
’’உலகமோர் கற்பனை , உள்ளமாம் கூனி
கலகமது இட்டகண் கட்டு, -திலகமாம்
ஆயர் குலத்தோர், அடிவருடும் கன்றதன்
நேயர் விருப்பம் நிஜம்’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -8
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++
[25] மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை
நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு.
மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,
பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி !
[25]
Ah, make the most of what we may yet spend,
Before we too into the Dust descend;
Dust into Dust, and under Dust, to lie;
Sans Wine, sans Song, sans Singer, and – sans End!++++++++++++
[26] இன்றைய நாளுக்கென வாழுவோர் போலின்றி
நாளைய தினம் நோக்கி ஏங்கு வோர் சிலரே.
இருள் கோபுரத்தில் ஒருவன் கதறினான் “மூடரே !
உமக்கு வெகுமதி இங்கு மில்லை, அங்கு மில்லை.”
[26]
Alike for those who for To-day prepare,
And those that after some To-morrow stare,
A Muezzin from the Tower of Darkness cries
‘Fools! Your Reward is neither Here nor There! ‘++++++++++++
[27] ஏன் புனிதரும் முனிவரும் படைக்கப் பட்டார் ?
ஈருலகைப் பற்றி விரிவாய் அறிந்து கொள்ள;
மூடப் போதகர் தம் படைப்புகள் இகழப்பட்டு
வாய் மூடிப் புதைக்கப் படுவர் மண்ணுக்குள்.
[27]
Why, all the Saints and Sages who discuss’d
Of the Two Worlds so learnedly, are thrust
Like foolish Prophets forth; their Works to Scorn
Are scatter’d, and their Mouths are stopt with Dust.+++++++++++++++++++++
-
திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்
-எம். ஜெயராமசர்மா – மெல்பெண், அவுஸ்திரேலியா
இறைவன் தன் திருவடியால் இந்நிலமிசை வந்து அருள்பாலித்துத் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை பெற்றது “திருவாசகம்”. இத்திருவாசகத்தைக் கேட்டவரும் உருகுவார். படித்தவரும் உருகுவார். இதனாலத்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் “என்று சொன்னார்கள் போலும். தேன் மருத்துவ குணம் கொண்டது. தானும் கெடாது தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தன்மை கொண்டது. இதனால்தான் “திருவாசகம் என்னும் தேன்” என்று யாவரும் ஏற்றிப் போற்றுகின்றனர். தமிழர் மட்டுமின்றி மேனாட்டினரும் திருவாசகத்தை உயர்ந்த நிலையிலேயே வைத்துள்ளனர். கல்லையும் கரைக்கும் தன்மையுடையது திருவாசகம். கல் நெஞ்சையே நல்நெஞ்சாக்கும் பெருமையும் உடையது திருவாசகம்.
தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் இரு கண்களாகத் திகழ்கின்றன. அந்தச் சைவத்தின் முழுமுதல் தெய்வமாகச் சிவனே விளங்குகின்றார். ‘சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை” என்பது சைவத்தின் அறுதியான முடிவாகும். அன்பு நெறியால் இறைவனைக் காட்டுவன தோத்திரங்கள். அறிவு நெறியால் இறைவனைக் காட்டுவன சாத்திரங்கள். இவ்விரு நெறிகளுமே இறையுண்மையையே காட்டி நிற்கின்றன.
வேதாந்தம் என்னும் ஆரா அருங்கனி பிழிந்த சாரம் கொண்டதே சைவசித்தாந்தம். இது தமிழ்நாட்டுடனும் ஈழத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டது. இப்பகுதிகளின் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளது.
சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்தது சைவசித்தாந்தம். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்தன்மையையும் கெடுக்காது நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை உண்மையானதும், பயனுடையதுமாக்கி _ இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச்சிறப்பு ” சைவசித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது”. “இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிகமேம்பட்டது” என்பதில் ஐயமில்லை என மேனாட்டு அறிஞரான ஜி.யூ.போப் கூற – “சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளது உணர்வினது சிகரம்” என ஏற்றிப் போற்றுகின்றார் கெளடி என்னும் அறிஞர்.
சைவசித்தாந்தம் மூன்று பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. நமது சிந்தனைக்கும் ,ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் அனைத்தையும் இந்த மூன்று பொருள்களுள்ளும் அடக்கலாம். இறை, உயிர், தளை என்பனவே அவை.
சைவசித்தாந்தத்துக்கு முக்கிய ஆதாரங்கள் வேதங்களா ஆகமங்களா என்று நோக்கும் இடத்து இரண்டுமே பிரமாண நூல்கள்தான். எனினும் வேதங்களைவிட ஆகமங்களே முக்கியமானவை எனக் கொள்ளமுடிகிறது. வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்ளுவது மரபாக உள்ளது. ஆகமம் என்பதற்கு விளக்கம் – பதி, பசு , பாசம் பற்றிக்கூறுவது என்று அறிகின்றோம்.
தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் கண்ணாக விளங்குவதோடு நின்றுவிடாமல் – சைவசித்தாந்தக் கருதுக்களையும் தன்னகதே கொண்டு நிற்கின்றன் என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் திருவாசகம் என்னும் தேனானது – தோத்திரநூல் எந்த அளவுக்குச் சைவசித்தாந்த உண்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா?
தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னும் தேன்.தொல்லைக்குக் காரணம் பிறவி. அதை எடுப்பதே பெரிய தளையாகும். பிறவிப் பிணியகல இறையருள் தேவை. இறையருள் கிட்டினால் ஆனந்தம். பிறவி நோயும் அறியாமையும் அகன்றவுடன் சிவானந்தம் ஆகிய பேரானந்தம் விளையும். அந்த ஆனந்தத்தை எப்படிப் பெறலாம் என்று எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது திருவாசகமாகிய தேன் என்று இப்படல் காட்டி நிற்கிறதல்லவா? அதுமட்டுமல்ல… சைவசித்தாந்த உண்மையும் இதனுள் காட்டப்படுவது நோக்கத்தக்கது.
எமது உடம்பில் சிரசு மேலானது. அதற்கு மேலாக இருப்பது சிகையாகும். சிகைக்கு மேலொன்றுமில்லை. ஆகவே சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்துக்கு மேல் சிறந்த நூல் இல்லை என்று பெரியவர்கள் சொல்லுவர். இந்தத் திருவாசகத்தில் “சிவபுராணம்” முக்கியப் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. அதன் ஆரம்பமே சைவசித்தாந்தத்தின் முக்கிய கருவைக் கொண்டிருக்கிறது எனலாம்.
“நமச்சிவாய வாழ்க ”
“நமச்சிவாய” என்பது திருவைந்தெழுத்து மந்திரமாகும்.இதன் பொருள் –
ம – பாசம்
ய – பசு
சி – பதி
ந – திரோதான சக்தி
வ – அருட்சக்தி திருவாசகம் இறைவனுடைய தலைமைப் பண்பையும், அவனுக்குட்பட்ட உயிர்களின் அடிமைப் பண்பையும், பொருத்தமாக விளக்கிச் சொல்வதைக் காணலாம்.உயிர்கள் மலம் நீங்கி இறைவன் அருள்பெற மணிவாசகர் பாடியதால் திருவைந்தெழுத்தின் எல்லா வடிவங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.
சைவசித்தாந்தம் – மாயை, கன்மம், வினை பற்றியெல்லாம் சொல்லுகிறது. பிறப்புக்குக் காரணம் வினை. ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும் – பிறப்பதற்கும் – இறப்பதற்கும், அனுபவிப்பதற்கும் – இன்ப துன்பங்களுக்கும் – வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் –
14 – மாயப் பிறப்பறுக்கும்
20 – முந்தை வினை முழுதும்
25 – பொல்லா வினையேன்
26 – புல்லாகிப் பூடாய் ….எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்
பதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலுகிறான். இறைவனின் அருள்நோக்கம் ஒன்றினால்தான் ஆன்மாக்களின் மலபந்தம் அகல முடியும். இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.
18 – அவன் அருளாலே அவன் தாள்வணங்கி
38 – மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
40 – அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
42 – ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
48 – பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
64 – பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
78 – காக்கும் எம்காவலனே
87 – மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
88 – கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
91 அல்லல் பிறவி அறுப்பானே ……. ( திருவாசகம் )
மணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் – இவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங்கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா?
உயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது. பதியினை அடையும் நிலை இயற்கையானது. இக்காரணத்தினால்தான் யாராவது இறந்துபோனால்” இயற்கை எய்தினார்” என்கிறோம். இந்த உலகவாழ்வு செயற்கையானது. அது வருவதற்குக் காரணம் அவா ஆகும். அவா ஆனது விரைவில் மறையமாட்டது. அதனை முயன்றே போக்கவேண்டும். அப்படிப் போக்கினால் இறைவனிடம் இருந்து நீங்காத இயற்கைத் தன்மையைப் பெறும். இதனை வள்ளுவர் ” பேராஇயற்கை” என்று குறிப்பிட்டாரோ எனக் கருதக்கூடியதாக இருக்கிறது. இக்கருத்தைத் திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகத்தில் காட்டுவதும் நோக்கத்தக்கது.
இன்றெனக் கருளி யிருள் கடிந்
துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
னீயலால் பிறிது ற்றின்மை
சென்று சென்றணுவாய்த்
தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை
யாருன்னை யறிகிற்பாரே.உயிரனது சிவத்தோடு ஒடுங்கும் பேரருள் நிலை இங்குக் காட்டப்படுகிறது. இதனால் திருவாசகத்தில் இதனை ‘இருதயப் பாடல்” எனப் பெரியவர்கள் கருதுவர். “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்” என்னும் அடிகள் மூலமாக உயிரின் பாசநீக்கம் – சிவப்பேறு காட்டப்படுகிறது.
