Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170902 - Ananya - lr
    ”அனன்யபக்தி ஆவுக்(கு) அளிக்கும் பிருந்தா
    வனன்யகண்ணா காலை வணக்கம், -தினம்யென்
    கணினியில் பிறந்திடுவோய், கேசவ் வரைந்திடுவோய்,
    ManyMany HappyReturns மால்’’….!

    ”அனன்யமவர் ஆவுக்(கு), அராஜக சிந்தை
    சினன்யர்கள் கம்ஸ சிசுபால -இனன்யர்போல்
    கூடாரைக் கொல்லும்சீர் கோவிந்தன், ஆன்மனை
    தேடார்க்(கு) அதாகும்கீ தை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கோப்புக்கூட்டல் (7): தமிழ்

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 1, 2917

     

    innam

    டேவிட் ஷுல்மன்

    மொழிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவது அவற்றின் இயல்பு. அந்த இயல்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால்தான், இன்று ஆங்கிலம் உலகமொழியாக உலவி வருகிறது. ஸம்ஸ்கிருதம் என்ற பெயரின் பொருள், ‘நன்கு உருவாக்கப்பட்டது’. கணினியாளர்களில் பெரும்பாலோர் அது உண்மை என்பார்கள். அது ஒரு புறமிருக்க, எந்த மொழிக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போகவில்லை என்பதை கிரேக்கம், ரோமானிய மொழி, அரபி, ஹீப்ரு, தமிழ் அறிந்தவர்கள் அறிவார்கள். மேலும் சொல்லப்போனால், தனிமொழியாக இயங்கத்தொடங்கிய ஸம்ஸ்கிருதம், அதனாலேயே பேசாமடந்தை ஆயிற்று.

    இன்றைய கோப்பு, பேராசிரியர் டேவிட் ஷுல்மனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது. முனைவர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் விமர்சனத்தையும் சுட்டுகிறது.

    இனி அவரவர் பாடு! தமிழின் பாடு!

    “The notion that there was a pure Tamil that had no Sanksrit in it is a complete fantasy. There are Prakrit and Sanskrit words in the earliest Tamil Brahmi inscriptions we have. The Tolkappiyam is permeated by Sanskrit — the phonological analysis of the yezhuthhu (alphabet) is taken from Sanskrit grammarians. The Tamil Brahmi script has some features peculiar to it, but it’s deeply interwoven with the Sanskrit system.”.. “I want, and hasten to say, that everything in life is singular and unique. Tamil is also unique. But it’s not unique because it has nothing to do with Sanskrit. It is unique because Tamil has all of this in it and it has its own genius. Tamil grammarians such as Sivananamunivar in the 18th century themselves say that it has iyarkai, iyalpu, a particular nature. It is the task of Tamil grammarians to unravel and review that logic or nature, and this nature does not depend on separating it from Sanskrit.”

    -David Shulman:  Tamil: A Biography.

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/society/i-cannot-compartmentalise-my-life/article19554510.ece

    “,,,But my biggest argument is with a thread that runs through the book. Shulman asserts that a pure, autonomous Tamil never existed. If this was the case, why, even in his own analysis, at every moment in its long history, is Tamil continually resisting and wrestling with Sanskrit to maintain its distinction — a cross that no other Dravidian/ Indian language wants to bear?…”

    Prof. A.R. Venkatachalapathy

    Excerpted with thanks on September 1, 2017 fromhttp://www.thehindu.com/books/books-reviews/review-tamil-a-biography/article17325788.ece

    ***

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/David_Shulman.jpg/250px-David_Shulman.jpg

     

     

     

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    ஈரோடு புத்தகத் திருவிழாவில் பழங்குடியின மாணவர்கள்

    ***************************************************************************************

    1

    பர்கூர், கடம்பூர் ஆகிய சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலைகளில் வாழும் சமார் 40 பழங்குடியின மாணவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு அவர்களின் ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டனர். மிகவும் பின்தங்கிய மலைப் பிரதேசங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கிற பழங்குடியின மாணவர்களாகிய இவர்கள் ரயில்களையோ, நகரிலுள்ள தரமான பேருந்துகளையோ கூடப் பார்த்ததில்லை. இவர்கள் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள கொங்காடை, கடம்பூர் மலைப் பகுதியுலுள்ள குன்றி, விளாங்கோம்பை, அக்னிபாவி, ஜி.என். தொட்டி, நாயகன்தொட்டி, அணில்நத்தம் பண்ணையத்தூர் ஆகிய எட்டு கிராமங்களில் இயங்கிவரும் அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களாவர். இவர்களின் ஆசிரியர்கள் சிரத்தையெடுத்து ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இவர்களை அழைத்து வந்ததோடு புத்தகத் திருவிழா அரங்கிற்குள் முழுமையாகச் சுற்றியும் காட்டினர். இம்மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் செயல்பட்டுவரும்       ‘ சுடர் ’ தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

    3

    இம்மாணவர்கள் விழாக்கோலம் பூண்டிருந்த புத்தகச் சந்தையைப் பார்த்தும் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான வண்ண வண்ணப் புத்தகங்களைப் பார்த்தும் குதூகலமடைந்தனர்.

    புத்தக அரங்கைவிட்டு வெளியே வந்த இம்மாணவர்களிடம் “ யார் யார் புத்தகங்கள் வாங்கினீர்கள் ? ” என்று பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் கேட்டார். அனைவரும் வெறுங்ககையோடு வெளியே வந்ததோடு கையை விரித்து “ யாரும் எதுவும் வாங்கவில்லை ” என்று சைகை காட்டினர்.

    அத்தனை மாணவர்களுக்கும் புத்தகங்கள் பேரவையின் சார்பில் வாங்கிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களுக்கு மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.

    2

    தீபாவளி சமயங்களில் கையில் பட்டாசு வாங்கிச்செல்லும் குழந்தைகளினின் பூரிப்பை இப்பழங்குடி மாணவர்களின் முகங்களில் பார்க்க முடிந்தது.

    ஆம்… ஈரோடு புத்தகத் திருவிழா தொலைதூரத்திலுள்ள மலைப்பிரதேசக் கிராமங்களையும் எட்டியுள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170901 - Dialogue with Arjuna (Nara Narayana) -lr

     

    “டயலாக்வித் அர்ஜுனா, டாப்கிளாஸ் கேசவ் –

    பயலேக்(payalag) ஆகி பயந்தும் , -கயலாக –

    ஆமைவ ராகசிங்கம் அந்தணர்(வாமனர்) மூணுவித –

    ராமனும் கண்ணன் ரதம் “….

     

    ’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
    கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
    வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
    பந்தங்கள்,சொந்தங்கள் பொய்’’….

     

    ’’சாரதி கீதையாய், சவ்யசாசி காமத்தை (பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே!, – பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….
    ”பகவான் உவாச’’….!
    ————————————————–

    ’’மடிதனில் குந்தி மகனேகாண்!, மந்தி
    வடிவினில் மாருதி விண்ணில் -கொடிதனில்
    வெற்றிவேல் வீரவேல் வாக்குறுதி செய்வதை,
    பற்றுவில் காண்டீபம் பாண்டு’’….!

    “வாகனம் தெய்வம், வழித்துணை ஆண்டவன்,
    போகும்நம் பாதை பகவானே, -நீகனம்,
    தன்செயலென்(று) எண்ணி ,தலைமேல் சுமக்கின்றாய்,
    என்செயல் ஆனால் இறகு(பீலி மயில்)”…..கிரேசி மோகன்….

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 9​7

    தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.

    கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    as4

    அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.

    as3
    வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.

    as2
    ​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    as1

    மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.

    as

    இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.

    சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​

    Share
  • கைவல்ய நவநீதம்….

    கிரேசி மோகன்

    கடவுள் காப்புக்கு பதிலாக எழுத்தறிவித்த என் நண்பனுக்கு நன்றி….
    ———————————————————————————–

    “கைவல் யநவநீதக் கட்டுரை யாப்பெனது
    கைவரப் பெற்றதற்கு காரணம்கேள், -தைவர
    தோன்றும் வழிபோலத் தோன்றிய நண்பனாம்,
    சான்றோன் ரவிசகவா சம்”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் (1)….நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….
    குரு வந்தனம்….அவரது குரு ஸ்ரீவேங்கடேச முகுந்தரை தியானித்து….
    ——————————————————————————————

    ‘’ஆகாச சாட்சியாய், ஐம்புலன்கள் வாயிலாய்
    தேகான்ம பாவமாய், தத்துவமாய்,-ஏகாந்த
    நன்நிலமாய் நெஞ்சத்தில் நின்று மனமேழ்வாழ்
    செந்நிலவு சூர்யா சரண்’’….(1)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 2….
    ———————————————————
    “ஆழிஆ னந்தத்தில் ஆதவனாய்த் தோன்றிடும்,
    கோழிகூ வாதந்த கோளுணர்வே , -வாழிய;
    விஷ்ணு பிரம்மா விரிசடை யோனாகும்
    உஷ்ணமே என்னுள் உதி”….(2)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 3….
    ———————————————-
    “தேசிகன் பாதம் தொழுது தெளிவடைந்தேன்
    பாசி உலகம் படர்வதால், -வாசிநான்,
    பொய்யென்(று) அறிந்தேன் ,புகுந்தீர் மனச்சுவரில்
    அய்யநீர் ஆகாச அன்பு”….(3)

    கைவல்ய நவநீதம்”….ஸ்லோகம் 4….குரு வந்தனம்...
    ———————————————————–

    “புத்திமன தேகம் புலனைந்தும் போக்கத்த
    சக்தியெனச் சொன்ன சதாசிவவி, -ரக்தியே,
    மூடுபனி ஆதித்தன் முன்னோடல் போல்வந்து
    வீடுதந்தீர் வாடகையாய் வாழ்த்து”….(4)

    கைவல்ய நவநீதம்….சுலோகம் 5….
    ———————————————-

    நன்னிலம் நாராயண தேசிகர் உவாச….

    “அடிமுடி மத்தியில்லா ஆகாச ஆசான்
    அடிபணிந்து சொல்கிறேன், ஆன்ம,-மடிபுகுந்த
    வித்தகம், பேத விடுதலையை, வேதாந்த
    புத்தகப் போதில்லாத பேர்க்கு”….கிரேசி மோகன்….

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 6….
    ———————————————

    பண்டைநாள் வேதாந்த பாத்திரங் கள்தளும்பா(து)
    உண்டபால் தன்னை உருக்கியபின், -சுண்டிடக்
    காய்ச்சி அளிக்கின்றேன் ,கைவல்ய வெண்ணையிதை
    ஆய்ச்சியர்க்கு கண்ணன் அளிப்பு”….(6)

    கைவல்ய நவநீதம்….ஸ்லோகம் 7….
    ——————————————-

    ‘’சுகந்த சுதந்திர ஸ்ரீவேங்க டேச
    முகுந்தகுரு என்னுள் திகழ்ந்து -உகந்ததிதை,
    பாகமிரண் டாக்கி, பரம்முதலில் பின்னெழும்சந்,
    தேகம் இரண்டில், தெளிவு’’….(7)
    —————————————————————————————————————————
    பாகம்-ஒன்று
    —————

    The Exposition Of The Truth
    ————————————–
    மெய்யுணர்வு
    —————

    ஸ்லோகம்-8
    —————-

    ‘’விடுதலை வேட்கை, விசார விவேகம்
    விடுதளை விட்டேத்தி வாழ்க்கை,-படுதலை
    வைத்தாறு பண்புகளில், வேதாந் திகள்நான்கை
    தைத்தார்கள் மெய்யுணர்வ தற்கு’’….கிரேசி மோகன்….(8)….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

    அன்பினியவர்களே!

    அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் பள்ளத்துள் விழுந்து மறைவதும் எதுவித இடையூறுமின்றி நடந்துகொண்டு இருக்கிறது. மனித வாழ்வில் மட்டும் உறவு எப்போது வருகிறது பின் பிரிவு எப்போது வருகிறது என்று மட்டும் தெரிவதில்லை.

    இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். வாழ்வில் தாங்க முடியாத துயரத்திலோ அன்றி மீளமுடியாத கஷ்டத்திலோ வாழ்பவர்கள் இதனை ஏற்க முடியாதிருக்கலாம் ஆனால் வாழ்வில் அனைவரும் அனுபவிக்கும் அப்போதைய நிலைகள் தற்காலிகமானவைகளே ! காலம் மாறும் அவரவர் நிலைகளும் மாறும். இன்றிருப்போர் நாளை இருப்பது நிச்சயமில்லை எனும் ஒரு நிலையிலே நாம் எம்மோடு தக்க வைத்திருக்கும் இப்போதைய நிலைகள் மட்டும் எப்படி நிரந்தரமானவையாக இருக்கலாம்? இத்தகைய ஒரு நிலையற்ற வாழ்விலே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எம்மீது பல கலாசார அணிகலன்களைப் பூட்டிக் கொள்கிறோம். இவற்றிற்கு மதச்சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நாம் எந்த மதத்தில் எந்த குலத்தில் பிறக்கிறோம் என்பது எமது கைகளில்லை. ஆனால் எங்குப் பிறக்கிறோமோ அங்கு எமக்கு மதச்சாயம் பூசப்பட்டு விடுகிறது.

    மத நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை என்பதற்கு நான் எப்போதும் எதிரானவனில்லை. மதமும், இறை நம்பிக்கையும் மனிதர்களது ஆன்மீக பலத்தை அதிகப்படுத்தி ஒவ்வொருவருடைய மனதிலும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காகவே அமைந்துள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால் ஒவ்வொருவருடைய மனத்திலும் தாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.அந்த எல்லைக்கோட்டைத்தாண்டும்போது எது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜீரணிக்கப்படக்கூடிய நியாயமான நம்பிக்கையாக இருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக நியாயமற்ற வெறியாக மாறத் தலைப்படுகிறது. இங்கேதான் மத நம்பிக்கை மனிதாபிமானத்தை விட்டு அகலத் தொடங்குகிறது இதுவே மக்கள் மனங்களில் இத்தகைய நம்பிக்கைகளை நோக்கி விசனப் பார்வைகளைத் தூண்டுகிறது. உலகில் இன்று பேணப்படும் அத்தனை மதங்களின் அடிப்படியும் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அம்மத நம்பிக்கைகளையும், அதனை மூர்க்கத்தனமாக எவ்வித கேள்விகளுமின்றிப் பின் தொடர்பவைகளையும் தமது இலட்சியம் எனும் போர்வையிலடங்கிய வெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்வதற்காக இம்மதங்களின் காவலர்கள் என்று தமக்குத் தாமே முடிசூட்டிக் கொண்டவர்கள் இம்மதக் கோட்பாடுகளை மனிதம் எனும் இலட்சியத்திலிருந்து வேறுபடுத்தி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எதற்காக இந்த முன்னெடுப்பு என்று பார்க்கும்போது சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட வழக்கும் அதையடுத்த தீர்ப்பும் என்பதுமே காரணமாகிறது. ஒரு கிறீஸ்தவ மதப் பின்னணியைக் கொண்ட குழந்தை அதனுடைய தாயிடமிருந்து கடந்த மார்ச் மாதம் காவற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அரச சமூகநலத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அக்குழந்தையைத் தாயார் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பதுவே. இது நடந்தது இங்கிலாந்தின் கிழக்கு இலண்டனின் பகுதியான “டவர் ஹம்லெட் (Tower Hamlet) எனும் பகுதியிலேயாகும். இப்பகுதி ஆசியர்கள் பெரும்பான்மையாக அதுவும் இஸ்லாமிய மதத்தினைப் பின்னணியாகக் கொண்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். அரசு நடைமுறைப்படி இப்படி பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர் யாரெனத் தெரிந்து அவர்களிடம் வளர்ப்புப் பொறுப்பை கையளிப்பதேயாகும். இப்படியான வளர்ப்புப் பெற்றோர்கள் அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அப்படியான அதே கலாசாரப் பின்னணி கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மற்றைய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் முன்வருவாராகில் அவர்களிடம் கையளிப்பார்கள்.

    நான் மேற்குறிப்பிட்ட அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர் அப்பகுதியில் கிடைக்காத காரணத்தினால் கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்ட அக்குழந்தை இஸ்லாமிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அங்கேதான் சிக்கல் உருவானது. அக்குழந்தை அதனது வளர்ப்புப் பெற்றோரினால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும்படியாக வற்புறுத்தப்பட்டது என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்குற்றச்சாட்டுக்களை பரிசீலனையின் பின்னால் ஏற்றுக்கொண்டு அக்குழந்தை அதனது பாட்டியுடன் வாழும்படி தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் சரியான வகையில் பரிசீலிக்கப்பட்டு நிரூபணமாகியது எனில் இங்குப் பல கேள்விகள் எழுகிறது. சந்தர்ப்ப சூழலினால் தான் வாழும் கலாசாரப் பின்னணியில் இருந்து பிரியும் ஒரு குழந்தை தானே தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத நிலையில் நிர்ப்பந்தமாக தனக்குப் பரிச்சயமில்லாத கலாசாரச் சூழலுக்குள் தள்ளப்படுவது நியாயமானது தானா ? தனது உரிமைத்தாயிடமிருந்து சட்டத்தின் கரங்களினால் பிரிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பராமரிக்க முன்வரும் மனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! ஆயினும் அக்குழந்தையின் இயற்கையான கலாசாரப் பின்னணியில் இருந்து அதனை முழுமையாக தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்ற முயல்வது அக்குழந்தையின் தன்னுரிமையைப் பறித்தெடுப்பதாகாதா?அன்றி அக்குழந்தைக்கும் தமது சொந்தக் குழந்தைகளுக்கும் எதுவித பேதங்களும் இருக்கக்கூடாது எனும் தூயநோக்கில் அக்குழந்தையையும் தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்றுவது என்பதில் எதுவிதமான தவறுமில்லை என்பதுதான் உண்மையாகுமா? இவைகள் பல முனைகளில் இருந்து கிளம்பும் யதார்த்தமான கேள்விகளே!

    அதேநேரம் பல வேற்றுமதக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கிறீஸ்தவ மத வளர்ப்புப் பெற்றோர்கள் மீது இத்தகைய நுணுக்கமான பார்வையோ அன்றி அவர்கள் மதத்தின் மீது ஒரு தீவிரக் காட்டம் நிறைந்த பார்வையோ நடத்தப்படுவதில்லையே! ஏன் எம்மீது மட்டும் இப்படி என்று வேதனையடையும் சில இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நீதித் தராசு என்பது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் நம்பும் வரைதான் சட்டமும், ஒழுங்கும் உள்ளத்தில் முதன்மை நிலைபெறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்ன என்கிறீர்களா?

    ஒரு குழந்தையின் இக்கட்டான நிகழ்வு இங்கிலாந்தில் இன்று இஸ்லாமிய மதத்தின் மீதான ஒரு நுணுக்கமான கண்ணோட்டத்தை அம்மதத்துக்கு எதிராகத் திருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளும் சில தீவிர வலதுசாரப் பத்திரிகைகளின் இப்பிரச்சார வேட்கைக்குத் தீனிபோடும் நிலையாக உருவெடுத்திருப்பதே !

    கவியரசரின் வரிகளில் “மதம் என்பது ஒரு மனிதனுக்கு அணிகலனேயன்றி ஆடையல்ல!”

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • குற்றமும், குறையும்

      ரா.பார்த்தசாரதி

     

    குற்றம்  சொல்லவும், குறைகளை பேசவும் முற்றம் தேவையில்லை

    வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம்  என்று அலட்டிக்  கொள்வர்

    தோற்றவனை  கண்டால் இது தேவைதானா என எகத்தாளம் பேசுவர்

    உள்ளவனை  கண்டால் கொள்ளை அடித்த பணம் என குற்றம் சொல்வர்

     

    குற்றம் சொல்பவன் என்றும் தன்குறையினை நினைக்க மாட்டார்

    கட்டின   வீட்டிற்கு நம் முன்னே குறை சொல்பபவர்கள் இருப்பர்

    வென்றவனை கண்டால்  அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்

    இல்லாதவனை கண்டால் பிழைக்கத் தெரியாதவன்  எனக் கூறுவர் !

     

    தப்பு செய்தவன்  தண்டனை பெற்றால், சட்டம் சரியில்லை என்பர்

    தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி  என்பர்

    பிழைப்பு தேடி பிற நாட்டிற்கு சென்றால் பேராசைக்காரன் என்பர்

    உழைப்பைத் தேடி உள் நாட்டில்  உலாவினால் ஊர் சுற்றி என்பர் !

     

    ஊருக்கு உதவினால்,  ஊர் கழுதை   என்று  பட்டம் சூட்டுவர்

    சும்மா இருந்தால் சோம்பேறி என்று  முத்திரை   குத்துவர்

    பிறர் குறை காண்பவன், தன் குற்றம்,குறைகளை உணர மாட்டார்

    இறைவனே புலவன் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தார் என்பர் !

     

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என  யாவரும் நினைப்பதில்லை

    குற்றம் கடிதலை பற்றி வள்ளுவன் கூறுவதை செவிசாய்ப்பதில்லை

    இறுமாப்பு, சீற்றம், இழிந்தகுணம் இவை குற்றத்தின் தூண்டிலாகும்

    குற்றங்களுக்கு  அஞ்சி நடப்பவன் மனமே மாணிக்க கோவிலாகும் !

     

     

     

    Share
  • கண்ணால் காண்பதும..!

    பெருவை பார்த்தசாரதி

     

    BRight-sunlight-nature-autumn

     

     

     

     

     

     

     

     

    அண்டஞ் சூழேழுலகை அற்புதமாய்ப் படைத்தாங்கே..

    ……….அரியயுயிர் வகையனைத்தையு முயிர்ப்பித்தாய்…அதை

    உண்டாயுன் வாயினால் பிரளயமெனும் செயலால்.!

    ……….உருவாக்கும் அழிக்கும்காக்கு மனைத்துமுன் செயலே

    அண்டமுழுதும் அற்புதங்கள் நிகழ்த்தி ஆச்சரியமிகு..

    ……….அரியதிரு விளையாடலால் வியனுலகை இயக்குகிறாய்.!

    கண்ணுக்குத் தெரியாத கருப்பொருளே.! அற்புதமே.!

    ……….கடவுளுனைக் கண்ணால் காண்பதும் முடியுமா..?

     

     

    கண்ணில் தெரியும் காட்சிகளுலவும் புவியில்யாவும்..

    ……….கடவுள் படைத்ததனைத்தும் மெய்யெனும் அதிசயமே.!

    கண்ணையும் மனதையும் கவருகின்ற மலையருவி..

    ……….கடந்துவரும் நடையழகில் கடல்சேர்வதும் அற்புதமே.!

    வண்ண வண்ணக் கோலம்கொண்ட மயில்தன்தோகை..

    ……….விரித்து கருமேகம் கண்டவுடனாடுவதும் ஆச்சரியமே.!

    எண்ண எண்ண இனிக்கும் இறைவனின் ஆலயமென..

    ……….எதுவும்கண்ணால் காண்பதும் கவிதையாகும் கவிநெஞ்சில்.!

     

     

    பாக்கும்கமுகும் தேக்கும் தென்னையும் நிறைந்த..

    ……….பசுமைமிகு தோட்டமதின் மேல்வளைந்த வானவில்லும்..

    நாக்கில் தேனைச்சேகரிக்க நாடிடும் வண்டினத்தின்

    ……….நல்லதொரு கூட்டமங்கே ஓரிடத்தில் அழகாய்க்கூட..

    பூக்கும்பூமலர்த் தோட்டத்தில் வீசும்பூமண ஈர்ப்பால்

    ……….புலவர்கள் கவிஞர்கள் கூட்டமங்கே நிரம்பி வழியும்..

    பாக்கள் புனைய தகுமிடம்தானது…பாவலர் களங்கே

    ……….பார்க்கும் கண்ணால் காண்பதனைத்தும் கவிதையாகும்.!

     

    ===================

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-08-17

     

    நன்றி:: கூகிள் இமேஜ் பிக்ஸாபே

     

     

    Share
  • மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

    –முனைவர் மு.இளங்கோவன்

    Thillai_Mu.E.

         இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிட்சர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டு காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர். 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை – சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் நூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

        தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

    Minmini printஇவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

         எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதைய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் – சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்.

         இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

           1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கியச் செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது.

         1993 புரட்டாசி மாதம் சுவிட்சர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ்மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ்மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத்  தனித்தனியாகப் பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                    தில்லை சிதம்பரப்பிள்ளை 1985ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ்ச் சஞ்சிகையை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                    2013ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப் பாலமாக சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                    தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

       மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

         சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  வருடாவருடம் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்தப் பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

         புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

    Share
  • எது அந்தரங்கம்?

    – நிலவளம் கு.கதிரவன்

         முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

         இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி அவர்கள் தொடுத்திருந்த வழக்குதான் தனி மனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

         நமது இந்திய அரசியல் சட்டமானது நமக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, மற்றும் அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை போன்ற உரிமைகள் சட்டப் பிரிவு 14 முதல் 32 வரையிலான பகுதியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்ற தனியுரிமை சார்ந்த சட்ட விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை. எனினும் அடிப்படை உரிமை சார்ந்த விளக்கங்களை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21வரையறுத்துக் கூறியுள்ளது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் 1954இல் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962இல் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை அன்று எனத் தீர்ப்புரை வழங்கியது.  தற்பொழுது இதில் சிக்கல் ஏற்படவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியே விவாதித்து அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

        உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  அரசாங்கம் உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இதுதான் உரிமையின் இயல்பு.

    ஆரம்பகாலத்தில் நமது உரிமைகளைக் கட்டுப்பாடற்ற முழுமையோடு அனுபவித்து வந்த நாம், நாகரிகச் சமூக வளர்ச்சியின் காரணமாகவும், மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாகவும்  இதற்கொரு தீர்வாக அரசாங்கம் சட்ட வரையறை செய்தது.

      இது தொடர்பில் மேற்படி பட்டியலிடப்பட்ட உரிமைகளை அனுபவிக்க நமக்கு வழிவகை செய்தது.  அரசியலமைப்பு ஏற்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையில் உரிமை சம்பந்தமாகத் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐயங்கள் ஏற்படவில்லை.  கால மாற்றத்தில், நாகரிகச் சமுதாயமாக மேம்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

         அந்தரங்கம் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.  அது உடல் சார்ந்ததாக இருக்கலாம்; அல்லது தனியரின் தகவல் சார்ந்ததாக இருக்கலாம்.  உடல் சார்ந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  ஆனால் தனியரின் தகவல் சார்ந்தது என்பது மக்கள்தொகைப் பெருக்கம், தேசப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தரவுகள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

         இப் பிரச்சினையின் மையப் புள்ளியான ஆதார் தொடர்பான விபரங்கள் அனைத்து பயன்பாடுகளுக்கும் அவசியம் என மத்தியஅரசு கேட்பதுதான். இதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அரசிடம் அளிக்கின்ற தகவல்கள் பொதுவெளியில் பரவாமல் காப்பது அரசின் கடமை எனக் கேட்பதில் நியாயம் உள்ளது.  இன்றைய எண்ம உலகத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நமது பொது தகவல்களைத் தினமும் அளித்துக்கொண்டு வருகிறோம்.  இதன் வழியே உருவாகும் சாதக பாதகங்களை நாம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.  இது தொடர்பில் அரசிடம் முறையிடுவதுமில்லை.

        சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நாம் செயல்படுவது தினமும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.   அது அரசு வழியாகவோ அல்லது மேற்கண்ட வசதிகளை நமக்கு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ.  இதில் எல்லாம் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்புக் கருதிக் கேட்கும்போது அடிப்படை உரிமை நம் கண்முன் வந்துவிடுகிறது.

         அந்தரங்கம் அடிப்படை உரிமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  முதலில் இதில் தெளிவு வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக ஆதார் தொடர்பான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்;  என்றாலும் மக்கள் வழங்கும் தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதுதான் நமது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.  தேசப் பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுகளுக்கு ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தமது தரவுகளை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

         அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கும் நாம் ஓட்டுரிமை, சொத்துரிமை போன்றவற்றில் கண்டும் காணாமல் வாளாவிருக்கிறோம்.  தனி நபர் உரிமை சம்பந்தமான இவ்வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுரிமை என்பது சட்ட உரிமையாகத்தான் உள்ளது என்றும் இவ்விரண்டு உரிமைகளும் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று கூறியதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.  சொத்துரிமை சம்பந்தமாக மத்தியஅரசு விளக்கம் அளிக்கும்போது, விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், பொதுப் பணிக்காக, எந்தச் சொத்தையும் அரசு ஆர்ஜிதம் செய்யவும், நஷ்ட ஈடு என்ற பெயரில் அல்லாமல் ஒரு தொகையை அளிக்கவும் 1978ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட விளக்கத்தை ஏற்காமல், இதனால் பாதிக்கப்படுவது சிறிய அளவிலான விவசாயிகள்தாம் எனக் கூறிச் சொத்துரிமையையும் அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் எனக் கூறியது.

        எனவே இதுபோன்ற தனி மனிதரின் பிற உரிமைகளையும் அடிப்படை உரிமையாகப் பெற நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்பின் வழியாக இனிவரும் வழக்கு விசாரணையின்கீழ் அளிக்கின்ற தீர்ப்பிலும் இது எதிரொலிக்கும் என நம்பலாம்.  இதில் நமக்குள்ள முக்கியக் கடமை எதுவென்றால் நாம் அளிக்கின்ற பொதுத் தகவல்களின் நம்பகத் தன்மையைக் காப்பது, பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்பதாகத்தான் இருக்க வேண்டும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170831 -Radha Krishna -lr
    ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    காதல்கூத் தாடுகிறான், காண்டீ பனைமறந்து:
    கீதையா! ராதையா! கூறு!’’….!

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
    விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
    வெட்டுநீ துண்டிரெண்டா வோம்….

    ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
    தலைக்கேற கண்ணனவன் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் தூதுவிட்டாள் WAR….!

    பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
    சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ’’பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாற்கடல் ஓரத்தில்
    ஜாம்ஜாம்னு வந்தான் ஜனித்திட-ஓம்ஓம்ஓம்
    நாரணன் பேரு , நவநீதம் உண்டதை
    ஜீரணிக்க விட்டெழுந்தான் சேச்சு(சேடன்)’’….!

     
    ‘சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
    வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்
    பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
    மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

    தொட்டகுறை ஆத்திகம் விட்டகுறை நாத்திகம்
    நட்டவிதை உள்ளிருக்கும் தெய்வீகம் -எட்டஅதை
    சுட்ட பழமாகி சுடாத பழங்களில்
    பட்டும் படாமல் பருகு….!

    அமுதா! அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழிசைப்பண்கள்

    சிறீசிறீஸ்கந்தராஜா

    **************************************************
    உலகின் முதல் இசை
    தமிழிசையே!!
    ***********************************************
    இசைத்தமிழின் தொன்மை – 77
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    அறிவனார் – “பஞ்சமரபு”
    **********************************

    PNACHA MARAPU - 1
    பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
    எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
    நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
    பாலாய பண் நூற்றுமூன்று.

    பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார்
    இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் தருகிறார்.

    சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள்
    காணப் பெறுகின்றன.

    ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம்
    போன்ற பண்களைப் பற்றியகுறிப்புகள் உள்ளன.

    நூற்று மூன்று  வகைகள்  இருந்ததாக
    சில குறிப்புகள் சொல்கின்றன.

    மிகப் பழைய நூலான பஞ்சமரபு என்ற நூலில்
    தமிழ் பண்களின் வகைகள் மிகவும் அற்புதமாக
    ஒரு வெண்பா வடிவில் சொல்லப் பட்டிருக்கிறது.

    பண்ணோர் பதினேழாம் (17)
    பண்ணியல் பத்தேழாம்(70)
    எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப (12)  – நண்ணிய
    நாலாந் திறத்திற மோர் நான்கு (4)
    முளப்படப்
    பாலாய பண் நூற்று மூன்று (103)

    சம்பூர்ண  இராகங்கள் – 17
    ஷாடவ இராகங்கள் – 70 
    திறங்கள் – 12
    திறத்திறங்கள் – 4
    சேர்ந்து 103 ஆக இருந்தன.

    பஞ்சமரபு என்னும் இந்த நூல் வெண்பாக்களால்
    அமைந்த ஓர் இசைத்தமிழ் நூலாகும்.

    இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார்.

    இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த
    ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல் எனலாம்.

    இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு.

    சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் “ஐந்தொகை” என்பதாகும்.

    சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும்
    பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும்.

    இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல்
    பாடல்கள் உள்ளதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    நூலின் அமைப்பு

    1. இசை மரபு
    2. வாக்கிய மரபு
    3. தாள மரபு
    4. நிருத்த மரபு
    5. அவிநய மரபு
    என ஐந்து மரபுகளைக் கூறுவதால்,
    இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.

    இந்நூல் 241 வெண்பாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    நூற்சிறப்புகள்
    மரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை
    மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும்
    நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.

    தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது.

    இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின்
    நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின்
    உரை பெரிதும் துணைசெய்கின்றன.

    இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி
    அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது.

    அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள்
    பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது.

    பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின்
    விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளன.

    பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும்,
    சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.

    பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது.
    பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

    தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார்.

    பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார்.

    1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது.

    கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன.

    இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.

    சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர்
    பஞ்சமரபைப் பெயராளவில் மட்டும்அறிந்திருந்தார்.

    சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார்.

    பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30ற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார்.

    நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.

    சிலம்பில் இடம்பெறும்
    பஞ்சமரபு வெண்பாக்கள்

    சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர்
    பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல்
    முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார்.

    அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார்.
    ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே
    அறிஞர்கள் வந்தனர்.

    பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உலகிற்கு
    உண்மைதெரியவந்தது.

    சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும்.

    எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை
    அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது.

    அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

    குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும்
    கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால்
    பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவிற்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

    அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார்.

    இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை
    விளக்கிக் காட்டுகின்றன.

    புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன.

    இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும்,
    ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும்
    பயன் படுத்திக்கொண்டுள்ளார்.

    அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில்
    பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

    1. ஓங்கிய மூங்கில் ……(3 : 26 , 17 : .20)
    2. சொல்லுமதிற்களவு…(3 : 26, 27 : 20)
    3. இருவிரல்கள் நீக்கி….(3 : 26, 17 : 20)
    4. வளைவாயரு………..(3 : 26, 17 : 20)
    ஆகிய வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

    வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகள்
    யாழ்
    ***********
    யாழ் நான்கு வகைப்படும்.

    பேரியாழ்
    மகரயாழ்
    சகோடயாழ்
    செங்கோட்டுயாழ்

    நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை

    பேரியாழ் 21 நரம்புகள்
    மகரயாழ் 19 நரம்புகள்
    சகோடயாழ் 14 நரம்புகள்
    செங்கோட்டியாழ் 7 நரம்புகள்

    துளைக்கருவி
    *********************************

    வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
    மூங்கில்
    சந்தனம்
    செங்காலி
    கருங்காலி
    உலோகம் (வெண்கலம்)

    துளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரம்
    தேர்ந்தெடுத்தல்.

    துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)

    குழலின் முழுநீளம் 4+5=20 விரலம்.
    குழல்வாயின் சுற்றளவு 4-1/2 விரலம்.
    துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு
    மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்
    முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

    துளைக்கருவியின் பகுப்பு

    தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து
    முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி
    எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக.

    இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி,
    மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.

    ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)

    ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.

    இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
    இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
    இட மோதிர விரல் குரலுக்கு (ச)
    வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
    வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
    வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

    இசை பற்றிய மேலும் பல செய்திகள்
    ***************************************************************

    ஒலியின் தோற்றம் பற்றியும் வெண்பாவில் செய்திகள் உள்ளன.

    இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.

    காற்றின் வகைகள்
    பத்து நாடிகள்
    பூதங்களின் பரிணாமம்.

    ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை).
    பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்.
    வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்.
    பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.

    செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை
    (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.

    செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.

    வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.

    இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தை மிகவும் நுட்பமாக
    அறிந்துகொள்ள உரையாசிரியர்களின் பங்களிப்பும்,
    பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பும் பெரிதும்
    துணை நிற்கின்றன எனலாம்.

    சிலம்பின் பலஅடிப்படை இசையுண்மைகளைப்
    பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன.

    பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால்
    கொண்டுள்ளன எனலாம்.

    ***********************************************

    நன்றி:
    முனைவர் மு இளங்கோவன்
    இணையம்
    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    30/08/2017

    Share
  • வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    wrapper_-_Pope_-_002-1

    கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸைப் பற்றி இரண்டு முறை வல்லமைக்கு 2013, 2014 ஆண்டுகளில் ‘இதுவல்லவோ ஒரு மதத்தலைவருக்கு அழகு’, ‘இவரல்லவோ ஒரு மதத்தலைவர்’ என்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் ‘போப் பிரான்சிஸ் – நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூல் வெளிவரவிருக்கிறது.  (செப்டம்பரில் நடக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இது கிடைக்கலாம்.)  அதில் பல மதத்தலைவர்கள், இந்து மதத்தலைவர்களும்,  என்னென்ன அட்டகாசங்கள் புரிந்திருக்கிறார்கள், புரிந்துவருகிறார்கள் என்று கோடிகாட்டியிருக்கிறேன்.  அவர்களோடு ஒப்பிடும்போது போப் பிரான்சிஸ் எப்படிப்பட்ட மதத்தலைவர், எவ்வாறு மதத்திற்கு அப்பால் நின்று உலகிற்கே வழிகாட்டுகிறார் என்றும் கூறியிருக்கிறேன்.  நான் இந்து மதம் உட்பட எந்த மதத்தையும்பின்  பின்பற்றுபவள் இல்லையென்றாலும் கத்தோலிக்க மதத்தலைவர் தன் சிறப்புகளால் எப்படி என்னைக் கவர்ந்தார் என்றும் எழுதியிருக்கிறேன்.

    சென்ற 25-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் ராம் ரஹீம் சிங் என்ற மதகுரு மீது கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த வழக்கில் (நம் நாட்டின் நீதித்துறையின் ஆமை வேகத்துக்கு ஒரு உதாரணம்) குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு 28-ஆம் தேதி இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.  இவன் மீது இன்னும் சில கொலை வழக்குகள் இருக்கின்றன.  அவற்றிற்கும் சேர்த்து இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கப் போகிறாரோ?  பெரிய பாரம்பரியம் மிக்க நாடு, பாரினில் சிறந்த நாடு என்று நாம் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் இப்படி ஒரு மதகுரு நடந்திருக்கிறார். ஒரு நீதிமன்றத்தால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தியா பற்றிக் கொஞ்சம் நம்பிக்கையை உண்டாக்குகிறது.

    இருந்தாலும் இந்த நம்பிக்கையை மீறி இந்த ஆன்மீக வேஷதாரிக்குப் பல லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் இவர் தண்டிக்கப்பட்டதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவில் வன்முறை நடந்து, அதில் 38 பேர் இறந்தனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியும் மனதில் பெரிய வேதனையை ஏற்படுத்தின.  மதத்தலைவர்கள் செய்யும் வெட்கக்கேடான செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இருப்பினும் இந்த வழக்கு பற்றிய சில விபரங்கள் இந்தியா இவ்வளவு தூரம் தாழ்ந்துவிட்டதா, உலக அரங்கில் இந்தியாவின் படிமம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பன போன்ற கசப்பான சில உண்மைகளை நம் முன் வைக்கின்றன.

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது, இம்மையிலும் மறுமையிலும் தன்னைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது.  இது எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும்.  அதனால்தான் மனிதன் மதங்களைப் படைத்திருக்கிறான்.  இறைவனின் செயல்களுக்குக் காரணம் புரியவில்லை என்றாலும் விடாது இறைப்பற்றுக் கொண்டிருக்கிறான்.  மிருகத்தைவிடக் கேவலமான ஒரு மதகுருவை இத்தனை ஜனங்கள் வழிபடுவதும் அவன்மீது இத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்றதும் இத்தனை லட்சம் சிந்திக்கும் திறனற்றவர்கள் அதை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதும் இந்தியாவில் மட்டுந்தானோ?  அதை நினைத்தால்தான் வேதனை இன்னும் அதிமாகிறது.

    இதைவிட இன்னொரு உண்மை இன்னும் அதிகமாகச் சுடுகிறது.  இந்த மதகுருவோடு பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.  அரியானா முதலமைச்சருக்கு இவரோடு நெருக்கம் உண்டு.  குர்மீத் சிங் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதும் வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.  அரியானா மாநில அரசு குர்மீத் சிங்கின் ஆசிரமத்திற்கு நிறைய பணம் கொடுத்து உதவியிருக்கிறது.  இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வன்முறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மோதி பதவி விலகினாரா என்ன?

    குர்மீத் சிங் மீது 2002-இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள் ஆன பிறகு,  நம் பாரதப் பிரதமர் ‘தூய இந்தியாவை உருவாக்குவோம்’ என்னும் நிகழ்ச்சியில் குர்மீத் சிங்கோடு கலந்துகொண்டதுமல்லாமல் பெரிதாகப் புகழ்ந்து வேறு பேசியிருக்கிறார்.  குர்மீத் சிங் மீது வழக்கு நடக்கிறது என்பது இவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.  இப்போதும் ‘குர்மீத் சிங்கைத் தான் மதித்ததற்கு மாறாக இப்படி நடந்துகொண்டிருக்கிறானே’ என்று ஒரு வார்த்தை கூறவில்லை.  ‘என் மனது வேதனைப்படுகிறது’ என்றுமட்டும் சொல்லியிருக்கிறார்.  எதற்காக வேதனைப்படுகிறார்?  இப்படிப்பட்ட ஒரு மதகுரு இருக்கும் நாட்டின் தலைவராக இருப்பதாலா?  இந்த மதகுருவிற்கு மனதைப் பறிகொடுத்த இத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வாலா?

    இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்திருக்கும்; ஆசை காட்டப்பட்டிருக்கும். தமிழக முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அரசியல் அதிகாரத்திற்கு, பண ஆசைக்குப் பணியாத நீதிபதிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற உண்மைதான் ஒரேயொரு ஆறுதல்.

    Share