ரா.பார்த்தசாரதி

 

தெரிந்தே  குப்பையை  தெருவில்  போடுகிறாய் !

குப்பையை தொட்டியில் போடவேண்டும் என அறிந்திருப்பாய் !

வீட்டைப்  பெருக்கி  குப்பையை தெருவில் போடுகின்றாய் !

குப்பை தொட்டி இருந்தும், தொட்டியின் பக்கத்தில் போடுகின்றாய் !

 

பிளாஸ்டிக் கழிவையும், மிச்ச மீதிகளையும் வீதிக் கால்வாயில் போடுகின்றாய்

கழிப்பறையிலும் , சாக்கடையிலும் போட்டு தண்ணீர்  ஊற்றிவிடுகின்றாய் ,

கட்டிட இடி பாடுகளை கொட்டி, தண்ணீர்  வாராமல் வீட்டை மேடாக்குகிறாய்

சுயநலத்துடன் உன் வீட்டை  தண்ணீர் புகாமல்  தற்காத்துக் கொள்கின்றாய் !

 

ஏரி ,ஆறு, குளங்களை ஆக்கிரமித்து பிளாட் போடுகிறோம்,

பள்ளமான இடத்தில்  கட்டிடங்கள்  கட்டிக்கொள்கின்றோம்,

விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும், இலஞ்சத்திற்கும் துணை போகிறோம் !

அதிகாரத்திற்கும்  அரசியல்வாதிகளுக்கும் அடி பணிகின்றோம் !

 

வெள்ளம்  வந்தபோதுதான்  நமது  இடத்தின் நிலைமை உணர்ந்தோம்,

எல்லா பொருட்களை  இழந்து   நடுதெருவில்  நின்றதை அறிந்தோம்,

சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து  மக்களுக்கு ஊறு விளைவித்ததே,

அரசாங்கமும், மருத்துவ முகாம்  மூலம்  துன்பங்களை தீர்த்ததே !

 

மக்கள் பட்ட  கஷ்டங்களை  எல்லோரும்  அறிவர்

சிறு தொகை  கொடுத்து மக்களை திருப்தி படுத்தினர் ,

சிறுதொகை அளித்ததால்   இழந்ததை மறந்தனர் ,

பெற்றும், நம் அரசாங்கத்தையும்,அரசியலையும்,குறை கூறினர்!

 

வரும் தேர்தலுக்கா,    மக்களின்  நல்வாழ்விற்கா

இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதா !

எதனையும்  திட்ட மிட்டு செய்வது   நல்லதே

திட்டம் இல்லாமல் எதையும்  அரசாங்கம் செய்யாதே !

 

நமக்கு தெரிந்தது  எல்லாம்  பணம் கொடுத்தால் மகிழ்ச்சி

இல்லாவிடின்  அரசாங்கத்தையும், அரசியலையும் இகழ்கின்றோம்

ஊழலுக்கும்  இலஞ்சத்திற்கும்  துணை  போகிறோம்

என்றுமே உணர்வதில்லை  எல்லாமே  தப்புதான் என்று.!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *