சுலோசனா

பெண்களின் தந்தை பெரியார் – பகுத்தறிவு பகலவன் ——- தந்தை பெரியார்

பாரினில்-பாரதம்2

 

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

யாதொரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பில்லாத புழு பூச்சிகளினால் வெப்பத்தை தாங்க முடியாது.சுருண்டு விடும். அது போன்றுதான் மனித நேயம் எனும் அன்பிலாத முதுகெலும்பில்லாத மனிதர்களை அறக்கடவுள் தண்டிக்கிறார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். சகமனிதர்களை சாதி போன்ற பேதங்களை உண்டாக்கி, தாழ்த்தி அவமானப்படுத்தியதோடு அல்லாமல் தன்னில் பாதியான பெண்ணை சாதி மத பேதமின்றி அடிமைப்படுத்தி வைத்தது பழகிய யானையைக் கொண்டே புதிய யானைகளைப் பழக்கப்படுத்துவது போல மாமியார் நாத்தனார் போன்ற உறவு முறைகளைக் கொண்ட பெண்ணே பெண்ணிற்கு எதிரியானாள்.

மகன் சகோதரன் என்ற உறவில் உள்ள ஆணுக்கு கொடுமையை கடுமையாகப் போதித்தாள். சில நோய்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டு பலனின்றி பிறகு கடுமையான மருந்தை பிரயோகிப்பார்.அது போல் சமூகத்திற்கு கிடைத்த அரு மருந்து பெரியார்.தன் மனதில் உருவாகும் உஷ்ணமான உண்மைகளை அதன் வெப்பத்தோடு அப்படியே வெளியிட்டார். நாகரீகம் கருதி அதற்கு மேல் பூச்செல்லாம் பூசவில்லை. உச்சி வேளை சூரியனாக உதித்து வந்த கருத்துக்கள் பல சமூக விரோதிகளை உருவாக்கியது.

பெண்ணடிமை செய்யும் ஆதிக்க மனப்பான்மையாளர்களை அதட்டியது. மூட பழக்கவழக்கங்களினால் பாதிப்பால் நடுங்கிக் கொண்டிருந்த பெண் இனத்திற்கு அந்த சிந்தனை கதிர்கள் இதமான வெப்பமளித்து நடுக்கத்தை விரட்டியது. இவர் சிந்தனையின் சிகரமாகத் திகழ்ந்தவர். அவர் கொண்ட கொள்கைகளின் பூரண செயல் வடிவமாகத் திகழ்ந்தார். சில சிறந்த சிந்தனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு சீர்திருத்தங்களை செம்மையாக செயல் படுத்தினர். தன் குடும்பத்தோடு தேச சேவையில் ஈடுபட்டவர். கள்ளுக்கடை போராட்டத்தின் போது தன் சகோதரியோடும் துணைவி நாகம்மையோடும் அந்த போர்க்களத்தில் ஈடுபட்ட தியாக மகாத்மா காந்திக்கும் கூட அந்த பெண்கள் சேவை தெரிந்திருந்தது. அவர்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

பெண்களின் சரீர உடல் அழகைப் புகழ்ந்து பேசி அவர்களை மூளை சலவை செய்யும் ஆண்களை கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். அழகு பதுமைகள் தங்களின் சொத்துக்களுக்கு தங்களுடைய வாரிசுகளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக உபயோகிக்கும் ஆண் திகழ்வதாகக் கூறுகின்றார். தங்களின் சுக அனுபவத்திற்காகவே பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஆண் என்பவன் கருதுகின்றான்.அலங்காரப் பதுமைகளாக பாதுகாக்கின்றான். சொந்த உபயோகத்திற்கு மட்டுமே என்று வைத்து கல்யாணம் என்ற பெயரில் அழகிய மாளிகைகளில் அடக்கி வைத்திருக்கின்றனர் என்று செல்வந்தர்களைப் பற்றி கிளியை தங்கக் கூண்டில் வைத்து பால் பழம் தருவது போல.பணம் படைத்தவர்களின் வாழ்வினில் தான் ஆணாகப் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்.,என்று இருமாப்புடன் வாயினால் கூறாமல் செயல் மூலம் செய்து காட்டுவது போல் வாழ்கின்றான், என்கிறார்.

