Blog

  • கோவைப் பழத்தை உண்ணும் கிளி – 2

    கோவைப் பழத்தை உண்ணும் கிளி – 2

    குயிலுக்கும் கிளிக்கும் ஒரு வேறுபாட்டைப் பார்த்தேன். பழுத்துத் தொங்கும் கோவைப் பழத்தை அது கொடியில் இருக்கும் நிலையிலேயே குயில் உண்ணுகிறது. கிளியோ அதைப் பறித்து வந்து, ஒரு காலால் பிடித்தபடி உண்ணுகிறது. இதோ, நம் ஜன்னலோரத்தில், கோவைப் பழத்தைக் கிளி உண்ணும் காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Zepto – பத்தே நிமிடத்தில் டெலிவரி

    Zepto – பத்தே நிமிடத்தில் டெலிவரி

    ரூ.10-க்கு ஒரே ஒரு சோப்பு வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம். நாங்கள் பத்தே நிமிடத்தில் இலவசமாகக் கொண்டு வந்து தருகிறோம் என்றால் மக்கள் விடுவார்களா என்ன? ஸெப்டோ (Zepto), ஒரு பெரிய சுற்று வரும்போல் தெரிகிறது. இன்று நம் வீட்டுக்கு டெலிவரி செய்ய வந்த ஸெப்டோ பிரதிநிதியுடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? – கண்டியூர் கே.எஸ்.இராமன்

    நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? – கண்டியூர் கே.எஸ்.இராமன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    என் சித்தப்பா கண்டியூர் கே.எஸ்.இராமன், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வசிப்பவர்.

    ஆழ்வார், நாயன்மார்களால் ஒருசேரப் பாடப்பெற்ற தலம், கண்டியூர். இங்குள்ள ஹரசாப விமோசனர் கோவிலைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோவிலைத் திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த ஊரில் வசிக்கும் கண்டியூர் கே.எஸ்.இராமன், ஊரின் பெருமைகளைச் சொல்கிறார். அனுமனுக்குக் கோவில் எழுப்பியுள்ள இவர், அந்தக் கோவிலில் தினசரி பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். கம்பராமாயணப் பாடல்களை வாயாரப் பாடும் இவர், திருமகள் எங்கெல்லாம் இருப்பாள் என்பதற்கு ஓர் அரிய பாடலைச் சொல்கிறார்.

    விவசாயத்திலும் வணிகத்திலும் வெற்றிக் கொடி கட்டியவர். தமிழ் இலக்கியப் பாடல்கள் பலவற்றை அழகுறச் சொல்லக் கூடியவர். நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று விளக்குகிறார். அவருடன் ஒரு நேர்காணல். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28

    மூலம்  எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28:  வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
    வருடத்தில் வரும், அது உள்ள தன்று!
    தருணம் ஏதேனும் இருக்கும், கால்
    தடம் வைத்தது போலிருக்கும், மார்ச்சு.

    A light exists in spring
    Not present on the year
    At any other period.
    When March is scarcely here

    எழும் ஒரு நிறம் ஓங்கி நிற்கும்
    ஏகாந்தக் குன்றுகள் மேலே!
    விஞ்ஞான விளக்கம் மீறும்.
    ஆயின் மனித வியல் உணரும்.

    A color stands abroad
    On solitary hills
    That science cannot overtake,
    But human nature feels.

    முற்றப் புல்லில் ஒளி காத்திருக்கும்
    தூரத்து மரக்கிளை ஊடே நுழையும்!
    தூரத்து மலைச் சரிவு மேலே படியும்.
    என்னோடு பேச வருவதாய் புரியும்.

    It waits upon the lawn;
    It shows the furthest tree
    Upon the furthest slope we know;
    It almost speaks to me.

    அந்திப் பொழுது வந்த போது,
    அனுதினப் பகல் கடந்த பிறகு
    ஊழ்விதி ஓசையிலாது இயங்கும்
    ஒளி மறையும், நாம் வாழ்வோம்.

    Then, as horizons step,
    Or noons report away,
    Without the formula of sound,
    It passes, and we stay:

    அது எனக்கோர் பண்பிழப்பு
    பாதிக்கும் நமது நிறைமையை!
    வணிகம் திடீரென முறிந்தி ருக்கும்,
    புனித நிலை ஒன்றின் மீதிருக்கும்.

