வணக்கம்.
இன்றைக்கு, சிங்கப்பூர் லிஷா அமைப்புக்காக, பாரதியைக் கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பேசுகிறேன்.
இந்திய நேரம்: மாலை 3.30 மணி
சிங்கப்பூர் நேரம்: மாலை 6.00 மணி
Zoom:
Meeting ID: 919 7404 0684
Passcode: 129103
அன்புடன்,
ரமணன்

வணக்கம்.
இன்றைக்கு, சிங்கப்பூர் லிஷா அமைப்புக்காக, பாரதியைக் கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பேசுகிறேன்.
இந்திய நேரம்: மாலை 3.30 மணி
சிங்கப்பூர் நேரம்: மாலை 6.00 மணி
Zoom:
Meeting ID: 919 7404 0684
Passcode: 129103
அன்புடன்,
ரமணன்

நிர்மலா ராகவன்
தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.
கதை
கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.
அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.
தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.
குடும்பத்தில் உயர்வு தாழ்வு
ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?
இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’
மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.
சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!
அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.
உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.
கதை
என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).
பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.
என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.
ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).
சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.
நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”
“இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”
எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.
எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.
(ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).
விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.
வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!
சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே ஏற்க முடிவதில்லை.
கதை
`பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.
அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.
தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.
இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.
உயர்வும் தாழ்வும்
நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.
தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன் ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.
ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.
`இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!
ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.
பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.
தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.
கதை
பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.
ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.
வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?
பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.
முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).
கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!
வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?
இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?
சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
`நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

வீட்டிலேயே சுவையான, மொறுமொறுப்பான தேன்குழல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். படப்பதிவு, பேத்தி சகஸ்ரா அஜய்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

என்னைப் பார்த்ததும் தூரத்திலிருந்து ஓடிவந்து, காலை நக்கப் பார்த்தது இந்த நாய்க்குட்டி. செம்ம அழகு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இன்று நம் மாடித் தோட்டத்தில் முளைக்கீரை அறுவடை
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

எங்கெங்கு காணினும் இலவசம் என்ற சூழலில் இருக்கிறோம். இலவசம், தள்ளுபடி, பரிசு, ஆஃபர்… என்று விதவிதமான பெயர்களில் இதைக் காண்கிறோம். உண்மையில் இலவசம் என்பது இலவசமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
Clouds vector created by jcomp – www.freepik.com
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
ஸ்பேஸ் X விண்சிமிழ் நான்கு பொதுநபருடன் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது.
ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலாப் பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது. இது ஓர் முக்கிய வரலாற்று விண்வெளிப் பயணமாகக் கருதப்படுகிறது. இம்முறை பயணிகள், 250 மைல் உயரத்தில் சுற்றும் அகில நாட்டு நிலையத்துக்குப் போகாமல், மூன்று நாட்கள் பூமியை 350 மைல் உயரத்தில் சுற்றி, விண்வெளி ஆய்வுகள் செய்து, பூஜிய ஈர்ப்பு அரங்கில் மிதந்து கடலில் இறங்க திட்டமிடப்பட்டது. ஸ்பேஸ் X விண்சிமிழ் மூன்று நாட்கள் பணியைச் முடித்து, பாராச்சூட் மூலம் கடலில் வந்து பாதுகாப்பாக இறங்கியது.
ஸ்பேஸ் X விண்சிமிழ் நான்கு பொதுநபருடன் பாதுகாப்பாய்க் கடல் மீது இறங்கியது.
பூஜிய ஈர்ப்பு அரங்கில் பொதுநபர் புரிந்த சர்க்கஸ்

Leadership: 38-year-old Jared Isaacman – Shift4 Payments founder and CEOHope: 29-year-old Hayley Arceneaux – physician assistant and pediatric cancer survivor who was treated at St. JudeGenerosity: 41-year-old Chris Sembroski – U.S. Air Force veteran and aerospace industry employee for Lockheed MartinProsperity: 51-year-old Dr. Sian Proctor – entrepreneur, educator, trained pilot and active voice in space exploration communit

Space X Reusable Rocket Falcon -9 Launched on September 18, 2021
Space X Capsule Landing on Ocean
தகவல்
====================================
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரை மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.




Space X Landing back towards, the Earth, After two weeks.
ஸ்பேஸ் X இயல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க், விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிரி F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.
அடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.


SpaceX rocket returns to shore after historic astronaut launch
The first stage of the SpaceX Falcon 9 rocket that launched the Demo-2 mission on May 30, 2020, arrives in Florida’s Port Canaveral on June 2, 2020. (Image credit: SpaceX via Twitter)https://www.youtube.com/embed/mfyPS6eYJEQ?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/Rr8QFqfUYKw?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/pyNl87mXOkc?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparent
2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்திலிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன்முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்டவெளிச் சுற்றுலாப் பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இரு விமானிகளும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.
NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT
++++++++++++++++
+++++++++++++++++++

Orion Spaceship and Space Station
++++++++++++++++
Starliner Spaceship
+++++++++++++++
நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
நிலவில் தடம் வைத்தார்.
பூமியைச் சுற்றி வரும்
அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
சிலநேரம் தங்கிச்
சுற்றுலாப் பயணம் செய்ய
நிற்கிறார் வரிசையில்
புவி மனிதர் !
நவயுகத் தரை நபர்கள்
இனிமேல்
விண்கப்பல் புவிச் சுற்றில்
சுற்றுலா வருவர் !
கனவில்லை இது !
மெய்யான நிகழ்ச்சி !
வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.
++++++++++++++++++
https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOUhttps://www.youtube.com/embed/mIkHCET2Qqc?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent&hl=en
++++++++++++++++
நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா
இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.
தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.
அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.

என் வீட்டுத் தோட்டத்தில் இன்று கண்ட ஒரு பட்டாம்பூச்சி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

எங்கள் மகன் ஹரி நாராயணன் சொன்ன காக்கா கதை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்தபோது அங்கே கோவில் கொண்டுள்ள தேச முத்துமாரியை வழிபட்டு வந்தார். அந்த அம்மனைப் போற்றிப் பாடல்களும் பாடியுள்ளார். அந்தக் கோவிலில் இன்று பாரதிக்குச் சிலையும் உள்ளது. இந்தப் பாடலில், ‘யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்’ என்ற வரியின் மூலம், அற்புதக் கருத்தினை முன்வைத்துள்ளார். ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரின் குரலில், இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வங்கியிலிருந்து அழைப்பது போன்ற மோசடி அழைப்புகள், வலைவிரிப்புகள். மாயமான்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றை எதிர்கொள்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
தமிழைப் பாடாத கவிஞர் உளர். ஆனால் தாயைப் பாடாத கவிஞர் இலர். தாய்மையைக் கருணையின் படிமமாக்கிப் பார்த்தது மட்டுமன்று அதனை வீரத்தின் விளைநிலமாகவும் கண்டு பாடியிருக்கின்றனர். ‘தாயுமிலி தந்தையிலியாகிய’ சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் உரிமையும் பெருமையும் பெற்றவள் தாயே’ என வள்ளுவப் பெருந்தகையால் காப்புரிமை அளிக்கப்பட்டவர் தாய். எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தடிகள் துறக்க முடியாத தூய உறவு தாயுறவு. தமிழ்த்தென்றல் திரு.வி.க. பெண்மை நிறைவடைவது தாய்மையில் என்று கூறியிருப்பதும் ‘குடும்ப விளக்கு’ என்று பாவேந்தர் புகழ்ந்தேத்துவதும் தாய்மையின் சிறப்பினை இன்னும் விளக்கும். மகவின்றித் தாய்மை அமையாதாதலின் அச்சொல்லுக்குள்ளேயே மகவு என்பது அடங்கும். இந்தத் தாயும் மகவும் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக அமைந்த பாங்கினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
இலக்கியங்களில் தாய்மையின் மறுபக்கம்
புறநானூற்றில் உள்ள பாடல்களில் தாயின் பெருமை பேசும் பாடல்கள் பல. அவற்றுள் ஒரு பாடலின் வரி இப்படி அமைந்திருக்கிறது.
“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே”
திருக்குறளில் தாயின் கடமை குறிக்கப்படவில்லை. ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பதால் அவள் கடமை கணவனோடும் இல்லறத்தோடும் நிறைவடைந்துவிடுவதாகத்தான் அனுமானிக்கத் தோன்றுகிறது. புறநானூற்றில் ஒரு ஆண்மகனை உருவாக்கும் சமுதாயக் கடமைகளில் தன்னுடைய கடமையைத் தலைக் கடமையாக்குகிற தாயைக் காணலாம். சாலப் பரிவது மட்டுமன்று தாய்க் குணம். ஒரு மகனாயினும் செருக்களம் நோக்கிச் செல்பவனை வழியனுப்பி வைக்கும் மாண்பும் அவளுக்கானது.
“ என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசோர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே” (புறம். 86)
என்று சுமந்த வயிற்றுக்குச் சோபனம் பாடுகிறாள் தாய். அந்தத் தாயைக் ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடுகிறார். தருகின்ற மன்னனைப் பாடியே பழக்கப்பட்ட புலவர்கள் தாயைப் பாடிய காலம் அது.
“மீன் உண் கொக்கின் தூவியன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
நோன்கழை துயல் வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே!” (புறம். 277)
என்று ஒரு பாடல். பேரிளம்பெண் பருவத்தில் ஒரு மகனுக்குத் தாயான ஒருத்தி அவனைக் களத்துக்கு அனுப்புகிறாள். அங்கே அவன் களிறெறிந்து பெயர்தலாகிய காளைக் கடனைச் செய்கிறான். களிற்றினால் கொல்லப்படுகிறான். சேதி பெற்றவளின் காதுக்கு வருகிறது. வந்த சேதியால் காது மட்டுமன்று மனமும் குளிர்கிறதாம். உத்திரையார் காட்டும் காட்சி இது. இந்த விழுமியம் எதுவரைத் தொடர்கிறது என்றால் அந்தச் சாவு மானச்சாவா? ஈனச்சாவா என்று அறியும் வரையில் தொடர்கிறது. மார்பில் விழுப்புண் பட்டே மகன் மாண்டிருக்கிறான் என்றவுடன் சோகத்திற்கு இப்படிச் சுகம் கொண்டாடுகிறாள்.
“……………. முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்
உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கைஅ காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!” (புறம். 278)
மாபெரும் சபையினில் தன் மகன் நடந்தால்தான் ஒரு தாய் பெருமைப்படுவாள் என்பதில்லை. சாவுக்குச் சங்கடத்தைத் தராமல் ஏற்றுக் கொள்ளும் மானச் சாவுக்கும் அவள் மகிழ்வாள் என்பதுதான் தமிழ்த் தாய்மார்களின் பண்பாட்டு விழுமியம். இத்தகைய தாயையும் மகவையும் உவமங்களாகவும் பயன்படுத்தி இலக்கியம் செய்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.
தோழி தாயான கதை
‘தாய்மை’ என்பது பண்பு. அது பெரும்பாலும் தாயிடத்தில் அமைந்திருப்பதால் அவளுக்கான குறியீடானது. ‘தங்கைமை’, ‘தமக்கைமை’, ‘தந்தைமை என்பதெல்லாம் இல்லை. ‘இறைவனைத் தாயுமானவன்’ என்று அழைப்பது காண்க. அன்னை தெரசா உலகிற்குத் தாய். சங்க இலக்கியங்களின் தலைமைப் பாத்திரம் தோழியே. மானுடத்தின் அத்தனை நேர்முகப் பண்புகளின் தொகுப்பாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். தலைவியைக் காணத் தலைவன் இடர்பல கடந்து வருகிறான். “கொல்லுந் தொழில் வல்லமையுடைய ஆண்முதலையானது வழியெல்லாம் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்குமாறு குறுக்கே கிடக்கும் அழகிய கடல் துறையின்கண் இனமீன்கள் நிறைந்துள்ள உப்பங்கழியை நீந்தி” அவன் வருகிறானாம்.
“கொடுங்கால் கொல்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி”
வருகிறானாம். இவன் படும் இத்துன்பத்தால் தன் தலைவனுக்கு ஏதம் வருமோ என்று தலைவி நடுங்கித் துன்புறுகிறாளாம்.
‘இவள் மடன் உடைமையின் உயங்கும்’
இது தலைவனுக்காகத் தலைவி படுகிற துன்பம். தோழி இருவருடைய துன்பத்தையும் நோக்கி வேதனைப்படுகிறாளாம். யாரைப்போல? தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளும் நஞ்சருந்திய காலத்து அப்பிள்ளைகளின் தாய் உணரும் அச்சத்தை இந்தத் தோழி உணர்ந்தாளாம்!. “நயன் உடைமையின் நீ வருகிறாய். மடன் உடைமையின் இவள் உயங்குகிறாள். நானோ நஞ்சருந்திய இரட்டைப் பிள்ளையின் தாயைப் போல அலமறுகிறேன்’ என்கிறாள் தோழி!
“நீ நின் நயனுடைமையின் வருதி! இவள் தன்
மடன் உடைமையின் உயங்கும், யான் அது
கவை மகவு நஞ்சுண்டாங்கு
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே!” (குறுந். 324)
செவிலி வேறு. நற்றாய் வேறு. தோழி வேறு. ஆனால் மகவு அதுவும் இரட்டை மகவு நஞ்சுண்ண அது கண்ட தாயின் பதைப்பைத் தோழியின் பதைப்புக்கு உவமமாக்கிய திறன் இது. இலக்கிய நோக்கில் தலைவிக்குத் தோழியாகப் பார்க்கப்பட்டுவரும் ஒருத்தி தலைமக்களுக்குத் தாயாகச் சித்திரிக்கப்பட்டுத் தலைமக்கள் அவளுக்குக் குழந்தைகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘நஞ்சுண்டாங்கு’ என்பது உண்பதைக் குறிக்காது, நஞ்சு உண்பதால் தாய்க்கு உண்டாகும் பதற்றத்தைக் குறித்தது. இதில் நுண்ணியம் என்னவென்றால் தலைமக்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளாக அன்பு பாராட்ட வேண்டும் என்பதே!. உவம ஆற்றல் என்பது இதுதான்.
மழலை கூவலும் மாற்றார் அலறலும்
இளஞ்சேட் சென்னி என்னும் மன்னனை வரலாற்றுப் பாவலர் பரணர் பாடுகிறார். சென்னியின் படைகளை வானளாவப் புகழ்கிறார். இளஞ்சேட் சென்னியின் களத்தில் “வாள் குருதிக்கறை பட்டன. களத்தில் முன்னும் பின்னும் தேய்ந்ததால் அரும்பு வேலைப்பாடு அமைந்த கழல்கள் கொல்லேற்றின் மருப்புப் போல மொக்கையாகின. மாற்றாரின் அம்பு தைத்த கேடயங்கள் அம்புகளினால் துளைக்கப்பட்ட அடையாளங்கள் ஆயின. இடவல அடையாளங்களைக் காட்டியதால் குதிரைகளின் முகம் குருதி படிந்து உதிரம் குடித்த புலி வாயை ஒத்தது. எதிரியின் வாயிற்கதவுகளை மருப்பினால் முட்டி மோதி பிளிறி வருவதால் யானையோ உயிருண்ணும் கூற்றுவனை ஒத்தது. மன்னன் தேரில் வருவது கீழ்க்கடலில் செங்கதிரோன் எழுவதுபோல் உள்ளது” என்றெல்லாம் பாராட்டிய புலவர், இதனால் எதிரியின் நிலை என்னவாயிற்று என்பதை இரண்டே வரிகளில் கூறுகின்றார்.
“தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின்உடற்றியோர் நாடே!” (புறம். 4)
‘உடற்றியோர் நாடு அதாவது பகைத்துக் களங்கண்டு பாழாயப் போன பகைவர் நாடு இனித் தாயில்லாத குழந்தை பசிக்குப் பாலில்லாமல் எப்படி அலறுமோ அப்படி அலறுமாம்!” பகைநாட்டுக்குத் தாயான மன்னன் இல்லாததால் தாயற்றும், வளங்கள் சிதைந்ததால் உணவற்றும் அவர்கள் அழிவார்கள் என்பதும் கருத்து. இந்த உவமத்தின் சிறப்பு நோக்கிய நன்னாகனார் என்னும் புலவர் ஓய்மான் வில்லியாதனைத் “தாயில் தூவாக் குழவிபோல்” காண வந்ததாகப் பாடுகிறார் (புறம் 379). ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் தாய் மகவு பற்றிய சிந்தனை உவம அளவையால் பதிவாகியுள்ளது. மணிபல்லவத் தீவில் அமுதசுரபியின் வரலாற்றைக் கூறிய தீவதிலகையிடமிருந்து அதனைப் பெற்றுக் கொள்கிறாள் மணிமேகலை. கொண்டு, தான் அப்பாத்திரத்தைக் கொண்டு பசிப்பிணி என்னும் நோயைப் போக்கும் எண்ணமுடையேன் என்று கூறும்போது,
“ஈன்ற குழவி முகங் கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன் முலை போன்று”
அமுதசுரபியினுள் பிச்சை நிறைவதைத் தான் காணும் பேரவா உடையேன் என்றும் கூறுகிறாள். குழவியின் பசிமுகம் கண்டு தாய்முலை திரண்டு சுரப்பது இயல்பாதலின் அமுதசுரபிக்குள் அன்னமிடுவாருக்கும் அவ்வியல்பு உண்டு என்பது கருத்து. இனி ஆபுத்திரனின் பெயர்க்காரணத்தையும் வரலாற்றையும் சொல்லுகிற சாத்தனார் அவன் நிலையைச் சித்திரிக்கிறபோது,
“தாயில் தூவாக் குழவித் துயர் கேட்டோர்
ஆ வந்து அணைந்தாங்கு அதன் துயர் தீர
நாவால் நக்கி நன்பால் ஊட்டி” (மணி. 1437-39)
என்னும் உவமத்தோடு பசுவின் அருட்செயலைக் காட்சிப்படுத்துவதையும்,
“தடித்தவோர் மகனை தந்தையீண் டடித்தாற்
தாய்உடன் அணைப்பள்., தாயடித்தால்
பிடித்ததொரு தந்தை அணைப்பன் இங்குஎனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மையப் பா!இனி ஆற்றேன்” (திருவருட்பா)
என்னும் வள்ளலாரின் பிள்ளைச் சிறு விண்ணப்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவு ஆண்டவனுக்கும் அடியவனுக்கும் உள்ள உறவோடு ஒப்பிடப்பட்டிருப்பதையும்,
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே,!
