய பத்தினியான சீதா பிராட்டி கணவனோடும் காவலாக கானகம் வந்த இளைய பெருமாள் இலக்குவனோடும் கானகம் சென்றது ஒரு முறை. இரண்டாவது முறை-முறையற்ற முறையில் தான் கானகத்தில் தனித்து விடப்படபோகின்றோம் என்பதை அறியாமல் விடப்படுகின்றனர்.தெய்வமே அவதாரம் எடுத்து வந்தது என்றபோதே மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இப்படி இருக்கும் போது கீழ்சாதிகள் என அழைக்கப்பட்ட பற்பல சாதிகளில் பிறந்தப்பெண்களின் அவல நிலையைப் படிக்கும் பொழுதேப்மனம் பதறுகிறது.பார்த்தாலே பாவம் தொட்டாலே தீட்டு என்று மட்டும் இல்லாமல் நடைமுறை பழக்கவழக்கங்களில். எத்தனையோ வேறுபாடுகள்.கீழ் சாதியை சேர்ந்த பெண்கள் சிறுமியானாலும் சரி பருவப் பெண்னாலும் சரி முதிர்ந்த மூத்த மூதாட்டியானாலும் சரி ஒரு சரியில்லாதா நடைமுறைக் கொடுமை . மார்பை மறைத்து மேலாடை அணிதல் கூடாது. இடுப்பில் மட்டும் துணி.இந்த நிலையில் அண்ணிய ஆடவர் முன் கூட அரை நிர்வாணம். கீழ்சாதி தகப்பனுக்கு பிறந்து கீழ்சாதி கணவனோடு வாழ்ந்து கீழ்சாதி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு பெண்———-ஆனால் அவள் சற்றேனும் அழகு படைத்தவளானால் ,மிக உயர்ந்த சாதி என அழைக்கப்படும் சாதிகளில் பிறந்த காமுகனின் கண்ணில் பட்டுவிட்டால் அப்பொழுது அந்த கீழ்சாதி இளம் பெண்கள் காமுகனான கயவனான் அந்த கண்ணியவானுக்கு அந்த சமயத்திற்கு மட்டும் தீண்டதக்கவர்களாகி விடுவார்கள் இதில் அந்த பெண்களின் விருப்ப்பத்தை எல்லாம் பற்றி கவலையே படமாட்டார்கள். கீழ்சாதி ஆனாலும் அவளுக்கு அந்த உயர் சாதிக்காரன் அந்நியன் தானே .எவனோ ஒரு அந்நியனால் உடலும் மனமும் புண்பட்டு எந்த அளவிற்கு எத்தனை பெண்கள் துடித்தனரோ.

    உயர்ந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களில் சிலரோ அல்லது பலரோ தீண்டாமை இனத்தை சேர்ந்த இளம் பெண்களை தீண்டி நாங்கள் இன்புற்று அவர்களை துன்புறுத்தியது என்பதுசரித்திரங்களில் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்றும் கூட சில இடங்களில் இந்த தாழ்ந்த சாதியினர் கொத்தடிமைகளாகப் பட்டு ஆண் பெண் சிறுவர் அடங்களாக அநியாய கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த செய்திகள்.தொலைகாட்த்சியிலும் வருகின்றன.

    ஒரு பெண் கணவனை இழ்ந்துவிட்டால்,பூவைவிடவும் மென்மையான மனம் படைத்த பூவைக்கு தெய்வப்பிரசாதமான பூ பிரசாதமாக கிடைப்பதில்லை.மறுக்கப்படுகிறது.இந்த அநாகரிமான நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே.தன் கையே ,தன் கண்களைக் குத்துவது போல் பெண்ணெ பெண்ணுக்கு அவமரியாதை செய்து வருகின்றார்கள்.காலங்காலமாக வந்த பழக்கங்களுக்கு கீழ்படிகின்றோம். மனைவியை இழந்த ஆண்களுக்கு இந்த மரியாதைகள் எல்லாம் கிடையாது. அவன் மீண்டும் புதுமாப்பிள்ளையாக வேறு ஆகி விடுகிறான்.இதற்கு சமூகத்தீன் அங்கீகாரமும் முழு அளவில் கிடைத்துவிடுகிறது.

    எந்த விதமான துன்பம் என்றாலும்,காலப் போக்கில் அதன் தீவிரம் குறைந்து இயல்பான வாழ்விற்கு திரும்புவது என்பது மனித இயல்பாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தாலும்கூட பெண் அப்படி எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுவிட முடியாது. பெரிய பெரிய நகரங்களில் நன்கு படித்து வேலை பார்க்கும் பெண்கள் ஒரு வேளை இந்த அவமதிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் தப்பலாமோ என்னவோ ,சிறிய நகரங்களில் கிராமங்களில் வசிப்போருக்கு இன்றும் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டிதான் உள்ளது.இதிலும் இன்னும் ஒரு அறிவீனம் என்ன வென்றால் நியானமான காரணத்தினால் நீண்ட காலம் தாம்பத்திய வாழ்வில் இருந்து விடுபட்டு அல்லது விடுவிக்கப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்து வரு பெண்களுக்கு ம் அந்த விதி விடுவதில்லை. 7 ஆண்டுகள் பிரிந்திருந்தால் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அந்த பந்தம் தானாகவே முறிந்துவிடும்.இந்த விதியே மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ப்ந்தம் சூழ்நிலை முதலிய பல தவிர்க்கமுடியாத பல காரணங்களால்மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சட்டங்களாலும் மனி தர்மத்தினாலும் மனித நேயத்தாலும் விடுவிக்கப்படுகின்றன.இந்நிலை சிலசமயம் அரிதாக ஆண்களுக்கும் கூட ஏற்படுகின்றது.இந்த உண்மையை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.ஆனால் நடைமுறையில் மிக மிக அரிது.எங்கோ ஆயிரத்தில் ஒன்று லஷ்ஷத்தில் ஒன்றுதான்,ஆணுக்கு அசம்பாவிதம் என்பது.அடுத்து விதவைகள் மறுமணம்,சும்மர் 50 வருடங்களுக்கு முன்னரும் சமீபத்திலும் கூட அடேயப்பா அவளுக்கென்ன கொழுப்பு? இன்னொரு கல்யாணம்,பொம்பளைக்கு கூட இன்னொரு ஆம்பளை கேக்குது பாரப்பா,என கேவலமான பொருளில் எள்ளி நகையாடுகின்றனர்.

    பெரும்பாலும் தனியாகவாழ இயலாத உலகம் இதில் ஒருவருக்கொருவர் துணையாக கைபிடித்துக்கொண்டு– ஒருவருக்கு இடரும் பொழுது ஒருவர் பாதுகாப்பாக கை கொடுக்க இதற்கெல்லாம் தானே துணை என்பது.

    “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே

    இங்கே வேரில் பழுத்த பலா”

    என பாடிய பாரதி தாசன் வார்த்தை எவ்வளவு பொருள் பதித்தவை.இந்த விஷயத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தே காட்டினார். உலகறிந்த விவரம் இது.தனக்குத் தொண்டாற்றி வந்த மணியம்மை எனும் கணவனை இழந்த பெண்ணை தனக்கு த் துணையாகக் கொண்டு அவருக்கு பகுத்தறிவும் அறிவுக் கண்களாகவும் திகழ்கின்றார்.ஒரு வகையில் பார்த்தால் கணவனின் துனையை இழந்த பெண்கள் அனைவருக்குமே மறுபடியும் திருமணம் தான் தீர்வு என்பது முடிவான முடிவல்ல. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு உதவி சமூகத்தில் அந்தஸ்து எந்த விதத்திலும் குறைவு படாமல் பார்த்துக் கொள்வது நியாயத்தின் அடிபடையில் அவரவர் வாழ விரும்பியபடி வாழலாம் என்பதற்கான சூழல் வேண்டும்.பொருத்தமான மனமக்களாக அமைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் அனேகமாக இன்னோரு ஆடவரோடு இல்வாழ்வில் ஈடுபடவிரும்புவதில்லை .விரும்பினால் மற்றொரு வாழ்வை அமைத்துக் கொள்வது அது அவரவர் சொந்த விருப்பம்.குடிகார கொடுமையான பெண்பித்தனான நடவடிக்கை உடைய ஆண்கள் இந்த வித பழக்கங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட கடூரமான வார்த்தைகளை மனைவி மேல் அக்னி மழை போல் கொட்டும் ஆடவர்களும் உள்ளனர்.இதற்கு சில சமயம் பெண்களே உடந்தை .இந்த வகையான வார்த்தைகளால் கணவனை வாட்டும் பெண்கள்கூட உள்ளனர்.எங்கோஒரிருவர்கள் படாதபாடுபட்டு ஒரு வழியாக கணவன் என்ற கொடுமையில் தப்பி அப்பா பட்டதே போதும் ,இன்னொரு கல்யாணமா ? கனவில் கூட வேண்டாம் என்று முடிவெடுத்து தெனாலிராமன் வளர்த்த சூடு கண்ட பூனை போல் வாழ பயந்து விலகி ஓடுபவர்களும் இருப்பது சகஜமே. தேசிய மகாகவி பாரதியார் அவர்கள் தெளிவாகவும் தீரத்துடனும் பேசுகின்றார். பொதுவாகவே விதவை விவாகம் என்பது சான்றோர் நூறு சதவீதம் ஆமோதிக்கவில்லை என்பதே வருந்ததக்க உண்மை. இல் வாழ்வை ஏதோ ஒருவகையில் இழந்துவிட்ட பெண்கள், தியாக குணம் கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன்வர வேண்டும் என்றே எதிர்பார்த்தனர்.

    ஆனால் பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார். தீர்க்கமாக தீர்மானமாகவீர முழக்கமிட்டார். என்றே சொல்லவேண்டும். மகாகவி பாரதியார் அவர்கள் “நான் ஸ்வாமி விவேகானந்தரையும் மகாத்மா காந்தி அவர்களையும் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால் விதவைகளின் மறுமனம் பற்றிய கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றேன்.என தீரத்துடன்தன் கருத்தை வெளியிடுகிறார்.(இந்த தகவல் சொல்லின் செல்வர் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவிலிருந்து)

    மஹாகவி பாரதியார் ஒரு மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதா தேவியை சந்தித்து பெண்களை ஆண்கள் நடத்துவதைப் பற்றியும் நடத்தவேண்டிய முறைப்பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்து அது பற்றி சிந்தித்து பிறகே அந்த கருத்துக்களின் உண்மையை மனசாட்சியுடைய உந்துதலன் அறிந்து தெளிந்த பிறகே வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பமில்லை காண் என்று கும்மியடி என தன்னுடைய மகிழ்வான சுதந்திர வெளிப்பாட்டை கும்மியடித்து கொண்டாடுகிறார் என்கிறார்.

    இதில் இருந்து நாம் உணர்வது வஞ்சனையின்றி ,பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் வாழ நேர்மையே உருவானவளாக ,உண்மையே உரைப்பவளாக ஞானத்தின் செல்வியாக கலைமகளின் மகளாக வருகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்.சுத்தானந்த பாரதி கண்ட புதுமைப்பெண் தங்கதட்டான் உதவியின்றி, சாய மினுக்கின்றி, ஒப்பனைகள் ஏதுமின்றி சுதந்திரமே வடிவாக , ஞானமே அழகாக ஒப்பில்லாக்கன்னி அவள் உலக வலம் வருகின்றாள். இந்தியப் பெண்கள் அனைவரிடமுமே இந்த குண நலன்களையே இன்றும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.சமூக நல ஆர்வலரான சான்றோர்கள் அப்படியின்றி இன்றுள்ள ஆபாசமான சுவரொட்டிகள் அருவருப்பான காட்சிகள் கொண்ட அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் நாற்படையாக நடந்தால் —-

    நீச்சல் தெரிந்தவர்க்கு கூட ஆற்றின் போக்கோடு நீச்சல் அடிப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் நீச்சல் தெரிந்தவருமே கூட எதிர் நீச்சல் அடிப்பது சிரமமே .இதில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளினால் சிலர் அப்படியும் அமைந்தும் அதயும் சமாளித்து எதிர் கரைஏறிய சிலர் அந்தந்த காலகட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்ப காலத்தின் கட்டாயத்தின் பிடியில் சிக்கித் திணரி சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆயுதங்களோடு போருக்கு வரும் உறவினர்களின் தாக்குதல்களுக்கு நடுவே, நியாயமான விருப்பங்களுடன் நேர்மையான நடத்தையும் கூடவே இவர்களைப் படைத்த இறைவன் தானே என்னையும் படைத்தான் என்ற திட நம்பிக்கைதுனைவர போர்புரிகின்றனர்.முட்புதர்களுக்கு நடுவே வெற்றுக் கால்களோடு நடந்து ஒற்றையடி பாதை ஒன்று உருவாக அதில் பாதுகை அணிந்த பல பாதங்கள் நடந்து நடந்துபாதை சிறிது சீர்பட்டது, அகலப்பட்டது. அப் பாதையில் இன்று வண்டிகள் செல்லத் தொடங்கி விட்டன,

    முட்புதரில் வெற்றுக்காலோடு நடக்கத் தொடங்கியவர் டாக்டர் சுப்பு லட்சுமி ரெட்டி. இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவம் படிப்பதற்காக புதுக்கோட்டை மன்னர் வரை சென்று அழுது தொழுது போராடி அனுமதி பெற்றார். ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்க அனுமதியின்றி திரையிட்டு வாசலுக்கு அருகில் அமர்ந்த முதல் பெண்மணி மருத்துவரான டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி.