    A quality of loss
    Affecting our content,
    As trade had suddenly encroached
    Upon a sacrament.

    Share
  • ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பக்திப் பெருவெளியில் அடியார்கள் பலர் வருகிறார்கள். அடியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உண்மைப் பொருளாம். அந்தப் பரம்பொருளை நாடியும், தேடியுமே நிற்கிறார்கள். தேடும் விதமும், நாடும் விதமும் வேறுபாட்டினைக் காட்டி நின்றாலும் அவர்களின் சிந்தையெலாம் இறைவன் மட்டுமே என்பதுதான் மனங்கொள்ளல் வேண்டும். வருகின்ற அடியார்களில் கற்றவரும் இருப்பர். கல்லாதவரும் இருப்பர். அந்தஸ்த்தில் உயர்ந்தவரும் இருப்பர். அதில் குறைந்தவர்களும் இருப்பர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஆண்டவனது அடியார்கள் என்னும் பிணைப்பேயாகும். ஆண்களும் இருப்பார்கள். பெண்களும் இருப்பார்கள். ஆண்டியும் இருப்பர். அரசரும் இருப்பர். அனைவரும் பக்தி என்னும் பாதையில் பயணிக்கும் பக்குவமான பரமனின் பயணிகளேயாவர். அந்தப் பயணிகள் வரிசையில் ஒருவர் சற்று வித்தியாசமானவராக அமைகின்றார். அவர் யாரென்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா? வாருங்கள் அவரைக் காணுவோம்.

    “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே”, என்று ஆண்டவனையே அடியார்கள் விளித்துப் பாடுவார்கள். ஆண்டவனை அடியார்கள் யாவருமே “அப்பன் நீ அம்மை நீ” என்றுதான் அல்லும்பகலுமே ஆராக்காதலுடன் ஏற்றிப் போற்றியும் நிற்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அம்மையே அப்பா என்று அடியவர்களால் ஏற்றிப் போற்றி நிற்கும் எம்பிரானே அடியவர் ஒருவரை “எம்மைப் பேணும் அம்மை இவள்” என்று;  “அம்மையே” என அருள் சுரந்து அழைத்தாராம். ஆண்டவனால் “அம்மையே” என்று அழைக்கப்படும் அளவுக்கு உரித்தாய் நின்றவர்தான் “தமிழீன்ற தவப்புதல்வி காரைக்கால் அம்மையார்” அவர்கள்.

    பக்தி உலகிலே நால்வருக்கும் மூத்தவர். நால்வரும் பக்திப் பெருவெளியில் உத்வேகமாய் காலூன்றிப் பயணப்பட முன்னோடியானவர். அவர்களால் பாடப்பட்ட பக்திப் பனுவல்களுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். அவர்கள் எப்படியெல்லாம் தமிழில் இறைவனது திருவருளினைப் பாடலாம் என்பதற்கெல்லாம் பாவடிவுகளை, பா இனங்களை யெல்லாம் காட்டி நின்ற பேராளுமை என்று அவரைப் பல நிலைகளில் நோக்கக் கூடியதாகவே இருக்கிறது.

    சைவபக்தி வரலாற்றில் அம்மையாரின் வருகை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவர் இறைவனை உருவகிக்கும் பாங்கு, இறைவனை விழிக்கும் பாங்கு யாவுமே இவருக்கே தனித்துவமான ஒன்றாகவே விளங்குகிறது என்பதுதான் உண்மையாகும். அன்பினுருவமாய் ஆண்டவனை இவர் காணுகின்றார். இந்த உலகத்தைத் தோற்றுவித்த முதல்வனாய் விளங்குகிறான் என்று போற்றிப்பாடுகின்றார். அத்வைதத்தை ஆதிசங்கரரே பரப்பினார் என்று அறிகின்றோம். ஆனால் காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச்செல்விதான் அத்வைதத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அவரின் பாடல்களின் கருப்பொருட்களால் அறியக்கூடியதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். ஈசனே சகலமும் என்னும் கருத்தினை அம்மையார் சுட்டுவதன் மூலம் அரன், அரி, அயன் என்னும் அத்தனை நிலையும் ஒன்றாய் அடங்குவதையே வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    அறிவானும் தானே அறிவிப்பான் தானே
    அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
    மெய்ப்பொருளும் தானே விரிசுடர் ஆகாயம்
    அப்பொருளும் தானே அவன்