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே.!”
என்னும் பெருமாமள் திருமொழியையும் இங்கே பொருத்தம் நோக்கிச் சிந்திக்கலாம்.
குழவி பேணும் தாய் போல
குழந்தையைத் தாய் பேணுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றுதான். குடிமக்களைக் காக்கும் அரசனை இறைவனுக்கும் தாய்க்கும் ஒப்பாக்கிக் கூறுவதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் புலவர் அதனை எடுத்து மொழிகிற பாங்கில் பாட்டு சிறக்கிறது. அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உவமம் சிறக்கிறது. பொருளும் சிறக்கிறது. பெருஞ்சேரல் இரும்பொறையை நரிவெரூஉத் தலையார் பாடியது,
“எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை! நீயோ, பெரும!
நீயோ ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்,
குழவி கொள்பவரின் ஓம்புமதி!
அளிதோ தானே! அது பெறல் அருங் குரைத்தே! “(புறம். 5)
மன்னனுடைய நாட்டைச் சிறப்பிக்கும் புலவர் உவமத்திலேயே தொடங்குகிறார். “நின் ஆளுகைக்கு உட்பட்ட மண்பரப்பு முழுமையும் எருமைகள் போலப் பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் இடையில் மேய்கின்ற யானைகள் பசுக்களைப் போல மிகுந்திருக்கின்றன. இத்தகைய வளப்பமுடைய நாட்டை ஆளுகிற உரிமை எவருக்கும் அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. செருக்கால் அருளையும் அன்பையும் கைவிட்டு நரகத்திற்குச் செல்பவரைப் போல ஆளாமல் ஒரு குழந்தையைப் பெறுபவர் அதனைப் போற்றிப் பாதுகாப்பதைப் போன்ற மனநிலையுடன் நாட்டை ஆளக்கடவாய்” என்று வாழ்த்துகிறார். அருளும் அன்பும் நீங்கிய நிலை நிரயத்திற்கு வழிகாட்டுமெனின் அவை உள்ள நிலை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஆதலின் நிரயத்திற்கு அடைகொடுத்த புலவர் குழவிக்குக் கூறாராயினார். ‘நிரயம் கொள்பவர் – குழவி கொள்பவர்’ என்னும் முரணால் பாட்டு சிறந்து நிற்பதைக் காணலாம்.
ஈன்றோர் நீத்த குழவி போல
அதியமான் களத்தில் படுகிறான். களத்தில் பட்ட அதியமானை அரிசில் கிழார் பாடுகிறார். அதாவது அவன் இல்லாத இரண்டு சூழலைத் தன் பாட்டில் சித்திரிக்கிறார். இந்தச் சித்திரிப்பைக் கையறுநிலைத் துறையில் வைத்துப் பாடுகிறார். அதியமான் மாண்டு போனதால் அவனால் புரக்கப்பட்டோர் நிலை, அதியமானைக் கொன்ற கூற்றுவனின் நிலை. இதனைப் புரக்கப்பட்டோர் வருத்தமும் அவன் உயிரை வாங்கிய கூற்றுவனின் வருத்தமும் என்றும் கூறலாம். அவனால் ஆதரிக்கப்பட்டவர் வருத்தப்படுகிறார்களாம் எப்படி?
“பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோர் நீத்த குழவி போலத்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகம்” (புறம். 230)
இந்த வரிகளில் தாயை இழந்த குழந்தை எந்த உறவினர் வீட்டு வாசலுக்குச் சென்றாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் உள்ளமுருக்கும் சூழலைச் சித்திரிக்கிறார் புலவர். அந்தக் குழந்தையை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் நிலையைக் குழந்தைக்கு ஏற்றிச் சொல்லாமல் அதியமானால் புரக்கப்பட்டாரை அவனுக்குப் பின் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதிலிருந்து பெற வைக்கும் நுண்ணியம் உணர்க. ஆயிரம் மடிகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்குத் தாய் மடி ஆகாது. அதியமானை இழந்த அவனது ஆதரவாளர்கள் தாய்மடி காணாத குழவியானார்கள் என்பது கருத்து.
நிறைவுரை
மானுடத்தைப் பாடியவர்கள் சங்கச் சான்றோர்கள். தமிழிலக்கியத்தின் சில பக்கங்களைத் தவிர மற்றெல்லாமும் மானுடத்தைப் பாடியவையே. மானுட உறவுகளில் ‘அம்மா’ என்னும் உறவு தலையுறவு. உறவுகளுக்கு மூலம். உணர்வுகளுக்குத் தலைவாயில். தமிழில் உறவுச் சொற்கள் அதன் பரிமாணத்தை உணர்த்தி நிற்கும். பெண் என்பவள் பாலால் பிரிக்கப்படுபவள். ஆனால் மனவி என்பவள் கணவனை உள்ளடக்கியவள். ஆண் என்பதும் இது போன்றதே. இவற்றில் தலைசிறந்த சொல் தாய்மை. தாய் என்றாலே குழந்தையை உள்ளடக்கியதுதான். தாயையும் மகவையும் தமிழ்க்கவிதைகள் தக்க இடத்தில் உவமமாக அமைத்துக் காட்டுவதும் ஓர் உவமக் கோட்பாடே!.
(தொடரும்…)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(368)
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதென்றுந்
தீமை யலாத சொலல்.
– திருக்குறள் – 291 (வாய்மை)
புதுக் கவிதையில்…
உண்மை என்று
உரைக்கப்படுவது எதுவென்றால்,
உலக மக்கள் எவருக்கும்
ஊறு விளைவிக்காத நல்ல
சொற்களைச்
சொல்வதேயாகும்…!
குறும்பாவில்…
எவர்க்கும் எத்கைய தீங்கையும்
தராத சொற்கள் பார்த்துச் சொல்வதே
மேன்மையான வாய்மை என்பது…!
