உதிரிப்பூக்கள்
ரா.பார்த்தசாரதி
இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்
மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்
யாரோ இறந்ததிற்கு எங்களை மிதித்து கொல்கின்றனரே
மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !
நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை
எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை
உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !
எங்களை சூடியவர்களும் அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி !
மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்
அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக அலங்கரிக்கின்றோம்
பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்
எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய் பூசுகிறார்கள் !
பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து பூமாலையாகிறது
பல கைகள் சேர்ந்தால்தான் ஒரு திட்டம் முடிவாகிறது
வாசமில்லா மலருக்கு என்றும் மதிப்பு கிடையாது
நேசமில்லா உறவிற்கு என்றும் உயர்வு கிடையாது !
முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்
காகித பூவிற்கு தரும் கவர்ச்சி எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை
எங்களை மிதிப்பவர்களே நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை
நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று எவருமறியவில்லை