    என்று அற்புதத் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். அறிபவன், அறிவிப்பவன், அறிவாய் இருந்து அறிகின்றவனும்  அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. ஐம்பூதங்களாக விளங்குபவனும் அவனே, என்று அம்மையார் குறிப்பிட்டுக் காட்டும் நிலையினை அத்வைதம் என்று தானே பொருள்கொள்ளல் வேண்டும்.

    காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச் செல்வியின் பக்திப் பெருஞ் சொத்தாய் சைவத்துக்கு வாய்த்திருப்பவை தான்; மூத்த திருப்ப திகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, என்பனவாகும். எம்பெருமான் சிவனது நடனம் பற்றியதாகவே இவரின் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும். அம்மையார் அவர்களுக்கு முன்பிருந்த தமிழர்கள் சிவனைப் பற்றியோ, அவரது உருவத்தைப் பற்றியோ, அவரொரு வடிவுகடந்த பொருள் என்பதனையோ, அதுமட்டுமல்ல அவர் ஒரு முழுமுதற் பொருள் என்பதனையோ நன்கு உணர்ந்தவாரக இருந்தாலும்; அந்தப் பரம்பொருளுக்கு உரித்தான வடிவம்தான் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உன்னை நான் எப்படித்தான் காட்டுவேனோ என மனமெண்ணி அம்மையார் நிற்பதையும் இங்கு அவரின் பாடல் வாயிலாகவே காணமுடிகிறது.

    அன்றும் திருவுருவம் காணாது ஆட்பட்டேன்
    இன்றும் திருவுருவம் கண்டிலேன் – என்றுந்தான்
    எவ்வுருவோ நும்பிரான் என்பார்க்கு என் உரைக்கேன்
    எவ்வுருவோ நின் உருவம் ஏது

    அம்மையார் இறைவனைப் பார்த்தவிதம் வேறு. ஆனால் மற்றவர்களுக்கும் காட்ட அவர் எம்பெருமானிடமே வழியினைக் கேட்டு நிற்கும் பாங்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறதல்லவா! என்றாலும் அவர் அந்தப்பரம் பொருளை – வேதியனாக,  வேதப்பொருளாக என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். உணருவார் உணருங்கள் என்பதும் தொக்கு நிற்பதாய்க் கொள்ளலாம் அல்லவா!

    வேதியனை வேதப் பொருளான வேதத்துக்கு
    ஆதியனை ஆதிரையாநன் னாளானைச் – சோதிப்பான்
    வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
    கில்லேன அமா என்றான் கீழ்

    பக்தியைப் பாடவந்த அம்மையார் தேமதுரத் தமிழினையும் தன்னுடைய அகத்தில் ஆழமாய் வைத்திருந்தார் என்பதும் மிகவும் முக்கியமாகும். அறத்தைப் பாடும் வடிவமான வெண்பாவைக் கையாளுகின்றார். அந்தப் பாவகை உணர்ச்சியைப் புலப்படுத்த உகந்தன்று எனவெண்ணி விருத்தப்பாவைக் கையிலெடுக்கிறார். தமிழின் பாவகைகள் எவற்றுக்கெல்லாம் உகந்தன எனச் சிந்தித்த அம்மையாரின் வழி தமிழ் வழியாக அமைகிறதல்லவா?தமிழால் பக்தியினைக் காட்ட முயலும் அம்மையார் பின்வந்த அடியார்க்கெல்லாம் தலை மகளாய், தமிழ்மகளாய், விளங்குகிறார் அல்லவா! அம்மாயாரின் பதிகங்களை “மூத்த நல் திருப்பதிகங்கள்” என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமைப்படுத்துகின்றார். அம்மையாரின் பின்வந்த சம்பந்தப் பெருமான் பாடிய பக்திப்பனுவல்கள் பதிகங்கள் என்று தான் பெயர் பெறுகின்றன. இதனால் அம்மையின் பாடலையும் பதிகம் என்னாது  “மூத்த நல்” என்னும் அடைமொழி கொடுத்தமை அம்மையின் மீது சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பினையே காட்டுகிறது எனலாம். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடியவராக சேக்கிழார் இருந்தாலும் அவரும் தேமதுரத் தமிழைத் தமது இதயத்தில் இருத்தி வைத்திருந்தார் என்பதும் நோக்கத்தக்கது. முழுக்க முழுக்க தமிழ்மரபு சார்ந்த சூழலையும், கதையினையினையுமே அவர் பெரியபுராணத்துக்காக எடுத்திருக்கிறார். அப்படியானவர் அம்மையாருக்காகவே காரைக்கால் அம்மையார் புராணம் அமைத்தாரோ தெரியவில்லை. தமிழை விரும்பியவர் தமிழை விரும்பிய அம்மையை; இறைவனே அவரைத் தன் தாய் என்று கூறுமாறு அமைத்தமை மனங்கொள்ளத்தக்கது. தாய் வயிற்றில் தான் எதுவுமே பிறக்க வேண்டும். அந்தத் தாயாக காரைக்கால் அம்மையாரைச் சேக்கிழார் பார்க்கிறார். முழுமையான சைவமும், சிவனின் வழிபாடு என்பதும் காரைக் கால் தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறது என்னும் கருத்தை யாவரும் மனமிருத்தல் அவசியமானதேயாகும். பிற்காலத்தில் தமிழில் சுவையான இலக்கியங்கள் அமை வதற்கு உரிய பாவினமாக விருத்தமே பொருத்தமாய் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அந்தப் பாவினத்தைத் தேர்ந்தெடுத்துக் கைகாண்டு காட்டிய தமித் தாயாகவே அம்மையார் விளங்குகிறார் என்பதும் தமிழுக்குப் பெருமையல்லவா! அம்மையாரையும் அடியார்களையும் பாட வந்த சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தை விருத்தப்பாவினால் பாடுவதற்கு வழிசமைத்தவரும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்லி அம்மையாரே என்பதும் மனங்கொள்ளல் வேண்டும்.

    பின்வந்த அடியார்கள் பக்தியொடு தமிழையும் இணைத்திட அம்மையாரே முதலாசான். திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகத்தின் இறுதிப்பாடலில்

    “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே “

    என்று தமிழினை முன்னிலைப்படுத்துகின்றார். இதனைப் பின்பற்றியே சம்பந்தப்பெரு மானும் “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். மற்றைய அடியார்களும் தமிழைச் சேர்த்துச் சொல்லுவதும் நோக்கத்தகது.

    அத்துடன் அமையாது தமிழின் சுரங்களையும், வாத்தியங்களையும் கூட காட்டி நிற்கிறார் அம்மையார்,

    துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
    உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
    சச்சரி கொக்கரி தக்கை யோடு
    தகுணி தந்துந்தபி தாளம் வீணை
    மத்தளம் கரடிகை வன்க மென்தோல்
    தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
    அத்தனை விரவினொடு ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திருவாலங் காடே

    அழலாட அங்கை சிவந்ததோ! அங்கை
    அழகால் அழல் சிவந்தவாறோ! – கழலாட
    பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்
    தீயாடுவாய் இதனைச் செப்பு

    சுரங்களை, வாத்தியங்களைக் காட்டிய அம்மையார் இறைவனின் திருநடனத்தையும் அவனின் ஒவ்வொரு அம்சத்தையுமே பக்தியினைக் கலைநயத்துடன் இணைத்து காணுவது நோக்கத்தக்தக்கது. “அம்மையே” என்று அழைத்தவுடன் அவரிடம் அம்மையார் வேண்டும் பாங்கிலும் ஆடற்கலையினை வலியுறுத்தி தன்னுடைய வேண்டு கோளினை முன்வைப்பதும் நோக்கத்தக்கது.

    இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க என்றார்

    பிறவாமையினை வேண்டும் நிலையிலும் – அப்படி ஒரு பிறவியானது வாய்க்குமானால் ஆண்டவனே உன்னயென்றுமே மறவாமலும் இருக்க வேண்டும் அது மாத்திரமல்ல – நீ ஆட வேண்டும்! நீ ஆடுவதை உன் அடியின் கீழ் இருந்து பார்க்க வேண்டும். தமிழிலே மகிழ்ந்து நான் பாடவும் வேண்டும். என்று வேண்டி நிற்கும் காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியை ஆண்டவன்  “அம்மையே” என்று அழைத்தமை மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    Share
  • Cancer Institute

    Cancer Institute

    Baskar Seshadri

    When it comes the aggressive Medical campaign there is no one beat Cancer institute.

    The efforts the institution takes in the cancer awareness campaign is novel and those in the service centre in Taramani are highly capable enough to convey through a perfect mode and they are all on the Dot. They conduct the meetings and seminars like many other hospitals and create a clear feeling in the minds of the people that cancer if detected earlier can be ridden Hundred percent without any big fuss.

    This apart for the General public they also send across their teams to the schools and colleges and screen awareness films. When it comes to women colleges they stress strong on the Mammogram Point and in the boys schools they explain in detail on all effects of Smoking in a detailed campaign with lectures if needed be inside the halls.

    They have for this purpose had bought a high end Luxury Bus with all hi tech facilities worth few crores. They are ably supported by the leading corporates and Banks apart from General Public.

    In fact they had a problem in getting a RTO Certificate from the authority and later after the influence was extended by the Minister concerned in the union Govt they were able to get the RTO approval.

    The students normally let in the bus in groups and they are all educated on the various prevention Techniques and Food Habits and Life style Practices.

    The institute has a special Psycho oncology cell to handle all the related cases. All these are handled effectively by the team of social workers and Strong Volunteer force.

    The Photos here shows the Big Bus which came here for a campaign to Mylapore.

    Their mission is to canvass and they do this with the greatest Dedication.

    Please reach their office in case of any assistance at 8148760887

    Share
  • குறளின் கதிர்களாய்…(394)

    குறளின் கதிர்களாய்…(394)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(394)

    தன்னூண் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
    னெங்ஙன மாளு மருள்.

    – திருக்குறள் – 251 (புலால் மறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    பெருக்கிடத் தன்னுடலை,
    பிறிதோருயிரின் உடலைப்
    பிடித்தே யறுத்துப்
    புசிப்பவன் எப்படிப்
    பேரருளை
    ஆள்பவன் ஆவான்-
    ஆகமாட்டான்…!

    குறும்பாவில்…

    தன்னுடலைப் பெருக்கவைக்க
    அடுத்தோருயிரின் உடலையுண்பவன் எவ்வாறு
    அருளை ஆள்பவன் ஆவான்..!

    மரபுக் கவிதையில்…

    தன்னுடல் தன்னைப் பெருக்கிடவே
    தானே பிடித்து மற்றுளவோர்
    இன்னுயி ரதனின் உடலினையே
    எடுத்து வெட்டி யுணவாக்கித்
    தின்றிடு மொருவன் செய்கின்ற
    தீய செயலா லன்னவனே
    நன்றெனும் அருளா மறத்தினையே
    நடப்பி லாள்வான் ஆகானே…!

    லிமரைக்கூ…

    பிறவுயி ருடலைத் தின்றே
    தன்னுடல் வளர்ப்பவனிடம் அருளதன் ஆட்சி
    நிலைக்காது என்றும் நின்றே…!

    கிராமிய பாணியில்…

    கொல்லாத கொல்லாத
    அடுத்த உயிரக் கொல்லாத,
    அடிச்சி அதயே திங்காத..

    தனக்க ஒடம்பப் பெருக்கவைக்க
    அடுத்த உயிரக் கொன்னு
    அந்த ஒடலத் திங்கிறவன்
    மனசுல நல்ல கொணமான
    எரக்கம்
    எப்புடி நெறஞ்சிருக்கும்,
    ஒருநாளும் நெறயாதே..

    அதால
    கொல்லாத கொல்லாத
    அடுத்த உயிரக் கொல்லாத,
    அடிச்சி அதயே திங்காத…!

    Share
  • ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    காஞ்சி மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மஹாரண்யத்தில் ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிலவ வருடப் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண மகோத்ஸவத்தில் மாலை மாற்றும் வைபவம் இதோ. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வான்கோழி

    வான்கோழி

    ஷங்கர் படக் காட்சி போல் இருக்கு, பாருங்க. இந்த இடத்தில் ஐஸ்வர்யாராய் நடனம் ஆட, ஒரு பாடல் காட்சி எடுக்கலாமா?

    படப்பதிவு: கார்கில் ஜெய்

    Cover image: Wikimedia

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொத்தவரங்காய் பருப்பு உசிலி

    கொத்தவரங்காய் பருப்பு உசிலி

    கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    குழந்தைகளை வளர்ப்பது எப்படி? செல்லம் கொடுப்பதா? கண்டிப்பு காட்டுவதா? எந்த அளவுக்குச் செல்லம்? எந்த அளவுக்குக் கண்டிப்பு? கண்டித்துச் சொன்னால் கேட்காத பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியுமா? பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? நிர்மலா ராகவன் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கேளுங்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்க மயில்

    அமெரிக்க மயில்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வண்ணத் தோகை விரித்து மயில் ஆடும் அரிய, அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – கார்கில் ஜெய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அகவை நூறு கண்ட சஞ்சிகை

    அகவை நூறு கண்ட சஞ்சிகை

    சக்தி சக்திதாசன்

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.

    நான் ஒரு பள்ளி மாணவனாக ஈழத்தில் வலம் வந்த போது என் தந்தையின் வழக்கமான வாசிப்புச் சஞ்சிகைகளில் ஒன்றாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” இருந்தது என்பதை நான் நினைவு கூர்கிறேன். அவரது பரிந்துரைப்பிலும், ஊக்குவிப்பிலும் நானும் ” ரீடர்ஸ் டைஐஸ்ட்” சஞ்சிகையை அவ்வப்போது அப்போதே படித்து வந்தும் இருக்கிறேன். அதிலுள்ள துணுக்குகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்வதுண்டு. அது தவிர பலர் எழுதும் தமது வாழ்வியல் அனுபவங்களும் கூட மிகவும் ஆச்சர்யமூட்டுபவையாக இருக்கும்.

    அந்தச் சஞ்சிகையின் ஆக்கங்களின் ஆழத்தை நான் எனது 19 வயதில் லண்டன் வந்தபோது என்னால் முழுமையாக உணரக்கூடியதாக இருந்தது. எப்படி என்கிறீர்களா ?

    நான் இலண்டன் வருவதற்கு முன்னால் ஈழத்தை விட்டு வெளிநாடு ஒன்றுக்குமே சென்றிராத என் தந்தை இலண்டன் வாழ்வு முறைகளைப் பற்றியும். இலண்டன் வாழ்வின் சில நடைமுறை வழக்கங்களையும் எனக்கு அறிவுரையாகக் கூறினார். அப்போது அவரின் அறிவுரைகளை அப்போதைய வாலிபத் துடுக்கின் நிமித்தம் அக்கறையுடன் நான் எடுத்துக் கொள்ளவில்லை.

    என்னே அதிசயம் ?

    இலண்டனில் நான் பார்த்த நடைமுறைகளை அப்படியே என் தந்தை விபரித்திருந்தது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பின்பு நான் ஈழத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தபோது இது பற்றி நான் வினவியபோது தனக்கேயுரித்தான புன்னகையுடன் அனைத்தும் தான் ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” பல வருடங்களாக வாசித்து வருவதனால் அறிந்து கொண்டது என்று விளக்கமளித்தார்.

    1922 ம் ஆண்டு முதலாம் உலக மகாயுத்தத்தில் காயமடைந்திருந்த அமேரிக்கர் ௶” ட்வீட் வாலேஸ் (DeWitt Wallace ) ரென்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த “ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் சஞ்சிகையாகும்.

    பல சஞ்சிகைகளில், கட்டுரைகளில் வந்த சுவையானவற்றைத் தொகுத்துக், சிலவற்றை மீண்டும் தனது பாணியில் எழுதியும் ஒரே சஞ்சிகையில் கொண்டுவர அவர் எண்ணியதன் விளைவாகவே அகவைகள் நூறுக்கு முன்பு ” ரீடர்ஸ் டைஐஸ்ட் ” எனும் இந்த சுவையான சஞ்சிகை உதயமாயிற்று.

