To join the video meeting, click this link: https://meet.google.com/zog-xhhv-dsz

கோவையில் நேற்று இரவு நாங்கள் பயணித்த ஓலா டாக்சியை ஓட்டியவர், 62 வயதுடைய செல்வராஜ். நகைப் பட்டறை முதலாளியாக இருந்த அவர், ஓலா ஓட்டுநரானது ஏன்? அவரே சொல்கிறார், கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கோவை ஈஷா யோகா வளாகத்திற்கு நேற்று சென்றோம். முன்னிரவு நேரத்தில் அங்கு லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. லேசர் விளக்கொளியில் ஆதியோகி சிவன் உயிர்பெற்று எழுந்தார். விதவிதமான தோற்றங்களில், ஒளிக் கோலங்களில், இப்படியெல்லாம் கூடக் காட்ட முடியுமா என வியக்கும் வகையில் ஒரு வர்ண ஜாலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கோவையின் யாரி உணவகத்தில் நேற்று இரவு சாக்லேட் பிரவுனி ஐஸ்கிரீம் சுவைத்தோம். குளிர்ச்சியான ஐஸ்கிரீம் எப்படி ஆவி பறக்க வருகிறது என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்’ என்னும் உலகியல் வழக்கில் உள்ள ‘நாலுவிதம்’ என்பது நான்கை வரையறுக்காது ‘பலரும் பலவகையாகப் பேசுவார்கள்’ என்பதைக் குறிக்குமல்லவா? அதுபோல ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சித்திரிக்கும் ஓர் இலக்கியப் பதிவில் காணப்படும் எண்ணற்ற பொருத்தமான உவமங்களைக் குறிக்கவே ‘ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்’ எனத் தலைப்பிடப்பட்டது. ‘ஆயிரம் நிலவே வா!’, ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’, ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்பன போல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தவை இரண்டு. ஒன்று, அவர் தன் புனைபெயரைத் தன் வழிகாட்டியான பாரதியுடன் இணைத்து அமைத்துக் கொண்டது. இரண்டு அவருடைய புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அடங்கிய கவிதை இலக்கியங்கள். பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ்க்கவிதை இலக்கிய நெறியில் புதுமையாகவும் அமைந்தது ‘குடும்ப’ விளக்கு. குடும்ப விளக்கின் முதற்பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமச்சிறப்பையே இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.
குடும்ப விளக்கின் கட்டமைப்பு
‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொருளாழமுடைய ஒரு தொடர். நாட்டில் பல்கலைக்கழகங்கள் பெருகிய அளவுக்கு நல்ல குடும்பங்கள் தழைத்திருக்கின்றனவா என்பது எளிதில் விடை காணமுடியாத வினா. ‘குடும்ப விளக்கு’ என்பது நடப்பியல் சார்ந்த கற்பனை கலவாத ஒரு காவியம். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அவ்வைந்து பிரிவுகளில் ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்பது ‘ஓர் இரவு’ என்பதுபோல ஒரு நாள் ஒரு குடும்பத்து இயல்பான நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதியாகும்.
ஒருநாள் நிகழ்ச்சி
குடும்பத்தலைவி விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, கணவனைப் பணிக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்குரிய பணிவிடைகளை மகிழ்ச்சியுடன் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிப்பது, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகளை வரவேற்பது, அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, அவர்களை உறங்க வைப்பது, கணவனோடு பொதுநலம் குறித்துப் பேசுவது, உறங்கச் செல்வது என நிரல்படக் கோத்த அருமணி ஆரமாகத் திகழ்வது ஒருநாள் நிகழ்ச்சியாகும். நாட்டுப்படலம், நகரப்படலம் எனத் தொடங்கிய தமிழ்க்காப்பிய உலகில் வாசலில் கோலமிடும் வைகறைத் தலைவியிலிருந்து தொடங்கிச் சித்திரித்துக் காட்டலாம் என்ற எண்ணமே காப்பியப் புரட்சியாகும். கவிதைப் புரட்சியாகும்.
மடமையிருள் கலைந்தது
கவிதையில் உவமத்தின் ஆற்றலை நன்குணர்ந்திருந்த பாவேந்தர் தன் காப்பியத்தை உவமங்களிலேயே தொடங்குகிறார். இது ஒருவகையில் தமிழ்க்கவிதை மரபினைச் சார்ந்தது எனலாம். ‘அகர முதல’ எனத் தொடங்கிய திருவள்ளுவரும், ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு’ என்னும் நக்கீரரும் இவர்க்கு முன்னோடியாகலாம். குடும்பப் பெண்கள் விடியற்காலத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுதல் ஒரு பண்பாட்டு மரபு. பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பலபடப் பேசியிருந்தாலும் குடும்ப விளக்குக் காப்பியம் முழுமையும் பண்பாட்டுக் கூறுகளே நிறைந்துள்ளன. கதிரவன் கீழ்த்திசையில் உதிக்காத போதும், அதனால் விலகவேண்டிய இருளாகிய போர்வை நீங்காதபோதும் நள்ளிரவு மென்மையாய் நடந்து கொண்டிருந்ததாம்.
“இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை!
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது”
என்று வண்ணனை செய்து அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்னும் திருக்குறள் உவமக் கருத்தினை உள்ளீடாக்குகிறார். தொடர்ந்து மலர்கின்ற காலைப் பொழுதினைத்,
“தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள் தன் கட்டுக்குலைந்தது”
என்று எழுதுகிற பாவேந்தர், நூலின் முதல் உவமத்தில் அறிவை முன்னிறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே நூலின் நோக்கமாதலின் அதனைக் குறிப்பாய் உணர்த்தினார் என்பதாகவும் கொள்ளலாம். கற்றலும் கேட்டலும் இணைந்ததே அறிவெனினும் இந்த உவமத்தில் கேள்விக்கு முதன்மை கொடுத்திருப்பது நூலறிவு பெற இயலாதவரையும் மனத்துட் கொண்டே நூலின் முன்னுரையில்,
“குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க. துணைவியர் எழுத்தறிவு இல்லாராயின் படித்துக்காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்”
என்னும் பகுதி ‘கேள்வியால் அகலும் மடமைபோல்’ என்னும் உவமத்தின் ஆழத்தை ஓரளவு தெளிவாக்கக் கூடும். படிக்க இயலாத காலையில் கேட்டலுக்கு முதன்மை தந்தவர் மாலை நிகழ்வில் கற்றலுக்கு முதன்மை தருவதைக் காணலாம்.
குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்
தமிழிலக்கியத்தில் பெண்களின் கண்களுக்கு வேல், கெண்டைமீன் முதலியவை உவமமாக்கப்படினும் அதன் வினைபடுபொருள்களாகக் கண்ணீரைத்தான் காட்டினார்கள் தமிழ்க்கவிஞர்கள். சீதையின் கண்களும் கண்ணகி மற்றும் மாதவியின் கண்களும் மீன்களாக உருவகம் செய்யப்பட்டிருப்பினும் காப்பியங்கள் அவர்களுடைய கண்ணீரைத்தான் காட்டின. ஆனால் பாவேந்தர் விழித்த தலைவியின் கண்களைத்,
“தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்”
எனக் களிப்பு மேலிடத் தாவிக் குதிக்கும் கெண்டைமீன்களாகச் சித்திரித்தார். ‘கருக்கலில் ஒளிபடும் அவள் விழி’ என்னும் பொருளை விளக்கக் ‘குளத்துநீரில் குதிக்கும் கெண்டைமீன்’ என்னும் உவமத்தால் விளக்கினார். ‘தெளிவிலாக் கருக்கல்’ என்னும் பொருளுக்குத் ‘தெளிவிலாக் குளத்து நீரையும்’ கருக்கலில் அலைபாயும் அவள் ‘விழிக்குக்’, குதிக்கும் கெண்டைமீனையும் உவமித்ததில் கவிஞரின் உவம ஆற்றல் புலப்படுவதைக் காணலாம்.
பொடிமுத்துச் சுடர்
சொல்லப்படுகிற உவமம் எந்த வகைமையில் பொருளுக்கு உவமமாக்கப்படுகிறதோ அந்த வகையில் முழுமையான விளக்கத்தைத் தரவேண்டும். அதுதான் உவமத்தின் பணி. ஆனால் அந்த விளக்கத்திற்காகத் தெரிவுசெய்யப்படும் துல்லியமான பொருத்தமான உவமம் படைப்பாளனின் துல்லிய நோக்கையும் பரந்த பார்வையையும் வெளிப்படுத்தும். அவ்வாறு பொருள் விளக்கத்திற்கான துல்லியமான ஆழமான உவமங்கள் கிட்டாதபோது படைப்பாளனே சில உவமங்களைப் படைத்தும் பொருள் விளக்கத்தைச் செய்துவிடுவான். சான்றாகப் ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதுதான் உலக வழக்கு. திருவள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசுவைக் காட்டுகிறார். புலித்தோல் போர்த்திய பசு என்பது யாரும் காணாதது. துறவறத்திற்குச் சென்றவர்கள் அந்தத் துறவற வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூடாவொழுக்கத்தில் ஈடுபடுவதை விளக்குதற்காகத் திருவள்ளுவர் இந்த உவமத்தை இட்டுக்கட்டியிருக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் நுண்மாண் நுழைபுலமும் உற்று நோக்கும் இயல்பும் கொண்டவர். கருத்துக்களில் புதுமை தேக்கினும் பண்பாட்டில் பழந்தமிழ்ப் பண்பாட்டையே முன்னெடுப்பவர். அதனால் மூக்குத்தி அணிந்த பெண்களையே பாடுபொருளாக்கியிருக்கிறார். அவர்களுடைய மூக்குத்தியையும் பாடுபொருளாக்கியிருக்கிறார். அதில் தொங்கும் முத்தையும் உவமமாக்கியிருக்கிறார். காதில் தோட்டோடு தொங்குவதுபோல மூக்குத்தியிலிருந்தும் முத்து தொங்கும். அது அளவால் மிகச் சிறியது. இதனை எங்கோ கண்ணால் நோக்கி மனத்துள் பதிய வைத்திருந்த பாரதிதாசன் குடும்ப விளக்கில் அகல்விளக்கின் சோர்ந்து போன சுடருக்கு உவமமாக்கியிருக்கிறார்.
“சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத்தைப் போல்
துளி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
செங்காந்தள் நிரல் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்திச்”
செல்கிறாளாம். சுடரின் சோர்வைத் தூண்டுகோலால் அடிப்பகுதி நூலைத் தூக்கிவிடுவதன் மூலம் ஒளிவிடச் செய்கிறாளாம். விளக்கைத் துடைப்பதும், விளக்கேற்றுவதும், எண்ணெய் குறைந்தால் ஊற்றுவதும், குறைந்த சுடரைப் பெருக்கிக்காட்டுவதும் பெண்களின் இல்லறக் கடமைகளில் ஒன்று. ஆனால் பாரதிதாசன் இதனை உற்று நோக்கியிருக்கிறார். பண்பாடு சார்ந்த விளக்குச் சுடரேற்றும் நிகழ்வை மற்றொரு பண்பாடு சார்ந்த மூக்குத்தியின் பொடிமுத்தை உவமமாக்கி உரைத்ததன் மூலம் தான் ஒரு மரபுக்கவிஞர் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.
உணவுக் கூடமா? உவம மண்டபமா?
காலை உணவு, நண்பகல் உணவு என்றெல்லாம் அடுக்களையில் சமையல் செய்யச் செல்கிறாள் தலைவி. அடுக்களையில் ஒருநாள் சமையற்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் குடும்பத்தில் உள்ள யார் யார் என்னென்ன விரும்புவார்கள் என்பதிலும் மிக நுண்ணிய பார்வையைப் பாரதிதாசன் செலுத்தியிருக்கிறார்.
“பொரியலோ பூனைக் கண் போல்
பொலிந்திடும்!”
பொரியலை உண்ணாதார் இலர். பூனையைக் காணாதார் இலர். ஆனால் பாரதிதாசனால் மட்டுமே பூனைக் கண்ணையும் பொரியலையும் ஒப்பிட்டுக் காண முடிந்திருக்கிறது. தேங்காய்த் துருவல், கடுகு முதலியன இட்டு வதக்கி வறுத்துச் செய்யப்படும் பொரியல் பூனைக் கண் போலவே இருப்பதைப் பாரதிதாசன் கவிதையைப் படித்த பிறகுதான் தெரிகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் காலில் செருப்பணிவிக்கிறாள். அந்தச் செருப்புக்கும் உவமம் சொல்கிறார்.
“புன்னைஇலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவ காலிற் செருகி”
என்று. குழந்தைகளின் அதாவது பெண் குழந்தைகளின் காலடிகளுக்குப் புன்னையிலையை உவமம் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை புன்னையிலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். பாரதிதாசன்,
“காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்த குடை தூக்கி”
என்று பிறிதொரு இடத்திலும் பாடுவார். செயல்களின் மாற்றமே ஓய்வு. இந்த நுண்ணியத்தைப் பாவேந்தர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் தெரியுமா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கையில் விரித்த குடையைக் கொடுத்துத் தெருவரை அவருடன் நடந்து மற்ற பிள்ளைகளோடு அவர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகிறாளாம். எப்படி?
‘கிளைமாறும் பசுங்கிளிபோல ஓடி
ஆளனோடு அளவளாவினாள்”
வேன்களில் குழந்தைகளை அனுப்பும் வழக்கத்தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தற்காலத் தாய்மார்களுக்கு இந்த அனுபவமும் கிட்டாது. பாவேந்தரின் இந்தப் பாட்டும் கிட்டாது.
பாண்டியனும் பாவேந்தரும்
சேர, சோழ, பாண்டியர்களில் பாவேந்தரின் படைப்புக்களில் பெரிதும் நிறைந்திருப்பவர் பாண்டியரே. காரணம் பாவேந்தரின் அளப்பரிய தமிழ்ப்பற்று. பாண்டியர்கள் தமிழை வளர்த்தார்கள். சோழ நாட்டிலும் சேரநாட்டிலும் பயனை அனுபவித்தார்கள். என்ன பயன் பாண்டியர் காத்த தமிழில் கவிதைகளையும் காப்பியங்களையும் யாத்தனர். முத்தொழில்களிலும் காத்தல்தானே தலைசிறந்தது? அதனால் பாண்டியரை அவர் முன்னெடுப்பதில் வியப்பேதும் இல்லை!. குடும்பத்தலைவன் மணவழகர் உடுத்த வேண்டிய ஆடை கிழிந்திருக்கிறது. அதனைத் தைத்து அவனை அணியச் செய்து அவன் அழகைப் பருகுகிறாளாம் அவள். எப்படித் தெரியுமா?
“பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்!
தைத்தாள் தையல் சடுகுடு பொறியால்!
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல”
என்று எழுதுகிறார். காப்பியம் புதுமை தேக்கியது. உவமம் மரபு சான்றது. ‘செந்தமிழ்ப்பாண்டியன்’ என்றதாலே அவர் பாண்டியனை முன்னெடுத்ததற்குத் தமிழே காரணம் என்பதும் பெறப்படும்.
“கூண்டுவண்டி கட்டி நாம்
கூடலூர் அடைந்தால்
பாண்டியன் குடும்பம் என்று
பார்த்து மகிழ்வார்கள்”
என்று பிறிதொரு இடத்திலும் பாண்டியனை உவமமாக்கியிருப்பார் பாவேந்தர். எண்சீர் விருத்தங்களால் ஆன தமது காப்பியத்திற்குப் ‘பாண்டியன் பரிசு’ என்றுதான் அவர் பெயர் வைத்திருக்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய அந்தத்தாய், அடுத்துத் தன் கணவனைக் கடைப்பணிக்கு அனுப்புகிறாள். அவன் உணவருந்தியபின் தமிழ் மரபுப்படி வெற்றிலைப் பாக்கு உண்ண விரும்புகிறான். வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதில் பலவகை உண்டு. தானே எடுத்துத் தானே கிள்ளித், தானே தடவித் தன்னுடைய வாயில் தானே போட்டுத் தானே மென்று தானே துப்புவது. வெற்றிலை முதலானவற்றை மனைவி எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்துக் கணவனிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்வது. அப்படி மடித்த சுருளைக் கணவன் கையில் கொடுக்காமல் கணவன் வாயிலேயே கொடுப்பது. இன்னொன்றும் உண்டு. தாம்பூலத்தை முதலில் தலைவி தரித்து மென்று உமிழ்நீரோடு கணவனோடு பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் இலக்கியங்களில் பேசப்படாத நிகழ்வு இது. ஆனால் துணிச்சல் மிக்க திருவள்ளுவர் இதனைக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
என்ற தலைவனின் பட்டறிவு பகர்வில் நீர் பாலும் தேனும் கலந்த சுவையினைப் பெற்றது காண்க.
“எயிறூறிய என்றவிடத்து இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. வேறுவேறு அறியப்பட்ட சவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னதென்று அறியலாகா இன்சுவைத்தாம் ஆதலின் அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க”
என்னும் அழகர் உரைகொண்டு இக்காட்சியை நோக்கலாம். தலைவனின் அந்த நிகழ்ச்சி களவியல் வெளிப்பாடு. பாவேந்தரின் இந்த வெளிப்பாடு வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது. காரணம் இது கற்பியல்.
“வெற்றிலைச் சுருளைப் பற்றி ஏந்தினாள்
கணவன் கைமுன் காட்டி அவன் மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்!
தூயவன் அப்போது சொன்னது என்னெனில்
சுருளுக்கு விலை என்ன சொல்லுவாய் என்றான்
பொருளுக்குத் தக்கது போதும் என்றாள்.
