Blog

  • கற்றல் ஒரு ஆற்றல் 69

    க. பாலசுப்பிரமணியன்

    சுயஅடையாளம் முன்னேற்றத்தின் முதல் படி

    education

    லெபனோனைச் சேர்ந்த தத்துவ மேதையும் கவிஞருமான கலீல் கிப்ரானின் குழந்தைகளை பற்றிய  கீழ்க்கண்ட வரிகள் உலகம் முழுதும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன.

    Your children are not your children.

    They are the sons and daughters of Life’s longing for itself.

    They come through you but not from you,

    And though they are with you yet they belong not to you.

     

    You may give them your love but not your thoughts,

    For they have their own thoughts.

    You may house their bodies but not their souls,

    For their souls dwell in the house of tomorrow,

    which you cannot visit, not even in your dreams.

    You may strive to be like them,

    but seek not to make them like you.

    For life goes not backward nor tarries with yesterday.

     

    You are the bows from which your children

    as living arrows are sent forth.

    The archer sees the mark upon the path of the infinite,

    and He bends you with His might

    that His arrows may go swift and far.

    Let your bending in the archer’s hand be for gladness;

    For even as He loves the arrow that flies,

    so He loves also the bow that is stable.

    “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் வாழ்க்கையும் காலமும் தங்கள் மேன்மைக்காக வகுத்துக்கொண்ட இலட்சிய பிறப்புக்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைக்கொடுங்கள் உங்கள் எண்ணங்களை அல்ல. ” என்ற சீரிய கருத்தை முன் வைத்து எழுதப்பட்ட இந்த வரிகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடிய வார்த்தைகளின் தொகுப்பு.

    ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்ற காலப் பரிமாணமும் சமுதாய மற்றும் பூகோளப் பரிமாணங்களும் மாறுபட்டவை.  அதனால் அவர்கள் சிந்தனைகளும் உணர்வுகளும் மாறுபடுகின்றன. பல நேரங்களில் பெற்றோர்களின் கனவுச் சுமைகளை அவர்கள் தாங்குவதால் அவர்களுடைய சொந்தச் சிந்தனைகள் உயிர்பெறவோ அல்லது பிரகாசிக்கவோ வழியில்லாமல் போய்விடுகின்றது. இது அவர்களுடைய தனித்தன்மையையும் சுய- அடையாளத்தையும் வெகுவாக பாதிக்கின்றது.

    சுய- அடையாளம் ஒரு மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அதன் தனித்தன்மையுடன் சீராக வெளிப்படுத்த உதவுகின்றது. ஒரு மாணவனின் வாழ்க்கைப் பாதையில்  அவர்களது சொந்த விருப்பங்கள் ஆர்வங்கள் மற்றும் தேடல்கள் ஆகியவற்றை அடித்தளமாக்கி அர்த்தமுள்ள மேன்மையான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுகின்றது.

    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிர்பந்தத்தால் தங்களது சுய அடையாளங்களை இழக்கும் அல்லது அடகு வைக்கும் இளைஞர்கள் முன்னேற்றப்படியிலிருந்து வெகு சீக்கிரம் கீழே விழுந்துவிடுகின்றார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் கருத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் அடிபணிந்து தங்களுடைய படைப்பாற்றல்களையும் இழந்து விடுகின்றனைர் இது மிக வருந்தத்தக்க நிலை. இது அந்த தனி மனிதருக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒரு இழப்பு. இதனை உணர்ந்து வீடுகளிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களது சுய அடையாளங்களை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உரிய கல்விமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம்.

    சுய அடையாளங்களை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கான  உத்திகள் :

    1. அவர்களுடய கருத்துக்கள் தவறாக இருந்தாலும் பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டல் அவசியம்.
    2. அவர்களுடைய கருத்துக்களை ஏளனம் செய்தோ தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்த்தல் அவசியம்.
    3. அவர்களுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த உதவ வேண்டும்.
    4. அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டோ பேசவோ மற்றவர்களின் தரத்திற்குக் குறைத்துப் பேசுதலையோ தவிர்க்க வேண்டும்.
    5. அவர்களோடு உறவாடும் பொழுது அவர்களுக்குரிய மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்துதல் அவசியம்.
    6. அவர்களுடைய படைப்பாற்றலை ஊக்குவித்தும் போற்றியும் பேசும்பொழுது அவர்களுடைய தனித்தன்மையும் சுயஅடையாளமும் நிலைபெறுகின்றது.

    7.அவர்களுடைய தோல்விகள், இயலாமை மற்றும் அறியாமைகளை முன்னிறுத்தி அவர்களை அச்சுறுத்தவோ அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடவோ கூடாது.

    வாழ்க்கையில் அடையாளாச் சிதைவுகளும் அடையாள நெருக்கடிகளில் தவிக்கும் பலருக்கு அவர்களுடைய இளைய காலத்து வளர்ப்பு முறையிலும் கற்றல் பாதையிலும் தேக்கங்களும் நெருக்கடிகளும் தவறுகளும் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    கற்றல் ஒரு வாழ்க்கையின், ஒரு உயிரின் தொடர் முயற்சி. சுய-அடையாளங்களை இழந்த உள்ளங்கள் வாழ்க்கையில் கற்றலை ஒரு காலத்தின் செயலாக மட்டும் கருதி தங்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒளியை இழந்து விடுகின்றன. இதைக் கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.