மரபுக் கவிதையில்…
உண்மை யென்றே சொல்கின்ற
உயர்ந்த ஒன்று மெதுவென்றால்,
அண்மை மாந்தர் எவருக்கும்
அவதி தாரா வகையினிலே
பண்பாய்ச் சொற்கள் தேர்ந்தெடுத்தே
பார்த்தே யவர்குத் தீதின்றித்
தண்மை யாகப் பேசிடுதல்
தானே யந்த உண்மையதே…!
லிமரைக்கூ…
வாய்மை என்பது ஏது,
என்றாலிதுதான், பிறரிடம் பேசும் விதமே
அவர்க்கு வந்திடாமல் தீது…!
கிராமிய பாணியில்…
பேசு பேசு
உண்மயே பேசு,
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் இல்லாம
உண்மயே பேசு..
உண்மண்ணா
என்னண்ணு கேட்டா,
வேற ஒண்ணுமில்ல
இதுதான்-
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் குடுக்காத
நல்ல சொல்லாப்
பாத்துப் பேசுறதுதான்..
அதால,
பேசு பேசு
உண்மயே பேசு,
அடுத்தவங்களுக்குக்
கெடுதல் இல்லாம
உண்மயே பேசு…!

நிர்மலா ராகவன்
உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒரு பயிற்சியைத் தொடங்குமுன், அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யப்போகிறோம் என்று மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.
குறிப்பிட்ட சூழ்நிலையில், எந்தத் தருணத்தில் எப்படி விளையாடலாம் என்று மெதுவாக – அது அப்போதே நடப்பதுபோல் — மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.
ஆனால், வெறும் கனவுடன் நிற்காமல், அதைச் செயலில் காட்டுகிறார்கள். செயல் முக்கியம்.
அதன்பின் சிறுகச் சிறுக தம் எதிர்பார்ப்பை உயர்த்திக்கொண்டே போய்த்தான் வெற்றி அடைகிறார்கள்.
“விளையாட்டு என்பது 10% உடலுழைப்பு, மீதி 90% மனத்தளவில்”.
அவர்களுக்கு நாம் சளைத்தவர்களா! எதை அடைய ஆசைப்படுகிறோம் என்பதை மனக்கண்ணால் பார்த்தால், அப்படியே நடக்கும்.
சாதாரணமான கல்லெனப் பிறர் காண்பதில், சிற்பிகள் உருவம் அமைக்கிறார்களே, எப்படி?
ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கையில், அது எதிரில் இருப்பதுபோன்றே வண்ணம், உரு எல்லாம் அவர்களுக்குக் காணப்படுகிறது.
சில பொருட்களோ, மனிதர்களோ நம் எதிரே இல்லாது, அவற்றை நாம் உணரமுடியாதபோதும், அவை இருப்பதாகக் கற்பனை செய்வது முதல் படி.
அதன்பின்னர், நமக்கு உகந்தவாறு, நன்மை பயக்குமாறு ஆழ்ந்த கற்பனையில் ஈடுபட்டு, மனக்கண்ணால் இப்போது நடப்பதைப்போல் பார்ப்பது அப்படியே பலிக்கும்.
கதை
என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது, நான் அரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, தன்னிச்சையாக இரு கை முழங்கைகளும் ஒன்றை ஒன்று பிடித்து லேசாக ஆட்ட, முதலில் ஆச்சரியம். பிறகு புரிந்தது: `குழந்தை அழுகிறது!’
இடது கரத்தை லேசாகத் தடவிவிட்டுத் தட்டிக்கொண்டேன். `தூங்கு. தூங்கு!’
அதன்பின், என் மனம் சமாதானம் அடைய, அழுகை நின்றுவிட்டது என்று தோன்றிப்போயிற்று.
வீட்டுக்குள் நுழைந்தபோதே, “அம்மா! குழந்தை ஓயாம அழுதது. என்ன பண்ணினாலும், அழுகை நிக்கவே இல்லே. திடீருன்னு, மேஜிக் போட்டமாதிரி, தூங்கிப்போயிடுத்து!” என்று, மாறி, மாறி விவரித்தார்கள் என் பெண்கள்.
நோய்வாய்ப்படும்போது
நோயைப் பற்றிச் சிந்திக்காது, பிடித்த விஷயங்கள் நடப்பதுபோல் மனக்கண்ணால் பார்த்தால், நோயின் கடுமை நம்மை பாதிக்கவிடாது, நல்ல உணர்வுகளை எழுப்பலாம்.
ஒரு முறை, நான் மருத்துவ மனையில் நான்கு தினங்களைக் கழிக்க வேண்டியிருந்தபோது, என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நல்ல கதைக்கான கரு ஒன்று கிடைத்தது.
பூனைகளுக்குத் தகவல்
அப்போது, `தினமும் காலையில், நாம் வளர்க்கும் பூனைகளுக்கு ஆகாரம் போடுவோமே!’ என்ற எண்ணம் எழ, அவை இப்போது எப்படி இருக்கின்றனவோ என்ற உணர்வு எழுந்தது.
வேறு யாராவது ஆகாரம் போட்டிருப்பார்கள். ஆனால், அவை விசுவாசம் நிறைந்தவை என்பதால் கவலை.
நான் நினைத்தபடியே ஆயிற்று.
ஒரு பூனை நான் எப்போதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கவே இல்லை; ஊர் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் திரும்பும் இன்னொன்றோ, வீட்டைவிட்டு நகரவே இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டேன்.
பிராணிகளுக்குக் கடிதமா போடமுடியும்!
“நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எப்போதும்போல் இருங்கள்!” என்று அவற்றிற்குத் தகவல் அனுப்பினேன் – மானசீகமாக.
அவர்களுக்கு அது கேட்டிருக்கவேண்டும். பழையபடி நடந்துகொண்டதாம்.
வெளியூர்களுக்குப் போக வழியின்றி, உற்றவர்களையும் பார்க்கமுடியாது பலரும் தவிக்கும் இக்காலத்தில் மன இறுக்கத்தால் தவிக்காது இருக்க ஒரு நல்ல வழி: ஒரு தோட்டத்தில் இருக்கிறோம். மலர்களின் மணம், வண்ணம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை கற்பனையில் அனுபவித்தால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்.