    தட்டச்சு உதவி: உமா சண்முகம்

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (4)

    சுலோசனா

    இல்லறம் எனும் நல்லறம்

    இந்து தருமம் கூறும் நான்கு நெறிகளில் முதலான நூல் பிரம்மச்சரியம் என்பது பாலகனாக இருந்து வாலிபப்பருவத்தின் நுனழவாயிலில் முதல் படியில் மட்டும் அன்றி ,மகான்களால் வகுத்துக் கூறப்பட்ட அறநெறி நூல்கள் முதலான பலகலைகளையும் ஆழ்ந்து கற்க முற்படும் முன்னேற்றமான காலம்.சாண்றோர்களால் சாண்றோன் என அழைக்கும்படி வாழ்வது.,என்பது எவ்வாறு என்றும் அறிகின்ற பொற்காலம்.அறிந்த அறிவை தரும நெறிகளை அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப வாழ்வில் வாழ்ந்து பார்க்கும் காலம்.நாயன்மார்கள் வரலாற்றில் சுந்தரர் இரண்டு திருமணம் புரிந்து வாழ்கின்றார். ஊழ்வினையின் பயனாக அந்த காலகட்டத்தில் அது முற்போக்குத் திருமணம்.சங்கிலி நாச்சியார்- பரவை நாச்சியார் என இருவர். ஒருவர் கோவில் தாளா குலத்தை சார்ந்தவர். இன்னொருவர் கணவனை இழந்தவர் .இந்த சீர் திருத்த மனம் புரிந்தவர் திருநீலக்கண்டரின் வாழ்வும் அறிந்து கொள்ளத்தக்கதே.கணவரின் நடத்தை பிடிக்காத அவரின் துணைவியார் எம்மை தீண்டாதீர் என ஆணை இட இருவரும் முதிய நிலை வரை விலகியே இல்லறம் தொடர்ந்தனர்.ஒரு சோதனைக்கு பின்பு இறைவன் மீண்டும் இளமை அருளினார்.இல்லறம் எனும் நல்லறத்தை நடத்த முற்படும் காலம் என இந்து தர்மம் கூறுகிறது.இல்லறம் எனும் இனிய மலர்வனத்தில் அழகை தங்களின் தூய்மையான அழகான வாழும் முறையினால் இன்னும் கூட அழகூட்டவும் செய்யும் அற்புத காலம் .ஒரு சன்யாசி இவ்வாறு கூறுகின்றார்.எந்த நிலையும் உயர்வே .சன்யாசமே உயர்ந்த நிலை .மற்றவை அதைவிட குறைவு.என என்னம் கூடாது. இல்லற நெறி என்பது முறப்படி சரியாக கடைபிடிக்கப்பட்டால் அதில் எவ்வளவு கடமைகள் தெரியுமா?ம்ற்ற மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வேண்டுவன செய்ய கடமைபட்டவன் இல்லறத்தவனே ஆவான்.

    பாரினில்-பாரதம்2

    மனித இனம் என்பதே ஆண் பெண் எனும் பிரிவு சார்ந்ததே . எனினும் இரண்டு இனமும் சேர்ந்து வாழ்தலே வாழ்க்கை என்பது. விதிவிலக்காக தனியே வாழ்பவர்களும் உள்ளனர். அவர்கள் தனக்குத்தானே நிறை வேற்றும் வகையில் மனப்பக்குவம் வாய்ந்தவர்கள்.ஆணோடு நல்லமுறையில் சேர்ந்து பெண்ணும் பெண்ணோடு நல்ல முறையில் இணைந்து வாழும் பொழுதே ஆணும் பரஸ்பரம் நிறைவேற்றுகின்றனர்.என இந்து தர்மம் கூறுகின்றது. சந்தர்ப்ப சூழ்நிலையால் மணம் என்ற பந்தத்தில்,திருமண வாழ்வில் ஈடுபட இயலாதவர்கள் எத்தனைப்பேர்?அவர்களில் பலருக்கு மனதில் எதையோ இழந்தது போன்ற ஆதங்கம் இருக்கின்றது.இப்படி இருப்பது இயல்புதான் என்கின்றனர்.மன நல நிபுணர்கள்.பெற்றோரின் அன்பும் கரிசனமும் அரவணைப்பும் குறிப்பிட்ட வயது வரைக்கும்தான்.குறிப்பிட்ட ஒரு பருவத்தில் ஆணுக்குப் பெண்ணின் அனுசரிப்பும் பெண்ணுக்கு ஆணின் அனுசரிப்பும் தேவையாக இருக்கின்றது.இயற்கைக்கு இது இயல்புதான். இந்த தேவைகளும் உணர்வுகளும் என்கின்றனர்.அப்படி இன்றி இயற்கைக்கு எதிராக தனித்து வாழும் பொழுது சில சமயம் ஒழுக்ககேடான நிகழ்வுகள் சமூக நலனுக்கு கேடு விளைவிக்கின்றனர் என்கின்றனர் வாழ்வியல் நிபுணர்கள்.மனம் புரிந்தும் மனம் பொருந்தாது பிரிவதும் அல்லது சகித்துக்கொண்டு மனமின்றி வாழ்பவர்கள் எவ்வளவோ பேர்கள் துறவிக்கான பக்குவம் இல்லாதவர்களுக்கு திருமணம் தேவை. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

    நல்லாற்றின் நின்ற துணை, என வள்ளுவம் கூறுகின்றது. இந்து சமயம் மனித வாழ்வை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றது. முறையே பிரம்மச்சரியம் இல்லறம், வானப்ரஸ்தம் சந்யாஸம் என்று . இதில் இல்லறநெறி யில் இருப்பவர்கள் மற்ற மூன்று தர்மத்தில் இருப்பவர்க்கு உதவ கடமைப்பட்டவர்கள்.என்பதை திருவள்ளுவம் கூறுகின்றது.பிறப்பில் இருந்தே உலக மாயையில் இழுபடாமல் துறவு நெறியை பின்பற்றுபவர்கள் எங்கோ ஒரிருவர் தானே . மற்றபடி கல்விக்கற்று நியாயமான வழியில் பொருள் ஈட்டி ஈட்டிய பொருளை வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவுமாறு செலவுசெய்து வாழ்வதே இல்வாழ்வர்கள் கடன் வீட்டிற்கும் நாட்டிற்கும்கடமை.,முடிந்து பின் நான் யார் எனும் ஆன்மத்தேடலில் ஈடுபட்டு ஞானம் பெறும் மார்க்கத்தில் செல்வது வானப்ரஸ்தம் எனப்படுகிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு.,எனும் நிலையை அடைவதே பாரத தாயினுடைய புதல்வனின் குறிக்கோள். ஐம்புலன்களுக்கும்சுகமளிக்கும் விதத்தில் படைக்கப் பெற்றிருக்கும் இவ்வுலக சுகங்களை தக்க துனையான மனையாளோடு மகிழ்ந்து வாழவேண்டும்.(எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந் நாடே _பாரதியார்) அனுபவித்து வாழ்ந்து நன் மக்கட் பேற்றை அடைவது

    “ஈன்று புறந்தறுதல் தாயின் கடனே அவனை
    சான்றோர் ஆக்குதல் தந்தையின் கடனே”

    என்பதே பழந்தமிழர் கோட்பாடு . பாரதம் முழுதும் அனேகமாக அதுவேதான் கோட்பாடு எனலாம். ஆனால் இன்றைய பாரதத்தில் சான்றோனாக்குதலிலும் தாயின் பங்கு சமமாகவே இருக்கிறது..எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை .இந்து சமயம் கூறும் மகத்தான விஷயங்களின் இல்லறனெறி யும் ஒன்று.நான்கு நிலைகளும் மனிதனை படிப்படியாக முன்னேற்றுகின்றது.ஆனால் மஹாபாரதத்தில் வரும் யயாதி போன்றவர்களும் உண்டு.யயாதிக்கு ஒரு சாபத்தின் காரணமாக விரைவிலேயே மூப்பு வந்து அனுபவிக்க ஆசைகளின் வேகம் அடங்கி அமைதியுராமல் எரியும் தீயில் எண்ணெய் வார்த்தார்ப்போல் ஆசைகளின் அனுபவ சுகத்தின் தாகம் இன்னும் அதிகமாயிற்று.யயாதிக்கு உடம்பின் மூப்பு அதிகமாகியும் மனதின் இளமையின் உணர்வுகள் அப்படி இருந்தன.தன்மேல் அனுதாபம் உற்ற தன் இளைய மகனின் இளமையைதான் வாங்கிக்கொண்டு தன் முதுமையின் துன்பங்களை மகனுக்கு அளித்தவர் யயாதி.எவ்வளவுதான் இன்பங்களை அனுபவித்தும் தனக்கு திகட்டவில்லை.என்பதை யும் அதே நேரம் தன் இளவயது மனதுடன் தந்தைக்காக அவரது முதிர்ந்த முதுமையை ஏற்றுக்கொண்டு அதன் இயல்பான வேதனைகளை சகித்துக்கொண்டு வாழும்ன் அன்பு மகனைக் கண்டு வேதனையும் மனம் மாறுதல் அடைந்த யயாதி தன்முதுமையை திருப்பிக் கொடுக்கின்றான்.தவம் புரிந்து நலம் எய்து வனத்தை நோக்கி செல்கிறான்.என்கிறது மஹாபாரதம்.எந்த நிலையிலும் மனித மனத்திற்கு போதும் என்ற நிறையுணர்வே அவனை அடுத்த மேல் நிலைக்கு எடுத்துச் செல்லும். என்பதைபிரம்மச்சரியம் இல்லறம் _வானப்பிரஸ்தம் .சந்யாஸம் என்ற வரிசை அருமையாக அன்பாக கூறுகின்றது.

    இந்திய திருமணங்களின் நோக்கமும் மிக உயர்ந்தது. ஆனால் அது அந்தக் கால கட்டத்தில் எவ்வாறெல்லாம் மறக்கப்பட்டது. அல்லது மறுக்கப்பட்டது என்பதே சிந்தனைக்கு உரியது. அரசர்கள் நிலையில் அரசாங்க விஷயங்களின் பொருட்டு திருமணம். இராஜியங்கள் விஸ்தரிக்க திருமணம். பகை முடிக்கத் திருமணம்.இன்னும் பற்பல காரணங்கள் திருமணத்திற்கு சுயம்வரம் என்பது ஒருவகை.பல நாட்டின் அரசகுமாரர்களை அழைத்து அவர்களைப் பற்றிய விஷயங்களை அரச குமாரிக்கு அதாவது மணமகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்.அவற்றை எல்லாம்கேட்டுக் கொண்ட அரசகுலத்தை சார்ந்த மண்மகள் தனக்கு விருப்பமான மணமகன் தேர்ந்து எடுத்து மாலை சூட்டுவாள் சில நேரம் அங்கு வந்த மற்ற அரச்ர்கள் வெற்றி அடைந்தவனை போருக்கு அழைப்பதும் உண்டு. அவரை வென்ற பிறகே இருவருக்கும் திருமணம் .இம்மாதிரி திருமணமண்டபத்தில் தான் ப்ருதிவிராஜன் சம்யுக்தையை சிறை எடுத்தான்.ஆனால் அந்த செயல் மணமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில்மனமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில் மணமகளின் ஒவியத்தை அனுப்புவார்கள். நாடு நாடாக கொண்டு செல்லும் பொழுது விருப்பப்பட்ட அரசகுமாரி படத்திற்கு மாலையிடுவாள்.சில இடங்களில் அரசனின் வாளை கொண்டு செல்வார்கள்.வாளுக்கு உரிய வீரனை மணக்க விரும்பும் பட்சத்தில் அவனால் அனுப்பப்பட்ட வாளினுக்கு மாலை சூட்டினாலே திருமணம் முடிந்த மாதிரிதான்.அந்நாட்களில் வீரத்திற்கே முதலிடம் தரப்பட்டது .இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.என்பது வள்ளுவர் வாக்கு. இதனை இயற்றிய வள்ளுவர் பெருந்தகை வாசுகி எனும் மங்கை நல்லாளுக்கு மனமுவந்த மணவாழ்வு நடத்தினார் என செவி வழி செய்தியாக பல கதைகள்ருக்கின்றன.அவர் முழுமையான பேணும் உணர்வு கொண்ட பெண்ணையே முன்னிறுத்தி வாழ்க்கைத்துனை நலம் எனும் ஒரு முகவை இயற்றியிருக்கின்றார்.தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன்னை மணந்து கொண்டவனையும் பேணி காப்பாற்றி தகை சான்ற சொற்களையும் காப்பாற்றி இத்தனை கடமைகளையும் ஆற்றியும் புத்துணர்வு கொண்டவளாக திகழும் சக்தி படைத்தவள் பெண் என தெய்வப்புலவர் நினக்கின்றார் போலும்.இயற்கையே பெண்படைப்பை தகமைவாய்ந்ததாக கருதியதால்தான் மக்கட்பேறை அவள் வசம் ஒப்படைத்திருக்கின்றதோ என்னவோ? தமிழகத்தில் சங்கக் காலத்திலேயே காதல் திருமணங்கள் பழக்கத்தில் இருந்தது என தெரியவருகிறது.திருமணத்திற்கு முந்தய காதல் புரிந்த காலம் களவியல் எனவும் திருமணத்திற்கு பிறகு கற்பியல் எனவும் அழைக்கப்படுகிறது.காதல் புரிந்த காலத்திலே தலைவி தலைவனோடு தனிவழி சென்றிட கூடவே தோழியும் சென்றிடுவாள்.தலைவியை வளர்த்த செவிலித்தாயோ தோழியோ திரும்ப அழைத்து வந்து பெற்றோரிடம் சொல்லி திருமணம் முடித்து வைப்பர்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடே பெரும்பாலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால் வள்ளுவப் பெருமானே பொருளின் பால் பிரிவு பரத்தையர் பால் பிரிவு என பிரிவை வகைப்படுத்துகின்றனர்.மனைவியை விட்டு கணவன் காசுக்காக கணவனைவிரிக்கும் மங்கையர்பால் செல்வது எவ்வளவு இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது.கற்புனிலை என்பதை வீரமும் ஈகையுமேப் பெண்களைக் கவரும் ஆற்றல் உள்ள விஷயங்களாக கருதப்பட்டது.புலியை அடக்கி அதன் பல்லை கொண்டு வந்து தாலியாக கட்டுவதும்.மணமகள் வளர்க்கும் காளை மாட்டை அடக்கி அவளை மணப்பதும் பழகத்தில் இருந்திருக்கிறது.(வீரனோடு வீரன் போரிடாமல் மிருகங்களோடு ஆறு அறிவு உள்ள மனிதன் ஏன் போர்புரிந்து அடக்கினான் எனத் தெரியவில்லை.