கலைத்திறமை வாய்ந்த பெண்கள் தங்கள் கலைத்திறனால் மட்டும் இன்றி பெண் என்ற முறையிலும் ஆணை மகிழ்விக்க வேண்டிய ஒரு சூழ்நிலை பெண் சமூகத்தில் ஒரு நோய் போல் தோன்றியது. ஜமீன்தாரர்கள் மிட்டா, மிராசுதார்கள் , பணம் படைத்த தனவான்கள் கொண்ட ஒரு கூட்டம் இப்படிப்பட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை உருவாக்கியது. இந்த மகிழ்விக்கும் கூட்டத்தில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்களும் இருந்தனர். சிறிதும் விருப்பம் இன்றி தாய் தந்தை தமக்கை இவர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு இந்த வாழ்வில் தள்ளப்பட்டவர்களும் இருந்தனர். இதிலும் கூட சில பெண்கள் ஒரே நபருடன் வாழ்ந்தனர். இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

பெண்கள் எளிமையுடன் வாழப் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானால் பணமுள்ள ஆணுக்கு பலியாக வேண்டிவரும் எனும் உண்மையை ஒளிக்காமல் ஒசையுடன் கூறுகிறார். உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் அலங்கோல அலங்காரம் மற்ற ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அலங்காரத்தில் பெண்களின் கவனம் செல்லக்கூடாது. உன் முகம் நிலவு போல் உன் ஸ்பரிசம் மலர் போல் மிருதுவானது. மருண்டு விழிக்கும் உன் விழிகள் மான் போல அஞ்சி அஞ்சி அல்லது சஞ்சி சஞ்சி நடக்கும் உன் நடை அன்னம் போல என்றெல்லாம் ஒரு ஆணால் புகழப் பட வேண்டும் என்பதற்காகத்தானே. மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ எனும் நாவலில் வரும் கதா நாயகி மங்கை,வீட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படிப்பவள் அவளை அந்த வீட்டுத் தலைவரின் மகன் காதலிக்கின்றான்.தன்னிடம் காதலை வெளிப்படுத்தி மனம் புரிய வேண்டுபவரிடம் மங்கை சொல்கின்றாள்

ஐயா நீங்கள் எதோ உணர்வில் உந்தப்பட்டு என்னிடம் கேட்கின்றீர்கள். நான் கல்லூரியில் படித்தாலும் என் தாய்க்கு உதவியாக என் படிப்பிற்காகவும் உழைத்து உழைத்து உரமேறிவிட்ட தன் மென்மையை இழந்துவிட்ட என் கைகளைத் தொட்டுப் பாருங்கள். என்னிடம் நீங்கள் கொண்ட காதல் சில வருடங்கள் கூட நீடிக்காது. என்னிடம் நீங்கள் மென்மையும் நளினத்தையும் நாசூக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்களுக்கேற்ற மனைவியை தேர்த்தெடுங்கள் என்று கூறி முதலில் மறுக்கிறாள்.

பெரியார் ,சுயமரியாதையைஇழ்ந்து பின் சுகப்படும் சோம்பேறியாக இராதீர்கள், நீண்ட கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். பட்டு போன்ற விலையுயர்ந்த புடவைகளை அணிந்து கொண்டு அலையாதீர்கள். உடுத்த சுலபமான உழைக்க வசதியான ஆடைகளையே அணியப்பழகுங்கள்.

பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்ற மனப்போக்கை விடுங்கள்.ஆணுக்கு நிகராக உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்துங்கள்.

இவ்வாறெல்லாம் உரமூட்டி பேசுபவர் பால்ய விவாகம் இளம் விதவைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும்பொழுது தந்தை பெரியார் பிறக்கின்றார்.

ஆனின் சுய நலத்தின் உச்ச கட்டமே கற்பு என்ற நிலை.கற்பு என்ற ஒரு ஒழுக்க நிலை ஆண் பெண் என்ற உறவில் மட்டும் அன்றி சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இருக்க வேண்டும். என ஒழுக்கத்தில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருகின்றார்.