கையில் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே! என்றான்.
சேயிழை அன்பால் செங்கை நீட்டினாள்!
குடித்தனப் பாங்கைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!”
பாங்கோடு குடும்பம் நடத்தியவள் தலைவி. அனுபவித்தது குடும்பம். குடும்பத் தலைவன் அனுபவித்த அந்தச் சுவையை உவமமாக்குகிறார் பாவேந்தர். விரைவுச் சாப்பாட்டில் வாழ்க்கையை முடித்துக் கொள்வாருக்கு இந்தக் கவிதையும் புரியாது. உவமமும் புரியாது.
“உணவுண்ணச் சென்றாள் அப்பம்
உண்டனள் சீனி யோடு
தணல் நிற மாம்பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
மணவாளன் அருமை பற்றி
மனம் ஒரு கேள்வி கேட்க
இணையில்லா அவன் அன்புக்கு
ஈடாமோ இவைகள் என்றாள்”
என்று குடும்பத்தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார் பாவேந்தர். அப்பம் உண்பது ஒரு சிறிய வினை. அந்த வினையை உவமத் தோரணத்தால் அணிசெய்துவிடுகிறார். மாம்பழத்தைக் கண்ணால் கண்டு நிறத்தை அறிகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் அவ்வினிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியம் உணரத்தக்கது.
“குழந்தைகள் பள்ளி விட்டு
வந்தார்கள் குருவிக் கூட்டம்
இழந்தநல் உரிமை தன்னை
எய்தியே மகிழ்வதைப் போல்”
என்பது ‘சிட்டுக்குருவி போலே விட்டு விடுதலையாகி’ என்னும் பாரதியின் தொடரோடு ஒப்பு நோக்கத்தக்கது.
பழைமையைப் பழுதுபார்க்கும் பண்டிதர்கள்
உவமங்கள் அழகியல் சார்ந்தவை என்பது அவற்றின் இலக்கிய நோக்கம். பொருள் விளக்கம் என்பது அவற்றின் உயிர் நோக்கம். அரசுக்குக் கொள்கைமுடிவு என்பதுபோலப் படைப்பாளனின் கொள்கை அடையாளங்களின் குறிப்பு என்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கொள்கை அடையாளத்தைப் பெரும்பாலான கவிஞர்கள் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள். இலைமறை காய்மறையாகத்தான் சொல்வார்கள். சுவைப்பார் அல்லது திறனாய்வார் கண்டறிந்து பந்தி வைக்க வேண்டும். பாரதி பழைமைக்கு எதிரி. அதாவது பயனற்ற பழைமைக்கு எதிரி. இந்தப் பழைமை எதிர்ப்பை அவன் தனது எல்லாப் படைப்புக்களிலும் பதிவு செய்திருக்கிறான். இந்த மூடநம்பிக்கை, பொருளற்ற பழைமை இவற்றில் பாரதிக்கு இருந்த உறுதியும் தெளிவும் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆவதற்கான காரணங்களுள் தலையாயது.
“பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை கிளியே
பாமரர் ஏதறிவார்?”
என்னும் பாரதியத்தை உள்வாங்கிய பாரதிதாசன் அந்தக் கருத்தினோடு தமக்கிருக்கும் ஒத்திசைவைக் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார். காலைமுதல் அனைத்துக் கடமைகளையும் முடித்த தலைவி இறுதியாகப் பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் வைப்பதற்கு முன்னால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். எப்படி?
“கண்டு, படுக்கை திருத்தி, உடை திருத்திக்
காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை தண்ணீர்
வையென்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்!
பண்டிதரின் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே!”
படுக்கை திருத்துவது முதலாகத் தொடங்கிக் குடி தண்ணீரைத் தலைமாட்டில் வைப்பதுவரை தலைவி செய்யும் செயல்களுக்கெல்லாம் பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பண்டிதர்களின் செயல்களை உவமமாக்கியுரைக்கிறார் பாரதிதாசன்.
பாகற்காய் கசக்கும்! பாடல் இனிக்கும்
‘குடும்ப விளக்கு’ பலவகைகளில் தமிழ்க்கவிதைகளிலும் காப்பியங்களிலும் புதுமை தேக்கி நிற்கும் சிறப்புடையது. கணவன், மனைவி இரவில் படுக்கையில் சந்திக்கின்ற காட்சியைப் பண்பாட்டுடன் முதன்முதலில் சித்திரித்துக் காட்டிய பெருமை பாவேந்தருக்கு உண்டு. தனிமனிதன் குடும்பமாகிறான். குடும்பம் தெருவாகிறது. தெரு ஊராகிறது. ஊர் நாடாகிறது. நாடு உலகம் ஆகிறது என்பதுதான் மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர்தம் சமுதாயக் கட்டுமானக் கொள்கையாகும். இந்தக் கருத்தியலைப் பாவேந்தர் படுக்கையறையில் வைத்துக் காட்டுகிறார். பகலெல்லாம் தலைவி வீட்டிலும் தலைவன் கடையிலும் உழைத்து வந்து படுக்கையில் விழுகின்ற நேரத்திலும் சுயநலம் நோக்காத அவர்தம் மனநிலையைப் பதிவு செய்கிறார்.
“கண்டான் கண்டாள் உவப்பின் நடுவிலே ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பிர் என்றாள்”
மனைவி இதனைச் சொன்னவுடன் கணவன் சொல்லுகிற சொல்தான் காப்பியத்தை நினைக்க வைக்கிறது. கணவன் சொல்லுகிறான்,
“மிதிபாகற்காய் கசக்கும் எனினும் அந்த
மேற்கசப்பின் உள்ளேயும் சுவையிருக்கும்”
அதுபோலத் தானேடி? அதனால் என்ன
அறிவிப்பாய் இளமானே! என்றான் அன்பன்”
மிதிபாகற்காயை அறிந்தாலேயொழிய இந்த உவமத்தை உள்வாங்க முடியாது. பாகற்காயில் பலவகை உண்டு. இவற்றுள் மிதிபாகற்காய் என்பது படியில் அளந்து கொடுப்பார்கள். மேற்புறம் இருக்கும் கசப்பு குறைவாகவும் உள்ளிருக்கும் இனிப்பு அதிகமாகவும் இருக்கும். பாகற்காய் கசக்கும் என்பது இதற்கு அவ்வளவாகப் பொருந்தாது. பக்குவப் பெண்கள் சமைத்தால் இனிப்பு இருமடங்காகும். இந்தப் பாகற்காயை மனைவியின் பேச்சுக்கு உவமித்ததன் மூலம் தலைவி சொல்லவரும் கருத்து இனிப்பானதே என்ற சிந்தனையோடு அணுகுகிறான் தலைவன். தலைவி அப்படி என்ன பேசுகிறாள் படுக்கையறையில்?
“அதிகாலை தொடங்கி நாம்இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை”
இவைதான் அவள் பேசிய கசப்பான சேதி!. உள்ளே இருக்கும் சுவை என்ன? மனைவி இரவில் சொல்ல வந்ததைக் கணவன் பகலிலேயே செய்து முடித்துத் தமிழினத்தின் உயர்வுக்கான சிந்தனையோடு வீடு வருகிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு மனைவி முடிக்கிறாள் இப்படி!
“பழம் இடுவேன்! சர்க்கரைப்பால் வார்ப்பேன்! உங்கள்
பண்பாடும் வாய்திறப்பீர், அத்தான்! என்றாள்!”
உள்ளத்தால் இணைந்த கணவன் மனைவியர்தம் இல்லறத்தின் நோக்கம் பொதுநலம். விடுகதை போடலாம் என்று மனைவி எண்ணியிருந்தாள். கணவன் விடையோடுதான் வந்திருக்கிறான் என்பதை அவள் அறியாள். மனைவி சொல்லிக் கணவன் செய்வதைவிடக் கணவன் சிந்திப்பதையே மனைவி எண்ணுவது சிறந்தது. சொல் கசப்பாயிருக்கலாம். பொருளும் பயனும் இனிப்பானவை என்பது கருத்து.
நிறைவுரை
வைகறையில் தொடங்கி முன்னிரவில் நிறைவு செய்து காட்டியிருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் பாவேந்தர், குடும்பப் பாங்கான உவமங்களையே கையாண்டிருக்கிறார். ‘வண்டுவிழி’, ‘அன்றிலடி நாமிருவர்’, ‘குன்றத்தில் படர்ந்த மலர்க்கொடி’, ‘செங்காந்தள் நிகர் விரல்’, ‘பூவிதழ் மேல் பனிதூவிய துளிபோல்’ என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும்’ உவமங்களால் நிறைந்தது ஒருநாள் நிகழ்ச்சி! ஒருநாள் சித்திரிப்பில் ஓராயிரம் உவமங்கள். ஆனால் அவை அழகு பெற்றதும் அழியா வாழ்வு பெற்றதும் தமிழிலக்கியத்தில் புதுத் தடம் கண்டதும் காட்டியதும் பயன்படுத்தப்பட்ட உவமங்களால் என்பது அவ்வுவமங்களில் மனங் கரைந்தார்க்கே புலனாம்.
