Tag: ரா. பார்த்த சாரதி

  • தாயும் குழந்தையும்

    மண்ணுக்கு மரம் பாரமாகுமா, 
    மரத்திற்கு  கிளை பாரமாகுமா, 
    கொடிக்கு  காய் பாரமாகுமா 
    குழந்தை தாய்க்கு பாரமாகுமா 
    பிழைப்பிற்காக குழந்தையை 
    தோளை தூளியாக்கிச் சுமந்து 
    வயிற்று பிழைப்பிற்காக தினம் 
    சுமந்து செல்லும் மலைஜாதிப் 
    பெண்ணே !
    உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன் 
    உழைத்து பிள்ளையை காப்பாற்று 
    கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி 
    நல்லறிஞ்சனாய்  வளர்ப்பாயாக 
    இன்று உன் நிழலில் உன் பிள்ளை 
    நாளை அவன் மடியில் உன் தலை 
    அவனே உன்னை தாங்கும்  தூண் !
    என எண்ணி செயலாற்று !

    ரா.பார்த்தசாரதி 

    Share
  • உலக சூற்று சூழல் தினம்

     

    நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வை

    தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து வை

    காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.

    வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

    இன்று தண்ணீரும், காற்றும் மாசு படுகின்றதே

    இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே

    கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ் இனங்கள் இறக்கின்றதே

    காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே தவிக்கின்றதே !

    சுற்றுப்புறம் தூய்மையாய் இருப்பதற்கு உதவுங்கள்

    தனிமனிதா, தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்

    வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என எண்ணுங்கள்

    குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

    அழகாக வீடு கட்டினால் மட்டும் போதாது

    அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது

    வீட்டைச் சுற்றி குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    மக்களுக்கு மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

    வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம் கொள்

    கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

    கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

    உலகின் சுற்றுசுழலையும் பாதுகாக்க எண்ணம்கொள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஏன் இந்த கொடுமை

     

     

    முத்துக்குளிக்கும் ஊரில் ஓர் கொடுமை நடந்தேறியதே

    அப்பாவி மக்களை காவல் துறை கொன்று குவித்ததே

    அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே

    மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

    இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா

    வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா

    யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே

    சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

    மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே

    துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே

    அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தமுடியுமா !

    கல்நெஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

    அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறியதே !

    சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே

    மக்கள் உயிரை துச்சமாக மதித்து அரசு ஆட்சி செய்யுதே

    பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே !

    பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி அடக்குவதா

    அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா

    மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்

    போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • சற்றே சிந்தித்துப்பார் மனிதா

    சற்றே சிந்தித்துப் பார் மனிதா !

    பலத்த காற்றிலும் நாணல் வளைந்து கொடுக்கின்றதே
    மனிதா வளைந்து கொடுக்க கற்றுக்கொள் !

    காகங்கள் கற்றுக்கொடுக்கின்றன ஒற்றுமையுடன் கூடி வாழ
    எறும்புகள் கற்றுக்கொடுக்கின்றன சேமிப்பின் சிறப்பை !

    தேனீக்கள் கற்றுக்கொடுக்கின்றன சுறு சுறுப்பின் சூட்சமத்தை
    ஆமைகள் கற்றுக்கொடுக்கின்றன விடாமுயற்சி எனும் பண்பை !

    நாயும், பசுவும் செய்ந்நன்றி என்ன என்பதை அறிவுறுத்துகின்றன
    எருதுகள் தனது கடினஉழைப்பை உதாரணமாக காட்டுகின்றது!

    சிங்கமும்,யானையும், வீரத்திற்கும்,பலத்திற்கும் உவமையாகின்றன
    மயிலும், குயிலும் அழகுக்கும், குரலுக்கும் எடுத்துக்காட்டாகின்றன!

    ஐந்தறிவு ஜீவன்களே நமக்கு நல்லவைகளையே கற்றுக்கொடுக்கின்றன
    ஆறறிவு உள்ள மனிதனே, நீ மட்டும் கெட்டதையே கற்றுக்கொடுக்கின்றாய்!

    ரா.பார்த்தசாரதி

    Share
  • எல்லாமே தப்புதான்

    ரா.பார்த்தசாரதி

     

    தெரிந்தே  குப்பையை  தெருவில்  போடுகிறாய் !

    குப்பையை தொட்டியில் போடவேண்டும் என அறிந்திருப்பாய் !

    வீட்டைப்  பெருக்கி  குப்பையை தெருவில் போடுகின்றாய் !

    குப்பை தொட்டி இருந்தும், தொட்டியின் பக்கத்தில் போடுகின்றாய் !

     

    பிளாஸ்டிக் கழிவையும், மிச்ச மீதிகளையும் வீதிக் கால்வாயில் போடுகின்றாய்

    கழிப்பறையிலும் , சாக்கடையிலும் போட்டு தண்ணீர்  ஊற்றிவிடுகின்றாய் ,

    கட்டிட இடி பாடுகளை கொட்டி, தண்ணீர்  வாராமல் வீட்டை மேடாக்குகிறாய்

    சுயநலத்துடன் உன் வீட்டை  தண்ணீர் புகாமல்  தற்காத்துக் கொள்கின்றாய் !

     

    ஏரி ,ஆறு, குளங்களை ஆக்கிரமித்து பிளாட் போடுகிறோம்,

    பள்ளமான இடத்தில்  கட்டிடங்கள்  கட்டிக்கொள்கின்றோம்,

    விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும், இலஞ்சத்திற்கும் துணை போகிறோம் !

    அதிகாரத்திற்கும்  அரசியல்வாதிகளுக்கும் அடி பணிகின்றோம் !

     

    வெள்ளம்  வந்தபோதுதான்  நமது  இடத்தின் நிலைமை உணர்ந்தோம்,

    எல்லா பொருட்களை  இழந்து   நடுதெருவில்  நின்றதை அறிந்தோம்,

    சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து  மக்களுக்கு ஊறு விளைவித்ததே,

    அரசாங்கமும், மருத்துவ முகாம்  மூலம்  துன்பங்களை தீர்த்ததே !

     

    மக்கள் பட்ட  கஷ்டங்களை  எல்லோரும்  அறிவர்

    சிறு தொகை  கொடுத்து மக்களை திருப்தி படுத்தினர் ,

    சிறுதொகை அளித்ததால்   இழந்ததை மறந்தனர் ,

    பெற்றும், நம் அரசாங்கத்தையும்,அரசியலையும்,குறை கூறினர்!

     

    வரும் தேர்தலுக்கா,    மக்களின்  நல்வாழ்விற்கா

    இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதா !

    எதனையும்  திட்ட மிட்டு செய்வது   நல்லதே

    திட்டம் இல்லாமல் எதையும்  அரசாங்கம் செய்யாதே !

     

    நமக்கு தெரிந்தது  எல்லாம்  பணம் கொடுத்தால் மகிழ்ச்சி

    இல்லாவிடின்  அரசாங்கத்தையும், அரசியலையும் இகழ்கின்றோம்

    ஊழலுக்கும்  இலஞ்சத்திற்கும்  துணை  போகிறோம்

    என்றுமே உணர்வதில்லை  எல்லாமே  தப்புதான் என்று.!

     

     

    Share
  • கல்லறைப் பூவின் கண்ணீர் துளி

     

    கண்ணே! உன் நினைவு

    என்னை என்றும் நினைக்க வைக்கிறது!

    உன் ஸ்பரிசம் என் தேகத்தை

    என்னை என்றும் சிலிர்க்க வைக்கிறது !

    உன்னை கண்ட நாள் முதல்

    என் கண்கள் காதலால் நனைகின்றது !

    உன் இருவிழிகள் கூர்மையான அம்புபோல்

    என் இதயத்தை துளைக்கின்றது !

    உன் உண்மையான காதல்

    என் நெஞ்சை வாட்டுகிறது !

    உன்னோடு வாழ்ந்த வாழ்க்கை

    என் உள்ளத்தில் கோவில் கொண்டுள்ளது !

    உன் மரணமோ உன் கல்லறை பூவாய் கிடந்தது

    என் கண்ணீர் துளிகளால் எழுதப் பட்டிருக்கு!

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • உதிரிப்பூக்கள்

    ரா.பார்த்தசாரதி

     

    இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்

    மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்

    யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே

    மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

     

    நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை

    எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை

    உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !

    எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி !

     

    மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்

    அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்

    பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்

    எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

     

    பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது

    பல கைகள் சேர்ந்தால்தான் ஒரு திட்டம் முடிவாகிறது

    வாசமில்லா  மலருக்கு  என்றும் மதிப்பு  கிடையாது

    நேசமில்லா உறவிற்கு என்றும் உயர்வு கிடையாது !

     

    முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்

    காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை

    எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை

    நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

     

     

     

    Share
  • வேலி தாண்டிய காற்று

     

       ரா.பார்த்தசாரதி

     

    மனிதன் வாழ்க்கையில்   எதற்கெல்லாமோ வேலி  போடுகின்றான்

    குற்றங்களை மறைக்க தனக்குத்  தானே வேலி போட்டுக்கொள்கின்றான்

    அடக்கமான பெண்  கற்பு எனும்  வேலியை தானே போட்டுக்கொள்கிறாள்

    தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !

     

    காற்றுக்கு என்ன  வேலி,  காதலுக்கு ஏது  தோல்வி !

    காதலியின் கண்பார்வையே  காதலுக்கு  வேலி

    பூங்காற்றாய்  மாறிவிடு, புன்னகையால் வென்றிடு

    என் ஜீவன்  வாழ்ந்திட  வாழ்த்துக்கள் சொல்லிவிடு!

     

    காதலினை  தடை  செய்ய ஏது  முள்வேலி ?

    காதலன்,காதலி இடையே ஏது  இடைவெளி

    காதல் இல்லா  வாழ்க்கை  வீணாய்  போகும்

    மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !

     

    பயிருக்கு  பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை

    காற்று வெளிதனில்  காதல் என்பது ஓர்  ஒத்திகை

    வேலியே பயிரை மேயுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா

    வேலி  தாண்டிய  காதல், நிலை பெற்றிடுமா  இருக்குமா !

     

     

     

     

    Share