தந்தை பெரியார் காட்டும் பாதையில் தயக்கமின்றி நடைபோடும் பெண் மக்கள் (மகள்கள்) எவ்வளவு பெயர்கள் என்று தெரியவரும்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள்.தந்தை பெரியார் சொற்களும் மந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சொற்களாகும்.அந்த சக்தியின் ஒளியை தாங்க முடியாமல் கண்கள் கூசி கண்களை தாழ்த்திக் கொண்டவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை.

ஒரு நாடு முழுவதற்குமான சமுதாய ன்நெறிகள் சமய நெறிமுறைகள் – நெறிமுறைகள் அற்றவைகள் பண்பட்ட பழக்கவழக்கங்கள் பண்பாடற்ற புண்பட்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே கலந்தே இருந்து வருகின்றன. இந்த நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் அனைத்திற்குமே தங்களால் இயன்றவரை அவைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை பின் பற்றும் மக்களே எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

அடுத்து சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்

“எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பரிது.

என்ற தமிழ் திருமறையின் குறளின் பொருள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் அறிவின் பாற்பட்ட மனதிற்கு ஏற்ற வகையில் இருப்பவைகளை மட்டுமே பின்பற்றுவர்.தங்களின் அறிவிற்கும் மனச்சான்றிற்கும் ஏற்பில்லாவற்றை விட்டுவிடுவார்கள் .முதலில் குறிக்கபட்டவர்களை விடவும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. மூடப்பழக்கங்களைபின்பற்றுபவர்கள் அறிந்தோ அறியாமலோதெரிந்தோதெரியாமலோ பலர் மனதை புண்படுத்தி விடுகின்றனர்.இந்த வேதனைக்கு ஆளானோர்கள,பெரும்பாலும் பெண்களே. இதற்கு பலி ஆனவர்கள் ஆகிக் கொண்டிருப்போர்கள்,ஆகப்போகின்றவர்கள் யார் என்றால் 10 சதவீதம் ஆண்கள் மீதி 90 சதவீதம் பெண்களே.ஐந்து மாபெரும் வீரர்களானா ஐவரை கணவர்களாகத் கொண்ட பாஞ்சாலி .ஞானியரும் சான்றோர்களும் வீரர்களும் கூடியுள்ள சபையில் ஒரு ஆணால் துகில் உரியப்பட்டாள்.இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.மன்னன் ஜனகனின் மகள் ஸ்ரீராமனின் ப்ரிய பத்தினியான சீதா பிராட்டி கணவனோடும் காவலாக கானகம் வந்த இளைய பெருமாள் இலக்குவனோடும் கானகம் சென்றது ஒரு முறை. இரண்டாவது முறை-முறையற்ற முறையில் தான் கானகத்தில் தனித்து விடப்படபோகின்றோம் என்பதை அறியாமல் விடப்படுகின்றனர்.தெய்வமே அவதாரம் எடுத்து வந்தது என்றபோதே மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இப்படி இருக்கும் போது கீழ்சாதிகள் என அழைக்கப்பட்ட பற்பல சாதிகளில் பிறந்தப்பெண்களின் அவல நிலையைப் படிக்கும் பொழுதேப்மனம் பதறுகிறது.பார்த்தாலே பாவம் தொட்டாலே தீட்டு என்று மட்டும் இல்லாமல் நடைமுறை பழக்கவழக்கங்களில். எத்தனையோ வேறுபாடுகள்.கீழ் சாதியை சேர்ந்த பெண்கள் சிறுமியானாலும் சரி பருவப் பெண்னாலும் சரி முதிர்ந்த மூத்த மூதாட்டியானாலும் சரி ஒரு சரியில்லாதா நடைமுறைக் கொடுமை . மார்பை மறைத்து மேலாடை அணிதல் கூடாது. இடுப்பில் மட்டும் துணி.இந்த நிலையில் அண்ணிய ஆடவர் முன் கூட அரை நிர்வாணம். கீழ்சாதி தகப்பனுக்கு பிறந்து கீழ்சாதி கணவனோடு வாழ்ந்து கீழ்சாதி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு பெண்———-ஆனால் அவள் சற்றேனும் அழகு படைத்தவளானால் ,மிக உயர்ந்த சாதி என அழைக்கப்படும் சாதிகளில் பிறந்த காமுகனின் கண்ணில் பட்டுவிட்டால் அப்பொழுது அந்த கீழ்சாதி இளம் பெண்கள் காமுகனான கயவனான் அந்த கண்ணியவானுக்கு அந்த சமயத்திற்கு மட்டும் தீண்டதக்கவர்களாகி விடுவார்கள் இதில் அந்த பெண்களின் விருப்ப்பத்தை எல்லாம் பற்றி கவலையே படமாட்டார்கள். கீழ்சாதி ஆனாலும் அவளுக்கு அந்த உயர் சாதிக்காரன் அந்நியன் தானே .எவனோ ஒரு அந்நியனால் உடலும் மனமும் புண்பட்டு எந்த அளவிற்கு எத்தனை பெண்கள் துடித்தனரோ.