(தொடரும்…)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(382)
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
– திருக்குறள் – 494 (இடனறிதல்)
புதுக் கவிதையில்…
தான் வினையாற்றத்
தக்க இடத்தினை ஆய்ந்தறிந்து
அங்கே
தகுந்த பாதுகாப்புடன் செயலை
மன்னர் செய்வாராயின்,
அவரை வெல்ல
எண்ணிவரும் பகைவரும்
எண்ணமதை இழப்பரே…!
குறும்பாவில்…
தகுமிட மறிந்தே யதற்குத்
தக்கவாறு பொருந்திச் செயல்படின், பகையுடன்
தாக்கவரும் வயவரும் செயலழிவர்…!
மரபுக் கவிதையில்…
தம்செயல் தன்னைச் செயல்படுத்தத்
தக்க இடமதை நன்கறிந்தே
செம்மையாய்த் தேர்ந்தே யெடுத்திடுவர்
செயலின் திறனறி மன்னரெலாம்,
நம்பியே தேர்ந்த இடத்தினையே
நாடும் திறனுடை மன்னவனை
வம்பிலே வெல்ல வரும்பகைவர்
வாடித் திரும்புவர் கருத்தழிந்தே…!
லிமரைக்கூ…
நன்கறிந்தே செயலுக்கேற்ற இடத்தை,
பாதுகாப்புடன் செயல்படின், பகைவரையும் எண்ணமழியச்
செய்துவிடும் மன்னரின் நடத்தை…!
கிராமிய பாணியில்…
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரி வந்தாலும்
தாக்க முடியாத
எடமறிஞ்சி செயல்படணும்..
தான் செயல்பட
தகுந்த எடத்த நல்லாத்
தெரிஞ்சிவச்சிக்கிட்டு
தக்க பாதுகாப்போட
ராசா செயல்பட்டா,
அவரச் செயிச்சிரலாமுண்ண
எண்ணத்தில வாற
எதிராளி கூட
எண்ணமழிஞ்சி போவானே..
அதால,
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரி வந்தாலும்
தாக்க முடியாத
எடமறிஞ்சி செயல்படணும்…!

Baskar Seshadri
It was a wonderful Evening. It was too chill and i was almost near the Beach Front. But my Visit was not to be in the Seashore. It was a Visit and a meeting i have been longing for long Years and it happened few days back. Yes, it was a meeting with Kamakshi Paatti of Besant Nagar. People who live in adayar and Besant nagar Belt will surely know who she is.
She is a fighter and stands first when it comes to a civic Issue. Stake holders of the Governments are all well aware how she is straight forward and strong in handling an issue. Whether it’s the Besant Nagar Karl Schmidt Memorial or a storm water drain erection she stands in the Forefront to talk to officials over phone and handles effectively to get the issue redressed. She was on High Praise of the top officials like Rajesh Lakhoni, Vijay Pingle, Bedi of GC , Iraiyanbu and few more.
Years ago the officials of GCC were in a Process of axing few trees on Avenue road which was not called for. The purpose was enlarging the pavement. Since it was felt that Trees would be affected she went to the spot and protested against the act of the Officials. People realized her concern and the officials stopped the action immediately
Sample one More – She found a Policeman near her House some time back sipping a tea and discarding the cup on the road. She went straight to him and told to take it and drop it in the Dust bin. And he did it immediately, it’s just because of not a civic sense alone but the boldness and the age matters too. She has a lot of stories to share as she has been doing for almost three decades since she came to Chennai from New Delhi. She says she loves to do what she is meant for. If i don’t act i will die. This was exactly what she told during the one hour tete e tete . When our society has little care of the environment and civic sense her courage and determination is a classic example of how a Social Activist should be. She was of a Great praise on Vincent D Souza of Mylapore Times and Sridhar Venkatraman of Mylapore.
When i feel too tired to handle an issue i get dejected sooner but Kamakshi Patti is never tired and she is an energizer and a role model to everyone. Our salutes to Paatti, Atthai Pattti, Old Lady as being called by the officials and the residents of that area.
Thanks to Sridhar Venkatraman to make her reach me and i was glad that i could make it make it to her after long months of Conversation.
Thank you Paatti for the Lovely Hot coffee and Biscuits which added my energy further more after the meeting. And she was active, brisk to do everything on her own and was communicating perfectly with no Aid .
You should believe this to see her and she is ninety Four Years Young.
My Respects and Namaskaram to you. You are an asset to this Community and i Bow my head to what all you do to one and all around us.

பாஸ்கர்
அதே இடத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறேன்
தபால்காரர் உதட்டை சுழித்து ஏதுமில்லை என்கிறார்
புறா ஒன்று வெறுமெனே அமர்ந்து இருக்கிறது
சப்தம் போடாமல் இலைகள் விழுகின்றன
கோவில் மணி சப்தம் அடங்கியும் எதிரொலிக்கிறது
விமானத்தின் சப்தமும் அதிர்வும் அடங்கவில்லை
சட்டென உதித்த நிசப்தம் கலவரம் செய்கிறது
நான் மட்டுமே உயிருடன் எனும் நினைவே நிற்கிறது
சுயமெதிரில் அமர்ந்திருக்க விழிப்பே பிரமிப்பாகிறது
உறைந்த மனம் கடக்காமல் காலமே தள்ளி நிற்கிறது
கண்களும் மனதும் விரிந்தே கிடக்கிறது மூலையில்
ஏகாந்தம் இனிதெங்கே என்றும் இந்த வாழ்வினில்
விழிப்பொன்றே நிஜம்- நிஜமே என்றும் விழிப்பு .
கனிந்து போய் கிடந்து பாரும் -காலமே இல்லையங்கு.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா
நீரின் ஆழமும் தெரியாது. நெருப்பின் சூடும் தெரியாது.புயலும் தெரியாது. பனியும் தெரியாது. மழையும் நனைக்காது. வெய்யிலும் தாக்காது. இனிப்பும் ஒன்றுதான். கசப்பும் ஒன்றுதான். இன்பமும் ஒன்றுதான். துன்பமும் ஒன்றுதான். இப்படி எண்ணு பவர்கள் உல கத்தில் இருக்கிறார்களா? இருந்தார்களா என்று எண்ணிடத் தோன்றுகிறதா? ஆம்.. இப்படியானவர்கள்தான் “ஓடும் செம் பொனும் ஓக்க நோக் குபவர்கள்“. இவர்களைப் பெரியவர்கள், அரியவர்கள் என்றும் அழைக்கலாம் அல்லவா? இப்படிப் பெரியவர்க ளையும், அரியவர்களையும் யாவருக்கும் காட்ட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டார். அவரின் ஆசையின் விளைவாக மலர்ந்த துதான் “பெரியபுராணம்“. பெரியபுராணம் என்று இப்புராணத்துக்கும் பெயர் அமைந்தமைக்குக் காரணமே பெரியவர்களாக அடியார்களைச் சேக்கிழார் தன்னுடைய மனத்தில் இருத்திக் கொண்டமையே எனலாம். இதனை மனதில் வைத்துத்துத்தான் எங்கள் ஒளவைப்பாட்டியும் “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே“ என்றாரோ என்று எண்ணிடத் தோன்று கிறதல்லவா?
ஆண்டவனைப் பற்றிய அருட்செயல்களைக் கருவாக்கியே அநேகமான புராணங்களும் இதிகாசங்களும், கதைகளும், வந்திருக்கின்றன. அந்த ஆண்டவனையே அல்லும் பகலும் நினைந்துருகும் அடியாரள் பற்றிய கதையாக நாம் பார்ப்பதுதான் பெரியபுராணம். இங்கே காட்டப்படும் அடியார்கள் அத்தனைபேருமே சமூகத்தின் பல்வேறு வகையினராகவே அமைந்திருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்கள் சிந்தனையும், செயற்பாடுகளும் வெவ்வேறாகவே அமைந்தும் காணப்படுவதுதான் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய கருத்தெனலாம். படித்தவர்கள் இருக்கிறார் கள்பாமரர்கள் இருக்கிறார்கள். வசதியானவர்கள் இருக்கிறார்கள். உயர்குலத்தவர்கள் இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட குலத்தவர் என்று சொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி அமைந்தவர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் அடியா ர்கள் என்று முத்திரை குத்திக் காட்டிய உத்தி ஒரு புத்தம்புதிய உத்தி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் வருகின்ற அடியார்களின் செயல்கள் சிலவற்றைப் பார்க்கும் பொழுது – அத்தனையுமே இயற்கைக்கு எதிர் மாறான தாய், சாதாரண வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாகவே தெரிகிறது. இயற்கைக்கு மாறான வகையில் நடந்த அடியார்களை ஏன் சேக்கிழார் காட்ட முயலுகிறார் என்பது பலருக்கும் மனத்தில் எழுகின்ற ஒரு பெருங் கேள்வியாகவே இருக் கிறது! இதற்கு விடை தேடுவதை விட்டுவிடு – சேக்கிழாரின் மனத்தின் உண்மை நிலையினை உணருவதுதான் மிகவும் பொருத்தமாய் இருக்கும்.
சோழ நாட்டின் முக்கிய பொறுப்பான அமைச்சராக விளங்கியவர் சேக்கிழார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர் சேக்கிழார். நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவர் சேக்கிழார். இப்படி எல்லாம் வாய்க்கப் பெற்றவர் வாழ்க்கையிலே எவருமே நினைத் துப்பார்க்கவே முடியாத செயல்களை எப்படி காட்ட எண்ணினார் என்பதுதான் எமது சிந்தனைக்கு விடப்பட்ட பெருஞ்சவாலாகவே இருக்கிறதல்லவா!
அருமையாய்ப் பெற்றெடுத்துச் சீராட்டி வளர்த்த ஆண் பிள்ளையினை, அம்மா பிடிக்க அப்பா அரிவாளால் வெட்டுகின்றார். அதனைக் கறியாகவும் சமைத்துக் கொடு க்கின்றார்கள். ஒருவர் தன்னுடைய கண்களையே பிடுங்குகின்றார். ஒரு கண்ணை மட்டு மல்ல இரண்டு கண்களையுமே பிடுங்குகின்றார். இன்னொருவர் தந்தையின் காலையே வெட்டுகிறார். தான் தாலி கட்டிய தனக்கு வாழ்க்கைத்துணையாகவே வாய்த்திருக்கும் மனைவியின் கையினையே வெட்டுகிறார். நாட்டின் பட்டத்து இராணியின் மூக்கினையே ஒருவர் வாளினால் வெடுகின்றார். இவை எல்லாம் நடக்குமா? என்று எமது மனம் கேள்வி கேட்கத் துடிக்கிறதல்லவா!
இந்த நிலையில் ஒருவரைச் சேக்கிழார் கொண்டுவந்து காட்டுகிறார். சேக்கிழாரால் காட்டப்படுவபரின் இயற்பெயரினை அறிய முடியவில்லை. அவரின் செய்கையின் காரணத்தால் அவர் “இயற்பகை” என்று பெயரில் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறக்கிறார். வசதியாகவே வாழ்கிறார். நல்ல மனைவி நல்ல குடும்பம். ஆண்டவனை நினைப்பதும் அவனது அடியார்களைப் பேணுவதுமே வாழ்வின் இலட்சியம் என்று மனத்தில் இருத்திக் கொண்டு வாழ்பவர். சிவனின் அடியார்களைச் சிவனெனவே சித்தத்தில் இருத்திக் கொண்டவர். நிறைத்துக் கொண்டவர். அடியார்களுக்காக எதையுமே செய்வதைப் பெருவிருப்பமாகக் கொண்ட வர்.அவரின் இலட்சியம் என்னவோ உயர்ந்ததாக இருந்த பொழுதும், அவர் செய்த செயல் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒன்றாகவே இன்றளவும் யாவராலும் கருதப்படுகிறது. அப்படி யாவராலும் கருத முடியாமலும் விமர்சனத்துக்கு உள்ளாவதுமான செயல்தான் எதுவாக இருக்கலாம் என்று எண்ணிட வைக்கிறதல்லவா!
சிவனடியார்களை உபசரிப்பது. சிவனடியார்கள் எதனைக் கேட்டாலும் அதனைக் கொடுப்பது. இதுதான் அவரின் ஆத்மார்த்தமான காரியமாக இருந்தது. பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பலரும் சிவனடியார்களை உபசரித்து அவர்களின் ஆசியினைப் பெறுவதை வழக்கமாக்கியே நிற்கிறார்கள் என்பது பொதுவான ஒரு நிலை எனலாம். இப்படியான சிவனடியார்கள் மத்தியில் இயற்பகையாரின் செயல் முற்றிலும் மாறுபட்டதாகவும் , வேறு பட்டதாகவும், எவராலுமே ஏற்றுக் கொள்ள இயலாததுமாகவே அமைவதுதான் இங்கு மிகவும் முக்கியமாகும். சிவனடியார்கள் சாதாரண நிலையிலே இருப்பவர்கள் என்று மட்டும் கருதிவிடல் பொருத்தமன்று. பெரியபுராணத்தில் வருகின்ற சிவனடியார்கள் சாதாரணமான மனித தோற்றத்தில் இருந்தாலும், சில இடங்களில் அந்தச் சாதாரண மனித உருவினை எம்பெருமானான சிவனே தாங்கி, தன்னுடைய அடியவனின் பக்தி வைராக்கியத்தை உலகினருக்கும் காட்டும் பாங்கில் எழுந்தருளியிருந்திருக்கிறான் என்பதையும் பார்த்திட முடிகிறது.
பெரிய புராணம் பாடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமே சிவனின் அடியவர்கள் என்பவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து நற்தொண்டினை ஆற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்பதை சமூகத்தில் இருக்கின்றவர்கள் பலரும் உணரவேண்டும் என்பதற்காகவே என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது அல்லவா! அப்படி வாழ்ந்த அடியவர்களில் சிலர் சமூக மே நினைத்துப் பார்க்க முடியாதவாறு செயற்கரிய காரியங் களைஆற்றி அந்தப் பரம்பொருளையே பிரமிக்கச் செய்திருக்கிறா ர்கள் என்னும் புதிய கருத்தைச் சமூகத்துக்குள் விதைக்கும் நோக்கும் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் பிரமிக்க வைக்கும் ஒரு செயலை ஆற்றி இன்று வரையும் விமர்சனத்துக்கு உரிய ஒருவராக விளங்கு கின்றார் “இயற்பகையார்.”
சோதிப்பதும் பின்னர் பக்தனின் சாதனையை மற்றவர்க்கும் வெளிப்படுத்திக் காட்டுவதையும் ஒரு விளையாட்டாக எம் பெருமான் கொண்டிருக்கிறார். அதனைத் திருவிளையாடல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? அத்தகைய திருவிளை யாடலின் பொழுது எம்பெருமானின் வேடமும், அவர் தனது பக்தனைச் சோதிக்கும் பாங்கும் மிகவும் வினோதமாகவும், சில வேளை வெறுக்கத்தக்கதாகவும் அமைவதைப் புராணங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இப்படியான விடயங்களைப் பார்க்கின்ற பொழுது பரம்பொருளானவர் இப்படிச் செய்யலாமா? என்னும் ஐயமும் எமக்குள் கட்டாயம் எழுந்தே தீரும். பரீட்சை வைப்பவர்க்குத்தான் தெரியும் யாருக்கு எந்தவித பரீட்சை பொருத்தமானது என்பது.அடியவர்களுக்கு எப்படியான சோதனை களைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்தான் பரம் பொருள். “நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல” இதனைக் கருத்தில் கொண்டால் அத்தனையும் எங்களுக்கு வெளிச்சமாய் தெரியும்.
இயற்பகையாரினை அறிமுகம் செய்யும் பொழுதே சேக்கிழார் எப்படிக் காட்டுகிறார் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
அக்குலப்பதி குடிமுதல் வணிகர்; அளவில் செல்வத்து
வளமையின் அமைத்தார்
செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
திரத்தின் மிக்கவர் மறைச்சிலம்படியார்,
மிக்க சீரடுயார்கள் யார் எனினும் வேண்டும்
யாவையும் இல்லை என்னாதே
இக் கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர்; உலகியற் பகையர்
என்று காட்டிய பின்னரும் , இயற்பகையார்பற்றி இன்னும் காட்டுகிறார் சேக்கிழார் என்பதுதான் முக்கியமாகும்.
” நீறுசேர்திரு மேனியர் மனத்து
நினைத்து யாவையும் வினைப் படமுடித்து
மாறிலாத தன்னெறியினில் விளங்கும்
மனையறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும்
பெருமையே எனப் பேணி வாழ்நாளில் “
இயற்பகையார் எப்படியானவர் அவரின் மனோபாவமும் செயற்பாடுகளும் எப்படியாய் இருக்கும் என்பதையெல்லாம் சேக்கிழார் தெளிவாகக் காட்டியே அவர் செய்யப்போகும் செயற் கரிய செயலினுக்குகான அடித்தளத்தை அமைக்கிறார் என்பது புலனாகிறதல்லவா!
அடிவர்களை உபசரித்து அதன் பின்னர்தான் அவரும் மனைவியும் உணவருந்துவதை வழக்கமாக்கியே இருந்தனர். அன்றைய தினம் அடியவர்கள் எவருமே வராதிருக்க அவர்கள் மனங்கலங்கி இருந்த வேளை வாசலில் ஒரு சிவடியாரின் குரல் கேட்கிறது. பேரானந்தத் துடன் ஓடிச் சென்று அவர்கள் வரவேற்கிறார்கள். அப்படி வந்தவர் எப்படியான மனநிலையில் இருந்தார் அவர் என்ன புகன்றார் என்ப தையும் சேக்கிழார் காட்டுகிறார்.
” கொன்றை வார் சடையா ரடியார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்றும் நீர் எதிர்மறாது உவந்தளிக்கும்
உண்மை கேட்டு நும்பால் ஒன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு
இசையலாம் எனின் இயம்பலாம் ”
சிவனடியாரின் பேச்சினை இங்கு உற்று நோக்குதல் அவசியமாகும். சிவனின் அடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பாய் என்று கேள்விப்பட்டே உன்னிடம் ஒன்றை வேண்டி வந்திருக்கிறேன், விருப்பம் இருந்தால் அதனைத் தரலாம்” என்று ஒரு பொடிவை த்துப் பேசுவதாகச் சேக்கிழார் காட்டுகிறார். சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்று வதையே வாழ்வின் இலட்சியமாய் கருதி வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, சிவனடியாரின் சூட்சுமமான எண்ணமோ அவர் கையாண்ட சொல்லின் தன்மையோ விளங்கவில்லை. அவர் விளங்கும் மனோ நிலையிலையிலுமில்லை. இதற்குக் காரணம் தான் கருதிய காரியம் ஒன்றுதான் அவரின் கருத்தில் நிறைந்து இருந்தமை எனலாம்.
எதைக் கேட்கப் போகிறார்? எப்படிக் கேட்கப் போகிறார்? கேட்டாலும் நம்மால் கொடுத்துவிட முடியுமா? கொடுக்க முடியா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்திக்கும் மனநிலை யில் இயற்பகையார் இருக்கவே இல்லை. சிவனடியார் கேட்டுவிட்டார். அவர் விரும்பியதைக் கொடுப்பதே அறமாகும் என்பதே அவர் அகத்துள் அமர்ந்திருந்தது என்பதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.
“யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியார் உடைமை; ஐயமில்லை; நீர் அருள் செய்யும்”
இப்படி உரைக்கிறார் இயற்பகையார்.தன்னிடம் இருக்கும் அத்தனையும் தன்னுடையதல்ல. எம்பிரான் அடியாருக்கே உரியதாகும். ஆதலாம் தாராளமாகக் கேட்கலாம் என்பதுதான் இயற்பகையாரின் விடையாக மலர்கிறது.
சம்மதம் கிடைத்தவுடன் வந்த சிவனடியார்,
“ மன்னு காதல் உன்மனைவியை வேண்டி வந்தென இங்கு “
என்று அங்கணர் எதிரே சொன்ன போதிலும்……
எப்படியான கேள்வி! பூகம்பமே வெடிக்கும் அல்லவா! கேட்ட சிவனடியாரை நாமென்றால் என்ன செய்திருப்போம்? அந்த இடத்தி லேயே வெட்டிச் சாய்த்திருக்க மாட்டோமா? ஆனால் அப்படி எதுவுமே இங்கே நடக்கவே இல்லை. இயற்பகையார் மனமகிழ்ந்தார் என்றுதான் சேக்கிழார் செப்புகிறார். தன்னிடம் இருக்கும் பொருளையே சிவனடியார் கேட்டுவிட்டார் என்பதில் பேரானந்தம் உற்றாராம் இயற்பகையார். மனைவியை அவர் வீட்டிலிருக்கும் ஒரு பொருளாகவே கருதிவிட்டார்.தாலிகட்டிய மனைவி என்று எண்ணாமல் மனைவியும் வீட்டிருக்கும், கட்டிலோ, கதிரையோ, பாத்திரமோ என்றுதான் அவர் கருதிவிட்டார். அதனால் சிவனடியார் மனைவியைத் தருவாயா என்று கேட்டவுடன் எந்தவிதப் பதட்டமும் அற்றவராய் தருகிறேன் அழைத்துச் செல்லுங்கள் என்றும் சொல்லும் மனோ நிலை அவருக்கு ஏற்பட்டது.
இறையடியார்கள் “வீடும் வேண்டா விறலுடைடையவர்”. அவர்களுக்கும் ஓடும் சர்தான். பொன்னும் சரிதான். அவர்கள் மனம் முழுவதுமே இறவன் நினைப்பு மட்டுமே நிறைந்திருக்கும். அவர்களுக்கு உயர்திணை எது? அஃறிணை எது என்னும் பேதமே தெரிய வராது. சிவனைன் அடியார்களைச் சிவனெனவே நினைப்பார்கள். அதனால் வந்திருப்பவர்கள் மனிதராக இருந்தாலும், கபடதாரிகளாக இருந்தாலும், கள்வராக இருந்தாலும், கொளைசெய்யும் நோக்கோடு கொடு வாளுடன் வந்தாலும் – அத்தனை பேருமே சிவனடியாராகவே அவர்கள் எடுத்துக் கொள்ளுவார்கள். இதனை சொல்லி விளங்கிப் படுத்தவே முடியாது. இது சிவனடியார்கள் சிலரின் இயல்பாகும். இதற்குக் காரண காரியமோ விளக்கமோ விமர்சனமோ காண்பதென்பது பொருந்தா நிலை என்றே எண்ண வேண்டி இருக்க்கிரது அப்படி ஒரு நிலையித்தான் இயற்பகையாரின் செய்கையினையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.
காதல் மனைவியை அடியவருக்கு வழங்குகிறார். உற்றவரும் ஊராரும் இயற்பகையாரை ஏசுகிறார்கள். தூர்த்தனான சிவனடியார் இயற்பகையின் மனைவியை உடன் அழைத்துச் செல்லுவதை எதிர்த்துப் போரிடுகிறார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் இயற்பகை யாரும் துணிவுடன் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்துகிறார். சிவனடியார் எந்தவித இடையூறுமின்றி ஊரைத் தாண்டிச் செல்ல உதவி நிற்கிறார்.
இயற்கைக்குப் பகையான காரியத்தை இவர் ஆற்றியிருக்கிறார். சிவனடியார் என்றால் இப்படியும் செய்யத்தான் வேண்டுமோ? என்றெல்லாம் எண்ணியெண்ணி மனந்தடுமாறுவது பொருத்தமற்றது. சிவனடியார்களில் இயற்பகையாரின் செய்கை வேறுபட்டதாக இருக்கிறது என்பதும் அதற்குக் காரணம் அவரின் இயல்புதான் என்றும் எடுத்துக் கொண்டால் எந்தச் சிக்கலும் இருக்காது. அவரின் இந்தச் செயலினால் அடியார்களுள் அவர் ஒப்பாரும் மிகாருமாய் இருக்கிறார் என்று சிந்திந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா!
அவரின் இந்த ஒப்பற்ற செயலினால்தான் இறைவனே அவரை –
” இயற்பகை முனிவா ஓலம் ! ஈண்ட நீவருவாய் ஓலம் !
அயர்ப்பிலாதானே ஓலம் ! அன்பனே ஓலம் ! ஓலம் !
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் ! “
“செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்!” என்று சொல்லு வதாகச் சேக்கிழார் காட்டி இறைவனே அவரை எத்தகைய பெருமைக்கு ஆட்படுத்தி இருக்கிறார் என்று சுட்டி நிற்பதால் இயற்பகையார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவே விளங்குகிறார் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
” சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லைவந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்பவெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லையம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன “

சி. ஜெயபாரதன், கனடா
எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை [1830 -1886]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.
எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.
எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
உன் மார்பு மேல் தொங்கும் மாலையில் !
சிந்திக்காது அணிந்துளாய் என்னை நீயும்
தேவதைகள் அறியும் மற்றவை யாவும்.
ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
உலர்ந்து தேயுது அம்மலர் உன் கும்பாவில்
உறுதியாய் நேச உணர்வு என்மீ துனக்கு
ஏறக் குறைய ஏகாந்த நிலை எனக்கு !
****************
Loneliness
I hide myself within my flower
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.
I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness
**********
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
யாரு மில்லை நான் ! யார் நீ ?
யாருமில் லையா நீயும் ? சரிதான்
நாம் இருவர் எனச் சொல்லாதே !
நாடு கடத்துவர் நம்மை, தெரிந்து கொள்.
சிலராய் இருப்பது எப்படி அச்சம் அளிக்குது !
தவளை போல் வாழ்வு பொதுவானது ?
வாழ்நாள் முழுதும் உன்பேர் சொல்வது
புழுதி பூசிப் புகழ்வது போன்றது !
************************
“I’m nobody! Who are you?
Are you nobody, too?
Then there’s a pair of us—don’t tell!
They’d banish us, you know.
How dreary to be somebody!
How public, like a frog
To tell your name the livelong day
To an admiring bog!”
***************
ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வெற்றி தேன்போல் இனிக்கும்
தோல்வியே என்றும் அடைவோர்க்கு !
அருஞ்சுவை தனை உணர்ந்து கொள்ள
பெரும் புண் பட் டிருக்க வேண்டும் !
வெற்றிக் கொடி ஏந்தும் காக்கி உடை
வீரன் எவனும் இன்றைய தினம்
விளக்கிச் சொல்ல இயலாது
தெளிவாய் வெற்றி யாதென்று !
தோற்கும் நிலையில் மடிகிறவன்
கேளாத காதில் தெளிவாய் விழாது
வெற்றிக்கு ஆரம்ப மெய் வருத்தம்,
வேதனை முறிவு, மனக்கொ திப்பு.
******************
Success is counted sweetest
By those who ne’er succeed.
To comprehend a nectar
Requires sorest need.
Not one of all the purple Host
Who took the Flag today
Can tell the definition
So clear of victory
As he defeated – dying –
On whose forbidden ear
The distant strains of triumph
Burst agonized and clear!
******************

வரி வாலாட்டிக் குருவி (White-browed wagtail) அல்லது வெண்புருவ வாலாட்டி என்பது இந்தியாவில் காணப்படும் ஒரே ஓர் இடம்பெயரா வாலாட்டிக் குருவி. இதன் உடலின் மேலே கருப்பு மற்றும் கீழே வெள்ளையுடன், வெள்ளைப் புருவமும் கொண்டது. இது தனது நீண்ட வாலிறகைத் தொடர்ந்து ஆட்டும் பண்பினைக் கொண்டது. நீண்ட தூரங்களுக்கு மிக வேகமாகப் பறக்கும். மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பயணிக்கும்.
இந்தியாவில் பண்டைய காலங்களில், இந்தச் சிற்றினம் கூண்டுப் பறவையாக வளர்க்கப்பட்டது. இதன் குரலுக்காகப் பாராட்டப்பட்டது. இதன் மார்பில் விஷ்ணுவின் சாலிகிராம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இதைக் காண்பதை நல்ல சகுனமாகக் கருதினர். இந்தப் பறவை எங்கு அமர்கிறது, என்ன செய்கிறது என்பதன் மூலம் எதிர்காலம் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் சரத்சந்திர மித்ராவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (விக்கிப்பீடியா)
பலவிதமான ஒலிக் குறிப்புகளுடன் கூடிய இதன் குரலைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தமிழக வீதிகளில் மார்கழிக் கோலங்களைப் போலவே புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் கோலம் வரைவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் இத்தகைய கோலங்களைக் கண்ணுற்றால், எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம்.
தொகுப்பு – சுதா மாதவன்
யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
தமிழகத்தின் பண்பாடு மிகப் பழமையானது, செழுமையானது என்பதற்குச் சங்க நூல்கள் சுட்டிக்காட்டும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் சான்றாய்த் திகழ்கின்றது. காலப்போக்கில் தமிழரல்லாதோரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் மூலமாகவும் வடநாட்டுச் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொண்டதன் காரணமாகவும் தமிழ்மக்களின் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் மாற்றங்கள் பல ஏற்பட்டன.
இவ்வாறு நம் மக்களிடையே ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள் என்னென்ன என்பதை மானுடவியல் நோக்கில் ஆய்வுசெய்து ஆவணப்படுத்தியவர்கள் நம் தமிழகத்தில் வெகுசிலரே ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மயிலை சீனி வேங்கடசாமி, நா. வானமாமலை போன்ற அறிஞர்கள். அவ்வரிசையில், நம்மிடையே வாழ்ந்து அண்மையில் மறைந்த, தொ.ப. என்று சுருக்கமாய் அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
”வரலாறு என்பதே சாமானிய எளிய மக்களின் வரலாறுதான்” என்பார் நாட்டார் வழக்காற்றியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அந்தச் சாமானிய மக்களின் வரலாற்றை – வாழ்வியலை அதற்குள் புதைந்துகிடக்கும் பண்பாட்டு அசைவுகளைத் தேடித் தொகுப்பதையும் அவை குறித்து உரையாடுவதையுமே தம் வாழ்நாள் நோக்கங்களாகக் கொண்டிருந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். அந்த ஆய்வியல் அறிஞரின் வாழ்வையும் பணிகளையும் சிறிது சிந்திப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950இல் பிறந்த தொ.பரமசிவன் அவர்கள், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொருளாதாரமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் பயின்றார். அதன்பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராய்ப் பணியாற்றிய அவர், 1976இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மாணவராய்ச் சேர்ந்தார்.
முனைவர்ப் பட்டம் பெறுவதற்கு புதுமைப்பித்தன் குறித்து ஆய்வுசெய்ய அவர் எண்ணியிருந்த நிலையில், அவருடைய ஆய்வுநெறியாளர் மு. சண்முகம் பிள்ளையவர்கள், கோயில் குறித்துஆய்வு மேற்கொள்ளும்படிக் கூறவே, மதுரையிலுள்ள அழகர் கோயிலைத் தமது ஆய்வுப் பொருளாய்த் தெரிவுசெய்தார் தொ.ப.
அழகர் கோயில் எனும் அவருடைய ஆய்வேடு, கோயில் குறித்து அதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த ஆய்வுகளைப் போல் கோயிலின் வரலாற்றையும் அதன்மேல் பாடப்பட்டுள்ள தலபுராணங்களையும், அக்கோயிலைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள பனுவல்களையும் பட்டியலிடும் பணியைச் செய்யவில்லை. மாறாக, அக்கோயிலைச் சுற்றி வாழ்ந்த எளிய மக்களைப் பற்றியும் அம்மக்களுக்கும், அழகர் கோயிலுக்கும் இருந்த பண்பாட்டுப் பிணைப்பையும் வெளிப்படுத்தியது. ஊகங்களின் அடிப்படையிலோ வேறு நூல்களின் கருத்துக்களை வழிமொழிந்தோ எழுதப்பட்ட ஆய்வேடு அன்று அது! அழகர்கோயில் பகுதியில் தங்கியிருந்து கள ஆய்வுசெய்து திரட்டிய உண்மைகளையே அதில் வகுத்தும் தொகுத்தும் தந்திருக்கின்றார் தொ.ப.
அவ்வகையில் ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை எப்படி உழைத்து உருவாக்கவேண்டும் என்பதற்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாய் விளங்குகின்றது. இந்த ஆய்வேட்டை ஏற்று தொ.ப.வுக்கு முனைவர்ப்பட்டம் வழங்கிய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமே இதனை நூலாகவும் வெளியிட்டிருப்பது இந்நூலின் தரத்திற்கும் தனித்தன்மைக்கும் சான்று பகர்கின்றது.
பேராசிரியர் தொ.ப. அவர்கள் இளையான்குடி ஜாகிர் ஹுசேன் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, அதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர்.
தொ.ப.வின் குறிப்பிடத்தக்க படைப்புக்களாக விளங்குபவை தெய்வம் என்பதோர், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், சமயம் – ஓர் உரையாடல், பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு, சமயங்களின் அரசியல், உரைகல், மரபும் புதுமையும், இதுவே சனநாயகம், தொ.பரமசிவன் நேர்காணல்கள் முதலியவை.
இவற்றில் ‘தெய்வம் என்பதோர்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பழந்தமிழரின் தாய்தெய்வ வழிபாடுகள் குறித்தும் அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விளக்குகின்றார் தொ.ப.
குறிஞ்சி நிலத்தில் முருகு எனும் இயற்கை அழகு முருகனாக வளர்ச்சிபெற்றபோது அங்குள்ள நிலப்பகுதிகளில் செழுமையின் அடையாளமாய் எங்கும் வளர்ந்திருந்த வள்ளிக்கொடி வள்ளி எனும் பெயரில் அவனுக்கு மனைவியாக்கப்பட்டாள் என்கின்றார்.
நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் மலைப்பகுதியிலுள்ள பகவதியம்மன் கோயில் அடிப்படையில் அம்பிகா யட்சி எனும் சமணப் பெண் தெய்வத்தின் கோயிலாகும் என்கின்ற உண்மையை ‘ஒரு சமணக் கோயில்’ எனும் தலைப்பில் விளக்குகின்றார்.
சடங்கியலில் தலைமை இடம்பெற்றிருந்த முடிதிருத்துவோர், வண்ணார், வள்ளுவர் முதலிய சாதியார் தம் தலைமையைப் பார்ப்பனரிடம் பறிகொடுத்துக் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட சாதியார் ஆயினர் என்கின்ற வரலாற்றை இந்நூல் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.
சிறு தெய்வங்கள் என வகைப்படுத்தப்பட்டுவிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் வைதிக நெறியில் வளர்ச்சிபெற்றிருக்கும் பெருந்தெய்வங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை விளக்கவரும் தொ.ப., நாட்டார் தெய்வங்கள் சுதந்தரமானவை; ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு மட்டுமே சொந்தமானவை என்ற கட்டுக்குள் அடங்காதவை. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகார மையம் என்று அவற்றுக்கு எதுவும் இல்லை. ஆனால், பெருந்தெய்வங்களின் நிலைவேறு. அவை நிறுவனப்படுத்தப்பட்ட தலைமைப் பீடம், வழிபடுநூல், புனித வழிபாட்டுத் தலங்கள், பொதுவான பூசைமுறை என்று பல அடிப்படைத் தேவைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அத்தோடு நாட்டார் தெய்வங்களெல்லாம் காவல் தெய்வங்களாக நிற்பவையே அன்றி வரமளிக்கும் தெய்வங்களாக முன்னிற்பவை அல்ல என்று பல செய்திகளைத் தம் கள அனுபவங்களின் அடிப்படையில் நமக்கு அறியத் தருகின்றார்.
பேராசிரியர் தொ. பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ என்ற நூல் அவருக்கு நல்லதோர் அறிமுகத்தையும் பரவலான வாசகர் வட்டத்தையும் தமிழ்கூறுநல்லுலகில் உருவாக்கித் தந்தது எனில் மிகையில்லை.
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரும், வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் ஆ. இரா வேங்கடாசலபதி அவர்கள், தொடர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வலிமை இழந்துபோன நம் இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. முற்போக்காளர்கள் சிலர் கருதுவதுபோல் இது பழமை பாராட்டுதல் அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான் என்கிறார் நச்சென்று!
தொ.ப.வின் எழுத்துப்பணி மட்டுமல்லாது அவருடைய உரையாட்டுத் திறமும் சிறப்புவாய்ந்தது என்று குறிப்பிடும் வேங்கடாசலபதி, தொ.ப.விடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்துபெற்ற பட்டறிவும் உடன் உரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுவதும், பழகிப்பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்லிலிருந்தோ தொடரிலிருந்தோ சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறையாகும். விண்ணிலும் மண்ணிலுமாக மாறிமாறி மாயஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையோடு ஒப்பிடத் தகுந்தது தொ.ப.வின் கருத்துப் புலப்பாடு எனக்கூறி வியக்கின்றார்.
ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு ஊடும் பாவுமாகப் பிணைந்திருக்கின்றன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது என்று வேங்கடாசலபதி உரைப்பது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்பதனை அறியப்படாத தமிழகம் நூலை வாசிப்போர் ஐயமின்றி அறிந்துகொள்ளலாம்.
சான்றுகளாகச் சிலவற்றைச் சுட்டுகின்றேன்.
நீரானது வானிலிருந்து சுரந்து உலக மக்களைப் புரந்துவருவதால் அதனை அமிழ்தம் என்று போற்றும் நம் வள்ளுவர், மழைதருகின்ற மேகத்தை எழிலி என்ற அழகிய சொல்லால் குறிப்பிடுவார்.
அதுபோலவே நீர்நிலைகளுக்கும் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பலவாகும் எனக் குறிப்பிடும் தொ.ப., சுனை, கயம், ஊற்று, பொய்கை முதலியவை தாமே நீர்கசிந்த பகுதிகளாகும்; குட்டை என்பது மழைநீரின் சிறிய தேக்கமாகும்; குளித்து உடலைக் குளிர்விக்கப் பயன்படும் நீர்நிலை குளம்; ஊர்மக்கள் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி; ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி; மழைநீரை மட்டுமே ஏந்திநிற்கும் நீர்நிலை ஏந்தல்; கண்ணாறுகளை உடைய நீர்நிலை கண்மாய் என்று விவரிக்கும்போது நம் தமிழ்மக்களின் நுண்மாண் நுழைபுலத்தையும் அதனை எடுத்துவிளக்கும் தொ.ப.வின் ஆராய்ச்சித் திறத்தையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.
தமிழர்தம் உணவுமுறையை விளக்குமிடத்து, பண்டைத் தமிழர் உணவு வகைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் உணவில் சுட்டும் அவித்தும் வேகவைத்தும் வறுத்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே மிகுதி.
எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, பகோடா, வடை, காரச்சேவு போன்றவையெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பழக்கங்களே. குறிப்பாக விஜயநகர ஆட்சிக்காலத்தில்தான் பொரிப்பதற்கு நாம் பெரிதும் பயன்படுத்தும் கடலை எண்ணெய் தமிழகத்தில் அறிமுகமானது என்கின்றார் தொ.ப.
ஈதொப்பவே, சமையலில் காரத்துக்கு அன்று மிளகைத்தான் கறி என்ற பெயரில் பழந்தமிழர் பயன்படுத்தி வந்தனர். யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்கரும் உரோமரும் தங்கள் நாட்டிலிருந்து பொன்னையும் மதுவையும் தம்முடைய மரக்கலங்களில் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கிவிட்டுச் சேரநாட்டு முசிறித் துறைமுகத்திலிருந்து ’கறி’யை அதாவது மிளகை தம் நாட்டுக்குக் கொண்டுசென்ற செய்தியை அகநானூறு,
”யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி” (அகம்: 149)
என்று குறிப்பிடுவது தமிழகத்து மிளகின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது. இறைச்சி உணவு சமைப்பதற்கு இந்தக் கறியைத் துணைப்பொருளாகத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தியமையால் இறைச்சியே பிற்காலத்தில் கறி என்று பெயர்பெற்றது என்கின்ற தொ.ப.வின் கூற்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டளவில்தான் சிலியிலிருந்து (Chile) மிளகாய் தமிழ்நாட்டில் நுழைந்தது என்பதையும் இந்நூல் வாயிலாய் அறிகின்றோம்.
சோறிடுதலை ஓர் அறமாகவே நெடுங்காலம் செய்துவந்தவர்கள் தமிழர்கள். ”உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” எனும் கோட்பாட்டினர். சோற்றையும் நீரையும் விற்பதில்லை என்பது தமிழர் பண்பாடு. அந்தப் பண்பாட்டைச் சிதைத்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும். அவர்கள் ஆட்சியில்தான் ஹோட்டல் எனப்படும் உணவு விற்கும் விடுதிகள் தமிழகத்தில் அறிமுகமாயின என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு எத்தனையோ அரிய செய்திகளை எளிய சொற்களில் தாங்கிநிற்கின்றது அறியப்படாத தமிழகம் எனும் தொ.ப.வின் நூல்.
தமிழ் வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கின்றார் தொ.ப. என்ற விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டதுண்டு. ஆனால், அழகர் கோயில் என்ற தம்முடைய ஆய்வேட்டில் புகழ்பெற்ற திருமால் கோயிலாக இன்று திகழ்கின்ற அக்கோயில் முன்பு பௌத்தக் கோயிலாக இருந்தது என்று அவர் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்து, சமயப்பற்றைக் கடந்த அவரின் ஆய்வு நேர்மையையும், காய்தல் உவத்தலற்ற நடுவுநிலையான அணுகுமுறையையும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம், அரசியல் போன்ற பல்துறைசார்ந்த செய்திகளையும் கள ஆய்வுகளின் அடிப்படையிலும் தாம் கற்றறிந்தவற்றின் அடிப்படையிலும் நேரிய முறையில் பதிவுசெய்துவிட்டு மறைந்திருக்கின்றார் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள்.
அவர் தமிழர்க்கு அளித்துச் சென்றிருக்கும் இந்த அறிவுக் கருவூலம் மகத்தானது. அரிதின் முயன்று அவர் உருவாக்கியிருக்கும் அவருடைய படைப்புக்கள், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை பரவலாக மக்கள் திரளைச் சென்றடையும். அவரை அடியொற்றிப் பல ஆய்வாளர்கள் உருவாவதற்கும் அவை வழிவகுக்கும். அதுவே அவர் தமிழ்மக்களுக்குச் செய்திருக்கும் மகத்தான தொண்டுக்கு நாம் செய்கின்ற சிறிய கைம்மாறாகவும் இருக்கும்.

இதன் பெயர் விஷ மூங்கில் (Spider Lily). பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஆங்கில விளக்கத்தில், நாட்டு மருந்து என்பதை folk remedy எனக் குறித்திருப்பது சரியா? பார்த்துச் சொல்லுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கோவை மாவட்டம், ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர் ரயில் ஒன்று ஓடுகிறது. பெரியவர்களும் உடன் செல்லலாம். மிகப் பழைய ரயில். உட்காரும் இருக்கை உள்பட, முழுவதும் இரும்பினால் ஆனது. சற்று தடதடவென்று செல்லும். தலா ரூ.30 கட்டணத்திற்கு எத்தனை ரவுண்டு அடிக்கிறார்கள் என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)