    தனது அரசியல் நிலைப்பாடாக “ரீடர்ஸ் டைஐஸ்ட்” பழமைவாத (Concervative) க்கு ஆதரவாகவும், மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாட்டையுமே கொண்டிருந்தது. இந்தச் சஞ்சிகையின் மூலம் வருடமொன்றுக்கு 5000 டொலர்கள் ஈட்ட முடியும் என்றே டாவீட் வாலெஸ் அவர்கள் எண்ணினார் எனினும் 1929ம் ஆண்டில் ஆச்சரியமளிக்கும் வகையில் 900000 டொலர்கள் ஈட்டினார் என்பதும் சுமார் 290000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

    இச்சஞ்சிகையின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1928ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இச்சஞ்சிகையின் 40வது வருட பூர்த்தியின்போது சுமார் 40 நாடுகளில் சர்வதேச பதிப்புகளும், 13 மொழிகளில் 29 மில்லியன் விநியோகத்தை எட்டியது.

    பல தசாப்தங்களாக இச்சஞ்சிகையின் ஒவ்வொரு பதிப்பிலும் 30 பதிவுகள் இடம்பெறுவது வழக்கம்.

    இவற்றுள்

    • அதிசயமான துணுக்குகள் ( Amusing Anecdotes )

    • சொந்த அனுபவங்கள் ( Personal Glimpses )

    • சீருடையில் நகைச்சுவை ( Humor in Uniform )

    • ஐக்கிய அமெரிக்காவில் வாழ்க்கை ( Life in these United States )

    • நிஜ வாழ்க்கை நாடகங்கள் (Drama in Real Life )

    என்பன போன்றவை மிகவும் குறிப்பிடத் தக்க பதிவுகளாகும்.

    “ரீடர்ஸ் டைஐஸ்ட்” படிக்காதவர்கள் அல்லது அதைப் பற்றி அறியாதவர்கள் மிகவும் சொற்பம் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாட்டுக்கு போகாமல் அந்நாட்டைப் பற்ரிய வாழ்வு முறையை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சஞ்சிகையில் கட்டுரைகளும், துணுக்குகளும் இடம் பெறுவதே இச்சஞ்சிகையின் வெற்றிக்குக் காரணமாகிறது.

    இன்றைய இலத்திரனியல் ஊடக காலத்தில் கூட இணையத்தளம் வாயிலாக தனது செல்வாக்கை இச்சஞ்சிகை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பது இதன் வாசகர்களின் ரசிப்புத் தன்மையின் ஆழத்தைச் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    நூறாவது அகவையில் கால் பதித்து தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இச்சஞ்சிகை இது பொன்று இன்னும் பல நூறாண்டுகள் தனது தனித்தன்மையை இழந்து விடாமல் நிலைத்திருக்கும் என்பது என் போன்ற எழுத்துப் பித்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

    Share
  • வாட்சப்

    வாட்சப்

    பாஸ்கர்

    எல்லோரும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    யார் எவரென்று பலரும் அறிகிலர்.
    முகமேயில்லை இங்கு நட்பு மட்டுமே உண்டு.
    கடுகு எண்ணெய் மூட்டு வலி நிவாரணி என்பார் ஒருவர்.
    கற்பகம் காபி ஒரே கசடென்பார் அடுத்தவர் உடனே.
    காபி குடிக்காதவன் தனுஷ் பக்கம் ஞாயம் என்பான்.
    ஒரு வருஷம் போகாத கோவில் என்பார் மற்றொருவர்.
    பேத்தியின் படத்தைக் காட்டி இவள்தான் உலகமென்பார்.
    எல்லோரும் சந்தோஷத்தையே காட்டிக்கொள்கிறார்கள்.
    காலை இரண்டு மணிக்கே தூக்கம் தொலைக்கிறார்கள்.
    கேட்டால் கொசுத்தொல்லை என நழுவுகிறார்கள்.
    ஆதரவாய் அருகமர்த்தித் தோள்தொட்டு நாளாச்சு
    யாருமில்லை அருகினில், கண்கொண்டு பேச இங்கு.
    கடைசி வரை இயந்திரம் இயந்திரத்துடனே சினேகமிங்கு.

    Share
  • காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    கோலாகலமாக நடைபெற்ற காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் தேரோட்டம், இதோ ஒரு நிமிடச் சுருக்கக் காட்சி. கச்சி ஏகம்பன் உலாவைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share