    நளாயினி எனும் ரிஷிபத்தினி தன் கணவர் அவர் ஆசை பட்ட பெண்ணின் வீட்டிற்கு கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்றாள் என்பது புராணக்கதை. அவள் சூரியனையே ஒரு நாள் உதிக்காதவாறு தடுத்து நிறுத்தும் வாக்கு பலம் உள்ளவளாக சித்தரிக்கப்படுகிறார். வள்ளுவரின் தெய்வத் தொழா(அல்)கொழுநன் தொழுதெழுவாள்,பெய்யெனப் பெய்யும் மழை.தன்னைப் படைத்த தெய்வத்தையே இரண்டாம் இடத்திலும் ,தன் கணவனாக மணந்தவனை முதல் இடத்திலும் வைத்துப்பார்ப்பவள் நல்ல மனைவி என்றும் அவள் பெய்யென பெய்யும் மழை என்று அவள் சொல்வாக்கு குறித்து கூறுகிறார் வள்ளுவர்.பெண்ணை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி வைத்து புகழ்கின்றார்.

    இன்னும்கூட சில கதைகள் உண்டு `தவ வலிமையில் ஒரு கொக்கை எரித்து விட்ட ஒரு முனிவர் பிட்சை வேண்டி ஒரு இல்லத்தின் முன் நிற்கின்றார். சற்றே தாமதித்து வந்த இல்லத்தரசியைக் கண்டு கோபத்துடன் கடுமையான நோக்குடன் நோக்க அந்த மனைக்குரியவள் கொக்கென்று நினனைத்தாயோ கொங்கணவா” என வினவ முனிவர் அதிர்ச்சி அடைகின்றார்.வனத்தில் தவம் செய்து முனிவர் பெற்ற சக்தியை இல்லத்தில் தனக்குறிய கடமைகளை சகிப்புத்தன்மையுடன் செவ்வனே செய்யும் இல்லாலும்பெறுகிறாள் என்பது நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது. ஆனால் பெண்னின் விருப்பம் எனன?ஆணைக் குறித்தே அனைத்து விருப்பங்களும் கூறப்படுகின்றன.அதற்கு அவனுக்கு வசதியாக சகித்துக் கொண்டு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து வாழ்கிறாள்.பார்வைக்குப் புலப்படாமல்வனங்களுக்கும் மலைகளின் இடையே சலசலத்து ஒடி நதிபோன்றது தூய இல்லறம் .ஒருவர் பால் ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டு இவரோடு சேர்ந்து வாழ்வேண்டும் என்பதற்காக அவளும் அவரும் அன்புக்கொண்டு மனதிற்காக நடக்கும் அரிய மணங்களின் ஒன்றாக திருமணங்கள் நிகழ்ந்ததாக ரிஷிகள் ரிஷிபத்தினிகள் என அழைக்கப்படும் இவர்கள் வனத்தில் நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து அதில் வாழ்ந்தனர். காயும் கனியும் உண்ணும் உணவு.

    மலர்களே மனம் கவரும் அணிகலன்கள, மக்கட் பேறு வேண்டினால் மட்டுமே அதற்குறிய வாழ்வு.மற்ற காலங்களில் எல்லாம் இறையை தொழுவதும் இலக்கிய பணியுமே. அற நூல்களை அறியாப்பிள்ளைகளுக்கும் புகட்டுவதுமே ஆகும்.அங்கு ஆடம்பர மாளிகைகள் இல்லை .படோடபமான ஆடை ஆபரணங்கள் இல்லை. சமாதானமும் அமைதியும் ஆட்சி புரிந்தன. புலியும் மானும் ஒர் துறையில் நீர் அருந்தி தாகம் தீர்த்தன.இங்கேயே பற்பல அரசரின் அன்பை அடைந்த ஜயதேவர் அரண்மனை வாசம் கிட்டியும் தன் மனைவி பத்மாவதி ஆஸ்ரம வாசத்தையே விரும்பி சென்றுவிட ,ஜயதேவர் அரண்மனையைத் துறந்து அன்பு மனைவியுடன் தங்களுக்கு இயல்பான ஆஸ்ரம வாசத்தையே தொடர்ந்தனர்.ஜயதேவர் பத்மாவதி போன்ற தெய்வீக தம்பதிகளின் படைப்பினை கீதகோவிந்தம் எனும் அஷ்டபதி ச்ருங்காரகாவியமாக மலர்ந்து மணம் வீசுகிறது.ஆசாரியார்களின் மகா இலக்கியங்களுக்கு உரை எழுதுதல் போன்ற இலக்கிய பணிகள் இனிது நடைபெறும்..தங்கள் வாழ்நாள் முழுதும் இது போன்ற பணிக்கே அர்ப்பணித்த ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் உண்டு.பரசுராமனின் தந்தை ஜமதக்கனி முனிவர் ,தமது பத்தினி வாளில்சென்ற கந்தர்வனின் அழகை வியந்து ரசித்தாள்.தான் ஈடுபட்டிருந்த பணியில் கவனம் குறைந்தாள்.அதனால் அந்த பணிகுறைவு பட்டது என்பதற்காக தன் மகன் மூலமே மனைவியை கடுமையாக கண்டித்தார் என்றும் அறிகிறோம். கெளதம முனிவர் தன் பத்தினி அகல்யாவோட வாழும் காலத்தில் இந்திரன் அகல்யை மீதுகொண்ட மையலால் கெளதம முனிவரின் உருவில்வந்து ஏமாற்றுகிறான்.ஏமாந்த அகல்யாவை முனிவர் சினத்துடன் சபிக்கின்றார்.வந்தது யார் ?தன் பதியா அந்நியனா என அறியும் உள்ளுணர்வு இல்லாத நீ கல்லாக கடவாய் என்று சபித்தார்.

    ஸ்ரீராமனின் பாதம் பட்டு ஜடமாகக் கிடந்த அகலிகை மீண்டும் பெண் ஆனாள்.அவளின் தண்டனைக்காலம் முடிந்ததும் முனிவரும் அவளை ஏற்கின்றார்.அரச குமாரிகள் கூட முனிவரை மணந்தனர் அகத்திய முனிவரின் பத்தினி லோப முத்ரா அரச குமாரி ஆவார் .அத்திரி மகரிஷி அனுசூயா தேவி வசிஷ்டர் அருந்ததி போன்ற ரிஷிகள் தார்மீக இல்லறம் அமைதியான வாழ்விற்கு எடுத்துக்காட்டல்லவா? தான் ஏற்றுக் கொண்ட இலக்கியப் பணி முடிந்த அன்று முனிவர் இவ்வுலக நினைவில் இருக்கும் பொழுது ,ஒரு முதிய மாது தனக்குப் பணிவிடைகள் செய்வதப் பார்த்தார். தான் எழுதிய ஏடுகளை பாதுகாத்து எடுத்து வைக்கும் அவளைக் கண்டு வியப்புற்றவராக ,நீங்கள் யாரம்மா என வினவுகின்றார்.அவளோ மெளனமாகவே நின்றாள். மறுபடியும்முனிவர் வினவ அந்த அம்மையார் சுவாமி நான் உங்கள் பத்தினி ஆவேன் என்கின்றார்.வியப்பும் அதிர்ச்சியும் உற்ற முனிவர் நினைத்துப் பார்த்தார். தாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் மணந்துக் கொண்ட இளம் மனைவியே இவளாவாள்.தாம் புத்தகத்திற்கு உரை எழுத ஆரம்ப காலத்தில் அவள் இருந்த இளமைத் தோற்றம் நினைவில் வந்து நின்றது.தாம் தம் பணியில் ஆழ்ந்து ஈடுபட்டு விட்டதில் ஆண்டுகள் உருண்டோடி இளமை கழிந்துவிட்டது. தமக்குத் தொண்டாற்றி தம் பணிக்கு பெறும் உதவியாக இருந்த சகதர்மினியை மிக்க அன்புடனும் நன்றியுடனும் நோக்கினார்.தாம் எழுதிய உரைக்கும் பாமதி எனும் தன் பத்தினியின் பெயரையே சூட்டினார்.பாரதத்தின் மிகப் பெரிய செல்வமான ஆன்ம ஞானம் என்பது,அதை அடைவதே இந்த பதி பத்தினிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது .இத்தகைய ஒரு இல்லறம் உலகின் வேறு எந்த நாடுகளிலும் இருந்ததா என்பது ஐயத்திற்கு உரியதே ஜனக மன்னரின் சபையில் யாக்ஞ வல்கியர் என்ற முனிவர் சபையில் முதன்மை ஸ்தானத்தில் இருந்தார்.பெரும் ஞானி ராஜரிஷி ஆனதால் ரிஷிகளின் செல்வமான ஆநிரைகள் (பசுக் கூட்டங்கள்) முதலிய செல்வங்கள் அவரிடம் மிகுந்திருந்தது. அவருக்கு துனைவியர் இருவர்.அவரின் இரண்டாவது துனைவியர் மைத்ரேயி என்பவர்.அவர் முனிவருக்கு மனவியாக மட்டும் அன்றி சிஷ்யையாகவும் அமைந்திருந்தார். ஒரு கால் கட்டத்தில் யாக்ஞ வல்கியர் மனம் திரல் குறையை உணர்ந்தார்.அவர் மனம் இருந்த நிலையில் இருந்து இன்னும் உள்ளுக்குள் நான் யார் எனும் ஆன்ம விசாரித்திற்காக அவா உற்றது.ஞான விசாரத்திற்கு தனிமைத் தவமே உற்ற வழி என தீர்மானித்தவராய் அரசபையில் இருந்து பிரிந்து வந்து தன்னிடம் உள்ள செல்வங்களை பத்தினிகளுக்கும் குமாரர்களுக்கும் வழங்கினார்.இரண்டாவது துனைவி மைத்ரேயின் மனம் ஒப்பவில்லை.தன் பதியிடம் கேட்கிறார் .இவைகளை எங்களுக்கு அளித்துவிட்டு தாங்கள் எந்த செல்வத்தை நாடி செல்கின்றீர்கள். என வினவுகின்றாள்.தன் மன நினைவையும் தன் தனிமைத் தவத்தின் அவாவினையும் ரிஷி விளக்கமாக எடுத்துரைக்கின்றார். ஆன்ம ஞானவிழைவு மைத்ரேயிக்கு மிக அதிகமாக இருந்ததால் பதியிடம் இவ்வாறு கூறுகின்றார்.ச்வாமி தாங்கள் எந்த உயரிய செல்வத்தை நாடி செல்கின்றீர்களோ அதை அடையவேஉன் மனமும் விழைகின்றது.அதை நாடியே நானும் தங்களை பின் தொடர்ந்து வருகின்றேன்.

    இந்த வார்த்தைகளைக் கேட்டு ரிஷி மிகவும் மனம் மகிழ்ந்து பிரியே அவ்வாறே ஆகட்டும் என்றாராம். பிருகதாரண்ய உப நிஷத்தில் இந்த பகுதி வருகிறது.பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர் மிகவும் பரந்து விரிந்த மனதை உடையவர் பிறவி ஞானி எப்பொழுதுமே மிக உயரிய நிலையில் நின்ற அவர் மனம் சர்வ சமய சமரச கோட்பாட்டைக் கொண்டது. அவர் இயல்பிலேயே சந்நியாசி. ஆனால் அவர் இல்லறத்தில் இருந்தவர்.மிகச் சிறிய வயதிலேயே ஸ்ரீசாரதா தேவியை அவருக்கு மனம் முடித்திருந்தனர்.ஆனால் அவர்கள் சராசரி சரீர சம்மதப்பட்ட இல்லறம் நடத்தவில்லை.அந்த தெய்வீக தம்பதிகள் இடையே நிகழ்ந்த ஒரு கேள்வி பதில் ஆன்மீக அளவில் சரித்திர புகழ் பெற்றது.சாரதா என் மனம் எப்பொழுதுமே அல்லும் பகலும்துறவிலேயே நிலைப்பெற்றதாக இருக்கின்றது.உனக்கு விருப்பமானால் அதை உதறியாக வேண்டும்.உனக்கு ,உனக்கே சொந்தமான குழந்தை வேண்டுமா?அல்லது ஆயிரக் கணக்கான பிள்ளைகளுக்கு அன்னையாக வேண்டுமா? உன் விருப்பத்தைச் சொல் ஸ்ரீ சாரதையோ மனம் நெகிழ்ந்தவாறு நான் உங்கள் நிலையில் இருந்து உங்களை கீழே இழுக்க ஒரு நாளும் வரவில்லை.அனைவருமே என் குழந்தைகளாக இருக்கட்டும்.எனும் பதில் சொல்லி தன் தெய்வீகத் தன்மையை நிலைநிறுத்தினார்.பரம ஹம்சரின் முதல் சிஷ்யையும் அன்னையரே ஆவார்.இது போன்ற ஞானத்தின் உச்சியில் நின்ற இல்லறத்தை இந்தியாவைத் தவிர எங்கு காண முடியும்.,என்ற சிந்தனயே தோற்றுவிக்கிறது.நல்லவர்கள் இருவர் _பொருத்தமானவர்கள் இருவர் வாழ்வில் இனையும் வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் எவ்வளவு உயர் நிலையை எட்டுகின்றனர்.அப்படிபட்ட தம்பதிகள் நாயன்மார்களிலும் உள்ளனர்.பாரதத்தில் உருவ வழிப்பாட்டு தத்துவத்தில் சிவ சக்தி ஐக்கியம் என்பது ஒரு பெரும் தத்துவம் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும் ஆண் பெண் இணைப்பே உலக இயக்கம்.சராசரியாக வாழந்து பிளைக்குட்டிகளைப் பெற்றெடுத்து எதோ தங்களால் இயன்றவரை வாழ்ந்தோம் என்றில்லாமல் அதே வாழ்வை எவ்வளவு தெய்வீகமாக வாழ்ந்து இறைவனையே அடையலாம்.என பழங்கால நூல்கள் மட்டுமே அல்ல நவீன உலகின் ஞானியான ஓஷோ தன்னுடைய காமத்தில் இருந்து கடவுளுக்கு எனும் புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார்.

    மனப் பக்குவம் வாய்ந்த மனித இனத்தை சேர்ந்த ஆண் பெண்கள் இருவரும் வாழ்வில் இனை சேரும் பொழுது யாரிடம் குணநலன்கள்மிகுதியாக உள்ளதோ .அவர் வழிக்கு மற்றவர் சென்று இனைந்து விட்டால் இனிய இல்லறம் .ஆண் அவ்வாறு இருக்கும் பொழுது பெரும்பான்மையாக பெண்கள் தான் என்பது இல்லாமல்இணைந்து விடுகிறார்கள்.அவ்வாறின்றி பெண் குணநலன்கள் மிக்கவளாக இருந்து விட்டால் ஆண் என்பவன் தான் என்பதாலேயே தாழ்வு மனப்பான்மையுற்று அவளுக்கு ஒத்துழைப்பு தராததோடு,அவளிடம் கடுமையாக நடந்துக் கொள்ளவும் கூட முற்படுகின்றனர் .இருவருமே சமம் என்ற மனப்பான்மை இருவருக்குமே வாய்த்து விட்டால் வாய்த்தது வாழ்வு என்கின்றனர் உள நல ஆராய்ச்சியாளர்கள்.

    பரதம் பயில மிக விரும்பி கிட்டத்தட்ட 20 வயது வரை பரதம் கற்க வாய்ப்பேகிடைக்காமல் பிறகு மிகவும் சிரமப்பட்டு அனுமதி பெற்று அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்து அவரின் ஒத்துழைப்போடு பரதம் பயின்றுதொடர்ந்து பாரதத்தின் சிறந்த நடன மணிகளில் ஒருவராக மிளிர்ந்தார்.அவரால் ஆரம்பிக்கப்பட்ட கலாஷேத்ரா எனும் பள்ளி அடையாரின் ஆலமரம் போல் தழைத்துஅருகு போல் வேரூன்றிபல கலைகளும் ப்யிலும்பண்பாட்டுக் கூட மாக செயல்பட்டு வருகிறது,தமிழ்செல்வி சாரதா நம்பி ஆருரான் அவர்கள் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவருமே மறைமலைஅடிகார குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் ஆவார்கள்.பொருத்தமாக அமைந்தவர்கள்.

    புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும்பொய்மை கொண்ட கலிங்கம் புதிது. என்ற பாரதியின் பொருள் பொதிந்த வார்த்தைகளுக்கு நடமாடும் விளக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள். சாஸ்தரங்களும் சம்பிரதாயங்களும் மிகுந்த பிராமண குலத்தில் பிறந்து பால்ய விவாகம் எனும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டும் விதிஅதோடு விடாமல் கைம்பெணெனும் வெறுமைக்கும் ஆளாக்கியது தாய் வீட்டிற்கே திரும்பிய அச்சிறுமியானவள் வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்குச் செல்லும் தன் தாயோடு சேர்ந்து அவளும் செல்ல த் துவங்கினாள்.அவர்கள் சென்றவீட்டிற்கு உரியவர் நாடகக் கம்பெணி நடத்தி வந்தார்.இந்த சிறுமியின் துறுதுருப்பான முகமும் புத்திசாலித்தனமான செயல்களும் அந்த நாடககம்பெணியின் முதலாளியினுடைய கலைக் கண்களுக்குவிருந்தளித்தன,அதே நேரம் அவள் ந்டிப்புத்துறையில் ஈடுபட சிறுமியின் தாயிடம் திறம்பட பேசி தன்னுடைய நாடகக் கம்பெணியில் நடிக்க அனுமதி வாங்கினார்.நடிப்பில் பிரவேசித்த சிறுமி திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்று திரை உலகிலும் நுழைந்து கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு பெற்றார்.திரைஉலகில் வெற்றிகரமான கதா நாயகியாக இடம் பெற்று புகழ்பெற்ற அந்த நடிகை தானே தயாரிக்கவும் செய்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.அவரின் கலை வாழ்வோடு,இளம் விதவையான அந்த சிறுமியின் வாழ்விலும் மாறுதல் வந்தது .வாய்ப்பு கிடைத்தது. படிபடியாக முன்னேறினார். தான் ஈடுபட்ட திரைத்துறையில்பல விதங்களிலும் தன் திறமையை

    காட்டி புகழ் பெற்றார். அது மட்டுமின்றி தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த வரையே மனந்து நல்லதொரு குடும்பத்தின் தலைவியும் ஆனார். அவர்தான் திரைதுறையில் முதன் முதலில் தயாரிப்பு தொழில் செய்த பெண் தயாரிப்பு நடிகை டி.பி. ராஜலஷ்மி ஆவார்.

    தெய்வீக இசை என்பார்கள் .தன் குரலில் பலரையும் கவர்ந்தவர் இசைக் குயில் திருமதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவர்கள். திரைப்படத்திலும் நடித்த இவர், நடிகை என்ற பெயரைவிட பாடகி என்ற பெயரிலேயே உலக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.பல சிரமங்களைக்கடந்து கல்கி சதாசிவம் அவர்களை துணைவராக அடைந்து அவரின் துனையோடு புகழின் உச்சிக்குசென்றவர்.இசை நிகழ்ச்சியின் மூலம் பல ந்ல்ல காரியங்களுக்கு சேவை புரிந்தும் பல நிறுவணங்களுக்கு பொருள் உதவி அளித்தவர். ஒரு முரை இந்திய பிரதமர் நேரு இவரை நான் வெறும் மந்திரி நீ இசை உலக ராணி என பகழ்ந்து கொளரவித்தார்.செய்யும் தொழிலே தெய்வம் என்று உணர்ந்து அதில் திறமை எனும் செல்வத்தை மிகுதியாகவே பெற்றிருந்தார்.உலக புகழ் வாய்ந்த இவர் குரல் ஒலிக்காத விடுகளே இல்லை.இவரின் வெங்கடேசப்ரபாதமும் விஷ்னு சகஸ்சர நாமமும் ஒலிக்காத வீடுகளே இல்லை.பக்தமீரா என்ற படத்தில் மீராவாகவே வாழ்ந்தவர்.இவரின் குரல் கேட்பவரின் இதயத்தில் ஆன்மீகத்தேடலை உண்டாக்கியவர்.

    அஷ்டாவதான என புகழ் பெற்ற டி.பானுமதியும் சொந்தக் குரலில் பாடி நடித்ததோடு அன்றி படம் தயாரிக்கவும் செய்தார். குதிரை ஏற்றமும் பயின்றவர்.திரை உலகில் ராணி போல் தான் நடந்துக் கொள்வாராம்.கே பி. எஸ். என்று அழைக்கப்பட்டு பெறும் புகழ் பெற்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற தெய்வீக இசைக்கலைஞர். இவரின் கணீர் என்ற குரல் காதுகளின் வழியே சென்று இதயத்தை தொடவல்லது.யாரோடும் துனை சேர்ந்து நடிக்காதவர் .அப்படி நடிப்பதை அடியோடு விரும்பாதவர் அவரின் சொற்களின் உச்சரிப்பும் கம்பீரமும் அவருக்கு மட்டுமே உரித்தானவை
    மகா ஞானி ஓளவையாக நடிக்கும் பாக்யம் பெற்ற மாதரசி ஆவார்.

    சிறு பெண்ணாக இரயிலில் பாடிக் கொண்டிருந்த இவரை குரலின் வளமையை கேட்டு ஏழ்மை நிலையில் இருந்து மீட்டார் .பிற்காலத்தில் இருவரும் தம்பதிகள் ஆனார்கள் என்று இவரின் வாழ்க்கை குறிப்பு கூறுகிறது.மக்களின் மனதில் ஒளவை என்றாலே இவரின் உருவம் தான் தோன்றும்.
    அந்த அளவு அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியவர்.வறுமையின் காரணமாக ரயிலில் பாடி பிழைத்துக் கொண்டிருந்தவர் தன் உழைப்பினாலும் திறமையாலும் அக் காலத்தில் 50-60 வருடங்களுக்கு முன்பே ஊதியமாக லட்சம் வாங்கியவர்.

    ஆந்திர தெலுங்கு நடிகை சிறுமி ஜானகி அவர்கள் சினிமா கதைகளில் வருவதைபோன்ற சம்பவங்களையே சொந்த வாழ்விலும் கண்டவர்.அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.மிகச் சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்கப்பட்டவர்.கணவரோ சிறிதும் பொறுப்பில்லாதவர். மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்ட ஜானகி அவர்கள் குழந்தைகலின் முன்னேற்றத்திற்காக நடிப்புல்கில் பிரவேசித்தவர்.ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி விடுவதற்கே தன் வாழ்கையை தத்தம் செய்திருப்பவர்.தாயாகவே வாழ்ந்து வருகின்றார்.வாழ்வின் பல படிநிலைகளை தன் வாழ்வில் கண்ட திருமதி சௌகார் ஜானகி அவர்கள் . ஒன்றாகவே இருந்த ஒன்று இரண்டாகப் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் பெயர் கொண்டது.மனித குல வளர்ச்சிக்காகவே இந்த பிரிந்தது பின் இணையும் செயல்கள் எல்லாம் மனித குலத்தின் வளர்ச்சியின் பொருட்டு உலகில் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.ஆணும் பெண்ணும் தனித்தனியே வாழ்வதில் நிறைவு இல்லை என சமூக நலன் விரும்புகின்றனர்.

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (3)

    சுலோசனா

    பாரினில் பாரதம்

    பெண்களின் தந்தை பெரியார் – பகுத்தறிவு பகலவன் – தந்தை பெரியார்

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    எலும்பில்லாத புழு பூச்சிகளினால் வெப்பத்தை தாங்க முடியாது.சுருண்டு விடும். அது போன்றுதான் மனித நேயம் எனும் அன்பிலாத முதுகெலும்பில்லாத மனிதர்களை அறக்கடவுள் தண்டிக்கிறார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். சகமனிதர்களை சாதி போன்ற பேதங்களை உண்டாக்கி, தாழ்த்தி அவமானப்படுத்தியதோடு அல்லாமல் தன்னில் பாதியான பெண்ணை சாதி மத பேதமின்றி அடிமைப்படுத்தி வைத்தது பழகிய யானையைக் கொண்டே புதிய யானைகளைப் பழக்கப்படுத்துவது போல மாமியார் நாத்தனார் போன்ற உறவு முறைகளைக் கொண்ட பெண்ணே பெண்ணிற்கு எதிரியானாள்.

    மகன் சகோதரன் என்ற உறவில் உள்ள ஆணுக்கு கொடுமையை கடுமையாகப் போதித்தாள். சில நோய்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டு பலனின்றி பிறகு கடுமையான மருந்தை பிரயோகிப்பார்.அது போல் சமூகத்திற்கு கிடைத்த அரு மருந்து பெரியார்.தன் மனதில் உருவாகும் உஷ்ணமான உண்மைகளை அதன் வெப்பத்தோடு அப்படியே வெளியிட்டார். நாகரீகம் கருதி அதற்கு மேல் பூச்செல்லாம் பூசவில்லை. உச்சி வேளை சூரியனாக உதித்து வந்த கருத்துக்கள் பல சமூக விரோதிகளை உருவாக்கியது.

    பெண்ணடிமை செய்யும் ஆதிக்க மனப்பான்மையாளர்களை அதட்டியது. மூட பழக்கவழக்கங்களினால் பாதிப்பால் நடுங்கிக் கொண்டிருந்த பெண் இனத்திற்கு அந்த சிந்தனை கதிர்கள் இதமான வெப்பமளித்து நடுக்கத்தை விரட்டியது. இவர் சிந்தனையின் சிகரமாகத் திகழ்ந்தவர். அவர் கொண்ட கொள்கைகளின் பூரண செயல் வடிவமாகத் திகழ்ந்தார். சில சிறந்த சிந்தனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு சீர்திருத்தங்களை செம்மையாக செயல் படுத்தினர். தன் குடும்பத்தோடு தேச சேவையில் ஈடுபட்டவர். கள்ளுக்கடை போராட்டத்தின் போது தன் சகோதரியோடும் துணைவி நாகம்மையோடும் அந்த போர்க்களத்தில் ஈடுபட்ட தியாக மகாத்மா காந்திக்கும் கூட அந்த பெண்கள் சேவை தெரிந்திருந்தது. அவர்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    பெண்களின் சரீர உடல் அழகைப் புகழ்ந்து பேசி அவர்களை மூளை சலவை செய்யும் ஆண்களை கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். அழகு பதுமைகள் தங்களின் சொத்துக்களுக்கு தங்களுடைய வாரிசுகளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக உபயோகிக்கும் ஆண் திகழ்வதாகக் கூறுகின்றார். தங்களின் சுக அனுபவத்திற்காகவே பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஆண் என்பவன் கருதுகின்றான்.அலங்காரப் பதுமைகளாக பாதுகாக்கின்றான். சொந்த உபயோகத்திற்கு மட்டுமே என்று வைத்து கல்யாணம் என்ற பெயரில் அழகிய மாளிகைகளில் அடக்கி வைத்திருக்கின்றனர் என்று செல்வந்தர்களைப் பற்றி கிளியை தங்கக் கூண்டில் வைத்து பால் பழம் தருவது போல.பணம் படைத்தவர்களின் வாழ்வினில் தான் ஆணாகப் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்.,என்று இருமாப்புடன் வாயினால் கூறாமல் செயல் மூலம் செய்து காட்டுவது போல் வாழ்கின்றான், என்கிறார்.

    கலைத்திறமை வாய்ந்த பெண்கள் தங்கள் கலைத்திறனால் மட்டும் இன்றி பெண் என்ற முறையிலும் ஆணை மகிழ்விக்க வேண்டிய ஒரு சூழ்நிலை பெண் சமூகத்தில் ஒரு நோய் போல் தோன்றியது. ஜமீன்தாரர்கள் மிட்டா, மிராசுதார்கள் , பணம் படைத்த தனவான்கள் கொண்ட ஒரு கூட்டம் இப்படிப்பட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை உருவாக்கியது. இந்த மகிழ்விக்கும் கூட்டத்தில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்களும் இருந்தனர். சிறிதும் விருப்பம் இன்றி தாய் தந்தை தமக்கை இவர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு இந்த வாழ்வில் தள்ளப்பட்டவர்களும் இருந்தனர். இதிலும் கூட சில பெண்கள் ஒரே நபருடன் வாழ்ந்தனர். இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

    பெண்கள் எளிமையுடன் வாழப் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானால் பணமுள்ள ஆணுக்கு பலியாக வேண்டிவரும் எனும் உண்மையை ஒளிக்காமல் ஒசையுடன் கூறுகிறார். உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் அலங்கோல அலங்காரம் மற்ற ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அலங்காரத்தில் பெண்களின் கவனம் செல்லக்கூடாது. உன் முகம் நிலவு போல் உன் ஸ்பரிசம் மலர் போல் மிருதுவானது. மருண்டு விழிக்கும் உன் விழிகள் மான் போல அஞ்சி அஞ்சி அல்லது சஞ்சி சஞ்சி நடக்கும் உன் நடை அன்னம் போல என்றெல்லாம் ஒரு ஆணால் புகழப் பட வேண்டும் என்பதற்காகத்தானே.மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ எனும் நாவலில் வரும் கதா நாயகி மங்கை,வீட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படிப்பவள் அவளை அந்த வீட்டுத் தலைவரின் மகன் காதலிக்கின்றான்.தன்னிடம் காதலை வெளிப்படுத்தி மனம் புரிய வேண்டுபவரிடம் மங்கை சொல்கின்றாள்

    ஐயா நீங்கள் எதோ உணர்வில் உந்தப்பட்டு என்னிடம் கேட்கின்றீர்கள். நான் கல்லூரியில் படித்தாலும் என் தாய்க்கு உதவியாக என் படிப்பிற்காகவும் உழைத்து உழைத்து உரமேறிவிட்ட தன் மென்மையை இழந்துவிட்ட என் கைகளைத் தொட்டுப் பாருங்கள்.என்னிடம் நீங்கள் கொண்ட காதல் சில வருடங்கள் கூட நீடிக்காது. என்னிடம் நீங்கள் மென்மையும் நளினத்தையும் நாசூக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்களுக்கேற்ற மனைவியை தேர்த்தெடுங்கள் என்று கூறி முதலில் மறுக்கிறாள்.

    பெரியார் ,சுயமரியாதையைஇழ்ந்து பின் சுகப்படும் சோம்பேறியாக இராதீர்கள், நீண்ட கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். பட்டு போன்ற விலையுயர்ந்த புடவைகளை அணிந்து கொண்டு அலையாதீர்கள். உடுத்த சுலபமான உழைக்க வசதியான ஆடைகளையே அணியப்பழகுங்கள்.

    பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்ற மனப்போக்கை விடுங்கள்.ஆணுக்கு நிகராக உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்துங்கள்.

    இவ்வாறெல்லாம் உரமூட்டி பேசுபவர் பால்ய விவாகம் இளம் விதவைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும்பொழுது தந்தை பெரியார் பிறக்கின்றார்.

    ஆனின் சுய நலத்தின் உச்ச கட்டமே கற்பு என்ற நிலை.கற்பு என்ற ஒரு ஒழுக்க நிலை ஆண் பெண் என்ற உறவில் மட்டும் அன்றி சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இருக்க வேண்டும். என ஒழுக்கத்தில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருகின்றார்.

    தந்தை பெரியார் காட்டும் பாதையில் தயக்கமின்றி நடைபோடும் பெண் மக்கள் (மகள்கள்) எவ்வளவு பெயர்கள் என்று தெரியவரும்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள்.தந்தை பெரியார் சொற்களும் மந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சொற்களாகும்.அந்த சக்தியின் ஒளியை தாங்க முடியாமல் கண்கள் கூசி கண்களை தாழ்த்திக் கொண்டவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை.

    ஒரு நாடு முழுவதற்குமான சமுதாய ன்நெறிகள் சமய நெறிமுறைகள் – நெறிமுறைகள் அற்றவைகள் பண்பட்ட பழக்கவழக்கங்கள் பண்பாடற்ற புண்பட்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே கலந்தே இருந்து வருகின்றன. இந்த நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் அனைத்திற்குமே தங்களால் இயன்றவரை அவைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை பின் பற்றும் மக்களே எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

    அடுத்து சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்

    “எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பரிது.

    என்ற தமிழ் திருமறையின் குறளின் பொருள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் அறிவின் பாற்பட்ட மனதிற்கு ஏற்ற வகையில் இருப்பவைகளை மட்டுமே பின்பற்றுவர்.தங்களின் அறிவிற்க்கும் மனச்சான்றிற்கும் ஏற்பில்லாவற்றை விட்டுவிடுவார்கள் .முதலில் குறிக்கபட்டவர்களை விடவும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. மூடப்பழக்கங்களைபின்பற்றுபவர்கள் அறிந்தோ அறியாமலோதெரிந்தோதெரியாமலோ பலர் மனதை புண்படுத்தி விடுகின்றனர்.இந்த வேதனைக்கு ஆளானோர்கள,பெரும்பாலும் பெண்களே. இதற்கு பலி ஆனவர்கள் ஆகிக் கொண்டிருப்போர்கள்,ஆகப்போகின்றவர்கள் யார் என்றால் 10 சதவீதம் ஆண்கள் மீதி 90 சதவீதம் பெண்களே.ஐந்து மாபெரும் வீரர்களானா ஐவரை கணவர்களாகத் கொண்ட பாஞ்சாலி .ஞானியரும் சாண்றோர்களும் வீரர்களும் கூடியுள்ள சபையில் ஒரு ஆணால் துகில் உரியப்பட்டாள்.இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.மன்னன் ஜனகனின் மகள் ஸ்ரீராமனின் ப்ரிய பத்தினியான சீதா பிராட்டி கணவனோடும் காவலாக கானகம் வந்த இளைய பெருமாள் இலக்குவனோடும் கானகம் சென்றது ஒரு முறை. இரண்டாவது முறை-முறையற்ற முறையில் தான் கானகத்தில் தனித்து விடப்படபோகின்றோம் என்பதை அறியாமல் விடப்படுகின்றனர்.தெய்வமே அவதாரம் எடுத்து வந்தது என்றபோதே மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இப்படி இருக்கும் போது கீழ்சாதிகள் என அழைக்கப்பட்ட பற்பல சாதிகளில் பிறந்தப்பெண்களின் அவல நிலையைப் படிக்கும் பொழுதேப்மனம் பதறுகிறது.பார்த்தாலே பாவம் தொட்டாலே தீட்டு என்று மட்டும் இல்லாமல் நடைமுறை பழக்கவழக்கங்களில். எத்தனையோ வேறுபாடுகள்.கீழ் சாதியை சேர்ந்த பெண்கள் சிறுமியானாலும் சரி பருவப் பெண்னாலும் சரி முதிர்ந்த மூத்த மூதாட்டியானாலும் சரி ஒரு சரியில்லாதா நடைமுறைக் கொடுமை . மார்பை மறைத்து மேலாடை அணிதல் கூடாது. இடுப்பில் மட்டும் துணி.இந்த நிலையில் அண்ணிய ஆடவர் முன் கூட அரை நிர்வாணம். கீழ்சாதி தகப்பனுக்கு பிறந்து கீழ்சாதி கணவனோடு வாழ்ந்து கீழ்சாதி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு பெண்———-ஆணால் அவள் சற்றேனும் அழகு படைத்தவளானால் ,மிக உயர்ந்த சாதி என அழைக்கப்படும் சாதிகளில் பிறந்த காமுகனின் கண்ணில் பட்டுவிட்டால் அப்பொழுது அந்த கீழ்சாதி இளம் பெண்கள் காமுகனான கயவனான் அந்த கண்ணியவானுக்கு அந்த சமயத்திற்கு மட்டும் தீண்டதக்கவர்களாகி விடுவார்கள் இதில் அந்த பெண்களின் விருப்ப்பத்தை எல்லாம் பற்றி கவலையே படமாட்டார்கள். கீழ்சாதி ஆனாலும் அவளுக்கு அந்த உயர் சாதிக்காரன் அந்நியன் தானே .எவனோ ஒரு அந்நியனால் உடலும் மனமும் புண்பட்டு எந்த அளவிற்கு எத்தனை பெண்கள் துடித்தனரோ.

    உயர்ந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களில் சிலரோ அல்லது பலரோ தீண்டாமை இனத்தை சேர்ந்த இளம் பெண்களை தீண்டி நாங்கள் இன்புற்று அவர்களை துன்புறுத்தியது என்பதுசரித்திரங்களில் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்றும் கூட சில இடங்களில் இந்த தாழ்ந்த சாதியினர் கொத்தடிமைகளாகப் பட்டு ஆண் பெண் சிறுவர் அடங்களாக அநியாய கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த செய்திகள்.தொலைகாட்த்சியிலும் வருகின்றன.

    ஒரு பெண் கணவனை இழ்ந்துவிட்டால்,பூவைவிடவும் மென்மையான மனம் படைத்த பூவைக்கு தெய்வப்பிரசாதமான பூ பிரசாதமாக கிடைப்பதில்லை.மறுக்கப்படுகிறது.இந்த அநாகரிமான நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே.தன் கையே ,தன் கண்களைக் குத்துவது போல் பெண்ணெ பெண்ணுக்கு அவமரியாதை செய்து வருகின்றார்கள்.காலங்காலமாக வந்த பழக்கங்களுக்கு கீழ்படிகின்றோம்.

    மனைவியை இழந்த ஆண்களுக்கு இந்த மரியாதைகள் எல்லாம் கிடையாது. அவன் மீண்டும் புதுமாப்பிள்ளையாக வேறு ஆகி விடுகிறான்.இதற்கு சமூகத்தீன் அங்கீகாரமும் முழு அளவில் கிடைத்துவிடுகிறது.

    எந்த விதமான துன்பம் என்றாலும்,காலப் போக்கில் அதன் தீவிரம் குறைந்து இயல்பான வாழ்விற்கு திரும்புவது என்பது மனித இயல்பாக இருக்கிறது.அந்த வகையில் பார்த்தாலும்கூட பெண் அப்படி எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுவிட முடியாது. பெரிய பெரிய நகரங்களில் நன்கு படித்து வேலை பார்க்கும் பெண்கள் ஒரு வேளை இந்த அவமதிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் தப்பலாமோ என்னவோ ,சிறிய நகரங்களில் கிராமங்களில் வசிப்போருக்கு இன்றும் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டிதான் உள்ளது.இதிலும் இன்னும் ஒரு அறிவீனம் என்ன வென்றால் நியானமான காரணத்தினால் நீண்ட காலம் தாம்பத்திய வாழ்வில் இருந்து விடுபட்டு அல்லது விடுவிக்கப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்து வரு பெண்களுக்கு ம் அந்த விதி விடுவதில்லை. 7 ஆண்டுகள் பிரிந்திருந்தால் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அந்த பந்தம் தானாகவே முறிந்துவிடும்.இந்த விதியே மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ப்ந்தம் சூழ்நிலை முதலிய பல தவிர்க்கமுடியாத பல காரணங்களால்மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சட்டங்களாலும் மனி தர்மத்தினாலும் மனித நேயத்தாலும் விடுவிக்கப்படுகின்றன.இந்நிலை சிலசமயம் அரிதாக ஆண்களுக்கும் கூட ஏற்படுகின்றது.இந்த உண்மையை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.ஆனால் நடைமுறையில் மிக மிக அரிது.எங்கோ ஆயிரத்தில் ஒன்று லஷ்ஷத்தில் ஒன்றுதான்,ஆணுக்கு அசம்பாவிதம் என்பது.அடுத்து விதவைகள் மறுமனம்,சும்மர் 50 வருடங்களுக்கு முன்னரும் சமீபத்திலும் கூட அடேயப்பா அவளுக்கென்ன கொழுப்பு?இன்னொரு கல்யாணம்,பொம்பலைக்கு கூட இன்னொரு ஆம்பளை கேக்குது பாரப்பா,என கேவலமான பொருளில் எள்ளி நகையாடுகின்றனர்.

