பாரினில் பாரதப் பெண்கள் (2)

இதிகாசமும்- சரித்திரமும் காட்டும் பெண்மை

பாரினில் பாரதம்

வேதசாரமான இதிகாச புராணங்களில் வரும் பெண்மணிகளையே இந்திய பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாக வழிகாட்டுகின்றனர். இந்து சமயம் சார்ந்தோர் இராமாயணமும் மகாபாரதமுமே இந்தியாவின் இந்து மதத்தின் பெருங்காவியங்கள். சீதா தேவியும் கெளசல்யா சுமித்திரை கைகேயி, ஊர்மிளா, அனுசூயா அகலிகை, பக்த சபரி முதலியோர் வனத்தில் வசித்து தவ வாழ்வு வாழ்ந்தவர்கள். சபரி அம்மையைத் தவிர்த்து ஏனையோர் ரிஷி பத்தினிகள். இராமனைப் பெற்ற கவுசல்யா தேவி பதிபக்தி உடையவர்களாகவும் புத்திர பாசம் மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இலக்குவனின் தாய் சுமித்திரை பெரும் ஞானியாக இருக்கின்றாள். வனவாசம் செல்லும் இராமனைப் பின் தொடரும் தன் மகனுக்கு அவள் கூறும் அறிவுரைகள் சமயச் சொற்பொழிவாளர்களால் இன்றும் பேசப்படுகின்றது. இராமனே உன் தந்தை, சீதையே உன் தாய். அவர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்றால் அது உன்னைக் கடந்தே அவர்களை அணுக இயலுமாக இருத்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் கடமையின் கண்ணியத்துடன் பேசுகிறாள்.

சீதாதேவி தன் அன்பிற்குரிய ராமரை வனவாசத்தில் 10 மாதங்கள் பிரிந்திருந்தார். அவளின் சகோதரிகள் ஊர்மிளை சுருதி கீர்த்தி மாண்டவி முதலியோர் 14 வருடங்கள் தம் தம் கணவரை பிரிந்தே வாழ்ந்தனர். ஊர்மிளையாவது இரண்டொரு இலக்கிய கர்த்தாக்களால் பரிவுடன் பேசப்படுகின்றாள். மற்ற இருவரின் பிரிவு அனேகமாக பேசக்கூட படவில்லை எனத் தோன்றுகிறது. போற்றி புகழப்பட்ட பெண்களிடையே பழி சுமந்த பெண் கைகேயி காவியம் நகர வேண்டும் இராமர் கானகம் சென்றே ஆக வேண்டுமென்ற சூழலில் அவள் அதை செய்திருக்கலாம். கூனி என்ற குண சித்திர கைகேயின் செயலில் இருக்கிறது.

இராமர் வாயிலாக நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை என்று ஆரம்பித்து விதியின் பிழை என்கின்றனர். கெளதம முனிவரின் பத்தினி அகலிகை. சரீர வனப்பு மிக்கவள். தேவேந்திரனின் சூழ்ச்சிக்கு இரையாகி முனிவரின் சாபம் பெற்றவள். இராமனின் பாதத்துளி படும்வரை கல்லாக இறுகிப்போய் கிடந்தவள் இன்றும் சமயம் சார்ந்த சொற்பொழிவுகளிலும், பட்டிமன்றங்களிலும் இவளின் வாழ்வு பேசப்படுகின்றது. தவறுக்கான தண்டணை அனுபவித்ததுடன் முனிவர் மறுபடியும் அவளை மனமாற ஏற்கிறார்.இந்திரனின் அருகாமையில் இவன் என் பதி அல்ல என உள்ளுணர்வு உணர்த்தாமல் ஜடமாக இருந்ததால் உணர்வற்று கல்லாகவே கிடக்க குமிடிமுனி புங்கவர் தண்டனை தந்தாரோ எனத் தோன்றுகிறது. ஆனாலும் தண்டனைக் காலம் முடிந்தபின் அகலிகையை தன் பத்தினியாகவே ஏற்றுக் கொண்டது பழமையான காவியத்தில் புதுமையான முற்போக்கு பெண்மையை போற்றுதலைக் காண்கின்றோம்.

காவியத்தில் பெண்மையின் மாண்பு பெற்ற மண்டோதரி ஏழு பத்தினியரில் ஒருவள் எனும் சிறப்பை பெற்றவள். சிறந்த சிவ பக்தனை கலை நுணுக்கம் மிக்க வீரனை கணவனாகப் பெற்றவள்.கண்ணியமற்ற கணவனின் செய்கையால் துன்ப உணர்வையே அடைந்தாள். அவள்தான் வணங்கத்தக்க ஏழு சிறந்த பத்தினியரில் ஒருவராக வைத்து சிறப்பிக்கப்பட்டிருக்கின்றாள்.

பக்த சபரி வேட்டுவக் குலத்தில் பிறந்த பெண்மணி. பிறந்ததில் இருந்தே உலகின் மாயைகள் ஒன்றிலும் சிக்கிக்கொள்ளாமல் ஆன்மீக ஆன்ந்தத்திலேயே திளைத்தவள் பக்த சபரி. இயல்பாகவே இந்த நிலை அம்மையாருக்கு அமைந்திருந்தது. இளம் வயது முதலே குருவினுடைய பணிவிடைகளிலேயே வாழ்ந்தவர். குருவின் சொற்படியே இராமரின் வருகைக்காகவே தவமியற்றி இராமரின் தரிசனம் பெற்று நற்பேறு பெற்றவரானார். எக் குடியில் பிறப்பினும் அப்பிறவியிலேயே இறைவனை அடைய தடையேதும் இல்லை என பெண்குலத்தின் சார்பாக நிரூபித்தவர் இவ்வம்மையார். வியாச முனிவரால் சொல்லப்பட்டு ‘ஓங்காரமூர்த்தியான’விக்னேஷ்வரரால் எழுதப் பெற்ற சிறப்பை உடைய மகாபாரதம். இதில் வருபவர்களான வனிதா மணிகளில் மூத்தவள் வியாஸ பகவானுடைய மகளாகும். பெரும் பேறு பெற்றவள் மச்சகந்தி எனும் பரிமளகந்தி. இவளின் மீது மகாராஜா சந்தனு கொண்ட மோகத்தின் விளைவாக அரசியானவள்.

ஆனால் விரைவிலேயே வேதனையை வெகுமதியாகப் பெற்றாள்.வம்சத்தை வளர்க்கும் பெறும் பொறுப்பு அவள் தலையில் சுமக்க
வேண்டியவளானாள். வேறு வழியின்றி பராசர முனிவர் மூலம் தனக்குப் பிறந்த வியாசரையே தம் வம்சம் வளர வரம் கேட்க வேண்டியவள் ஆனாள்.வம்சமும் வளர்ந்தது.சகோதரர்களுக்கு இடையே வன்மமும் வளர்ந்தது அதன் விளைவாக மகாபாரதம் எனும் மகா காவியம் பிறந்தது.அடுத்த ராஜமாதாக்களான குந்திக்கும் காந்தாரிக்கும் கிட்டதட்ட அவளின் நிலையே ஏற்பட்டது. புத்திர பாசத்தினால் மன அலைச்சலும் உளைச்சலுமே மிச்சமாயிற்று.காந்தாரி கண் அற்ற கணவனின் பொருட்டு திருமணத்திற்கு முன்பே கண்களைக் கட்டிக்கொண்டு கணவன் அனுபவிக்காத கட்புலனினின்பத்தை தானாகவே உதறினாள்.குந்தி போஜனின் புத்திரியான குந்தி தேவி ,தனக்கு வரமாககிடைத்த மந்திரத்தையே சாபமாக மாற்றிக் கொண்டாள்.,என்கிறார்கள்.அவளின்
அந்த கன்னிப்பருவத்தில் ஆராயும் அறிவு இன்மையினால் என்கின்றனர்.ஆனால் அரசகுமாரன் பாண்டுவை மணந்த பின்பு சூழ்நிலையின் உந்துதலில் அந்த மந்திரமே வாழ்விற்கு வரமாக மாறி அவளுக்கும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாந்திரிக்கும் மக்கட் பேற்றை நல்கியது.இருந்தாலும் தன் திருமணத்திற்கு முன்பே பிறந்த சூரிய புத்திரன் கர்ணனும் குந்தியும் பட்ட மனவேதனையும் கர்ணனுக்கு நடந்த அவமானங்களும் இன்றும் கேட்டவர் மனம் உருகும் தன்மையை உடையதாக இருக்கிறது.

இந்த ஒரு காரியத்திலேயே இரண்டு பிறவிகளைப் பார்த்துவிட்ட சிகண்டி எனும் பூண்ட பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறு தவறு செய்யாத பெண் பீஷ்மரால் சிறை பிடிக்கப்பட்டு அங்கும் இங்குமாக அலைந்து அவதியுற்று முடிவு காணாமல் பின் தவம் புரிந்து தன் துன்பத்திற்கு காரணகர்த்தாவான பிதாமகன் பீஷ்மர் முடிவுக்கு தானே காரணமாக வேண்டும் எனும் வரத்தை வேண்டிப் பெற்றவள் மகாபாரதத்தில் இந்த பகுதியை தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அனைவரும் அறிந்ததே ஆனால் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது.காந்தர்வமணமும் சுயவரமும் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்காலத்தில்தான் ஆணின் ஆதிக்கத்தையே காட்டுகிறது .பெண்மை எனும் பெறும் உண்னமக்கு காவியத்தில் கதாநாயகனான கண்ணனே பெருமதிப்பளித்து பல விதத்திலும் அபயம் அளித்து ஆறுதல் அளிக்கின்றார்.திரொளபதியை காத்தது ஒரு விதம் எனில் குந்திதேவிக்கு பல விதத்திலும் துன்பத்திற்கு ஆளான அவளுக்கு ஞானம் எனும் அருட்செல்வத்தை வழங்குகின்றார். கண்ணா எனக்கு துன்பத்தையே தா அப்பொழுதாவது நான் உன்னை மறவாமல் இருப்பேன்.ருக்மணி தேவிக்கும் அடைக்கலம் அளித்து ப்ரேம பாவத்திற்கும் தெய்வாம்சம் பொருந்திய இராமரின் மனைவியாக இருப்பினும் சரி ஒரு சலவைத தொழிலாளியின்
மனைவியாக இருப்பினும் சரி நெருப்பில் தோன்றிய நெறி மிகுந்த தங்கையாக இருப்பினும் பாண்டவர் ஐவரின் பத்தினியாக இருப்பினும் சரி அவளின் மான ம் மரியாதைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மூத்தோர்கள் நிறைந்த சபையில் ஆண் ஒருவனாக பெண் ஒருத்தியின் ஆடை பகிரங்கமாக பல வந்தமாக பறிக்கப்பட்டது என்பதே காவியத்தில் காணப்படும் உண்மையாக இருக்கின்றது.பாதிப்பிற்கு உள்ளானவள். நெருக்கமான உறவினர்களைப் பார்த்தாள் ,குலத்தின் மூத்தோர்களைப் பார்த்தாள்.பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாளே தவிர பலன் ஒன்றுமே இல்லை. கதியற்றவள் என்று உணர்ந்தபின்பு தான் கடவுளை அழைத்தாள்.பரிதவித்தப் பின்புதான் பரமனைக் கூவினாள்.படைத்தவன் பாராமல் இருப்பானா?ஆண்டவன் அருளால் மட்டுமே அவமானத்தில் இருந்து காப்பாற்றப்பட்டாள்.அனைத்து ஜீவன்களுக்குமே இதுதான் கதி
இதுவே விதி.ஆனாலும் ஒரு உண்மை தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.தெய்வாம்சம் பொருந்திய அரசன் முதல் அதே மன்னில் வாழும் சலவைத் தொழிலாளி வரை அவன் தன் மனைவியை ,துனைவியை ,அரசனானால் தன்னுடைய அரண்மனையை விரட்டும் அல்லது வெளியேற்றும் உரிமையை பெற்றிருந்தான்.

இது நம் வீடு .அதாவது எனக்கும் கூட இதுதான் வீடுஎனும் உண்மையின் உரிமையை நடைமுறைப்படுத்த அந்த நாட்டின் ராணியாலும் முடியவில்லை. நாட்டின் குடிமகளாலும் இயலவில்லை.என்பதுதான் உண்மை.வீட்டை விடு வெளியில் நடந்தே ஆகவேண்டும். வெளிஉலகம் எனும் வெய்யிலில் காய்ந்தே ஆக வேண்டும். அசோக வனத்தில் சீதாபீராட்டியை அனுமன் பார்க்கின்றார்.தாயே நான் உன்னை இங்கிருந்து கொண்டு சென்று ஸ்ரீராமனிடம் சேர்ப்பேன் வருவீர்களாக என்று வேண்டும் பொழுது பிராட்டியானவர் அனுமனே மூவுலகங்களையும் ஒரு சொல்லினால் சுடுவேன்.ஆனால் அது ஸ்ரீராமருடைய வில்லுக்கு புகழ்
அன்று என்று பொறுமையுடன் இருக்கின்றேன் என்று தன் சக்தியைகணவனின் வீரத்திற்கு பின்னே வைத்தே பேசுகின்றார். கம்பராமாயத்தில் இப்படிபட்ட சீதாதேவி வனத்தில் வால்மீகியின் ஆஸ்ரமத்தில்தங்கியிருந்து தன் மக்களை பெற்றெடுக்கின்றாள். சூழ் நிலைக்காரணமாக ஆஸ்ரமத்தில் வளர நேரிட்டது.அவதாரமே ஆனாலும்

ஏக பத்தினி விரதனாக இருந்தும் ராஜாராமந்தான் முதலில் நிற்கின்றார்.சீதாராமன் ராஜாராமனின் பின்னால்தான் நிற்கின்றார். இன்னும் வரிசைகரமாக சொல்லப்போனால் தசரதராமனான,தாசரகி தான் முதலில் பித்ரு வாக்கிய பரிபாலனத்திற்குப் பிறகு தான் இராஜாராமன் அதன் பிறகுதான் சீதாராமன்.

சீதை துயருற்றுதலுக்கு இனையாக இராமனும் துயருற்றாலும் கூட நம் அனுதாபம் என்னவோ பிராட்டியாரின் பெயரில்தான்.பூமித்தாயின் புதல்வியாக கருதப்படும் சீதாதேவி,ஞானியான் ஜனக மகாராஜனால் வளர்க்கப் பெற்றவள். மகாராஜாவான தசரதனின் மூத்த புதல்வனான மனித வாழ்வின் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டான இராமபிரானை மணந்தும் ஒரு நிலையில் கருவுற்ற நிலையில் கானகத்தில் தனியே விடப்பெற்றாள்.என்பதுதானே என் கண்முன்னிற்கும் காட்சி நம் கண்களும் கலங்கும் காட்சியுங்கூட.

எந்த நிலையிலும் எந்த சூழலிலும் பெண்மை எனும் தன்மை ஆண்மையின் ஆளுமைக்கு அடங்கி நடந்தது, தன்னுள் இருக்கும் சக்தியை யும் அடக்கி வைத்துக் கொண்டது.இந்தியாவில் ஹிந்து சமயம் சார்ந்தே பெரும்பாலும் அரசுகள் அமைந்து அரசு புரிந்தன.மன்னன் சார்ந்த சமயமே அனேகமாக மக்கள் பின்பற்றும் சமயமாகவும் இருந்தது.வடக்கில் ராணி ஜீஜாபாய் தன் மகன் சிவாஜியை ஒரு நல்ல ஹிந்து சமயம் சார்ந்த அரசனாக வளர்த்திருந்தார்.தேவி பவானி யை தன் வழிபடும் கடவுளாகக் கொண்டிருந்த சாம்ராட் சிவாஜிதான் பிறந்த நாட்டையும்பெற்றெடுத்த தாயையும் தெய்வமாகவே போற்றி வணங்கினார்.அவரிடம் அமைந்திருந்த மனித நேயமிகுந்த ஒழுக்க உணர்விற்கு மூலகாரணம் அன்னை ஜீஜாபாயே ஆவார்.முகமதியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த அக்காலத்தில் இந்து முஸ்லிம் வேற்றுமை உணர்வு சகஜமாக இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் பகை வெறுப்பு முதலிய மாறுபாடான குணங்கள் மனிதர்களை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தன.ஒரு சமயத்தை சார்ந்த மங்கையர் மற்ற சமயத்தை சார்ந்த அரசனையும் குடி படைகளையோ கண்டால் மானம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டி அஞ்சி விலகி ஒடினர்.இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிவாஜியின் சிப்பாய்களுள் பேரளகியான ஒரு முகமதியப் பெண்ணை சிறை பிடித்தனர். அவளை கொண்டு வந்து தங்கள் தலைவன் முன் நிறுத்தினர் .அவளின் பேரளகைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.அவளின் அழகை வியந்து கேட்ட சிவாஜி அவளின் முகத்திரையை சற்றே விலக்கி அவளை அவளுடைய பேரழகின் பிராகசத்தை ஒரு கணம் நோக்கினார்.மறுகணம் தாயே உன் மகனுக்கு உன் பேரளகில் ஒரு துளியாவது
வாய்க்கும் அல்லவா என்று புனிதமான பொருள் பொதித்த வார்த்தைகள் அவரின் வாய்மை வாய்ந்த வாயின் வழியே வந்தன.அடுத்த தன் சிப்பாய்களுக்கு அவர் அளித்த உத்தரவானது,அந்த முகமதியப் பெண்ணின் பெண்மைக்கு மரியாதைக்கு வேதங்களின் சாரம் எனப்படுகின்றது. அவர் அளித்த உத்தரவாதமாகியது இந்த தாயை அவளுடைய இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்து விடுங்கள். இந்த சம்பவம் சத்ரபதி சிவாஜியின் சாண்றாமைக்கும் பேராமைக்கும் சான்றாக சரித்திரத்தில் பதிவாகியுள்ளது.இந்த சரித்திர புருஷனின் சான்றாமைக்கு அடிநாதமாக அமைந்திருப்பது அன்னை ஜிஜாபாயின் அருமையான
வளர்ப்பு அன்பு மகனுக்கு அமுது ஊட்டும்பொழுது எல்லாம் நல்லறிவையும்சேர்ந்து ஊட்டிய தாய்மையின் பக்குவம் வாய்ந்த பண்பட்ட மனம் ஒரு தாயின் தவிர்க்கமுடியா கடமையை செவ்வனே ஆற்றிய பெண்ணின் பெருஞ்சிறப்பு.

தாய் நாட்டிற்கு தன் கடமையை ஆற்றி புரவியே போர்களத்தில் புகுந்த ஜான்சிராணி லக்ஷ்மிபாய் திரைபோட்டு முகமலர் மறைத்து அகத்தின் உள்ளேயே வாழ்ந்த அந்நாளில் இன்றுநான் ஆணாகவும் செயல் புரிகின்றேன் என புகன்ற வீரமணி ஜான்சியின் ராணி.தந்தையையும் தகமை வாய்த்த கணவனையும் போர்க்களத்தில் பலியிட்டபின்பும் தன் பால் மனம் மாறா பாலகனை வாழ்த்துக் கூறி போருக்கு அனுப்பிய தமிழகத்தின் தாய்மார்களை தமிழ் இலக்கியங்கள் அறிமுகப்படுத்துகின்றன.தேசப் பிதா மகாத்மா காந்திக்கு கிரியா ஊக்கியாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து ஒளி வீசிய மங்கையர் திலகமாம் தில்லையாடி
வள்ளியம்மையை அந்த தமிழ்ச் சுடரின் ஒளியை தரிசனம் செய்பவர்கள் எத்தனை பேர்கள்? வங்கம் தந்த தங்கம் வேதாந்த சிங்கம் உலகின் அனைவருக்குமுரிய ஆன்ம தத்துவர் எனும் ஞான ஓளி அது இந்திய மண்ணிலேயே இருப்பதைக் கண்டு உலகிற்கே வாரி வழங்கிய வள்ளல் சுவாமி விவேகானந்தர்.துறவும் தொண்டுமே இரு கண்களின் ஒளியாகக் கொண்டவர் அவரை பெற்ற பெரும் பாக்கியம் கொண்ட அன்னை புவனேஸ்வரி தேவி.தன் தாயின் சிறப்பை ச்வாமி விவேகானந்தரே கூறுகின்றார். என்னிடம் இருந்து எதெல்லாம் நல்லவையாக வருகின்றதோ அவையெல்லாம் என் அன்னை எனக்கு அளித்த வைகள் ஆகும்.இந்தியாவில்
பெண்மை என்பது தாய்மைஎன்ற நிலையிலேயே பெரிதும்வெளிப்படுகின்றது.அடுத்து தங்களின் பவித்தரத்தை காப்பாற்றிக் கொள்ள வலிய உயிர் தியாகம் செய்தவர்கள் எத்தனை அயிரம் பேர்கள்.அந்நிய நாட்டில் இருந்து வந்து புகுந்தவர்கள் மண்ணை தொட்டதோடு அல்லாமல் பெண்ணையும்தொடும் கேவலமான எண்ணம் கொண்ட பொழுது பசுங்கிளி போன்ற பரம அழகிகள்துஉயிரை துச்சமாக மதித்து தங்களின் மானத்தைக் காத்து பண்பாட்டை க்காக்கவும் உயிர்த் தியாகம் செய்தனர் .அந்த புனிதவதிகளை இன்னும் பாரதமே கை கூப்பி த் தொழுகின்றது.

அந்நியனை சொந்த மண்ணை விட்டு ஒட்டவேண்டும் என்று தானே புரவியேறி போர்க்களம் புகுந்த ஜான்சியின் ராணி லஷ்மிபாய் .வாரிசு இல்லாத நாட்டை அந்நிய அரசாங்கம் தனக்கே உடமை ஆக்கிக் கொண்டது.ஜான்சியிலும் அவ்வாறு நடக்க முடியாதவாறு முடிந்தவரை எதிர்த்து போராடினார். அந்த வீர மங்கைதாய் மண்ணிற்காக தனது தத்து புதல்வனுடையே போர்க்களம் புகுந்தார்.அதே போன்று தெற்கிலும் வீரமங்கை வேலுநாச்சியார் .அந்நிய அரசை அடியோடு எதிர்த்தவர்களில் ஒரே பெண்மனி.இவர்கள் எல்லாம் சின்னஞ்சிறு பிரதேசத்திற்கு உரிமையான அரசிகள்.சூரியன் அஸ்தமிக்காத புகழையுடைய பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரத்தை மிகுந்த துணிவோடு எதிர்த்து நின்றார்கள்.எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியே ஆனாலும் அவர்களுடைய நாடு பிடிக்கும் பேராசையை பெருந்துணிச்சலோடு எதிர்த்து நின்றார்கள். அதுவும் இந்தியாவில் பெண்கள் நிலை என்ன? ஆணின் தோழுக்கு பின்னே நின்றே வெளிஉலகை எட்டிப் பார்க்கும் நேரம் ஆடவர் முன்பு பெண்வருவதே அரிதான சமயம் தாய் நாட்டுப்பற்று அவளுக்கும் இரத்தத்தில் கலந்திருந்தது.தேசப்பிதா என்ற புகழை அடைந்த மகாத்மா காந்தி அடிகளுக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் ஒரு பெண்ணே அந்த சின்னஞ்சிறுமி தமிழ் நாட்டில் உள்ள தில்லையாடி என்ற ஊரை சேர்ந்த வள்ளியம்மை எனும் தமிழ்ப் பெண்ணே.சுதந்திர போராட்ட வீரர்களுக்கு த் துணையாக அவர்களின் பின்னால் நின்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.தாயாக மனைவியாக சகோதரியாக ஆணுக்கு பல உறவாக இருக்கும் பெண்மை தாய் நாட்டிற்காக அதன் சுதந்திரத்திற்காக தன் உடமைகள் அனைத்தையும் கொடுத்தாள்.அதுவன்றி தன் சுகங்களையும் உரிமையையும் தியாகம் செய்தார்.தமிழ் நாட்டில் இதற்கு சரியான எடுத்துக்காட்டு கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி அவர்களின் துணைவியார் அவருடைய சகதர்மினியாக மிகுந்த மகிழ்வுடன் அவருடைய தீரமிக்க செயல்களுக்கு உறுதுணையாக கூடவே இருந்தார் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

கொடிபிடித்த குமரன்மனைவியார் இன்னும் தெரிந்ததும் தெரியாததுமாக எண்ணற்ற பெண் மணிகள் பின்னணியில் இருந்திருக்கின்றனர்.பொதுவாக இந்திய பெண்கள் இந்திய பண்பாட்டுடன் இயல்பாகவே ஒன்றியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பாரதத்தின் பண்பாடு இந்திய கலாசாரம் என்பது இந்தியர்களால் மட்டும் அன்றி மற்ற நாட்டாரும் மதிக்கத்தக்க உயர்வு பெர்றது.அது தூய்மையும் தியாகமும் தாய்மையும் மட்டுமே அதிகமாக மிளிர்கின்றது.இந்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண் மணிகள் இந்தியாவில் இருக்க இந்தியாவில் இல்லாதது ஒன்றுமில்லை .அப்படிபட்டவர்களுக்கு அன்பும் நன்றியும் கலந்த வண்க்கங்கள் உரித்தாகுக.எல்லாம்வல்ல இறைவன் பாரத பெண்களுக்கு அதன் பண்பாட்டை உயிரோடு உயிராக கலப்பாராக.உலக நாடுகளில் பாரதத்தினுடைய உயர்வு என்றுமே உயர்வாகவே இருக்கும்.

தொடரும்

தட்டச்சு உதவி : உமா சண்முகம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க