ருசி
ஒரு கதைமாந்தர் உண்ணும்போது ஏற்படும் ருசியை ஆசிரியர் வர்ணித்திருந்தால், ஆழ்ந்து படிப்பவர்களுக்கும் தாமே ருசிப்பதுபோல் இருக்கும். நாவில் நீர் சுரக்கும்.
சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதோ, கணினித் திரையில் பார்க்கும்போதோ ஆர்வம் எழுந்து, நாமும் அந்தப் பலகாரத்தை செய்ய ஊக்கம் எழுவது இதனால்தான்.
துணுக்கு
ஒட்டகம் வேப்பிலையைத் துண்ணுமாம்.
ஐயோ! கஸ்க்குமே!
அதுக்கு நீ ஏன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? நீயா துண்ணப்போறே?
கதைக் கரு
சில வரிகளே கொண்ட செய்தியைப் படிக்கும்போது, அது தம் எதிரில் அப்போதுதான் நடப்பதுபோன்ற உணர்வு எழும். அதைக் கதையாக விரிவாக்குகிறார்கள் எழுத்தாளர்கள்.
இம்மாதிரியான கற்பனைகளால் நினைவாற்றல் அதிகரிப்பதும், நிம்மதி கிடைப்பதும் உபரிப் பயன்.
ஒரு விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ நினைவில் பதித்துக்கொள்ள திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்தால், அது மனதில் பதிந்துவிடும்.
நான் கல்பனாஸ்வரம் போட ஆரம்பித்த கதை
எனது இசை ஆசிரியர் முதன் முறையாக, ஒரு பாட்டிற்கு ஸ்வரம் அமைக்க ஊக்குவித்தார். நான் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை.
அவர் கோபிக்கவோ, கேலி செய்யவோ இல்லையாயினும், எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.
இரவு தூங்குமுன், நம்மைக் குழப்பும் ஏதாவதொரு கேள்வியை மனதில் எழுப்பினால், காலையில் பதில் தெரிந்துவிடும்.
அன்றிரவு, நான் கேட்ட ஒரு சில பிரபல பாடகர்கள் எப்படிப் பாடினார்கள் என்று நினைவில் கொண்டுவந்து, அதேபோல் நானும் பாடுவதாகக் கற்பனை செய்தேன்.
மறுநாள் வகுப்பில் ஸ்வரங்கள் பொழிய, “ராத்திரி பூராவும் இதையே நினைச்சுண்டு இருந்தியாம்மா?” என்று அதிசயப்பட்டுக்கேட்டார் ஆசிரியர்.
பெருமையுடன் தலையாட்டினேன்.
நம் எண்ணங்களும், வார்த்தைகளும் பலித்துவிடும். ஆதலால், நல்லதையே நினைக்கவேண்டுவது அவசியம்.
ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறும்போது, நல்லதொரு முடிவைக் கற்பனையால் கண்டால், அது நனவாகும்.
கதை
சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், நாடு தழுவிய ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முந்தைய வருடம், “அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கப்போகிறது!” என்று என் கணவரிடம் சொன்னேன்.
அப்போது ஆங்கிலத்தில் பெரிதாக எதுவும் எழுதும் துணிச்சலும் இருக்கவில்லை.
எப்படிப்பட்ட கதைகள் எழுதுவது என்ற கேள்விகள் எழ, ஒரு வருடம் முழுவதும், வாரத்தில் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் இருந்த அமெரிக்க வாசகசாலைக்குப் போய் ஆராய்ச்சி செய்தேன்.
அடுத்த வருடம், போட்டி அறிவிக்கப்பட்டதும், பரிசுப்பொருளான கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அப்படத்தைத் தொட்டேன். எனக்குள் உறுதி: `நான் இதை வாங்குவேன்!’
அதன்பின், அரைமணியில் ஒரு கதை எழுதினேன். கரு பரவாயில்லை. நடை சுமார்தான் என்று தோன்ற, ஒரு வாரம் கழித்து, யாருடைய கதையையோ படிப்பதுபோல், திருத்த ஆரம்பித்தேன். பல முறை திருத்தினேன்.
நான் விரும்பிய அதே பரிசு என் கைக்கு வந்தது.
அந்தக் கடிகாரம் இரண்டாவது பரிசுக்கு, முற்றிலும் தங்கத்தால் ஆனது என்பதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அணிவதில் ஆர்வமும் இருக்கவில்லை.
`என்னால் ஆங்கிலத்திலும் எழுத முடியும்!’ என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சி அளித்தது.
மனம் செய்யும் மாயம்
அண்மையில், தொற்றுநோய்க்காக இரண்டாவது முறைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டாள் என் பேத்தி. இரண்டு நாட்களுக்குப்பின், கல்லூரியில் ஒரு முழுப்பரீட்சை.
முதன்முறை, ஏதேதோ பக்கவிளைவுகள்.
ஒரு மாதத்திற்குமுன்னரே நான் கூறினேன், “தினமும் தூங்கப்போறதுக்குமுன்னாடி, `எனக்கு இந்தத் தடவை ஒரு பக்கவிளைவும் இருக்காது. சுலபமாக, நன்றாகப் பரீட்சை எழுதுவேன்!’னு மனசுக்குள்ளே நினைச்சுக்கோ,” என்றேன்.
அவள் எண்ணியபடியே நடந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி.
`நமக்கு நல்லது நடக்கும்!’ என்ற நம்பிக்கையுடன் கற்பனை செய்தால், கண்டிப்பாக நாம் விரும்பியது நடக்கும்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா
பாட்டுத்திறத்தாலே பாரினைப் பார்க்க வைத்தவர் பாரதி. இந்தியத் திரு நாட்டின் ஈடில்லாப் புதல்வர் பாரதி.அஞ்சாமையுடன் அறமுரைத்தவர் பாரதி.அன்னைத் தமிழை அரியாசனம் வைத்தவர் பாரதி.ஒற்றுமைக்கு உர மூட்டியவர் பாரதி.ஒடுக்கப்படுதலை உதறியே எறிந்தவர் பாரதி. நம்பிக்கையினை உயிர்மூச்சாய் ஆக்கியவர் பாரதி. மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்கியவர் பாரதி.உயர்திணை அஃறிணை என்று பாராமலே உணர்வு டன் பார்த்தவர் பாரதி.
பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரி ந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன. தேயத்தைப் பாடினார். சாதி யைப் பாடினார். சன்மார்க்கத்தைப் பாடினார். பெண்மையைப் பாடினார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடினார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடினார். பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடி னார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழு தினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பய ணம் செய்தார். ஆயினும் இவற்றை எல்லாம் எழுதும் வேளை ஆன்மீக உணர்வுடனேயே எழுதியிருக்கிறார். ஆன்மீகமே உறுதுணை என்னும் அசையா நம்பிக்கையினை அகம்முழுவதும் பாரதி வைத்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.
பாரதி என்பவர் பாரதநாட்டின் சொத்தாகி நின்றார். ஆனால் இன்று பாரெ ங்கும் பாரதியைக் கொண்டாடி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாத்திகரும் கொண்டாடுகிறார்கள். ஆத்திகரும் கொண்டாடி பெருமைப்படுகிறார்கள். பாரதி நாத்திகரா அல்லது ஆத்திகரா என்று எண்ணிப் பார்க்கும் பொழுது அவரை எந்தவிதத்தில் எடுப்பது என்று வரும் பொழுது அவர் ஆத் தீகத்தில் அமிழ்ந்து விடுவதைக் காணமுடிகிறது எனலாம். எழுச்சி யைப் பாடினாலும், எதிர்ப்பைப் பாடினாலும், விடு தலையைப் பாடினா லும், வெற் றியைப் பாடினாலும் – ஆன்மீகத்தை அகத்தில் நிறைத்தே பாரதி பாடியிருக்கிறார் என்பதையே கண்டிட முடிகிறது.
பக்தி உடையர் காரியத்தில்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மையைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்!
சக்தி தொழிலே அனைத்துமெனில்
சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?
வித்தைக்கு இறைவா! கணநாதா
மேன்மைத் தொழிலிற் பணியெனையே!
வித்தைக்கு இறைவனாக இருப்பவனே கணநாதனே என்கிறார்.அகத்தினில் பக்தியை அமர்த்தி இருப்பவர்கள் வாழ்க்கையில் பதறார் சிதறார் என்று நம்பிக்கையுடன் பாரதி சொல்லுகிறார்.உலகின் இயக்கமே சக்திதான். அந்தச் சக்திதான் எம்மையெல்லாம் வாழ்விக்கிறது. வழியினைக் காட்டு கிறது என்பதில் முழு நம்பிக்கையினை பாரதி கொண்டிருந்திருக்கிறார்.
பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகத்தைப் பற்றியும், பார தியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும், எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான். என்பது பற்றியும் பார் ப்பது முக்கியமாகும். பாரதி பாப்பாவுக்கு என்று பாட்டு எழுதுதினான்.பாப்பா பாட்டுத்தானே என்று சாதாரணமாக எடுத்து விடக் கூடாது. பசுமரத்தாணி போல் ஆன்மீகத்தை – ஆன்மீகம் என்று காட்டாமலேயே பாரதி அதற்குள் புகுத்தி விடுகிறான். எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் ஆன்மீகக் கருக் கள் முளைக்க வேண்டும் என்பதுதான் அவனின் அகத்தின் அவாவாக அமைந்தது எனலாம்.
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.
இப்பாடல்கள் அத்தனையும் பாப்பாவுக்குப் பாடப்பட்ட பாடல்கள்தான். ஆனால் இப்பாடல்கள் வழியே பாரதி தெய்வீக உணர்வை ஊட்டுகிறான். சிந்தனைகளை ஆன்மீகம் என்னும் வெளிச்சத்தில் காட்டியும் நிற்கிறான் என்பதை அகமிருத்துவது அவசியமாகும். பாப்பாக்களுக்குச் சொல்லப்பட்ட அத்தனையும் வளர்ந்த எங்களுக்கும் நல்ல வரமாக இருக்கிறது என்பதை மறுத்து உரைத்திட முடியுமா சொல்லுங்கள்! சாதி பற்றிச் சொல்லுகிறான். உயர்வு தாழ்வு பற்றி உரைக்கின்றான். அறத்தை, அன்பை, அகிம்சையை, என்று எல்லாவற்றை யும் இதில் கொண்டுவந்து தந்துவிடுகிறான். பாரதி காட்டும் இத்தனையும் நல்ல ஆன்மீகம்தானே!
கீதையினைத் தொடாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.இந்தியத் திருநாட்டின் தலைவர்கள் யாவருமே கீதையினை மனமிருத்தி வைத் திருந் தார்கள்.கீதையின் நாயகன் கண்ணனே தெய்வமாய் காட்சி கொடுத்தான். கீதை யும் கீதை சொன்ன கண்ணனும் பாரதியின் உள்ளத்தில் ஊன்றியே இருந்ததை அவனின் பல சிந்தனைகள் எமக்கெல்லாம் தெரியப் படுத்தியே நிற்கின்றன. பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகளாக மலர்ந்திருக்கின்றன என் பது மனங்கொள்ளத்தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காகவோ, மொழியி னருக்காகவோ,நாட்டினர்க்காகவோ அல்ல அவரின் தேடல்களாகும். அந்தத் தேட ல்கள் மனிதகுலம் முழுமைக்குமான தேடல்கள் என்றுதான் எண்ணுதல் வேண்டும்.. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்துக்குகுமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமை பெற்ற இடம் அதுதான்.
“எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக் கிறான், ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பா னும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து வை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங் களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.”
என்று பகவத்கீதைக்கு பாரதி எழுதியிருக்கும் – முன்னுரையில் காட்டியிருக்கும் சிந்தனை அவரின் ஆன்மீகத்தின் நிலையினைக் காட்ட முயலுகிறதல்லவா!
பாரதி பகவத்கீதையினை எப்படிப்பார்க்கிறார். அவரின் உள்ளம் எப்படி ஆன்மீக த்தை நாடி நிற்கிறது என்பதை அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் புலப்படுத்தி யே நிற்கின்றன. பாரதியின் இந்த உள்ளம் விநாயகர் நான்மணி மாலையினை ஆக்கி அளிக்கும் நிலையில் அதனுள்ளும் வெளிப்பட்டும் நிற்கிறது என்பதையும் காணமுடிகிறது.
” நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
சிந்தையே இம்மூன்றும் செய்”
“மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
கவலைப் படிதலே கருநரகமம்மா
கவலையற்றி ருத்தலே முக்தி”
“துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே”
” மனமே எனைநீ வாழ்வித்திடுவாய்
வீணே உழலுதல் வேண்டா”
“மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
பாவி நெஞ்சே பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல்”
என்று விநாயகர் நான்மணி மாலையியில் பாரதியின் உள்ளத் தினின்றும் வெளி வரும் அத்தனையும் கீதையின் அடியோற்றி அதன் அர்த்தமாய் ஆன்மீக வெளிச்சமாய் அமைந்திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதே. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை யினை மனம் முழுக்கப் பதித்தால் கீதையின் பல கருத்துக்கள் ஆன் மீக முத்தாய் முகிழ்த்து வருவதை நாமனைவரும் கண்டு தெளி யலாம்.
“அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குத லில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
மூட நெஞ்சே முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன் இன்னும் உரைப்பேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
பராசக்தி உளத்தின் படியுலுகம் நிகழும்
நமக்கேன் பொறுப்பு”
இதுதான் பாரதியின் அகமுரைக்கும் ஆன்மீக நிலையாகும்.இவ்வாறு பாரதி விநாயகர் நான்மணி மாலை பாடிட பகவத்கீதை பாரதிக்கு ஒளிவிளக்காய் அமைந்தது எனலாம். பாரதியின் ஆன்மீகம் இப்ப டியே அவரின் பாடல் வழியில் பயணிக்கிறது.
பாரதியின் ஆன்மீகப் பார்வை என்பது எல்லை கடந்தது. இந்தி யனாய், தமிழனாய், அந்தணகுலத்தவனாய், புரட்சியாளனாய். இருந்தாலும் அவனின் சிந்தனை என்பது பரந்து சிறகடித்தது என்பதை த்தான் – அவனின் படைப்புகள் பறைசாற்றி நிற்கின்றன எனலாம்.
” ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கும் முழு வெண் மேனியன்
கருநிறங் கொண்ட பாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவத்தாலே உணர்ந்துணராது
பல வகையாகப் பரவிடு பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறுமதி வாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினர்;
அதனருள் வாழ்த்தி அமர்வாழ்வு எய்துவோம் “
‘ தெய்வம் நீ என்றுணர் ‘
என்று ஆத்திசூடியில் பாரதி கடவுள் கொள்கையினைக் காட்டும் பாங்கும் அவனின் தெளிந்த ஆன்மீகத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா!
பாரதி கடவுள் நம்பிக்கை மிக்கவனாகவே இருந்தான். அவனின் எந்தச் செயலிலும் எப்படியோ தெய்வம் பற்றிய சிந்தனை வந்தே நிற்கும். இதற்கு அடைப்படையே அவனின் அகத்திருந்த ஆன்மீகமே எனலாம்.
” காக்கைச் சிறகினிலே நந்த லாலா நின்றன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா
கேட்கு மொலியிலெல்லாம் நந்த லாலா
கீத மிசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்த லாலா”
பாரதியின் கடவுள் பற்றிய இந்தச் சிந்தனை ஆன்மீக நிலையின் பெரு நிலை என்றே கொள்ள முடிகிறது. மரமும், பறவையும், தீயும், ஒலியும், வண்ணமும் கடவுளாகவே பாரதியின் பார்வைக்குத் தெரிகிறது. இது பாரதியின் உன்னத ஆன்மீகப் பார்வை என்றே கொள்ள முடிகிறது.
“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”
“என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான்
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரி யனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”
” இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுவன் பொறுப்பாய்ச்
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவ யோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்
கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொடேன் கண்கொண்டேன்”
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
“அங்கனே யாகுக!” என்பாய் ஐயனே!
“வெட்ட வெளியாய் அறிவாய் வேறுபல சத்திகளைக்
கொட்டு முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்
தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில்
சாலவுமே நுண்ணியதாய் தன்மையெலாம் தானாகி
தன்மை ஒன்றில்லாததுவாய் தானே ஒருபொருளாய்
தன்மை பலவுடைத்தாய் தான்பலவாய் நிற்பதுவே”
சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
ஆன்மீகம் என்றால் என்ன என்பதை பாரதி நன்கே அறிந்து வைத்திருந்திருக்கிறான்.உண்மையான ஆன்மீகம் எது என்பதை அவன் உள்ளத்தில் நன்றாகவே பதித்து வைத்திருந்திருக்கிறான். இப்படி அவன் இருந்த காரணத்தால்த்தான் அவனின் ஒவ்வொரு கவிதைகளும் ஆன்மீக உணர்வினை அடிநாதமாகக் கொண்டு மலர்ந்தன என்பதை மறுத்துவிட முடியாது..
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று அப்பர் பெருமான் அஞ்சாமல் உரைத்தார் என்றால் அவரின் ஆன்மீகம்தான் காரணம் எனலாம். அனல்வாதம் புனல்வாதம் செய்து அஞ்ஞானி களை சம்பந்தப் பெருமான் வெற்றி கொண்டார் என்றால் அங்கும் ஆன்மீகம்தான் அடிப்படை எனலாம். காரைக்கால் பெருமாட்டியை “அம்மையே” என்று ஆண்டவனே அழைத்தார் என்றால் ஆன்மீக ம்தான் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.
” அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்று பாரதி பாடவும், அதன் வழி நடக்கவும் அவருக்கு அருந்து ணையாக அமைந்தது அவரின் அகத்தில் அமர்ந்திருந்த ஆன்மீகமே எனலாம். பாரதியை புரட்சிக்கவி, புதுமைக்கவி, புயலாய் புறப்பட்டு வந்த கவி, பாமரக்கவி, என்றெல்லாம் வியந்து நின்றாலும் பாரதி ஆன்மீகம் என்னும் பாதையில் பயணித்த அருங்கவி என்று சொல்லுவதுதான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா!