சுவாமி விவேகானந்தர்

சுலோசனா

5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை பண்பாட்டு பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.

மகான்கள் பூமிக்கு வருவதன் நோக்கம்

1300 (42)

தாய்மையின் பங்கு

விவேகானந்தரின் இளமைப் பருவம் இந்திய பண்பாட்டின் உயர்வு . விவேகமும் வைராக்கியமும், ஒழுக்கம், தன்னை வளர்த்தல், சகோதரத்துவம்,சேவை மனப்பான்மை, சராசரி மனிதர்களாகப் பிறக்கும் எத்தனையோ உயிர்களை கடைத்தேற்றுவதின் பொருட்டு சாதாரண மனிதன் சான்றோன் எனும் நிலையை அடையும் பொருட்டே மகான்கள் இறை அருளால் மண்ணில் வந்து பிறக்கின்றனர். பிறவாநிலையை எய்திவிட்ட அவர்கள் நம் பொருட்டே இங்கு வருகின்றனர்.

சத்குரு தியாகராஜசுவாமிகள்,இவர்களை வணங்கி,எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு” என்று பாடுகின்றார். எத்தனயோ மகான்கள் –அத்தனை பேருக்கும் வந்தனம் என்று நாமும் வணங்க கடமைபட்டிருக்கின்றோம். சுவாமி விவேகானந்தர் பல விதங்களில் பூர்ணத்துவம் அடைந்த ஒரு மாபெரும் மகான். அறிவார்ந்த பக்தியில் குருவின் சேவையில்,நாட்டுப்பற்றில் மனித குலத்திற்கு செய்யும் சேவையில் என பலவித கோணங்களிலும் பரிமளிக்கின்றார். அவருடைய குருவான பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சிந்தனைகளையும் இந்து மதத்தின் உள்ளார்ந்த தத்துவங்களையும் ஸ்ரீராமகிருஷ்னரின் சர்வ சமயசமரச கருத்தை உலகெங்கும் முழங்கியவர். அவரின் தாய் திருமதி புவனேஸ்வரி ஓர் உயர்ந்த பெண்மணி. இந்திய
பண்பாட்டின் எடுத்துக்காட்டான குணம் வேண்டி மகனுக்கு தெய்வ சிந்தனையை அன்னத்தோடு அன்பாக ஊட்டி வளர்த்தார்.

“எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பறிது”

எனும் வள்ளுவரின் வாக்கின்படி ஆராயும் மனப்பான்மை அவரோடு சேர்ந்து வளர்ந்தது. வக்கீலுக்கு படித்துக் கொண்டிருந்தவர் பகவான் இராமகிருஷ்ணரின் சிஷ்யர் ஆனதும் பின்னாட்களில் அமெரிக்காவில் இந்து சமயத்தின் சார்பாகப் பேசி உலகப் புகழ் அடைந்ததும் உலகமறிந்த வரலாறு அவர் குழந்தைகளையும் இளைஞர்களையுமே நாட்டின் செல்வங்களாக கருதினார். இன்று ஒழுக்கமுடனும் வீரத்துடனும் திடமான உடம்புடனும் வளர்க்கப்படும் சிறுவர் சிறுமியரே நாளை இந்தியாவின் நல்ல குடிமக்கள் ஆவர் எனக் கருதினார்.

துறவியாயினும் சுவாமியால் தாய் நாட்டுப் பற்றை துறக்க முடியவில்லை.

இளைஞர்கள் பொது அறிவால் தங்களைத் தாங்களே நல்ல முறையில் பண்படுத்திக் கொள்ள முடியுமெனக் கருதினார்.விவேகமும் வைராக்கியமும் மனிதனை அவன் லட்சியத்திற்கு அழைத்துச் செல்லும் என்றார்.நல்ல முடிவுகளை எடுப்பது விவேகம்.எடுத்த முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள தேவைப்படுவது வைராக்கியம்.எடுத்த முடிவை படிப்பில் தொழிலில் முன்னேற வைராக்கியம் தேவை. படிக்க உழைக்க எவ்வளவு நேரம் தேவை,அந்த நேரத்தை எப்படி தேடுவது? பிடித்த சில விஷயங்களை அனுபவிப்பதில் அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.விளையாடுவது அளவோடு.மாலை முழுதும் விளையாட்டு என்கின்றார் மகாகவி பாரதியார்.காலை எழுந்தவுடன் படிப்பு என்கின்றார்.நாளின் தொடக்கத்திலேயே கல்வியை பயிலவேண்டும் என்கின்றார்.டி வி பார்ப்பதில் விடியோ கேம் விளையாடுவதில்லை என்பதெல்லாம் வைராக்கியத்தின் அடையாளம்.தொழில் கல்வியோ வேறுவிதமான கல்வியோபயின்று ஒரு நல்ல திறமைசாலியாக எடுத்துக் கொண்ட துறையில் வளருவதே வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒருவர் செய்ய வேண்டிய அவசிய கடமை.ஒழுக்கமான சிறுவனே சிறந்த இளைஞனாக வளர முடியும்.அவனே நல்ல மகனாக நல்ல சகோதரனாக, நல்ல கணவனாக,சிறந்த தந்தையாக உருவாக முடியும்.சகோதரமனப்பான்மை மனித நேயம் இவைகள் சுவாமிஜியின் மனதில் நிறைந்த பன்பான உணர்வுகள்.

ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கருத்தே பகவான் இராம கிருஷ்ணரின் தலையாய கருத்தாகும்.அல்லா எனவும் ஏசு எனவும் ஈசனே எனவும் அழைப்பதெல்லாம் ஒரு இறைவனையே என்கின்றார் பகவான். பாணி என்றும் வாட்டர் என்றும் தண்ணீர் என்றும் ஜலம் என்றும் அழைக்கபடுவதெல்லாம் , நீரான ஒரு பொருளையே குறிக்கும் என்கின்றார்.

அடுத்து சேவை மனப்பான்மை;-

இயன்றவருக்குத் தன்னால் இயன்ற உதவியை செய்வதே சேவை எனப்படும்.சுய நல மிக்க இந்த உலகியல் வாழ்வில் பிறருக்காக செய்வதுபதிலுக்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வது இதே மனிதாபிமானத்தின்,மனித நேயத்தின் அடிப்படையில் செய்யப்படுவது ,இதுவே சேவை என்பதன் பொருள்;

திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில்

யாவர்க்குமாம்,இறைவர்க்கோர் பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஓர் வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி

யாவர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே

என்கிறார்.குறைந்தபட்ச உதவிகள் இவை.எதுவும் இயலாவிட்டாலும்,ஆதரவான ஆறுதல் வார்த்தைகள். உண்ணும் போது ஒரு கைப்பிடி சோறு,இவை யாவராலும் முடிந்ததுதானே.உலகில் மனிதரிடையே சகோதரத்துவம் வந்துவிட்டால்,தீவிர வாதம் எங்கிருந்து வரும்.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனர் சத்திய வாக்கே. அப்துல் கலாம் ஐயா அவர்கள் உலக அரங்கில் உரைத்தார்.மற்ற நாட்டினரும் போற்றும் பண்பாடு, பாரத பண்பாடு,அதை காப்பாற்றவேண்டியது இளைய தலைமுறையினரிடமே இருக்கின்றது.

ஜனனீம் சாரதாதேவிம்,

இராம கிருஷ்ணம் ஜகத்குரும்

பாத பத்மே த்யோச்ருத்வா

பிரணமாமிமுஹீர்முணிலஜிஹீ

நம ஸ்ரீ யதிராஜாய விவேகானந்த சூரயே

ஸத் சித்சுகஸ்வரூ பாயே

ஸ்வாமினே ,தாப ஹாரினோ.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.