    பெரும்பாலும் தனியாகவாழ இயலாத உலகம் இதில் ஒருவருக்கொருவர்துனையாக கைபிடித்துக்கொண்டு– ஒருவருக்கு இடரும் பொழுது ஒருவர் பாதுகாப்பாக கை கொடுக்க இதற்கெல்லாம் தானே துணை என்பது.

    “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே

    இங்கே வேரில் பழுத்த பலா”

    என பாடிய பாரதி தாசன் வார்த்தை எவ்வளவு பொருள் பதித்தவை.இந்த விஷயத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தே காட்டினார்.உலகறிந்த விவரம் இது.தனக்குத் தொண்டாற்றி வந்த மணியம்மை எனும் கணவனை இழந்த பெண்ணை தனக்கு த் துணையாகக் கொண்டு அவருக்கு பகுத்தறிவும் அறிவுக் கண்களாகவும் திகழ்கின்றார்.ஒரு வகையில் பார்த்தால் கணவனின் துனையை இழந்த பெண்கள் அனைவருக்குமே மறுபடியும் திருமணம் தான் தீர்வு என்பது முடிவான முடிவல்ல. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு உதவி சமூகத்தில் அந்தஸ்து எந்த விதத்திலும் குறைவு படாமல் பார்த்துக் கொள்வது நியாயத்தின் அடிபடையில் அவரவர் வாழ விரும்பியபடி வாழலாம் என்பதற்கான சூழல் வேண்டும்.பொருத்தமான மனமக்களாக அமைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் அனேகமாக இன்னோரு ஆடவரோடு இல்வாழ்வில் ஈடுபடவிரும்புவதில்லை .விரும்பினால் மற்றொரு வாழ்வை அமைத்துக் கொள்வது அது அவரவர் சொந்த விருப்பம்.குடிகார கொடுமையான பெண்பித்தனான நடவடிக்கை உடைய ஆண்கள் இந்த வித பழக்கங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட கடூரமான வார்த்தைகளை மனைவி மேல் அக்னி மழை போல் கொட்டும் ஆடவர்களும் உள்ளனர்.இதற்கு சில சமயம் பெண்களே உடந்தை .இந்த வகையான வார்த்தைகளால் கணவனை வாட்டும் பெண்களகூட உள்ளனர்.எங்கோஒரிருவர்கள் படாதபாடுபட்டு ஒரு வழியாக கனவன் என்ற கொடுமை யில் தப்பி அப்பா ப்ட்டதே போதும் ,இன்னொரு கல்யாணமா ? கனவில் கூட வேண்டாம் என்று முடிவெடுத்து

    தெனாலிராமன் வளர்த்த சூடு கண்ட பூனை போல் வாழ பயந்து விலகி ஒடுபவர்களும் இருப்பது சகஜமே .தேசிய மகாகவி பாரதியார் அவர்கள் தெளிவாகவும் தீரத்துடனும் பேசுகின்றார். பொதுவாகவே விதவை விவாகம் என்பது சான்றோர் நூறு சதவீதம் ஆமோதிக்கப்படவில்லை .என்பதே வருந்ததக்க உண்மை. இல் வாழ்வை ஏதொ ஒருவகையில் இழந்து விட்ட பெண்கள்,தியாக குணம் கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன் வர வேண்டும். என்றே எதிர்பார்த்தனர்.

    ஆனால் பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார். தீர்க்கமாக தீர்மானமாகவீர முழக்கமிட்டார். என்றே சொல்லவேண்டும்.ம்காகவி பாரதியார் அவர்கள் “நான் ஸ்வாமி விவேகானந்தரையும் மகாத்மா காந்தி அவர்களையும் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன்.

    ஆனால் விதவைகளின் மறுமனம் பற்றிய கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றேன்.என தீரத்துடன்தன் கருத்தை வெளியிடுகிறார்.(இந்த தகவல் சொல்லின் செல்வர் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவில்

    கிடத்ததாகும்.)

    மஹாகவி பாரதியார் ஒரு மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதா தேவியை சந்தித்து பெண்களை ஆண்கள் நடத்துவதைப் பற்றியும் நடத்தவேண்டிய முறைப்பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்து அது பற்றி சிந்தித்து பிறகே அந்த கருத்துக்களின் உண்மையை மனசாட்சியுடைய உந்துதலன் அறிந்து தெளிந்த பிறகே வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி என தன்னுடைய மகிழ்வான சுதந்திர வெளிப்பாட்டை கும்மியடித்து கொண்டாடுகிறார் என்கிறார்.

    இதில் இருந்து நாம் உணர்வது வஞ்சனையின்றி ,பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் வாழ நேர்மையே உருவானவளாக ,உண்மையே உரைப்பவளாக ஞானத்தின் செல்வியாக கலைமகளின் மகளாக வருகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்.சுத்தானந்த பாரதி கண்ட புதுமைப்பெண்
    தங்கதட்டான் உதவி யின்றி ,சாய மினுக்கின்றி ,ஒப்பனைகள் ஏதுமின்றி சுதந்திரமே வடிவாக , ஞானமே அழகாக ஒப்பில்லாக்கன்னிஅவள் உலக வலம் வ்ருகின்றாள்.இந்தியப் பெண்கள் அனைவரிடமுமே இந்த குண நலன் களையே இன்றும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.சமூக நல ஆர்வலரான சான்றோர்கள் அப்படியின்றி இன்றுள்ள ஆபாசமான சுவரொட்டிகள் அருவருப்பான காட்சிகள் கொண்ட அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் நாற்படையாக நடந்தால் —-

    நீச்சல் தெரிந்தவர்க்கு கூட ஆற்றின் போக்கோடு நீச்சல் அடிப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் நீச்சல் தெரிந்தவருமே கூட எதிர் நீச்சல் அடிப்பது சிரமமே .இதில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளினால் சிலர் அப்படியும் அமைந்தும் அதயும் சமாளித்து எதிர் கரைஏறிய சிலர் அந்தந்த காலகட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்ப காலத்தின் கட்டாயத்தின் பிடியில் சிக்கித் திணரி சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆயுதங்களோடுபோருக்கு வரும் உறவினர்களின் தாக்குதல்களுக்கு நடுவே, நியாயமான விருப்பங்களுடன் நேர்மையான நடத்தையும் கூடவே இவர்களைப் படைத்த இறைவன் தானே என்னையும் படைத்தான் என்ற திட நம்பிக்கைதுனைவர போர்புரிகின்றனர்.முட்புதர்களுக்கு நடுவே வெற்றுக் கால்களோடு நடந்து ஒற்றையடி பாதை ஒன்று உருவாக அதில் பாதுகை அணிந்த பல பாதங்கள் நடந்து நடந்துபாதை சிறிது சீர்பட்டது,அகலப்பட்டது.அப் பாதையில் இன்று வண்டிகள் செல்ல தொடங்கி விட்டன,

    முட்புதரில் வெற்றுக்காலோடு நடக்கத் தொடங்கியவர் டாக்டர் சுப்பு லட்சுமி ரெட்டி .இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவம் படிப்பதற்காக புதுக்கோட்டை மன்னர் வரை சென்று அழுது தொழுது போராடி அனுமதி பெற்றார்.ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்க அனுமதியின்றி திரையிட்டு வாசலுக்கு அருகில் அமர்ந்த முதல் பெண்மணி மருத்துவரான டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி.

    தொடரும்

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (2)

    இதிகாசமும்- சரித்திரமும் காட்டும் பெண்மை

    பாரினில் பாரதம்

    வேதசாரமான இதிகாச புராணங்களில் வரும் பெண்மணிகளையே இந்திய பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாக வழிகாட்டுகின்றனர். இந்து சமயம் சார்ந்தோர் இராமாயணமும் மகாபாரதமுமே இந்தியாவின் இந்து மதத்தின் பெருங்காவியங்கள். சீதா தேவியும் கெளசல்யா சுமித்திரை கைகேயி, ஊர்மிளா, அனுசூயா அகலிகை, பக்த சபரி முதலியோர் வனத்தில் வசித்து தவ வாழ்வு வாழ்ந்தவர்கள். சபரி அம்மையைத் தவிர்த்து ஏனையோர் ரிஷி பத்தினிகள். இராமனைப் பெற்ற கவுசல்யா தேவி பதிபக்தி உடையவர்களாகவும் புத்திர பாசம் மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

    இலக்குவனின் தாய் சுமித்திரை பெரும் ஞானியாக இருக்கின்றாள். வனவாசம் செல்லும் இராமனைப் பின் தொடரும் தன் மகனுக்கு அவள் கூறும் அறிவுரைகள் சமயச் சொற்பொழிவாளர்களால் இன்றும் பேசப்படுகின்றது. இராமனே உன் தந்தை, சீதையே உன் தாய். அவர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்றால் அது உன்னைக் கடந்தே அவர்களை அணுக இயலுமாக இருத்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் கடமையின் கண்ணியத்துடன் பேசுகிறாள்.

    சீதாதேவி தன் அன்பிற்குரிய ராமரை வனவாசத்தில் 10 மாதங்கள் பிரிந்திருந்தார். அவளின் சகோதரிகள் ஊர்மிளை சுருதி கீர்த்தி மாண்டவி முதலியோர் 14 வருடங்கள் தம் தம் கணவரை பிரிந்தே வாழ்ந்தனர். ஊர்மிளையாவது இரண்டொரு இலக்கிய கர்த்தாக்களால் பரிவுடன் பேசப்படுகின்றாள். மற்ற இருவரின் பிரிவு அனேகமாக பேசக்கூட படவில்லை எனத் தோன்றுகிறது. போற்றி புகழப்பட்ட பெண்களிடையே பழி சுமந்த பெண் கைகேயி காவியம் நகர வேண்டும் இராமர் கானகம் சென்றே ஆக வேண்டுமென்ற சூழலில் அவள் அதை செய்திருக்கலாம். கூனி என்ற குண சித்திர கைகேயின் செயலில் இருக்கிறது.

    இராமர் வாயிலாக நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை என்று ஆரம்பித்து விதியின் பிழை என்கின்றனர். கெளதம முனிவரின் பத்தினி அகலிகை. சரீர வனப்பு மிக்கவள். தேவேந்திரனின் சூழ்ச்சிக்கு இரையாகி முனிவரின் சாபம் பெற்றவள். இராமனின் பாதத்துளி படும்வரை கல்லாக இறுகிப்போய் கிடந்தவள் இன்றும் சமயம் சார்ந்த சொற்பொழிவுகளிலும், பட்டிமன்றங்களிலும் இவளின் வாழ்வு பேசப்படுகின்றது. தவறுக்கான தண்டணை அனுபவித்ததுடன் முனிவர் மறுபடியும் அவளை மனமாற ஏற்கிறார்.இந்திரனின் அருகாமையில் இவன் என் பதி அல்ல என உள்ளுணர்வு உணர்த்தாமல் ஜடமாக இருந்ததால் உணர்வற்று கல்லாகவே கிடக்க குமிடிமுனி புங்கவர் தண்டனை தந்தாரோ எனத் தோன்றுகிறது. ஆனாலும் தண்டனைக் காலம் முடிந்தபின் அகலிகையை தன் பத்தினியாகவே ஏற்றுக் கொண்டது பழமையான காவியத்தில் புதுமையான முற்போக்கு பெண்மையை போற்றுதலைக் காண்கின்றோம்.

    காவியத்தில் பெண்மையின் மாண்பு பெற்ற மண்டோதரி ஏழு பத்தினியரில் ஒருவள் எனும் சிறப்பை பெற்றவள். சிறந்த சிவ பக்தனை கலை நுணுக்கம் மிக்க வீரனை கணவனாகப் பெற்றவள்.கண்ணியமற்ற கணவனின் செய்கையால் துன்ப உணர்வையே அடைந்தாள். அவள்தான் வணங்கத்தக்க ஏழு சிறந்த பத்தினியரில் ஒருவராக வைத்து சிறப்பிக்கப்பட்டிருக்கின்றாள்.

    பக்த சபரி வேட்டுவக் குலத்தில் பிறந்த பெண்மணி. பிறந்ததில் இருந்தே உலகின் மாயைகள் ஒன்றிலும் சிக்கிக்கொள்ளாமல் ஆன்மீக ஆன்ந்தத்திலேயே திளைத்தவள் பக்த சபரி. இயல்பாகவே இந்த நிலை அம்மையாருக்கு அமைந்திருந்தது. இளம் வயது முதலே குருவினுடைய பணிவிடைகளிலேயே வாழ்ந்தவர். குருவின் சொற்படியே இராமரின் வருகைக்காகவே தவமியற்றி இராமரின் தரிசனம் பெற்று நற்பேறு பெற்றவரானார். எக் குடியில் பிறப்பினும் அப்பிறவியிலேயே இறைவனை அடைய தடையேதும் இல்லை என பெண்குலத்தின் சார்பாக நிரூபித்தவர் இவ்வம்மையார். வியாச முனிவரால் சொல்லப்பட்டு ‘ஓங்காரமூர்த்தியான’விக்னேஷ்வரரால் எழுதப் பெற்ற சிறப்பை உடைய மகாபாரதம். இதில் வருபவர்களான வனிதா மணிகளில் மூத்தவள் வியாஸ பகவானுடைய மகளாகும். பெரும் பேறு பெற்றவள் மச்சகந்தி எனும் பரிமளகந்தி. இவளின் மீது மகாராஜா சந்தனு கொண்ட மோகத்தின் விளைவாக அரசியானவள்.

    ஆனால் விரைவிலேயே வேதனையை வெகுமதியாகப் பெற்றாள்.வம்சத்தை வளர்க்கும் பெறும் பொறுப்பு அவள் தலையில் சுமக்க
    வேண்டியவளானாள். வேறு வழியின்றி பராசர முனிவர் மூலம் தனக்குப் பிறந்த வியாசரையே தம் வம்சம் வளர வரம் கேட்க வேண்டியவள் ஆனாள்.வம்சமும் வளர்ந்தது.சகோதரர்களுக்கு இடையே வன்மமும் வளர்ந்தது அதன் விளைவாக மகாபாரதம் எனும் மகா காவியம் பிறந்தது.அடுத்த ராஜமாதாக்களான குந்திக்கும் காந்தாரிக்கும் கிட்டதட்ட அவளின் நிலையே ஏற்பட்டது. புத்திர பாசத்தினால் மன அலைச்சலும் உளைச்சலுமே மிச்சமாயிற்று.காந்தாரி கண் அற்ற கணவனின் பொருட்டு திருமணத்திற்கு முன்பே கண்களைக் கட்டிக்கொண்டு கணவன் அனுபவிக்காத கட்புலனினின்பத்தை தானாகவே உதறினாள்.குந்தி போஜனின் புத்திரியான குந்தி தேவி ,தனக்கு வரமாககிடைத்த மந்திரத்தையே சாபமாக மாற்றிக் கொண்டாள்.,என்கிறார்கள்.அவளின்
    அந்த கன்னிப்பருவத்தில் ஆராயும் அறிவு இன்மையினால் என்கின்றனர்.ஆனால் அரசகுமாரன் பாண்டுவை மணந்த பின்பு சூழ்நிலையின் உந்துதலில் அந்த மந்திரமே வாழ்விற்கு வரமாக மாறி அவளுக்கும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாந்திரிக்கும் மக்கட் பேற்றை நல்கியது.இருந்தாலும் தன் திருமணத்திற்கு முன்பே பிறந்த சூரிய புத்திரன் கர்ணனும் குந்தியும் பட்ட மனவேதனையும் கர்ணனுக்கு நடந்த அவமானங்களும் இன்றும் கேட்டவர் மனம் உருகும் தன்மையை உடையதாக இருக்கிறது.

    இந்த ஒரு காரியத்திலேயே இரண்டு பிறவிகளைப் பார்த்துவிட்ட சிகண்டி எனும் பூண்ட பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறு தவறு செய்யாத பெண் பீஷ்மரால் சிறை பிடிக்கப்பட்டு அங்கும் இங்குமாக அலைந்து அவதியுற்று முடிவு காணாமல் பின் தவம் புரிந்து தன் துன்பத்திற்கு காரணகர்த்தாவான பிதாமகன் பீஷ்மர் முடிவுக்கு தானே காரணமாக வேண்டும் எனும் வரத்தை வேண்டிப் பெற்றவள் மகாபாரதத்தில் இந்த பகுதியை தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அனைவரும் அறிந்ததே ஆனால் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது.காந்தர்வமணமும் சுயவரமும் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்காலத்தில்தான் ஆணின் ஆதிக்கத்தையே காட்டுகிறது .பெண்மை எனும் பெறும் உண்னமக்கு காவியத்தில் கதாநாயகனான கண்ணனே பெருமதிப்பளித்து பல விதத்திலும் அபயம் அளித்து ஆறுதல் அளிக்கின்றார்.திரொளபதியை காத்தது ஒரு விதம் எனில் குந்திதேவிக்கு பல விதத்திலும் துன்பத்திற்கு ஆளான அவளுக்கு ஞானம் எனும் அருட்செல்வத்தை வழங்குகின்றார். கண்ணா எனக்கு துன்பத்தையே தா அப்பொழுதாவது நான் உன்னை மறவாமல் இருப்பேன்.ருக்மணி தேவிக்கும் அடைக்கலம் அளித்து ப்ரேம பாவத்திற்கும் தெய்வாம்சம் பொருந்திய இராமரின் மனைவியாக இருப்பினும் சரி ஒரு சலவைத தொழிலாளியின்
    மனைவியாக இருப்பினும் சரி நெருப்பில் தோன்றிய நெறி மிகுந்த தங்கையாக இருப்பினும் பாண்டவர் ஐவரின் பத்தினியாக இருப்பினும் சரி அவளின் மான ம் மரியாதைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

    மூத்தோர்கள் நிறைந்த சபையில் ஆண் ஒருவனாக பெண் ஒருத்தியின் ஆடை பகிரங்கமாக பல வந்தமாக பறிக்கப்பட்டது என்பதே காவியத்தில் காணப்படும் உண்மையாக இருக்கின்றது.பாதிப்பிற்கு உள்ளானவள். நெருக்கமான உறவினர்களைப் பார்த்தாள் ,குலத்தின் மூத்தோர்களைப் பார்த்தாள்.பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாளே தவிர பலன் ஒன்றுமே இல்லை. கதியற்றவள் என்று உணர்ந்தபின்பு தான் கடவுளை அழைத்தாள்.பரிதவித்தப் பின்புதான் பரமனைக் கூவினாள்.படைத்தவன் பாராமல் இருப்பானா?ஆண்டவன் அருளால் மட்டுமே அவமானத்தில் இருந்து காப்பாற்றப்பட்டாள்.அனைத்து ஜீவன்களுக்குமே இதுதான் கதி
    இதுவே விதி.ஆனாலும் ஒரு உண்மை தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.தெய்வாம்சம் பொருந்திய அரசன் முதல் அதே மன்னில் வாழும் சலவைத் தொழிலாளி வரை அவன் தன் மனைவியை ,துனைவியை ,அரசனானால் தன்னுடைய அரண்மனையை விரட்டும் அல்லது வெளியேற்றும் உரிமையை பெற்றிருந்தான்.

    இது நம் வீடு .அதாவது எனக்கும் கூட இதுதான் வீடுஎனும் உண்மையின் உரிமையை நடைமுறைப்படுத்த அந்த நாட்டின் ராணியாலும் முடியவில்லை. நாட்டின் குடிமகளாலும் இயலவில்லை.என்பதுதான் உண்மை.வீட்டை விடு வெளியில் நடந்தே ஆகவேண்டும். வெளிஉலகம் எனும் வெய்யிலில் காய்ந்தே ஆக வேண்டும். அசோக வனத்தில் சீதாபீராட்டியை அனுமன் பார்க்கின்றார்.தாயே நான் உன்னை இங்கிருந்து கொண்டு சென்று ஸ்ரீராமனிடம் சேர்ப்பேன் வருவீர்களாக என்று வேண்டும் பொழுது பிராட்டியானவர் அனுமனே மூவுலகங்களையும் ஒரு சொல்லினால் சுடுவேன்.ஆனால் அது ஸ்ரீராமருடைய வில்லுக்கு புகழ்
    அன்று என்று பொறுமையுடன் இருக்கின்றேன் என்று தன் சக்தியைகணவனின் வீரத்திற்கு பின்னே வைத்தே பேசுகின்றார். கம்பராமாயத்தில் இப்படிபட்ட சீதாதேவி வனத்தில் வால்மீகியின் ஆஸ்ரமத்தில்தங்கியிருந்து தன் மக்களை பெற்றெடுக்கின்றாள். சூழ் நிலைக்காரணமாக ஆஸ்ரமத்தில் வளர நேரிட்டது.அவதாரமே ஆனாலும்

    ஏக பத்தினி விரதனாக இருந்தும் ராஜாராமந்தான் முதலில் நிற்கின்றார்.சீதாராமன் ராஜாராமனின் பின்னால்தான் நிற்கின்றார். இன்னும் வரிசைகரமாக சொல்லப்போனால் தசரதராமனான,தாசரகி தான் முதலில் பித்ரு வாக்கிய பரிபாலனத்திற்குப் பிறகு தான் இராஜாராமன் அதன் பிறகுதான் சீதாராமன்.

    சீதை துயருற்றுதலுக்கு இனையாக இராமனும் துயருற்றாலும் கூட நம் அனுதாபம் என்னவோ பிராட்டியாரின் பெயரில்தான்.பூமித்தாயின் புதல்வியாக கருதப்படும் சீதாதேவி,ஞானியான் ஜனக மகாராஜனால் வளர்க்கப் பெற்றவள். மகாராஜாவான தசரதனின் மூத்த புதல்வனான மனித வாழ்வின் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டான இராமபிரானை மணந்தும் ஒரு நிலையில் கருவுற்ற நிலையில் கானகத்தில் தனியே விடப்பெற்றாள்.என்பதுதானே என் கண்முன்னிற்கும் காட்சி நம் கண்களும் கலங்கும் காட்சியுங்கூட.

    எந்த நிலையிலும் எந்த சூழலிலும் பெண்மை எனும் தன்மை ஆண்மையின் ஆளுமைக்கு அடங்கி நடந்தது, தன்னுள் இருக்கும் சக்தியை யும் அடக்கி வைத்துக் கொண்டது.இந்தியாவில் ஹிந்து சமயம் சார்ந்தே பெரும்பாலும் அரசுகள் அமைந்து அரசு புரிந்தன.மன்னன் சார்ந்த சமயமே அனேகமாக மக்கள் பின்பற்றும் சமயமாகவும் இருந்தது.வடக்கில் ராணி ஜீஜாபாய் தன் மகன் சிவாஜியை ஒரு நல்ல ஹிந்து சமயம் சார்ந்த அரசனாக வளர்த்திருந்தார்.தேவி பவானி யை தன் வழிபடும் கடவுளாகக் கொண்டிருந்த சாம்ராட் சிவாஜிதான் பிறந்த நாட்டையும்பெற்றெடுத்த தாயையும் தெய்வமாகவே போற்றி வணங்கினார்.அவரிடம் அமைந்திருந்த மனித நேயமிகுந்த ஒழுக்க உணர்விற்கு மூலகாரணம் அன்னை ஜீஜாபாயே ஆவார்.முகமதியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த அக்காலத்தில் இந்து முஸ்லிம் வேற்றுமை உணர்வு சகஜமாக இருந்து வந்தது.

    அதன் அடிப்படையில் பகை வெறுப்பு முதலிய மாறுபாடான குணங்கள் மனிதர்களை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தன.ஒரு சமயத்தை சார்ந்த மங்கையர் மற்ற சமயத்தை சார்ந்த அரசனையும் குடி படைகளையோ கண்டால் மானம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டி அஞ்சி விலகி ஒடினர்.இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிவாஜியின் சிப்பாய்களுள் பேரளகியான ஒரு முகமதியப் பெண்ணை சிறை பிடித்தனர். அவளை கொண்டு வந்து தங்கள் தலைவன் முன் நிறுத்தினர் .அவளின் பேரளகைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.அவளின் அழகை வியந்து கேட்ட சிவாஜி அவளின் முகத்திரையை சற்றே விலக்கி அவளை அவளுடைய பேரழகின் பிராகசத்தை ஒரு கணம் நோக்கினார்.மறுகணம் தாயே உன் மகனுக்கு உன் பேரளகில் ஒரு துளியாவது
    வாய்க்கும் அல்லவா என்று புனிதமான பொருள் பொதித்த வார்த்தைகள் அவரின் வாய்மை வாய்ந்த வாயின் வழியே வந்தன.அடுத்த தன் சிப்பாய்களுக்கு அவர் அளித்த உத்தரவானது,அந்த முகமதியப் பெண்ணின் பெண்மைக்கு மரியாதைக்கு வேதங்களின் சாரம் எனப்படுகின்றது. அவர் அளித்த உத்தரவாதமாகியது இந்த தாயை அவளுடைய இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்து விடுங்கள். இந்த சம்பவம் சத்ரபதி சிவாஜியின் சாண்றாமைக்கும் பேராமைக்கும் சான்றாக சரித்திரத்தில் பதிவாகியுள்ளது.இந்த சரித்திர புருஷனின் சான்றாமைக்கு அடிநாதமாக அமைந்திருப்பது அன்னை ஜிஜாபாயின் அருமையான
    வளர்ப்பு அன்பு மகனுக்கு அமுது ஊட்டும்பொழுது எல்லாம் நல்லறிவையும்சேர்ந்து ஊட்டிய தாய்மையின் பக்குவம் வாய்ந்த பண்பட்ட மனம் ஒரு தாயின் தவிர்க்கமுடியா கடமையை செவ்வனே ஆற்றிய பெண்ணின் பெருஞ்சிறப்பு.

    தாய் நாட்டிற்கு தன் கடமையை ஆற்றி புரவியே போர்களத்தில் புகுந்த ஜான்சிராணி லக்ஷ்மிபாய் திரைபோட்டு முகமலர் மறைத்து அகத்தின் உள்ளேயே வாழ்ந்த அந்நாளில் இன்றுநான் ஆணாகவும் செயல் புரிகின்றேன் என புகன்ற வீரமணி ஜான்சியின் ராணி.தந்தையையும் தகமை வாய்த்த கணவனையும் போர்க்களத்தில் பலியிட்டபின்பும் தன் பால் மனம் மாறா பாலகனை வாழ்த்துக் கூறி போருக்கு அனுப்பிய தமிழகத்தின் தாய்மார்களை தமிழ் இலக்கியங்கள் அறிமுகப்படுத்துகின்றன.தேசப் பிதா மகாத்மா காந்திக்கு கிரியா ஊக்கியாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து ஒளி வீசிய மங்கையர் திலகமாம் தில்லையாடி
    வள்ளியம்மையை அந்த தமிழ்ச் சுடரின் ஒளியை தரிசனம் செய்பவர்கள் எத்தனை பேர்கள்? வங்கம் தந்த தங்கம் வேதாந்த சிங்கம் உலகின் அனைவருக்குமுரிய ஆன்ம தத்துவர் எனும் ஞான ஓளி அது இந்திய மண்ணிலேயே இருப்பதைக் கண்டு உலகிற்கே வாரி வழங்கிய வள்ளல் சுவாமி விவேகானந்தர்.துறவும் தொண்டுமே இரு கண்களின் ஒளியாகக் கொண்டவர் அவரை பெற்ற பெரும் பாக்கியம் கொண்ட அன்னை புவனேஸ்வரி தேவி.தன் தாயின் சிறப்பை ச்வாமி விவேகானந்தரே கூறுகின்றார். என்னிடம் இருந்து எதெல்லாம் நல்லவையாக வருகின்றதோ அவையெல்லாம் என் அன்னை எனக்கு அளித்த வைகள் ஆகும்.இந்தியாவில்
    பெண்மை என்பது தாய்மைஎன்ற நிலையிலேயே பெரிதும்வெளிப்படுகின்றது.அடுத்து தங்களின் பவித்தரத்தை காப்பாற்றிக் கொள்ள வலிய உயிர் தியாகம் செய்தவர்கள் எத்தனை அயிரம் பேர்கள்.அந்நிய நாட்டில் இருந்து வந்து புகுந்தவர்கள் மண்ணை தொட்டதோடு அல்லாமல் பெண்ணையும்தொடும் கேவலமான எண்ணம் கொண்ட பொழுது பசுங்கிளி போன்ற பரம அழகிகள்துஉயிரை துச்சமாக மதித்து தங்களின் மானத்தைக் காத்து பண்பாட்டை க்காக்கவும் உயிர்த் தியாகம் செய்தனர் .அந்த புனிதவதிகளை இன்னும் பாரதமே கை கூப்பி த் தொழுகின்றது.

    அந்நியனை சொந்த மண்ணை விட்டு ஒட்டவேண்டும் என்று தானே புரவியேறி போர்க்களம் புகுந்த ஜான்சியின் ராணி லஷ்மிபாய் .வாரிசு இல்லாத நாட்டை அந்நிய அரசாங்கம் தனக்கே உடமை ஆக்கிக் கொண்டது.ஜான்சியிலும் அவ்வாறு நடக்க முடியாதவாறு முடிந்தவரை எதிர்த்து போராடினார். அந்த வீர மங்கைதாய் மண்ணிற்காக தனது தத்து புதல்வனுடையே போர்க்களம் புகுந்தார்.அதே போன்று தெற்கிலும் வீரமங்கை வேலுநாச்சியார் .அந்நிய அரசை அடியோடு எதிர்த்தவர்களில் ஒரே பெண்மனி.இவர்கள் எல்லாம் சின்னஞ்சிறு பிரதேசத்திற்கு உரிமையான அரசிகள்.சூரியன் அஸ்தமிக்காத புகழையுடைய பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரத்தை மிகுந்த துணிவோடு எதிர்த்து நின்றார்கள்.எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியே ஆனாலும் அவர்களுடைய நாடு பிடிக்கும் பேராசையை பெருந்துணிச்சலோடு எதிர்த்து நின்றார்கள். அதுவும் இந்தியாவில் பெண்கள் நிலை என்ன? ஆணின் தோழுக்கு பின்னே நின்றே வெளிஉலகை எட்டிப் பார்க்கும் நேரம் ஆடவர் முன்பு பெண்வருவதே அரிதான சமயம் தாய் நாட்டுப்பற்று அவளுக்கும் இரத்தத்தில் கலந்திருந்தது.தேசப்பிதா என்ற புகழை அடைந்த மகாத்மா காந்தி அடிகளுக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் ஒரு பெண்ணே அந்த சின்னஞ்சிறுமி தமிழ் நாட்டில் உள்ள தில்லையாடி என்ற ஊரை சேர்ந்த வள்ளியம்மை எனும் தமிழ்ப் பெண்ணே.சுதந்திர போராட்ட வீரர்களுக்கு த் துணையாக அவர்களின் பின்னால் நின்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.தாயாக மனைவியாக சகோதரியாக ஆணுக்கு பல உறவாக இருக்கும் பெண்மை தாய் நாட்டிற்காக அதன் சுதந்திரத்திற்காக தன் உடமைகள் அனைத்தையும் கொடுத்தாள்.அதுவன்றி தன் சுகங்களையும் உரிமையையும் தியாகம் செய்தார்.தமிழ் நாட்டில் இதற்கு சரியான எடுத்துக்காட்டு கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி அவர்களின் துணைவியார் அவருடைய சகதர்மினியாக மிகுந்த மகிழ்வுடன் அவருடைய தீரமிக்க செயல்களுக்கு உறுதுணையாக கூடவே இருந்தார் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

    கொடிபிடித்த குமரன்மனைவியார் இன்னும் தெரிந்ததும் தெரியாததுமாக எண்ணற்ற பெண் மணிகள் பின்னணியில் இருந்திருக்கின்றனர்.பொதுவாக இந்திய பெண்கள் இந்திய பண்பாட்டுடன் இயல்பாகவே ஒன்றியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

    பாரதத்தின் பண்பாடு இந்திய கலாசாரம் என்பது இந்தியர்களால் மட்டும் அன்றி மற்ற நாட்டாரும் மதிக்கத்தக்க உயர்வு பெர்றது.அது தூய்மையும் தியாகமும் தாய்மையும் மட்டுமே அதிகமாக மிளிர்கின்றது.இந்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண் மணிகள் இந்தியாவில் இருக்க இந்தியாவில் இல்லாதது ஒன்றுமில்லை .அப்படிபட்டவர்களுக்கு அன்பும் நன்றியும் கலந்த வண்க்கங்கள் உரித்தாகுக.எல்லாம்வல்ல இறைவன் பாரத பெண்களுக்கு அதன் பண்பாட்டை உயிரோடு உயிராக கலப்பாராக.உலக நாடுகளில் பாரதத்தினுடைய உயர்வு என்றுமே உயர்வாகவே இருக்கும்.

    தொடரும்

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (1)

    சுலோசனா

    முன்னுரை

    பாரினில் பாரதம்
    தமிழ் ஆந்திரா, கேரளம் ,கர்னாடகா எனத் தெற்கிலும் மஹாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா,பிஹார் பஞ்சாப்,எனப் பலவாக நாடுகள் பிரிந்து இருந்தாலும், ஹிந்து தர்மம் சொந்த தர்மம் எனும் அடி நாதமே அஸ்திவாரமாக இருக்கின்றது. பலவித மனம் உள்ள பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. பாரதம் போன்ற கதம்பமாலையே அதன் பல்வேறு நாட்டுப் பெண்களும்.

    அந்த கதம்ப மாலையை இணைக்கும் சூத்திரம் நூலாகப்பட்டது தியாகம். தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் ஒன்றுதான். அது தியாகம்தான். சராசரிக்கும் மேற்பட்ட பெண்மணிகள் நாட்டிற்காக தியாகம் செய்வார்கள்.சராசரியான குணமுடைய பெண்கள் வீட்டிற்காக,தான் நடத்தும் இல்லறத்திற்காக, கணவனுக்காக, மகன், மகளுக்காகவும், அடுத்து பேரன் பேத்திகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள்.அதில் இன்பம் காணவும் பழக்கப்பட்டுவிட்டனர். இதற்கு மாறான பெண்களே இல்லையா எனக் கேட்கலாம். இருக்கலாம். ஆனால் அது எங்கோ ஒன்று.

    தவறிழைத்தவர்களுக்கு ஒரு ஸ்லோகம் இவ்வாறு காணப்படுகின்றது;-

    யத்ர நாரிஸ்ய பூஜ்யந்தே

    தத்ர தேவா; ரமயத்தே ;

    எங்கு பெண்கள் பூஜீக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ்வடைகின்றன.என்பது இதன் பொருள்.இங்கேதான் இன்னொரு சொல் வழக்கும் உண்டு.

    பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு” ஆணின் வைராக்கியத்திற்கு பலகீனம் தந்து அவன் சம்சார சாகரத்தில் இருந்து கடைத்தேறாமல் இருக்கக் காரணம் பெண்ணே என்ற ஒரு கருத்து.

    தமிழகத்தில் அரசவைக் கவிஞர் ராமலிங்கம் பாடுகின்றார். “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்பிறப்பை உயர்த்தி ஒரு கருத்தும் தீர்க்கதரிசியான மஹாகவி பாரதியார் ,பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி என்றும் இன்னொரு கருத்துமாக நம்முன் வைக்கின்றார்கள் இவ்வித இரண்டு கருத்துகளுக்கு நடுவேதான் இந்திய பெண்மணிகளின் வாழ்வு . ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான் ஒரு வழிப்பாட்டு முறை;-

    இந்த கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்வதுபோல் ஒரு வழிப்பாடு ,சிவனும் சக்தியுமாக ,பெருமாளும் பிராட்டியுமாக இந்து கோவில்களில் பெரும்பாலும் வழிப்படுகின்றனர்.எங்கும் உள்ள இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் தனித்தனியே வழிப்பட்ட பழக்கம் ஆயின் ஒரு திருத்தலத்தில் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு எனும் திருத்தலத்தில்தான் ஒரு சம நிலை வழிபாடு நடக்கின்றது.

    இந்த மலைக்கோவிலில்தான் இறைவன் என் படைப்பில் அனைவரும் சமமே என்பது போல் ஒரு பாதி ஆணாகவும்,ஒரு பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கின்றார். அவரே “அர்த்தநாரீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். இவ்விறைவடிவம் தானாகவே உருவான சுயம்பு மூர்த்தி என்கிறது தல புராணம். இங்கு எழுந்தருளியுள்ள செங்கோட்டு வேலவரும் அவ்விதமே அழைக்கப்படும். இக் கோவில் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.,என தாராளமாக குறிப்பிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம். அருணை முனிவர் பாடல் அருளிச் செய்த திருத்தலம். ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் ஒன்றுமாகவும் ஆகி நின்ற அவ்வடிவை பூஜித்தும் ஆண் பெண் இரு பாலரின் மனங்களும் ஏன் சம நிலைக்கு வரவில்லை எனத் தெரியவில்லை. மற்ற நாட்டினரும் மதிக்கும் பாரதப் பண்பாடு இன்று கலப்பட மற்றதாகக் கேள்வி.

    பெண்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட கலாச்சாரம் இன்று கலப்பட ஆசாரமாகிவிட்டதா என்றும் கேள்விகள் எழுகின்றன.ஒரு புறம் ஆசிரியையாக ,ஜில்லா அதிகாரியாக , நீதியரசியாக,காவல் துறையில் கண்ணியமுள்ள காவல் அதிகாரியாக ஏன் விண்வெளி விஞ்ஞானியாக. மறுபுறம்?

    சின்னஞ் சிறுமி கூட சீரழிக்கப்படுகின்றனர்.உறவாக வந்தவராலும் கொடுமை ஊரானாலும் கொடுமை. யார் இதற்கெல்லாம் பதில் சொல்வது?இதில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி.வீட்டிற்குள்ளேயே மாமியார் என்ற பெயரில் நாத்தி என்ற பெயரில், அண்ணி என்ற பெயரில். இனப்பற்று தேவையற்ற இடங்களில் அதிகமாகக்கூட இருக்கின்றது .பெண்கள் இடத்தில் ஏன் இல்லை?

    படித்த பாமர பெண் இனமே சிந்திப்பாயா? இறைவன் படைப்பில் இருவரும் சமம் என்றாலும் இயற்கையே நம்பிக்கை வைத்து, நாரீ மணி இடத்திலே படைப்புத்தொழிலில் சிறிது பங்கிட்டு கொடுத்திருக்கும் தாய்மை எனும் மாபெரும் பொறுப்பை தயங்காமல் தந்திருக்கிறது.

    பெண்ணை துறந்தபெரும் தவச்சீலர்களாளும் தாயை துறக்க இயலவில்லையே. பெரும் பாலும் எல்லா உயிர்களிலும் பெண்ணிற்கே தாய்மைத்தவம் பலித்திருக்கிறது.

    பரந்த பாரத மண்ணை உயரப் பறந்து கருடப் பார்வை பார்க்காமல் சின்னஞ்சிறு பறவையாக பறந்து பார்த்ததை ஆசையின் காரணமாகவும் ஆவலின் காரணமாகவும் பகிர்ந்து கொள்ள விழைந்து வந்துள்ள நன்றியுடன்

    சுலோசனா

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share