மலம் என்று சொல்லும் பொழுது எமக்கெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறதல்லவா? முகத்தைச் சுளிக்கின்றோமல்லவா? ஆனால் இந்தச் சொல் தத்துவவிளக்கமாகச் சைவ சித்தாந்தத்தில் இடம்பெற்று நிற்கிறது. சகலவிதமான சிக்கல்களுக்கும் “மலமே” காரணமாக இருக்கிறது. இந்த மலமானது ஆணவம், கன்மம், மாயை எனச் சைவசித்தாந்தத்தில் பேசப்படுகிறது. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலம். இன்ப, துன்பங்களை விளைவிப்பது கன்ம மலம். மயக்கத்தை உண்டுபண்ணுவது மாயாமலம். இந்த மயக்கத்தினால் – ஆன்மாவானது தன்னை உடம்பாகவும், உலகில் காணப்படும் போகங்களை உண்மையானதெனவும் எண்ணிவிடுகின்றது. இதனால் மாயையும் மலங்களில் ஒன்றாகிவிடுகிறது.
திருவாசகம் மலம் பற்றிக் காட்டி நிற்கிறது.மலத்தைக் காட்டுவதோடு – அதனைப் போக்குதற்கு யார்தான் உள்ளார் என்பதையும் கூறி நிற்பது நோக்கத்தக்கது.
111 – மூலமாகிய மும்மலமறுக்கும்
112 – தூயமேனிச் சுடர்விடு சோதி ( கீர்த்தித் திருவகல் )
122 – முத்தா போற்றி முதல்வா போற்றி
128 – மன்னிய திருவருள் மலையே போற்றி
194_ மருவிய கருணை மலையே போற்றி ( போற்றித் திருவகல் )
8- . உழிதரு காலத்து உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழிதரு காலமும் ஆய் அவை காத்து
எம்மைக் காப்பவனே.16 – நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் ( திருச்சதகம் )2 – உள்ள மலம் மூன்றும் மய உகு பெரும்
(பண்டாய நான்மறை 20 20 -வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல்வினைப் பட் டாழ் கின்றா யாழாமற்
காப்பனை யேத்தாதே சூழ்கின்றய்க் கேடுனுக்குச் சொல்
கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய
வெள்ளத்தே ( திருச்சதகம் )மூலமலம் வினைபற்றிச் சொல்லி – இவைபோக இறைவன் துணை எத்துணை அவசியமானது என்பதையும் இப்பாடல் சுட்டிநிற்பது நோக்கத்தக்கதாகும்.
1 – முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்
வண்ணஞ் சித்தமலம் யறுவித்துச் சிவமாக்கி
யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா
ரச்சோவே,2 – மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி … என்று காட்டிநிற்கும் திருவாசகம் சொல்லும் இறைவனின் மலபரிபாக நிலையும் ஆட்கொள்ளும் நிலையும், யாவரும் விளங்கும் வண்ணம் இருக்கின்றது என்பது புலனாகிறதல்லவா ?பிறவிக்குக் காரணம் மலங்கள்தான். எனவேதான் திருவாசகம் ” ஆர்த்த பிறவித்துயர்” என்று கூறியதும் நோக்கத்தக்கது. திருவம்மானையில் “எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு ‘என்றும்…” கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடந்த வேதியனே” .. என்றும்.. ” கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட” .. என்றும் _ ” இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து” என்றும், அப்பிறவியைப் போக்க இறைவனே துணை யென்பதும் காட்டப்பட்ட விதம் யாவரது உள்ளத்தும் பசுமரத்தாணி போல் பதியுமல்லவா ?
“வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடக்க ஆற்றேன் ” என்கிறார் மணிவாசகர். இந்த உடம்பு புண்மயமானது.” மலஞ்சோரும் ஒன்பதும் வாயிற்குடிலை” என்று சொல்லுவதைக் கேட்கும்பொழுது உடம்பின் அருவருப்புத் தெரிகிறதல்லவா? அதுமட்டுமல்ல ” புறந்தோல் போர்த்தங்கு புழுவழுக்கு மூடி” – இதுவும் உடம்புதான். இதனால் இந்த உடம்பினுள் இருக்கும் பிறவி நிலைக்கு “ஆற்றேன் ஆற்றேன்” என்று மணிவாசகர் திருவாசகம் மூலம் வெளிப்படுத்தி நிற்பது தத்துவத்தின் சாரம் அல்லவா? ஆறுதல் தருபவன் யாரெனின் அது இறைவன் மட்டுமே என்பது திருவாசகத்தின் கருத்துத்தானே! இதனால்தான் “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்று போதித்து நிற்கிறது.