உயர்ந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களில் சிலரோ அல்லது பலரோ தீண்டாமை இனத்தை சேர்ந்த இளம் பெண்களை தீண்டி நாங்கள் இன்புற்று அவர்களை துன்புறுத்தியது என்பதுசரித்திரங்களில் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்றும் கூட சில இடங்களில் இந்த தாழ்ந்த சாதியினர் கொத்தடிமைகளாகப் பட்டு ஆண் பெண் சிறுவர் அடங்களாக அநியாய கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த செய்திகள்.தொலைகாட்த்சியிலும் வருகின்றன.

ஒரு பெண் கணவனை இழ்ந்துவிட்டால்,பூவைவிடவும் மென்மையான மனம் படைத்த பூவைக்கு தெய்வப்பிரசாதமான பூ பிரசாதமாக கிடைப்பதில்லை.மறுக்கப்படுகிறது.இந்த அநாகரிமான நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே.தன் கையே ,தன் கண்களைக் குத்துவது போல் பெண்ணெ பெண்ணுக்கு அவமரியாதை செய்து வருகின்றார்கள்.காலங்காலமாக வந்த பழக்கங்களுக்கு கீழ்படிகின்றோம். மனைவியை இழந்த ஆண்களுக்கு இந்த மரியாதைகள் எல்லாம் கிடையாது. அவன் மீண்டும் புதுமாப்பிள்ளையாக வேறு ஆகி விடுகிறான்.இதற்கு சமூகத்தீன் அங்கீகாரமும் முழு அளவில் கிடைத்துவிடுகிறது.

எந்த விதமான துன்பம் என்றாலும்,காலப் போக்கில் அதன் தீவிரம் குறைந்து இயல்பான வாழ்விற்கு திரும்புவது என்பது மனித இயல்பாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தாலும்கூட பெண் அப்படி எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுவிட முடியாது. பெரிய பெரிய நகரங்களில் நன்கு படித்து வேலை பார்க்கும் பெண்கள் ஒரு வேளை இந்த அவமதிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் தப்பலாமோ என்னவோ ,சிறிய நகரங்களில் கிராமங்களில் வசிப்போருக்கு இன்றும் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டிதான் உள்ளது.இதிலும் இன்னும் ஒரு அறிவீனம் என்ன வென்றால் நியானமான காரணத்தினால் நீண்ட காலம் தாம்பத்திய வாழ்வில் இருந்து விடுபட்டு அல்லது விடுவிக்கப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்து வரு பெண்களுக்கு ம் அந்த விதி விடுவதில்லை. 7 ஆண்டுகள் பிரிந்திருந்தால் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அந்த பந்தம் தானாகவே முறிந்துவிடும்.இந்த விதியே மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ப்ந்தம் சூழ்நிலை முதலிய பல தவிர்க்கமுடியாத பல காரணங்களால்மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சட்டங்களாலும் மனி தர்மத்தினாலும் மனித நேயத்தாலும் விடுவிக்கப்படுகின்றன.இந்நிலை சிலசமயம் அரிதாக ஆண்களுக்கும் கூட ஏற்படுகின்றது.இந்த உண்மையை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.ஆனால் நடைமுறையில் மிக மிக அரிது.எங்கோ ஆயிரத்தில் ஒன்று லஷ்ஷத்தில் ஒன்றுதான்,ஆணுக்கு அசம்பாவிதம் என்பது.அடுத்து விதவைகள் மறுமணம்,சும்மர் 50 வருடங்களுக்கு முன்னரும் சமீபத்திலும் கூட அடேயப்பா அவளுக்கென்ன கொழுப்பு? இன்னொரு கல்யாணம்,பொம்பளைக்கு கூட இன்னொரு ஆம்பளை கேக்குது பாரப்பா,என கேவலமான பொருளில் எள்ளி நகையாடுகின்றனர்.

பெரும்பாலும் தனியாகவாழ இயலாத உலகம் இதில் ஒருவருக்கொருவர் துணையாக கைபிடித்துக்கொண்டு– ஒருவருக்கு இடரும் பொழுது ஒருவர் பாதுகாப்பாக கை கொடுக்க இதற்கெல்லாம் தானே துணை என்பது.

“கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே

இங்கே வேரில் பழுத்த பலா”

என பாடிய பாரதி தாசன் வார்த்தை எவ்வளவு பொருள் பதித்தவை.இந்த விஷயத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தே காட்டினார். உலகறிந்த விவரம் இது.தனக்குத் தொண்டாற்றி வந்த மணியம்மை எனும் கணவனை இழந்த பெண்ணை தனக்கு த் துணையாகக் கொண்டு அவருக்கு பகுத்தறிவும் அறிவுக் கண்களாகவும் திகழ்கின்றார்.ஒரு வகையில் பார்த்தால் கணவனின் துனையை இழந்த பெண்கள் அனைவருக்குமே மறுபடியும் திருமணம் தான் தீர்வு என்பது முடிவான முடிவல்ல. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு உதவி சமூகத்தில் அந்தஸ்து எந்த விதத்திலும் குறைவு படாமல் பார்த்துக் கொள்வது நியாயத்தின் அடிபடையில் அவரவர் வாழ விரும்பியபடி வாழலாம் என்பதற்கான சூழல் வேண்டும்.பொருத்தமான மனமக்களாக அமைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் அனேகமாக இன்னோரு ஆடவரோடு இல்வாழ்வில் ஈடுபடவிரும்புவதில்லை .விரும்பினால் மற்றொரு வாழ்வை அமைத்துக் கொள்வது அது அவரவர் சொந்த விருப்பம்.குடிகார கொடுமையான பெண்பித்தனான நடவடிக்கை உடைய ஆண்கள் இந்த வித பழக்கங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட கடூரமான வார்த்தைகளை மனைவி மேல் அக்னி மழை போல் கொட்டும் ஆடவர்களும் உள்ளனர்.இதற்கு சில சமயம் பெண்களே உடந்தை .இந்த வகையான வார்த்தைகளால் கணவனை வாட்டும் பெண்கள்கூட உள்ளனர்.எங்கோஒரிருவர்கள் படாதபாடுபட்டு ஒரு வழியாக கணவன் என்ற கொடுமையில் தப்பி அப்பா பட்டதே போதும் ,இன்னொரு கல்யாணமா ? கனவில் கூட வேண்டாம் என்று முடிவெடுத்து தெனாலிராமன் வளர்த்த சூடு கண்ட பூனை போல் வாழ பயந்து விலகி ஓடுபவர்களும் இருப்பது சகஜமே. தேசிய மகாகவி பாரதியார் அவர்கள் தெளிவாகவும் தீரத்துடனும் பேசுகின்றார். பொதுவாகவே விதவை விவாகம் என்பது சான்றோர் நூறு சதவீதம் ஆமோதிக்கவில்லை என்பதே வருந்ததக்க உண்மை. இல் வாழ்வை ஏதோ ஒருவகையில் இழந்துவிட்ட பெண்கள், தியாக குணம் கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன்வர வேண்டும் என்றே எதிர்பார்த்தனர்.

ஆனால் பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார். தீர்க்கமாக தீர்மானமாகவீர முழக்கமிட்டார். என்றே சொல்லவேண்டும். மகாகவி பாரதியார் அவர்கள் “நான் ஸ்வாமி விவேகானந்தரையும் மகாத்மா காந்தி அவர்களையும் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால் விதவைகளின் மறுமனம் பற்றிய கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றேன்.என தீரத்துடன்தன் கருத்தை வெளியிடுகிறார்.(இந்த தகவல் சொல்லின் செல்வர் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவிலிருந்து)

மஹாகவி பாரதியார் ஒரு மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதா தேவியை சந்தித்து பெண்களை ஆண்கள் நடத்துவதைப் பற்றியும் நடத்தவேண்டிய முறைப்பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்து அது பற்றி சிந்தித்து பிறகே அந்த கருத்துக்களின் உண்மையை மனசாட்சியுடைய உந்துதலன் அறிந்து தெளிந்த பிறகே வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பமில்லை காண் என்று கும்மியடி என தன்னுடைய மகிழ்வான சுதந்திர வெளிப்பாட்டை கும்மியடித்து கொண்டாடுகிறார் என்கிறார்.

இதில் இருந்து நாம் உணர்வது வஞ்சனையின்றி ,பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் வாழ நேர்மையே உருவானவளாக ,உண்மையே உரைப்பவளாக ஞானத்தின் செல்வியாக கலைமகளின் மகளாக வருகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்.சுத்தானந்த பாரதி கண்ட புதுமைப்பெண் தங்கதட்டான் உதவியின்றி, சாய மினுக்கின்றி, ஒப்பனைகள் ஏதுமின்றி சுதந்திரமே வடிவாக , ஞானமே அழகாக ஒப்பில்லாக்கன்னி அவள் உலக வலம் வருகின்றாள். இந்தியப் பெண்கள் அனைவரிடமுமே இந்த குண நலன்களையே இன்றும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.சமூக நல ஆர்வலரான சான்றோர்கள் அப்படியின்றி இன்றுள்ள ஆபாசமான சுவரொட்டிகள் அருவருப்பான காட்சிகள் கொண்ட அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் நாற்படையாக நடந்தால் —-

நீச்சல் தெரிந்தவர்க்கு கூட ஆற்றின் போக்கோடு நீச்சல் அடிப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் நீச்சல் தெரிந்தவருமே கூட எதிர் நீச்சல் அடிப்பது சிரமமே .இதில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளினால் சிலர் அப்படியும் அமைந்தும் அதயும் சமாளித்து எதிர் கரைஏறிய சிலர் அந்தந்த காலகட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்ப காலத்தின் கட்டாயத்தின் பிடியில் சிக்கித் திணரி சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆயுதங்களோடு போருக்கு வரும் உறவினர்களின் தாக்குதல்களுக்கு நடுவே, நியாயமான விருப்பங்களுடன் நேர்மையான நடத்தையும் கூடவே இவர்களைப் படைத்த இறைவன் தானே என்னையும் படைத்தான் என்ற திட நம்பிக்கைதுனைவர போர்புரிகின்றனர்.முட்புதர்களுக்கு நடுவே வெற்றுக் கால்களோடு நடந்து ஒற்றையடி பாதை ஒன்று உருவாக அதில் பாதுகை அணிந்த பல பாதங்கள் நடந்து நடந்துபாதை சிறிது சீர்பட்டது, அகலப்பட்டது. அப் பாதையில் இன்று வண்டிகள் செல்லத் தொடங்கி விட்டன,

முட்புதரில் வெற்றுக்காலோடு நடக்கத் தொடங்கியவர் டாக்டர் சுப்பு லட்சுமி ரெட்டி. இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவம் படிப்பதற்காக புதுக்கோட்டை மன்னர் வரை சென்று அழுது தொழுது போராடி அனுமதி பெற்றார். ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்க அனுமதியின்றி திரையிட்டு வாசலுக்கு அருகில் அமர்ந்த முதல் பெண்மணி மருத்துவரான டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி.

தட்டச்சு உதவி: உமா சண்முகம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.