    (தொடரும்)

    Share
  • TEACHER AS A PROFESSIONAL

    G. Balasubramanian

    “A Teacher impacts Eternity” is an age old saying. But the truth of the statement can never be debated. The impact a teacher makes on the lives of a learner is so significant that it shapes the learners’ thoughts, perceptions, life styles, thinking and activities. However, from the perception of a teacher as the fountain-head of all knowledge from where the wisdom flows have undergone a tremendous change and in the instant knowledge society, where there is mind-boggling flow and dynamics of knowledge, the teacher is required to be competent, contextual and relevant. (S) he needs to have a more focused professional approach to deliver the defined, required curricular competencies to a challenging classroom. The teacher is required to be more than an information broker but a guide, facilitator, mentor, counsellor and motivator.

    A professional degree in education may be an added advantage but does not necessarily incorporate in an individual a professional attitude to teaching. What are the required competencies from a professional teacher? They may be many but certain core competencies are as under:

    1. Teacher as a learner:

    With the speed of knowledge dynamics, the teacher is required to be an eternal learner.  Emerging systems of knowledge, skills, applications impact life styles and skills so much, that the learners are in constant touch with these changes and absorb them more easily than their elders. The teacher has, therefore, to be well aware of the emerging knowledge and participate in the learning process along with their students. The role of a teacher is becoming a “co-learner.”

    1. Technology relevance:

    The emerging tools and appliances in technology and their integration with the content and the methods of learning has taken away the formal learning methods to an ‘informal learning’ platform. The cognitive psychologists claim that a near 90 percent of learning of students is from ‘informal learning’ environments, rather than the formal ones. The ‘search’ for knowledge is leading to ‘research’ about their validity, use and contextuality to life. Technology as a learning tool has manifested in multi-dimensional ‘avatars’ and hence the teacher has to be not only ‘technology literate’ but ‘technology competent’

    1. Pedagogical skills

    With a wide-based research in the role and function of the human brain, the understanding of cognition is getting redefined. Neuro-cognitive researches claim that it is only ‘learning ‘that happens in the brain and hence the approach to pedagogy to enable and empower learning must be more focused, appropriate and learner-friendly. The understanding of differentiated learning skills calls for application of a wide-variety of delivery modes and better use of space and time in a classroom environment. The understanding of ‘multiple intelligences’ and the need to enlarge the spectrum of learning experiences in formal and informal spaces in learning calls for more creative and diverse approach to methods of classroom transactions. The success of a professional teacher is related to the ‘pedagogical intelligence’ of the individual.

    1. Communication skills

    The ‘one-way’ traffic of information flow where the learner is a mute learner in a silent classroom is no more acceptable. A teacher is required to be an effective communicator engaging with the learners using a wide variety of communication skills both verbal and non-verbal. The understanding about NLP (Neuro-linguistic programing) and its use to motivate, engage and facilitate a conducive and creative learning environment in a classroom is being debated worldwide. Teachers need to understand their effective implementation in a classroom. The ‘body-language’ of the teachers in a classroom needs validation, professionalism and finetuning for enhanced performance.

    1. Mentoring skills

    Learning is a unique individualized activity. No two learners learn the same way. The aptitude, attitude and the socio-economic environment of the learners impacts their purpose, destination and objectives of the learning. It is important that teachers need to understand, appreciate and mentor the learning curve of each of the learners in their orbit and mentor them more closely and effectively. The ability to counsel them both for their academic and emotional growth profile becomes an engaging responsibility of a teacher. Finding time and space for engagement with each of their learners is indeed a challenging proposition, but becomes an unavoidable one.

    While a ‘passionate teacher’ is a great asset to the system, absence of ‘professionalism’ derails their journey to the ever-changing destination. Mere ‘professionalism’ might provide all the required concurrent skills, but a human touch to the environment is empowered by a ‘passionate approach’.

    The learning curve appears to be a marathon and hence better and effective use of mental, emotional and intellectual competencies of the teachers is required to be a meaningful participant in this race!

    Share
  • குறளின் கதிர்களாய்…(159)

    –செண்பக ஜெகதீசன்

    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவுந்
    தீரா இடும்பை தரும்.
    (திருக்குறள் -510: தெரிந்து தெளிதல்)               

    புதுக் கவிதையில்…

    ஆட்சியில் மன்னன்
    ஆராய்ந்திடாது ஒருவரைத்
    தெரிந்தெடுப்பதும்,
    தெரிந்தெடுத்த ஒருவர்மீது

    ஐயம் கொள்வதும்,
    அல்லலை

    அதிகமாகவே கொண்டுவரும்…! 

    குறும்பாவில்…

    ஆராயாமல் ஒருவரைத் தெரிந்தெடுப்பதும்,
    தெரிந்தெடுத்தவர் மீது சந்தேகப்படுவதும்,
    தீங்கைத்தான் தரும் தொடர்ந்து…! 

    மரபுக் கவிதையில்…

    நல்லதாய் ஆட்சி நடைபெறவே
         -நற்றுணை பெற்றிட மன்னனவன்,
    வல்லவர் ஒருவரைத் தெளியுமுன்னே

         -விபரம் முற்றிலும் அறியவேண்டும்,
    எல்லாம் அறியாத் தேற்றிடுதலும்

          -எடுத்தவர் மீதி லையுறுதலும்,
    தொல்லைதான் தருமே என்றென்றும்

           -தீரா யிடர்தான் அரசினுக்கே…!

     லிமரைக்கூ… 

    ஆராய்ந்து தெரிந்தெடுத்தலை விட்டு,
    தெரிந்தெடுத்தபின் ஒருவர் மீது ஐயுறுதல்

    தொல்லையரசுக்கு அல்லல்பல பட்டு…! 

    கிராமிய பாணியில்…

    தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
    ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…
    அரசாச்சி நல்லாயிருக்க
    அதுக்குத் தொணயானவர
    நல்லா
    ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்… 

    ஆராஞ்சி தெரிஞ்செடுக்காமலும்,
    ஆராஞ்சி தெரிஞ்செடுத்தபின்னே

    அவரமேல சந்தேகப்பட்டாலும்,
    அதுதீரா தும்பந்தான்தரும்

    அந்த அரசாச்சிக்கே… 

    அதால,
    தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்

    ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…!

     

     

     

    Share
  • ’’காரடையான் நோன்பு’’….

    கிரேசி மோகன்
    —————————————————-

    ‘’கண்ணினுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணன்
    கன்னிஉன் கயிறுக்கு கட்டுப்படுவான்’’….!

    ”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
    பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்:
    சீரடைவில் சேர்ப்பான், சுமங்கலியா கக்கட்டு
    காரடையான் நோன்பில் கயிறு”….கிரேசி மோகன்….!

    ’வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்:
    பாரதன்பின் உன்பர்த்தா பல்லாண்டு வாழ்ந்திடுவார்
    காரடையான் நோன்பவள் காண்’’….கிரேசி மோகன்…!
    (OR)
    காரடையான் நோன்பு ‘’கலை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….

    kesav
    ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
    னார்குடி கோபுலு(கோகுல) நாயகர்- சாரே!(மலையாள ‘’சாரே’’)
    கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
    ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….

    ’’கோகுலு மாடோடு’’ என்றும் கொள்ளலாம்….!கேசவ்ஜி பிரஷ்ணப் பிரேமி….!

    ”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
    ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….கிரேசி மோகன்

    Share
  • வாக்கிங் & வேகிங் வெண்பா

     

    I HAVE A SWEET LITTLE MOTHER
    WHO LIVES IN MY HEART
    WE ARE SO HAPPY TOGETHER
    WE SHALL NEVER PART….மொழிபெயர்ப்பு
    ————————————————————
    என்னுள் இருக்கின்றாள் சின்னக் குழந்தையாய்
    அன்னை அவரென்(று) அறிந்துணர்ந்தேன் -பின்னிப்
    பிணைந்தோம் எமக்குள் பிரிவில்லை என்றும்
    இணைந்தோம் இதயத்தில் இன்….கிரேசி மோகன்….!

    இன் -இனிய…!
    வாக்கிங் & வேகிங் வெண்பா
    ————————————-
    வேதம் படித்தென்ன வேதாந்தம் கேட்டென்ன
    போதி மரத்தடி போயென்ன -நாதன்
    நமக்குள் இருக்கிறான் நாமதைச் சுற்றி
    அமர்க்களம் செய்யும் அசத்து….

    சாந்தி அமைதியில் சார்ந்து கிடப்போரே
    ஏந்தி வருபவராம் ஏற்றத்தை -நீந்திக்
    குளிப்போர் சுகத்தில் களிப்பார் அகத்தில்
    புலிப்பால் கறக்கும் பசு….

    யாப்புக் கயிற்றில் எதுகையும் மோனையாய்
    கூப்பிய கைகளில் கொண்டுவந்த -பாப்பூக்கள்
    மாலை தொடுத்தந்த மாலைத் தொழுவோர்க்கு
    மாலயம் வாழ்வில் மலர்….
    எத்தனை சுட்டாலும் பித்தளை ஆகாது
    பத்தரை மாத்து பளபளப்பில் -பக்தனாய்
    விட்டாலுன் பாவங்கள் விட்டோடிப் போகும்காண்
    கெட்டாலும் விட்டலன் காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஒருவர் படுக்க, இருவர் அமர,
    வருகை புரிந்தவரால் நிற்க, -ஒருயிரவில்,
    பொய்கை,பேய், பூதத்தார், பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்”….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தியா 2018 ஆண்டில் சந்திரயான் -2 விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் நிலவை நோக்கி ஏவப் போகிறது

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் வடதுருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திராயன்
    2018 ஆண்டில் சென்று இறக்கும்
    விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி
    பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
    சீரான விண்கப்பல் ஓர்நாள்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று தளம் ஆயும்
    திட்டமும் உள்ளது.

    +++++++++++

    Image result for Chandrayaan 2 Rover

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Image result for Chandrayaan 2 Rover

    இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம் அடுத்த ஆண்டுக்குத் [2018 முதல் காலாண்டு] திட்டமிடப்பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

    கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

    Image result for Chandrayaan 2 Rover

    ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

    ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

    தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.

    ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி

    சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.

    அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    2018 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி

    2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது.  அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது.  சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும்.   ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும்.  மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும்.  மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip]  எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும்.  2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது.  சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம்.  அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover]  ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன.  தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும்.  பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய மதிப்பு.  2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

    Fig 1G Indian Rockets

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனைகளில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.  தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ்  தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்று வீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !   அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    Image result for Chandrayaan 2 Rover

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !


    ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்

    அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது.  மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலவின் குழிகளையும் மலைகளை யும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டியுள்ளது.  நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி  இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது.  மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது.  நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது.  இந்திய நிபுணர் துணைக்கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார்.  அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

    பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும்.  இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன.  அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின.  தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன.  அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

    விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

    Image result for Chandrayaan 2 Rover

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

    Image result for Chandrayaan 2 Rover

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.

    அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

    ++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits :

    The Hindu, ISRO & other Websites

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

    1A Stars & Planets By : Duncan John [2006]

    1B. Astronomy Facts on File Dictionary (1986)

    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

    3. Indian Space Program By: Subhajit Ghosh

    4  Chennai Online News Service About Insat

    4B Orbiting Satellite [March 14, 2007]

    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

    9. Indian Space Program By: Wikipedia

    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]

    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp

    13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html

    14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html(இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)

    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html(இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html(இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    17. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    19 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    20.  https://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

    21.  https://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

    22.  Space Expolaration Chembers Encyclopedic Guides (1992

    23.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

    24.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    25.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    26  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    35.  http://en.wikipedia.org/wiki/Category:Indian_space_program  (May 16, 2012)

    36.  http://www.time.com/time/printout/0,8816,2040085,00.html (December 29, 2010)

    37  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation

    38.  http://www.isro.org/gslv-d3/gslv-d3.aspx  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)

    39.  Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)

    40.  Space Travel : New Moon for India  By : Morris Jones, Sydney Australia (SPX)  )May 28, 2012)

    41  http://www.bharat-rakshak.com/MONITOR/Space%20Essay/entry3.htm  (Indian Space Program -2020)

    42. http://indianexpress.com/article/technology/science/chandrayaan-2-mission-isro-conducts-tests-for-moon-landing-4370169/  [November 11, 2016]

    43. http://www.moondaily.com/reports/India_Takes_Russian_Help_to_Analyze_Chemical_Composition_of_Lunar_Surface_999.html?mc_cid=508954fbaf&mc_eid=bb33fe70f4 [February 17, 2017]

    44.  https://en.wikipedia.org/wiki/Chandrayaan-2  [March 2, 2017]

    45. http://www.moondaily.com/reports/Indias_Moon_Mission_on_2018_Target_Says_ISRO_Chief_999.html?mc_cid=508954fbaf&mc_eid=bb33fe70f4  [March 3, 2017]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (March  10, 2017)  [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ்ஜி ,பார்க்க கண்ணன் , திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் போல் இருக்கிறார்….!

    ஈசன் -அபிஷேகப்ரியர் , மாலர் -அலங்காரப்ரியர்….கேசவ்ஜி ஓவியத்தில் கண்ணனுக்கு அலங்காரம் வண்ண அபிஷேகத்தில்….!

    170310 - New Forever - lores
    170310 – New Forever – lores

    ‘’ஜலகண்டர் ,ஸ்ரீ(திரு)நீர் மலைநின்ற மாலர்,
    நிலகண்டம்(பூபாரம்) தீர்க்க, நடுங்கிக் -களம்கண்ட,
    பார்த்தர்க்கு கீதைப் படிப்பளித்த, பால்காரர்
    தீர்த்தம் அலங்காரத் தில்’’….கிரேசி மோகன்….

    2015ல் திருநீர் மலை ‘’நீர்வண்ணப்’’ பெருமாளை தரிசித்தேன் …திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி தண்ணீர் இருந்ததால் பெருமாளை தரிசிப்பதற்காக எதிர் மலையில், சூழ்ந்த தண்ணீர் வற்ற ஒருமாத காலம் காத்திருந்து, பிறகு தரிசித்து…. மலையடிவாரம் நின்ற பெருமாளை ‘’நீர்வண்ணா’’ என்று பாடி மங்களாஸாஸனம் செய்தார் என்பது ஐதீகம்….பூதத்தாழ்வாரும் இவரைப் பாடியிருக்கிறார்….ஆழ்வானாக முடியாவிட்டாலும் பதங்களில் வீழ்வானாக இருப்போமே என்ற ஆசையில் எழுதிய ‘’திருமால் திருப்புகழ்’’….கிரேசி மோகன்….

    —————————————————————————————————————–

    தனனா தனதந்த தனனா தனதந்த
    தனனா தனதந்த -தனதான….
    —————————————————————————————————

    மரணா வதைவென்ற எமனார் எதிர்நின்ற
    ரமணார் வழிசென்று -லகுவாக
    எனைநான் அதுவென்று அறிவால் உணர்வென்ற,
    அருணா சலர்பங்கு -உமையாளின்,

    கரவே லதுகொண்டு திருவா வினன்குன்றில்
    அரைகோ வணம்தெண்ட -குருபாலன்
    மருமா னவன்கொஞ்ச குறமான் மகள்தந்த
    முறைமா மமுகுந்த -அனுபூதி

    பெறநான் சுடர்சங்கு கதைவாள் சிலைஐந்து
    படையோ டலைமங்கை -உடனேள
    புயமா யிரம்கொண்ட படசே டரணைந்த
    கடலா டிடும்ரங்க -அருள்வாயே

    ஒருநாள் ஜலமங்கை மலைசூழ் தினம்வந்து
    திருவாய் மொழிமங்கை, -உபசார
    அணிமா மலர்மங்கை அருகே வலம்கொண்டு
    திருநீர் மலைநின்ற. -பெருமாளே….கிரேசி மோகன்….

    Share
  • மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!

    பவள சங்கரி

    மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!நமது இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியா சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் மூலமாக  இந்தியாவிற்கான ஜி.பி.எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிசெலுத்தல் முறை மூலமாக கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை எளிதாகக் கண்டுணரும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதைத் தங்கள் கைபேசியில் பதிவேற்றிக்கொண்டால் மீனவர்கள் அந்நிய எல்லைக்குள் சென்று ஆபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கலாம். இந்த சாட்டிலைட் மூலமாக எந்தெந்தப் பகுதிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கண்டறியலாம். தங்கச்சி மடம் மீனவ இளைஞரின் ஆன்மா சாந்தியடையும் வகையில் இந்த செயலியை பிரபலமாக்க வேண்டியது இஸ்ரோ மற்றும் அரசின் கடமை.

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி…

     மீனாட்சி பாலகணேஷ்

    3

    ‘கூடிப் பிரியாமலே ஓரிராவெலாம் கொஞ்சிக் குலாவியங்கே….
    பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடீ….’
    ******************

    திலகாவும் சைலஜாவும் உற்சாகத்தின் எல்லையில் நின்று கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பள்ளி ஆண்டு விழாவில் ராஜராஜ சோழன் நாடகம் போடப் போகிறார்கள். சைலஜா தான் இளவரசி குந்தவை. குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் எல்லாப் பெண் குழந்தைகளும் தங்களை அரசிளங்குமரியென்று பாவித்துக் கனவு காண்பார்கள். சைலஜா போன்ற சிலருக்கே அக்கனவு நாடகத்திலாவது நினைவாகப் போகிறது. அம்மாவின் கிளிப்பச்சை நிற வைர ஊசிப் பட்டுப் புடவை தான் குந்தவையின் உடை. பாக்கி ‘இமிடேஷன்’ நகைகளுக்கு ‘ உமா ஜுவெல்லரியில்’ இருந்து வாடகைக்கு எடுக்கப் பள்ளியில் இருந்து ஏற்பாடாகியிருந்தது.

    ஒத்திகைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    சனிக்கிழமை மதியம் சாப்பாட்டுக்குப் பின் திலகா ரகசியமாக வந்து சைலாவைக் கூப்பிட்டாள். அலமுவும் பாட்டியும் சற்றே கண்ணயர்ந்திருந்த நேரம்.

    “என்ன திலகா? நான் இப்போ வந்தா பாட்டி கத்துவா,” என்று ஜாடை காட்டினாள்.

    “எங்கம்மா சரின்னுட்டாங்க. நீயும் வாயேன்,” என ரகசியக் குரலில் அவசரமாக விளித்தவளைத் தொடர்ந்து மெல்ல அடி எடுத்து வைத்தவளாக, கொலுசு சப்திக்காமல் வெளியே வந்தாள் சைலஜா.

    “சைலா, சூப்ரண்டு எஞ்சினியர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலியா மருதாணிச் செடி தான் இருக்குடீ, நாம போய் இலை பறிச்சுக்கிட்டு வந்தா எங்க அண்ணி அரைச்சு இட்டு விடுவாங்க. உனக்கு நாடகத்துக்கும் அலங்காரமாச்சு. இல்லாட்டி டீச்சர் சிவப்பு மசியால தான் டிசைன் போட்டு விடுவாங்க.” இதைக் கேட்ட உடன் சைலாவின் ஆர்வம் பல மடங்காகி விட்டது.

    “சரி திலகா, உங்கம்மா ஒத்துக்கிட்டாங்கன்னா எங்க பாட்டியும் கோவிச்சுக்க மாட்டாங்க. இரு வரேன்,” மெல்ல, வாயிற் கதவைச் சாத்தி விட்டு வர, இருவரும் ஓட்டமும் நடையுமாக மருதாணிச் செடிகளைத் தேடி ஓடலானார்கள்.

    பருத்தி புடைவையாகக் காய்த்தது மாதிரி சூப்ரண்டு எஞ்சினியர் மனைவி மரகதம், வேலைக்காரி வேலாயியை விட்டு மருதாணி பறித்து அரைக்கச் சொல்லியிருந்தாள். இவர்களைக் கண்டதும், “வாங்கடி பெண்களா, எங்காத்து ராதாவுக்கு நாளைக்குப் பூச்சூட்டல். மருதாணி இட்டு விட வேலாயி அரைக்கிறா. நீங்களும் அதிலேயே எடுத்து இட்டுக்கலாம், நிறைய இருக்கு,” என்று தாராள மனசுடனும் முகம் கொள்ளாத சிரிப்புடனும் கூறவே, இரண்டு சிறுமிகளும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

    மரகதம் மாமியின் கை ‘பர பர’வென்று வேலை செய்யும். விராளி மஞ்சள், பாக்கு, செப்புப் பைசாக் காசு எல்லாம் வைத்து அரைத்த மருதாணியை முதலில் ராதாவுக்குக் கால்களிலும் கைகளிலும் அழகாக இட்டு விட்டாள். ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி, “வாடி இங்கே, கையைக் காட்டு,” என்று உரிமையோடு சைலஜாவை இழுத்து உட்கார்த்தி, அவள் கையிலும் மருதாணி இடலானாள்.

    “என்ன விஷயம்? திடீர்னு மருதாணி ஆசை ரெண்டு பேருக்கும்?”

    திலகா வெட்கப்பட்டுக் கொண்டு பேசாமல் சைலாவைப் பார்த்தாள்.

    “மாமி, எங்க ஸ்கூல்லே ஆண்டு விழா. அதிலே நாடகத்திலே நான் இளவரசி குந்தவையா நடிக்கிறேன். ஒரு சின்ன டான்சும் ஆடணும். அதான்,” என்று உற்சாகமாகச் சைலஜா கண்கள் பளபளக்க விவரித்தாள்.

    “அடி சக்கை! அப்படியா சேதி? பின்ன யாராம் வேங்கி நாட்டு இளவரசன் விமலாதித்தன்? உங்களுது தான் பெண்கள் பள்ளிக்கூடமாச்சே? யாராவது ஒரு பெண் தான் இல்லையா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு குறும்புத்தனமாக ராதா கேட்ட போது சைலஜாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

    “திலகா தான் விமலாதித்தனா நடிக்கிறா,” என்றாள்.

    “அப்போ உனக்கு மருதாணி இட வேண்டாமாக்கும். பரவாயில்லை. இந்தா, உங்க அண்ணி, அம்மா எல்லாருக்கும் கொண்டு போய்க் கொடு,” என்று அரைத்த மருதாணியை பெரிய சாத்துக்குடி அளவில் உருட்டி இரண்டு உருண்டைகளை ஒரு வாழையிலையில் வைத்து மடித்துத் திலகாவின் கையில் தந்தாள் மரகதம் மாமி.

    “நல்லாக் காஞ்ச பிற்பாடு ராத்திரி சாப்பாட்டுக்கு முந்தி களுவினாப் போதும் புள்ளே,” என்று சொல்லியனுப்பினாள் வேலாயி.

    சைலாவுக்கு வீடு திரும்ப மனமேயில்லை. ராதா அக்காவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்க வேண்டும் போல இருந்தது. ராதாவின் அன்பான குறும்பான பேச்சும், அந்தக் குடும்பத்தினரின் தோழமையும், சகஜ பாவமும், தாய்மையின் விளிம்பில் ராதா நின்ற கோலமும் சைலாவின் மலரும் கனவுகளுக்கு மிக சுவாரஸ்யமான இலக்காயிருந்தன. சைலாவுக்குக் கற்பனைகள் அதிகம். ராதாவைப் போன வருடம் ஒரு திருமணத்தில் பார்த்து விட்டு அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக நின்று கூடிய சீக்கிரமே அவளை மணந்து கொண்ட கஸ்தூரிரங்கன் மாமா சைலாவைப் பொறுத்த வரை ஒரு பெரிய ஹீரோ.

    அவரைப் பற்றிப் பேசும்போது ராதாவின் முகம் தாமரை போல விகசிக்குமே, சைலஜாவுக்கு அது காணக் காணத் தெவிட்டாத காட்சி. சிறிது நாணம், பொங்கி வழியும் காதல், நிரம்ப உரிமை எல்லாம் கலந்த ஒரு விகசிப்பு அது. தான் அது போன்ற அந்த நூதன உணர்வை என்று அனுபவிப்போம் என்று விரியத் தயராக நின்ற மொட்டு ஏங்கி நின்றது.

    ஆனால் அவள் ஏக்கங்களும், கனவுகளும் ஒரு இளவரசனையும், தன் காதல் சாம்ராஜ்யத்தையும் மட்டும் சுற்றி உலா வருவதில்லை. திடீரென்று குதிரை வேகமெடுத்து உயரத் தாவி விடும். ‘டாக்டர் சைலஜா, எம். பி. பி. எஸ். என்று போர்டு மாட்டியிருக்கும். எல்லா பேஷண்டையும் பார்த்து மருந்து கொடுத்து அனுப்பினப்புறம் வாசலில் ‘அவர்’ காரோட காத்துக் கொண்டிருப்பார். ஏறிக்கொண்டு வெளியிலே கிளம்பிடுவோம்’, என்ற ரீதியில் முகமில்லாத ஒரு ‘அவர்’ சைலஜாவின் பேதைமை நிறைந்த சிந்தையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.

    **********************

    bm

    பள்ளி ஆண்டு விழா தினம். மேடையின் பின்புற அறைகளில் அலங்காரங்கள், வேஷங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. திலகா மஞ்சள் பட்டாடை உடுத்தி, தோலின் நிறத்திலான ஆடலரசின் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு, மார்பில் புரண்ட மணிமுத்து மாலைகளும், பட்டு உத்தரீயமுமாக, அழகான பிறைச் சந்திர வடிவில் அமைந்த ஒரு சந்தனப் பொட்டும், காதில் அணிந்த குண்டலங்களுமாக, மையில் வரைந்து கொண்ட அரும்பு மீசையில், குறும்பும் கம்பீரமுமான ஆணழகனான விமலாதித்தனாக நின்றாள், நின்றான்!

    தமிழ் டீச்சர் ருக்மிணி, குந்தவைக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட சைலஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. உள்ளம் எழுச்சியில் விம்மியது. “ஏய் திலகா, இவளுக்கு நல்லா ஒரு அழகான பொட்டு நெத்தியில் எழுதி விடறியா?” என்ற ருக்மிணி டீச்சர், ராஜராஜனின் பக்கம் திரும்பி, அவனுடைய பஞ்சகச்சத்தைச் சரி செய்யலானாள்!

    செஞ்சாந்துக் குப்பியுடனும், சிறிய குச்சியுடனும், குந்தவையான சைலஜாவின் பக்கம் திரும்பி, அவளை நெருங்கி, நெற்றியில் மயில் போன்ற ஒரு வடிவை எழுத விமலாதித்தனாக நின்ற திலகா முற்பட்டாள். மூச்சை லேசாக்கிக் கொண்டு சிரத்தையாக நின்ற சைலாவின் கண்கள் திலகாவின் முகத்தை ஏறிட்டன. திடீரென, திலகாவிற்குப் பதில், யார் இது? ஒரு இளம் வாலிபன், ஆடலரசு தான் நிற்கிறானா?- தன் நாட்டியத்தை அவன் ஒளிந்து நின்று ரசித்தது நினைவிற்கு வந்தது.

    இடது கையால் சைலாவின் முகவாய்க்கட்டையைப் பிடித்து நிமிர்த்தி, தன் உத்தரீயமும் புஜங்களும் அவள் தோள்களிலும் கன்னத்திலும் படுகின்ற சிந்தையே இன்றி, நெற்றியில் எழுதும் செஞ்சாந்துப் பொட்டின் அழகொன்றே பொருட்டாக முனைந்திருந்த அந்த இளைஞனின் (திலகா தான்!) முகத்தில் லயித்து சைலஜா மயங்கினாள். பதின்மூன்று வயதில், இனிய கன்னிப் பருவத்தின் தலைவாசல்- உடலும் உள்ளமும் மலரத் தயார் என்று சொல்லாமல் சொல்லி, துள்ளாமல் துள்ளின.

    இந்த வினோதமான உணர்வுகளைப் பூரணமாக உணர்ந்து கொள்ள சைலஜாவால் இயலவில்லை. இந்த மாதிரியான எண்ணங்கள் தவறோ என்ற பயம் அடிமனதில் நெருடிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் சிறகுகளை விரித்து உல்லாசத்துடன் குதி போடும் மனது கட்டுக்கடங்காமல் அல்லவா பறக்கிறது?

    இந்த சுந்தரக் கனவிலிருந்து விடுபட அவளுக்கு மனமே இல்லை. விமலாதித்தன் பால் காதல் வயப்பட்ட குந்தவையாகவே மாறி விட்டாள். அந்த லயிப்பிலிருந்து மீளாமலே நாடகம் நடந்ததும், தான் நடனம் ஆடியதும், பலத்த கைதட்டலும், எல்லாம் முடிந்து பெற்றோருடன் வீடு திரும்பியதும், பாட்டியும் திலகாவின் அம்மாவும் இரு பெண்களையும் ஜோடியாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டதும் எல்லாமே கனவு போலத்தான் இருந்தது.

    *********************

    உறங்கி விட்டாள் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் சொல்வது காதில் விழுகிறது. “என் கண்ணே பட்டு விடும் போல் இருக்குன்னா. இந்தப் பேச்சும் ஓட்டமும் ஆட்டமும் எத்தனை நாளைக்கோ? நாளைக்கே பெரியவளாகி விட்டால் பாவம், அடக்க ஒடுக்கமாகத் தான் இருக்கணும் …”. சைலாவுக்குத் திக்கென்றிருந்தது. “பாவம் குழந்தை,” என்று வெங்கடேசனின் கரம் அவள் தலையை வருடியது. தூக்கத்தில் திரும்புவது போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    கனவில் திரும்பவும் உருவமற்ற ‘அவர்’ முகம் வந்தது. ஒரு சமயம் விமலாதித்தனாக- மறு பொழுது ஆடலரசாக- ச்சீ, அது எப்படி முடியும்? கனவுகளின் அழுத்தம் தாளாமல் விழிப்பு வந்தது. கூடவே ஒரு வினோத உணர்வும், இனம் புரியாத உடல் அயர்வும் தவிப்பும்; தாயுடன் பகிர்ந்து கொண்டபோது சிறுமி சைலஜா இளங்கன்னியென மலர்ந்து விட்ட செய்தி புரிந்தது.

    (தொடரும்)

    ****************

    Share
  • பெருமாள் திருப் புகழ்….

     

    தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
    தத்தன தனத்ததன -தனதான
    பொது
    ——–

    பெருமாள் திருப் புகழ்….

    “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்
    சிற்றலை சமுத்திரம் -தனிலாடும்
    நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
    அச்சுத மயக்கமதின் -அசைவாலே

    நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
    தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
    பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
    பத்தென வுதித்தவனின் -பரலீலை

    அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
    சத்திய வழிக்குவர -அருள்வாயே
    இத்தனை எதற்க்கிறைவ, இப்பொழு தெனக்கருள
    சத்குரு முறைப்படி -வருவாயே

    விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
    வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
    திட்டிட இடைச்சிமணல் அப்புயி தழுக்குள்அவள்
    சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”….

    Share
  • பஃபர் மீன்கள்

    விஜயபாரதி

     

     

    செதில்களற்ற உடலின் மேல்
    முட்களில் நச்சுகளைத் தேக்கிக் காத்திருக்கி்ன்றன
    பஃபர் மீன்கள்

    குட்டையான சிந்தனைகளை நிரப்பி
    தன் அந்தரங்கத்தை
    பலூனென ஊதிப்
    பெருக்கிக் கொள்கின்றன

    விடத்தைக் கொரட்டில் அடக்கியபடி
    நெளிகின்ற சர்ப்பங்கள் தீண்ட
    நுரைதள்ளிச் சாகின்றனப் பிஞ்சுகள்

    நிலங்களைப் பிளந்து நுழைக்கும்
    குரூரங்களின் வேர்கள்
    நந்தினி ஹாசினிகளின்
    பிறப்புறப்பின் இரத்தத்தைச்
    சுவைக்க நீளுகின்றன

    கண்ணீர் கொதித்துக்
    கொண்டிருக்கின்றன

    உறைந்த இரத்தத்தில்
    தீப்பிடித்துப் பரவட்டும் .

    ஆண்மைகள் கருகட்டும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 79

    ”கவ் போய்” அருங்காட்சியகம், ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ், வட அமெரிக்கா

    asu5

    ”கவ் போய்” (Cow Boy) படங்களை இளைமை காலத்தில் பார்த்து அவர்கள் ஓட்டி வரும் குதிரையும், வேகமாகப் பறக்கும் அக்குதிரையின் மேல் அமர்ந்து வரும் கதாநாயகர்களையும் பார்த்து வியந்திருக்கின்றேன். என் மனதில் அவர்கள் பெரிய வீரர்களாக அச்சமயத்தில் பதிந்திருந்தார்கள். பின்னர் Cow Boy எனப்படுவோர் மாடுகளைப்பராமரிக்கும் இளைஞர்கள் என்பதும் அமெரிக்காவின் டெக்சாஸ் போன்ற வறண்ட நிலப்பகுதிகளில் குதிரைகளில் சென்று தங்கள் கால்நடைகளான மாடுகளை வளர்ப்போர் என்பது பற்றியும் அறிந்து கொண்ட பின்னர் ”கவ் போய்”கள் பற்றிய பிரமிப்பு என்பது கறைந்து போனது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு வார காலம் நான் டெக்சாஸ் மாநிலம் சென்றிருந்த போது அங்கே டல்லாஸ் நகருக்கு அருகே உள்ள Fort Worth என்ற சிறு நகருக்கும் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அது டெக்சஸ் நகரின் பழமையான வாழ்வியல் கூறுகளை இன்றும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராமியச் சூழலை மையமாக வைத்து காட்சியளிக்கும் ஒரு சுற்றுலா தளம். அங்கு சென்றிருந்த போது டெக்சாஸ் கவ்போய் அருங்காட்சியகம் ஒன்று இருக்கின்றது என்று அறிந்த போது அங்கு சென்று Cow Boyகள் பற்றி தகவல்கள் அறிந்து வந்தேன்.

    அமெரிக்காவிற்கு ”கவ் போய்”கள் கலாச்சாரம் என்பது ஸ்பெயின் நாட்டிலிருந்து தான் வந்தது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் ஐரோப்பாவிலிருந்து அதிலும் குறிப்பாக ஸ்பெயினிலிருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு குடியேறினர். ஸ்பெயின் நாட்டிலிருந்து சற்று மாறுபட்ட தட்பவெட்ப நிலை என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்வில் இடம்பிடிக்கும் பல அம்சங்களை இங்கே தொடர்ந்தனர். அதில் முக்கிய அம்சமாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் அடங்கும்.

    asu1

    18ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து அமெரிக்காவின் இன்றைய தென் அமெரிக்காவின் இன்றைய மெக்சிகோ மற்றும் வட அமெரிக்காவின் ஃப்ளோரிடா ஆகிய பகுதிகளுக்கு குடியேறிய மக்கள் மாடுகளையும் குதிரைகளையும் கப்பல்களின் மூலம் கொண்டு வந்து இறக்குமதி செய்து புதிய குடியேற்றத்திற்கு வித்திட்டனர். ஏற்கனவே உள்ளூரில் வசித்த மக்களின் வாழ்வியல் கூறுகளிலிருந்து இவர்களது விவசாயக்கலை என்பது மாறுபட்டிருந்தது. தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே என கால்நடைகளை வளர்த்து வந்த ஆதிவாசி மக்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் இவர்கள் பால் உற்பத்திக்காகவும், மாட்டிறைச்சி விற்பனைக்காகவும், மாட்டின் தோலினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காவும் என பெருவாரியான வணிக நோக்கத்துடனான முயற்சிகளை மேற்கொண்டனர். இப்படி உருவானவர்களே ”கவ் போய்”கள். இவர்களின் உடையலங்காரமும் தோற்றமும் இவர்களை வீரர்களைப் போல மக்கள் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியது. ”கவ் போய்”கள் தங்கள் தொழில் என்ற ரீதியில் மட்டும் எண்ணாமல் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல், வித்தியாசமான தொப்பிகள், தோல் ஆடைகளை அணிதல், கவர்ச்சிகரமான உபகரணங்களை உருவாக்குதல், அவற்றைத் தமது அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துதல் என்ற வகையிலும் இவர்கள் மற்றவர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றனர்.

    டெக்ஸஸ் லோங்ஹோர்ன் (Texas Longhorn) என்னும் நீளமான பெரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட மாடுகள் ஸ்பெயினிலிருந்து 17, 18ம் நூற்றாண்டுகளில் மெக்சிக்கோவிற்கு கொண்டுவரப்பட்டவை. இன்றைய டெக்சாஸ் மாநிலம் முன்னர் மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். வேறு வகை மாடுகள் இன்று டெக்சஸ் மாநிலத்தில் அதன் பால், மற்றும் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வளர்க்கப்பட்டாலும், கலாச்சார நிகழ்வுகளில் இந்த டெக்ஸஸ் லோங்ஹோர்ன் வகை மாடுகள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காட்சிக்கும் ஊர்வலங்களுக்கும் அழைத்து வரப்படுகின்றன.

    asu4

    asu

    இந்த அருங்காட்சியகத்தில் மிகச்சிறப்பான இரண்டு விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். முதலாவது, இங்குள்ள வெவ்வேறு வகையான குதிரை வண்டிகள். விவசாயம் இப்பகுதியில் செழித்து விரிவடைய ஆரம்பித்த பின்னர் மக்கள் வாழ்வியல் நிலை மேம்பாடு அடையத்தொடங்கியது. இந்த சூழலில் ஓரிடத்திலிருந்து காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்யவும், பால் வண்டிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்யவும், தபால் தலை கொண்டு செல்லவும், மக்கள் போக்குவரத்துக்காகவும் என வெவ்வேறு வகையிலான வண்டிகளை இங்கு மக்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த வண்டிகளில் பெரும்பாலானவை குதிரைகள் பூட்டி ஓட்டப்படுபவையே. சில, மனிதர்களே கைகளால் இழுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் அமைந்தவை. விவசாயிகள் தங்கள் கற்பனைத்திறனையும் கைத்தொழில் திறனையும் கொண்டு தங்கள் விளைப் பொருட்களை சந்தை செய்ய மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடாக இந்த வண்டிகளைக் காண முடிகின்றது. இத்தனை வகை வண்டிகளா என இந்த அருங்காட்சியகம் வருவோரை வியக்க வைக்கின்றது இங்குள்ள வண்டிகள் சேகரிப்பு.

    asu2

    இதனை அடுத்து ”கவ் போய்”கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரித்த வெவ்வேறு வகை தோல் கருவிகள், ஆடைகள், மற்றும் அவர்களது இசை ஆர்வத்தினால் அவர்கள் உருவாக்கிய பாடல் ஆல்பம், அவர்களின் வீர விளையாட்டுகள் தொடர்பான புகைப்படங்கள், விருதுகள், பரிசுகள் எல்லாம் வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைச் சொல்லலாம். Texas Cow Boy Hall of Fame எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியில் இத்தகைய பல ”கவ் போய்”களின் சாதனைகளைக் கண்டு வியக்கலாம்.

    இந்த அருங்காட்சியகம் தொடர்பான செய்திகள், இது அமைந்திருக்கும் இடம், கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்பு கண்காட்சிகள் என எல்லா விசயங்களையும் http://texascowboyhalloffame.org/contact.php என்ற வலைப்பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    Share