சைவசித்தாந்தம் கடவுள் கொள்கையை முக்கியமாகக் கருதுகிறது. ” சிவன் ” என்னும் சொல்லிலிருந்து வந்ததுவே “சைவம்” ஆகும். சித்தாந்தம் எனக் குறிப்பிடாது “சைவசித்தாந்தம்” என்று சிவத்தையும் சம்பந்தப்படுத்தி வழங்குவதிலிருந்து சிவனுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிற தல்லவா?
சைவசித்தாந்தம் “பதி ” என்று குறிப்பிடுவது இறைவனையே. இந்த இறைவனை இறை, கடவுள், பதி, பரமசிவம், சிவம், ஈசன், பேருயிர், பரமாத்மா என்று பலபெயர்களில் அழைப்பதைக் காண்கிறோமல்லவா ? ஒரு நாமமோ ஓர் உருவமோ இல்லா இறைவனுக்குப் பல நாமங்கள் கொடுத்து வணங்குவதையும் காண்கிறோம் தானே! இதில் “கடவுள்” என்ற சொல் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். உள்ளத்தைக் கடந்தவர், உலகையும் கடந்தவர், உலகுள்ளும் இருப்பவர், உயிர்கள் உள்ளும் வியாபித்து நிற்பவர், இந்தக் கருத்துக்கள் சைவசித்தாந்தமே. இதனை மணிவாசகரும் திருவாசகத்தில் காட்டுகிறார்.
137 – பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
138 – நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
139 – தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
140 – வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
141 – வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
திருப்பள்ளி எழுச்சியால் இறைவனைத் துயில் எழுப்ப மணிவாசகர் முயலுகிறார். எம்மை எல்லாம் அஞ்ஞான இருளில் இருந்து எழுப்புவதற்கு இது உதவுகிறதல்லவா? திருப்பள்ளி எழுச்சியில் இறைவனைப் பற்றி மணிவாசகர் காட்டுவது சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை விளக்கி நிற்பதாக இருக்கிறது.
பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
போக்கு இலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரைக்
சீதம் கொள்வயல் திருபெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!கடவுள் பற்றிச் சைவசித்தாந்தம் என்ன கருதுகின்றது என்பதற்கு மேலும் பலவற்றை திருவாசகம் தந்து நிற்கிறது.
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் எளிய அழகே போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
சடை இடை கங்கை தரித்தாய் போற்றி தென்நாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி அருவம் உருவமும் ஆனாய் போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி சிந்தனைக்கும் அரிய சிவமே போற்றி புரம்பல எரித்த புராணா போற்றி பரம் பரம் சோதிப்பரனே போற்றிதிருச்சதகத்தில் உள்ள கீழ்வரும் பாடல் சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை மிகவும் சிறப்பாகக் காட்டி நிற்கிறது.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே!இறை அனுபவத்தை மணிவாசகர் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாங்கு அவரது எளிமையினையே காட்டி நிற்கிறது. இரக்கமும், உருக்கமும், இணைந்து இறைஅனுபவத்தை உணரப்பண்ணி இருக்கிறது திருவாசகமென்னும் தேன் என்றால் அது மிகையாகாது. மணிவாசகர் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என அழைத்து “பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கியவன்” என்று விளக்குகின்றார்.” ஒப்புனக்கில்லா ஒருவனே ” – ” பாசவேர் அறுக்கும் பழம் பொருளே, பிறவி வேரறுத்து என் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா” என்றும் கூறிநிற்கின்றார். இவையெல்லாம் சைவசித்தாந்த நெறிகளைக் காட்டும் திருவாசகச் செய்திகள் எனலாம்.
சைவசித்தந்தம் தமிழர் சொத்து. சைவத்தின் சொத்து. திருவாசகம் – தமிழிரதும் சைவத்தினதும் சொத்தாகும். சொத்துக்களைப் பிரிப்பது முறையற்றது. சைவசித்தாந்தச் சொத்து திருவாசகச் சொத்தினுள் இருக்கின்றது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம் அல்லவா? சைவசித்தாந்தத்துக்குச் சாத்திர நூல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ அதே அளவு தோத்திர நூல்களும் முக்கியமானதாக இருக்கின்றன.
அந்தவகையில் தோத்திர நூலான “திருவாசகம் என்னும் தேன்” சைவசித்தாந்தக் கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறதல்லவா? எனவே சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம், இறைபற்றி அறியத் “திருவாசகம் என்னும் தேனை” நாடலாம் என்னும் எண்ணம் உங்கள் உள்ளமதில் தோன்றி இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மேனமைகொள் சைவநீதி விளங்கத்
திருவாசகத்தேனைப் பருகுங்கள்! இறையடி
தொழுமின்கள்! ஈசன் புகழ் பாடுங்கள்!விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரௌயெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சு நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்து நீர்பாய
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே. (சிவப்பிரகாச சுவாமிகள்) -
அவளே மருந்து
கவிஞர் ஜவஹர்லால்
உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; –என்றன்
உடலும் உருகுது தாங்கவில்லை;
எண்ணமும் செயலுமே முடங்கிவிட– என்றன்
இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.நெஞ்சுளே ஏதோ உடைகிறது; – என்
நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
பஞ்சென உள்ளம் பறக்கிறது — எங்கோ
போய்ப்போய் மீண்டும் வருகிறது.கண்ணிலே ஒளியும் குறைகிறது; – காணும்
காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் – ஏதோ
கொடிய வலியுடன் வதைக்கிறது.பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் – எங்கோ
பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே – இங்கே
உருகி உருகிப் பேசுகிறார்.வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
வேதனை நான்பட மற்றவர்கள் – என்னை
வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
இறகென நீவியே தரவேண்டும்;
என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
இளையவ ளேபிற மருந்தில்லை.நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; – அந்த
நோயெலாம் உலகில் வேறுவகை;
நோயிதைத் தீர்க்க மருந்தில்லை – இந்த
நோய்தந்த அவளே நோய்மருந்து.பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
புணர்ச்சிமகிழ்தல்–1102
திருவள்ளுவர் இலக்கியமன்றம்
நங்கநல்லூர்–08-07-06 -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மான்போக பின்னால்ரா மன்போனாற் போலவே
”நான்”போகப் பின்தொடரும் நல்லது: -வான்மேக
வண்ணனை மூங்கிலில் வாசிக்கும் நந்தன்சேய்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….! -
தை பூசம்….
———————————–
மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
கைகூசும் காலம் கலவிடுவோய், -தைபூச
நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
பண்ணாத பாவமும் பாழ்….கிரேசி மோகன்….!அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி
விண்ணாளும் தேவர்தம் வெற்றி -எந்நாளும்
காப்பதற்குக் கையில் கதிர்வேல் கொண்டவனாம்
தீப்பொறி தோற்றத்தைத் தொழு….கிரேசி மோகன்….! -
தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?
பவள சங்கரி
தலையங்கம்
மறைந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த அந்த 75 நாட்கள் உண்மையாக என்ன நடந்தது என்பதை உடனிருந்து செவிலித் தாயாக கவனித்துக்கொண்டதாக பெருமைப்பட்டுக்கொண்டு அதற்குரிய சன்மானமாக 8 கோடி தமிழர்களைக் கட்டியாளும் தலைமைப் பதவியை குறி வைக்கும் சசிகலா இன்று வரை அந்த மக்களை நேரில் சந்தித்து அது பற்றி பேசத் தயங்குவது ஏன்? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கூடவே பல ஆண்டுகளாக இருந்தவர் அவர் உடல் நிலை பற்றியும் நன்கு அறிந்தவர் உண்மை நிலவரத்தை யதார்த்தமாக பேச முடியவில்லை எனும்போதே அதில் ஏதோ பிரச்சனை என்பதாகத்தானே அர்த்தமாகிறது. எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன? அதுவும் இந்த அச்சத்திற்குக் காரணமான கூட்டமே மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றால் மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே இந்த நாடு எப்படி விளங்கும்? மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே, அப்படியானால் பொது மக்களைப் பற்றி கவலைப்படுபவர் எவரும் இல்லை என்பதே இன்றைய நிலவரம். அவசர அவசரமாக சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் சசிகலா தன் மீது தவறு இல்லை என்கிற பட்சத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து ஏன் பேசக்கூடாது? பதவிக்கு வந்த பின்பு மக்களுக்கு இலவசங்கள் என்ற பிச்சையைப் போட்டு சமாதானம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையா? தமிழக மக்களை இத்தனை கேவலமாக எடைபோடும் அளவிற்கு மட்டம் தட்டி விட்டார்கள் என்றுதானே இதன் அர்த்தம். 200, 500, 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களே இப்போதாவது திருந்துங்கள். பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த கட்டமாக மக்களின் வாழ்வாதாரங்களே பறி போய்க்கொண்டிருப்பதுகூட எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தண்ணீர் பஞ்சம் இன்று எவ்வளவு பெரிய வாழ்வாதாரப் பிரச்சனை என்பது கூட கேட்பார் இல்லை. விவசாயம் அழிந்து கொண்டிருப்பதுபோக, மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறிவார்களா? நிலத்தடி நீரும் சுத்தமாக வற்றிய நிலையில் காவேரி தண்ணீரும் வருவதில்லை, 3000 லிட்டர் பிடிக்கும் ஒரு லாரி தண்ணீர் விலை ரூ 800/ கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மக்களின் குறைகள் என்ன, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாத ஒருவரை மக்கள் எப்படி முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியும்?
தற்போதைய சூழலில் குதிரை பேரங்களை மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஊக்குவிக்கப் போகிறார்களா? எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவர்வசம் தமிழகத்தைக் காவு கொடுக்கப் போகிறார்களா? இந்தச் சூழ்நிலையில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் மறு தேர்தலை ஏன் அறிவிக்கக்கூடாது? எந்தவொரு பொது மக்களும் சசிகலா அவர்களை முதல்வராக ஆக்குவதற்கு வாக்களிக்கவில்லை எனும்போது சசிகலாவை முதல்வராக எப்படி அங்கீகரிக்க முடியும்? சனநாயகத்திற்கு புறம்பான இதுபோன்ற செயல்களை மக்கள் ஒரு நாளும் ஆதரிக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இது போன்ற செயல் திட்டங்களை முன்னெடுப்பது நாட்டிற்கு நன்மை பயப்பது அல்ல.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணன்று(ஹரி)
பெண்ணானாய்(மோகினி), பெண்பாதி(சக்தி) ஆண்மைக்கு(ஹரன்) மைத்துனா!
உண்மைக்குள் உய்ய உதவு”….!அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில்: -அறிவே!
இருமுடிக் கட்டுமயில் ஏந்தினன் உச்சி
கருமுகில் மோகினிசேய்க் காய்(அய்யப்பன்)”….கிரேசி மோகன்….! -
இதுவும் காதல் தானோ!
இன்னம்பூரான்
28 06 2014/07 02 2017வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாசுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.
திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!
இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன் ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!
தொடரப்போவது: நான் பகவானை தரிசிக்க போன படலம்.சித்திரத்துக்கு நன்றி:
http://suriyantv.com/wp-content/uploads/2012/06/1-1024×788.gifஇன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
-
கிடந்தாய் வாழி காவேரி !
கவிஞர் ஜவஹர்லால்
பிணைந்தார் நெஞ்சம் பிரிக்கவென்றே
பிறந்த கானல் வரிகேட்டும்
இணைந்தா ருள்ளம் நெருப்பாகி
இரண்டாய்ப் போன நிலைகண்டும்
இணைந்தார் வாழ்வில் திருப்புமுனை
இயக்கும் விதியின் செயல்கண்டும்
கனத்த இதயத் துடன்தானா
கிடந்தாய் வாழி காவேரி!மனத்தில் இன்பப் பூப்பூக்க
மணக்கும் தமிழின் இசைப்பாட்டே
நினைக்கா வகையில் பிரிவினையை
நிகழ்த்தி வைத்த நிலைகண்டே
இனிக்கும் இசையே இவர்வாழ்வில்
இசையா இசையாய்ப் போனதென்ற
நினைப்பில் தானா முடங்கிப்போய்க்
கிடந்தாய் வாழி காவேரி!தவித்த வாய்க்குத் தண்ணீரைத்
தரவே மறுக்கும் பிறந்தஇடம்
தவித்து நொந்து தாகத்தில்
தினமும் அலறும் புகுந்தஇடம்
புவிக்குள் இதுபோல் பெண்ணுக்குப்
போராட் டம்தான் வரலாமா?
கவிழ்ந்த நெஞ்சத் துடன்தானா
கிடந்தாய் வாழி காவேரி!நதிநீர் அளிக்க மனமில்லை;
நடப்பில் ஒருமைப் பாடென்பார்.
நதியின் வறட்சி தானிந்த
நாட்டின் வறட்சி அறியாரா?
நதியின் நீரில் அரசியலை
நடத்தும் கொடுமை தனைக்கண்டோ
கதிவே றின்றி உளங்காய்ந்து
கிடந்தாய் வாழி காவேரி!சைத்தான் வேதம் முழங்கிநிற்கச்
சரித்தான் என்றே பண்டிதர்கள்
கைத்தா ளத்தைப் போட்டுநிற்கக்
கண்முன் காட்சி பொய்யென்றே
சைத்தான் கூத்தும் ஆடிநிற்கச்
சகித்து நாடு பொறுத்திருக்கச்
செத்தாற் போதும் என்றாநீ
கிடந்தாய் வாழி காவேரி!காக்கை கோட்டான் இசைபாடக்
கழுகும் பேயும் நடமாடக்
கூக்கூ என்றே குரலெழுப்பிக்
கூட்டாய்ச் சிலவே ஓலமிடச்
சேர்க்கை ஒவ்வாக் கூட்டணிகள்
சிரிப்பாய்ச் சிரிக்க இங்காரும்
கேட்கா இசையைக் கேட்டாநீ
கிடந்தாய் வாழி காவேரி! -
தைப்பூசம் காணுங்கள்!
-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும் அல்லல் அகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கிறது. அடியார் ஓரடி நடந்தால் ஆண்டவன் நூறடிவருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமை நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.
கலியுகத்தில் எவர் வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை ” முருகா ” என்பதே யாகும். ஓம்முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது , உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவிதப் பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன.
அழகு, ஆற்றல், கருணை நிரம்பிய முருகப்பெருமானுக்குப் பல விசேட தினங்கள் இருந்தாலும் ” தைப்பூசம் ” மிகவும் சிறப்பானதாக அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாக கொண்டாடாப் பட்டுவருகிறது.
தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த தினமாக நீண்ட காலமாகத் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது எனலாம்.
இந்த விழா இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தர் காலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
முருக வழிபாடு பழைமை வாய்ந்தது. தைப்பூசத்தோடு முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார். முருகனது அவதாரமே மிகவும் அற்புதமானது.
முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது.
முருகு – என்றால் இளமை.முருகன் – என்றால் அழகன் என்றும் இளமையானவன் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரில் தமிழின்
வல்லின , மெல்லின, இடையின எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனால் முருகப்பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஓர் எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும் நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.ஆண்டவனிடம் வரம்பெற்று அந்தவரத்தை நல்வழியில் பயன்பபடுத்தாது – ஆணவத் தால் அறவழியை மறந்து – தேவர்களுக்கே துன்பம் செய்யத் துணிந்துவிட்டான் சூரபதுமன் எனும் அரக்கன். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு ஆண்டவனின் சக்தி தோன்றி அதனை
அழித்துவிடும். அந்த பெரும் சக்தியாக உருவெடுத்த நிலைதான் முருகன் அவதார மாக அமைகிறது.“அருவமும் உருவமாகி
அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமாய் நின்றஜோதி
பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பனிரண்டும் கொண்டு
ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய”முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு காட்டுகிறது. அரக்கரை அழித்து ஆணவத்தை அகற்றி அறம்தழைக்கச் செய்ய முருகன் வந்துதித்த தினமே தைப்பூசத்திருநாளாகப் முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது என ஒரு வரலாற்றுக் கதையும் நிலவுகிறது.
உமையம்மன் கொடுத்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து வெற்றிகொண்ட தினமாகவும் தைப்பூச விழா அமைகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது.
இவற்றைவிட மேலும் ஒரு கதையும் தைப்பூசத்துடன் தொடர்பு படுத்திச் சொல்லப் படுகிறது. சிவனால் பார்வதிக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. அவ்வேளை முருகன் அதை மறைந்திருந்து கேட்கவே – பார்வதி கோபங்கொண்டு சபித்திட முருகன் கோபித்து திருப்பரங்குன்றம் சென்று இருந்திட – சிவனும் பார்வதியும் சென்று சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது.
இக்கதைகளை வைத்துப் பார்க்கின்றபொழுது – தைப்பூசம் என்னும் தினமானது முருகப்பெருமானுடன் நெருங்கிய தொடர்புடைய தினமாகவே இருக்கிறது என்பதே இங்கு முக்கிய அம்சமெனலாம்.
முருகன் தோற்றத்துடன் பிரகாசம் சம்பந்தப் பட்டிருக்கிறது.சிவனின் நெற்றிக்
கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பொறி சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகன் அவதரிக்கிறார் என்பதைக் கந்தபுராணம் வாயிலாக அறிகின்றோம். ஒளிப் பிழம்பான முருகன் – ஒளிநிறைந்த பெளர்ணமி தினத்துடன் இணைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றே எண்ணமுடிகிறதல்லாவா ?தைபிறந்தால் வழிபிறக்கும். தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடை யது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாகத் தெரிகிறதல்லவா ?
தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.
“மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் ”சைவத்தமிழ் மக்கள் செறிந்துவாழும் தென் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப்பகுதிகளிலும்கூட தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
வித்தியாரம்பம், காதுகுத்தல், புதுக்கணக்கு ஆரம்பித்தல், புதிய முயற்சிகள்
தொடங்குதல் எனப் பல சுபநிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் நாளாகவும் தைப்பூசம். முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.பலவிதமான காவடிகள் எடுத்துத் தங்கள் குறைகளைப் போக்கும் தினமாக அடியார் கள் தைப்பூசத்தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். காவடிகளிலே பல வகையுண்டு.
பாற்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, பறவைக்காவடி , இவற்றோடு – தமது உடலை வருத்தக்கூடிய பலவித நிலைகளையும் இணைத்து அடியார்கள் முருகனை வழிபடும் தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது.
” தீபமங்கள ஜோதி நமோநமோ” – ” ஒளிவளர் விளக்கே ”
” ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி ” –
” சோதியே சுடரே சூழொளி விளக்கே ” – இவையனைத்தும் இறைவன் ஒளி
வடிவானவன், பிரகாசமானவன் என்பதையே காட்டுகின்றன எனலாம்.முருகனே ஒளிவடிவானவன்.ஜோதிப்பிழம்பாயிருந்து வந்தவனே முருகன்.உலக இயக்கத்துக்கு ஒளியும் வெப்பமும் இன்றியமையாத சக்திகளாகும். உயிர்வாழ்வதற்கும் உற்பத்திக்கும் இவையிரண்டுமே அவசியமானதேயாகும். அந்தச் சக்தியாக முருகப்பெருமானே விளங்குகின்றான் என்பதுதான் எங்கள் சமயநம்பிக்கை ஆகும். அதனையே புராணங்களும் காட்டி நிற்கின்றன. இவையாவும் இணையும் விதத்தில் தைப்பூசம் அமைவதால் தைப்பூசம் முக்கியச் சமயக் கொண்டாட்டமாகவும் முருகப்பெருமானுடன் தொடர்புபட்டதாகவும் இருந்து வருகிறது. எதையும் இறை உணர்வுடன் செய்கின்றபொழுது அது உன்னதத்தையே தொட்டுநிற்கும் என்பதை மனமிருத்தினால் தைப்பூசம் காண்பது யாவருக்கும் நல்லுணர்வையே நல்கி நிற்கும்.
-
சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் கல்வியியல் சிந்தனைகள்
-ச. பிரியா
கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.
கல்வியின் சிறப்புகள்
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைபுகினும் கற்கை நன்றே” (நறுந்தொகை – 35)என்று அதிவீரராம பாண்டியனும்,
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம் – 183) என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.கல்வி – உயர்ந்தோர்
கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,
“…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)
எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.
நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,
“ சூத்திரன் படித்தால் நாவை அறுக்க வேண்டும். படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. (ப.49)
என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.
இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,
“மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)
சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து
“திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.
சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது” (பாம்.சித்.பா.129)
என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,
“பொய்யான கல்விகற்றுப் பொருண் மயக்கம் கொள்ளாமல்
மெய்ஞானக் கல்வி விரும்புவாய் கன்மனமே ” (இடை.சித்.பா.249)என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.
“ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணாண நூல்களே யென்றாடு பாம்பே” (பாம்.சித்.பா.54)என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,
“ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும்
கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம்
பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ” (சிவ.பா.184)என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.
சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,
“கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).
எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,
தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)
கல்வியே தக்கதுணை
மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,
“துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் சந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே” (திருமந். 294)என்ற பாடலில் திருமூலர் மனிதனுக்கு கடைசியில் துணையாக வருவது தேடிய புகழ், சொன்னசொல், கற்றகல்வி ஆகியவை மட்டுமே என்கிறார்.
“ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று அவ்வையாரும்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” (குறள்- 394)என்று கற்றவர்களுக்கு எல்லா இடங்களிலும் கல்வியே துணையாக வரும் என்ற கருத்தும் இவண் ஒப்புநோக்கத் தக்கதாகும்.
அனுபவஅறிவு – பட்டறிவு
கல்வியில் ஒன்று அனுபவக்கல்வி ஆகும். வாழ்க்கையில் உணர்ந்த பட்டறிவே அனுபவ அறிவாகும். இந்த அறிவு ஒருவனை எந்தச் சூழலிலும் கைவிடாதது என்கிறார்.
“ பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே ” (திரு- 298)என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,
“ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே” (திரு.316)என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.
எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,
“ புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்” (பித்தன் ப.80)என்றும்
“ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக
இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன்
காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.
முடிவுரை
- கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
- சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
- திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.
துணைநின்ற நூல்கள்
- சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
- பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
- தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
- அப்துல் ரகுமான், பித்தன், நேசனல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2003.
- மு.அண்ணாமலை, தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ,அம்மன் புத்தகக் குழுமம், சென்னை- 5, 2005.
- இளமதி சானகிராமன், சித்தர் இலக்கியம், கோகுலம், புதுச்சேரி- 8.2007.
- அவ்வை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), புறநானூறு, கழகவெளியிடு, சென்னை-18,ம.ப.2007.
- கி.நாகராசன், மலரும் இந்தியச்சமுதாயத்தில் கல்வி, இராம் பதிப்பகம், சென்னை-93,2009.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பரட்டைத் தலையொடு, பக்கத்தில் ’’ஆ’’வந்(து)
அரட்டை அடிவருடி ‘’அம்மா’’(மாட்டு சத்தம்) : -குறட்டைக்
கடலூரில், போரூரில் கீதை , புவியின்
இடையூறு போக்கும் இடை’’….
அட்டைக் கரியாக, ஆடை கலைந்திட,
வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -கொட்டிலில்
தன்நினைவு இன்றித்’’ஆ’’ தாலாட்டில் தூங்கிடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!”Be still HE COMES
STILL IS THE MOUNTAIN
Still is the deep Sea
Still is the windless woods
Still is the contemplating mind
In the womb of stillness is born
The dark beauty,the ethereal joy!
HE the dark one is effulgent !
Yes, have you heard dear
Dark and yet effulgent !
HE is dark and radiant !
HE is still and dynamic
HE is manifold and one
HE is bewitching yet formless
Be still within and behold
In thae stillness of the mind HE comes !….Poem by Nochur Venkataraman -
படக்கவிதைப் போட்டி – (98)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
வெண்ணிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
COMPANION….!
——————————”COMPANION கண்ணனின் காப்புண்டு, வேய்ங்குழல்
சிம்பெனி கீதை செவிக்குணவு: -நம்பணி
எண்ணியதை நல்கும் யசோதை இளஞ்சிங்கம்
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!






